Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

NTK Ex-army Wing எச்சரிக்கை| சீமான் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த Ex-army அமல்ராஜ் மீது..

இலங்கையில் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கேவலம் கெட்ட இந்தியன் ஆமியின் அதிகாரிகள், அவர்களுக்கு விங் வேறு .

இதுதான் சீமானின் தமிழ் தேசியத்தின் இலட்சணம்.

இவர்கள் வயதையும் தோற்றத்தையும் பாத்தாலே தெரிகிறது.

இவர்கள் தற்போதும் இந்திய மத்திய அரசுக்கு வேலை செய்யும் அதிகாரிகள் என்பது.

  • Replies 187
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    உண்மை தோழர் .. ராமதாஸ் vs MRK பன்னீர் செல்வம்(திமுக) C.Ve சண்முகம்(அதிமுக) அண்ணாமலை (பாஜக) VS ஈ.பி.எஸ்(அதிமுக) VS செந்தில்பாலாஜி(திமுக) ஒபிஎஸ்(அதிமுக தனி) VS உதயகுமார் (அதிமுக) சக்கரபாணி(திமுக) கடம்பூ

  • Justin
    Justin

    எனக்கு 2016 இல் ட்ரம்ப் ரீம் தந்த பாடம் தான் நான் சீமான் போன்றோரைத் துகிலுரியக் காரணம். அமெரிக்காவில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பெரிய காட்சிப் பலகைகளில் காட்டுவார்கள்: "If you see somethin

  • காவல்துறை அழைப்பாணையை கிழித்தெறிந்து மட்டுமல்லாமல், காவல்துறையை துப்பாக்கியால் சுட முற்பட்டுள்ளார், சீமானை போல் அவர்களுடைய தம்பிகளும்/பாதுகாவலரும் தற்குறிகளாக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஈனர்கள் பாஜகவின் எடுபிடிகள். பாலியல் குற்றவாளி செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு இந்த ஈனர்களில் ஒருவன் பாதுகாப்புக்கு நின்றதில் வியப்பேதுமில்லை. மீண்டும் மீண்டும் பா. கு. செந்தமிழன் சீமான் அண்ணா பாஜ்கவின் ஆள்தான் என உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இலங்கையில் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கேவலம் கெட்ட இந்தியன் ஆமியின் அதிகாரிகள், அவர்களுக்கு விங் வேறு .

இதுதான் சீமானின் தமிழ் தேசியத்தின் இலட்சணம்.

இவர்கள் வயதையும் தோற்றத்தையும் பாத்தாலே தெரிகிறது.

இவர்கள் தற்போதும் இந்திய மத்திய அரசுக்கு வேலை செய்யும் அதிகாரிகள் என்பது.

தமிழ் நாட்டு இராணுவத்தை திருப்பி எடுத்தது நினைவிருக்கலாம்.அவர்கள் தான் பல்கலைகளகத்தில் பாரசூட்டில் இறங்கும் கிந்திய இராணுவத்தை பற்றிய தகவலை வழங்கியதாக தகவல் உண்டு. இராணுவம் வருவதை முன் கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்தியவர்களும் அவர்களே.அவர்கள் பின்னாளில் திருப்பி எடுக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

தமிழ் நாட்டு இராணுவத்தை திருப்பி எடுத்தது நினைவிருக்கலாம்

எனக்கு தெரிய கடைசியாக விலகி சென்ற மாதம் கூட எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் பாதுகாப்பு ரோந்தில் இருந்தவர்கள் மெட்டிராஸ் ரெஜிமெண்ட்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:
  7 minutes ago, nunavilan said:

தமிழ் நாட்டு இராணுவத்தை திருப்பி எடுத்தது நினைவிருக்கலாம்

அப்போ எப்படி எங்கள் ஊரிலொரு தமிழ் (இந்திய) இராணுவத்தை கூட காணவில்லை?

நான் கண்டது கேட்டது பொய்யா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இன்றும் கஸ்மீரிலும் ஏனைய இடங்களிலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஓர் வல்லாதிக்க இராணுவத்துக்கு, எம்மை இம்சித்தவர்களுக்கு ஏன் ஒரு தமிழ் தேசிய கட்சியில் தனி விங் அமைத்து கொடுக்க வேண்டும்?

