Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-197-750x375.jpg

மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

சட்டவிரோதமாக குடியேறிய 116 இந்தியர்களை ஏற்றிச் சென்ற மற்றொரு அமெரிக்க இராணுவ விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் சனிக்கிழமை (15) இரவு தரையிறங்கியது.

சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் இரண்டாவது தொகுதி இதுவாகும்.

சி-17 விமானம் அமிர்தசரஸில் இரவு 11.35 மணியளவில் எதிர்பார்த்த நேரத்திற்கு 90 நிமிடங்கள் தாமதமாக தரையிறங்கியது என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

குடியேற்றம், சரிபார்ப்பு மற்றும் பின்னணி சரிபார்ப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர், நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

116 நாடுகடத்தப்பட்டவர்களின் பட்டியலின்படி, அவர்களில் 60 க்கும் மேற்பட்டவர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்டவர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்.

ஏனையவர்கள் குஜராத், உத்தரபிரதேசம், கோவா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நாடு கடத்தப்பட்ட 157 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை (16) அமிர்தசரஸில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் வசிக்கும் மேலும் 487 சட்டவிரோத இந்திய குடியேற்றவாசிகளை அமெரிக்க அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த நாடு கடத்தல் வந்துள்ளது.

பெப்ரவரி 5 ஆம் தேதி, 104 சட்டவிரோத இந்தியக் குடியேற்றங்களுடன் அமெரிக்க விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது.

அவர்களில் தலா 33 பேர் ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 30 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

https://athavannews.com/2025/1421599

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இந்த நாடு கடத்தலிலும் கை கால்களுக்கு விலங்குகள் இடப்பட்டதா என்புதை தெளிவாக சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இந்தியாவிற்கு சென்று திரும்பிய எனது இந்திய நண்பர் கூறினார், இந்தியாவில் உள்ளவர்களின் வாழ்க்கை வெளிநாட்டில் உள்ளவர்களை விட சிறப்பாக உள்ளதென, அவரது நண்பர ஓய்வு பெற்றுவிட்டதாகவும் மாதம் $3000 அவுஸ்ரேலிய டொலர் ஓய்வூதியம் பெறுவதாக கூறினார் (நம்புவது கடினமாக இருந்தது).

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

கவனமாக இருங்கள்’ ஈழப்பிரியன். மாறி கிறி. உங்களையும். இந்தியன் என்று பிடித்து அனுப்பி விடுவார்கள் 🤣😂 எங்கே யாசோதரனை காணவில்லையே???

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

கவனமாக இருங்கள்’ ஈழப்பிரியன். மாறி கிறி. உங்களையும். இந்தியன் என்று பிடித்து அனுப்பி விடுவார்கள் 🤣😂 எங்கே யாசோதரனை காணவில்லையே???

பிடித்து அனுப்பி விட்டார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

அவரது நண்பர ஓய்வு பெற்றுவிட்டதாகவும் மாதம் $3000 அவுஸ்ரேலிய டொலர் ஓய்வூதியம் பெறுவதாக கூறினார் (நம்புவது கடினமாக இருந்தது).

ம்ம்.,,சந்திராயன், மங்களாயன் போலத் தான் இதுவும் இருக்கும், வசி….!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

அண்மையில் இந்தியாவிற்கு சென்று திரும்பிய எனது இந்திய நண்பர் கூறினார், இந்தியாவில் உள்ளவர்களின் வாழ்க்கை வெளிநாட்டில் உள்ளவர்களை விட சிறப்பாக உள்ளதென, அவரது நண்பர ஓய்வு பெற்றுவிட்டதாகவும் மாதம் $3000 அவுஸ்ரேலிய டொலர் ஓய்வூதியம் பெறுவதாக கூறினார் (நம்புவது கடினமாக இருந்தது).

எமது ஊரிலும் பலர் செல்வ செழிப்பாக வாழ்கிறார்கள்.

பெரிய பெரிய கோட்டல்களில் போய் சாப்பிடுகிறார்கள்.

வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் வைத்து ஓடுகிறார்கள்.

