Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனுராதபுரம் வான்படைத் தளம் மீது கடும் தாக்குதல்

Featured Replies

LTTE releases names of Black Tigers in airbase raid

[TamilNet, Monday, 22 October 2007, 19:15 GMT]

Liberation Tigers Monday night released the details of Black Tiger commandos who took part in the raid on Anuradhapura air base. Two Lieutenant Colonels, six Majors, 12 Captains and one Lieutenant rank Black Tiger members have taken part in the operation. A Lieutenant Colonel who led an attack team was from Trincomalee, two of the members, a Major and a Captain were from Batticaloa, one from Mullaiththeevu, one from Mannaar, three from Ki'linochchi and eleven members from Jaffna which has been under the Sri Lanka Army (SLA) control since 1995. Three Captains were female Black Tigers.

21-member Black Tiger elite commandos with LTTE leader V. Pirapaharan, before embarking on their mission towards Anuradhapura [Photo: LTTE]

The Tigers released the names of the commandos who took part in the biggest Black Tiger operation:

Lt. Col. Veeman (K. Pratheepan) from Thiriiyaay, Trincomalee

Lt. Col. Ilangko (R. Paheerathan) from Chavakachcheari, Jaffna

Major Mathivathanan (B. Thayaaseelan) from Veala'nai, Jaffna

Captain Tharmini (K. Nirmala) from Ki'linochchi

Captain Puradchi (S. Thanushan) from Puththoor, Jaffna

Major Supan (K. Jeevakanthan) from Vara'ni, Jaffna

Major Ilampuli (T. Kalairaj) from Kankeasanthu'rai, Jaffna

Major Kaavalan (S. Saththiyan) from Poonakari, Ki'linochchi

Captain Karuveanthan (M. Satheeskumaar) from Vaddakkachchi, Ki'linochchi

Captain Pukazhmani (T. Puvaneasvaran) from Pungkudutheevu, Jaffna

Captain Eezhaththeavan (T. Moasikaran) from Urezhu, Jaffna

Major Ezhilinpan (V. Pirapaharan) from Koa'ndaavil, Jaffna

Captain Pulimannan (K. Nanthakumar) from Kudaththanai, Jaffna

Captain Anpukkathir (V. Thileepkumar) from Oddusuddaan, Mullaiththeevu

Captain Subesan (N. Maharaj) from Murungkan, Mannaar

Captain Senthooran (K. Thinesh) from Urezhu, Jaffna

Lt. Arun (P. Thivaakaran) Ma'ndaitheevu, Jaffna

Captain Panchaseelan (S. Kajendran) from Kiraan, Batticaloa

Major Kanikkeethan (R. Kandasamy) from Chengkaladi, Batticaloa

Captain Eezhappiriya (K. Keethanchali) from Thirunelveali, Jaffna

Cpatain Arivumalar (S. Uthaya) from Kayts (Oorkaavattu'rai), Jaffna

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23572

  • Replies 175
  • Views 38.6k
  • Created
  • Last Reply

வித்தாகிப்போன வீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Edited by {கரன்}

வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி வித்தாகிப்போன கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள்.

Edited by சிறி

மாவீரர்களிற்கு வீரவணக்கங்கள்!

கண்ணீர்ப் பூக்கள்!

sympathywreath2infoyp6.gif

  • கருத்துக்கள உறவுகள்

Army chief: 'British soldiers need to prepare for life after death'

http://www.dailymail.co.uk/pages/live/arti...in_page_id=1770

இது மிக அண்மையில் பிரிட்டிஷ் இராணுவத் தளபதியின் வார்த்தைகளில் இருந்து பிறந்தது.

எம் கரும்புலிகள்.. போராளிகள் அதை என்றோ சாதிக்கத் துணிந்துவிட்டனர். அதற்கேற்ப தன் வாழ்வையே அர்ப்பணிக்கத் துணிந்த தலைவனைக் கொண்டது அவர்களின் பாக்கியமே.

மரணம் என்பது எல்லா மனிதருக்கும் இயற்கையின் நியதியே. மரணத்துக்காகக் கலங்குவதிலும் வீரனின் உறுதியைக் கையில் எடுக்க முன் வருவதே வீர மக்களுக்கு அழகு.

