Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செவ்வியன் said:

இதில் என்ன கூத்து என்றால் இந்திய தேசிய ராணுவத்தின் மேன்மையை தமிழ்நாட்டு காவல்துறை கலங்கப்படுத்திவிட்டது என்று சங்கி சைமனின் காம கொடூர தம்பிகள் குற்றம்சாட்டுகின்றனர். இவர்கள் தான் தமிழ்தேசிய காவலர்களாம்.

தமிழ் தேசியத்தில் கொட்டை போட்ட அண்ணையளே ரோ அணிவகுப்பை பார்த்து நெக்குருகி நிக்கினம்.

புது பட்ஜ் தமிழ் நாட்டு தம்பியளை ஏன் நோவான்.

  • Replies 187
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    உண்மை தோழர் .. ராமதாஸ் vs MRK பன்னீர் செல்வம்(திமுக) C.Ve சண்முகம்(அதிமுக) அண்ணாமலை (பாஜக) VS ஈ.பி.எஸ்(அதிமுக) VS செந்தில்பாலாஜி(திமுக) ஒபிஎஸ்(அதிமுக தனி) VS உதயகுமார் (அதிமுக) சக்கரபாணி(திமுக) கடம்பூ

  • Justin
    Justin

    எனக்கு 2016 இல் ட்ரம்ப் ரீம் தந்த பாடம் தான் நான் சீமான் போன்றோரைத் துகிலுரியக் காரணம். அமெரிக்காவில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பெரிய காட்சிப் பலகைகளில் காட்டுவார்கள்: "If you see somethin

  • காவல்துறை அழைப்பாணையை கிழித்தெறிந்து மட்டுமல்லாமல், காவல்துறையை துப்பாக்கியால் சுட முற்பட்டுள்ளார், சீமானை போல் அவர்களுடைய தம்பிகளும்/பாதுகாவலரும் தற்குறிகளாக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

‘போலீஸ் விசாரணையில் புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை’ - சீமான்

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வெள்ளிக்கிழமை (பிப்.28) போலீசார் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சீமான் சந்தித்தார்.

“போலீஸ் விசாரணையில் சென்ற முறை கேட்ட அதே பழைய கேள்விகளையே இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை. விசாரணைக்கு தாமதமாக வர காவல் துறையினரே காரணம். என்னை அவமானப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணைக்கு மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராக தயார். போலீஸ் விசாரணையில் என்ன நல்ல முறையில் நடத்தினர்.

இந்த வழக்கை விசாரித்து முடிக்க மூன்று மாதம் கால அவகாசம் உள்ளது. மூன்றே நாளில் இதை விரைந்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனக்கு சம்மன் கிடைத்த போது நான் பயணத்தில் இருப்பதாக தெரிவித்தேன். மீண்டும் கொடுத்த சம்மனை அடுத்து போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன். போலீஸ் தரப்புக்கு இந்த வழக்கில் அழுத்தம் தரப்படுகிறது. ஆளும் திமுக அரசு இந்த வழக்கை நீட்டித்துக் கொண்டு செல்கிறது.

என் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மனை அகற்றியதில் எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த இருவரை கைது செய்ததும், அவர்களை தாக்கியதும் தவறு. சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் காவல் நிலைய அதிகாரிகள். அப்படி இருக்கும் போது நீலாங்கரை காவல் நிலைய அதிகாரிகள் ஏன் எங்கள் வீட்டில் இருந்தவர்களை கைது செய்ய வேண்டும்.

கருணாநிதி என்னை கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னை கைது செய்து முதல்வர் ஆக்க உள்ளனர். கடந்த தேர்தலில் தனித்து நின்று அடையாளம் பெற்றோம். எங்களுக்கு 36 லட்சம் வாக்குகள் விழுந்தன. வாக்குக்கு பணம் கொடுக்காமல் இதை பெற்றுள்ளோம். என் மீதுள்ள நற்பெயரை சிதைக்கும் வகையில் அரசு இதை செய்துள்ளது.

புகார் அளித்த நடிகை கடந்த 15 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தி வருகிறார். விரும்பி வந்து அவர் உறவு வைத்துக் கொண்டார். எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. குழந்தைகள், குடும்பம் ஆகிவிட்டது. என் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதா?” என தெரிவித்தார்.

“அரசியல் களத்தில் நான் ஒரு பக்கமும், விஜய் ஒரு பக்கமும் நிற்கிறார். என்றைக்கும் அவர் எனது அன்புத் தம்பி தான். மாண்புமிகு முதல்வர் அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என சீமான் இந்த சந்திப்பின் போது தெரிவித்தார்.

