Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!

Jan 24, 2025
InV0vNKO-FotoJet-43.jpg

பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

பெரியார் குறித்து தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பெரியாரிய ஆதரவு அமைப்புகளும், இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரது வீட்டின் முன் முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இப்படி இரு தரப்பும் மாறி மாறி விமர்சித்து வரும் நிலையில் பழ.நெடுமாறன் இன்று (ஜனவரி 24) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பெரியார் பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து போராடியவர். அவரது இக்கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து, ஆயுதப் பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்தப் பெருமை பிரபாகரனுக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த நாட்டின் விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டதில்லை.

2009ஆம் ஆண்டு இறுதிப்போருக்கு முன்பாக தமிழீழத்தின் பெரும் பகுதி விடுதலைப்புலிகளின் ஆட்சிக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. அப்போது பெரியாரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினைச் செயல்படுத்திய பெருமை பிரபாகரனுக்கு உண்டு.

விடுதலைப்புலிகள் திருமணம் செய்துகொள்ளவேண்டுமானால், சாதி மறுப்புத் திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றை பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார்.
அவரது திருமணம் முதல் விடுதலைப்புலிகள் பலரின் திருமணங்கள் இத்தகைய புரட்சிகர திருமணங்களாகவே அமைந்தன. அவற்றைப் பார்த்த மக்களும் அவர்களைப் பின்பற்றி சாதி மறுப்புத் திருமணங்களை செய்துகொள்ள வழிவகுக்கப்பட்டது.

சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கடைப்பிடிப்பவர்கள் மீது விடுதலைப்புலிகள் கடும் நடவடிக்கை எடுத்தனர். மேலும் பல புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். பெரியார் உயிரோடு இருந்திருந்தால், தனது கோட்பாடுகளைச் செயல்படுத்தி வரும் பேரன் பிரபாகரனைச் சந்தித்துப் பாராட்ட நேரில் தமிழீழம் சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை.

பெரியாரைப் பற்றியோ அல்லது பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல் அவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாதப் போக்கினை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சாதி, சமய வேறுபாடுகளால் பிளவுப்பட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், பகுத்தறிவுச் சமதர்மப் பாதையில் தொடர்ந்து நடக்கவும் அரும்பாடுபட்ட இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்துகொள்பவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது என எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

https://minnambalam.com/political-news/please-stop-defaming-against-periyar-and-prabhakaran-pazha-nedumaran-warning/

  • கருத்துக்கள உறவுகள்

த‌லைவ‌ரை இணைய‌த்தில் கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌தே திமுக்கா இணைய‌ கைகூலிக‌ள் ம‌ற்றும் ப‌ர‌ம்ப‌ரை திமுக்காவினர்

ஜ‌யாவுக்கு விழிப்புன‌ர்வு தேவை

ஜ‌யா சொல்வ‌தில் சில‌ உட‌ன் பாடு இருக்கு ஆனால் காசி ஆன‌ந்த‌னும் ஜ‌யாவும் சேர்ந்து செய்த‌ செய‌ல் மற‌க்க‌ முடியாது

ஜ‌யா நீடூழி வாழ‌னும்🙏.....................

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, வீரப் பையன்26 said:

ஜ‌யாவுக்கு விழிப்புன‌ர்வு தேவை

உண்மை தான்  .......தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக 

இந்தியா மத்திய அரசின் அமைச்சர் 

தமிழ்நாடு முதலமைச்சர்   

தமிழக சட்டசபையில் அமைச்சர்   

வெளிநாடுகளில் இந்தியா அரசின்.   தூதுவர் 

இப்படி பல பதவிகள் வகித்து.  மிகப்பெரும் பணக்காரராக வந்து இருக்க முடியும்   தேவையில்லாமல்   

பிரபாகரனை  பலதடவைகள் காப்பற்றி    உதவிகளை செய்து  

புலிகளை வளர்த்து விட்டதில்.  மிக முக்கிய பங்கு வகித்த ஒரு தலைவர்    

பிரபாகரனை பிடித்து கொடுத்து இருக்கலாம் இந்தியா படைகளிடம். அல்லது ரொவிடம்.  

இன்று சீமான்   ஒவ்வொரு கூட்டங்களுக்கும்.  பிரபாகரன் படத்துடன்.  திரியும்.  வாய்ப்புகள் இருந்து இருக்காது.....