முன்னாள் துப்பரவு தொழிலாளர், முன்னாள் பேரூந்து ஓட்டுனர்கள், முன்னாள் மூட்டை தூக்குபவட்களுக்கெல்லாம் நாதகாவில் ஒரு விங் உள்ளதா?

இது மத்திய, மாநில, அரசுகளும் நாதகவும் சேர்ந்து ஆடும் நாடகம்.

இவர்களும், துப்பாக்கியோடு பிடிபட்டவரும் சீமானோடு இருக்கும் மத்திய புலனாய்வு அதிகாரிகள்.

நீலாங்கரை இன்ஸ்பெக்டர் ஆர்வகோளாறில் போய் ரகசியத்தை பரகசியமாக்கிவிட்டார்.

இப்போ அவரை பழைய கேஸ் ஒன்றை தூசுதட்டி எடுத்து சம்மன் அனுப்பி உள்ளார்களாம். மத்திய புலனாய்வு அதிகாரிகளை expose பண்ணியமைக்காக அவருக்கு அலைச்சல் ஆரம்பமாகிவிட்டது.

1 minute ago, nunavilan said:

அப்போ எப்படி எங்கள் ஊரிலொரு தமிழ் (இந்திய) இராணுவத்தை கூட காணவில்லை?

நான் கண்டது கேட்டது பொய்யா?

ஒவ்வொரு ஊரிலும் ஒரே ரெஜிமெண்ட் நிற்பதில்லையே. அடிபடும் முன்னரங்கில் கூர்காக்கள், பஞ்சா ரெஜிமெண்ட் வருவது வழமை.

நான் கேள்விபட்ட வகையில் ஆக்டோபரில் யுத்தம் ஆரம்பித்த பின் - களப்பணியில் மெட்டிராஸ் ரெஜிமெண்ட் அதிகம் பயன்படவில்லை, ஆனால் புலானாய்வு தேவைப்பட்ட ஊர்களில் இவர்கள் சுழற்சி முறையில் வந்து போயினர்.

எமது ஊரில் இருந்த முகாமில் 3 மாதம் ஒருக்கா சுழற்சி இருக்கும்.

இது கூட உள்ளூர்மக்கள் மீது நட்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் என சொல்லுவார்கள்.

என்னை பொறுத்தவரை இந்தியன் ஆமி, இந்தியன் ஆமிதான். அதில் இனம் எல்லாம் நான் பார்ப்பதில்லை. கெட்ட சயனைடுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

ஆனால் இன்றும் கஸ்மீரிலும் ஏனைய இடங்களிலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஓர் வல்லாதிக்க இராணுவத்துக்கு, எம்மை இம்சித்தவர்களுக்கு ஏன் ஒரு தமிழ் தேசிய கட்சியில் தனி விங் அமைத்து கொடுக்க வேண்டும்?

முன்னாள் துப்பரவு தொழிலாளர், முன்னாள் பேரூந்து ஓட்டுனர்கள், முன்னாள் மூட்டை தூக்குபவட்களுக்கெல்லாம் நாதகாவில் ஒரு விங் உள்ளதா?

இது மத்திய, மாநில, அரசுகளும் நாதகவும் சேர்ந்து ஆடும் நாடகம்.

இவர்களும், துப்பாக்கியோடு பிடிபட்டவரும் சீமானோடு இருக்கும் மத்திய புலனாய்வு அதிகாரிகள்.

நீலாங்கரை இன்ஸ்பெக்டர் ஆர்வகோளாறில் போய் ரகசியத்தை பரகசியமாக்கிவிட்டார்.

இப்போ அவரை பழைய கேஸ் ஒன்றை தூசுதட்டி எடுத்து சம்மன் அனுப்பி உள்ளார்களாம். மத்திய புலனாய்வு அதிகாரிகளை expose பண்ணியமைக்காக அவருக்கு அலைச்சல் ஆரம்பமாகிவிட்டது.

ஒவ்வொரு ஊரிலும் ஒரே ரெஜிமெண்ட் நிற்பதில்லையே. அடிபடும் முன்னரங்கில் கூர்காக்கள், பஞ்சா ரெஜிமெண்ட் வருவது வழமை.

நான் கேள்விபட்ட வகையில் ஆக்டோபரில் யுத்தம் ஆரம்பித்த பின் - களப்பணியில் மெட்டிராஸ் ரெஜிமெண்ட் அதிகம் பயன்படவில்லை, ஆனால் புலானாய்வு தேவைப்பட்ட ஊர்களில் இவர்கள் சுழற்சி முறையில் வந்து போயினர்.

