Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்?

இதை அடிக்கடி சொல்லிக் கொள்வது வேறு யாருமல்ல.என்னைப் பெற்ற தாய் தான்.சில இடங்களில் எனக்கு முன்னாலேயே சொல்ல கொஞ்சம் சங்கடமாகவே இருக்கும்.

அப்பா பெரிய வாத்தியார்.அம்மா ஆசிரியை.ஒரே ஒரு அண்ணன்.எனக்கு இரண்டு வயது மூத்தவன்.அண்ணனுடன் இப்போதும் வா போ என்று தான் பேசுவேன்.என்னடா அண்ணனை ஒருமையில் பேசுகிறானே என்று எண்ணினால் அதற்கு விடை சொல்லத் தெரியவில்லை.இப்போதும் பிள்ளைகள் பேரப் பிள்ளைகளை ஒருமையில்த் தான் அழைப்பேன்.

கிராமப் புறங்களில் எந்த கொண்டாட்டமாக இருந்தாலென்ன துக்க வீடாக இருந்தாலென்ன இப்போது போல மண்டபத்துடன் குசலம் விசாரித்துவிட்டுப் போவதில்லை.

கொண்டாட்டம் என்றால் 4-5 நாட்களுக்கு முதலே ஊர் பெண்கள் கூடி தூள் இடிப்பது மாவு இடிப்பது பலகார சூடு என்று பரபரப்பாக இருக்கும்.

ஆண்களுக்கு காணிகள் துப்பரவாக்கிறதில் இருந்து பந்தல் போடுவது யாரிடம் வாழை குலையோடு இருக்கிறது என்று அதுகளைக் கவனிப்பார்கள்.

சிறியவர்களுக்கு யார் வீட்டில் என்னென்ன சாமான்கள் எடுக்க வேண்டும்.எடுக்கிற சாமான்களில் பெயர் இல்லாவிட்டால் பெயர் போட்டு எடுத்து வரவேண்டும்.

எத்தனை மணிக்கு வந்து கூட்டிப் போக வேண்டும் என்று ஏதாவது ஒருநேரம் அம்மா சொல்லியிருப்பா.

அண்ணன் மூத்தவன் ஆனதாலோ என்னவோ இரவு என்றால் தனியே திரியமாட்டான்.நான் தான் ராஜா.இதுவும் எனக்கு சுற்றுவதற்கு வசதியாக போய்விட்டது.

கூட்டிவரப் போனாலே என்னடா உங்களைப் பற்றித் தான் கொம்மா புளுகிக் கொண்டிருக்கிறா என்பார்கள்.

அப்படி இருந்த அம்மா கடைசியில் ....................

1985இல் அண்ணன் குடும்பத்துடன் அவுஸ்திரேலியா போய் விட்டான்.

அப்பாவும் 89இல் காலமாகிவிட்டார்.

எனக்கும் வெளிநாடு போக விருப்பம் இல்லாவிட்டாலும் கட்டாயம் போகவேண்டிய சூழ்நிலை.

1990 களில் நானும் அமெரிக்கா வந்து சேர்ந்து விட்டேன்.

1992 இல் இரு பிள்ளைகளோடு மனைவிக்கும் ஸ்பொன்சர் செய்து சித்திரை மாதம் அவர்களும் இங்கு வந்து சேர்ந்து விட்டனர்.

அம்மா வீட்டில் தனியாளாக தெரிந்தாலும் பார்த்துக் கொள்ள நிறைய பேர் இருந்தார்கள்.

1993 இல் நல்ல சுகமாக இருந்தவ அன்று எனது மனைவிவீடு(நடைதூரம்)பக்கத்தில் கோவில் இன்னும் ஓரிரு உறவினர்கள் வீட்டுக்கும் போய்வந்து படுத்தவ படுத்தது தான்.

மனைவியின் தம்பி ஒருவன் எந்த நாளும் போய் படுப்பான்.வேண்டிதெல்லாம் செய்வான்.