முன்னதாக, காவல் துறை சம்மனை ஏற்று சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கு சீமான் அளித்த பதில் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையின் இணை ஆணையர் அதிவீர பாண்டியன், உதவி ஆணையர் செம்பேடு பாபு மற்றும் வளசரவாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஆகியோர் சீமானிடம் விசாரணை நடத்தினர்.

திரண்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்: போலீஸ் விசாரணைக்கு சீமான் ஆஜரான நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகளை காவல் துறை அமைத்திருந்தது. பாதுகாப்பு கருதி 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

காவல் நிலையத்துக்குள் சீமான் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதன் காரணமாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காவல் நிலையத்துக்கு வெளியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதை கண்டித்து நாதக நிர்வாகிகள் கண்டன குரல் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னணி என்ன? - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், பாதுகாவலரை போலீஸார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இது தொடர்பாக அனுப்பிய சம்மனில் குறிப்பிட்டபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் வியாழக்கிழமை மீண்டும் சம்மன் ஒட்டப்பட்டது. அதில், பிப். 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் அந்த சம்மனை கிழித்தெறிந்தார். இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்ராஜேஷ் மற்றும் போலீஸார் சீமான் வீட்டுக்குச் சென்றனர்.

அப்போது, சீமான் வீட்டில் பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர் அமல்ராஜ், போலீஸாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆவேசமடைந்த காவல் ஆய்வாளர் அவரைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அமல்ராஜை போலீஸார் கைது செய்ய முயன்றதால், அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீஸார் அமல்ராஜின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று, காவல் துறை ஜீப்பில் ஏற்றினர்.

இதற்கிடையில், பாதுகாவலர் அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவரிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், சம்மனை கிழித்ததாக சீமானின் உதவியாளர் சுபாகர் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் நடந்தபோது சீமான் மனைவி கயல்விழி வீட்டிலிருந்து வெளியே வந்து, காவல் ஆய்வாளரிடம் மன்னித்து விடுமாறு முறையிட்டார். கைது செய்யப்பட்ட அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘நான் கைதுக்கு பயப்பட மாட்டேன்’ - சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்ம் கூறும்போது, “காவல் ஆய்வாளர் ப்ரவீன் போன்றவர்களின் அணுகுமுறையால் காவல் துறைக்கே களங்கம். எனக்கு மட்டுமே வழங்கப்பட்ட அழைப்பாணையை அனைவரும் படிக்கும் விதத்தில் ஊடகங்கள் முன்னிலையில் ஒட்டிய அணுகுமுறையே தவறானது. அதேபோல் காவலாளி அமல்ராஜோ உள்ளிட்டோர் அழைப்பாணையை ஒட்டியபோது தடுக்கவில்லை, அப்படி தடுத்திருந்தால் தவறு. இதுபற்றி எனக்கும், எனது மனைவிக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு அந்த அழைப்பாணை அங்கு ஏன் இருக்க வேண்டும்.

திமுக கருத்தியல் ரீதியாக எதிர்க்காமல் தனிப்பட்ட முறையில் அனைவரையும் எதிர்க்கிறது. இதை பார்க்கும் போது, அந்த பயம் இருகட்டும் என்ற திமிர் தான் தனக்கு ஏற்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரம், சாரயம் காய்ச்சுவது, பள்ளிகளில் போதை பொருள் புழக்கம், கூட்டு பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் சட்டம் தன் கடமையை ஏன் செய்யவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை (நடிகை விஜயலட்சுமி) பேச வைத்து பிரச்சினை செய்து வருகிறார்கள். நான் கைதுக்கு பயப்பட மாட்டேன். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அது முடிந்ததும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கபடும்” என்றார்.

‘போலீஸ் விசாரணையில் புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை’ - சீமான் | No new questions asked in police investigation says Seeman - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

கட்டாயமாக சீமானுக்கு சாதகம்தான்.

மனைவி கயல்விழி, முன்னாள் அதிமுக சபாநாயகர் காளிமுத்துவின் மகள் தயவில் பணக்காரர்கள் இருக்கும் நீலாங்கரையில் வசிக்கின்றார். இன்னும் வளர்ச்சியைப் பெற்று அதிபணக்காரர்கள் விரும்பும் போயஸ் கார்டன், அடையாறு பகுதிகளில் வசிக்கமுடியும்😁 Boat Club இல் லம்போகினி, ஜகுவாரில் போய் இறங்கவும் முடியும்😃

இது போன்ற தூய்மை மற்றும் நேர்மை எல்லாம் முள்ளிவாய்க்காலில் புதைச்சாச்சு. இவை ஒரு உரோமத்தை புடுங்க கூட உதவாது. எப்படி வென்றோம் என்பதெல்லாம் உலகுக்கு வெறும் கோசம் மட்டுமே.

