Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

😅உங்களுடனான உரையாடல் எப்போதுமே நேர விரயம் தான்! 

சீமானின் உருட்டை தனது முதல் வரியில் கட்டுரையாளர் சுட்டிக் காட்டியதை வாசிக்காமல் நாம் சீமானை இழுத்து வந்தோம் என்கிறீர்கள்.

"கட்டுரையின் மேற்கோள் எதுவும் உத்தியோக பூர்வம் இல்லை" என்றீர்கள். இப்போது விடுதலைப் புலிகள் இதழில் வரவில்லை என்கிறீர்கள்.

கிருபன் 7 மணி நேரங்கள் முன்னரே இணைப்பைத் தந்ததையும் கவனிக்காமல்.

எப்படித் தான்  ஏனையோர் தரும் ஆதாரங்கள், கருத்துக்களை வாசிக்காமல் கருத்தெழுதும் போது கூட ஒரு தெனாவட்டோடு எழுத முடிகிறது உங்களுக்கு😂?  

முதல் எழுதிய இருவரிகளிலேயே எழுத்தாளரின் நோக்கமும் தரமும் புரிகிறதே! 

திராவிட தேசம், திராவிட நாகரீகம் என்பதெல்லாம் புவியியல் சார் சொற்கள்(geographical terms). அதில் தமிழர், தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் எல்லாம் இனங்கள். எழுத்தாளர் திராவிடர் என்ற சொல்லை மட்டும் போட்டுவிட்டு , தொடர்ந்துவரும் தமிழ் மன்னர்களான சோழர்கள் பயன்படுத்தியது என்பதை விட்டுவிட்டார்.

அதேபோல்  “அறிவுசார் மானிடத்தின் பொதுமூதாதை மொழி தொல் திராவிட மொழியாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற கருதுகோள்களின் படி தமிழார்வம் முகிழ்ந்துள்ளது. எமது விடுதலைப் போரும் தமிழார்வத்துக்கு இன்னுமோர் காரணமாகலாம்” என்ற கருத்து " வரலாறும் தேசியமும் " என்ற கலாநிதி சோமாஸ்கந்தன் என்பவர் எழுதிய கட்டுரையில் வந்தது. அது புலிகளின் கருத்தல்ல.

வெளிவந்த 135ற்கும் மேற்பட்ட இதழ்களில் இரண்டு முறை மட்டும் பாவிக்கப்பட்ட சொற்களை வைத்தே புலிகளை திராவிட புலிகள் என்று ஒருவர் உருட்டுகிறார். அதற்கு கொஞ்சப்பேர் சிங்குச்சா போடீனம். என்னத்தை சொல்ல!!

Edited by Eppothum Thamizhan

  • Replies 228
  • Views 10k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாத

  • கிருபன்
    கிருபன்

    2004 இல் சீமான் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழீழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர். அப்போது பெரியாரின் சிந்தனைகளை ஆதரித்தவராகவும் இருந்தார். அரசியலில் ஈடுபடவும் இல்லை. 2004 இல் சீமானின் கட்டுரை எழுத அ

  • இந்த கேள்வியே அபத்தமானது. ஹோமோ சேப்பியன்ஸ் இல் இருந்து பல்லாயிரம் ஆண்டுகால மரபணுத்திரிபுகள்,  பரிணாம வளர்சசி மூலம் பல்வேறு மரபு இனங்கள் உருவாகியுள்ளன. இது  டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் தெளிவாக கண்டறியப்பட

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Eppothum Thamizhan said:

முதல் எழுதிய இருவரிகளிலேயே எழுத்தாளரின் நோக்கமும் தரமும் புரிகிறதே! 

திராவிட தேசம், திராவிட நாகரீகம் என்பதெல்லாம் புவியியல் சார் சொற்கள்(geographical terms). அதில் தமிழர், தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் எல்லாம் இனங்கள். எழுத்தாளர் திராவிடர் என்ற சொல்லை மட்டும் போட்டுவிட்டு , தொடர்ந்துவரும் தமிழ் மன்னர்களான சோழர்கள் பயன்படுத்தியது என்பதை விட்டுவிட்டார்.

அதேபோல்  “அறிவுசார் மானிடத்தின் பொதுமூதாதை மொழி தொல் திராவிட மொழியாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற கருதுகோள்களின் படி தமிழார்வம் முகிழ்ந்துள்ளது. எமது விடுதலைப் போரும் தமிழார்வத்துக்கு இன்னுமோர் காரணமாகலாம்” என்ற கருத்து " வரலாறும் தேசியமும் " என்ற கலாநிதி சோமாஸ்கந்தன் என்பவர் எழுதிய கட்டுரையில் வந்தது. அது புலிகளின் கருத்தல்ல.