சீமான் வன்னிக்கு. போய் படமெடுத்து இருக்க முடியாது 

நாம் தமிழர் கட்சி  என்ற ஒன்று இருந்து இருக்காது 

சீமான் தலைவர் ஆக. முடிந்து இருக்காது 

இலங்கை தமிழர்கள் சீமானை  தலைவர் என்று  அழைத்து இருக்க முடியாது 

கயல்விழி மனைவி ஆகி இருக்க மாட்டார்   

தொடரும் 🙏🙏🙏. வணக்கம்… 

  • கருத்துக்கள உறவுகள்

இது எம்மவர்களுக்கும் சேர்த்துத்தான் கூறப்பட்டிருக்கிறது. 

தமிழக அரசியலில் தலையிடாதிருப்பதே எமக்குக் கெளரவமானதும் பயன் தரக்கூடியதுமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

இது எம்மவர்களுக்கும் சேர்த்துத்தான் கூறப்பட்டிருக்கிறது. 

தமிழக அரசியலில் தலையிடாதிருப்பதே எமக்குக் கெளரவமானதும் பயன் தரக்கூடியதுமாகும். 

முதலில் எங்கடை அரசியலே முழு விசர் கூட்டமாய் திரியுது இதுக்குள் பக்கத்து வீட்டு அரசியல் அதுவும் நாம் அழிந்து கொண்ட நேரம் மானடா மயிலாட பார்த்த கூட்டம் எக்கேடு போனால் நமக்கென்ன .

அதுசரி யாழ்பாணத்தில் இந்திய புரியாணி கடைகள் புதுசு புதுசு ஆய் திறக்கினம் ஒரு புரியாணி பாசல் 15௦௦ ரூபா என்கிறார்கள் அங்கிருக்கும் கூலிக்கு வேலை செய்பவரால் அந்த பாசலை வாங்க முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

அதுசரி யாழ்பாணத்தில் இந்திய புரியாணி கடைகள் புதுசு புதுசு ஆய் திறக்கினம் ஒரு புரியாணி பாசல் 15௦௦ ரூபா என்கிறார்கள் அங்கிருக்கும் கூலிக்கு வேலை செய்பவரால் அந்த பாசலை வாங்க முடியுமா ?

யூ டியூப் காரார் நிறைய இருக்கினமல்லே...அவையும்....கூலிக்கு..😅

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கை தட்டி ஓசை வராது.

சீமான் வரும் வரை ஈழத்தமிழர் நாம் தமிழக அரசியலில் தலையிடாமல்தான் இருந்தோம்.

சீமான் வந்து பெரியார் vs பிரபாகரன் என ஒரு பொய்சமன்பாட்டை நிறுவும் போது…

திமுக, அதிமுக, திக, இன்னும் பல கோடி அனுதாபிகள் கொண்ட அமைபுக்களை எமக்கு எதிராக நிறுத்தும் போது…

600 வருடமாக தமிழக்கதில் இருப்பவனை பார்த்து நீ அயலான், ஆனால் ஈழத்தமிழன் என் உறவு என சிண்டு முடியும் போது

நாம் சும்மா இருக்க முடியாது. கூடாது.

அப்படி இருப்பின்…

தமிழக மக்களையும் ஈழத்தமிழரையும் நிரந்தர பகைவராக்கும் றோ/ஆர் எஸ் எஸ் சதிக்கு நாமும் துணைபோகிறோம் என்பதே அர்த்தம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

முதலில் எங்கடை அரசியலே முழு விசர் கூட்டமாய் திரியுது இதுக்குள் பக்கத்து வீட்டு அரசியல் அதுவும் நாம் அழிந்து கொண்ட நேரம் மானடா மயிலாட பார்த்த கூட்டம் எக்கேடு போனால் நமக்கென்ன 

நீங்களே உங்கட தலையில கொள்ளிகட்டையை சொருகி அழிந்ததற்கு அடுத்தவர் எவரும் பொறுப்பு இல்லை. எவராலும் காப்பாற்ற முடியாது.  இப்போது கூட சீமான் உங்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறார் என்பதை கூட புரிந்து கொள்ள தெரியாத அரசியல் பேதைகள் அழிவை நோக்க செல்வதை உலகில் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, island said:

ஈழத்தை வைத்து தமிழகத்தில் என்ன அரசியல் எப்படிப் பண்ணலாம்?? சும்மா வாயில் வந்தததை எல்லாம் பிதற்றக் கூடாது. அதையும் மீறிச் சீமான் செய்கின்றார் என்றால் வாழ்த்தப்பட வேண்டியவர் தான். ஈழத்தில் போர் உச்சத்தை அடையும்போது தமிழகத்தில் போராட்டங்கள் செய்து தமிழர் அழிப்பை நிறுத்தப் புலிகள் முயன்றார்கள். அதற்காகத் தான் தமிழகத்தில் இருந்து பிரபல்யமான இயக்குனர்கள், அரசியல்வாதிகளை வன்னிக்கு அழைத்தனர். வந்தவர்களில் சீமான் மட்டுமே உண்மையாகவும், நேர்மையாகவும் இன்று வரை  நிற்கின்றார். 

