Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை

spacer.png

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அநுர அரசு ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவில்லை.

இருப்பினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்புகள் குறைக்கப்படும்போது கூட சாதரண குடிமகனான சுமந்திரனுக்கு சிங்கள்ப்படைகள் பாதுகாப்பு வழங்குவதிலிருந்து சுமந்திரன் சிங்கள கைக்கூலிமுகம் வெளிச்சமாகியுள்ளது 

https://www.thaarakam.com/news/adf981e3-ee2e-46e6-aef1-ef3bade7aeb7

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது வழமை. ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது கண்டு கோபமடைவது ஏன்? 

1) அவருக்கு பாதுகாப்பு  கொடுப்பது சகிக்கவில்லை 

2) பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க முடியாத காரணத்தால். 

3) பொது அறிவின்மையால். 

😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு வாகன கதவை திறக்கும் மெய்பாதுகாவலர்கள்: தானே திறந்து கொள்ளும் அநுர.

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அநுர அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

சலுகை  

அந்தவகையில், கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவில்லை.

இருப்பினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடானது அநுர அரசாங்கம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முகத்தை காட்டி சலுகைகளை வழங்குகின்றதா அல்லது சுமந்திரனுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்துகொண்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் வாகன கதவுகளை திறந்து விடுவது என்பது ஜனாதிபதிகளுக்கான ஒரு விசேட செயற்பாடாகும். இருப்பினும் ஜனாதிபதி அநுர ஆட்சிக்கு வந்த பிறகு அந்த சலுகை தனக்கே வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். 

குறிப்பாக அநுர அரசின் கீழ் உள்ள அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் யாரும் பாதுகாப்பு சலுகைகள் எடுத்துக் கொள்ளாத நிலையில், சுமந்திரனுக்கு மாத்திரம் அந்த சலுகை வழங்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

இது தவறான வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக மகிந்த ராஜபக்ச தனது மெய்பாதுகாவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியமைக்கு ஒப்பானதாகவே இது பார்க்கப்படுகின்றது. 

அத்துடன், இந்த செயலானது, பாதுகாப்பு அதிகாரிகளை மலினபடுத்தும் வகையில் இருப்பதாகவும் சுமந்திரன் விடயத்தில் அநுர அரசு துணை போகின்றதா அல்லது சுமந்திரனோடு பயணிக்கின்றதா என்னும் கேள்வி எழுகின்றது. 

எனவே, இது தொடர்பில் அநுர அரசு தெளிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர். 

https://tamilwin.com/article/two-bodyguards-given-to-sumanthiran-been-issued-1737893866

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இருப்பினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்று அனுரா சொன்ன ஞாபகம்.

ஒருவேளை இவர்களுக்கான கொடுப்பனவுகளை சுமந்திரனே செய்கிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு ஏன் இந்த சலுகை?

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மெய்பாதுகாவலர்களின் பாதுகாப்பை பெற்றுக் கொள்ளவில்லை.

இருப்பினும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

https://thinakkural.lk/article/314885

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு முட்டாள்த்  தீவிர டமில் தேசிய வெறியர்களால் ஆபத்து என்பதால் அவருக்கு பாதுகாப்புக் கொடுக்கப்படுகிறது. . 

கனடாவிற்கு வந்தால் செருப்பால் அடிப்போம் முட்டையால் எறிவோம் என்று யாழ் களத்தில் இருக்கும் சில   டமில் தேசிய வெறியர்களே எச்சரிக்கிறார்கள். . அதுபோல பிரான்சிலும்  டமில் தேசிய வெறியர்களும் எச்சரிக்கிறார்கள். இவர்கள் செருப்புக்குப் பதிலாக அசிற் அடிக்கமாட்டார்கள், கத்தியால் குத்தமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?  உண்மை  நிலமை இப்படி இருக்கையில் புலன்பெயர்ந்த டமில் தேசிய வியாபாரிக்ளாலும் இந்திய அடிவருடிகளால் ஏவப்பட்ட ஆட்களால் சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பது ஒன்றும் புதுமை அல்லவே. 