வெளிவந்த 135ற்கும் மேற்பட்ட இதழ்களில் இரண்டு முறை மட்டும் பாவிக்கப்பட்ட சொற்களை வைத்தே புலிகளை திராவிட புலிகள் என்று ஒருவர் உருட்டுகிறார். அதற்கு கொஞ்சப்பேர் சிங்குச்சா போடீனம். என்னத்தை சொல்ல!!

இப்போது தான் கட்டுரையை வாசித்திருக்கிறீர்கள் போல. அதில் இருக்கும் ஒவ்வொரு விடுதலைப் புலிகளின் ஊடகங்கள், பண்பாட்டு வெளிப்பாடுகள் என்பவற்றை நீங்கள் வாசிக்க அனேகமாக திரி நூந்து விடும்😂.

ஆனால், இன்னும் உங்களுக்கு concept பிடிபடவில்லை!

தலைப்பில் "திராவிடப்" புலிகள் என்பதில் திராவிடம் மேற்கோள் குறிக்குள் தரப்பட்டிருக்கிறது. இதன் அர்த்தமாவது தமிழைப் பெயரில் வைத்திருக்கும் உங்களுக்குப் புரிந்ததா? இல்லையென்று தான் ஊகிக்கிறேன்.

மேலும் திராவிடம் என்பது ஆரம்பத்தில் புவியியல், மொழிக்குடும்பம் குறித்த ஒரு சொல் . அது பின்னாளில் எப்படி தமிழரிடையே முற்போக்கின் அடையாளமாக மாறியது என்பதை ரசோதரன் ஏற்கனவே எழுதி விட்டார், அதையும் வாசியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, இசைக்கலைஞன் said:

2016 ல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எண்ணி ஏமாந்தவர்களுள் நானும் ஒரு நபர். அதைச் சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை.

அண்ணன் சீமான் ஈவெராவை வழிகாட்டி என சொன்னபோது எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. இன்று சரியான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார். அரசியலில் எந்தத் துரும்பை எப்போது எடுப்பது என்பதைக் களமும் காலமும்தான் தீர்மானிக்கும்.

பாதை கடினமாக இருந்தாலும் இலக்கை அடைய முடியும் என மிகுந்த நம்பிக்கை உள்ளது.

மற்றும்படி, நாம் தமிழர் பெட்டியை வாங்கிக் கொண்டு கூட்டணிக்குப் போய்விடுவார்கள் என்ற அவதூறை வீசினார்கள். அது வடிகட்டிய பொய் என்பதை காலம் உணர்த்தியது. இப்போது பாஜகவின் B team என்கிறார்கள். நாம் தமிழர் தொடங்கிய காலத்தில் (2010) பாஐக ஒரு ஆளே இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக மற்றும் அதிமுக தான்.

இந்த அவதூற்றையும் காலம் மாற்றி எழுதிவிடும்! அதை வெறும் வாயை மெல்லும் நபர்கள் தள்ளிப்போட வேண்டுமானால் செய்யலாம். 😅

அருமையான‌ க‌ருத்து அண்ணா

சீமான் எதிர்பாள‌ர்க‌ள் சில‌ர் இதுக்கை க‌ற்ப‌னையில் கிறுக்குவ‌து வெளிப்ப‌டையாக‌ தெரியுது..............நாம் த‌மிழ‌ர் பிஜேப்பியின் Bரீம் என்றால் 

திமுக்கா தான் Aரீம்.....................

இதுக்கை ஒரு முகாந்த‌ர‌மும் இல்லாம‌ கிறுக்குவ‌த‌ வாசிச்சால் உண்மையில் பையித்திய‌ம் பிடிக்கும்

திமுக்காவின் இணைய‌கைகூலிக‌ள் சீமான் சீமான் தொட்ட‌துக்கு எல்லாம் சீமான் சீமான் என‌ தொட‌ர்ந்து புல‌ம்புவ‌து.....................என‌க்கு க‌ருணாநிதி குடும்ப‌த்தில் யாரையும் பிடிக்காது 2009க்கு பிற‌க்கு அவ‌ர்க‌ளின் க‌ப‌ட‌ அர‌சிய‌லை பார்த்து வெறுத்த‌ ஆட்க‌ளில் நானும் ஒருவ‌ன்

