Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்கம்!

Jan 31, 2025
prabhakaran seeman photo issue

சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை, ஆனால் புகைப்படங்கள் மற்றும் பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுப்பாளர் தமிழ்வேந்தன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிட்டத்தட்ட 35 ஆண்டு காலமாக எமது ஈழ விடுதலைப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், சொத்துக்களையும் இழந்து, இலங்கை அரசோடு இணைந்த சர்வதேசத்தின் கூட்டு முயற்சியால் 2009 ம் ஆண்டின் இறுதியில் எமது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. ஆயுதம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் தாயகம் நோக்கிய பயணத்தில் எமது அரசியல் வழி போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், பல தடைகளையும் தாண்டி எமது விடுதலை நோக்கிய பயணத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

எமது தேசியத் தலைவரின்(பிரபாகரன்) சிந்தனையில் இருந்தும் மாவீரர்களின் அர்ப்பணிப்பில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்களின் தியாகங்களிலிருந்தும் கட்டி எழுப்பப்பட்ட எமது தாயக விடுதலைப் பயணத்தில் நாங்கள் அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எமது தாயகம் நோக்கிய பயணத்தை சர்வதேச பூகோள அரசியல் நலன் கருதி சர்வதேச சக்திகளும், இலங்கை அரசும் திட்டமிட்ட வகையில் ஒருங்கிணைந்து நசுக்க முற்படுவதுடன், எமது போராட்ட வரலாற்றையும், ஈழத் தமிழ் மக்களுடைய கலாச்சார விழுமியங்களையும் இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

புகைப்படம், பயிற்சி வழங்கவில்லை! 

பல காலகட்டங்களில் எமது அண்டை நாடான இந்தியாவோடும், தமிழகத் தமிழர்களோடும் பின்னி பிணைந்து ஈழத் தமிழர்கள் ஆகிய நாம் இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கின்றோம். பூகோள அரசியல் கண்ணோட்டத்தோடு விரும்பியோ, விரும்பாமலோ எமது அண்டை நாடான இந்தியாவை அன்று தொட்டு இன்று வரை நேசக்கரம் கூப்பி அனுசரித்து எமது போராட்டத்தின் நியாயங்களை வலியுறுத்தி வருகின்றோம். விடுதலைப் புலிகள் இயக்கமாகிய நாங்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்தால் எமது இயக்கத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் எந்த நோக்கத்துக்காகவும் யாருக்காகவும் நாம் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். 

தனிநபர் சுயநலத்திற்காகவும், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காகவும் எமது விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் தலைவரையும் முன்னிறுத்தி செய்யப்படுகின்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

ஈழத் தமிழ் மக்களின் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது வேறு, இந்திய தமிழர்களின் தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது வேறு என்பதையும், தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வினையாற்றவோ, அவர்களின் செயற்பாடுகளுக்கு கருத்து கூறவோ நாம் விரும்பவில்லை. இது எங்கள் தேசிய தலைவரின் நிலைப்பாடும் அல்ல என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றோம்.

சீமான், தேசியத் தலைவரை சந்தித்தது உண்மை, ஆனால் புகைப்படங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும், பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் அன்பார்ந்த மக்களுக்கு நாங்கள் தெளிவூட்ட விரும்புகின்றோம். 

இந்த சர்ச்சையான கருத்துக்கள் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். நமது விடுதலைப் போராட்டத்தையும், மாவீரர்களையும், தேசியத் தலைவர் அவர்களையும் இழிவு படுத்துகின்ற, கொச்சைப்படுத்துகின்ற செயல் என்பதையும் உலகத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.

WhatsApp-Image-2025-01-31-at-10.22.28_b3

ஒரு கொதி நிலையை உருவாக்கும்!

நாங்கள் இந்தியாவுக்கோ, தமிழக மக்களுக்கோ என்றும் எதிரானவர்கள் அல்ல மாறாக எமது விடுதலைப் போராட்டத்திற்கு பின்னால் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு மிகவும் உன்னதமானது எமது இயக்கமோ, ஈழத் தமிழ் மக்களோ அளவு கடந்த அன்பும் மரியாதையும் கொண்டுள்ளார்கள் என்பதையும், எமது போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் திராவிட இயக்கங்களின் பங்கு மிகவும் விலைமதிப்பற்ற தியாகம் நிறைந்த அர்ப்பணிப்புகளையும் நன்றி உணர்வோடு பற்றிக் கொள்ள விரும்புகிறோம். தேசியத் தலைவர் திராவிட இயக்கங்களோடு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார் என்பதையும் இந்த வேளையில் பதிவு செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்ளுகின்றோம்.