எனவே சுமந்திரனுக்குரிய பாதுகாப்பு என்பது நியாயமான நடவடிக்கையே. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்று அனுரா சொன்ன ஞாபகம்.

ஒருவேளை இவர்களுக்கான கொடுப்பனவுகளை சுமந்திரனே செய்கிறாரோ?

இந்திய அரசின் கொடுப்பனவில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறதோ ...சிங்கள தீவிரவாதிகள் இவர் மீது தாக்குதல் நடத்தலாம் என இந்திய தூதரகம் நினைத்திருக்க கூடும்.உதய கம்பன்பிலா ஏற்கனவே சொன்னவர் சுமத்திரனுக்கு அமைச்சர் பதவி அனுரா கொடுக்க போகின்றார் எண்டு...

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது வழமை. ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது கண்டு கோபமடைவது ஏன்? 

பின்கதவால் பதவி கிடைத்தது முதல் உலக நாடுகளிடம் ஓடி ஓடி தனியே பேசி இனவழிப்பு அங்கு நடைபெறவில்லை என்று  காப்பற்றியதுக்கு சிங்களத்துக்கு விசுவாசமாய் நடந்து கொண்டதுக்கு கிடைத்த வெகுமானம் இது .சிலவேளை தங்களின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் என்று சொறிந்து கொள்ளவும் அவர்களால் முடியும்.இதை மகிந்த தரப்பு ரசிக்காமல் மேலே சொரியவும் செய்யும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

உங்களைப் போன்ற அட்களை நம்பித்தான் தமிழ்வின்,  தாரகம் போன்ற குப்பை ஊடகங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

 சுமத்திரனுக்கு அமைச்சர் பதவி அனுரா கொடுக்க போகின்றார் எண்டு...

அதற்கான ஒத்திக்கைதான் ...இந்த பாதுகாப்பு..😅

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

உங்களைப் போன்ற அட்களை நம்பித்தான் தமிழ்வின்,  தாரகம் போன்ற குப்பை ஊடகங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. 😁

கவனியுங்க தமிழ் விண்ணோ தராரகமோ சொன்னது தானே இலங்கையில் நடக்குது  அடுத்த கிழமையில் இருந்து இலங்கை தீவு மீன் இறக்குமதி செய்ய போகுதாம் ? அதுக்கு அடுத்த கிழமை இந்தியாவில் இருந்து அயோடின் இல்லா உப்ப இறக்குமதி செய்ய போகிராரர்கலாம் ? பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணியவர்கக்கு விடயம் புரியும் உங்களுக்கு பேராண்டி  ?

5 hours ago, Kapithan said:

உங்களைப் போன்ற அட்களை நம்பித்தான் தமிழ்வின்,  தாரகம்

கொஞ்சம் தமிழை கவனியுங்க பேராண்டி தொடர்ந்தால் பிறகு விராண்டி போடுவேன் ...................

Edited by பெருமாள்
போகிறார்கள் என்று வரனும் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

கனடாவிற்கு வந்தால் செருப்பால் அடிப்போம் முட்டையால் எறிவோம் என்று யாழ் களத்தில் இருக்கும் சில   டமில் தேசிய வெறியர்களே எச்சரிக்கிறார்கள். . அதுபோல பிரான்சிலும்  டமில் தேசிய வெறியர்களும் எச்சரிக்கிறார்கள். இவர்கள் செருப்புக்குப் பதிலாக அசிற் அடிக்கமாட்டார்கள், கத்தியால் குத்தமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?  உண்மை  நிலமை இப்படி இருக்கையில் புலன்பெயர்ந்த டமில் தேசிய வியாபாரிக்ளாலும் இந்திய அடிவருடிகளால் ஏவப்பட்ட ஆட்களால் சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பது ஒன்றும் புதுமை அல்லவே. 

