Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் சுழ‌ல் ப‌ந்து ஜ‌பிஎல்ல‌ எடுப‌டாது

தேசிய‌ அணிக்கு விளையாடும் போது ப‌ந்து வீச்சு ஓக்கே , ஜ‌பிஎல்ல‌ இவ‌ர்க‌ளின் ப‌ந்துக்கு சிம்பிலா அடிக்கின‌ம்..........................

நீங்கள் கூறுவது சரி எனவே கருதுகிறேன், இரட்டை தன்மை கொண்ட மெதுவான ஆடுகளத்தில் சுழல் பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது over spin வீச வேண்டும் இதனை கொல்கத்தா அணியினர் சரியாக செய்தார்கள், பந்து மேலெழுந்து வரும், குயின்டன் வனிந்து கசரங்கவின் கூக்கிளி பந்தினை சுழலுக்கு எதிராக ஒரு 6 அடிப்பார்.

ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப அளவுகளை மாற்றி வீச வேண்டும், ஆடுகளம் மெதுவாக உள்ள நிலையில் அளவு குறைந்த பந்துகளை வீசும் சுழல் பந்து வீச்சாளர்களை அடித்தாடுவது இலகு.

ராயஸ்தன் அணியின் அணிதலமையும் மோசமாக இருந்தது, இதுவரை காணப்படும் நிலைகளின் அடிப்படையில் இந்த ஆண்டு இந்த அணி மோசமான அணியாக உள்ளது.

  • Replies 3.3k
  • Views 98.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மைதானங்களில் அதுவும் t20 போட்டிகளில் Archar முதலிலேயே ஓவர்களை போட்டு முடித்துவிடவேண்டும். இறுதி ஓவர்களில் அவரது பந்துவீச்சு வேகங்களில் அதிக மாற்றங்கள் இல்லாததால் அடித்தாடுவது மிக இலகு.

மற்றயது ஹெட்மயரை எட்டாவதாக பேட் பண்ண அனுப்பியது மிகத்தவறு. பூரான் மாதிரி நாலாவதாக அவர் களமிறங்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, vasee said:

நீங்கள் கூறுவது சரி எனவே கருதுகிறேன், இரட்டை தன்மை கொண்ட மெதுவான ஆடுகளத்தில் சுழல் பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது over spin வீச வேண்டும் இதனை கொல்கத்தா அணியினர் சரியாக செய்தார்கள், பந்து மேலெழுந்து வரும், குயின்டன் வனிந்து கசரங்கவின் கூக்கிளி பந்தினை சுழலுக்கு எதிராக ஒரு 6 அடிப்பார்.

ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப அளவுகளை மாற்றி வீச வேண்டும், ஆடுகளம் மெதுவாக உள்ள நிலையில் அளவு குறைந்த பந்துகளை வீசும் சுழல் பந்து வீச்சாளர்களை அடித்தாடுவது இலகு.

ராயஸ்தன் அணியின் அணிதலமையும் மோசமாக இருந்தது, இதுவரை காணப்படும் நிலைகளின் அடிப்படையில் இந்த ஆண்டு இந்த அணி மோசமான அணியாக உள்ளது.

ந‌ட‌ந்து முடிந்த‌ 6 விளையாட்டில்

மூன்று விளையாட்டை நாண‌ய‌ம் தான் வென்று கொடுத்த‌து..............நாண‌ய‌த்தில் வெல்லும் க‌ப்ட‌ன் மார் உட‌ன‌ ப‌ந்து வீச்சை தான் தெரிவு செய்கின‌ம்................

இன்றும் கே கே ஆர் நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்து ராஜ‌ஸ்தானை 151ர‌ன்சில் ம‌ட‌க்கி விட்டின‌ம்

உண்மை தான் இந்த‌ வ‌ருட‌ம் ராஜ‌ஸ்தான் அணியில் ந‌ம்பிக்கை த‌ரும் வீர‌ர்க‌ள் யாரும் இல்லை.................ப‌ந்து வீச்சில் சுத‌ப்பும் வீர‌ர்க‌ள் , ம‌ட்டைய‌டியில் அதிர‌டியாக‌ விளையாடும் வீர‌ர்க‌ள் குறைவு......................இர‌ண்டு மூன்று திற‌மையான‌ வீர‌ர்க‌ளை வைத்து கொண்டு அணிய‌ வெற்றி பாதைக்கு அழைத்து செல்வ‌து சிர‌ம‌ம்.................ராஜ‌ஸ்தான் தொட‌ர் தோல்வி........................ஏல‌த்தில் உள்ளூர் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வேண்ட‌ ராஜ‌ஸ்தான் கொச் கோட்டை விட்டு விட்டார்.................................