விடுதலைப் புலிகளின் கொள்கை தொடர்பாக அண்மையில் வெளிவந்த தமிழீழ விடுதலைப் புலிகள், அரசியல் துறை என்று பேரிடப்பட்ட அறிக்கை தொடர்பிலும் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். சம்பந்தப்பட்ட அறிக்கைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதையும், திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்தி என்பதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகிய நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.

விடுதலை புலிகளின் பெயரைப் பயன்படுத்தி எமது இயக்கத்தின் பேச்சாளர்களைப் போன்று ஊடகங்களில் கருத்து கூறுவதை சம்பந்தப்பட்ட நபர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகள் தமிழக மக்களுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் இடையிலான ஒரு கொதி நிலையை உருவாக்கும் என்பதை சம்பந்தப்பட்ட நபர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் இது போன்ற கருத்துக்கள் ஏற்புடையதல்ல என்றும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.

சீமானுக்கு எந்தவித தொடர்பும் இல்லை!

எமது விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் தலைவரையும் விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர்ந்த உலகப் பரப்பில் தவறான செயற்பாடுகளுக்கோ, அரசியல் செயற்பாட்டுக்கோ பயன்படுத்த முடியாது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். 

சீமானுக்கோ, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கோ எந்தவித தொடர்பும் இல்லை என்பதைனையும், எமது போராட்டத்தை அரசியல் வழியில் முன்னெடுத்துச் செல்ல விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட புலம்பெயர் கட்டமைப்புகள் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகின்றோம்.

ஆகவே பொய்ப் பிரச்சாரங்களையும், பொய்யான புகைப்படங்களையும், பயன்படுத்தி எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், எமது தேசியத் தலைவரையும், விடுதலைக்கான பயணத்தையும் மழுங்கடிக்கும் நோக்கத்தோடு தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இடம்பெற்று வரும் மோசடிகள் எமக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்பதனையும், இன்று பலராலும் பேசப்படுகின்ற நடவடிக்கைகளுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்கிறது.

விடுதலைக்குப் புலிகளின் பெயராலோ, தேசியத் தலைவரின் பெயராலோ, தமிழ் தேசியம் என்ற பேரிலும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளுக்கும் புலம்பெயர் தமிழர்கள் நிதி பங்களிப்பு வழங்க வேண்டாம் என்றும், இந்த செயற்பாடுகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பொறுப்பேற்காது” இவ்வாறு தமிழ்வேந்தன் தெரிவித்துள்ளார்.

https://minnambalam.com/political-news/prabhakaran-seeman-photo-issue/

  • Replies 60
  • Views 3.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Eppothum Thamizhan
    Eppothum Thamizhan

    யார் இவர்? புலிகளின் பொறுப்பாளர் என்ற பதவியை இவருக்கு யார் கொடுத்தது. புலிகள் ஆயுதங்களை மௌனித்தபின் இவர் தலைமையில் என்ன அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை இதை இணைத்தவர் தருவாரா??  

  • goshan_che
    goshan_che

    நியாயமான கேள்வி. இதே போல்தான் பல்வேறு பெயர்களில் சீமானை ஆதரித்து அறிக்கை விடுபவர்களும்.

  • நான் அமெரிக்கப் படைத்தளம் ஒன்றில் வேலைபார்த்த நேரத்தில் ஈராக் சடாம்உசைனை அடிபணியவைக்க தன் படையில் ஒருபகுதியை அமெரிக்கா ஈராக்கிற்கு அனுப்பியது. என்னுடன் ஒரு நண்பனைப்போல் பழகிவந்த, என்னுடன் வேலைபார்த்த

  • கருத்துக்கள உறவுகள்

யார் இவர்? புலிகளின் பொறுப்பாளர் என்ற பதவியை இவருக்கு யார் கொடுத்தது. புலிகள் ஆயுதங்களை மௌனித்தபின் இவர் தலைமையில் என்ன அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை இதை இணைத்தவர் தருவாரா??