கனடாவுக்கோ, வேறு வெளிநாடுகளுக்கோ சுமந்திரன் பயணம் செய்யும் போது எந்தப்பாதுகாப்புமில்லாமல் பயணம் செய்து கூட்டங்களில் பகிரங்கமாக பங்கேற்றுவிட்டு எந்தப்பாதிப்புமில்லாமல் வந்தார். அப்படி அங்கே அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால்:  சுமந்திரன் உயிருக்கு அச்சுறுத்தலான பயணங்களை தவிர்க்கலாம். அவர் அந்த நாடுகளுக்கு போய் எதுவும் சாதிப்பதில்லை, யாரும் கட்டாயப்படுத்தி அழைப்பதுமில்லையே.     இந்தியாவுக்கே எந்தப்பாதுகாப்புமில்லாமல் தானாகவே அழைப்பை ஏற்படுத்தி, போய், நன்றாக படங்கள் பிடித்து விளம்பரப்படுத்தி வந்துள்ளார். நிற்க, அவர் இப்போ பாராளுமன்ற உறுப்பினருமல்ல. அப்படியிருக்க அவருக்கு உயிர் அச்சுறுத்தலாம், அதற்கு பாதுகாப்பாம். தமிழரசுக்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் யாருக்கும் வழங்கப்படாத பாதுகாப்பு இவருக்கு மட்டும் எதற்கு? சிறிதரன் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டதற்கு சிவஞானம் கொடுத்த விளக்கம், சிறிதரன் அரசாங்கத்தை விமர்சித்ததால் இந்த நிலையேற்பட்டது என்கிறார். சுமந்திரன் சொல்கிறார், இலங்கையரசால் தடையுத்தரவு பெற்ற கனடா தமிழ் அமைப்போடு சிறிதரன் சந்திப்பை நடத்தியதால், அவருக்கு விமான நிலையத்தில் பிரச்னையேற்பட்டதென்கிறார். விமான நிலைய அதிகாரியோ அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை என்கிறார். அப்போ சிறிதரனுக்குத்தான் பாதுகாப்பு தேவை. இவருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு, அவர் சிங்களத்துக்கு கால் கழுவும் வேலைக்காக இருக்கலாம். அல்லது பதவிக்கு நாண்டு பிடிப்பதால் பாதுகாப்பை அளித்து சமாதானப்படுத்தியிருப்பாரோ அனுரா? 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது வழமை. ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது கண்டு கோபமடைவது ஏன்? 

வடகிழக்கு தமிழ்  மக்களால் வெறுக்கப்பட்ட செத்து போன கிளிக்கு பாதுகாப்பு கொடுத்து என்ன ஆவ போகுது ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

வடகிழக்கு தமிழ்  மக்களால் வெறுக்கப்பட்ட செத்து போன கிளிக்கு பாதுகாப்பு கொடுத்து என்ன ஆவ போகுது ?

புலியோடையும் ,சகரானோடையும் மல்லுக்கட்டின மகிந்தவுக்கே ..பாதுகாப்பு குறைத்தாயிற்று....இதென்னடாவென்ற்றால்...சும்மா இருக்கிற சுமந்திரனுக்கு பாதுகாப்பாம்...😄

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கு தமிழ்  மக்களால் வெறுக்கப்பட்ட செத்து போன கிளிக்கு பாதுகாப்பு கொடுத்து என்ன ஆவ போகுது ?

"சும்" மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதி - அவர் செத்துபோன கிளி ஆக்கப்பட்டு தமிழ் அரசியல் பரப்பில் இருந்து உதறித் தள்ளப்பட்லும் அந்தக்கிளி ஒரு இலவு காத்த கிளியாக அடுத்த தேர்தலை எதிர்பார்த்து தனது எஞ்சிய நாட்களை கழிக்கும் என்று தமிழ் மக்கள்  நம்பினால் அது தவறு.

"சும்" சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் ஆட்டத்தை மாற்றி விளையாட தொடங்கி ரொம்ப நாளாயிற்று.  அனுர அரசில் "சும்" பதவி எதையும் பெறாவிடினும் அவருக்கு பொறுப்புகள்  கொடுக்கப்பட்டுவிட்டது. சிங்கள ஆட்சியாளர்கள் எவராயிருந்தாலும் "சும்" போன்ற
"திறமையான" தமிழ் அரசியல்வாதிகளை இனங்கண்டு அவர்களுக்கு ஏற்ற "பதவிகளையும் பொறுப்புகளையும்"  கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

"சும்"மின் தமிழர் விசுவாசத்தை நாங்கள் சந்தேகக் கண்ணுடன் பார்த்தாலும் சர்வதேசத்திற்கும்  இந்தியாவுக்கும் ஏன் அனுர அரசுக்கும் கூட இலங்கையில் எஞ்சியுள்ள தமிழ் அரசியல்வாதிகளில் "சும்"மை மட்டும்தான் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டிய அவசியம் உண்டு.

