Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இருந்து நவீன நாஸிக்களான வலதுசாரிகளால் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..? இது இன்று தேர்தல் நடக்கப்போகும் ஜேர்மனுக்கு மட்டுமல்ல வாற வருடம் தேர்தல் நடக்கப்போகும் பிரான்ஸ் மற்றும் அடுத்து தேர்தலைகளை எதிர்கொள்ளவிருக்கும் பெரும்பாலானா ஜரோப்பிய நாடுகளுக்கும் பொருந்தும்.. அப்படி ஒரு நிலமை வந்தால் உலகமெங்கும் அலைந்த யூதர்கள்போல் புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்க இங்க என்று மறுபடியும் இன்னொரு புது நாட்டுக்கு அலைவதை விட்டு உடனும் நேராக தாய்மண்ணுக்கு வந்து புல்லுசெருக்கி வீடுவாசலை துப்புரவுசெய்து புள்ளகுட்டி பெத்து தமிழர்களின் எண்ணிக்கையை தாயகத்தில் அதிகரித்து உங்கள் பிரதேசங்களை கட்டி எழுப்ப உதவுவது நல்லது.. செத்தாலும் தன் மண்ணில் சாவதே சுதந்திரம்.. சரி இப்போ ஜேர்மன் நிலமையை பார்ப்போம்..👇

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

👆உடான்ஸ்சாமியாரின் - நிழல் நிஜமாகிறது👇

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி 🖕 இன்னும் பார்க்கவில்லை .செய்திகள் தெரிந்தவர்கள் சொன்னதன் படி இனவெறி AFD வெல்லபோவது இல்லை. நல்ல கட்சிகளாள சோசல் ஜனநாயக கடசி பசுமை கட்சிகளை விட பழமைவாத கட்சி கருத்து கணிப்புக்களில் முன்னணியில் நிற்பதாக தெரிகின்றது. ஆனாலும் பழமைவாத கட்சி உக்ரேனை ஆதரிக்க வேண்டும் ஐரோப்பாவை பலப்படுத்த வேண்டும் செலென்ஸ்கியை பற்றி டரம் உளறினதை கண்டித்தல் என்ற நல்லவற்றை கொண்டுள்ளன

இனவெறி AFD தலைவி தனது மனைவியுடன் வாழ்ந்து வருவது சுவிஸ்லாந்து நாட்டில். ஆனால் அரசியல் செய்து அதிகாரம் செய்து ஆளவிரும்புவது யேர்மன் நாட்டை. இது தமிழ் தமிழ் என்று அரசியல் செய்து கொண்டு மகனை ஆங்கில மூலம் கல்வி கற்பிக்கும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் செயல்கள் போன்றது. இவா டிரம்பை தீவிரமாக ஆதரிக்கின்றா ஆனால் டிரம்போ ஒரு பாலினத்து ஆட்களுக்கு எதிரரானவர். இப்படி சுத்துமாத்துக்கள் உள்ளன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியின் உண்மையான அரசியல் தெரியாத ஒருவரின் காணொளி தயாரிப்பு என நினைக்கின்றேன். இதன் பின் புலத்தில் உள்ளவர்களையும் ஊகிக்க முடிகின்றது.

ஜெர்மனிக்கு அகதி அரசியல் நெருக்கடி இருப்பது உண்மைதான். ஆனால் வெளிநாட்டவர் பிரச்சனை அல்ல.CDU,Afd கட்சிகள் அகதிகளை பற்றித்தான் பேசு பொருளாக எடுத்துள்ளார்கள்.வெளிநாட்டு வேலையாட்களைப்பற்றி அல்ல....அகதிகளாக வந்து வேலை வெட்டிக்கு போகாமல் சோசல் காசு எடுத்துக்கொண்டு பிள்ளை குட்டிகளை டசின் கணக்கில் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் கவனிக்கவும்.