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, வீரப் பையன்26 said:

ந‌ட‌ந்து முடிந்த‌ 6 விளையாட்டில்

மூன்று விளையாட்டை நாண‌ய‌ம் தான் வென்று கொடுத்த‌து..............நாண‌ய‌த்தில் வெல்லும் க‌ப்ட‌ன் மார் உட‌ன‌ ப‌ந்து வீச்சை தான் தெரிவு செய்கின‌ம்................

இன்றும் கே கே ஆர் நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்து ராஜ‌ஸ்தானை 151ர‌ன்சில் ம‌ட‌க்கி விட்டின‌ம்

பெரும்பாலும் மைதான ஈரலிப்பினை பொறுத்தே முதலாவதாக பந்து வீசுவதா இல்லையா என தெரிவு செய்கிறார்கள், ஆனாலும் வேறு பல காரணிகள் அதனை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

இரட்டை தன்மை கொண்ட ஆடுகளங்களில் கூட ஆரம்ப ஓவர்களில் பந்து புதிதாக இருக்கும் போது பந்து வழுக்கி மட்டைக்கு இலகுவாக வரும், அதனால் பந்து புதிதாக இருக்கும் போது அடித்தாடுவது வசதியாக இருக்கும் ஆனால் உய்ரிப்பான ஆடுகளங்களில் நிலமை நேர்மாறாக இருக்கும் ஆடுகளத்தில் உள்ள புற்கள் பந்தில் தரையில் படும் போது அதிகமான மாற்றங்களை துடுப்பாட்டக்காரர்கள் முகம் கொடுக்க வேண்டும்.

இந்த ஆடுகளம் fresh pitch ஆக இருந்தது (புற்கள் காணப்பட்டது), இதுவும் ஒரு காரணம், அத்துடன் மைதான ஈரலிப்பினை எதிர்பார்த்தார்கள் (ஆனால் பெரிதாக மைதான ஈரலிப்பு காணப்படவில்லை), அது பந்தினை பிடிப்பது கடினமாக இருக்கும் இரண்டாவது பந்து வீசும் அணிக்கு அத்துடன் ஆடுகளத்தில் பந்து வழுக்கி மட்டைக்கு இலகுவாக வரும்.

ஆனால் மைதான ஈரலிப்பு இல்லாவிட்டால் மைதானம் மேலும் மெதுவாகி விடும் (பொதுவாக 10 ஓட்டங்கள் குறைவாகி விடும்).

ஆனால் இன்றைய போட்டியில் நாணய சுழல்ற்சி எந்த வித தாக்கத்தினையும் செலுத்தவில்லை என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, alvayan said:

இதில் நான் எழுதியவை யாவும் திரியை கலகலபாக்க வேண்டியே...நிச்சயமாக யாரையும் நோகடிக்க வல்ல..எனக்கும் கிரிகட்டில் அதிக விருப்பமே...கிறுக்கு என்றும் சோல்லலாம் ..தவறாக எதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும்

இது என்ன alvayan 🙏

இங்கே நீங்கள் யாரையும் நோகடிக்கவில்லை

நானும் பம்பலாகத்தான் எழுதினேன்

என்ரை தமிழ் வகுப்பிலை பொடி பெட்டையள் அடிக்காத நக்கலா,,,, விடாத நளினமா...