எமது ஊரில் இருந்த முகாமில் 3 மாதம் ஒருக்கா சுழற்சி இருக்கும்.

இது கூட உள்ளூர்மக்கள் மீது நட்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் என சொல்லுவார்கள்.

என்னை பொறுத்தவரை இந்தியன் ஆமி, இந்தியன் ஆமிதான். அதில் இனம் எல்லாம் நான் பார்ப்பதில்லை. கெட்ட சயனைடுகள்.

கெட்ட சயனைட்டுகள் என்பதில் 100 % உடன் படுகிறேன். உதவி செய்தவர்கள் ,குறிப்பாக இராணுவம் இந்த வழியால் வந்து கொண்டு இருக்கிறார்கள் என எனது அம்மமாவிடம் சொல்லி "டேய் வாறாங்களாம்" என்று சொன்னது இன்றும் மனதிலுண்டு. இது சில தமிழ் நாட்டு ரெஜிமன்ட் இருந்த போது நடந்தது.

வடக்கு ரெஜிமன்ட் வந்த போது எந்த குழப்பமுமேற்படவில்லை. நாய் குலைத்தலோடு எண்ணை மணம் அவர்களின் இருப்பை காட்டி கொடுத்து விடும்.😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

2011ம் ஆண்டில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றினார்கள் என்று தான் விஜயலட்சுமி சொல்கின்றார். சமயாசாரப்படி நடந்த விவாகம் என்று ஒன்று ஊரில் இருப்பது போல.

மாலை மாற்றி திருமணம் செய்திருந்தால், அந்த உறவில் குழந்தை இருந்தால் குழந்தைக்குரிய தந்தையாரின் சொத்தில் சட்டப்படி பிறந்த குழந்தைக்குரிய உரிமை பங்கு இருக்கிறது. ஆனால் அது சட்டப்படி அந்த திருமணம் செல்லாது. சட்டப்படி பதிவு செய்யப்பட்ட திருமணமே சட்டப்படி செல்லும், அதிலிருந்தே சட்டப்படி விவாகரத்து பெற முடியும். அது போக, இருவரும் மனமொத்து உடலுறவு வைத்துக்கொண்டால், அது குற்றமில்லை என இந்திய சட்டம் ஏற்றுக்கொள்கிறது. தற்போது இந்தியாவில் adultery குற்றமில்லை என்று சட்டம்  சொல்கிறது.    

45 minutes ago, goshan_che said:

இப்போ அவரை பழைய கேஸ் ஒன்றை தூசுதட்டி எடுத்து சம்மன் அனுப்பி உள்ளார்களாம். மத்திய புலனாய்வு அதிகாரிகளை expose பண்ணியமைக்காக அவருக்கு அலைச்சல் ஆரம்பமாகிவிட்டது.

2 hours ago, satan said:

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் போலீசார், இராணுவத்தினர் ஆட்சியாளரின் கூலிகளாக செயற்படுகின்றனர். பின்னர் தாக்கப்படுவதும் தண்டிக்கப்படுவதும் அவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

நாம எங்க நிக்கிறம் என்றே புரியவில்லை.....

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வல்வை சகாறா said:

நாம எங்க நிக்கிறம் என்றே புரியவில்லை.....

அதே பூமி தான்,கவிதாயினி. அத்தி பூத்தாற் போல் வந்தால் நாங்கள் செவ்வாய்க்கு போக ஏலியன்களிங்கு வர நிறைய வாய்ப்புண்டு.🙂சும்மா

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் உள்ள அனைத்து இராணுவங்களின் மீதான பொதுவான குற்றச்சாட்டு பெண்கள் மீது நடத்தும் பாலியல் தாக்குதல்கள் பற்றியவை, அப்படி எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் ஆட்படாதது எனக்கு தெரிந்தவரை புலிகள் அமைப்பு மட்டுமே.

ஆனால் இன்று இந்த பாலியல் குற்றவாளி சைக்கோ சைமனின் குற்றங்களை நியாயப்படுத்த, புலிசின்னத்தோடு அவரது ஐடிவிங் தலைவர் படம் வெளியிட்டுள்ளார்.