இனப்பிரச்சினையை சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி கொண்டுசெல்லவும் இந்தியா உட்பட வெளி நாட்டு சக்திகள் தாம் நினைக்கும் நேரங்களில்  சிங்கள அரசுக்கு தமிழ்தரப்பில் இருந்து நெருக்கடியை உருவாக்கவும் தீர்வுக்கான பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ் இனத்தை ஒரு மாயைக்குள்  வைத்திருப்பதற்கும்  "சும்"மை நிலை நிறுத்தி வைத்தால் தான்  சாத்தியமாகும்.  இதற்கான ஆளுமை மற்றைய தமிழ் அரசியல்வாதிகளிடம் இருப்பதாக தெரியவில்லை.

அதாவது சுருக்கமாக சொன்னால் "சும்" என்ற நபரை தமிழ் இனம் அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தாலும்  வல்லரசுகளுக்கும் சர்வதேசத்துக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் அவரின் சேவை அவசியம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

சுமந்திரனுக்கு முட்டாள்த்  தீவிர டமில் தேசிய வெறியர்களால் ஆபத்து என்பதால் அவருக்கு பாதுகாப்புக் கொடுக்கப்படுகிறது. . 

கனடாவிற்கு வந்தால் செருப்பால் அடிப்போம் முட்டையால் எறிவோம் என்று யாழ் களத்தில் இருக்கும் சில   டமில் தேசிய வெறியர்களே எச்சரிக்கிறார்கள். . அதுபோல பிரான்சிலும்  டமில் தேசிய வெறியர்களும் எச்சரிக்கிறார்கள். இவர்கள் செருப்புக்குப் பதிலாக அசிற் அடிக்கமாட்டார்கள், கத்தியால் குத்தமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?  உண்மை  நிலமை இப்படி இருக்கையில் புலன்பெயர்ந்த டமில் தேசிய வியாபாரிக்ளாலும் இந்திய அடிவருடிகளால் ஏவப்பட்ட ஆட்களால் சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பது ஒன்றும் புதுமை அல்லவே. 

எனவே சுமந்திரனுக்குரிய பாதுகாப்பு என்பது நியாயமான நடவடிக்கையே. 

😁

கொடிய பாம்பினை அடித்து சாகடித்தாலும் அதன் விஷம் போகாது ...அந்தமாதிரி இந்த சும் ....கண்ட இடத்தில கும்மனும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

வடகிழக்கு தமிழ்  மக்களால் வெறுக்கப்பட்ட செத்து போன கிளிக்கு பாதுகாப்பு கொடுத்து என்ன ஆவ போகுது ?

"சும்" மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதி - அவர் செத்துபோன கிளி ஆக்கப்பட்டு தமிழ் அரசியல் பரப்பில் இருந்து உதறித் தள்ளப்பட்லும் அந்தக்கிளி ஒரு இலவு காத்த கிளியாக அடுத்த தேர்தலை எதிர்பார்த்து தனது எஞ்சிய நாட்களை கழிக்கும் என்று தமிழ் மக்கள்  நம்பினால் அது தவறு.

"சும்" சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் ஆட்டத்தை மாற்றி விளையாட தொடங்கி ரொம்ப நாளாயிற்று.  அனுர அரசில் "சும்" பதவி எதையும் பெறாவிடினும் அவருக்கு பொறுப்புகள்  கொடுக்கப்பட்டுவிட்டது. சிங்கள ஆட்சியாளர்கள் எவராயிருந்தாலும் "சும்" போன்ற
"திறமையான" தமிழ் அரசியல்வாதிகளை இனங்கண்டு அவர்களுக்கு ஏற்ற "பதவிகளையும் பொறுப்புகளையும்"  கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

"சும்"மின் தமிழர் விசுவாசத்தை நாங்கள் சந்தேகக் கண்ணுடன் பார்த்தாலும் சர்வதேசத்திற்கும்  இந்தியாவுக்கும் ஏன் அனுர அரசுக்கும் கூட இலங்கையில் எஞ்சியுள்ள தமிழ் அரசியல்வாதிகளில் "சும்"மை மட்டும்தான் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டிய அவசியம் உண்டு.