இந்த காணொளியில் பேட்டி கொடுக்கும் பெண் CDU,Afd கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் எனும் தொனியில் ஏதோவெல்லாம் கூறுகின்றார். ஆனால் எந்த கட்சிக்கு வாக்களியுங்கள் என சொல்லவில்லை.CDU கட்சிதான் என்றுமில்லதவாறு அகதிகளை உள்வாங்கியவர்கள்.அதனாலேயே ஜேர்மனிக்குள் அதிக பிரச்சனைகள் வந்தது.சிறுமிகள் பல்லியல் வன்கொடுமை,கத்திக்குத்துக்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை ஏன்?அகதிகள் பற்றி ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் வந்தது பற்றியும் இவர் ஒரு வார்த்தை கூறவில்லை.அது பற்றி அலசவுமில்லை. மொட்டையாக வெளிநாட்டவர்களை அடிக்கப்போகிறார்கள். துரத்தப்போகின்றார்கள் என ஏதோவெல்லாம் சொல்லி தான் சார்ந்த கட்சி பிரச்சாரம் செய்கின்றார்.அவ்வளவுதான்.

80களில் SPD கட்சிதான் ஈவு இரக்கமில்லாமல் அன்றைய அகதிகளையும் அகதி தஞ்சம் கோரிய எம்மவர்களையும் இரவோடு இரவாக திருப்பி அனுப்பியவர்கள் இதெல்லாம் அந்த காணொளி தயாரித்தவர்களுக்கு தெரியுமா?படிக்கவும் விடாமல்,வேலை செய்யவும் விடாமல் இழுத்தடித்தவர்கள் எந்த கட்சியினர் என்றாவது இவர்களுக்கு தெரியுமா?

தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம்.

ஜேர்மனிக்கு வந்து அவர்கள் மண்ணில் இராஜ கோபுரம் கட்டி பந்தா காட்டும் நீங்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் புத்த விகாரை பற்றி கதைக்க அருகதை அற்றவர்கள்.

ஊர் திருவிழாக்களில் பக்கத்து ஊர்க்காரன் வந்து பெண்களுடன் சேட்டை விட்டால் உயிருடன் விட்டுவைக்காத எமது சமூகம்.....👈

ஜேர்மனிக்கு அகதியாக வந்து பெண்கள்,சிறுமிகள் என பாரபட்சம் இல்லாமல் பாலியல் கொடுமை செய்தும் கொலை செய்தும்,அப்பாவி மக்களை கத்தியால் குத்தி கொலை செய்தும்......பொது வீதி விழாக்களில் மக்கள் கூட்டங்கள் மீது வாகனங்களால் மோதி கொலை செய்வதையும் ஒரு ஜேர்மன்காரனை பார்த்து சும்மா இரு என சொல்ல வருகின்றார்களா? இதே மாதிரி உங்கள் ஊர்களில் நடந்தால் வாய் மூடிக்கொண்டு சும்மா இருப்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

காணொளியை நானும் பார்க்கவில்லை.

இப்போ ஓணாண்டி இணைக்கும் பெரும்பாலான காணொளிகள் இப்படித்தான் இருக்கிறது - ஒரு அரிசி அளவு உண்மையை வைத்து கொண்டு, ஒரு பானை அளவு தவறான தவகவல்களை (misinformation) பொங்கிவிடுகிறன. செய்தி அலசல் என்ற பெயரில் உலாவும் பிரச்சார வீடியோக்கள்.

ஜேர்மனியில் இப்போ இருக்கும் சட்டபூர்வ வெளிநாட்டார் பற்றிய போக்கில் இந்த தேர்தல் ஒரு திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும் என நானும் நம்பவில்லை.

ஆனால் இது ஒரு வழுக்கு பாறை.

மஸ்கின், டிரெம்பின் ஆளுமை இன்னும் நாலு வருடங்கள் மட்டும் அல்ல. டிரம்ப் 3 முறைக்கு தயாராகிறார் என்றே நான் நினைக்கிறேன். அப்படி இல்லை எனிலும், இப்போதைக்கு குடியரசு கட்சி இவர்களிடம் இருந்து விடுபட வாய்ப்பில்லை.

இது AfD யை மேலும் மேலும் வலுப்படுத்தும்.