எனக்கு தமிழ் நிலம் தமிழர்கள் கையில் இருக்கணும். வங்கம் போல எங்கள் ரத்தத்திற்கு நான் உதவப்போகிறேன் என்று சொல்ல ஒருத்தன் இருந்தால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

"தமிழர் கைகளில்"??

சீமானே தமிழர் இல்லையென்கிறார்கள், மலையாள பூர்வீகம் (எங்களில் பலரும் அதே தான்). பிறகு யார், எப்படிப் பட்ட தமிழர் ஆள வேண்டுமென்கிறீர்கள்? பிஜேபி அண்ணாமலை போன்ற தமிழர்களா? அல்லது எடப்பாடியைக் குறிப்பிடுகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

"தமிழர் கைகளில்"??

சீமானே தமிழர் இல்லையென்கிறார்கள், மலையாள பூர்வீகம் (எங்களில் பலரும் அதே தான்). பிறகு யார், எப்படிப் பட்ட தமிழர் ஆள வேண்டுமென்கிறீர்கள்? பிஜேபி அண்ணாமலை போன்ற தமிழர்களா? அல்லது எடப்பாடியைக் குறிப்பிடுகிறீர்களா?

நான் நாம் தமிழர் கட்சி பற்றி மட்டுமே பேசுகிறேன் எழுதுகிறேன். சீமான் எனக்கு கணக்கல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

நான் நாம் தமிழர் கட்சி பற்றி மட்டுமே பேசுகிறேன் எழுதுகிறேன். சீமான் எனக்கு கணக்கல்ல.

நா.த.க பஸ் சாரதி கணக்கில்லை, "பஸ்" மட்டும் தான் முக்கியம் என்கிறீர்கள்😂?

சரி. இந்தியாவிலோ, தமிழ் நாட்டிலோ ஆட்சியைப் பிடிக்கும் கட்சியின் தலைவர் பிரதமர்/முதல்வர் ஆகாத அதிசயம் இது வரை நடந்திருக்கிறதா? இப்பவே, கொன்டக்ரையும், பயணிகளையும் வெளியே தள்ளி விடும் சாரதி சீமான், நாதக வென்றால் ஒதுங்கிப் போய் விடுவார் என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டை இதுவரை ஆட்சி செய்த அனைவரும் தமிழர்களே. இனதூய்மை வாதம் பேசும் இனவெறி சீமான் கட்சி என்றுமே ஆட்சி பீடம் ஏறாது. ஆனால் மக்களிடையே நச்சு கருத்துகளை விதைக்கும் அயோக்கியத்தனத்தை அது மேற்கொள்ளும். இனதூய்மை வாத நஞ்சை மக்களிடையே விதைக்கும் சீமானும் கலப்பினம் தான். சீமானின் மனைவியும் கலப்பினம் தான். தான் கேரள வம்சாவழி என்பது மறைக்கவே சீமான் என்ற அயோக்கிய அரசியல் வாதி இனதூய்மை வாதத்தை பேசுகிறார். சீமான் என ற இனவெறியரை ஆதரிக்கும் எவருக்கும் சிங்கள இனவாதத்தை பற்றி பேச அருகதை இல்லை. சிங்கள இனவாதிகளை விட மோசமான இனவாதிகள் இந்த சீமானின் தற்குறி தம்பிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

ஆமாம்

நாம் தமிழர் கட்சி சீமானுடையது அல்ல. அதை ஆரம்பித்தவரும் அவரல்ல. இன்று அதற்கு தலைமை தாங்குவது சீமான். இதுவரை நாம் தமிழரை இந்த இடத்தில் கொண்டு வந்தவர் என்ற நன்றிக் கடன் மட்டும் சீமான் மீது என்றும் உண்டு.

அவரது தலைமைப் பண்புகள் கேள்விக்குள்ளாகும்போது காலம் தொடர்ந்து நாம் தமிழரை ஒரே பாதையில் கொண்டு செல்லும் செல்லவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இதே புரிதல் சீமானுக்கு இருக்க வேண்டும். சீமானின் சாக்கடைத் தனமான அரசியல் உத்திகளை ரசிக்கும் தீவிர சீமான் தம்பிகளுக்கும் இருக்க வேண்டும்.