40 minutes ago, கிருபன் said:

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிட்டத்தட்ட 35 ஆண்டு காலமாக எமது ஈழ விடுதலைப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், சொத்துக்களையும் இழந்து, இலங்கை அரசோடு இணைந்த சர்வதேசத்தின் கூட்டு முயற்சியால் 2009 ம் ஆண்டின் இறுதியில் எமது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. ஆயுதம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் தாயகம் நோக்கிய பயணத்தில் எமது அரசியல் வழி போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

யார் இவர்? புலிகளின் பொறுப்பாளர் என்ற பதவியை இவருக்கு யார் கொடுத்தது. புலிகள் ஆயுதங்களை மௌனித்தபின் இவர் தலைமையில் என்ன அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை இதை இணைத்தவர் தருவாரா??

நியாயமான கேள்வி.

இதே போல்தான் பல்வேறு பெயர்களில் சீமானை ஆதரித்து அறிக்கை விடுபவர்களும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நியாயமான கேள்வி.

இதே போல்தான் பல்வேறு பெயர்களில் சீமானை ஆதரித்து அறிக்கை விடுபவர்களும்.

எதிர் அறிக்கைகளை மேற்கோள் காட்டும்போதுதானே ஆதரவான அறிக்கைகளும் பதியப்படுகின்றன!
இது எனது அனுமானம் அல்லது எதிர்வுகூறல் என்றுசொல்லிவிட்டு செல்லவேண்டியதுதானே. நான்சொல்வதுதான் சரி மற்றவனெல்லாம் பிழை, முட்டாள் என்று சொல்வதால்தானே பிரச்சனையே!!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

எதிர் அறிக்கைகளை மேற்கோள் காட்டும்போதுதானே ஆதரவான அறிக்கைகளும் பதியப்படுகின்றன!
இது எனது அனுமானம் அல்லது எதிர்வுகூறல் என்றுசொல்லிவிட்டு செல்லவேண்டியதுதானே. நான்சொல்வதுதான் சரி மற்றவனெல்லாம் பிழை, முட்டாள் என்று சொல்வதால்தானே பிரச்சனையே!!

அவரவர் தனி மனிதர்களாக தாம் அறிந்தவற்றை பொதுவெளியில் இரு பக்கம் சார்பாகவும் சொல்லலாம்.

ஆனால் த.வி.பு இப்போ இல்லை.

வெளிநாட்டிலும் இலங்கையிலும் தவிபு என அறிக்கை விடுபவர் எல்லோரும் போலிகளே.

அது எந்த செயல் (அற்ற) அகமாக இருப்பினும். 

  • கருத்துக்கள உறவுகள்

தேவையில்லாத ஆணி. 🥺

  • கருத்துக்கள உறவுகள்

றோ -முத்துகுமார் கொலை - சீமான் பற்றி நான் எழுதி இருக்க கூடாதுதான் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவோ எதிர்ப்போ தமிழக அரசியலில் எமக்கு இருக்கக் கூடாது என்று தான் நான் தொடர்ந்து இங்கே  எழுதி வருகிறேன். 

இதனால் மேலும் மேலும் எதிரிகளை சம்பாதிப்போமே தவிர.....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

யார் இவர்? புலிகளின் பொறுப்பாளர் என்ற பதவியை இவருக்கு யார் கொடுத்தது. புலிகள் ஆயுதங்களை மௌனித்தபின் இவர் தலைமையில் என்ன அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை இதை இணைத்தவர் தருவாரா??

உண்மையில் அப்படி ஒருவர் இருந்தால் எப்படி தர முடியும் ??    தந்து விட்டு  உறுதி படுத்தி விட்டு  இந்த உலகில் உயிர் வாழ முடியுமா ??? 

உதாரணமாக அந்த குறிபிட்ட நபர்   நீங்கள் தான்  என்று வைப்போம்,.....அந்த நிலையில் உங்களை பற்றி நீங்கள்  பகிங்கரமாக   அறிவிப்பு செய்வீங்களா  ?? 

  • கருத்துக்கள உறவுகள்

தேவையா இது? 