அப்படி ஒரு நிலைவரின் - இப்போ சட்டபூர்வமாக இருப்போரும் ஜேர்மனியை விட்டு வெளியேற்றப்படலாம்.

(இது சம்பந்தமாக ஜேர்மனியின் மக்கள் சபை, மாநிலங்கள் சபை, அரசியல் சட்ட பாதுகாப்புகள் பற்றியும் இவை அனைத்ததியும் எப்படி தூக்கி விடலாம் என்பது பற்றியும் இன்னொரு திரியில் கந்தையா அண்ணையோடு கதைத்திருந்தோம்).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியின் பெண்கிட்லர்…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

காணொளியை நானும் பார்க்கவில்லை.

இப்போ ஓணாண்டி இணைக்கும் பெரும்பாலான காணொளிகள் இப்படித்தான் இருக்கிறது - ஒரு அரிசி அளவு உண்மையை வைத்து கொண்டு, ஒரு பானை அளவு தவறான தவகவல்களை (misinformation) பொங்கிவிடுகிறன. செய்தி அலசல் என்ற பெயரில் உலாவும் பிரச்சார வீடியோக்கள்.

நீங்கள் நாங்கள் எழுதும் கருத்துக்கள் போலத்தான் வீடியோக்களும்.. இதுகருத்துக்களம்.. கருத்தெழுத, பேச, வீடியோ மூலம், படம்மூலம் கருத்தை சொல்ல இருக்கும் களம்.. செய்தித்தளங்கள் வேறு இருக்கின்றன.. நீங்கள் பந்தியில் பொங்குவதை அவர்கள் வீடியோவில் பொங்குகிறார்கள்.. அவ்வளவுதான்.. வேணுமென்றால் பொறமைப்படாமல் ஒரு யூரியுப் திறந்து இங்கு பந்தியில் எழுதுவதை பேசிக்கொண்டுவந்து இணையுங்கள்.. யாழை மட்டுமல்ல யாழை பார்க்காதவர்களையும் அது சென்றடையும்..

அவர்களைப்பர்த்து பொறாமைப்படாமல் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.. இளைய தலைமுறையுடன் இணந்து பயணம் செய்ய பழகிக்கொள்ளுங்கள்.. இல்லை என்றால் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டவேண்டியதுதான்..

பொறாமை ஒரு பொல்லாத நோய்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோ இணைப்புக்கு ..

பேசப்பட வேண்டிய விடயம் தான்.

என்னை பொறுத்தவரை நாம் எங்கும் வாழ தகுதியற்ற இனம். நான் யாழில் இணைந்த போதே கீழே பதிந்தது இது தான். ஓடத்தொடங்கியவனுக்கு ஏது நிரந்தர இடம் என்று.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் நாங்கள் எழுதும் கருத்துக்கள் போலத்தான் வீடியோக்களும்.. இதுகருத்துக்களம்.. கருத்தெழுத, பேச, வீடியோ மூலம், படம்மூலம் கருத்தை சொல்ல இருக்கும் களம்.. செய்தித்தளங்கள் வேறு இருக்கின்றன.. நீங்கள் பந்தியில் பொங்குவதை அவர்கள் வீடியோவில் பொங்குகிறார்கள்.. அவ்வளவுதான்.. வேணுமென்றால் பொறமைப்படாமல் ஒரு யூரியுப் திறந்து இங்கு பந்தியில் எழுதுவதை பேசிக்கொண்டுவந்து இணையுங்கள்.. யாழை மட்டுமல்ல யாழை பார்க்காதவர்களையும் அது சென்றடையும்..

அவர்களைப்பர்த்து பொறாமைப்படாமல் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.. இளைய தலைமுறையுடன் இணந்து பயணம் செய்ய பழகிக்கொள்ளுங்கள்.. இல்லை என்றால் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டவேண்டியதுதான்..

பொறாமை ஒரு பொல்லாத நோய்..

  1. கோஷான் ஆகிய நான் எனது கருத்துக்களை செய்தி பகுதியில் தனித் திரி திறந்து பதிகிறேனா? அல்லது எவரும் எங்கோ எழுதிய கருத்துக்களை செய்தி பகுதியில் தனி திரி திறந்து பதிகிறேனா? இல்லை.