ஒரு வேளை தமிழக மக்கள் அன்று ஆதரவுப் போராட்டங்களை விரிவுபடுத்தியிருந்தால் இந்தளவு ழப்பு நடந்திருக்காது. காசா மக்களுக்கு இஸ்லாமிய மக்கள் செய்த போராட்டங்களால் எப்படி அழிவு குறைக்கப்பட்டபோதோ அது போல எமக்கும் நடந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தூயவன் said:

சீமான் அரசியல் செய்கிறார் என்று நான் கூறவில்லை. அரசியல் வியாபாரம் செய்து பிழைக்கிறார் என்று தெளிவாக கூறியுள்ளேன். காசாவின் அண்மைய அழிவுகளுக்கு கமாஸ் பயங்கரவாதிகள் கொள்ளிக்கட்டையை  சொருகியதும் காரணம்.  இத்த பட்டறிவு கமாஸ் பயங்கரவாதிகளுக்கு பாடமாக அமைய வேண்டும். இஸ்லாமிய நாடுகள் பொருளாதாரத்தில் பலமாக இருந்ததும், அதன் அடிப்படையில் தமது அரசியல் ஆளுமையை பயன்படுத்தியதுமே காசாவில் யுத்த நிறுத்தம் ஏற்பட காரணமே தவிர மக்கள் போராட்டம் அல்ல.  இத்தனை பலமாக இஸ்லாமிய நாடுகள. இருந்தும் பாரிய அழிவுகளின் பின்னரே யுத்த நிறுத்தம் ஏற்பட்டது.  அரசியல் அதிகாரமற்ற ஒரு மாநில மக்களால் அழிவுகளை தடுத்து நிறுத்த முடியும் என்உ நம்புவது வடிகட்டிய  அரசியல் பேதைத்தனமே. இந்த வகையான அரசியல் பேதைத்தனமே தமிழருக்கு அழிவுகளை கொடுத்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

அரசியல் அதிகாரமற்ற ஒரு மாநில மக்களால் அழிவுகளை தடுத்து நிறுத்த முடியும் என்உ நம்புவது வடிகட்டிய  அரசியல் பேதைத்தனமே

முற்றிலும் உண்மை   ......போராட துணிவு வேண்டும்    பயம் அறவே இருக்க கூடாது      இவர்கள் தமிழ்நாட்டு மக்கள் தமிழகத்துக்கு  போராடி என்ன பெற்றுக் கொண்டார்கள் ?? 

இயற்கை தந்த தண்ணீர் 

இந்தியாவில் இருக்கும் தண்ணீர்   

காவேரி  தண்ணீரை போராடி பெற முடியாதவர்கள்.  அது தேவையற்று கடலில் கலக்கிறது    ஏன் போராடி பெறவில்லை  ???   நம்ம தலைவர் பிரபாகரன் மாதிரி ஒரு போராட்டத்தை.   முப்பது ஆண்டுகளுக்கு மேலாக 

செய்ய முடியுமா இவர்களால்    ??   முடியவே முடியாது,....ஒருசில மாதங்களில் ஐம்பது பிரிவுகளாக.  பிரிந்து விடுவார்கள்,.....🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

நீங்களே உங்கட தலையில கொள்ளிகட்டையை சொருகி அழிந்ததற்கு அடுத்தவர் எவரும் பொறுப்பு இல்லை. எவராலும் காப்பாற்ற முடியாது.  இப்போது கூட சீமான் உங்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறார் என்பதை கூட புரிந்து கொள்ள தெரியாத அரசியல் பேதைகள் அழிவை நோக்க செல்வதை உலகில் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. 