இப்போது இன்னுமொரு அறிக்கை வெளிவரும் நாம்தான் ஒரிஜினல் புலிகள். சீமானுக்கு பயிற்சி கொடுத்தோம். பாடம் எடுத்தோம்  என்று கூறிக்கொண்டு. 

இதனால் யாருக்கு நன்மை?  என்றோ ஒருநாள் சீமானும் உதயநிதியும் கைலாகு கொடுக்கத்தான் போகிறார்கள். அப்போது ஈழத் தமிழரில் ஒரு பகுதியினர் சீமானுக்கு எதிரியாகவும் இன்னொரு பகுதியினர் திமுகவுக்கு எதிரிகளாகவும் இருப்பர். 

யாழ் களத்தில்,  வேலை வெட்டி இல்லை என்பது போல  எந்த நேரமும் எதையாவது ஒன்றை வைத்து சிரைச்சுக்கொண்டிருக்கிற  புத்தியைச் சீவின ஆட்கள் பதில் கூறுவார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஆதரவோ எதிர்ப்போ தமிழக அரசியலில் எமக்கு இருக்கக் கூடாது என்று தான் நான் தொடர்ந்து இங்கே  எழுதி வருகிறேன். 

இதனால் மேலும் மேலும் எதிரிகளை சம்பாதிப்போமே தவிர.....

மீண்டும் அதே என்ன கையை பிடித்து இழுத்தியா நடிப்பு.

நாம் ஆற்றுவது சீமானுக்கு எதிர் வினை.

முதலில் சீமானை எம்மை தமிழக அரசியலில் கலப்பதை நிறுத்த சொல்லவும்.

அடுத்த நாள் நீங்கள் சொல்லாமலே நாம் நிறுத்துவோம்.

பிகு

றோ -முத்துகுமார் கொலை - சீமான் பற்றி நான் எழுதியதும் றோ மாமா அப்பன் குதிருக்குள் இல்லை என குதிப்பதை காண்கிறீர்கள் தானே அண்ணை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

உண்மையில் அப்படி ஒருவர் இருந்தால் எப்படி தர முடியும் ??    தந்து விட்டு  உறுதி படுத்தி விட்டு  இந்த உலகில் உயிர் வாழ முடியுமா ??? 

உதாரணமாக அந்த குறிபிட்ட நபர்   நீங்கள் தான்  என்று வைப்போம்,.....அந்த நிலையில் உங்களை பற்றி நீங்கள்  பகிங்கரமாக   அறிவிப்பு செய்வீங்களா  ?? 

என்ன கந்தையருக்கு எழுதிய பதிலை காணோம்??

பரவாயில்லை, என்ன கேள்வி விளங்கவில்லையா? இணைத்தவர் கிருபன் அவரைக்கேட்டேன்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் மூன்று அணிகள் உள்ளது வாஸ்தவம்தான்.

1. சம்பளம் வாங்காமல் தமிழ் இனத்துக்காக வேறுபட்ட கருத்துக்களை எதிரும், புதிருமாக எழுதும் ஆட்கள். கிட்டதட்ட யாழில் அனைவரும் இந்த அணிதான். Team Tamils.

2. சம்பளம் வாங்கி கொண்டு றோவுக்கு ஆடும் one man army - Team India

3. சம்பளம் வாங்கியோ அல்லது சுயவிருப்பிலோ இலங்கைக்கு ஆடும் two men army - Team Sri Lanka.

யாழில் நடப்பது பழைய பென்சன் அண்ட் ஹெஜ்டெஸ் கப் போல ஒரு முத்தரப்பு ஆட்டம்🤣.  

Team Tamils v Team India v Team Sri Lanka

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

என்ன கந்தையருக்கு எழுதிய பதிலை காணோம்??

பரவாயில்லை, என்ன கேள்வி விளங்கவில்லையா? இணைத்தவர் கிருபன் அவரைக்கேட்டேன்!

எனக்கு விளங்கவில்லை,.........பொதுவாக எழுதி இருந்தது ஆகவே   யாழ் கள. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கருத்துகள் எழுதலாம்,........

7 hours ago, Eppothum Thamizhan said:

யார் இவர்? புலிகளின் பொறுப்பாளர் என்ற பதவியை இவருக்கு யார் கொடுத்தது. புலிகள் ஆயுதங்களை மௌனித்தபின் இவர் தலைமையில் என்ன அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை இதை இணைத்தவர் தருவாரா??