  2. இதுதான் நீங்கள் செய்தி பகுதியில் பதியும் வீடியோக்களுக்கும், அதே பகுதியில் ஒரு செய்தியின் கீழ் நான் பதியும் கருத்துக்கும் உள்ள வித்தியாசம்.

  3. நீங்கள் ஒரு செய்திதளத்தின் (ஐபிசி) வீடியோ செய்தி அறிக்கையை அல்லது செய்தி துணுக்கை பதியலாம். தப்பில்லை.

  4. ஆனால் நீங்கள் செய்தி பகுதியில், தனிநபர்களின் கருத்து-வீடியோக்களை பதிகிறீர்கள்.

  5. இவற்றை இணைக்க - செய்தி அலசல், இதர பகுதிகள் உள்ளன. நுணாவிலான் போன்றோர் அங்கேதான் இணைக்கிறனர். புலவரும் வீடியோக்களை இணைப்பார் - ஆனால் செய்திபகுதியில் தனித்திரியாக அல்ல. நீங்கள் மட்டும்தான், விதியாவது ஹைகோர்ட்டாவது என நடக்கிறீர்கள்.

  6. இது பொறாமையோ, புதியதை ஏற்காமையோ அல்ல, மாறாக இது

    அடிப்படையில் இது ஒழுங்கு சம்பந்தபட்ட விடயம். எல்லாரும் சாப்பாட்டு மேசையில் சாப்பிட்டுகொண்டிருக்கும் போது நீங்கள் வேறு எதையோ அதே மேசையில் செய்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

மேலே சொல்லி உள்ளது அண்மையில் தமிழக செய்திகள் பகுதியில் நீங்கள் இணைத்த காணொளிகள் சம்பந்தமாக.

இந்த வீடியோவை நீங்கள் சரியான இடத்தில்தான் பதிந்துள்ளீர்கள்.

ஆனால் இந்த வீடியோவை அறிமுகபடுத்திய உங்கள் சிறு குறிப்பை வாசித்த நான் - வீடியோவை பார்க்கவில்லை.

தயவு செய்து மாறி வரும் வேகமான புது உலகில் உக்காந்து 20, 30 நிமிட வீடியோ பார்க்கும் இயலுமை பலருக்கு இல்லை என புரிந்து கொள்ளுங்கள்.

இந்த யூடியூப் சமாச்சாரம் எல்லாம் அதர பழசு.

இப்போ வீடியோ shorts தான். அல்லது ஒரு நிமிடத்தில் வாசிக்க கூடிய கருத்துகள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஜேர்மனியின் பெண்கிட்லர்…

இது உண்மைக்கு புறம்பான செய்திச்சாரம் அடங்கிய காணொளி. அதிலும் அந்த பெண்மணி சொல்லும் செய்தியை மறுத்து கண்டிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வலதுசாரிகள் தான் இலங்கையில் தமிழர்களை ஏதிலி ஆகியவர்கள்

ஐரோப்பாவில் இப்போதும் அகதிகளுக்கான ஆதரவு இருக்கின்றது என்பதற்கான சான்றாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.

பழமைவாதக் கிறிஸ்த்தவக் கட்சி இதுவரை அரசாண்ட காலத்திலேயே அதிக அகதிகள் நாட்டிற்குள் வந்தார்கள்.

அம்மையார் மேக்கேல் தாய்ப்பாசத்துடன் எல்லோரையும் வரவேற்றார் .

இன்று.... அந்தக் காலத்தில் அம்மையாரின் கட்சிக்குள்ளேயே அம்மையாரால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருவர் புரட்சி செய்ய வந்துள்ளார் .

பொருளாதார வல்லுநர் எனப் பலராலும் அறியப்பட்டவர்

இருந்தாலும் அகதிகள் விடையத்தில் வலது பக்கம் நிற்பதால்

அவருக்கான ஆதரவு பலமாக அதிகரிக்கவில்லை

பழமைவாதக் கட்சியும் தொழிலாளர் சார்பான

சோஷலிஸக் கட்சியும் (இந்தத் தேர்தல் வரை ஆடசியில் இருந்தவர்கள்) தான் கூட்டுச் சேர்வதற்கான தெரிவாக இருக்கின்றது.