இரவு 2 மணிபோல விக்கல் சத்தம் கேட்டது.ஆள் முடிந்தது என்றான்.

அடுத்தநாள்த் தான் எனக்கு ரெட்குறோஸ் மூலம் அறிவித்தார்கள்.

இரண்டு ஆண்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று தைரியமாகவும் திமிராகவும் பேசிய அம்மாவுக்கு கொள்ளிவைக்க பிள்ளை இல்லை.

அண்ணனோ நானோ போக முடியவில்லை.

இன்றுவரை இது ஒரு பெரும் தண்டனையாகவே எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைவரக்குடாது எண்டுதான் நான் ஊரில் இருக்கும் முடிவை எடுத்திருப்பது..

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

இரண்டு ஆண்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று தைரியமாகவும் திமிராகவும் பேசிய அம்மாவுக்கு கொள்ளிவைக்க பிள்ளை இல்லை.

அண்ணனோ நானோ போக முடியவில்லை.

இன்றுவரை இது ஒரு பெரும் தண்டனையாகவே எண்ணுகிறேன்.

உங்களின் துயரம் புரிகின்றது, அண்ணா, ஆனால் இது ஒரு தண்டனை இல்லை............... அம்மாவும் அன்றைய நிலையில் நீங்கள் அங்கே வரக்கூடாது என்றே நினைத்திருப்பார்...............

'Don't be hard on yourself..................' என்று சொல்லுவார்கள், அண்ணா........... நாங்கள் விடும் தவறுகளைக் கூட நாங்களே மன்னித்து கொள்ளவேண்டும் என்ற ஒரு அர்த்தத்தில், அங்கிருந்து முன்செல்ல வேண்டும் என்ற பொருளில். இதில் உங்களின் தவறு ஏதும் இல்லை, அண்ணா.............🙏.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

இரண்டு ஆண்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று தைரியமாகவும் திமிராகவும் பேசிய அம்மாவுக்கு கொள்ளிவைக்க பிள்ளை இல்லை.

அண்ணனோ நானோ போக முடியவில்லை.

வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்கள். உங்களுக்கு நடந்த சம்பவம் போல் புலம்பெயர்ந்த பலருக்கு நடந்திருக்கின்றது. எனக்கும் நடந்திருக்கின்றது.அது என் வாழ்வில் தவற விட்ட கடமைகளில் ஒன்று. உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி.🙏

  • கருத்துக்கள உறவுகள்

கவலையை விடுங்கள் பிரியன் அண்ணா. பெற்றோரின் செத்தவீட்டிக்கு போக முடிந்தும் போகாதவர்கள், பணம் அனுப்பி விட்டு இருந்தவர்கள் பலரை தெரியும்.

போரின் தாக்கம் பலரை பல முனையில் தாக்கி உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த நிலைவரக்குடாது எண்டுதான் நான் ஊரில் இருக்கும் முடிவை எடுத்திருப்பது..

ஓணாண்டி உங்கள் முடிவு நல்ல முடிவு.

நானும் அமெரிக்கா போகும்போது எவ்வளவு சீக்கிரம் திரும்ப வர இயலுமோ எவ்வளவு சீக்கிரம் ஊர் திரும்ப வேண்டும் என்றே எண்ணினேன்.

உங்களுக்கு காலூன்றக் கூடியளவு போதிய கால அவகாசம் கிடைத்தது.

நான் வந்து இரண்டே வருடம்.hயணம் செய்யக் கூடிய நிலையிலும் இருக்கவில்லை.

என்ன நடந்ததென்று முழுமையாக அறியவே பல நாட்களாகி விட்டது.

13 hours ago, ரசோதரன் said:

உங்களின் துயரம் புரிகின்றது, அண்ணா, ஆனால் இது ஒரு தண்டனை இல்லை............... அம்மாவும் அன்றைய நிலையில் நீங்கள் அங்கே வரக்கூடாது என்றே நினைத்திருப்பார்...............