வீரர்களே நீங்கள் வீழ்ந்தது வித்தாகி மட்டுமே. மீண்டும் எழுவீர்கள் மக்களின் உறுதியோடு தேசத்தின் விடியலோடு.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்ட மாவீரர்களுக்கு கனத்த மனதுடன் எனது கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

களமாடி வீரச்சாவடைந்த அன்பின் மாவீரர்கட்கு வீர வணக்கங்கள்.

Lt. Col. Veeman (K. Pratheepan) from Thiriiyaay, Trincomalee

Lt. Col. Ilangko (R. Paheerathan) from Chavakachcheari, Jaffna

Major Mathivathanan (B. Thayaaseelan) from Veala'nai, Jaffna

Captain Tharmini (K. Nirmala) from Ki'linochchi

Captain Puradchi (S. Thanushan) from Puththoor, Jaffna

Major Supan (K. Jeevakanthan) from Vara'ni, Jaffna

Major Ilampuli (T. Kalairaj) from Kankeasanthu'rai, Jaffna

Major Kaavalan (S. Saththiyan) from Poonakari, Ki'linochchi

Captain Karuveanthan (M. Satheeskumaar) from Vaddakkachchi, Ki'linochchi

Captain Pukazhmani (T. Puvaneasvaran) from Pungkudutheevu, Jaffna

Captain Eezhaththeavan (T. Moasikaran) from Urezhu, Jaffna

Major Ezhilinpan (V. Pirapaharan) from Koa'ndaavil, Jaffna

Captain Pulimannan (K. Nanthakumar) from Kudaththanai, Jaffna

Captain Anpukkathir (V. Thileepkumar) from Oddusuddaan, Mullaiththeevu

Captain Subesan (N. Maharaj) from Murungkan, Mannaar

Captain Senthooran (K. Thinesh) from Urezhu, Jaffna

Lt. Arun (P. Thivaakaran) Ma'ndaitheevu, Jaffna

Captain Panchaseelan (S. Kajendran) from Kiraan, Batticaloa

Major Kanikkeethan (R. Kandasamy) from Chengkaladi, Batticaloa

Captain Eezhappiriya (K. Keethanchali) from Thirunelveali, Jaffna

Cpatain Arivumalar (S. Uthaya) from Kayts (Oorkaavattu'rai), Jaffna

funeral-flowers.jpg

Edited by வலைஞன்
ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்படைகளின் சாதனையினை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் எமக்காக உயிர் நீத்த வீரப்புதல்வர்களை நினைக்க கவலையாக இருக்கிறது. இப்படிப்பட்ட தியாகிகளின் தியாகங்களை நினைக்காது, போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் சில தமிழர்களையும், இப்போராட்டம் பற்றி அக்கறை இல்லாமல் சுய நலமாக வாழும் சில தமிழர்களையும் நினைக்க வேதனையாக இருக்கிறது. இம்மாவீரர்களுக்கு எனது கண்ணீர் காணிக்கைகள்.

4வது ஈழப்போராட்டத்தில் இன்னும் பல அதிசயங்கள் உலகுக்கு தெரியப் போகிறது.

அரசின் பிரசாரம் பொய்த்து விட்டது - ஐ.தே.க.செயலாளர்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தினை அரசாங்கம் அரசியல் மயப்படுத்தியமையினாலேயே அநுராதபுரம் விமானப்படைத்தளம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. அரசாங்கத்தின் தவறான கொள்கையையே படையினரின் உயிரிழப்புக்கும் பொருள் இழப்புக்கும் காரணமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளினால் மீண்டும் விமான தாக்குதல் நடத்த முடியாது என்ற அரசாங்கத்தின் பிரச்சாரம் இன்று பொய்த்துவிட்டது. படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

புலிகளின் தாக்குதல் குறித்து கேட்டபோதே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

விடுதலைப் புலிகளை யுத்தத்தால் தோல்வியடையச் செய்ய முடியாது. அரசியல் தீர்வே இறுதித்தீர்வாக அமையும் என சர்வதேச பிரதிநிதிகள் தெரிவித்ததால் அதனை அரசாங்கத்தரப்பு ""களநிலவரம்'' தெரியாமல் இக்கருத்தைதெரிவிக்கின்றனர் என விமர்சனம் செய்தன. புலிகள் தொடர்பிலான மதிப்பீடுகளை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டது.