வேறு விதமான கூட்டணிக்கு யாரும் ஆசைப்பட மாட்டார்கள்

இருந்தாலும் ஒரு காலத்தில் யூதர்களின் நிலை ஜெர்மனியில் மீண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது

வரலாறு எப்போதும் தன்னை மீட்டுக் கொண்டேயிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

இருந்தாலும் ஒரு காலத்தில் யூதர்களின் நிலை ஜெர்மனியில் மீண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது

வரலாறு எப்போதும் தன்னை மீட்டுக் கொண்டேயிருக்கும்

History doesn’t repeat itself but it rhymes என்கிறார் மார்க் டுவைன். அன்று யூதர்கள், நாளை கறுப்பு, மண்நிற தோல் மனிதர்களாக இருக்கலாம்.

குறிப்பாக - மஸ்கின் வெளிப்படையான AfD ஆதரவு, டிரம்ப்-மஸ்க்-புட்டின் உறவு - ஜேர்மனி வாழ் வெள்ளியினமல்லாதோருக்கு நல்ல சகுனம் அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, goshan_che said:

History doesn’t repeat itself but it rhymes என்கிறார் மார்க் டுவைன். அன்று யூதர்கள், நாளை கறுப்பு, மண்நிற தோல் மனிதர்களாக இருக்கலாம்.

குறிப்பாக - மஸ்கின் வெளிப்படையான AfD ஆதரவு, டிரம்ப்-மஸ்க்-புட்டின் உறவு - ஜேர்மனி வாழ் வெள்ளியினமல்லாதோருக்கு நல்ல சகுனம் அல்ல.

முற்றிலும் தவறான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

முற்றிலும் தவறான கருத்து.

காலம் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் எழுதி என்ன பயன் இருக்குமெனத் தெரியவில்லை, ஆனாலும் "I told you so!" 😉 என்று பிற்காலத்தில் சொல்லிக் கொள்ள உதவும் என்பதால் இந்த விடயம் சொல்ல வேண்டும்: நவநாசிகளும், நாசிகளும் "ஜேர்மனியர்" எனும் போது மண்ணிறத் தோல் கொண்டவர்களை நினைப்பதில்லை. அதனால் "சட்ட ரீதியாக வசிக்கும் எங்கள் ஆட்களையும் தூக்கி வெளியே அனுப்பி விடுவார்களா?" என்றால் பதில் "இல்லை" என்பது தான்.

ஆனால், சட்ட ரீதியாக வசிக்கும் எங்கள் ஆட்களுக்கு (குழந்தைகள், பேரன், பூட்டிகள்) நவநாசிகளின் ஆட்சியில் ஒரு மட்டத்திற்கு மேலே கல்வி, பதவிகளில் மேலே செல்ல முடியாத நிலை உருவாகும். இதற்காக அவர்கள் புதிய சட்டங்களைக் கூட இயற்ற வேண்டியதில்லை. இருக்கும் சட்டங்களை மீறி இனவாத வெள்ளை ஜேர்மனியர்கள் குடியேறி வம்சாவழியினரை ஒதுக்கி வைக்கும் போது, அந்த மீறல்களை அலட்சியம் செய்தாலே ஒதுக்கலை நிறுவன மயப்படுத்தி விடலாம்! ஒரு துரும்பையும் அசைக்க வேண்டிய அவசியமில்லை!

இதற்கு முன்னுதாரணம் இருக்கிறதா? ஆம், 60 களில் இருந்து கறுப்பின மக்களை ஒதுக்கி வைக்க இந்த முறை தான் அமெரிக்காவில் பயன்பட்டது!இன்னும், 10 ஆண்டுகளில் மீண்டும் பயன்படப் போகிறது.

