Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்.

”மக்களின் விருப்புக்கு மாறாக சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இது இனவாதக் கருத்தல்ல எனச்  சுட்டிக்காட்டியுள்ள அவர், சட்டம் சமனானது எனக் கூறும் இன்றைய அரசு, தனது நிலைப்பட்டில் இருந்து படிப்படியாக மாறி தனது சுய நிலைக்கு வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ‘தையிட்டி விகாரை விவகாரம் இன்று தமிழ் மக்களின் இருப்புக்கு சவாலாக மாறியுள்ளது  எனவம், மக்களின் காணி அவர்களுக்கே உரியது எனவும் ஆனால் இன்று அது மறுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீண்டகாலமாக இரணுவத்தினரது பிடிக்குள் இருந்த எமது மக்களின் காணிகளில் அவர்களுக்கு தெரியாமலேயே இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது எனவும், அரசினதும் பௌத்த கட்டமைப்பினதும் இந்த அதிகார இறுமாப்பு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்றல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த காணி நிலங்களின் உரிமையாளர்கள் தமக்கான நியாயம் கேட்டு நீண்டகாலமாக போராடி வருகின்றனர் எனவும் ஆனாலும் அது இதுவரை நிறைவேறவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

மேலும்  இலங்கையின் வேறு சில பகுதிகளில் இந்துக் கோயில்கள் சில இன முரண்பாட்டை உருவாக்கும் என்ற தோரணையில் இடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நாட்டில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் ஒரே சட்டம் என்று கூறும் இந்த அரசு, இந்த விகாரையையும் இன முரண்பாட்டை உருவாக்கும் ஒன்றாக கருதி இடிப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாது விகாரையின் சுற்றுப்புறத்திலுள்ள வேறு சில மக்களின் காணி நிலங்களும் சட்டவிரோதமாக பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அப் பகுதி மக்கள் எதிர்வரும் 12 ஆம் திகதியன்று பெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க பல்சார் தரப்பினரிடமும் ஆதரவை கோரியுள்ளனர் எனவும், அம் மக்களின் உணர்வுகளுக்கு வலுச்சேர்க்க குறித்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்க இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1420395

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விகாரைக்காக மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கெதிராக உறுதியான போராட்டம்

editorenglishFebruary 9, 2025
Land-Grabbing.jpg

பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய தாம் உரிமங்களுடன் இருக்க தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது என கூறியுள்ள தையிட்டி காணி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் பௌர்ணமி நாளன்று போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை (8/2/2025) ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும்  கூறுகையில்,

“மக்களது காணி நிலங்கள் மக்களுக்கே சொந்தம். அவை மக்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அனுர அண்மையில் யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறிய கருத்துக்கு முரணாகத் தையிட்டி விவகாரம் இருக்கின்றது.

அகில இலங்கை பௌத்த மகாசபை ஒருபடி மேல் சென்று விகாரை கட்டப்பட்ட காணி நிலம் மட்டுமல்ல, அயலில் உள்ள காணி நிலங்களும் சுவீகரிக்கப்படும் என இறுமாப்புடன் கூறியுள்ளது.

அதேநேரம் தேர்தல் கலங்களில் தேசிய மக்கள் சக்தியின் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூவரும் எம்முடன் இவ்விடையம் தொடர்பில் பேசி, கடந்த கால யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல‌ல்லாது, கடந்த அரசுகள் போலல்லாது தாம் ஆட்சிக்கு வந்ததும் இவ்விடையம் தீர்க்கப்படும் என எமக்கு வாக்குறுதியும் வழங்கியிருந்தனர்.

ஆனால் இன்று இம் மூவரும் பொம்மைகள் போன்று வாய்பேசாதுள்ளனர். நாம் எமது பூர்வீக நிலங்களையே கேட்கின்றோம்.

ஆளுநர் கூட எம்முடன் பேசிய விடையத்தை வேறு திசைநோக்கிக் கொண்டு செல்ல முயற்சித்து தவறான அர்த்தத்துடன் ஜனாதிபதிக்கு கூறியிருந்தார்.

ஆனாலும் அன்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் எமது பிரச்சினையை எடுத்திருந்தாலும் அவருக்கு பலமாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைக்கொடுத்திருக்கவில்லை. இது வாக்களித்த எமக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

இந்நிலையில் எதிர்வரும் 11 ஆம்திகதி மாலை 4 மணியிலிருந்து மறுநாள் மாலை 6 மணிவரை எதிர்ப்பு போராட்டம் ஒன்றை  நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

காணி உரிமையாளர்களாகிய எமது போராட்டத்துக்கு பாரபட்சமற்ற வகையில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், போக்குவரத்து மற்றும் சிற்றூர்தி, முச்சக்கர வண்டி சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுக்கிறோம்” என்றனர்.
 

https://globaltamilnews.net/2025/211010/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்.