இனத்தை மீட்க போராடிய இயக்கத்தை இன்று பாலியல் பயங்கரவாதியை மீட்க பயன்படுத்த பார்க்கிறார்கள். அதற்கு இங்கு சில கோடாரி காம்புகள் தமிழ் தேசியம் என்ட பெயரில் ஆதரவு வேறு, பெரும் வெட்ககேடு.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

அதே பூமி தான்,கவிதாயினி. அத்தி பூத்தாற் போல் வந்தால் நாங்கள் செவ்வாய்க்கு போக ஏலியன்களிங்கு வர நிறைய வாய்ப்புண்டு.🙂சும்மா

எழுதுவதுதான் அத்திபூத்தாற்போல் ஆனால் நாளாந்தம் இங்கு வருகை தந்து வாசிக்கிறேன். இந்தப்பக்கம் வரும்போதுதான் ஈழத்தமிழினம் எவ்வளவுதூரம் பலவீனமாகி விட்டது என்பதை முழுமையாக உணரமுடிகிறது.

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வல்வை சகாறா said:

எழுதுவதுதான் அத்திபூத்தாற்போல் ஆனால் நாளாந்தம் இங்கு வருகை தந்து வாசிக்கிறேன். இந்தப்பக்கம் வரும்போதுதான் ஈழத்தமிழினம் எவ்வளவுதூரம் பலவீனமாகி விட்டது என்பதை முழுமையாக உணரமுடிகிறது.

எமது பலம் தலைவனோடு போய் விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செவ்வியன் said:

இனத்தை மீட்க போராடிய இயக்கத்தை இன்று பாலியல் பயங்கரவாதியை மீட்க பயன்படுத்த பார்க்கிறார்கள். அதற்கு இங்கு சில கோடாரி காம்புகள் தமிழ் தேசியம் என்ட பெயரில் ஆதரவு வேறு, பெரும் வெட்ககேடு.

ஐயோ! நான் சீமானுக்கு வக்காலத்து வாங்கவில்லை, எனக்குத்தெரிந்த  இந்திய குடும்பவியல் சட்டம், நடைமுறை பற்றியே பேசினேன் கனம் கோட்டார் அவர்களே!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

ஐயோ! நான் சீமானுக்கு வக்காலத்து வாங்கவில்லை, எனக்குத்தெரிந்த  இந்திய குடும்பவியல் சட்டம், நடைமுறை பற்றியே பேசினேன் கனம் கோட்டார் அவர்களே!

உங்கள் கருத்து எனக்கு விளங்கிட்டு,நான் உங்களை குறிப்பிடவில்லை, நான் குறிப்பிட்டது பொதுவாக இந்த கேடு கெட்ட செயலுக்கு இயக்கத்தின் பெயரை துணைக்கு அழைத்து கொள்பவர்களை பற்றி.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

எமது பலம் தலைவனோடு போய் விட்டது.

நாங்கள் இங்கு சீமானுக்காக அல்லது சீமானுக்கு எதிராக கருத்தாடுவதால் எந்த பிரயோசனமும் இல்லை. உண்மையில் நாம் சிந்திக்கவேண்டியது தமிழக மீனவர்களும், தாயக மீனவர்களும் மிகப்பெரும் எதிரியாக மாறிவிட்டார்களே... அதைப்பற்றித்தான் நாம் இப்போது கவலைப்படவேண்டும். ஒருகாலத்தில் தாயகம் தமிழகம் இறுக்கமான உறவை வைத்திருந்ததே இந்த மீனவர்களால்தான் இப்போது அத்திவாரமே தகர்க்கப்பட்டு சிதைவடைந்துள்ளது. இதனை எப்படி சுமூகநிலைக்கு கொண்டு வருவது என்று கலந்துரையாடுவதும் அதனைச் செயற்படுத்துவதுந்தான் காலத்தின் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வல்வை சகாறா said:

உண்மையில் நாம் சிந்திக்கவேண்டியது தமிழக மீனவர்களும், தாயக மீனவர்களும் மிகப்பெரும் எதிரியாக மாறிவிட்டார்களே... அதைப்பற்றித்தான் நாம் இப்போது கவலைப்படவேண்டும். ஒருகாலத்தில் தாயகம் தமிழகம் இறுக்கமான உறவை வைத்திருந்ததே இந்த மீனவர்களால்தான் இப்போது அத்திவாரமே தகர்க்கப்பட்டு சிதைவடைந்துள்ளது.