இத்தகைய இன ஒதுக்கல் வாதிகளின் நுண்மைகளை , வரலாறு தெரியாத ஒருவருக்கு விளக்குவது கடினம். எனவே அவரவர் பட்டுத் திருந்துவதே ஒரே வழி.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டால் அல்லது புரிந்து கொண்டால் அப்படியாயின் மனிதர்கள் வாழ சரியான இடம் அல்லது நாடு எது என்பதை நீங்கள் குறிப்பிடாமல் விடுவது வரலாறு தெரியாதவர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டால் அல்லது புரிந்து கொண்டால் அப்படியாயின் மனிதர்கள் வாழ சரியான இடம் அல்லது நாடு எது என்பதை நீங்கள் குறிப்பிடாமல் விடுவது வரலாறு தெரியாதவர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா?

நேரடியாகவே நல்ல கேள்வியை கேட்டுள்ளீர்கள் விசுகர்!👍

இதற்கு இடக்கு முடக்கு பதில் சொல்லாமே தவிர நீதி நேர்மையான பதில்கள் இல்லை.

எந்த நாட்டில் இனவாதம் ,மதவாதம் இல்லை? இதே கேள்வியை ஈழ மண்ணில் கேட்பதாயின் இன்னொரு கேள்வி போனஸ்! அது எதுவென்றால் சாதி வேகுபாடு எங்கில்லை?👈

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டால் அல்லது புரிந்து கொண்டால் அப்படியாயின் மனிதர்கள் வாழ சரியான இடம் அல்லது நாடு எது என்பதை நீங்கள் குறிப்பிடாமல் விடுவது வரலாறு தெரியாதவர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா?

தெரிந்து கொள்ளும் வசதிகளை வைத்துக் கொண்டு அறிந்து கொள்ளாமல் இருப்போர் சார்ந்து ஒரு கடமையும் ஏனையோருக்கு இல்லை!

எனவே, வரலாறு தெரியாதவர்களுக்காக என் நேரத்தைச் செலவிடுவது என் தொழிலுக்கும், குடும்பத்திற்கும் செய்யும் துரோகம் - இவையிரண்டும் தான் முதன்மைப் பணிகள் எனக்கு.

160+ நாடுகளில் "எவற்றில் பிரச்சினையின்றி வாழலாம்?" என்ற நடைமுறை ஆலோசனையை குடியேற்ற ஆலோசகர்கள் (immigration consultant) யாரிடமாவது முறைப்படி பணம் செலுத்தி அறிந்து கொள்ளலாம்! நம்முடைய rate அதிகம்😎!

தத்துவ ரீதியாக: ஒவ்வொருவரும் தங்களதும், தங்கள் வழித்தோன்றல்களதும், வாழ்க்கை இலக்குகள், விழுமியங்களுக்கு ஏற்ற இடங்களில் வாழ்வதே ஆதர்ச (ideal) நிலை. ஆதர்ச நிலை எல்லோருக்கும் கிடைக்காது.

எனவே, வாழக் கிடைத்த நாடுகளில் இருக்கும் நிலையை தங்கள் தரப்பிற்கு ஆப்பு வரும் வகையில் மோசமாக்கிக் கொள்ளாமல் வாழ்வது தான் அடுத்த இலக்காக இருக்க வேண்டும்.

சுருக்கமாக: மரத்தில் இருந்து கொண்டு கொப்பை வெட்டத் துணை போகக் கூடாது😂!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இதனால் தான் பட்டறிவாளர்கள் எவரிடமும் ஆலோசனை பெறுவதில்லை. காசே தான் கடவுளடா. 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இதனால் தான் பட்டறிவாளர்கள் எவரிடமும் ஆலோசனை பெறுவதில்லை. காசே தான் கடவுளடா. 😎

பட்டறிவாளர்கள் - "பட்டு அறிந்தவர்கள்" என்று அர்த்தம்.

இங்கே ட்ரம்பும், ஜேர்மனியில் AfD யும் காரியம் முடித்திருக்கும் போது பல "பட்டறிவாளர்கள்" இங்கே உலாவருவர். உங்கள் போலவே, காசு/இலாபம் முன்னிறுத்தாமல் அட்வைஸ் கிடைக்கலாம்😂!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.