”மக்களின் விருப்புக்கு மாறாக சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.

பிறர் காணியை சுவீகரித்து நிலம் அளந்து புத்த விகாரை கட்டும் மட்டும் என்ன கோமாவிலா இருந்தீர்கள்? 
கட்டிய விகாரையை யாரும் இடிக்க மாட்டார்கள். கட்டிய விகாரையை இடிக்க நேர்ந்தால் சிங்கள மக்களிடம் இன்னும் விரோதங்களையே உருவாக்கும்.

இனியும் மக்களை ஏமாற்றம் செய்யும் அரசியல் செய்யாமல் நீதியான/ வெளிப்படையான அரசியலை இதயபூர்வமாக செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

“தையிட்டி ஒரு தமிழர் பூமி என்பதை நாம் நிலை நாட்டவேண்டும், தையிட்டியில் நிலம் மீட்பு என்பது ஒரு வரலாறாக அமையவேண்டும், விட்டுக்கொடுத்தோமேயானால் நாளை எந்த இடத்திலும் காணியை சுவீகரிப்பதற்கு தையிட்டி ஒரு உதாரணமாக அமைந்துவிடும்.“

Published By: Rajeeban

09 Feb, 2025 | 03:49 PM
image

தையிட்டியில் நிலம் மீட்பு என்பது ஒரு வரலாறாக அமையவேண்டும், விட்டுக்கொடுத்தோமேயானால் நாளை எந்த இடத்திலும் காணியை சுவீகரிப்பதற்கு தையிட்டி ஒரு உதாரணமாக அமைந்துவிடும். அதனை நாங்கள் விரும்பவில்லை , தையிட்டி ஒரு தமிழர் பூமி என்பதை நாம் நிலை நாட்ட வேண்டும் என காணி உரிமையாளர் ஒருவரான சுகுமாரி சாருஜன் தெரிவித்துள்ளார்.

12ம் திகதி தையிட்டியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மக்களின் பூரண ஆதரவை கோரியுள்ள அவர் செய்தியாளர் மாநாட்டில்  மேலும் தெரிவித்துள்ளதாவது.

தையிட்டி தொடர்பில் எமது பொதுவான நிலைப்பாட்டை ஊடகங்களிற்கும் அதிகாரிகளிற்கும் பொதுமக்களிற்கும் முன்வைப்பதற்காக இந்தஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம்.

தையிட்டியில் 140 பரப்பளவு காணி சட்டவிரோதமாக, சட்டத்திற்கு முரணாண வகையில இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு,எந்த ரீதியான சட்டரீதியான அனுமதிகளோ எதனையுமோ பெறாமல்,ஒரு சர்வாதிகார மனோநிலையில் கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை என்ற தைரியத்துடன்; மிகப்பிரமாண்டமான சட்டவிரோத கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு,எந்த தடையும் இன்றி பூஜை வழிபாடுகள் விகாரை என்ற பெயரிலே இடம்பெறுகின்றன.

இதற்கு எதிராக நாங்கள் நான்கைந்து வருடங்களாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட போதிலும்,எமக்கான நீதிகளோ நியாயங்களோ வழங்கப்படாத இடத்து,நாங்கள் கடந்தஇரண்டு வருடங்களாக போராட்டங்களை நடத்திவருகின்றோம்.

அந்த வகையில் எனது கணவரின் தந்தையாருக்கு சொந்தமான 8 பரப்பு காணியை சட்டவிரோத கட்டுமானத்திற்காக கையகப்படுத்தி வைத்துள்ளார்கள்.

கணவரின் பேரனானரின் காணிகளும் அங்கே உள்ளன எம்மிடம் இதற்காக ஆவணங்கள் உள்ளன,தகுதியான ஆதாரங்கள் உள்ளன.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்த உண்மை நிலைமைய வெளிப்படுத்தவேண்டும்.

கடந்த 31- 1- 25 கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஜனாதிபதி பங்குபற்றியிருந்தார். அந்த இடத்திலே எங்கள் பிரச்சினை எழுப்பப்பட்டபோது மாற்றுக்காணிகளை வழங்கலாம் என்ற தொனியில் ஆளுநரும் அர்ச்சுனாவும் இந்த பிரச்சினையை திசைதிருப்பினார்கள்.

மாற்றுக்காணி என்பதற்கு காணி உரிமையாளர்களாகிய நாம் எந்த விதத்திலும் சம்மதிக்கப்போவதில்லை என்பதிலே நாங்கள் ஒரு தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.