நூற்றுக்கு 99 வீதம் புலிகளை அழித்தொழித்து விட்டோம். நவீனரக ராடர்களை கொள்வனவு செய்துள்ளோம் என்றெல்லாம் அரசாங்கம் மார்தட்டியது. ஆனால், இன்று படையினரின் முகாம் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தை காட்டிக்கொண்டு தெற்கில் மக்களை ஏமாற்றி வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கும் அரசாங்கம் படையினரின் இழப்புக்கள் தொடர்பாக என்ன பதில் கூறப்போகிறது.

படையினர் பெறும் வெற்றிகளை அரசியல் மயமாக்கி அவர்களை பலிக்கடாவாக அரசாங்கம் மாற்றியுள்ளது. புலிகளால் மீண்டும் வான் தாக்குதலை நடத்த முடியாதென அரசாங்கத்தின் பிரசாரம் இன்று பொய்த்து விட்டது.

அநுராதபுரம் படை முகாம் மீதான தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

-வீரகேசரி

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

திஸ்ச அத்த நாயக்காவுக்கு சிறையில் போட்ட பின் நல்லாக ஞானம் பிறந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அவதானத்தை திசை திருப்பியே புலிகள் விமானத்தாக்குதலை மேற்கொண்டனர் விமானங்கள் புறப்படுவதை அவதானித்தோம் என்கிறார் அஜந்த டி சில்வா

விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான இலகு ரக சிறிய விமானங்கள் இரண்டு வவுனியாவிலிருந்து நேற்று அதிகாலை புறப்படுவதை ராடர் தொகுதியினூடாக அவதானித்து விட்டோம். எனினும் புலிகள் படையினரின் அவதானத்தை திசை திருப்பியே விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் என்று விமானப்படை பேச்சாளர் குருப்கெப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

விமான பாதுகாப்பு தொகுதியில் எவ்விதமான குறைப்பாடுகளும் இல்லை என்பதனால் தான் புலிகளின் விமானங்கள் புறப்படுவதை அவதானித்து விட்டோம். எனினும் புலிகள் நுவரவௌ வாவியின் கிழக்கு பகுதியிலிருந்து விமான படைத்தளத்தின் மீது தரைவழியாக தாக்குதல்களை நடத்தி படையினரின் கவனத்தை திசை திருப்பியே படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

புலிகளின் விமானங்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்காக புறப்பட்ட விமான படைக்கு சொந்தமான 212 பெல் ஹெலிகப்டர் மீது படையினரே தவறுதலாக தாக்குல் மேற்கொண்டதாகவும் புலிகளின் விமானம் குறித்து கணேசபுரத்திலிருந்து பொலிசார் தகவல்களை வழங்கியதாகவும் வெளியான தகவல்களில் எவ்விதமான உண்மையும் இல்லை.

வவுனியாவிலிருந்து புறப்பட்ட குறித்த ஹெலிகெப்டரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மிஹிந்தலை தொரமடலாவ பகுதியில் அது வீழ்ந்து நொருங்கியுள்ளது இதில் பயணம் செய்த இரண்டு உதவியாளர்கள், மற்றும் விமானிகள் இருவர் பலியாகியுள்ளனர்.

அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தரைவழியாக நேற்றுக்காலை 3.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள் காரணமாக சிறு இழப்புகள் ஏற்பட்டுள்ளதே தவிர புலிகளின் சிறிய ரக விமானங்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட குண்டு வீச்சுதாக்குதல்கள் மூலமாக எவ்விதமான இழப்புகளும் ஏற்படவில்லை.

சிறிய ரக இரண்டு விமானங்கள் மூலமாக இரண்டு குண்டு தாக்குதல்களை மேற்கொண்டு விட்டு இரணைமடு பகுதிக்கு திரும்பிசென்றுள்ள புலிகளின் விமானங்களை இலக்கு வைத்தே விமான படையினரின் விமானகள் நேற்றுக்காலை குண்டு வீச்சு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

அனுராதபுர விமான படைத்தளம் அமைந்திருக்கின்ற பகுதியை சுற்றி சிவிலியன்கள் இருப்பதனால் படையினர் சிறிய ரக ஆயுதங்களை கொண்டே தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல்களில் சிவிலியன்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் படையினர் மிகுந்த அவதானமாக இருந்தனர்

- வீரகேசரி

------------------------------------------------------------

பல குழுக்களாக பிரிந்தே புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர் அமைச்சர் கெஹலிய கூறுகிறார்