இந்த விடயத்தை பற்றி நான் அறிந்தவரை தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி முறைகளும், முறையற்ற எல்லை தாண்டுதலும் ஈழ மீனவர்களின் பிழைப்பை பாதிக்கிறது. போராட்ட காலத்திற்கு பிறகு மீன்பிடி கட்டுப்பாடுகள் தளர்த்தபட்ட பிறகு நம் மீனவர்கள் இதன் பாதிப்பை நன்கு உணர்கின்றனர், அதனாலயே இப்போது இது விரைவில் தீர்க்க வேண்டிய விடயமாக இருக்கிறது. இதற்கு இருநாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு முடிவை எட்டவேண்டும், ஆனால் அப்படி எதுவம் நடக்கிறதா என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வல்வை சகாறா said:

நாங்கள் இங்கு சீமானுக்காக அல்லது சீமானுக்கு எதிராக கருத்தாடுவதால் எந்த பிரயோசனமும் இல்லை.

சீமானால் அவரை சுற்றியுள்ள சிறு கூட்டத்தை தவிர வேறு யாருக்கும் எந்த பயனுமில்லை என்பது என் கருத்து. ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக அவர் நேற்று பேசிய பேச்சுகள் மனித தன்மையற்றது, மிகவும் கண்டிக்கதக்கது. சிறு பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை மிகவும் எளிதாக பேசி பொதுமைபடுத்துவது, பெண்ணின் கண்ணியத்தை கேவலப்படுத்தி பேசுவது போன்றவற்றை நமக்கு சம்பந்தமில்லை என கடந்து போவது இதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பது போலயே அமையும்.

சீமானின் கோட்டை நம்மின அழிவின் மீதே கட்டப்பட்டிருக்கிறது, அக்கோட்டையில் நடக்கும் அனைத்து அசிங்கங்களும் நாம் ஏற்றாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நம்மையும் பலவீனப்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செவ்வியன் said:

ஏழு வருடங்களுக்கு முன்பே என்னுடைய ஆணித்தரமான கருத்தை இப்பகுதியில் வைத்துவிட்டேன் இது கருத்துக்கள உறுப்பிர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய நாற்சந்தியில் அமைந்திருக்கிறது. யாழ் கருத்துக்களத்தின் நிலவரம் இதுவரையும் மாற்றமடையவில்லை கருத்தாடல்கள் தனிமனிதத் தாக்குதல்களாக மாறுவது காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்று செவ்வியன். கருத்தாளர்களைக் குறை சொல்ல முடியாது ஏனெனில் அவர்கள் பார்வை என்பது அவர்களுக்குள் இருக்கக்கூடிய எண்ணங்கள் நம்பிக்கையின் பால் ஏற்படுவது. எண்ணங்கள் நம்பிக்கைகளை தூரநோக்கில் பார்க்கப் பழக்கப்படாதவர்களிடம் எதையும் கலந்தாலோசிக்கமுடியாது அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செவ்வியன் said:

இதற்கு இருநாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு முடிவை எட்டவேண்டும், ஆனால் அப்படி எதுவம் நடக்கிறதா என்று தெரியவில்லை.

அநேக தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் தமிழக அரசியல் வாதிகளுக்கு அல்லது கொழுத்த பணக்காரர்களுக்கு சொந்தமானது எனச்சொல்கிறார்கள். கொள்ளை வருமானம் வந்தால் உரிமையாளருக்கு. கொலை, அடி, உதை என்றால் அப்பாவி தொழிலாளருக்கு. ஆகவே இந்திய தமிழக அரசு கண்டுகொள்ளாது. மற்றைய பக்கம் இந்த இடைவெளியில் சிங்கள மீனவர் எங்கள் வளங்களை அரசாங்க உதவியோடு சுரண்டிக்கொண்டு போகிறார்கள். எங்களுக்காக வாதாட, கதைக்க யார் இருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

விஜயலட்சுமி வழக்கு… விசாரணையில் சீமான் அடித்த அந்தர் பல்டி!