விகாரை என்பது முற்றிலும் சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்டுள்ளது நாம்அந்த இடத்தில் மாற்றுக்காணிக்கு சம்மதிப்போமானால் எமது காணிகளிற்கான உறுதியை அவர்களிற்கு வழங்கவேண்டிய கடப்பாட்டில் இருப்போம்.

நாம் மாற்றுக்காணிகளை பெற்றுவிட்டால் எமது உறுதிகள் அவர்களிற்கு சென்றுவிட்டால், விகாரை சட்டபூர்வமான கட்டிடமாக கருதப்படும் அதன் பின்னர் காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழே விகாரையின் மேலதிக கட்டுமானங்களிற்காக எங்களிடம் இருக்கின்ற மேலதிக காணிகளையும் அவர்கள் சுவீகரிப்பார்கள். இதற்கு நாமே வழிகோலுவதாக அமையும்.

இவ்வாறான சட்டரீதியான பல சிக்கல்கள் இருக்கின்ற போது இவை எதனையும் கருத்தில் கொள்ளாது, தெரிந்தோ தெரியாமலோ மாற்றுக்காணிகளை நாங்கள் எதிர்க்கின்றோம் என்ற தகவலை வழங்கியிருந்தார்கள் அதனை நாம் முற்றிலும் எதிர்க்கின்றோம்.

எமது காணிதான் எமக்கு வேண்டும்.

மேலும் அந்த இடத்திலே நாங்கள் போராட்டங்களை நடத்துகின்ற போது,எந்த ஒரு வன்முறையிலும் ஈடுபடாமல் அகிம்சை வழயில்  ஈடுபடுகின்றோம்

அங்கே வரும் சிங்கள சகோதாரர்களிற்கு அந்த இடத்தின் நிலைப்படு எமது நிலைப்பாடு அது சட்டவிரோத கட்டிடம் என்பதை உணர்த்துகின்ற போது, அந்த இடத்திலே பொலிஸாரினால் எங்களிற்கு எதிராக வழக்புகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை ஏன் ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ்; கொண்டுசெல்ல முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்திடம்கருத்து கேட்கின்றார்கள்.

ஐசிசிபீஆர் தெரிவிப்பது என்ன? இனமத நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வகையில் ஏதாவது ஒரு போராட்டம் இடம்பெற்றால் கருத்து வெளியானால், அந்த நபர்கள் கைதுசெய்யப்படவேண்டும் என ஐசிசிபீஆர் தெரிவிக்கின்றது.

எனினும் அந்த சட்டத்தின் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்த்தால்,தையிட்டியில் இன மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பது யார் என்று பார்த்தால் அந்த சூழ்நிலையில்  எங்களிடம் உறுதி உள்ளது,அப்பாவி மக்களின்காணிகள்பறிக்கப்பட்டுள்ளன, அந்த இடத்தில் அந்த வழக்கை யாருக்கு எதிராக தாக்கல் செய்யவேண்டும். சட்டவிரோத கட்டிடத்திற்கு வரைபடங்கள் கீறிக்கொடுத்தவர்கள்,சட்டவிரோதமாக அனுமதிவழங்கியவர்கள், நிதிபங்களிப்பை வழங்கியவர்கள்,இராணுவதளபதிகள்,அந்த இடம் சட்டவிரோதம் என தெரிந்தும் அந்த இடத்திலே பூஜை செய்தவர்கள்,இவர்களிற்கு எதிராகதான் அந்த சட்டம் இருக்கவேண்டும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களிற்கு எதிரானதாகயிருக்க கூடாது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு எதிராக இந்த சட்டத்தை பயன்படுத்துகின்ற நாட்டிலேதான் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் ஆகவே ஊடகங்கள் உட்பட சகல மக்களினதும் ஒத்துழைப்பும் எங்களிற்கு தேவை.

கடந்த யாழ்மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலேஇந்த கட்டிடம் சட்டவிரோதமானது என கஜேந்திர குமார் பொன்னம்பலம்தெரிவித்த கருத்தினை தொடர்ந்து பௌத்த மகாசம்மேளனம்என்ற பெயரிலே கடிதமொன்று மாவட்ட செயலருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்திலே இந்த தையிட்டி திஸ்ஸவிகாரை புராதனமானது எனவும்,அதற்கு 14 பரப்பு காணி முன்னைய காலத்திலே இருந்ததாகவும்,: தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்  மேலும் சுவீகரிக்கப்படவேண்டிய காணிகள் மக்களிடம் இருப்பதாகவும் அந்த காணிகளை சுவீகரித்து தருமாறும் அந்த பௌத்த அமைப்பு கோரியுள்ளது.