வடக்கு,கிழக்கு பகுதிகளில் அண்மைய காலங்களில் புலிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை அடுத்தே விடுதலைப்புலிகளின் உயர்மட்டத்தில் பயிற்சி பெற்ற தற்கொலைப் புலிகள் அநுராதபுரம் விமான படைத்தளம் மற்றும்

படையியினர் மீது பல குழுக்களாக பிரிந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்று அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை நடத்திவிட்டு தப்பிசென்ற புலிகள் மீது படையினர் பதில் தாக்குதல்களை மேற்கொண்டதுடன் தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர் அப்போது புலிகள் மரங்களிலிருந்து சினைப்பர் தாக்குதல்களை மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் மேலும் சொன்னார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; வடக்கு, கிழக்கில் பகுதிகளில் படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற பதில் நடவடிக்கைகள் காரணமாக புலிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, பின்னடைவுகள் அடுத்தே புலிகள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். இவ்வாறான தாக்குதல்களை முற்றாக எதிர்பார்க்காமல் இருக்க முடியாது.

இந்த தாக்குதல்களில் உயர்மட்டத்தில் பயிற்சி பெற்ற புலிகளும்,தற்கொலை புலிகளுமே ஈடுபட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தாக்குதலில் பலியான 20 புலிகளின் சடலங்களை படையினர் மீட்டுள்ளனர். நன்கு திட்டமிட்டு ஆயுதங்களை சேகரித்தே இந்த தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதல்களை அடுத்து படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது இந்த மோதல் சம்பவங்களின் போது புலிகளிள் மரங்களிலிருந்து ஸ்னைப்பர் தாக்குதல்களை மேற்கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேற்படி சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் புலிகளிடமிருந்து தாக்குதல்களை எதிர்பார்க்காமல் இருக்க முடியாது.

பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போது இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்களை எதிர்பார்க்காமல் இருக்கமுடியாது படையினரின் அவதானம், கவனத்தை திசை திருப்பியே புலிகள் இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

விமான படையின் பாதுகாப்பு குறைப்பாடுகள் காரணமாகவே இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக வெளியான தகவல்களில் எவ்விதமான உண்மையும் இல்லை. படையினரின் அவதானத்துடன் இருந்தமையினால் தான் புலிகளின் மீது பதில் தாக்குதல்களை மேற்கொள்ள முடிந்ததுடன் இழப்புகளையும் ஏற்படுத்த முடிந்தது.

- வீரகேசரி

---------------------------------

புலிகளின் தாக்குதல்களை கண்டு அரசாங்கம் அஞ்சப்போவதில்லை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா

பயங்கரவாதிகளிடமிருந்து அப்பாவி மக்களை மீட்பதற்காக படையினரால் வடக்கில் மேற்கொள்ளப்படும் பதில் தாக்குதல்களை அடுத்தே புலிகள் இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புலிகளின் இவ்வாறான தாக்குதல்களை கண்டு அரசாங்கமோ பாதுகாப்பு படைத்தரப்பினரோ அஞ்சப்போவதில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

கிழக்கில் தோல்வியடைந்த புலிகள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் அதற்கு அரசாங்கமோ படைகளோ ஒருபோதும் இடம்வழங்காது என்றும் அவர் சொன்னார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

கிழக்கில் தோல்வியடைந்த புலிகள் யால சரணலாயத்தில் படையினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர் புலிகள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டு அரசாங்கத்தையும் படையினரையும் பயமுறுத்த முடியாது என்பதுடன் தாக்குதல்கள் மூலமாக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்கு புலிகளால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடவழங்கமாட்டோம்.

பயங்கரவாதிகளிடமிருந்து மக்களை மீட்டு பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் அந்த முயற்சிகளை ஒருபோதும் கைவிடாது.

விடுதலைப்புலிகளால் அனுராதபுரத்தில் இன்று (நேற்று) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வீரமாக கருதி எதிரிகள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் அவ்வாறான நடவடிக்கைகள் தேசதுரோகமான செயற்பாடாகும்.