சீமான் பிழையான‌ பாதையில் போனால் க‌ருணாநிதி குடும்ப‌த்தை திட்டி தீர்த்த‌தை விட‌ அதிக‌மாய் திட்டி தீர்ப்போம்...............த‌லைவ‌ரி அண்ணான்ட‌ ம‌க‌னுக்கு நான் சொன்ன‌து அண்ணா எங்க‌ளுக்கு 2002அந்த‌ கால‌ப் ப‌குதியில் த‌மிழீழ‌ம் கிடைச்சு இருந்தால் நாங்க‌ள் த‌மிழ் நாட்டு அர‌சிய‌லை எட்டியும் பார்த்து இருக்க‌ மாட்டோம் எங்க‌ட‌ முழு சிந்த‌னை எங்க‌டை நாட்டை க‌ட்டி எழுப்புவ‌தில் தான் இருந்து இருக்கும்..................புல‌ம்பெய‌ர் நாட்டில் வாழ்ந்தாலும் குறைந்த‌து வ‌ருட‌த்துக்கு இர‌ண்டு த‌ட‌வை த‌ன்னும் எங்க‌ட‌ நாட்டுக்கு போய் வ‌ந்து இருப்போம்🙏👍..............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதாலை நீங்கள் பொரிஞ்சு தள்ளி இருப்பதுபோல் இனம், பாய்சன், பாம்புக்கு மிக்சிங் எல்லாம் இல்லை சார்.. நான் அந்தளவுக்கு ஒர்த் இல்ல சார்..😂😂 ரெம்ப எமோசன் ஆகாதிங்க..😂

மிக லாவகமாக சீமான் புலிகளை, ஈழத்தமிழரை உள்ளே இழுப்பதன் மூலம் எமக்கு எதிரிகளை உருவாக்குகிறார் என்ற என் கூற்றை கடந்து போயுள்ளீர்கள்.

இதுதான் இதில் நாம் கருத்து எழுதுவதன் அடிப்படையே.

ஆகவே சீமானை என்ன காரணத்தால் ஒரு ஈழத்தமிழர் பொதுவெளியில் ஆதரித்தாலும் - அது தமிழ்நாட்டில் எமக்கு எதிரிகளை உருவாக்கும் செயலுக்கு ஊக்கம் அழிப்பதே.

இப்படி செய்தன் பின் விழைவு காலம் கடந்து உங்களுக்கு விளங்ககூடாது. இப்போதே உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே எமோசனலாகி நான் பொரிந்துதள்ள காரணம்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் சீமானை ஆதரிப்பதால் ஈழத்தமிழருக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.. நான் இந்திய இணையங்களிலும் ரிக்டாக்கிலும் முகநூலிலும் சீமானுக்கு களமாடி மற்ற இந்தியக்கட்சிகளை எதிர்த்து அரசியல் பந்திகள் எழுதிக்கொண்டு திரியவில்லை..

எனக்கு திமுக அதிமுக நாம் தமிழர் உட்பட எந்த கட்சியும் ஈழத்தமிழர் நமக்கு எதையும் செய்யமுடியாது என்பதில் தெளிவு இருக்கு..

என்னுடைய ஆதரவு வெளியில் நின்று பார்க்கும் ஒருவனாக அங்கு இருக்கும் நிலம்சார் சமூக பொருளாதார பிரச்சினைகளில் சீமானின் ஸ்ராண்ட் சரியாக இருப்பதாக படுவதால் ஒரு உளப்பூர்வமான ஆதரவு.. அத்தோட எனக்கு பிடிச்ச தமிழ்தேசியத்தையும் பேசுவதால்..

நீங்கள் கூறியது தான் என் கருத்தும். இதை நான் பல தடவைகள் இங்கே எழுதியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, இசைக்கலைஞன் said:

நாம் தமிழர் தொடங்கிய காலத்தில் (2010) பாஐக ஒரு ஆளே இல்லை.

உண்மையை ஒத்து கொண்டமைக்கு நன்றி.

ஆனால் இன்று பாஜக தமிழ்நாட்டில் ஓரளவு பலமாக இருக்கிறது என்றால் அதன் மிக முக்கிய காரணிகளில் ஒன்று , சீமான்.

1. ஈழதமிழருக்கு எதிராக திராவிட கட்சி ஆதரவாளர்களை  திருப்புவது, அதன் மூலம் ஈழத்தமிழர், தமிழ் நாட்டு மக்கள் இடையே கணிசமான தொகையினர் மத்தியில் தீராப்பகையை தூண்டி விடுவது.

2.பெரியாரை தாக்குவதன் மூலம்  பாஜக நோக்கி வாக்களரை திருப்புவது.

இவை இரெண்டுமே சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலைகள். அதை அவர் கச்சிதமாக செய்கிறார்.

காலம் விசித்திரமானதுதான்.