மேலும் பல கட்டிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்த மகாசம்மேளனம்  தெரிவித்துள்ளது.

இந்த கடிதத்திற்கு மாவட்ட செயலாளர் இதுவரை பதில் அனுப்பவில்லை.

நாங்கள்அந்த இடத்திலே போராடியிருக்கின்றோம் ஆனால் இப்படியான ஒரு கடிதம் வந்த செய்தியை எங்களிற்கு தெரிவித்திருக்கவேண்டும், யாழ்மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலே இந்த விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்பட்ட வேளையிலேயே இந்த கடிதம் குறித்து தொவித்திருக்கவேண்டும்.

 மாவட்ட செயலாளரோ அல்லது ஜனாதிபதியோ இந்த கடிதத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கவேண்டும் அல்லது இதன் உண்மை தன்மையை அறியமுயன்றிருக்கவேண்டும்.

ஒரு மாதத்திற்கு முன்னர் இதேபோன்ற கடிதமொன்று சிங்கள அமைப்பொன்றிடமிருந்து வந்துள்ளது, அவர்கள்யாழ்ப்பாணத்தில் தங்களிற்கு காணிகள் இருப்பதாகவும் அவற்றை வழங்கவேண்டும் எனவும் கோரியவேளை உடனடியாக பதிலளித்திருக்கின்றார்கள் உங்கள் உறுதிகளை காண்பியுங்கள் என யாழ்ப்பாண அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

 அதேபோன்று இந்த கடிதத்திற்கும் பதில் கடிதத்தை வழங்கவேண்டும்.

எங்களிடம் உறுதி இருக்கின்றது,இதன் உறுதி தன்மையை கச்சேரியிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். கிட்;டத்தட்ட 100 ஆண்டுகளிற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்டவைகள் எமது காணிகள், பூர்வீகம் பூர்வீகமாக நாங்கள் வாழ்ந்த காணிகள.;.

 தேவநம்பிய தீசன் காலத்தில் இந்த காணிகள் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் தேவநம்பிய தீசன் வழங்கிய உறுதிகளை அவர்கள் காட்டட்டும்.மாவட்ட செயலாளரும் ஆளுநரும் இது குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தவேண்டும்.

இது தேவநம்பிய தீசன் காலத்து விகாரை எனின் தொல்பொருட்களை காண்பியுங்கள். அவை அழிவடைந்திருந்தாலோ  சிதைவடைந்திருந்தாலோ அதன் சிதைவுகளை காண்பியுங்கள்.

தொல்பொருள்சட்டத்தின் கீழ் அவை அழிவடைந்திருந்தால் அதன் சிதைவுகளை தான் பாதுகாக்கவேண்டுமே தவிர, அந்த இடத்தில் புதிய கட்டுமானங்களை கட்டிவிட்டு விகாரைகளை கட்டிவிட்டு அதனை பாதுகாப்பதற்கு இத்தனையாயிரம் படையினரை பயன்படுத்தவேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கவில்லை.

எங்கள் போராட்டத்திற்கு ஊடகங்கள் பெரும் பங்களிப்பைவழங்கியுள்ளன, நாங்கள் பெரும் நன்றி உணர்வோடு இந்த ஊடகங்களை பார்க்கின்றோம்.

மேலும் 12ம் திகதி பூரணை தினத்தினை முன்னிட்டு நாங்கள் எங்கள் வழமையான தொடர்ச்சியான போராட்டத்தினை அந்த இடத்திலே முன்னெடுக்க இருக்கின்றோம்.அந்த போராட்டத்திற்கு காணி விடுவிப்பு தொடர்பான தென்னிலங்கை அமைப்பான பார்ள் உட்பட வலிவடக்கு மீள்குடியேற்ற சங்கத்தினர் மீனவர் சங்கத்தினர் உட்பட பலர் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மக்கள் எங்கள் போராட்டத்திற்கு பெரும் ஆதரவை வழங்கவேண்டும்.

தொடர்ந்து அந்த இடத்திலே நிற்க முடியாவிட்டாலும் 12ம் திகதி  மதியம் முதல் 6 மணிவரையாவது உங்களது ஆதரவை வழங்குங்கள்.

அரசஅதிகாரிகள் தெரிந்தோ தெரியாமலே  நிறைய தவறுகளை இழைத்துவிட்டனர்.அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து இனிமேலாவது அவற்றை நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிற்கு சமர்ப்பிக்க முன்வரவேண்டும்.ஜனாதிபதிக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

தெரிந்தோ தெரியாமலே தையிட்டியில் கைவத்துவிட்டீர்கள் நீங்கள் எடைபோட்டதை போல சாதாரண மக்கள் இல்லை பலபல வரலாற்றை கொண்டவர்கள்.