வாங்கோ கப்பைத் தூக்கும் வரை சேர்ந்தே இந்தத் திரியில் கலந்திருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஐபிஎல் 2025 இன் 06வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடாததால் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இலகுவான வெற்றி இலக்கை ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்கள் எடுத்த குயின்ரன் டிகொக்கின் அதிரடி ஆட்டத்தால் 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0395.jpeg

என்னப்பா இது ?கிரிக்கட்டை பிரித்து மேயும் வீரப்பையன்,வசீ எல்லோரும் கீழே கிடந்து நசிபடுகினம். நான் கடைசி நேரத்தில் பங்கேடுக்காமல் முதலே வந்திருந்தால் இப்ப செம்பாட்டானைக் கலைத்துக்கொண்டு வந்திருப்பன்.குருட்டு வாய்ப்பில் தெரிவு செய்த என்கு;கு அதிஸ்டம் கைகொடுக்குது போல ஈரோ மில்ல.லியன் இந்த வெள்ளிக்கிழமை 202 மில்லியனாம். இறங்கி அடிக்கிறன் மில்லியனர் ஆகிறன். காசு வேணுமெண்ட ஆட்கள் இப்பவே சொல்லி வையுங்கள்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0395.jpeg

செம்பாட்டானுக்கு எட்டு அடுக்குப் பாதுகாப்பு 😆

பத்துப்பேர் கொண்ட அணி 🤣

யாரும் இப்போது அவரை பதவியில் இருந்து அசைப்பது என்பது

கேள்விக்குறியாகவே உள்ளது😉

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, vasee said:

பெரும்பாலும் மைதான ஈரலிப்பினை பொறுத்தே முதலாவதாக பந்து வீசுவதா இல்லையா என தெரிவு செய்கிறார்கள், ஆனாலும் வேறு பல காரணிகள் அதனை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

இரட்டை தன்மை கொண்ட ஆடுகளங்களில் கூட ஆரம்ப ஓவர்களில் பந்து புதிதாக இருக்கும் போது பந்து வழுக்கி மட்டைக்கு இலகுவாக வரும், அதனால் பந்து புதிதாக இருக்கும் போது அடித்தாடுவது வசதியாக இருக்கும் ஆனால் உய்ரிப்பான ஆடுகளங்களில் நிலமை நேர்மாறாக இருக்கும் ஆடுகளத்தில் உள்ள புற்கள் பந்தில் தரையில் படும் போது அதிகமான மாற்றங்களை துடுப்பாட்டக்காரர்கள் முகம் கொடுக்க வேண்டும்.

இந்த ஆடுகளம் fresh pitch ஆக இருந்தது (புற்கள் காணப்பட்டது), இதுவும் ஒரு காரணம், அத்துடன் மைதான ஈரலிப்பினை எதிர்பார்த்தார்கள் (ஆனால் பெரிதாக மைதான ஈரலிப்பு காணப்படவில்லை), அது பந்தினை பிடிப்பது கடினமாக இருக்கும் இரண்டாவது பந்து வீசும் அணிக்கு அத்துடன் ஆடுகளத்தில் பந்து வழுக்கி மட்டைக்கு இலகுவாக வரும்.

ஆனால் மைதான ஈரலிப்பு இல்லாவிட்டால் மைதானம் மேலும் மெதுவாகி விடும் (பொதுவாக 10 ஓட்டங்கள் குறைவாகி விடும்).

ஆனால் இன்றைய போட்டியில் நாணய சுழல்ற்சி எந்த வித தாக்கத்தினையும் செலுத்தவில்லை என கருதுகிறேன்.

உங்க‌ட‌ நாட்டில் ந‌ட‌க்கும் ( விக் வாஸ் போட்டியில்) 20ஓவ‌ருக்கு அவ‌ர்க‌ள் தொட‌ர்ந்து அடிக்கும் ர‌ன்ஸ் 140தில் இருந்து 168 போன்ற‌ ர‌ன்ஸ் தான் அடிப்பின‌ம் , அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் அதிர‌டி விளையாட்டுக்கு பெய‌ர் போன‌ வீர‌ர்க‌ள்

இந்தியா மைதான‌ங்க‌ள் 20 வ‌ருட‌த்துக்கு முத‌ல் ர‌ன்ஸ் அடிக்க‌ சிர‌ம‌ம் ஆன‌ மைதான‌ங்க‌ள்...................ராஜிவ் காந்தி மைதான‌த்தில் 200ர‌ன்ஸ்ச‌ 16 ஓவ‌ரில் அடித்து விட‌லாம்....................சென்னை மைதான‌த்தை த‌விர்த்து ம‌ற்ற‌ மைதான‌ங்க‌ள் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌து

இதே ஜ‌பிஎல் தொட‌ரை டுபாயில் ந‌ட‌த்தின‌ கால‌த்தில் எந்த‌ அணியும் 200ர‌ன்ஸ் அடிச்ச‌தில்லை டுபாய் மைதான‌த்தில்.......................