1 minute ago, Kandiah57 said:

எனக்கு விளங்கவில்லை,.........பொதுவாக எழுதி இருந்தது ஆகவே   யாழ் கள. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கருத்துகள் எழுதலாம்,........

அவருக்கு தான் எழுதி உள்ளது” 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மீண்டும் அதே என்ன கையை பிடித்து இழுத்தியா நடிப்பு.

நாம் ஆற்றுவது சீமானுக்கு எதிர் வினை.

முதலில் சீமானை எம்மை தமிழக அரசியலில் கலப்பதை நிறுத்த சொல்லவும்.

அடுத்த நாள் நீங்கள் சொல்லாமலே நாம் நிறுத்துவோம்.

பிகு

றோ -முத்துகுமார் கொலை - சீமான் பற்றி நான் எழுதியதும் றோ மாமா அப்பன் குதிருக்குள் இல்லை என குதிப்பதை காண்கிறீர்கள் தானே அண்ணை?

ஒரு முறை தடித்த சொற்களுக்கு மன்னிப்பு கேட்டால் அது வாழ்வில் திரும்பி வரவே கூடாது. எனக்கு அது உயிருக்கு சமன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நாம் ஆற்றுவது சீமானுக்கு எதிர் வினை.

இது தவறு! “நான் ஆற்றுவது சீமானுக்கு எதிர் வினை” என்று மற்றவர்களையும் இழுக்காமல் வருதே உங்களுக்குச் சிறப்பாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஒரு முறை தடித்த சொற்களுக்கு மன்னிப்பு கேட்டால் அது வாழ்வில் திரும்பி வரவே கூடாது. எனக்கு அது உயிருக்கு சமன். 

தடித்த சொல்லுக்கு மன்னிப்பு கேட்ட அதே திரியில் கருத்துக்கு மன்னிப்பு இல்லை என்பதையும் சொல்லி இருந்தேன் அண்ணை.

நான் மேலே மிக தெளிவாக இதை ஆரம்பித்தவர் சீமான், ஆகவே அவர்தான் இதை முடித்தும் வைக்க வேண்டும் என சொல்லி உள்ளேன்.

நீங்கள் இதை விளங்கமுடியாதவர் அல்ல. 

சீமான் எம்மை கொண்டு போய் தமிழ் நாட்டு அரசியலில் சிண்டு முடிந்து 10 வருடத்தின் பின்னால் வந்து, நாங்கள் இதில் தலையிட கூடாது என்பது…

ஒன்றில் கெட்ட எண்ணத்தில் (ரோ அஜெண்டா) வர வேண்டும்.

அல்லது என்ன நடக்கிறது என்பதே விளங்காத முட்டாள்தனத்தில் இருந்து வர வேண்டும்.

இவை இரெண்டும் உங்களிடம் இல்லை.

ஆகவேதான் இதை நடிப்பு என்கிறேன்.

1 hour ago, Paanch said:

இது தவறு! “நான் ஆற்றுவது சீமானுக்கு எதிர் வினை” என்று மற்றவர்களையும் இழுக்காமல் வருதே உங்களுக்குச் சிறப்பாகும்.

கருணா பிள்ளையனை எதிர்ப்பதை,

கேபியை எதிர்ப்பதை,

போலிக்காவை எதிர்ப்பதை

சீமானை எதிர்ப்பதை 

நான்…

என்னால் முடிந்த….என்…இனத்துக்கு நான் செய்யும் கடமை என்றே செய்கிறேன்.

இதில் ஒரு சமரசமும் எப்போதும் இல்லை.

யாழில் தனியாக நின்று எழுத வேண்டி வந்தாலும் தயார்….

ஆனால் நான் தனியாள் இல்லை….நீங்லள் என்னை அண்மையில் பின் தொடர ஆரம்பித்தமையால்….நான் எழுதுவதை மட்டும் வாசிக்கிறீர்களோ அறியேன்.

இங்கே பலர் சீமானை கழுவி, கழுவி ஊத்தியுள்ளார்கள். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இங்கே பலர் சீமானை கழுவி, கழுவி ஊத்தியுள்ளார்கள். 