எங்கள் முதியோரின் முன்னோரின் ஆசியுடன் இந்த போராட்டத்தை நாங்கள் செய்கின்றோம்.

தையிட்டியில் நிலம் மீட்பு என்பது ஒரு வரலாறாக அமையவேண்டும், விட்டுக்கொடுத்தோமேயானால் நாளை எந்த இடத்திலும் காணியை சுவீகரிப்பதற்கு தையிட்டி ஒரு உதாரணமாக அமைந்துவிடும்.அதனை நாங்கள் விரும்பவில்லை , தையிட்டி ஒரு தமிழர் பூமி என்பதை நாம் நிலைநாட்டவேண்டும்.

  •  

https://www.virakesari.lk/article/206223

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பிறர் காணியை சுவீகரித்து நிலம் அளந்து புத்த விகாரை கட்டும் மட்டும் என்ன கோமாவிலா இருந்தீர்கள்? 
கட்டிய விகாரையை யாரும் இடிக்க மாட்டார்கள். கட்டிய விகாரையை இடிக்க நேர்ந்தால் சிங்கள மக்களிடம் இன்னும் விரோதங்களையே உருவாக்கும்.

இனியும் மக்களை ஏமாற்றம் செய்யும் அரசியல் செய்யாமல் நீதியான/ வெளிப்படையான அரசியலை இதயபூர்வமாக செய்யுங்கள்.

மிக நியாயமான விமர்சனம். கருத்து.

ஆனால் 👇 இதுவும் உண்மை எல்லோ?

2 hours ago, கிருபன் said:

விட்டுக்கொடுத்தோமேயானால் நாளை எந்த இடத்திலும் காணியை சுவீகரிப்பதற்கு தையிட்டி ஒரு உதாரணமாக அமைந்துவிடும். அதனை நாங்கள் விரும்பவில்லை , தையிட்டி ஒரு தமிழர் பூமி என்பதை நாம் நிலை நாட்ட வேண்டும் என காணி உரிமையாளர் ஒருவரான சுகுமாரி சாருஜன் தெரிவித்துள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பிறர் காணியை சுவீகரித்து நிலம் அளந்து புத்த விகாரை கட்டும் மட்டும் என்ன கோமாவிலா இருந்தீர்கள்? 

உயர் பாதுகாப்பு வலயமாக இருந்திருக்கலாம்.

காணி உரிமையாளர்கள் ஏதாவது முறைப்பாடு செய்தால்த்  தானே அடுத்தவரும் தலையிடலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நாம் ஒரு வித்தியாசமான கோரிக்கையை முன்வைக்கலாம்…

விகாரையை இடிக்க தேவையில்லை. அதை உள்ளூராட்சி சபையிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் தமிழ் மொழி பேசும் பிக்குகளை வைத்து அதை நடத்துவர்.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இங்கே நாம் ஒரு வித்தியாசமான கோரிக்கையை முன்வைக்கலாம்…

விகாரையை இடிக்க தேவையில்லை. அதை உள்ளூராட்சி சபையிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் தமிழ் மொழி பேசும் பிக்குகளை வைத்து அதை நடத்துவர்.

 

சிரிப்புக்குறி போட மறந்துவிட்டீர்களா அல்லது …..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, goshan_che said:

மிக நியாயமான விமர்சனம். கருத்து.

ஆனால் 👇 இதுவும் உண்மை எல்லோ?

7 minutes ago, ஈழப்பிரியன் said:

உயர் பாதுகாப்பு வலயமாக இருந்திருக்கலாம்.

காணி உரிமையாளர்கள் ஏதாவது முறைப்பாடு செய்தால்த்  தானே அடுத்தவரும் தலையிடலாம்?

 

நீங்கள் இருவரும் சொல்வது ஒரு விதத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் கட்டிய விகாரையை இடிப்போம் வீராவேச வசனங்கள்,மேடைப்பேச்சுக்கள் முக்கிய அரசியல்வாதிகளுக்கு சரியானதல்ல.

இது இன்னும் பகையுணர்ச்சிகளை தமிழ்- சிங்கள மக்களிடையே உருவாக்கும். கடைசியில் தமிழர்களின் பிரச்சனையே இதுதான் என முடித்து விடக்கூடும்.அனுர ஆட்சியில் மக்கள் அபிவிருத்தி முக்கிய விருத்தி எனும் பெயரில் நாடகம் ஆடுவது போல்.......