அவர்களோடு ஒப்பிடும் போது நாமெல்லாம் பூச்சியம் என தோன்றும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எமது ஊரிலும் பலர் செல்வ செழிப்பாக வாழ்கிறார்கள்.

பெரிய பெரிய கோட்டல்களில் போய் சாப்பிடுகிறார்கள்.

வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் வைத்து ஓடுகிறார்கள்.

அவர்களோடு ஒப்பிடும் போது நாமெல்லாம் பூச்சியம் என தோன்றும்.

எனது அயல் நண்பர் ஒருவர் ஊருக்கு போய் விட்டு சென்றகிழமை திரும்பி வந்தார். அவரிடம் என்ன ஊர்ப்புதினம் என விசாரித்தேன்.

பெரிதாக ஒன்றுமில்லை என சொல்லிவிட்டு..... இங்கிருந்து தன் பாவனைக்காக கொண்டு சென்ற கைத்தொலைபேசியை வெளியில் எடுக்கவே தனக்கு வெட்கமாக இருந்தது என கூறினார்.

அவ்வளவுக்கு அங்கை வேற லவல்.😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

கவனமாக இருங்கள்’ ஈழப்பிரியன். மாறி கிறி. உங்களையும். இந்தியன் என்று பிடித்து அனுப்பி விடுவார்கள் 🤣😂 எங்கே யாசோதரனை காணவில்லையே???

5 hours ago, ஈழப்பிரியன் said:

பிடித்து அனுப்பி விட்டார்களோ?

சுந்தர் பிச்சை எனக்கு ஜூனியர்.................. அவரை அனுப்பின பிறகு தான் என்னை அனுப்புவார்கள்............🤣.

8 hours ago, vasee said:

அண்மையில் இந்தியாவிற்கு சென்று திரும்பிய எனது இந்திய நண்பர் கூறினார், இந்தியாவில் உள்ளவர்களின் வாழ்க்கை வெளிநாட்டில் உள்ளவர்களை விட சிறப்பாக உள்ளதென, அவரது நண்பர ஓய்வு பெற்றுவிட்டதாகவும் மாதம் $3000 அவுஸ்ரேலிய டொலர் ஓய்வூதியம் பெறுவதாக கூறினார் (நம்புவது கடினமாக இருந்தது).

மாதம் 165,000 ரூபாய்கள் என்று வருகின்றது. தனியார் துறைகளில் ஓய்வூதியம் கிடையாது. அரசவேலைகளில் இப்படி ஒரு சம்பளம் கலெக்டருக்கு கூட அங்கே கிடையாது. ஓய்வூதியம் இந்த அளவு எவருக்கும் வராது என்று நினைக்கின்றேன்.

மிகவும் அதிக திறமையும், நீண்ட அனுபவமும் உள்ள ஒருவருக்கு தனியார் தகவல் தொழில்நுட்பதுறையில் வருட சம்பளமாக 25 இலட்சங்கள் வரை வரும். வரிகள், பிடித்தம் போக 120,000 வரை வரும் மாதத்திற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த நாடு கடத்தலிலும் கை கால்களுக்கு விலங்குகள் இடப்பட்டதா என்புதை தெளிவாக சொல்லவில்லை.

இந்த தடவையும் கை கால்களுக்கு விலங்குகள் போடப்பட்டது. திருப்பி அனுப்ப்பட்ட ஒருவரின் பேட்டி இப்பொழுது நியூஸ் 18 இல் போய்க் கொண்டிருக்கின்றது. இது என்ன கொடுமை..... மோடி வந்து போன பின்பும் இதே கதியே தொடர்கின்றது.............🫣.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

ம்ம்.,,சந்திராயன், மங்களாயன் போலத் தான் இதுவும் இருக்கும், வசி….!

5 hours ago, ஈழப்பிரியன் said:

எமது ஊரிலும் பலர் செல்வ செழிப்பாக வாழ்கிறார்கள்.

பெரிய பெரிய கோட்டல்களில் போய் சாப்பிடுகிறார்கள்.

வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் வைத்து ஓடுகிறார்கள்.

அவர்களோடு ஒப்பிடும் போது நாமெல்லாம் பூச்சியம் என தோன்றும்.

57 minutes ago, ரசோதரன் said:

சுந்தர் பிச்சை எனக்கு ஜூனியர்.................. அவரை அனுப்பின பிறகு தான் என்னை அனுப்புவார்கள்............🤣.

மாதம் 165,000 ரூபாய்கள் என்று வருகின்றது. தனியார் துறைகளில் ஓய்வூதியம் கிடையாது. அரசவேலைகளில் இப்படி ஒரு சம்பளம் கலெக்டருக்கு கூட அங்கே கிடையாது. ஓய்வூதியம் இந்த அளவு எவருக்கும் வராது என்று நினைக்கின்றேன்.

மிகவும் அதிக திறமையும், நீண்ட அனுபவமும் உள்ள ஒருவருக்கு தனியார் தகவல் தொழில்நுட்பதுறையில் வருட சம்பளமாக 25 இலட்சங்கள் வரை வரும். வரிகள், பிடித்தம் போக 120,000 வரை வரும் மாதத்திற்கு.

முன்னர் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை இந்த நண்பர் கூறிவந்தார், இந்தியாவில் உள்ள ஒரு சிறுபான்மை மதத்தினை சேர்ந்தவர், அங்குள்ள தனது சொத்துக்களை எல்லாம் விற்றுவிட போவதாக கூறினவர், தற்போது போய் தனது வீட்டை விற்று தனது நண்பனின் பேரில் ஒரு விவசாய நிலம் ஒன்றினை வாங்கி விட்டுள்ளார், வெளிநாட்டினர் விவசாய நிலம் வாங்க முடியாதாம், பின்னர் அதனை சாதாரண நிலமாக மாற்றிய பின்னர் தனது பெயரிற்கு மாற்ற உள்ளார்.

முன்னர் போல இந்திய எதிர்ப்பு காட்டுவதில்லை, பிற்காலத்தில் அவர் இந்தியாவில் சென்று தங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என கருதுகிறேன். .

பொதுவாக இந்தியர்களும், இலங்கையர்களும் தமது நாட்டினை பற்றி மிகைப்பட கூறுவது வழமைதான், முன்னர் ஒரு சிங்கள பெண்மணி இதே போல பீத்திக்கொண்டிருந்த போது கடுப்பான அவுஸ்ரேலிய பெண்மணி அவரிடம் கேட்டார், பின்னர் எதற்காக இங்கே வந்தாய் என.

இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, vasee said:

பொதுவாக இந்தியர்களும், இலங்கையர்களும் தமது நாட்டினை பற்றி மிகைப்பட கூறுவது வழமைதான், முன்னர் ஒரு சிங்கள பெண்மணி இதே போல பீத்திக்கொண்டிருந்த போது கடுப்பான அவுஸ்ரேலிய பெண்மணி அவரிடம் கேட்டார், பின்னர் எதற்காக இங்கே வந்தாய்

நான் அவுஸ் வந்த காலத்தில் ஒரு இந்தியரும் வந்தார். தங்கள் நாட்டில் தபால் சேவை அவுஸை விடவும் எவ்வளவோ திறம் எண்டார்.

பிறகு கொஞ்ச நாள் போக தகப்பனுக்கு ஒரு rayban sunglass வாங்கி அனுப்பினார். இரண்டு கிழமையாகியும் அது தகப்பனுக்குப் போய்ச் சேரவில்லை.

ஏன் உங்கள் தபால் சேவை திறம் எண்டு சொன்னீங்கள் என்று கேட்டேன்.

தபால் காறன் Ray ban புதுசாப் போட்டுக் கொண்டு திரியிறான் எண்டு தகப்பன் சொன்னதாகச் சொன்னார்.

இப்பிடித் தான் இந்தியன் பெருமைகள் அனேகமாக முடியும்…!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

இந்தியாவில் வடக்கில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினையும், இலங்கையில் தெற்கில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினையும் இருக்கின்றது.