முதலில் இங்கு என்ன கருத்து சொல்ல வந்தேன் என்பதை கூட புரிந்து கொள்ள திரணி அற்ற ஆள் அந்தளவுக்கு   உங்களுக்கு புலிகள் மீதும்  தமிழ் தேசியம் மீதும் அவ்வளவு வெறுப்பு கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் காக்கா எச்சம் போடுவது போல் புலிகளை வசை பாடுவதுதான் உங்களின் முழு நேர தொழில் யாழில் கொஞ்சமாவது மற்றவர் எழுதும் கருத்துக்களை கிரகித்து அதற்க்கு தகுந்த பதில் கருத்து எழுத திரும்பவும் பள்ளி சென்று படித்து அதன்பின் யாழில் கருத்து எழுதுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

அழிவை நோக்க செல்வதை

முக்கியமாய் எழுத்து பிழைகளை கவனிக்கவும் தமிழில் எதிர் கருத்து வைப்பது என்றால் அதற்கு ஒரு தில் வேணும் இப்படி அரைகுறையாய் தமிழை எழுதி தமிழை சிதைக்க வேணாம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

வேறு எந்த நாட்டின் விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டதில்லை.

நெடுமாறன் ஐயாவுக்கு வயது நன்றாக முதிர்ந்துவிட்டது. நான் சிறுவனாக இருந்தபோதே விடுதலைப் புலிகளின் பிரசுரங்கள் அல்லது புளட், ஈரோஸின் பிரசுரங்கள் மூலம் கொலம்பிய FARC கெரில்லாப் போராட்டத்தில் பெண்போராளிகள் இருந்ததை முதன்முதலாக அறிந்துகொண்டேன்.

spacer.png

11 hours ago, கிருபன் said:

விடுதலைப்புலிகள் திருமணம் செய்துகொள்ளவேண்டுமானால், சாதி மறுப்புத் திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றை பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார்.

இது முற்றிலும் தவறு. அப்படி ஒரு ஆணையும் இல்லை. யாரும் யாரையும் திருமணம் செய்யலாம். ஒரு போராளி இன்னோர் போராளியை அல்லது பொதுமக்களில் ஒருவரை திருமணம் செய்யும் விருப்பத்தைத் தெரிவித்தால் திருமணத்திற்கான குழு இரு பக்கமும் பேசி திருமணத்தை நடாத்திவைக்கும். கட்டாயப்படுத்துவதும், அழுத்தம் கொடுப்பதும் கிடையாது என்பதுதான் எனது அறிதல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புளட், ஈரோஸின் பிரசுரங்கள் மூலம் கொலம்பிய FARC கெரில்லாப் போராட்டத்தில் பெண்போராளிகள் இருந்ததை முதன்முதலாக அறிந்துகொண்டேன்.

😂

அவர் தமிழன் தான் உலகத்தில் எல்லோரையும் விட ஆக சிறந்தவன் என்று தமிழர்களுக்கு தெரிவிக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

அவர் தமிழன் தான் உலகத்தில் எல்லோரையும் விட ஆக சிறந்தவன் என்று தமிழர்களுக்கு தெரிவிக்கின்றார்

இவர் மட்டுமல்ல இப்படி கூறுவோர் பலருண்டு. தமிழருக்கும் மட்டும் தான் இப்படி குண்டு சட்டிக்குள் குதிரையோட முடியும். உலகத்திற்கு இதை கூறினால் ஆதாரம் கேட்பார்கள். 

சீமான் கூட இப்படித் தான், “உலகத்துக்கே நாகரீகம் சொல்லிக்கொடுத்தது எம் தமிழ் பேரினம் தான் என்று காட்டு மிருகம் போல் கத்த, தற்குறித் தம்பிகள்  அது உண்மை என்று நம்பி  விசிலடிப்பர். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kandiah57 said:

உண்மை தான்  .......தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக 

இந்தியா மத்திய அரசின் அமைச்சர் 

தமிழ்நாடு முதலமைச்சர்   

தமிழக சட்டசபையில் அமைச்சர்   

வெளிநாடுகளில் இந்தியா அரசின்.   தூதுவர் 

இப்படி பல பதவிகள் வகித்து.  மிகப்பெரும் பணக்காரராக வந்து இருக்க முடியும்   தேவையில்லாமல்   

பிரபாகரனை  பலதடவைகள் காப்பற்றி    உதவிகளை செய்து  

புலிகளை வளர்த்து விட்டதில்.  மிக முக்கிய பங்கு வகித்த ஒரு தலைவர்    

பிரபாகரனை பிடித்து கொடுத்து இருக்கலாம் இந்தியா படைகளிடம். அல்லது ரொவிடம்.  

இன்று சீமான்   ஒவ்வொரு கூட்டங்களுக்கும்.  பிரபாகரன் படத்துடன்.  திரியும்.  வாய்ப்புகள் இருந்து இருக்காது.....