கோஷான், கல்யாணசுந்தரம், ஐயநாதன், ரஜீவ்காந்தி, காளியம்மாள்….

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் சீமானின் உண்மைமுகம் புரிந்தது.

இசைக்கு  எந்த தேதி என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இதுக்கும் ஒரு தேதி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இசைக்கலைஞன் said:

2016 தேர்தல் காலகட்டம்.

“நாம் தமிழர் கட்சியையும் உங்கள் கருத்துக் கணிப்புகளில் சேருங்களேன்”
 - இது கோரிக்கை

“கருத்துக் கணிப்புகளில் சேர்ப்பதுக்கு நீங்க பெரிய ஆளா?” - இது திருமாவேலன்

இதுதான் காலச் சுழற்சி 😊

வணக்கம் இசை

இந்தத் திரியிலாவது உங்களைக் கண்டது மிகவும் சந்தோசம்.

உங்களின் கருத்துக்களைப் பார்ப்பதற்காகவே இந்தத் திரி இன்னும் கொஞ்சம் ஓடட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

கால‌ப் போக்கில் சீமான் திருந்துவார் என‌ ந‌ம்புவோம்🙏👍...............................

பையனுக்கும் ஒரு தேதி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

பையனுக்கும் ஒரு தேதி இருக்கு.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே😉.....................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

கார்த்திக்கின் விவாத‌ம் அண்ண‌ன் சீமான் அருணா அன்ரி கூட‌ ந‌ல்ல‌ தொட‌ர்வில் இருக்கிறார் அவ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து போலி துவார‌கா மேட்ட‌ருக்கு துனை போவ‌தாக‌ தான் அறிந்த‌தாக‌ சொன்னார்

அருணாவையும்…

சீமானையும்…

இயக்குவது….

போலி துவாரகாவை உருவாக்கி உலவவிட்டோரே….

போலிக்காவை இனம் கண்டு கொண்ட உங்களால், சீமானை இன்னும் இனம்காண முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

உண்மையை ஒத்து கொண்டமைக்கு நன்றி.

ஆனால் இன்று பாஜக தமிழ்நாட்டில் ஓரளவு பலமாக இருக்கிறது என்றால் அதன் மிக முக்கிய காரணிகளில் ஒன்று , சீமான்.

1. ஈழதமிழருக்கு எதிராக திராவிட கட்சி ஆதரவாளர்களை  திருப்புவது, அதன் மூலம் ஈழத்தமிழர், தமிழ் நாட்டு மக்கள் இடையே கணிசமான தொகையினர் மத்தியில் தீராப்பகையை தூண்டி விடுவது.

2.பெரியாரை தாக்குவதன் மூலம்  பாஜக நோக்கி வாக்களரை திருப்புவது.

இவை இரெண்டுமே சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலைகள். அதை அவர் கச்சிதமாக செய்கிறார்.

காலம் விசித்திரமானதுதான்.

கோஷான், கல்யாணசுந்தரம், ஐயநாதன், ரஜீவ்காந்தி, காளியம்மாள்….

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் சீமானின் உண்மைமுகம் புரிந்தது.

இசைக்கு  எந்த தேதி என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இதுக்கும் ஒரு தேதி உள்ளது.

பாஜக தமிழ்நாட்டில் இப்போது எதிர்க்கட்சி நிலையில் இருந்திருக்க வேண்டியது. ஆனால் நாம் தமிழரால் தடைப்பட்டுப் போனது.

அதுபோல, நாம் தமிழரின் வாக்கு வங்கி வளர்ச்சியை தடுத்த விடயத்தில் பாஜகவின் பங்கு அதிகம். மாற்று எனும் இடத்தில் அவர்களும் ஒட்டிக் கொண்டார்கள்.

மோடி இந்தியப் பிரதமர் ஆகிய ஆண்டு 2014. அதில் இருந்துதான் பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் ஆரம்பமாகிறது.

தமிழகத்தில் எந்தக் கட்ச் வளர்வதுக்கும் அரசியல் அதிகாரம் மற்றும் பணபலம் தேவையாகிறது. இவை இரண்டும் பாஜகவிடம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இசைக்கலைஞன் said:

இவையும் காரணங்கள். இதைவிட முக்கிய காரணம் - பாஜக தனியே நின்று போராடிய சனாதன கொள்கை ஆதரவு நிலையை, பெரியார் மறுப்பை அவர்களோடு சேர்ந்து சீமானும் வினைதிறனாக செய்வது.

சீமானின் வினைதிறனான பெரியாரிய எதிர்ப்பை அறுவடை செய்வது பாஜகதான்.