தற்போதைய நிலையின் படி, இந்த இரு தரப்புகளும் மாறப் போவதில்லை (தங்களுக்கு இன்பம் தரும் ஒன்றை யார் மாற்றுவர்?). எனவே, நா.த.க நச்சுச் செடியாகத் தொடரப் போவதே நடக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நான் நாம் தமிழர் கட்சி பற்றி மட்டுமே பேசுகிறேன் எழுதுகிறேன். சீமான் எனக்கு கணக்கல்ல.

நான் கழுத்துக்கு கீழே இருப்பதை பறறி மட்டுமே கதைக்கிறேன்.

தலை எனக்கு ஒரு பொருட்டல்ல 🤣

தமிழர் நிலம் தமிழர் கையில் இருக்க வேண்டும் என கூறி கொண்டு அப்பட்டமாக ரோவின் கைக்கூலி என தெரியும் ஒரு மலையாளியால் 100% கட்டுப்படுத்தப்படும் கட்சிக்கு ஆதரவு நல்குவது…

முள்ளிவாய்க்காலோடு சிந்திக்கும் ஆற்றலையும் பல காதல் தோல்வி தாடிக்கார அண்ணை மார் புதைத்து விட்டனர் என்பதையே காட்டி நிற்கிறது

51 minutes ago, விசுகு said:

நாம் தமிழர் கட்சி சீமானுடையது அல்ல. அதை ஆரம்பித்தவரும் அவரல்ல. இன்று அதற்கு தலைமை தாங்குவது சீமான்

அதை ஆரம்பித்த சுப முத்துகுமாரை ரோவோடு சேர்ந்து போட்டு தள்ளிவிட்டு, கட்சியை ரோவிடம் அடகுவைத்தவர் சீமான்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

அவரது தலைமைப் பண்புகள் கேள்விக்குள்ளாகும்போது காலம் தொடர்ந்து நாம் தமிழரை ஒரே பாதையில் கொண்டு செல்லும் செல்லவேண்டும்.

கல்யாணசுந்தரம், ரஜீவ், காளி, இன்னும் எத்தனையோ “தமிழர்கள்” நாம் தமிழரில் இருந்து விரட்டப்பட்டுள்ளனர்.

சீமான் அதில் இருக்கும்வரை நாம் தமிழர் ரோவின் சப் ஆபீஸ்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

நான் கழுத்துக்கு கீழே இருப்பதை பறறி மட்டுமே கதைக்கிறேன்.

தலை எனக்கு ஒரு பொருட்டல்ல 🤣

தமிழர் நிலம் தமிழர் கையில் இருக்க வேண்டும் என கூறி கொண்டு அப்பட்டமாக ரோவின் கைக்கூலி என தெரியும் ஒரு மலையாளியால் 100% கட்டுப்படுத்தப்படும் கட்சிக்கு ஆதரவு நல்குவது…

முள்ளிவாய்க்காலோடு சிந்திக்கும் ஆற்றலையும் பல காதல் தோல்வி தாடிக்கார அண்ணை மார் புதைத்து விட்டனர் என்பதையே காட்டி நிற்கிறது

அதை ஆரம்பித்த சுப முத்துகுமாரை ரோவோடு சேர்ந்து போட்டு தள்ளிவிட்டு, கட்சியை ரோவிடம் அடகுவைத்தவர் சீமான்.

மீண்டும் சொல்கிறேன். பேயுடன் சேர்ந்தும் நடக்கவேண்டும். எம்மை வென்றவர் தொட்டு வென்று காட்டியது அது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

`அந்தப் பெண் பாலியல் புகார் அளித்தால் குற்றம் செய்ததாகிவிடுமா? உதவி வேண்டும் எனக் கேட்டதால் அந்தப் பெண்ணுக்கு 50,000 ரூபாய் கொடுக்க சொன்னேன். அதைத்தாண்டி அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை." என்று கூறினார்.

சில மணி நேரத்தில் பிளேட்டை மாத்திய சைமன்.

👆👇

2 hours ago, பிழம்பு said:

விரும்பி வந்து அவர் உறவு வைத்துக் கொண்டார்.

1 minute ago, விசுகு said:

மீண்டும் சொல்கிறேன். பேயுடன் சேர்ந்தும் நடக்கவேண்டும். எம்மை வென்றவர் தொட்டு வென்று காட்டியது அது.

பேயுடன் சேர்ந்தாலும் நடக்கலாம்.