யுத்தத்தை அரசாங்கம் ஆரம்பிக்கவில்லை என்பதுடன் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள அப்பாவி மக்களை மீட்பதற்கான பதில் நடவடிக்கைகளையே படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

- வீரகேசரி

அரசின் பிரச்சாரம் பொய்த்து விட்டது: திஸ்ஸ அத்தநாயக்க

தமிழீழ விடுதலைப் புலிகளால் மீண்டும் வான் தாக்குதலை நடத்த முடியாது என அரசாங்கத்தின் பிரச்சாரம் இன்று பொய்த்து விட்டது என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.விபரங்களுக்கு

சோர்நது விட்ட தமிழர் உள்ளத்தில் உயிர்ப்பை தந்து விதையாகிப் போன மாவீர செல்வங்களே உமக்கு கண்ணீரால் அஞ்சலிப்பது உம் வீரத்திற்கு இழுக்கு. மாவீரரே எமக்காய் எம் தாய் மண்ணுக்காய் நீவிர் கொடுத்த கொடை எம் உள்ளத்தில் நாளும் பசுமையாய். உம் பாத சுவட்டில் நாமும்.

வீர கொழுந்துகளே என் வீர வணக்கங்கள்.

ஜானா

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

தந்தானானே தாரேனானா தானா ஏய்

தந்தானானே தாரேனானா தானா....

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலி இதயம் இரும்பென எழுதும்

கவிதைகள் பொய் ஆகும்

அது இரும்பினிலில்லை அரும்பிய

முல்லை என்பதே மெய் ஆகும்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே

யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள்

சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும்

வளர்த்த கோழி உரித்திடாத வாழ்வை எடுத்தவர்

அவர் படுக்கும் பாயில் வளர்க்கும் நாயை கிடக்க விடுபவர்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

காங்கை நெருப்புக்கள் தூங்குவதே இல்லை

யாருக்கு இங்கே இது தெரியும்

கரும் வேங்கைகள் தாகங்கள் ஏதென

தாங்கிடும் வேர்களுக்கே இது புரியும்

இலக்கை நோக்கி நகரும் போதும் கணக்கை பார்ப்பவர்

அவர் வெடிக்கும் போதும் அனுப்பும் தோழர் உறவை காப்பர்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

பாடல் இசைத்தட்டு: கரும்புலிகள் பாகம் 2

மேலும் - http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry354472

  • தொடங்கியவர்

ltte22080701adv6.jpg

லெப்.கேணல் வீமன் (பிரதீபன் - திருகோணமலை)

லெப்.கேணல் இளங்கோ (பகீரதன் - யாழ்ப்பாணம்)

மேஜர் மதிவதனன் (தயாசீலன் - யாழ்ப்பாணம்)

மேஜர் இளம்புலி (கலைராஜ் - யாழ்பாணம்)

மேஜர் சுபன் (ஜீவகாந்தன் - யாழ்ப்பாணம்)

மேஜர் காவலன் (சத்தியன் - கிளிநொச்சி)

மேஜர் எழிலின்பன் (பிரபாகரன் - யாழ்ப்பாணம்)

மேஜர் கனிக்கீதன் (கந்தசாமி - மட்டக்களப்பு)

கப்டன் தர்மினி (நிர்மலா - கிளிநொச்சி)

கப்டன் புரட்சி (தனுசன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கருவேந்தன் (சதீஸ்குமார் - கிளிநொச்சி)

கப்டன் புகழ்மணி (புவனேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் ஈழத்தேவன் (மோசிகரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் புலிமன்னன் (நந்தகுமார் - யாழ்ப்பாணம்)

கப்டன் அன்புக்கதிர் (திலீப்குமார் - முல்லைத்தீவு)

கப்டன் சுபேசன் (மகராஜ் - மன்னார்)

கப்டன் செந்தூரன் (தினேஸ் - யாழ்ப்பாணம்)

கப்டன் பஞ்சசீலன் (கஜேந்திரன் - மட்டக்களப்பு)

கப்டன் ஈழப்பிரியா (கீதாஞ்சலி - யாழ்ப்பாணம்)

கப்டன் அறிவுமலர் (உதயா - யாழ்ப்பாணம்)

லெப்.அருண் (தவகரன் - யாழ்ப்பாணம்)

தாயக விடுதலைக்காய் தம்முயிரை ஈந்திட்ட இந்த வீரவேங்கைளிற்கு வீரவணக்கம்.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