அதுதான் டிசைனே.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அருணாவையும்…

சீமானையும்…

இயக்குவது….

போலி துவாரகாவை உருவாக்கி உலவவிட்டோரே….

போலிக்காவை இனம் கண்டு கொண்ட உங்களால், சீமானை இன்னும் இனம்காண முடியவில்லை.

சீமான் 2023ம் ஆண்டே சொல்லி விட்டார் போலி துவார‌கா மேட்ட‌ரில் என்னையும் தொட‌ர்வு கொண்டார்க‌ள் தான் ம‌றுத்து விட்டேன் என‌..................திருப்ப‌ திருப்ப‌ உங்க‌ளுக்கு விள‌ங்க‌ப் ப‌டுத்த‌ ஏலாது😉....................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, இசைக்கலைஞன் said:

பாஜக தமிழ்நாட்டில் இப்போது எதிர்க்கட்சி நிலையில் இருந்திருக்க வேண்டியது. ஆனால் நாம் தமிழரால் தடைப்பட்டுப் போனது.

இது தடைப்பட்டு போனது கடந்த தேர்தலில் எடப்பாடி சுதாகரித்து கொண்டமையால்.

அல்லது மே வங்கம், மஹாரஸ்டிரா நிலை த நா விலும் ஏற்பட்டிருக்கும்.

1 minute ago, வீரப் பையன்26 said:

சீமான் 2023ம் ஆண்டே சொல்லி விட்டார் போலி துவார‌கா மேட்ட‌ரில் என்னையும் தொட‌ர்வு கொண்டார்க‌ள் தான் ம‌றுத்து விட்டேன் என‌..................திருப்ப‌ திருப்ப‌ உங்க‌ளுக்கு விள‌ங்க‌ப் ப‌டுத்த‌ ஏலாது😉....................

அப்போ உங்களுக்கு நேற்று கார்த்தி பொய் சொல்லி உள்ளாரா?

ஒன்றில் கார்த்தி பொய்யன்…

அல்லது சீமான் பொய்யன்…

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இவையும் காரணங்கள். இதைவிட முக்கிய காரணம் - பாஜக தனியே நின்று போராடிய சனாதன கொள்கை ஆதரவு நிலையை, பெரியார் மறுப்பை அவர்களோடு சேர்ந்து சீமானும் வினைதிறனாக செய்வது.

சீமானின் வினைதிறனான பெரியாரிய எதிர்ப்பை அறுவடை செய்வது பாஜகதான்.

அதுதான் டிசைனே.

நீங்க‌ள் ஒருசில‌ இட‌ங்க‌ளில் ந‌ல்ல‌ க‌ருத்தை முன் வைப்பிங்க‌ள் சில‌ இட‌ங்க‌ளில் உப்பு ச‌ப்பு இல்லா க‌ருத்தை வைப்பிங்க‌ள் அதில் ஒன்று தான் இது..................திருக்கா என்ர‌ க‌ட்சி அழிந்து போக‌னும்

மோடி 2029க்குள் இதை செய்தால் மோடிய‌ வாழ் நாளில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம் த‌ன்மான‌ த‌மிழ‌ர்க‌ள் ஊழ‌ல் திமுக்காவில் ம‌லிந்து போய் கிட‌க்கு அதை வெளியில் கொண்டு வ‌ந்தாலே பாதிப் பேர் பிஜேப்பியில் சேர்ந்து விடுவின‌ம் எப்ப‌டி ச‌ர‌த்குமார் சேர்ந்தாரோ அதே போல் தாங்க‌ளாக‌வே சேர்ந்து விடுவின‌ம்👍................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ஒன்றில் கார்த்தி பொய்யன்…

அல்லது சீமான் பொய்யன்…

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இதுக்கு கேள்வி ஏன்? "பொட்டம்மானா? சீமானா?" என்று வந்த போதே "சீமான்" என்று நின்ற சின்னத்திரையில் போராட்டம் பார்த்த இளவல்களுக்கு இந்தத் தெரிவு no brainer 😂!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் ஒருசில‌ இட‌ங்க‌ளில் ந‌ல்ல‌ க‌ருத்தை முன் வைப்பிங்க‌ள் சில‌ இட‌ங்க‌ளில் உப்பு ச‌ப்பு இல்லா க‌ருத்தை வைப்பிங்க‌ள் அதில் ஒன்று தான் இது..................திருக்கா என்ர‌ க‌ட்சி அழிந்து போக‌னும்

மோடி 2029க்குள் இதை செய்தால் மோடிய‌ வாழ் நாளில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம் த‌ன்மான‌ த‌மிழ‌ர்க‌ள் ஊழ‌ல் திமுக்காவில் ம‌லிந்து போய் கிட‌க்கு அதை வெளியில் கொண்டு வ‌ந்தாலே பாதிப் பேர் பிஜேப்பியில் சேர்ந்து விடுவின‌ம் எப்ப‌டி ச‌ர‌த்குமார் சேர்ந்தாரோ அதே போல் தாங்க‌ளாக‌வே சேர்ந்து விடுவின‌ம்👍................