ரோவுடன் சேர்ந்தால் குல நாசம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

தமிழ் நாட்டை இதுவரை ஆட்சி செய்த அனைவரும் தமிழர்களே. இனதூய்மை வாதம் பேசும் இனவெறி சீமான் கட்சி என்றுமே ஆட்சி பீடம் ஏறாது. ஆனால் மக்களிடையே நச்சு கருத்துகளை விதைக்கும் அயோக்கியத்தனத்தை அது மேற்கொள்ளும். இனதூய்மை வாத நஞ்சை மக்களிடையே விதைக்கும் சீமானும் கலப்பினம் தான். சீமானின் மனைவியும் கலப்பினம் தான். தான் கேரள வம்சாவழி என்பது மறைக்கவே சீமான் என்ற அயோக்கிய அரசியல் வாதி இனதூய்மை வாதத்தை பேசுகிறார். சீமான் என ற இனவெறியரை ஆதரிக்கும் எவருக்கும் சிங்கள இனவாதத்தை பற்றி பேச அருகதை இல்லை. சிங்கள இனவாதிகளை விட மோசமான இனவாதிகள் இந்த சீமானின் தற்குறி தம்பிகள்.

நாலு சொற்கள் மரியாதையாக பாவிக்க வராத நீங்கள் எல்லாம் சீமான் பேச்சு தவறென்பதெல்லாம் எவ்வளவு முரண்.

உங்களுக்கு சிறீலங்காவும் புரியல தமிழர் தாயகமும் அதன் விடுதலைக்கோரிக்கையும் புரியல. எமது நிலம் எனக்கு என்பதற்கும் மற்றவர் நிலத்தை அபகரிப்பதற்குமான இன முரண்பாடும் தெரியல.

சீமானை இனவாதி என்றபடி சீமானின் மனைவியை கலப்பினம் என்று எந்த மூஞ்சியை வைத்து கொண்டு எழுதுகிறீர்கள்?? முதலில் உங்கள் மனதில் உள்ள இவ்வாறான அழுக்கை துடையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

சீமானை இனவாதி என்றபடி சீமானின் மனைவியை கலப்பினம் என்று எந்த மூஞ்சியை வைத்து கொண்டு எழுதுகிறீர்கள்??

நானும் இப்படி எழுதுவதால் விளக்கம்:

சீமான் இனதூய்மைவாதம் பேசாவிடில் இதை நான் கதைக்கபோவதில்லை.

ஆனால் அவர் தூய (இனத்தூய்மை) தமிழர் மட்டுமே ஆளவேண்டும் என்கிறார். ஆனால் அவரோ மலையாளி, அவரின் மனைவியோ தெலுங்கு+தமிழ் கலப்பின வழித்தோன்றல்.

இது கபடத்தனமாது. இதை சுட்டுவது இனவாதம் ஆகாது.

உதாரணமாக நைஜல் பராஜ்தான் ஜேர்மன் பெண்ணமணம் முடித்து, தன் பிள்ளைகளுக்கு ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்தப்படியே, பிரெக்சிற்றினை நடத்தினார்.

அதை விமர்சித்தோம்.

அதேபோலத்தான் இதுவும்.

Just now, goshan_che said:

இது கபடத்தனமாது. இதை சுட்டுவது இனவாதம் ஆகாது.

தமிழர் தலையில் மிளாகாய் அரைக்கபார்க்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

28 Feb 2025, 9:38 PM

Screenshot-2025-02-28-213747.jpg

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்ரவரி 28) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

சீமான் மீது விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை 12 வாரங்களுக்குள் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சீமானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர். இதனையடுத்து சேலத்தில் இருந்து இன்று மாலை சென்னை வந்த சீமான், இரவு 8 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்ற சீமான், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் வளசரவாக்கம் காவல் நிலையம் நோக்கி புறப்பட்ட சீமான், தனது மனைவியும் வழக்கறிஞருமான கயல்விழி வருகைக்காக காத்திருந்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கயல்விழி வருகைக்காக காத்திருந்த சீமான் இரவு 9.38 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://minnambalam.com/political-news/seeman-in-valasaravakkam-police-station/

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

உண்மையா. ?? உண்மையா ??? உண்மையா.??? இந்த சீமான் அந்த பெணணுடன். பல ஆண்டுகள் குடும்பம் நடத்தியது உண்மையா. ?? உணமை எனில் அவருக்கும். ஒரு தாலியை கட்டி னால். இந்த பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வந்து விடும் 🤣😂🙏

அப்பவே, 2011ம் ஆண்டில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றினார்கள் என்று தான் விஜயலட்சுமி சொல்கின்றார். சமயாசாரப்படி நடந்த விவாகம் என்று ஒன்று ஊரில் இருப்பது போல.