சோர்நது விட்ட தமிழர் உள்ளத்தில்

சோரக்கூடாது. தமிழர் படை மீதும், தேசியத்தலைவர் மீதும் நம்பிக்கையுடன் இருந்தீர்கள் என்றால் ஒரு நாளும் சோர்வடைய மாட்டீர்கள். இது துடுப்பாட்டப்போட்டி அல்ல. எந்த நேரத்தில் எப்படியான முடிவுகள் எடுக்க வேணுமென்று தலைவருக்கு தெரியும். சில நிகழ்வுகளை மேலோட்டமாகப் பார்க்கும் போது எமக்கு தோல்வி போலத் தோன்றும். ஆனால் அந்த நிகழ்வுகள் பிற்காலத்தில் வரும் பெரிய வெற்றிக்கான இராசதந்திர நிகழ்வேயாகும். இதைவிட இன்னும் பல அதிசயங்கள் தமிழர்படைகளினால் உலகத்துக்கு காண்பிக்கப் படப்போகிறது. அதுவரை பொறுத்திருங்கள்.

மீண்டு வருவாரென எண்ணியிருந்தேன். மீளாத் துயில் கொண்டு மரணத்திலும் வாழ்கின்ற இந்த மாவீரர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

புலிகளின் தாக்குதல்களை கண்டு அரசாங்கம் அஞ்சப்போவதில்லை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா

பயங்கரவாதிகளிடமிருந்து அப்பாவி மக்களை மீட்பதற்காக படையினரால் வடக்கில் மேற்கொள்ளப்படும் பதில் தாக்குதல்களை அடுத்தே புலிகள் இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புலிகளின் இவ்வாறான தாக்குதல்களை கண்டு அரசாங்கமோ பாதுகாப்பு படைத்தரப்பினரோ அஞ்சப்போவதில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

கிழக்கில் தோல்வியடைந்த புலிகள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் அதற்கு அரசாங்கமோ படைகளோ ஒருபோதும் இடம்வழங்காது என்றும் அவர் சொன்னார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

கிழக்கில் தோல்வியடைந்த புலிகள் யால சரணலாயத்தில் படையினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர் புலிகள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டு அரசாங்கத்தையும் படையினரையும் பயமுறுத்த முடியாது என்பதுடன் தாக்குதல்கள் மூலமாக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்கு புலிகளால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடவழங்கமாட்டோம்.

பயங்கரவாதிகளிடமிருந்து மக்களை மீட்டு பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் அந்த முயற்சிகளை ஒருபோதும் கைவிடாது.

விடுதலைப்புலிகளால் அனுராதபுரத்தில் இன்று (நேற்று) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வீரமாக கருதி எதிரிகள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் அவ்வாறான நடவடிக்கைகள் தேசதுரோகமான செயற்பாடாகும்.

யுத்தத்தை அரசாங்கம் ஆரம்பிக்கவில்லை என்பதுடன் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள அப்பாவி மக்களை மீட்பதற்கான பதில் நடவடிக்கைகளையே படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

.வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்
புதினத்தில வந்த செய்தி என்டா சொல்லவே வேணும். புதினம் என்டு இருந்தாலே நான் வாசிக்கிறேலை. :D
பொதுவாக எமது ஊடகங்களை விமர்சனம் செய்வதைத் தவிருங்கள். இராணுவக் கேடுபிடிகளின் மத்தியில் யாழ்ப்பாணம், தென் தமிழீழம் ஆகிய இடங்களில் இருந்து செய்திகளை செய்தியாளர்கள் புதினம் இணையத்தளத்துக்கு செய்திகள் வழங்குகிறார்கள். இதில் ஒட்டுப்படைகளினால் இச்செய்தியாளர்கள் சிலர் தேடப்பட்டு வருகிறார்கள். புலத்தில் சொகுசாக இருந்து கொண்டு, இராணுவக் கெடுபிடிகளின் மத்தியில் உலகத்தமிழர்களுக்கு செய்திகளை வழங்கும் செய்தியாளர்களைக் கொச்சைப் படுத்தாதீர்கள். சில சமயங்களில் பிழையான செய்திகள் தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்தில் வருவதுண்டு. ஆனால் பிழை என்று தெரிந்தவுடன் அவர்கள் அச்செய்தியினை திருத்திவிடுவார்கள்.
வந்திட்டினம்...இனி பாருங்கோவன் தங்களை தாங்களே தேசிய ஊடகம் என்டு சொல்லிக்கொண்டு திரியிறவயளின்ர விளையாட்டுக்களை. இப்ப கதை,வசனம் எல்லாம் றெடி பண்ணுவினம்.
அவ்வூடகம் சரியாகத்தான் செய்தி வெளியிட்டு இருந்தார்கள். அவர்கள் சொன்னது போல இத்தாக்குதலுக்கு 'எல்லாளன் நடவடிக்கை' என்று தமிழர் படையினர் சொல்லியிருக்கிறார்கள். எமது ஊடகங்களை அவசரப்பட்டு கொச்சைப் படுத்தாதீர்கள்.