உங்களுக்கு திமுகவை பிடிக்கவில்லையா?

தமிழ் தேசியம் பிடிக்கிறதா?

உங்களுக்கு விஜை என்ற ஒரு நல்ல தெரிவு இருக்கிறது.

சீமான் என்ற பிஜேபி/ ஆர் எஸ் எஸ் கூலி தேவையில்லை.

என்னை பொறுத்தமட்டில் - திமுக அழிய கொடுக்கும் விலை பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சி ஏறுவது எனில் அதற்கு திமுகவே இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

இது தடைப்பட்டு போனது கடந்த தேர்தலில் எடப்பாடி சுதாகரித்து கொண்டமையால்.

அல்லது மே வங்கம், மஹாரஸ்டிரா நிலை த நா விலும் ஏற்பட்டிருக்கும்.

அப்போ உங்களுக்கு நேற்று கார்த்தி பொய் சொல்லி உள்ளாரா?

ஒன்றில் கார்த்தி பொய்யன்…

அல்லது சீமான் பொய்யன்…

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

த‌லைவ‌ரின் அண்ணா

என‌து சொந்த‌ங்க‌ளுட‌ன் அன்று தொட்டு இப்ப‌வ‌ரை ந‌ல்ல‌ மாதிரி எல்லா நிக‌ழ்விலும் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம்

நான் கார்த்திக்க‌ தொட‌ர்வு கொண்ட‌து ஏன் அண்ண‌ன் சீமான் ப‌ற்றி இப்ப‌டி ஊட‌க‌த்தில் சொன்னீங்க‌ள் என‌ கேட்க்க‌

அவ‌ர் அத‌ற்க்கு ப‌ல‌ விள‌க்க‌ம் த‌ந்தார் நானும் ஒருசில‌தை சொன்னேன்..................நான் அவ‌தானித்த‌ ம‌ட்டில் அருணாவுக்கும் த‌லைவ‌ரின் அண்ணா குடும்ப‌த்துக்கும் ஏதோ சிறு முர‌ன் இருக்கு ஆனால் அத‌ற்க்கும் சீமானுக்கும் ச‌ம்ம‌ந்த‌ம்மே இல்லை..................இறுதிக‌ட்ட‌ யுத்த‌த்தில் புல‌ம்பெய‌ர் அமைப்புக்க‌ள் சேர்த்த‌ காசுக‌ள் ப‌ற்றி க‌தைச்சோம்...............க‌ருணா அம்மான் க‌தை வ‌ரும் போது க‌டுப்பாகி த‌டிச்ச‌ வார்த்தைய‌ விட்டு விட்டேன் கார‌ன‌ம் க‌ருணா செய்த‌ துரோக‌ம்

ம‌ற்ற‌ம் ப‌டி எங்க‌ட‌ சிறுவ‌ய‌து க‌தைக‌ளை க‌தைச்சு விட்டு வைச்சு விட்டோம்......................

த‌லைவ‌ரின் அண்ண‌னின் ம‌க‌ன் என்னை விட‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் அந்த‌க் கால‌த்தில்  MSNனில் எழுதும் போது சில‌ ந‌ல்ல‌துக‌ளை சொல்லித் த‌ந்த‌வர்.....................

கார்த்திக்கிட‌ம் நேர்மை இருக்கு அது அந்த‌க் கால‌ம் தொட்டு இந்த‌க் கால‌ம் வ‌ரை🙏🥰🙏............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வீரப் பையன்26 said:

நல்லது.

சீமானை பற்றி கோஷான் சொல்லும் சிலதை ஏற்க ஈகோ விடாது இருக்கலாம். ஆனால் கார்த்தி சொல்லும் போது அதே கருத்தின் நியாயம் இலகுவாக செரிமானம் ஆகலாம்.

யார் குற்றியாவது உண்மை விளங்கினால் சரி.

அருணா-சீமான்-போலிக்காவை உருவாக்கியோர் மூவரையும் இயக்குவது றோ என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.

இதே நிலைப்பாட்டில் கார்த்தியும் இருக்கலாம் என ஊகிக்கிறேன் (நீங்கள் எழுதியதை வைத்து).