சிங்களவர்கள் தங்களை ஆரியர்கள் என்று கூறுகிறார்கள், அதனால் வட இந்தியருக்கு உள்ள அதே பிரச்சினை சிங்களவர்களுக்கும் இருக்கிறதோ தெரியவில்லை.

இந்தியாவில் ஒரு நண்பர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது, எந்த இடம் என கேட்டார் வைத்தியசாலை ஊழியர், அதற்கு இலங்கை என கூற, இலங்கை கிரிக்கட் அணியினர் போல அனைத்து இலங்கையர்களும் அரக்கர்கள் போல் இருப்பார்கள் என நினைத்தேன் என கூறினார் (இது நடந்தது 90 களின் பிற்பகுதி)

இந்தியர்களுக்கு இதிகாச புராணங்கள், இலங்கையர்களுக்கு மகாவம்சம், நிறைய ஒற்றுமைகள் இருக்கு.😁

ஆனால் இந்த வெளிநாட்டு பயணங்கள் இந்திய, இலங்கையில் இருந்த அடிமட்ட மக்களின் சமூக வாழ்க்கை தரத்தினை உயர்த்தியுள்ளது, இது சமூக ரீதியான நல்ல மாற்றம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-221-750x375.jpg

நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் அமிர்தசரஸில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!

சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களைக் கொண்ட மூன்றாவது குழுவை ஏற்றிச் சென்ற அமெரிக்க இரணுவ விமானம் ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அமிர்தசரஸில் தரையிறங்கியது.

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான C-17 Globemaster விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 10 நாட்களில் இதுபோன்ற மூன்றாவது வருகை இதுவாகும்.

நாடு கடத்தப்பட்ட 112 பேரில் 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத், 31 பேர் பஞ்சாப், 2 பேர் உத்தரபிரதேசம் மற்றும் தலா ஒருவர் உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

சட்டவிரோதமாக குடியேறிய சிலரின் குடும்பத்தினர் அவர்களை வரவேற்பதற்காக அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்திற்கு இதன்போது வருகை தந்திருந்தனர்.

குடியேற்றம், சரிபார்ப்பு மற்றும் பின்னணி சோதனைகள் உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடித்த பின்னர், நாடு கடத்தப்பட்டவர்களை அவர்களுக்கு சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது.

சனிக்கிழமை இரவு, 116 சட்டவிரோத இந்தியக் குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இரண்டாவது அமெரிக்க இராணுவ விமானம், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது

இந்த 116 நாடுகடத்தப்பட்டவர்களில், 65 பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள், 33 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், 8 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், தலா 2 பேர் உத்தரப் பிரதேசம், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

மேலும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து தலா ஒருவரும் அடங்குவர்.

மூன்று விமானங்களிலும் இதுவரை மொத்தம் 332 சட்டவிரோத இந்திய குடியேறிகளை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Athavan News
No image preview

நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் அமிர்தசரஸில் தரையிறங்...

சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களைக் கொண்ட மூன்றாவது குழுவை ஏற்றிச் சென்ற அமெரிக்க இரணுவ விமானம் ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அமிர்தசரஸில் தரையிறங்கிய...
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த நாடு கடத்தலிலும் கை கால்களுக்கு விலங்குகள் இடப்பட்டதா என்புதை தெளிவாக சொல்லவில்லை.

முன்பு ஆபிரிக்கர்களை விலங்கிட்டுக் கொண்டுவந்தார்கள். தற்போது இந்தியர்களை விமானத்தில் அனுப்புகிறார்கள், இது பெருமை அல்லவா! 😁

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

அமெரிக்கவில ரக்ஸிக்கும், வினியோக வாகனங்களுக்கும் சாரதி தட்டுப் பாடு கெதில வரப்போகுது…!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இந்த kamala harris ஆல் வந்த வினை .😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

அமெரிக்கவில ரக்ஸிக்கும், வினியோக வாகனங்களுக்கும் சாரதி தட்டுப் பாடு கெதில வரப்போகுது…!