1 Mar 2025, 1:22 PM

seeman Confession in vijayalakshmi case

நடிகை விஜயலட்சுமி வழக்கில் நேற்று (பிப்ரவரி 28) இரவு ஆஜரான சீமானிடம் 1.15 மணி நேரம் போலீசார் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சீமான் மீது விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை 12 வாரங்களுக்குள் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 27ஆம் தேதி ஆஜராகுமாறு சீமானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் அவரது வீட்டு காவலாளி மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது கிருஷ்ணகிரியில் இருந்த சீமான், இதுகுறித்து கேள்விபட்டு செய்தியாளர்களிடம், “இன்னும் நான்கு வாரத்துக்கு எனக்கு நிகழ்ச்சி முன்னமே திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் இப்போது ஆஜராக முடியாது. என்ன முடியுமோ செய்யட்டும். நீதிமன்றம் தான் விசாரணைக்கு 12 வாரம் கொடுத்திருக்கிறதே, பிறகு ஏன் அவசரப்படுகிறார்கள்?” என கேள்வி எழுப்பினார்.

ஆனால் நேற்று தருமபுரியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து சேலம் புறப்பட்ட சீமான், விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தடைந்தார். அப்போது அவர், இரவு 8 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Screenshot-2025-02-28-213747.jpg

இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்ற சீமான், 9.15 மணியளவில் காவல் நிலையம் நோக்கி புறப்பட்டார். வளசரவாக்கம் அருகே வந்தபோது அவரது காரை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர்.

இதனால் ஆமை வேகத்தில் கார் நகர, இரவு 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் இரவு 11.15 மணிவரை என மொத்தம் 1.15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

உதவி ஆணையர் செம்பேடு பாபு, துணை ஆணையர் அதிவீரபாண்டியன் மேற்பார்வையில் சீமானிடம் விசாரணை அதிகாரி அன்புக்கரசு விசாரணை மேற்கொண்டார்.

முதலில் அவரிடம், அவரது பெயர், ஊர், திருமணம், மனைவி, பிள்ளைகள், வேலை, அரசியல் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பி தகவல்கள் கேட்டு பெறப்பட்டது.

தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

உத்தரவாதம் கொடுக்கவில்லை!

விஜயலட்சுமியுடன் திருமணம் குறித்த கேள்விக்கு, “விஜயலட்சுமியிடம் பழகியது உண்மை தான். ஆனால் திருமணம் செய்து கொள்வதாக நான் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. கோயிலில் கல்யாணம் பண்ணவில்லை. நான் கயல்விழியை கல்யாணம் செய்யும்போது பத்திரிகைகளில் முழு பக்க விளம்பரம் கொடுத்து, அழைப்பிதழ் அச்சடித்து பண்ணது தான் திருமணம்.

விஜயலட்சுமி குறித்து அரசியல் கட்சிகள், ஊடகங்கள் தான் எனக்கு எதிராக திட்டமிட்டு பேசி வருகிறார்கள். அவர்கள் தான் விஜயலட்சுமியை இயக்குகிறார்கள். மற்றபடி நான் திருமணம் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.

நான் எப்படி ஆஜராகாமல் போவேன்?

சம்மன் ஒட்டியதில் ஏன் பிரச்சனை? என்ற கேள்விக்கு, ”நான் எப்போதுமே போலீஸை மதிக்க கூடிய ஆள். அடுத்தடுத்த அரசியல் பயணத்தால் ஆஜராக முடியவில்லை. நான் எப்படி ஏமாத்தி ஆஜராகாமல் போவேன்?

வளசரவாக்கம் கேஸுக்கு நீலாங்கரை இன்ஸ்பெக்டர் ஏன் என் வீட்டுக்கு வர வேண்டும். அவருக்கு வேறு ஏதோ ஒரு மோட்டிவ் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

மீண்டும் விஜயலட்சுமி உடனான போட்டோ, வீடியோ குறித்து கேட்டதற்கு, ”நான் விஜயலட்சுமியுடன் பேசியது பழகியது உண்மை. ஆனால் நான் அவரை திருமணம் செய்யவில்லை” என சீமான் தெரிவித்தார்.

எப்போது அழைத்தாலும் வருவேன்!

அதையும் தாண்டி அவர் விசாரணைக்கு கொடுத்த ஒத்துழைப்பை கண்டு போலீசாரே ஆச்சரியப்பட்டனர்.