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

நாம‌ உள்ளை ஒன்று வைச்சு வெளிய‌ ஒன்றை சொல்லும் ந‌ப‌ர்க‌ள் கிடையாது...............அண்ண‌ன் சீமான் சொல்லும் ஒருசில‌தை ந‌ம்பும் ப‌டியா இல்லை அதை வெறும் வெட்டி பேச்சாய் பார்க்கிறேன் அல்ல‌து அது சீமானின் க‌ற்ப‌னைக்கு விட்டு விடுகிறேன் என‌வும் சொன்னேன்

ஆனால் சீமான் செய்த‌ ந‌ல்ல‌துக‌ளையும் சொல்ல‌ த‌வ‌றிய‌தில்லை🙏👍............................

***.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

பாஜக தமிழ்நாட்டில் இப்போது எதிர்க்கட்சி நிலையில் இருந்திருக்க வேண்டியது. ஆனால் நாம் தமிழரால் தடைப்பட்டுப் போனது.

அதுபோல, நாம் தமிழரின் வாக்கு வங்கி வளர்ச்சியை தடுத்த விடயத்தில் பாஜகவின் பங்கு அதிகம். மாற்று எனும் இடத்தில் அவர்களும் ஒட்டிக் கொண்டார்கள்.

மோடி இந்தியப் பிரதமர் ஆகிய ஆண்டு 2014. அதில் இருந்துதான் பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் ஆரம்பமாகிறது.

தமிழகத்தில் எந்தக் கட்ச் வளர்வதுக்கும் அரசியல் அதிகாரம் மற்றும் பணபலம் தேவையாகிறது. இவை இரண்டும் பாஜகவிடம் உண்டு.

வணக்கம் தம்பி இசை 

நேற்று யாழில் இருந்து உங்களை அகற்றியது பெரிய அளவில் பேசப்பட்டபோது வெறுத்து போய் இருந்தேன். இன்று உனது தரிசனம். 

அண்ணன் தம்பிகளை கலைத்து விட்டு யார் யாருக்கெல்லாம்....?????😭

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பையனுக்கும் ஒரு தேதி இருக்கு.

ம‌ற‌க்காம‌ வைச்சு இருங்கோ

யாழில் எல்லா திரிக‌ளில் கிறுக்கும் ந‌ப‌ர் நான் கிடையாது

யாழில் என்ன‌ எழுதினாலும் நினைவில் இருக்கும்👍................

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரே பந்தி.. இந்த ஒட்டு மொத்த பிரச்சினையின் ஆணிவேரையே எழுதிவிட்டிருக்கிறீர்கள்.. இதிதான் 100%%%%% உண்மை..

11 hours ago, goshan_che said:

நாம் எப்போதாவது அதிமுக-திமுக, பாமக-விசிக, கம்யுனிஸ்ட்கள் தமக்குள் அடிபடுவதில், விடயங்களில் தலையிடுகிறோமா?

இல்லையே.

சீமான் புலிகளை இழுத்து போவதால்தான் பிரச்சனையே வருகிறது.

சீமான் தனது பிழைப்புக்காக தமிழ் நாட்டு மக்களில் ஒரு பெரும் பகுதிக்கும் எமக்கும் வலிந்து முரணை உருவாக்கும் போது நாம் சும்மா இருக்க முடியாதே?

இதை எத்தனை தரம் எழுதினாலும், நீங்களும், @பாலபத்ர ஓணாண்டி  ஓணாண்டி போன்றவர்களும் மீண்டும் ஒரே கேள்வியை ஏதோ புதிய கண்டுபிடிப்பு போல கேட்கிறீர்கள்🤣.

9 hours ago, island said:

தமிழ் நாட்டில் இதுவரை முதலமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவருமே அந்த மண்ணின் மைந்தர்களே.  

Perception என்பது ஒரு வடி தட்டு மாதிரி (பொதுவாக பன்னாடை என்பார்கள் -  பன்னாடை நல்லவற்றை விட்டு விட்டு தேவையற்றதனை தக்க வைப்பதால் அது பின்னாளில் ஒரு வசவு சொல்லாக அர்த்தம் கொள்ளப்பட்டு விடுகிறது என்பதால் வடி தட்டு என கூறியுள்ளேன்) தமக்கு தேவையானவற்றை எடுத்துவிட்டு மற்றவற்றை விட்டு விடும், 

விடயங்களை எமது பார்வையில் பார்க்காமல் அதன் போக்கில் பார்ப்பதே சிறப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அவரவர் தங்களுக்கு தேவையானதை மட்டும் எடுக்கிறார்கள்.. இதில் படித்தவர் படிக்காதவர் எண்ட வித்தியாசம் இல்லை.. பிக்காளிப்பயல் என்று சீமான் சொன்னத தே.. மகன் என்று நீங்கள் சொல்வதுபோல்..