இந்த வருட பட்ஜட் காலி இந்தவருடம் 1.27 பில்லியெண் சொலர் பாதுகாப்புக்கு என ஒதுக்கபட இருந்தது ஆனால் 44 மில்லியெண் டொலர் நேற்று கரும் வேங்கைகள் எரித்துவிட்டனர்

வித்தாகி போய்விட்ட எமது வீரர்களுக்கு கனத்த இதயத்துடன் எனது வீரவணக்கங்கள்.

நீங்கள் மீண்டும் தவழுவீர் விரைவில் மலரப்போகும் தமிழீழத்தில் அதுவரை சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

வீர காவியம் படைத்து வித்தாகிப் போன மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

அநுராதபுரம் தாக்குதல் புலிகளின் திறைமையினால் மேற்கொள்ளப்பட்டதல்ல - ஜே.வி.பி

அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதலை

கோழைத்தனமான செயலென கண்டித்திருக்கும் ஜே.வி.பி, பாதுகாப்பு வலைப் பின்னலில்

இருந்த ஏதோவொரு குறைபாட்டினால் புலிகளால் இவ்வாறான தாக்குதலொன்றை நடத்த

முடிந்ததே தவிர இது அவர்களின் திறமையினால் மேற்கொள்ளபட்டடதொன்றால்ல என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இது தொடர்பாக ஜே.வி.பி யினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

விடுதலைப்புலிகள் கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களி;ல் தொடர்ச்சியாக கண்டுவரும்

தோல்விகளுக்கு மத்தியில் அவற்றை மூடி மறைத்துக் கொள்ளும் விதமாக நடத்திய

இந்த கோழைத்தனமான தாக்குதலை ஜே.வி.பி. வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன்

சம்பவத்தில் உயிரிழந்த சகல படைத்துரையினரதும் குடும்ப உறவினர்களுக்கு எமது

அனுதாபங்களையும தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த காலங்களில் படையினரின் விஷேட நடவடிக்கைகளால் வன்னியிலும் கிளிநொச்சியிலும் முடங்கிக் கிடக்கும் புலிகள், பாதுகாப்பு வலைப்பின்னலில் இருந்த

ஏதோவொரு குறைபாட்டினால் இவ்வாறான தாக்குதலொhன்றை நடத்த முடிந்ததே தவிர,

இது அவர்களின் திறமையினால் மேற்கொள்ளப்பட்டதொன்றல்ல என்று நாம் நம்புகிறோம்.

இதே நேரம், இனிவரும் காலங்களில் புலிகள் நடத்தக் கூடிய இம் மாதிரியான

தாக்குதல்களை முறியடிப்பத்ற்காக தற்போது நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து

கொள்ள மேற்குறித்த தாக்குதல் தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்தி அரசாங்கம் உரிய நடவடிக்கைகைகளை எடுக்க வேண்டும்.

அத்துடன் பயங்கரவாதிகளின் இம்மாதிரியான தாக்குதல்களை பயன்படுத்தி பிரிவினைவாத

தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் அரசை பேச்சு மேசைக்கு மண்டியிட வைக்கும் முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனினும், புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளபட்டு வரும்

நடவடிக்கைளை ஸ்தம்பிதமடையச் செய்யும் பேச்சு வார்த்தை என்ற சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ள வேண்டாமமென நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

இதே நேரம் கிளிநொச்சிலய் புலிகளின் பலம் இருக்கும் வரை மேலும் விiளாயாட்டு

விமானங்களை பயன்படுத்தி சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் கோழைத்தனமான

தாக்குதல்கள் தொடருமென்பது அநுராதபுர விமானப்படைத்தளம் மீதான புலிகளின்

தாக்குதல் மீண்டும் சுட்டடிக்காட்டுகிறது. எனவே, வன்னி மற்றும் கிளிநொச்சியில் புலிகளின் பிடியில் சிக்குண்டிருக்கும் மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகளை அச்சமின்றி

முன்னெடுத்துச் செல்லுமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி தினக்குரல்