நீங்கள் சொல்லியிருப்பது தான் அண்ணா மிக எளிய தீர்வு. இருவருமே ஒன்றாக வாழ்ந்திருப்பதால் இதை ஏற்றுக் கொண்டு போவது தான் சரி. தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒரு மனைவியா அல்லது ஒன்றுக்கு மேலா என்பதெல்லாம் பிரபலங்களுக்கும், அரசியலுக்கும் ஒரு பொருட்டே அல்ல. மேலும் சீமானின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் எவரும் அவர் இதை ஒத்துக் கொண்டால் கூட, அவரை விட்டு நீங்கப் போவது கிடையாது.

தமிழ் தமிழ் என்று சொல்லி விட்டு, அவரின் மகனே தமிழில் படிக்கவில்லை என்பது வெளியில் தெரிந்த போது, அவரின் ஆதரவாளர்கள் எவராவது அதன் காரணமாக விலகினார்களா............ இல்லைத்தானே, மாறாக அவரின் தெரிவை நியாயம் தான் செய்தார்கள்.

யார் முதல் மனைவி, அதன் காரணமாக சொத்துரிமை என்பதில் சிக்கல் வரும் தான். கயல்விழி வீட்டில் இருந்து வந்ததவைகள் அவருக்கே சொந்தமாகும், ஆனால் இவர் சேர்த்தவைகளை பிரிக்கத்தான் வேண்டும்.

திமுக இதை வேண்டும் என்றே தான் செய்கின்றது. இது மட்டும் இல்லை, இன்னும் பல வழக்குகள் இவர் மேல் சமீபத்தில் போடப்பட்டன. நேற்று இன்னொரு சம்மனும் ஈரோட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போயிருக்கின்றார்கள். 'வெடிகுண்டு எறிவேன்.................' என்று சமீபத்திய இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதால் வந்த வழக்கு அது.

இதைவிட பெரியார் பற்றி இவர் பேசியதை ஒட்டி பல ஊர்களில் வழக்கு போடப்பட்டிருக்கின்றது. வருண் ஐபிஎஸ் வழக்கும் இருக்கின்றது.

பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக, மேடையில் எதையும்பேசலாம் என்றில்லை. எவரையும் எந்த சொல்லாலும் இழிவுபடுத்தலாம் என்றில்லை. இணையத்தில் அநாகரீகமாக தனிமனிதர்களையும், குடும்பங்களையும் சித்தரிக்கலாம் என்றில்லை. மீறி, இவர் கட்டுப்பாட்டை இழந்ததால், அதுவே பூமராங் போல சுழன்று கொண்டு திரும்பி வருகின்றது இப்பொழுது .........................

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரசோதரன் said:

நீங்கள் சொல்லியிருப்பது தான் அண்ணா மிக எளிய தீர்வு.

இதில் இரெண்டு சிக்கல்கள் உள்ளது.

  1. முன்னர் இதை பற்றி யாழில் கதைத்திருந்தோம். Obtaining consent through deception. உதாரணமாக யூகேயில் - ஒருவரை நான் ஏமாற்றி அதன் மூலம் அவர் உடலுறவுக்கு இசைந்தால் - அந்த இசைவு செல்லாது. ஆகவே அந்த உறவு பாலியல் வல்லுறவாக கொள்ளப்படலாம். இந்திய சட்டம், திருமணம் செய்வேன் என ஆசை வார்த்தை காட்டி, ஒரு பெண்ணின் இசைவை பெறுவதையும் இப்படி ஒரு குற்றம் என்றே கருதுவதாகத்தான் என் தேடல் காட்டுகிறது.

    ஆகவே - இந்த குற்றவியல் வழக்க்குக்கு - ஆம் விஜி அண்ணியை நான் திருமணம் செய்வதாக சொல்லி உடலுறவு கொண்டேன் என சீமான் ஏற்பது - குற்றத்தை ஏற்பது ஆகி விடும்.

  2. மாறாக நான் அவரை சொல்லியது போல் திருமணம் செய்தேன் (கோவிலில் மாலை மாற்று) ஆகவே ஏமாற்றவில்லை என சீமான் சொன்னால். ஒரு பென்ணை டிவோர்ஸ் பண்ணாமல் இன்னொரு பென்ணை திருமணம் செய்த polygamy வழக்கில் குற்றத்தை ஒப்பு கொண்டதாகிவிடும்.

  3. ஆகவே சீமானின் நிலை ஆப்பிழுத்த குரங்கு போல.

  4. இரெண்டே தெரிவுகள்தான் உள்ளன. ஒன்று விஜி அண்ணியிடம் எந்த வாக்குறுதியும் கொடாமல், தனியே sex for fun உறவு மட்டுமே வைத்தேன் என சொல்லுவது, அதை நிறுவுவது. அதன் மூலம் இரு குற்றசாட்டில் இருந்தும் தப்புவது. அல்லது எவர் காலில் விழுந்தாவது வழக்கை குழப்பி அடிப்பது.