👆 மேல சீமானை புடிக்காத பகிடி ஒரு தெனாவட்டோடு பிக்காளிப்பயல் என்று சொன்னத தேடிப்பால்காமலே திமுகா ஜடிவிங் மாத்தி டப்பிங் செய்த வீடியோவ கேட்டிட்டு தே.. மகன் என்று சொல்லியது போலத்தான்..

நீங்கள் சொன்னது உண்மையானால் சென்னை பத்திரிகையாளர் சங்கம் இப்படி ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டிருப்பது ஏன்?  நீங்கள் கூறுவது உண்மையானால் பேட்டி கண்ட புதிய தலைமுறையின்  பெண் பத்திரிகையாளர் அப்படி கூறவில்லை என்று கூறாதது ஏன்? large.IMG_8994.jpeg.59fc31faa80557c69be1fe7765c23e6a.jpeg

திமுக ஐடி விங்கின்  வேலை என்றால் அந்த பெண்பத்திரிகாளர் மறுத்திருப்பாரே? அதுவும் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் அறிக்கைக்கு பிறகாவது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, island said:

நீங்கள் சொன்னது உண்மையானால் சென்னை பத்திரிகையாளர் சங்கம் இப்படி ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டிருப்பது ஏன்?  நீங்கள் கூறுவது உண்மையானால் பேட்டி கண்ட புதிய தலைமுறையின்  பெண் பத்திரிகையாளர் அப்படி கூறவில்லை என்று கூறாதது ஏன்? large.IMG_8994.jpeg.59fc31faa80557c69be1fe7765c23e6a.jpeg

திமுக ஐடி விங்கின்  வேலை என்றால் அந்த பெண்பத்திரிகாளர் மறுத்திருப்பாரே? அதுவும் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் அறிக்கைக்கு பிறகாவது. 

பெண் பத்திரிகையாளரிடம் எப்படி பேச வேண்டுமென தெரியாதா?

Jan 24, 2025
w7ozmJuH-FotoJet-41.jpg

பெண் பத்திரிகையாளரிடம் இழிவாக பதிலளித்த சீமானுக்கு சென்னை, கோவை பத்திரிகையாளர் மன்றங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்திற்காக இன்று (ஜனவரி 24) கோவை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது புதிய தலைமுறை ஊடக பெண் பத்திரிகையாளர், நீங்கள் பிரபாகரனுடன் இருந்த புகைப்படம் குறித்து பிரபாகரனின் அண்ணன் மகன் தெரிவித்த கருத்து பெரிய விமர்சனத்துக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆவேசமான சீமான், அநாகரிகமான வார்த்தையை பயன்படுத்தி பதிலளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

இந்நிலையில் சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதில், பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கண்ணியக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்திவரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

ஊடகங்களில் உரையாடும் எளிய மனிதர்களே நாகரிகமான சொற்களை பயன்படுத்தும்போது, ஒரு கட்சித்தலைவரான சீமான் பொது இடங்களிலும் ஊடக சந்திப்புகளிலும், தொடர்ந்து ஆபாச மற்றும் இழி சொற்களை பயன்படுத்திவருவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

கோவையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரபாகரனின் அண்ணன் மகன் சீமான் மீது எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை கேள்வியாக முன்வைத்த புதிய தலைமுறை பெண் செய்தியாளரிடம், முகம்சுளிக்கும் வகையில் பதிலளித்திருக்கிறார். சீமான், செய்தியாளரை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும், பெண் செய்தியாளருக்கு பதிலளிக்கிறோம் என்ற கவனமும் பொறுப்பும் இல்லாமல் (அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைக் கொண்டு) பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

சீமான், பொது இடங்களிலும் ஊடக சந்திப்புக்களிலும் முதிர்ச்சியான சொற்களைப் பயன்படுத்துவதும், கண்ணியம் அறிந்து நடந்துகொள்ள வேண்டும்” என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. 

கோவை பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொது வாழ்க்கைக்கு வந்து ஆண்டுகள் பல கழிந்தும் பொதுவெளியில் பெண்கள் மத்தியில் நாகரீகமாக பேசத் தெரியாத ச்ச்ச்சீமானே.. கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் வன்மையான கண்டனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://minnambalam.com/political-news/dont-know-how-to-talk-to-a-female-journalist-chennai-press-club-condemnation-to-seaman/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.