இனப்பிரச்சினையை சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி கொண்டுசெல்லவும் இந்தியா உட்பட வெளி நாட்டு சக்திகள் தாம் நினைக்கும் நேரங்களில்  சிங்கள அரசுக்கு தமிழ்தரப்பில் இருந்து நெருக்கடியை உருவாக்கவும் தீர்வுக்கான பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ் இனத்தை ஒரு மாயைக்குள்  வைத்திருப்பதற்கும்  "சும்"மை நிலை நிறுத்தி வைத்தால் தான்  சாத்தியமாகும்.  இதற்கான ஆளுமை மற்றைய தமிழ் அரசியல்வாதிகளிடம் இருப்பதாக தெரியவில்லை.

அதாவது சுருக்கமாக சொன்னால் "சும்" என்ற நபரை தமிழ் இனம் அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தாலும்  வல்லரசுகளுக்கும் சர்வதேசத்துக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் அவரின் சேவை அவசியம் தேவை.

உங்கடை சுமத்திரன் கடந்த 14 வருடமாய் தமிழருக்கு செய்த ஒரு நல்ல விடயத்தை சொல்ல முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழன்பன் said:

கொடிய பாம்பினை அடித்து சாகடித்தாலும் அதன் விஷம் போகாது ...அந்தமாதிரி இந்த சும் ....கண்ட இடத்தில கும்மனும் 

பாதுகாப்பு கொடுப்பதை நியாயப் படுத்துகிறீர்கள்.  🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

உங்கடை சுமத்திரன் கடந்த 14 வருடமாய் தமிழருக்கு செய்த ஒரு நல்ல விடயத்தை சொல்ல முடியுமா ?

மழைக்கும் பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காத தத்தைகளையெல்லம் ஸ்மாட் போனில் தன்னைப்பற்றி திட்டும் அளவுக்கு வளர்த்துவிட்டிருக்கிறார் என்பது  பெரிய விடயமில்லையா,.🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

மழைக்கும் பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காத தத்தைகளையெல்லம் ஸ்மாட் போனில் தன்னைப்பற்றி திட்டும் அளவுக்கு வளர்த்துவிட்டிருக்கிறார் என்பது  பெரிய விடயமில்லையா,.🤣

சுமத்திரனும் சரி அவரின் அடிபொடிகளுக்கும் எதிராளி ஒரு கேள்வி கேட்டால் பதில் வராது ஏனென்றால் செய்வதெல்லாம் வடகிழக்கு தமிழருக்கு எதிரான துரோகத்தனம்   சிங்களத்துக்கு சார்பான வேலைகள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

பாதுகாப்பு கொடுப்பதை நியாயப் படுத்துகிறீர்கள்.  🤣

இங்கு பாதுகாப்பு கொடுத்தது முக்கியமில்லை, அதிலும் பார்க்க நாங்கள் அதிகம் கவலைப்படவேண்டியதும் தமிழனின் தலை போகும் வேறு விடயங்களுக்கும் சும் துணைபோவதை கோடிட்டு காட்ட முயன்றிருக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சுமத்திரனும் சரி அவரின் அடிபொடிகளுக்கும் எதிராளி ஒரு கேள்வி கேட்டால் பதில் வராது ஏனென்றால் செய்வதெல்லாம் வடகிழக்கு தமிழருக்கு எதிரான துரோகத்தனம்   சிங்களத்துக்கு சார்பான வேலைகள் .

உங்களுடன் சேர்ந்து திட்டவில்லையென்றால், திட்டாதவன் துரோகி,.....🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, vanangaamudi said:

இங்கு பாதுகாப்பு கொடுத்தது முக்கியமில்லை, அதிலும் பார்க்க நாங்கள் அதிகம் கவலைப்படவேண்டியதும் தமிழனின் தலை போகும் வேறு விடயங்களுக்கும் சும் துணைபோவதை கோடிட்டு காட்ட முயன்றிருக்கிறேன். 