51 minutes ago, ரசோதரன் said:

மேலும் சீமானின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் எவரும் அவர் இதை ஒத்துக் கொண்டால் கூட, அவரை விட்டு நீங்கப் போவது கிடையாது.

கொகேயின் பாவனையாளர்கள் திருந்த வாய்புகள் அதிகம்.

52 minutes ago, ரசோதரன் said:

பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக, மேடையில் எதையும்பேசலாம் என்றில்லை

பேச்சு சுதன்ந்திரத்தை போலவே வழக்கு போடும் சுதந்திரமும் உள்ளது.

வாயை வாடகைக்கு விட்டால், வாடகைக்கு வரி கட்டத்தானே வேண்டும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரசோதரன் said:

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒரு மனைவியா அல்லது ஒன்றுக்கு மேலா என்பதெல்லாம் பிரபலங்களுக்கும், அரசியலுக்கும் ஒரு பொருட்டே அல்ல

சாதாரண மனிதருக்கு கூட அநேகம் இப்படி உறவுகள் இருப்பது வழமை (இருபாலாருக்கும்).

ஆனால் எவர் ஆனாலும் சட்டபடி இரு திருமணம் கட்ட முடியாது.

மனைவி+துணைவி(கள்) ஓக்கே (கயல் அண்ணி கூட காளிமுத்துவின் தெலுங்கு துணைவி மகள்தான்).

ஆனால் மனைவி+மனைவி குற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

கொகேயின் பாவனையாளர்கள் திருந்த வாய்புகள் அதிகம்.

ஆமா தட்ஸ் ட்ரூ!

You can’t teach an old dog new tricks. 😂

  • கருத்துக்கள உறவுகள்

16 minutes ago, goshan_che said:

🤣.........

6 minutes ago, goshan_che said:

மனைவி+துணைவி(கள்) ஓக்கே (கயல் அண்ணி கூட காளிமுத்துவின் தெலுங்கு துணைவி மகள்தான்).

ஆனால் மனைவி+மனைவி குற்றம்.

மனைவி - துணைவி என்ற புகழ்பெற்ற அந்த கோட்பாட்டை வைத்து தான் நான் ஒரு தீர்வை முன்மொழிந்திருந்தேன்.........................🤣.

இந்தக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவருக்கு கூட ஆரம்பத்தில் ஒரு துணைவியார் சில சிக்கல்கள் கொடுத்தார் என்று எங்கோ பார்த்திருக்கின்றேன்.........

ஆனால் இங்கு இருவருமே நாங்கள் மனைவிகள் தான் என்று நின்றால், சீமானின் நிலை பூனையை மடியில் கட்டிக்கொண்டு பயணம் போவது போல ஆகிவிடும்..........

சாட்சிக்காரனை விட சண்டைக்காரனிடம் சரணடையலாம்............ இன்னொரு கடைசி முயற்சியாக நேரடியாக பேசிப் பார்க்க வேண்டியது தான்...........

இங்கு களத்தில் நீங்கள் பலர் இதை எல்லாம் எப்பவோ அணு அணுவாக ஆராய்ந்திருப்பீர்கள்..........👍.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

மனைவி - துணைவி என்ற புகழ்பெற்ற அந்த கோட்பாட்டை வைத்து தான் நான் ஒரு தீர்வை முன்மொழிந்திருந்தேன்.........................🤣

பெரிய கருணாநிதி செய்ததை சின்ன கருணாநிதி எப்போதோ செய்திருப்பார்.

ஆனால் நான் அறிந்தவரையில் இருவரும் துணைவி ஸ்தானத்துக்கு தயார் இல்லை.

இங்கேதான் ஜட்ஜின் “விஜி அண்ணிதான் முதல் மனைவியா?” என்ற கேள்வி சட்ட முக்கியத்துவம் பெறுகிறது.

விஜி அண்ணியினை மாலைமாற்றி திருமணம் செய்தது நிரூபிக்கப்பட்டு அது முதல் திருமணமாக ஏற்கப்படின், அவர்தான் மனைவி.

கயல் அண்ணி துணைவி.

அப்போ கயல் அண்ணியிடனான திருமணம் செல்லாது. விஜி அண்ணியை டிவோர்ஸ் பண்ணி, ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்.

Polygamy வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.

பின் வேண்டும் என்றால் கயல் அண்ணியை முறைப்படி முடிக்கலாம்.