தமிழ் அரசியல்வாதிகள் போராட்ட அரசியலை /பேச்சுவார்த்தை அரசியலை செய்யலாமே ஒழிய வெட்டுவோம்,புடுங்குவோம்,இடிப்போம்,உடைப்போம் என்ற அரசியல் சர்வதேசமே ஒத்துக்கொள்ளாது.

அனுபவங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

இங்கே நாம் ஒரு வித்தியாசமான கோரிக்கையை முன்வைக்கலாம்…

விகாரையை இடிக்க தேவையில்லை. அதை உள்ளூராட்சி சபையிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் தமிழ் மொழி பேசும் பிக்குகளை வைத்து அதை நடத்துவர்.

இந்தப் பதிவை…. விமல் வீரவன்ச, சரத் வீரசேகர,  உதய கம்மன்பில போன்றோரின் கண்ணில் படும் வரை பகிரவும். 🤣

23 minutes ago, vaasi said:

சிரிப்புக்குறி போட மறந்துவிட்டீர்களா அல்லது …..?

கோசான்…. ஞாயிற்றுக்கிழமைகளில் சீரியசாக எழுதுபவர். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

 

நீங்கள் இருவரும் சொல்வது ஒரு விதத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் கட்டிய விகாரையை இடிப்போம் வீராவேச வசனங்கள்,மேடைப்பேச்சுக்கள் முக்கிய அரசியல்வாதிகளுக்கு சரியானதல்ல.

இது இன்னும் பகையுணர்ச்சிகளை தமிழ்- சிங்கள மக்களிடையே உருவாக்கும். கடைசியில் தமிழர்களின் பிரச்சனையே இதுதான் என முடித்து விடக்கூடும்.அனுர ஆட்சியில் மக்கள் அபிவிருத்தி முக்கிய விருத்தி எனும் பெயரில் நாடகம் ஆடுவது போல்.......

தமிழ் அரசியல்வாதிகள் போராட்ட அரசியலை /பேச்சுவார்த்தை அரசியலை செய்யலாமே ஒழிய வெட்டுவோம்,புடுங்குவோம்,இடிப்போம்,உடைப்போம் என்ற அரசியல் சர்வதேசமே ஒத்துக்கொள்ளாது.

அனுபவங்கள்.

இதைத் தான் வைத்தியரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார் தாத்தா;.நான் வைத்தியருக்காக எழுதவில்லை.எனக்கு அது தேவையும் இல்லை..ஆனால் ஒன்றை உருவாக்கும் போது அதில் விருப்பம் இல்லை என்றால் உடனயே தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம்.அப்போது இந்த மக்கள், எம்பி மார் எங்கே போயிருந்தார்கள்.விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளருக்கு அதற்குரிய பெறுமதியை குடுத்து விட்டு விகாரையை அப்படியே விட்டால், மற்ற ஆலயங்களுக்கு போய் வருவது போல் விகாரைக்கும் போய் வருவோம் என்றெல்லாம் ஊரில் உள்ள சிலர் எழுதுகிறார்கள்..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, vaasi said:

சிரிப்புக்குறி போட மறந்துவிட்டீர்களா அல்லது …..?

🤣

இல்லை. கொஞ்சம் பெட்டிக்கு வெளியால் போய் சிந்தித்து பார்போம் என முயன்றேன்.

1. இலங்கையில் கட்டிய விகாரையை இடிப்பது என்பது நடவாத காரியம்.

2. எமக்கு (நிச்சயமாக எனக்கு) மதம் ஒரு பொருட்டே அல்ல. என்னை பொறுத்தமட்டில் எனக்கு முக்கியம் இன அடையாளம், மொழி.

3. தேவ நம்பிய திஸ்ச ஒரு தமிழன், அவரின் தந்தை பெயர் மூத்த சிவன். எனவே இலங்கையின் முதல் பெளத்தன் ஒரு தமிழனே.

4. சிங்களம்=பெளத்தம் என்பது பேரினவாதத்தின் உத்தி. அதை முறியடிக்க இப்படியான இயலாகட்டங்களில், நாம் ஏன் பெளத்தம், சிங்களம் என்ற அணுகுமுறையை எடுக்க கூடாது.

இதன் அர்த்தம் வடகிழக்கு எங்கும் தமிழ் பெளத்த மடலாயங்களை நிறுவ வேண்டும் என்பதல்ல.

இருப்பவற்றை, இடிக்க முடியாதனவற்றை தமிழ் வழி மடாலயமாக்க வேண்டும் என்றகோரிக்கையை வைக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

நீண்ட கால நோக்கில் பார்த்தால் - தமிழ் கிறிஸ்தவம், தமிழ்-இந்துவை விட தொன்மையானது தமிழ்-பெளத்தம்.