ஆகா என்னே ஒரு கண்டுபிடிப்பு. அதுதானே எழுபதுகளில் தாங்கள் செய்த வீரத்தனமான

போரட்டச் செயலால் தானே தலைவனையும் காட்டிக் கொடுத்து இன்றைக்கு அரசில்

தொங்கிக் கொண்டு இருக்கறார்கள். கடந்த காலத்து பயங்கரவாதிகளே பாருங்கள் பாதுகாப்புக் குறைபாடுகளைப் பற்றிய தரவுகள் உங்கள் வீட்டிற்குள் இருந்து தான் புலிகளுக்குப் போயிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலை அடுத்து ஊரடங்கு 12 பேர் கைதாகி விசாரிக்கப்பட்டனர்

அநுராதபுரம் விமானத்தளம் மீது நேற்று விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து அங்கு நடை முறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்று மாலை 4 மணிக்கு நீக்கப்பட்டது.

ஊரடங்கை நடைமுறைப்படுத்தி, பெரும் எண்ணிக்கையில் படையினர் குவிக்கப்பட்டு அங்கு தேடுதல் நடத் தப்பட்டது.

இத்தேடுதலில் 12 பொதுமக்கள் படையினரால் கைது செய்யப் பட்டனர். அவர்களில் எட்டுப்பேர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். நால்வர் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகின்றனர்

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சிகள் தொடரும்!

""எதிர்காலத்திலும் படையினருக்கும் அரசுத் தரப்புக்கும் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.''இப்படித் தெரிவித்திருக்கிறார் விடுதலைப் புலிகளின் படைத் துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன்.நேற்றைய தாக்குதல் தொடர்பாக என்ன கூறுகிறீர்கள்? இனிமேலும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடருமா என்று இளந்திரையனிடம் கேட்டபோது, ""அதிர்ச்சி தொடரும்'' என்று சூசகமாகத் தெரிவித்தார்.

""கடந்த 87 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கரும்புலிகள் நடத் திய பாரிய தாக்குதல் இது. (நேற்றைய தாக்குதல்). இவ்வா றான தாக்குதல்கள் தொடரும் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ் மக்கள் மீது ஈவு இரக்கமற்ற தாக்குதல்களை நடத்தி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் படைத்தரப் புக்கு இதுபோன்ற அதிர்ச்சிகள் இன்னும் காத்திருக்கின் றன'' என்றார் அவர். -உதயன்

இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை

""விடுதலைப் புலிகளின் விமா னப்படை மற் றும் தரைப்படை ஆகியன நேற்று அதிகாலை அநு ராதபுரத்திலுள்ள விமானப்படை யினரின் தளத்தின் மீது தொடுத்த தாக் குதலை நாங்கள் சற்றும் எதிர்பார்க்க வேயில்லை.'' இப்படிக்கூறியிருக்கின்றார் அர சின் பாதுகாப்புத் தொடர்பான பேச்சாள ரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக் வெல.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊட கவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:வடக்கில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் விடுதலைப் புலிகள் இவ்வாறான தாக்குதல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்றைய தாக்கு தலில் 2 விமானப்படை அதிகாரிகள் உட்பட 9 படையினர் உயிரிழந்துள்ள னர். அவர்களில் 5 பேர் விமானப்படை யினரின் முகாமுக்குள்ளேயே உயிரிழந் துள்ளனர். சம்பவத்தில் மேலும் 20 படை யினர் காயமடைந்தனர். அத்துடன் விடு தலைப்புலிகளின் 20 சடலங்கள் படை யினரால் மீட்கப்பட்டுள்ளன.இப்படியானத?ரு தாக்குதல் நடக் கும் என்று விமானப்படையினரும், நாங் களும் சற்றுக்கூட எதிர்பார்க்கவே யில்லை. என்றார். -உதயன்

Edited by கந்தப்பு

ஜேவிபி ஒரூ கூழ் முட்டை என்பது அந்த அறிக்கையில் தெரிகிரது போர் என்றால் தெருசண்டியர் போல சண்டை பிடிப்பதல்ல என்பதை அவர்கள் புரியவில்லை போலும் எதிரியின் பலம் பலவீனத்தை ஆராய்ந்து தாக்குதலை கனகச்சிதமாக நடத்துவதே இராணுவவியல் திறமை இது தெரியாததால்தான் தோல்வி அடைந்த இயக்கமாக இருகிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.