”விசாரணைக்கு தான் நீதிமன்றம் 12 வாரம் கொடுத்திருக்கிறதே.. பிறகு ஏன் அவசரப்படுகிறார்கள்? இது போன்று எந்த வழக்கை போலீஸ் விசாரித்தது? என நேற்று காலையில் தருமபுரியில் பேசிய சீமான்,

அதற்கு அப்படியே பல்டியடிக்கும் விதமாக விசாரணையின் போது, “இந்த வழக்க விசாரிக்க நீதிமன்றம் 12 வாரம் தான் கொடுத்துருக்கு. அதனால் தான் நீங்கள் அவசரபடுகிறீர்கள் என்றும் தெரியும், உங்களது கஷ்டமும் எனக்குப் புரிகிறது. இந்த வழக்கில் உங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பை நான் கொடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சுமார் 1.15 மணி நேரம் நடந்த இந்த விசாரணை முடிந்ததும், இறுதியாக ஒப்புதல் வாக்குமூல நகலில் கையெழுத்திடுமாறு சீமானை போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு அவர் சில நிமிடங்கள் தயங்கியுள்ளார். இதை கண்ட விசாரணை அதிகாரி, “நீங்கள் தான் கேள்விக்கு பதில் அளித்தீர்கள். அது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் பேசியது தான் வாக்குமூலத்திலும் உள்ளது… கையெழுத்திடுங்கள்” என தெரிவித்தனர்.

இதனையடுத்து தான், “அடுத்தகட்ட விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வருவேன்” என்று அவரே எழுதி தனது வாக்குமூல நகலில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பியுள்ளார்.

அப்போது அங்கிருந்த பெண் போலீசார் சற்று கோபமாகவே இருந்தனர். அவர்கள் விசாரணை அதிகாரிகளிடம் ”சார் விட்றாதீங்க.. பொம்பளைங்க என்றால் இந்த ஆளுக்கு இளக்காரமா? துருவி துருவி கேள்வி கேளுங்க சார்” என தெரிவித்தனர். அவர்களும் “நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என தெரிவித்து சென்றனர்.

https://minnambalam.com/political-news/seeman-confession-in-vijayalakshmi-case/

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

விஜயலட்சுமியுடன் திருமணம் குறித்த கேள்விக்கு, “விஜயலட்சுமியிடம் பழகியது உண்மை தான். ஆனால் திருமணம் செய்து கொள்வதாக நான் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. கோயிலில் கல்யாணம் பண்ணவில்லை. நான் கயல்விழியை கல்யாணம் செய்யும்போது பத்திரிகைகளில் முழு பக்க விளம்பரம் கொடுத்து, அழைப்பிதழ் அச்சடித்து பண்ணது தான் திருமணம்.

நான் மேலே எழுதியவாறு, obtaining consent though deception (rape), bigamy இரெண்டு வழக்கில் இருந்தும் தப்பும் வகையில்…நான் விஜயலக்சுமியோடு வெறும் casual sex மட்டுமே வைத்துகொண்டேன் என்பதே சீமானின் எதிர்வாதமாக இருக்கப்போகிறது.

இந்த எதிர்வாதம் வெல்லலாம் அல்லது வெல்லாது போகலாம்.

ஆனால் இதுதான் இந்தியசட்டத்தின் நிலைப்பாடு.

இனி சீமான் சொல்வதை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்வதா அல்லது வழக்கை நடத்தி, விசாரித்து முடிவு காண்பதா என முதலில் பொலிசும் பின் கோர்டும் முடிவு செய்யும்.

வழக்கை விசாரிப்பது என முடிவானால் - அதன் பின் வழக்கு சாட்சியங்கள் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

நாலு சொற்கள் மரியாதையாக பாவிக்க வராத நீங்கள் எல்லாம் சீமான் பேச்சு தவறென்பதெல்லாம் எவ்வளவு முரண்.

உங்களுக்கு சிறீலங்காவும் புரியல தமிழர் தாயகமும் அதன் விடுதலைக்கோரிக்கையும் புரியல. எமது நிலம் எனக்கு என்பதற்கும் மற்றவர் நிலத்தை அபகரிப்பதற்குமான இன முரண்பாடும் தெரியல.

சீமானை இனவாதி என்றபடி சீமானின் மனைவியை கலப்பினம் என்று எந்த மூஞ்சியை வைத்து கொண்டு எழுதுகிறீர்கள்?? முதலில் உங்கள் மனதில் உள்ள இவ்வாறான அழுக்கை துடையுங்கள்.

யாரை நான் மரியாதை இல்லாமல் பேசினேன்? தனது அரசியல் இலாபத்துக்காக தனது எஜமானர்களிடம் கூலி பெறுவதற்காக இனவாத நஞ்சை விதைத்து அதை தமிழ் தேசியம் என்று கட்டமைக்கும் அயோக்கிய அரசியல்வாதி சீமானுக்கு என்ன மரியாதை வேண்டியுள்ளது?