சீமான் வன்னிக்கு. போய் படமெடுத்து இருக்க முடியாது 

நாம் தமிழர் கட்சி  என்ற ஒன்று இருந்து இருக்காது 

சீமான் தலைவர் ஆக. முடிந்து இருக்காது 

இலங்கை தமிழர்கள் சீமானை  தலைவர் என்று  அழைத்து இருக்க முடியாது 

கயல்விழி மனைவி ஆகி இருக்க மாட்டார்   

தொடரும் 🙏🙏🙏. வணக்கம்… 

க‌ருணா கூட‌த் தான் த‌லைவ‌ரை

இந்தியன் ஆமியிட‌ம் இருந்து காப்பாற்றின‌வ‌ன்...................பின்னைய‌ கால‌ங்க‌ளில் க‌ருணாவின் செய‌ல் பாடு எப்ப‌டி இருந்த‌து

2009க்கு பிற‌க்கு ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யாவின் செய‌ல் பாடுக‌ள் சில‌ என‌க்கு பிடிக்க‌ வில்லை...................அதுக்காக‌ ஜ‌யா மீது என‌க்கு கோவ‌ம் இல்லை🙏👍......................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தூயவன் said:

ஈழத்தை வைத்து தமிழகத்தில் என்ன அரசியல் எப்படிப் பண்ணலாம்?? சும்மா வாயில் வந்தததை எல்லாம் பிதற்றக் கூடாது. அதையும் மீறிச் சீமான் செய்கின்றார் என்றால் வாழ்த்தப்பட வேண்டியவர் தான். ஈழத்தில் போர் உச்சத்தை அடையும்போது தமிழகத்தில் போராட்டங்கள் செய்து தமிழர் அழிப்பை நிறுத்தப் புலிகள் முயன்றார்கள். அதற்காகத் தான் தமிழகத்தில் இருந்து பிரபல்யமான இயக்குனர்கள், அரசியல்வாதிகளை வன்னிக்கு அழைத்தனர். வந்தவர்களில் சீமான் மட்டுமே உண்மையாகவும், நேர்மையாகவும் இன்று வரை  நிற்கின்றார். 

ஒரு வேளை தமிழக மக்கள் அன்று ஆதரவுப் போராட்டங்களை விரிவுபடுத்தியிருந்தால் இந்தளவு ழப்பு நடந்திருக்காது. காசா மக்களுக்கு இஸ்லாமிய மக்கள் செய்த போராட்டங்களால் எப்படி அழிவு குறைக்கப்பட்டபோதோ அது போல எமக்கும் நடந்திருக்கும்.

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி

இனி நீங்க‌ளும் சீமானின் சொம்பு என‌ முத்திரை குத்துவின‌ம் க‌வன‌ம்👍.......................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

விடுதலைப் புலிகளின் பிரசுரங்கள் அல்லது புளட், ஈரோஸின் பிரசுரங்கள் மூலம் கொலம்பிய FARC கெரில்லாப் போராட்டத்தில் பெண்போராளிகள் இருந்ததை முதன்முதலாக அறிந்துகொண்டேன்.

பெண் போராளிகள் என்றால் வேலு நாச்சியார், ஜான்சி ராணி என பலர் உளர்.

நான் அறிய முதல் பெண்கள் படையணி என்றால் அது நேதாஜி உருவாக்கிய ஜான்சிராணி படையணிதான்.

அதன் கட்டளை அதிகாரி இலக்ஸ்மி எனும் தமிழ் பெண்மணி.

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அவர் தமிழன் தான் உலகத்தில் எல்லோரையும் விட ஆக சிறந்தவன் என்று தமிழர்களுக்கு தெரிவிக்கின்றார்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 25/1/2025 at 00:45, goshan_che said:

ஒரு கை தட்டி ஓசை வராது.

சீமான் வரும் வரை ஈழத்தமிழர் நாம் தமிழக அரசியலில் தலையிடாமல்தான் இருந்தோம்.

சீமான் வந்து பெரியார் vs பிரபாகரன் என ஒரு பொய்சமன்பாட்டை நிறுவும் போது…

திமுக, அதிமுக, திக, இன்னும் பல கோடி அனுதாபிகள் கொண்ட அமைபுக்களை எமக்கு எதிராக நிறுத்தும் போது…

600 வருடமாக தமிழக்கதில் இருப்பவனை பார்த்து நீ அயலான், ஆனால் ஈழத்தமிழன் என் உறவு என சிண்டு முடியும் போது

நாம் சும்மா இருக்க முடியாது. கூடாது.