நான் சீமானை கழுவி  கழுவி ஊத்தவில்லை    .....

இலங்கை தமிழர்களின் விடுதலை போரை பயன்படுத்தி   தமிழ்நாட்டில் அரசியல் செய்வதை   எதிர்க்கிறேன்.  மிக கடுமையாக எதிர்க்கிறேன்.   

சீமான்   தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்   நான் முதல்வர் ஆக வந்தால் அல்லது தெரிவு செய்யப்பட்டால் 

அனைவருக்கும் கல்வி 

வேலைவாய்ப்பு 

மருத்துவம்   கூலி தொழிலளாருக்கும்.  ஓய்வு ஊதியம் 

இப்படி பல வாக்குறுதிகளை கொடுத்து   தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கலாம்.   ஆட்சிக்கு வரலாம். சீமானுக்கு   தன்னில் நம்பிக்கை இல்லை அதாவது தன்னம்பிக்கை இல்லை  

எனக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்கு போட்டு  முதல்வர் ஆக்குவார்களோ என்ற  ஐமிச்சம்.   சீமானிடமுண்டு 

ஆகவே தான்  பிரபாகரனின் பெயரை சொல்லி பல பொய்களை சொல்லி   தமிழ்நாட்டில் மக்களின் வாக்குகளை. பெற்று  முதல்வர் ஆகலாம்   எனக் கனவு காண்கிறார். .....இவர் பிரபாகரனின் படத்தை பயன்படுத்துவது 

வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும்.  இப்படி படம் வைப்பதால்.   

தமிழ் ஈழம் கிடைத்து விடாது 

எங்கள் போராட்டம் தொடர்கிறது என்று பொருள் இல்லை 

தமிழ்நாட்டிலுள்ள.  ...வாழ்கின்ற ஒவ்வொருவரும் தலைவரின் படத்தை வைத்திருத்தல் கூட.  போராட்டம் தொடராது     தமிழ் ஈழம்  கிடைக்காது 

இந்தியா அரசை மத்திய அரசை  சீமான் கட்டி போடுவார்.  என்றால்   இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை கண்டிப்பாக தீரும்.  

இந்தியா தான்    தடையாக இருக்கிறது   இந்தியன் சீமானால். அந்த தடைகளை அகற்ற முடியுமா???????? 🙏

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kandiah57 said:

இப்படி பல வாக்குறுதிகளை கொடுத்து   தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கலாம்.   ஆட்சிக்கு வரலாம். சீமானுக்கு   தன்னில் நம்பிக்கை இல்லை அதாவது தன்னம்பிக்கை இல்லை  

எனக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்கு போட்டு  முதல்வர் ஆக்குவார்களோ என்ற  ஐமிச்சம்.   சீமானிடமுண்டு 

சீமானுக்கே  அப்படி ஒரு நோக்கம் இருப்பதாக கொஞ்சமும் தெரியவில்லை.

உண்மையில் அப்படி நோக்கம் இருந்தால் இப்படி பொய் பிரட்டுக்களும் நேரத்திற்கு ஒரு கதையும் ஆமைகறி விருந்து கதைகளும் பெரியார் சொல்லாத ஒன்றை பெரியார் சொன்னதாக அவதுறு பரப்புவதும் படம் வைத்து படம் காட்டுவதாலும் செய்து கொண்டு திரிவாரா? இப்படி செய்வதானால் அவருக்கு  வெளிநாட்டு தமிழர்களின் பணம் நன்றாக கொட்டுகின்றது. ஈழதமிழர்களின் நம்பிக்கை நட்சதரம் என்ற பெயரும்,  வசதியான வாழ்க்கையும் கிடைத்து விடுகின்றது அதுதான் அவரது நோக்கமா இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

நான் சீமானை கழுவி  கழுவி ஊத்தவில்லை    .....

இலங்கை தமிழர்களின் விடுதலை போரை பயன்படுத்தி   தமிழ்நாட்டில் அரசியல் செய்வதை   எதிர்க்கிறேன்.  மிக கடுமையாக எதிர்க்கிறேன்.   