'Don't be hard on yourself..................' என்று சொல்லுவார்கள், அண்ணா........... நாங்கள் விடும் தவறுகளைக் கூட நாங்களே மன்னித்து கொள்ளவேண்டும் என்ற ஒரு அர்த்தத்தில், அங்கிருந்து முன்செல்ல வேண்டும் என்ற பொருளில். இதில் உங்களின் தவறு ஏதும் இல்லை, அண்ணா.............🙏.

ரசோ அம்மாவின் இழப்பிற்குப் பின்பு ஒரு படமோ நாடகமோ எந்த ஒரு சோகக் கட்டம் வந்தாலும் இப்போது வரை கண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும்.

குடும்பமாக இருந்து படம் பார்த்தால் திரையில் யாராவது அழுதால் மனைவி பிள்ளைகள் உடனே என்னைத் தான் திரும்பி பார்ப்பார்கள்.

அந்தளவுக்கு ஒரு அழுகுனியாகிப் போனேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்கள். உங்களுக்கு நடந்த சம்பவம் போல் புலம்பெயர்ந்த பலருக்கு நடந்திருக்கின்றது. எனக்கும் நடந்திருக்கின்றது.அது என் வாழ்வில் தவற விட்ட கடமைகளில் ஒன்று. உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி.🙏

உண்மை தான் குமாரசாமி தவறவிடும் எந்த சந்தர்ப்பமும் திரும்ப கிடைக்கப் போவதில்லை.

2009 முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் சிறிது மனதை தேற்றக் கூடியவாறு உள்ளது.

1 hour ago, nunavilan said:

கவலையை விடுங்கள் பிரியன் அண்ணா. பெற்றோரின் செத்தவீட்டிக்கு போக முடிந்தும் போகாதவர்கள், பணம் அனுப்பி விட்டு இருந்தவர்கள் பலரை தெரியும்.

போரின் தாக்கம் பலரை பல முனையில் தாக்கி உள்ளது.

போரின் தாக்கம் என்றாலும் சிலவேளை அதையும் ஏற்க மறுக்கிறது.

பெற்றோர்கள் இருந்த காலத்தில்

நீங்கள் இறந்த பின்பு எந்த கொண்டாட்டமும் இருக்காது.இருக்கும் போதே சந்தோசமாக இருங்கள்.ஏதாவது செய்ய வேண்டுமென்றால் சொல்லுங்கள் என்று தேவைகள் வரும்போது சொல்லிக் கொள்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அம்மாவும் 2 ஆண் பிள்ளைகள் என்று மகிழ்வாய் இருந்தவ, நாங்கள் தசைபலவீனமாதல்(Muscular Dystrophy) எனும் நோயால் பாதிக்கப்பட்டதால் ஆறாத துயரமடைந்துள்ளார். எனினும் நாங்கள் அம்மாவிற்கு ஆறுதலாக இருப்பதோடு அவவின் பொழுதுபோக்க யுரியூப் காணொளிகளை கணனியில் போட்டுக் காட்டுவோம். அண்மையில் வழுக்கி விழுந்து கையில் வெடிப்பு ஏற்பட்டு தற்போது மெதுவாக நலமாகி வருகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

ஏராளன் அம்மாவுக்கு பக்க பலமாக இருங்கள்.

அம்மாவின் கவலையும் நியாயமானதே.

காலத்தின் கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்?

இன்றுவரை இது ஒரு பெரும் தண்டனையாகவே எண்ணுகிறேன்.

எனக்கும் இதேதான் நடந்தது... இன்றுவரை வெறுமை என்னை ஆட்டிப் படைக்கிறது...தேற்றிக்கொள்ளுங்கள் பிரியன்....யுத்தத்தால் எம்மைப்போல் பலர் இந்த நிலையில் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த பலரது வாழ்க்கை இப்படித்தான். உயிர் உள்ள வரை மறக்க முடியாத சோகம். அம்மா இல்லை என்பது ஏற்கமுடியாது இன்னும் உங்கள் எண்ணத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். எல்லாம் காலம் செய்த கோலம். ஒவ்வொரு தமிழனுக்கும் இழப்பு உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

இன்றுவரை இது ஒரு பெரும் தண்டனையாகவே எண்ணுகிறேன்.