480198997_10229173183220511_433861457432

மோடி... அமெரிக்காவில், "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்கள் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் என்னவென்றால் 'உலகமே ஒரு குடும்பம்' என்பதுதான். நாங்கள் முழு உலகத்தையும் ஒரே குடும்பமாகக் கருதுகிறோம்." என்று சொல்லியும் கேட்காமல்... இந்தியரை பிடித்து, காலில் விலங்கு போட்டு அனுப்புகிறார்கள் என்றால்... அந்த மனுசனை கால் தூசிக்கும் மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம். 😃

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, vasee said:

அண்மையில் இந்தியாவிற்கு சென்று திரும்பிய எனது இந்திய நண்பர் கூறினார், இந்தியாவில் உள்ளவர்களின் வாழ்க்கை வெளிநாட்டில் உள்ளவர்களை விட சிறப்பாக உள்ளதென, அவரது நண்பர ஓய்வு பெற்றுவிட்டதாகவும் மாதம் $3000 அவுஸ்ரேலிய டொலர் ஓய்வூதியம் பெறுவதாக கூறினார் (நம்புவது கடினமாக இருந்தது).

இது சுத்த‌ப் பொய் அண்ணா...........அவ‌ள‌வு காசை க‌வுர்ம‌ன்ட் கொடுக்காது................அர‌சாங்க‌ பாட‌சாலையில் ப‌டிப்பிக்கும் ஆசிரிய‌ர்க‌ளுக்கே ஒழுங்காய் ச‌ம்ப‌ள‌ம் கொடுக்கின‌ம் இல்லை இதில‌ 3000 ஆயிர‌ம் அவுஸ் டொல‌ர் என்ப‌து ப‌ச்சை பொய்.............இந்தியாவில் பென்ச‌ன் காசு விர‌ல் விட்டு என்ன‌க் கூடியவை...............என்ர‌ ந‌ண்ப‌ன் இஞ்சினிய‌ர் அவ‌ன் எடுக்கும் ச‌ம்ப‌ள‌ம் அவுஸ் டொல‌ருக்கு 1000 டொல‌ருக்கு கிட்ட‌...............

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

நான் அவுஸ் வந்த காலத்தில் ஒரு இந்தியரும் வந்தார். தங்கள் நாட்டில் தபால் சேவை அவுஸை விடவும் எவ்வளவோ திறம் எண்டார்.

எமது தபால்சேவையை எண்ணியும் பெருமைப் படணும்.

இன்னமும் பெயர்களை வைத்தே தபால்களை விநியோகிக்கிறார்கள்.

வழமையாக வருபவர் ஒருநாள் திடீரென வரவில்லை என்றால் புதிதாக வருபவர் பாடு ரொம்ப கஸ்டமாக இருக்கும்.

5 hours ago, Paanch said:

முன்பு ஆபிரிக்கர்களை விலங்கிட்டுக் கொண்டுவந்தார்கள். தற்போது இந்தியர்களை விமானத்தில் அனுப்புகிறார்கள், இது பெருமை அல்லவா! 😁

அப்போது விலங்கை அவர்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்டார்கள்.

ஆட்கள் எடுக்கும் இடத்துக்கு சென்று இவர்களாகவே இந்தா உதைத்து பார் அடித்து பார் என்று நிற்பார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எமது தபால்சேவையை எண்ணியும் பெருமைப் படணும்.

இன்னமும் பெயர்களை வைத்தே தபால்களை விநியோகிக்கிறார்கள்.