இங்கே திட்டுபவர்களது உண்மையான பிரச்சனை சும்மிற்கு பாதுகாப்பு கொடுப்பதனூடாக அவர் முக்கியமானவராகக் காட்டப்படுகிறார்  என்பதுதானே? 

உயிராபத்து இருந்தால் பாதுகொடுப்பது வழமை. இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

 டமில்  குப்பை ஊடகங்களுக்கும் தீவிர டமில் தேசியர்களுக்கும் சரியான தீனியில்லாமல் வறண்டுபோய்க்கிடக்கிறார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பிரச்சனையோ அல்லது ஒரு முக்கியஸ்தர் பார் லைசென்ஸ் எடுத்துக்கொடுத்து பணம் பார்ப்பதுடன் சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதும் முக்கியான விடயங்களாகத் தெரியவில்லை. ஆனால் உயிராபத்து உள்ளதாகக் கருதப்படும் ஒருவருக்கு பாதுகாப்பு கொடுப்பது பிரச்சனையாகத் தெரிகிறது. உந்த வறட்சியை எங்கே போய்ச் சொல்லுவது,? 

🥺

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழன்பன் said:

கொடிய பாம்பினை அடித்து சாகடித்தாலும் அதன் விஷம் போகாது ...அந்தமாதிரி இந்த சும் ....கண்ட இடத்தில கும்மனும் 

இது போன்ற வன்முறையை ஊக்குவிக்கும் கருத்துக்கள் யாழ் விதி மீறலாக இருக்கலாம்.

இப்படியாக வெளிநாட்டில் இருந்து வன்முறையை ஊக்குவித்து, இன்னும் ஒரு படி மேலே போய் அங்கே கொலை செய்ய முயற்சியும் செய்திருக்கிறார்கள். சந்தேக நபர்கள் சிலர் சிறையில் இருக்கிறார்கள். எனவே சுமந்திரனுக்குப் பாதுகாப்பு அவசியம் தான் என்பது என் கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

வடகிழக்கு தமிழ்  மக்களால் வெறுக்கப்பட்ட செத்து போன கிளிக்கு பாதுகாப்பு கொடுத்து என்ன ஆவ போகுது ?

செத்த கிளிக்கு ஏன்டா கூண்டு ...என்று சொல்லுறீயல்🤣

4 hours ago, Kapithan said:

இங்கே திட்டுபவர்களது உண்மையான பிரச்சனை சும்மிற்கு பாதுகாப்பு கொடுப்பதனூடாக அவர் முக்கியமானவராகக் காட்டப்படுகிறார்  என்பதுதானே? 

உயிராபத்து இருந்தால் பாதுகொடுப்பது வழமை. இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

 டமில்  குப்பை ஊடகங்களுக்கும் தீவிர டமில் தேசியர்களுக்கும் சரியான தீனியில்லாமல் வறண்டுபோய்க்கிடக்கிறார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பிரச்சனையோ அல்லது ஒரு முக்கியஸ்தர் பார் லைசென்ஸ் எடுத்துக்கொடுத்து பணம் பார்ப்பதுடன் சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதும் முக்கியான விடயங்களாகத் தெரியவில்லை. ஆனால் உயிராபத்து உள்ளதாகக் கருதப்படும் ஒருவருக்கு பாதுகாப்பு கொடுப்பது பிரச்சனையாகத் தெரிகிறது. உந்த வறட்சியை எங்கே போய்ச் சொல்லுவது,? 

🥺

மகிந்தா ராஜாபக்சேக்கே பாதுகாப்பு குறைக்கப்படும் பொழுது இவருக்கு ஏன் பாதுகாப்பு என்பது தான் கேள்வி...
இவரை விட டக்கிளஸ் க்கு பாதுகாப்பு தேவை..
தாயகத்தில் டக்கிளசை மக்கள் விரட்டியடைத்தவையள்...ஆனால் இவ்ருக்கு அப்படியான் ஒன்றும் இதுவரை நடை பெற்வில்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.