அப்படி இருப்பின்…

தமிழக மக்களையும் ஈழத்தமிழரையும் நிரந்தர பகைவராக்கும் றோ/ஆர் எஸ் எஸ் சதிக்கு நாமும் துணைபோகிறோம் என்பதே அர்த்தம்.

சீமானுக்கு,..58 வயது 

கயல்விழிக்கு    31. வயது    

கயல்விழியின்.   அம்மாவின் வயது    52.    சீமானின்.  வயது    கயல்வியின்.  அம்மாவை விட   கூட ஆகும்.   

சீமானுக்கும்.  கயல்விழிக்கும்.   வயது வித்தியாசம்    27. வருடங்கள்.    ஆகும்     இந்த லட்சணத்தில்.     பெரியருக்கு   வகுப்பு எடுக்கிறார்.    எனக்கு   68.  வயது   ஒரு   40.  வயது    

கிடைக்குமா???   என்று தேடுகிறேன். 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kandiah57 said:

சீமானுக்கு,..58 வயது 

கயல்விழிக்கு    31. வயது    

கயல்விழியின்.   அம்மாவின் வயது    52.    சீமானின்.  வயது    கயல்வியின்.  அம்மாவை விட   கூட ஆகும்.   

சீமானுக்கும்.  கயல்விழிக்கும்.   வயது வித்தியாசம்    27. வருடங்கள்.    ஆகும்     இந்த லட்சணத்தில்.     பெரியருக்கு   வகுப்பு எடுக்கிறார்.    எனக்கு   68.  வயது   ஒரு   40.  வயது    

கிடைக்குமா???   என்று தேடுகிறேன். 🤣🤣

இதற்குள் திடீரென ஒரு 16,15 வயசு பையனை கொண்டு வந்து - மகன் என அறிமுகம் வேறு செய்கிறார்.

கேட்டால் கயல்விழியின் அக்கா மகனாம். 

ஆனால் அந்த பையனின் அம்மா, அப்பா யார் என்பதோ, அவர்கள் பொதுவெளியில் வந்ததாகவோ தெரியவில்லை.

ஒரு சாரார் ஏதோ சொத்தை லபக்குவதற்காக அந்த பையனை கொண்டு வந்து வைத்துள்ளதாக சொல்லிகிறார்கள்.

இன்னொருசாராரோ அந்த பையனின் முகஜாடை கயல் அண்ணியை விட சீமானோடு அதிகம் ஒத்து போவதாக பகீர் கிளப்புகிறார்கள்.

என்ன கறுமமோ…

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சீமானோடு அதிகம் ஒத்து போவதாக பகீர் கிளப்புகிறார்கள்.

சீமானின்.   மகனாக.  இருக்கும்     .....எதுக்கும்.    இருவரது   இரத்தத்தை    எடுத்து    சோதிப்பது நல்லது   🤣🙏 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஒரு சாரார் ஏதோ சொத்தை லபக்குவதற்காக அந்த பையனை கொண்டு வந்து வைத்துள்ளதாக சொல்லிகிறார்கள்.

இந்த சொத்து வெளிநாட்டு ஈழதமிழர்கள் அவருக்கு கொடுத்த சொத்து
இப்போது  சீமானை குறை சொல்ல நீ யார் என்று கார்த்திக்குக்கு வீடியோ போடுகின்றனர்
செந்தமிழ் சீமான் ஆங்கில மொழி மூலம் தமிழ்நாட்டில் கல்வி கற்பிப்பது இந்த மகனையா அல்லது வேறா

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை போற்றுவர் துற்றுவர் ஒரு புறம் இருக்க அந்த மனுசனின புண்ணியத்தில் பல கள உறுப்பினர்களை மீக்டும் கான முடியுது.அந்த வகையில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இந்த சொத்து வெளிநாட்டு ஈழதமிழர்கள் அவருக்கு கொடுத்த சொத்து
இப்போது  சீமானை குறை சொல்ல நீ யார் என்று கார்த்திக்குக்கு வீடியோ போடுகின்றனர்
செந்தமிழ் சீமான் ஆங்கில மொழி மூலம் தமிழ்நாட்டில் கல்வி கற்பிப்பது இந்த மகனையா அல்லது வேறா

ஆங்கிலம் மூலம் கற்பிப்பது இவரையும், கயல் அண்ணி+சீமான் மகனாகிய குஞ்சு மாவீரனையும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.