எனக்கும் இதேதான் நடந்தது... இன்றுவரை வெறுமை என்னை ஆட்டிப் படைக்கிறது...தேற்றிக்கொள்ளுங்கள் பிரியன்....யுத்தத்தால் எம்மைப்போல் பலர் இந்த நிலையில் இருக்கின்றார்கள்

எனக்கும் சாதாரண நேரங்களில் எதுவும் வித்தியாசமே தெரியாது.

படங்கள் ஏதாவது பார்க்கும் போதுதான் பிரச்சனைகள்.

வீட்டில இதைப்பற்றி அலட்டிக் கொள்வதே இல்லை.

7 hours ago, நிலாமதி said:

புலம் பெயர்ந்த பலரது வாழ்க்கை இப்படித்தான். உயிர் உள்ள வரை மறக்க முடியாத சோகம். அம்மா இல்லை என்பது ஏற்கமுடியாது இன்னும் உங்கள் எண்ணத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். எல்லாம் காலம் செய்த கோலம். ஒவ்வொரு தமிழனுக்கும் இழப்பு உண்டு.

நீங்கள் சொல்வது போலவே நானும் எண்ணுவதுண்டு.

ஆனாலும் சந்தர்ப்பங்கள் அம்மா எண்ண வைத்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் யாரும் யாரையும் தேற்ற முடியாதுதான் .......... ஆயினும் நாங்கள் எங்கள் குடும்பம் என்று வாழவும் ஓடவேண்டி இருக்கிறதே , ஆகவே நாம்தான் எம்மைத் தேற்றிக்கொண்டு வாழ வேண்டும் . ...... எதோ எனது தாயாரும் மாமியாரும் இங்கு என்கூடவே இருந்ததால் அவர்களை நல்லபடியாக அனுப்பி வைக்க முடிந்தது . .......!

  • 1 month later...

கவலை வேண்டாம். நீங்கள் குடும்பத்துடன் நல்ல நிலையில் உள்ளதையிட்டு உங்கள் அம்மா மகிழ்வுடனேயே சென்றிருப்பார்.

எனது அப்பா அவர் குடும்பத்தில் ஒரே ஒரு பிள்ளை. அவரது தாயும் தந்தையும் இறக்கும் போதும் அருகில் இல்லை கொள்ளி வைக்கவும் இல்லை. இப்படி எத்தைனையோ குடும்பங்கள் உள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2025 at 05:00, suvy said:

இந்த விடயத்தில் யாரும் யாரையும் தேற்ற முடியாதுதான் .......... ஆயினும் நாங்கள் எங்கள் குடும்பம் என்று வாழவும் ஓடவேண்டி இருக்கிறதே , ஆகவே நாம்தான் எம்மைத் தேற்றிக்கொண்டு வாழ வேண்டும் . ...... எதோ எனது தாயாரும் மாமியாரும் இங்கு என்கூடவே இருந்ததால் அவர்களை நல்லபடியாக அனுப்பி வைக்க முடிந்தது . .......!

1 hour ago, இணையவன் said:

கவலை வேண்டாம். நீங்கள் குடும்பத்துடன் நல்ல நிலையில் உள்ளதையிட்டு உங்கள் அம்மா மகிழ்வுடனேயே சென்றிருப்பார்.

எனது அப்பா அவர் குடும்பத்தில் ஒரே ஒரு பிள்ளை. அவரது தாயும் தந்தையும் இறக்கும் போதும் அருகில் இல்லை கொள்ளி வைக்கவும் இல்லை. இப்படி எத்தைனையோ குடும்பங்கள் உள்ளன.

நம்பிக்கைக்கு பாத்திரமாக நடக்க முடியவில்லை என்ற வருத்தம் தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.