துணைவி மகளானதானும் துணைவியாக கூடாது என்பது விஜி அண்ணியின் (நியாயமான) நீண்டகால எதிர்பார்ப்பாம்.

அண்ணன் இரெண்டு அண்ணிகளின் கனவுகளோடு, வாழ்க்கையோடு, உணர்வுகளோடு தன் காமத்தை மட்டுமே கருதி விளையாடி உள்ளார்.

உண்மையில் இரு அண்ணிகளும் பரிதாபத்துக்குரியோரே.

சொந்த உறவை அவள் விடுவாளோ, கொண்ட உறவை இவள் விடுவாளோ.

33 minutes ago, வாலி said:

ஆமா தட்ஸ் ட்ரூ!

You can’t teach an old dog new tricks. 😂

வாங்க வாலி சார்…என்னென்னமோ நடக்குது தமிழ்நாட்ல. நீங்க அப்செண்ட்.

உங்களை போல தமிழக அரசியல் விடயஞானம் உள்ள இன்னொருவர் ரசோ அண்ணை. உங்கள் வெற்றிடத்தை அவரால் நிரப்பி கொள்கிறேன்😃.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எல்லாவற்றையும் முழுமையாக பார்ப்பதற்கு நேரம் இல்லை. ஆனால் சீமான் காவற்துறை குறிப்பிட்ட காலத்தில் தான் வரமுடியாமைக்கான காரணத்தை நேரடியாகவும், தனது சட்டத்தரணிகள் மூலமாகவும் அறிவித்திருக்கிறார். அதற்கு மதிப்பளித்து உடன்பட்டிருக்கவேண்டும். சரி, சட்ட அடிப்படையில் ஒட்டினார்கள், சாட்சியாக ஒளிப்பதிவு செய்தார்கள் அவர்களது கடமை நிறைவேறியது. அவர்கள் கிழிக்கிறார்களா, வாசிக்கிறார்களா என்பதை ஏன் ஒட்டுப்பார்க்கவேண்டும்? சரி கிழித்தது தவறென்றால் அதற்கு அவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் போலீசார், இராணுவத்தினர் ஆட்சியாளரின் கூலிகளாக செயற்படுகின்றனர். பின்னர் தாக்கப்படுவதும் தண்டிக்கப்படுவதும் அவர்களே. இங்கே அமலராஜ், பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து போலீசாரை தாக்க முயன்றார் போலீசார் உடனடியாக செயற்பட்டு அவரை சுட்டுக்கொன்றார் அல்லது சிறையில் தற்கொலை செய்து கொண்டாரென செய்தி வராமலிருந்தால் சரி. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை அனுபவித்தவர்கள், உண்மையான குற்றவாளிகள் அல்லர் என்று தெரிந்தும், அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்த கொடிய பாவிகள், அவர்கள் தங்கள் இறுதிக்காலத்தை கூட வெளியில் அனுபவிக்க விடாமல் அவர்களின் விடுதலையை எதிர்த்து கூப்பாடு போட்டவர்கள், தமிழருக்கு ஆதரவாக கதைக்கும் சீமானை பழிவாங்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருப்பார் எனும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என கடந்து போக முடியாது. வற்புறுத்தி செய்யாத  குற்றத்தை ஏற்றுக்கொள்ள வைத்து தண்டனையளிப்பதும், பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து அப்பாவிகளை கைது செய்வதும் கொலை செய்வதும் ஒன்றும் இவர்களுக்கு புதிதில்லை. நாட்டில் அமைதி சமாதானம் நிலவவேண்டுமானால்;   அரசியல் அடாவடிகள், துணைபோகும் நீதிமன்றம், காவற்துறை, ஊடகத்துறை பொறுப்போடு செயற்படவேண்டும்.  விஜய லட்சுமி பாதிக்கப்பட்டிருந்தால்; சீமானின் கலியாணத்தை நிறுத்தி அப்போதே பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கலாம், சட்டத்துறையை நாடியிருக்கலாம், நட்ட ஈட்டை பெற்றிருக்கலாம், இல்லை அவரையே திருமணம் செய்திருக்கலாம் விரும்பினால். இதுவெல்லாம் நடக்காத காரியமா இந்தியாவில்? வேறென்ன செய்ய எதிர்பார்க்க முடியும் இச்சந்தர்ப்பத்தில்? அதை விட்டு காலம் காலமாக இந்த விடயத்தை நீட்டுவது ஏதோ பின்னணியில் என்பது தெளிவாக தெரிகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, satan said:

சுத்தம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

NTK Ex-army Wing எச்சரிக்கை| சீமான் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த Ex-army அமல்ராஜ் மீது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.