சீமான்   தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்   நான் முதல்வர் ஆக வந்தால் அல்லது தெரிவு செய்யப்பட்டால் 

அனைவருக்கும் கல்வி 

வேலைவாய்ப்பு 

மருத்துவம்   கூலி தொழிலளாருக்கும்.  ஓய்வு ஊதியம் 

இப்படி பல வாக்குறுதிகளை கொடுத்து   தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கலாம்.   ஆட்சிக்கு வரலாம். சீமானுக்கு   தன்னில் நம்பிக்கை இல்லை அதாவது தன்னம்பிக்கை இல்லை  

எனக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்கு போட்டு  முதல்வர் ஆக்குவார்களோ என்ற  ஐமிச்சம்.   சீமானிடமுண்டு 

ஆகவே தான்  பிரபாகரனின் பெயரை சொல்லி பல பொய்களை சொல்லி   தமிழ்நாட்டில் மக்களின் வாக்குகளை. பெற்று  முதல்வர் ஆகலாம்   எனக் கனவு காண்கிறார். .....இவர் பிரபாகரனின் படத்தை பயன்படுத்துவது 

வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும்.  இப்படி படம் வைப்பதால்.   

தமிழ் ஈழம் கிடைத்து விடாது 

எங்கள் போராட்டம் தொடர்கிறது என்று பொருள் இல்லை 

தமிழ்நாட்டிலுள்ள.  ...வாழ்கின்ற ஒவ்வொருவரும் தலைவரின் படத்தை வைத்திருத்தல் கூட.  போராட்டம் தொடராது     தமிழ் ஈழம்  கிடைக்காது 

இந்தியா அரசை மத்திய அரசை  சீமான் கட்டி போடுவார்.  என்றால்   இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை கண்டிப்பாக தீரும்.  

இந்தியா தான்    தடையாக இருக்கிறது   இந்தியன் சீமானால். அந்த தடைகளை அகற்ற முடியுமா???????? 🙏

நீங்கள் சொல்வது அத்தனையும் சரியானதே....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இதுக்கு பேர்தான் கழுவி, கழுவி ஊத்துவது🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இதுக்கு பேர்தான் கழுவி, கழுவி ஊத்துவது🤣

இதன்பொருள், அதாவது கழுவி, கழுவி ஊத்தினால் கழுவப்பட்ட பொருள் துலங்கும், கழுவி வந்ததும் பயிர்களுக்கு உரமாகும் ஐயா.🤪

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

நீங்லள் என்னை அண்மையில் பின் தொடர ஆரம்பித்தமையால்….நான் எழுதுவதை மட்டும் வாசிக்கிறீர்களோ அறியேன்.

தவறு ஐயா! நான் யாழ்களத்தில் இணைந்த அதே ஆண்டில் நீங்களும் இணைந்துள்ளீர்கள், நாலு மாதங்கள் பிந்திவந்து.🧐

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

இதன்பொருள், அதாவது கழுவி, கழுவி ஊத்தினால் கழுவப்பட்ட பொருள் துலங்கும், கழுவி வந்ததும் பயிர்களுக்கு உரமாகும் ஐயா.🤪

🤣 அழுக்கை (சீமான்) கழுவிவிட்டால், பாத்திரம் (தமிழ் தேசியம்) துலங்கும், அழுக்கு மக்கள் நலனுக்கு உரமாகும் என்கிறீர்கள்.

ஏற்கிறேன்🤣

2 hours ago, Paanch said:

தவறு ஐயா! நான் யாழ்களத்தில் இணைந்த அதே ஆண்டில் நீங்களும் இணைந்துள்ளீர்கள், நாலு மாதங்கள் பிந்திவந்து.🧐

இணைந்ததை அல்ல.

அண்மையில் நீங்கள் என்னை பிந்தொடர்வதாக (follow) யாழில் எனக்கு ஒரு அறிவிப்பு (notification) வந்தது. அதைத்தான் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் சக உறவான நேசக்கரம் சாந்தி அவர்கள் தமிழ் கேள்விக்கு பேட்டியளித்துள்ளார். புலம் பெயர் தமிழ் சமூகத்தில் சீமான் செய்த நாசகார செயல்களை விளகியதுடன் சீமானுக்கு துணையாக புலம் பெயர் நாடுகளில் இயங்கும் சிலரின் வண்டவாளங்களும் செவ்வியில் தெளிவாக எடுத்து கூறி உள்ளார். 

Edited by island
திருத்தம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.