சீமான் விதைக்கும் இனவெறியானது சிங்கள இனவாதிகளை விட மோசமானது என்று நான் கூறியதற்கு காரணம் ஒரு சிங்கள இனவாதி தனது நாட்டில் வாழும் சக தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமே இனவாதத்தை கக்குவார். வேறு நாட்டு மக்கள் மீது இனவாதத்தை காட்டுவதில்லை ஆனால் சீமானால் மூளைச்சலவை செய்யப்பட்ட பல புலம்பெயர் ஈழத்தமிழ் இனவாதிகளைப் பாருங்கள். தமது நாட்டைத்தாண்டி வேறு ஒரு நாட்டில் வாழும் கன்னட, தெலுங்கு, மலையாள மக்கள் மீதும் இனவெறியுடன் போட்ட வன்மப் பதிவுகளை பலவற்றைப் பார்ததுள்ளேன். இத்தனைக்கும் ஒரு கன்னடருடனோ தெலுங்கருடனோ மலையாளியுடனோ பழகி கூட இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு தொலைவில் வாழும் மக்கள் மீது கூட வன்மத்தை இனவெறியை கக்ககூடிய புலம் பெயர் சீமானின் தற்குறிகளை உருவாக்கியது சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதியே. மேலும் கூறினால், தாம் தஞ்சம் அடைந்த நாட்டில் வாழும் கிழக்கு ஐரோப்பிய மக்கள் மீது கூட (இங்கு யாழில் கூட பல பதிவுகள் உண்டு) வன்மத்தை கக்கும் அளவுக்கு இனவெறியர்கள் இவர்கள். அது தான் கூறுனேன், இவர்கள் சிங்கள இனவாதிகளை விட மோசமானவர்கள் என்று. இத்தனைக்கும் 1980 களின் ஆரம்பத்தில் ஈழப்போராட்டம் தொடங்கிய போது தமிழ் நாட்டில் வாழ்ந்த அனைத்து மக்களும் ஈழத்தமிழர் போராட்டதிற்கு கட்சி வேறுபாடுகளை கடந்து தார்மீக ஆதரவை கொடுத்ததே வரலாறு.

மேலும் சீமானின் மனைவியோ சீமானோ கலப்பினமாக இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. அது வெறுக்கதக்கதல்ல. ஈழத்தமிழரும் மலையாள வழி வந்தவர்களே. ஆனால் அரசியலுக்காக தனது இலாபத்துக்காக இனவாதத்தை விதைக்கும் நச்சு செடி சீமான் என்பதையே சுட்டிக்காட்டினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, island said:

மேலும் சீமானின் மனைவியோ சீமானோ கலப்பினமாக இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. அது வெறுக்கதக்கதல்ல. ஈழத்தமிழரும் மலையாள வழி வந்தவர்களே. ஆனால் அரசியலுக்காக தனது இலாபத்துக்காக இனவாதத்தை விதைக்கும் நச்சு செடி சீமான் என்பதையே சுட்டிக்காட்டினேன்.

அதாவது உங்களுக்கு பிடிக்காத தமிழர்கள் எல்லோரும் கெட்டவர்கள் அவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியினர். சுத்தம்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விசுகு said:

அதாவது உங்களுக்கு பிடிக்காத தமிழர்கள் எல்லோரும் கெட்டவர்கள் அவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியினர். சுத்தம்....

தலைவர் பிறந்த மண்ணிலயே சிங்கள தேசியவாதிகளுக்கு ஆதரவாக மக்கள் நிற்கும் பொழுது நாங்கள் தமிழக தமிழ் தேசியவாதிகளை குறை சொல்ல முடியாது ..

தமிழகத்தில் தமிழ் தேசியம் வளர்ந்தால் நல்லது ஆனால் அதையும் நம்மவர்கள் விரும்பவில்லை போல தெரிகின்றது...

புலம்பெயர் தமிழ்தேசியவாதிகள்,தமிழக தேசிவாதிகள் சொல்வது செய்வது எல்லாம் பிழை....சிறிலங்கா சிங்கள தேசியவாதிகள் வடிக்கும் முதலை கண்ணீர் மட்டுமே சிறந்தது என நினைக்கும் மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்வார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.