இந்துவோ, பெளத்தமோ, கிறிஸ்தவமோ எம் அடையாளங்கள் இல்லை.

தமிழ் மொழியும், எம் மொழி சார்-இனப் பண்பாடுமே நாம் தொலைக்க கூடாதன.

எப்படியோ விகாரை இடிக்கப்படாது.

ஆகவே நாம்….

1. அதை பெளத்த சிங்கள விகாரையாக இருக்க சம்மதிக்கிறோமா

2. அல்லது இதில் உள்ளூர் மக்கள் பங்கு வேணும், உள்ளூர் மொழியில் பிரார்தனை வேணும் என கூறி - விகாரையை தமிழ் படுத்த முயல்வோமா?

இதை சிங்கள் ஒத்துகொள்ளுமா தெரியாது ஆனால் தெற்கில் இது நியாயமான கோரிக்கை போல பலருக்கு தெரியலாம்.

12 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்…. ஞாயிற்றுக்கிழமைகளில் சீரியசாக எழுதுபவர். 😂

மிச்ச ஆறு நாளும் லுலு லு லா…🤣

30 minutes ago, குமாரசாமி said:

 

நீங்கள் இருவரும் சொல்வது ஒரு விதத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் கட்டிய விகாரையை இடிப்போம் வீராவேச வசனங்கள்,மேடைப்பேச்சுக்கள் முக்கிய அரசியல்வாதிகளுக்கு சரியானதல்ல.

இது இன்னும் பகையுணர்ச்சிகளை தமிழ்- சிங்கள மக்களிடையே உருவாக்கும். கடைசியில் தமிழர்களின் பிரச்சனையே இதுதான் என முடித்து விடக்கூடும்.அனுர ஆட்சியில் மக்கள் அபிவிருத்தி முக்கிய விருத்தி எனும் பெயரில் நாடகம் ஆடுவது போல்.......

தமிழ் அரசியல்வாதிகள் போராட்ட அரசியலை /பேச்சுவார்த்தை அரசியலை செய்யலாமே ஒழிய வெட்டுவோம்,புடுங்குவோம்,இடிப்போம்,உடைப்போம் என்ற அரசியல் சர்வதேசமே ஒத்துக்கொள்ளாது.

அனுபவங்கள்.

மாற்று கருத்தில்லை.

15 minutes ago, தமிழ் சிறி said:

இந்தப் பதிவை…. விமல் வீரவன்ச, சரத் வீரசேகர,  உதய கம்மன்பில போன்றோரின் கண்ணில் படும் வரை பகிரவும். 🤣

இவர்கள் நிச்சயம் எதிர்பார்கள்.

ஆனால் ஈரச்சாக்கு அனுரவால் இந்த கோரிக்கையை இலகுவில் புறம்தள்ள முடியாது.

எதிராளி ஈரச்சாக்கோடு வந்தால் - நாம் அதை விட ஈரமான சாக்கை எடுக்க வேண்டும்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

மிச்ச ஆறு நாளும் லுலு லு லா…

நல்ல ரைமிங் பதில். ரசித்தேன். 👍🏽 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பிறர் காணியை சுவீகரித்து நிலம் அளந்து புத்த விகாரை கட்டும் மட்டும் என்ன கோமாவிலா இருந்தீர்கள்? 
கட்டிய விகாரையை யாரும் இடிக்க மாட்டார்கள். கட்டிய விகாரையை இடிக்க நேர்ந்தால் சிங்கள மக்களிடம் இன்னும் விரோதங்களையே உருவாக்கும்.

இனியும் மக்களை ஏமாற்றம் செய்யும் அரசியல் செய்யாமல் நீதியான/ வெளிப்படையான அரசியலை இதயபூர்வமாக செய்யுங்கள்.

விகாரை இடிக்கப்படவேண்டும். அரசு நீதியை நிலைநாட்ட வேண்டும், இதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. இருந்தும் இது எங்கள் மக்களால் அது நிகழக்கூடாது, இதனை உருவாக்கிய அரச படைகளாலே விகாரை அகற்றப்படவோ, இடிக்கப்படவோ அரசினை செயற்பட வைத்தால் நாட்டில் கலவரங்கள் ஏற்பட வழி ஏற்படாது.