இந்த விடையத்தில் யேர்மானியரைப் போற்றவேண்டும். ஒருமுறை நான்வந்த புதுதில் என் பெயரிட்டு யேர்மனி என்ற முகவரிமட்டும் இட்ட என் நண்பர் ஒருவரின் கடிதம் என்னை வந்தடைந்தது.😁

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

இது சுத்த‌ப் பொய் அண்ணா...........அவ‌ள‌வு காசை க‌வுர்ம‌ன்ட் கொடுக்காது................அர‌சாங்க‌ பாட‌சாலையில் ப‌டிப்பிக்கும் ஆசிரிய‌ர்க‌ளுக்கே ஒழுங்காய் ச‌ம்ப‌ள‌ம் கொடுக்கின‌ம் இல்லை இதில‌ 3000 ஆயிர‌ம் அவுஸ் டொல‌ர் என்ப‌து ப‌ச்சை பொய்.............இந்தியாவில் பென்ச‌ன் காசு விர‌ல் விட்டு என்ன‌க் கூடியவை...............என்ர‌ ந‌ண்ப‌ன் இஞ்சினிய‌ர் அவ‌ன் எடுக்கும் ச‌ம்ப‌ள‌ம் அவுஸ் டொல‌ருக்கு 1000 டொல‌ருக்கு கிட்ட‌...............

எனக்கு இந்தியா நிலமை தெரியவில்லை, சில வேளி மிகைப்படுத்தி கூறியிருப்பார், ஆனால் 3ஆம் உலக நாடுகளில் ஏழைகள் மிக ஏழைகளாகவும் பணக்காரர்கள் அதிக பணம் படைத்தவர்களாக இருக்கின்றார்கள், இவ்வாறான ஏற்ற தாழ்வு இந்தியாவில் மிக அதிகம், அவரது நண்பரின் வருமானத்தில் சிறந்த வாழ்க்கை தரத்தினை கொண்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

அவ‌ர் பெரிய‌ விஸ்னேஸ் ஆளை இருந்தால் ஊதிய‌ம் வேறு மாதிரி கூட‌ இருக்க‌லாம்

சாதார‌ன‌ கூலி தொழில் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு பென்ச‌ன் காசு மிக‌ குறைவு அண்ணா...............

பெரிய‌ ஜ‌பிஎஸ் மார் கூட‌ 3000 அவுஸ் டொல‌ர் எடுக்க‌ மாட்டின‌ம் பென்ச‌ன் போன‌ பிற‌க்கு.................

இந்தியாவில் ப‌ண‌க்கார‌ர்க‌ளை விட‌ பிச்சை கார‌ர்க‌ள் தான் அதிக‌ம்

டென்மார்க்கில் இள‌ம் பென்ச‌ன் ஆட்க‌ளுக்கு 3024 அவுஸ் டொட‌லர்..............சில‌ருக்கு 4000 அவுஸ் டொல‌ரும் கொடுக்கின‌ம்

66வ‌ய‌துக்கு பிற‌க்கு இந்த‌ நாட்டு பென்ச‌ன் காசு மிக‌ மிக‌ குறைவு......................

  • கருத்துக்கள உறவுகள்

20 hours ago, ரசோதரன் said:

மாதம் $3000

10 hours ago, வீரப் பையன்26 said:

மாதம் $3000

ரசோதரன் அண்ண, வீரபையன் உறவே

ஓய்வூதியமே இந்தியாவில் 3000 டொலர் என்றால் மாதாந்த ஊதியம் எவ்வளவு உயர்வாக இருக்க வேண்டும். ஆன்மிகம் நிறைந்த நாடு அல்லவா கடவுள் அள்ளி அள்ளி சம்பளம் வழங்குகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ரசோதரன் அண்ண, வீரபையன் உறவே

ஓய்வூதியமே இந்தியாவில் 3000 டொலர் என்றால் மாதாந்த ஊதியம் எவ்வளவு உயர்வாக இருக்க வேண்டும். ஆன்மிகம் நிறைந்த நாடு அல்லவா கடவுள் அள்ளி அள்ளி சம்பளம் வழங்குகின்றார்.

🤣...............

நூறு நாட்கள் வேலை திட்டத்தில் வேலையும் கொடுக்கின்றார்கள் இல்லை, இதுவரை செய்த வேலைகளுக்கு சம்பளமும் கொடுக்கவில்லை என்று போன வாரமும் தமிழ்நாட்டில் ஒரு போராட்டம் நடந்தது....................

அங்கு, வசீ சொல்லியிருப்பது போலவே, மேட்டுக்குடி மக்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி மிக அதிகம்.................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.