தமிழ் மக்களால் விகாரைக்கு ஏதும் நடந்தால் பௌத்த பீடங்களும், சிங்கள இனவாதிகளும் வெகுண்டெழுவார்கள் அரச படைகள் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதைத் தடுக்க முடியாது. இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக்குவதற்கான நடவடிக்கைகளை சிங்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இனக்கலவரம் என்ற போர்வையில் தமிழினத்தை படிப்படியாக அழித்து, எங்கள் இனம் பெருகி வளர்ச்சியடைய முடியாத வகையில் நாங்கள் அழிந்துவருவதைக் எங்கள் கண்களால் காண்கிறோம். எங்களோடு அவர்களால் கல்வியில், அறிவில், வீரத்தில் வென்றுவிட முடியாவிட்டாலும், அரசு என்ற உலக ஆதரவுடன் அவர்கள் உதவிகளையும் பெற்றுத் தங்கள் ஆயுதப் படைகளைக் கொண்டு எங்களை அழித்து மேலும் ஒடுக்கிவிடச் சந்தர்ப்பம் கொடுக்கப் போகிறோமா??

சிங்களப் படைகளுடன் போராடி வென்று எங்கள் உரிமையை நிலைநாட்ட வந்த தலைவரையும் அவர் படைகளையும் காட்டிக் கொடுத்து அழித்த இனத்துரோகிகளும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளோரும் தமிழினத்தில் நாங்களும் தமிழரென்று இன்றும் ஊடுருவி உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பாராளுமன்றத்தில் தையிட்டி விகாரை பற்றி உரையாற்றும் போது தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்தவர்கள் அமைதியாக இருந்தார்கள் என்று செய்தியில் வந்தன. சிறிதரன் அவர்களே அன்று ஏன் குரல் கொடுக்கவில்லை. அல்லது அன்று பாராளுமன்றத்துக்கு செல்லவில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கந்தப்பு said:

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பாராளுமன்றத்தில் தையிட்டி விகாரை பற்றி உரையாற்றும் போது தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்தவர்கள் அமைதியாக இருந்தார்கள் என்று செய்தியில் வந்தன. சிறிதரன் அவர்களே அன்று ஏன் குரல் கொடுக்கவில்லை. அல்லது அன்று பாராளுமன்றத்துக்கு செல்லவில்லையா? 

அன்றைக்கு சேர் மக்களை சந்தித்து குறை கேட்கும் பார்வை நேரம். அதனால் பார்ஆளுமன்றம் போகவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டும் வரை... ஆளாளுக்கு சாராயக் கடைக்கு அனுமதி பெற அலையா அலைஞ்சாங்கள். கட்டி முடிஞ்சப்போ.. உடைக்கனுமாம். அப்படி சொறீலங்கா வரலாற்றில் நடந்திருக்கா.

இங்க மட்டுமல்ல.. புங்குடுதீவிலும் புத்தர் முளைச்சிட்டார்.  குறிக்காட்டுவானில் சிங்களவர்கள் சிங்கள கடற்படை இணைந்து பெரும் விடுதிகளை அமைத்து விட்டார்கள்.. எம்மவர்கள் என்ன செய்யினம்..???! 

புலம்பெயர் வெட்டிப் பெருமிகள்.. அங்கு நிற்கும் சிங்களச் சிப்பாய்க்கு கைலாகு கொடுப்பது பெருமை என்று அலைகிறார்கள். என்னத்தை சொல்ல....! அசைலம் அடிச்சதே அவன் கொல்லுறானுன்னு,.. இப்ப கைலாகு கேக்குதாம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, Paanch said:

விகாரை இடிக்கப்படவேண்டும். அரசு நீதியை நிலைநாட்ட வேண்டும், இதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. இருந்தும் இது எங்கள் மக்களால் அது நிகழக்கூடாது, இதனை உருவாக்கிய அரச படைகளாலே விகாரை அகற்றப்படவோ, இடிக்கப்படவோ அரசினை செயற்பட வைத்தால் நாட்டில் கலவரங்கள் ஏற்பட வழி ஏற்படாது.

போயும் போயும் சிங்கள இனவாத அரசு அல்லது இராணுவம் கட்டிய விகாரையை இடிக்கும்  சந்தர்ப்பம் வருமென நினைக்கின்றீர்களா பாஞ்ச் ஐயா? 😀

 இனிமேலாவது நடக்கிற கதையை கதைப்பம். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

போயும் போயும் சிங்கள இனவாத அரசு அல்லது இராணுவம் கட்டிய விகாரையை இடிக்கும்  சந்தர்ப்பம் வருமென நினைக்கின்றீர்களா பாஞ்ச் ஐயா? 😀

 இனிமேலாவது நடக்கிற கதையை கதைப்பம். :cool:

நம்பிக்கைதான் வாழ்க்கை. மாற்றம் ஒன்றுதான் மாறாதது. இனி வரும் மாற்றம் எப்டி இருக்குமோ? யார் கண்டது!.

தோன்றிய எங்கள் தலைவனிடம் மனிதம் இருந்ததினால், இன்றும் சிங்களரின் ஆட்சி தொடர்கிறது.🤔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.