டெல்லி எதிர் ல‌க்னோ விளையாடின‌ விளையாட்டை பார்த்தேன் ம‌ட்டையால் மெதுவாய் அடிக்க‌ ப‌ந்து சிக்ஸ்சுக்கு போகுது...............................

இல‌ங்கை , அவுஸ்ரேலியா , சிம்பாவே , வெஸ்சின்டீஸ் , இப்ப‌டியான‌ நாட்டு மைதான‌ங்க‌ளில் ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம்................ஜ‌மேக்காவில் இருக்கும் மைதான‌த்தில் முந்தி ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம் ,

இந்தியா மைதான‌ங்க‌ள் ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ங்க‌ள்...........

இங்லாந் மைதான‌ங்க‌ளில் 200ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம் அப்ப‌டி ஏதாவ‌து ஒரு மைச்சில் அடிச்சால் நூற்றுக்கு நூறு வெற்றி உறுதி👍..........................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

இலங்கை வீரரை 4வதாக இறக்கியிருந்தனர்.

டி கொக் நீங்கள் நினைத்ததை விட நன்றாக விளையாடினார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

மற்றயது ஹெட்மயரை எட்டாவதாக பேட் பண்ண அனுப்பியது மிகத்தவறு.

நீங்கள் சொல்வது 100% சரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை வியாழன் 27 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

SRH எதிர் LSG

20 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் மூன்று பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • சுவி

  • ஏராளன்

  • அகஸ்தியன்

இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்? bat_1f987.gif

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:
  1. ஏராளன்

  2. அகஸ்தியன்

வழமையில் இருவர் இருவரும் முன்னணியில் நிற்பவர்கள்.

இந்த போட்டியில் ஒரேயடியாக கீழே நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வீரப் பையன்26 said:

ராஜிவ் காந்தி மைதான‌த்தில் 230ர‌ன்ஸ்சுக்கு மேல் அடிச்ச‌ ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ளால்

சொந்த‌ மைதான‌த்தில் 175 ர‌ன்ஸ் கூட‌ அடிக்க‌ முடிய‌ வில்லை...............

இதுவரைகலாம் நடைபெற்ற T20 போட்டிகளில் இந்தியா மைதானங்களில் ஹைதராபாத் அணியின் ராஜீவ் காந்தி மைதானம் ஒரு ஓவருக்கு 9.7 ஒட்டங்கள் பெற்று முதல் இடத்தையும் பெங்களூரூ அணியின் சின்னசாமி மைதானம் ஒரு ஓவருக்கு 9.2 ஓட்டங்களையும், 3 வதாக டெல்லி அணியின் விசாகப்பட்டினம் மைதானம் இடம் பிடித்து இருக்கிறது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் தலா 2 இடங்களில் சொந்த மைதானங்களில் இம்முறை விளையாடுகிறது

இன்று இரவு லக்னோ அணியுடன் SRH அணி ராஜிவ் காந்தி மைதானத்தில் விளையாடுகிறது. மறுபடியும் வழமைபோல இம்மைதானத்தில் அதிக ஓட்டங்கள் கிடைக்குமா என்பது இன்று தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, புலவர் said:

என்னப்பா இது ?கிரிக்கட்டை பிரித்து மேயும் வீரப்பையன்,வசீ எல்லோரும் கீழே கிடந்து நசிபடுகினம். நான் கடைசி நேரத்தில் பங்கேடுக்காமல் முதலே வந்திருந்தால் இப்ப செம்பாட்டானைக் கலைத்துக்கொண்டு வந்திருப்பன்.குருட்டு வாய்ப்பில் தெரிவு செய்த என்கு;கு அதிஸ்டம் கைகொடுக்குது போல ஈரோ மில்ல.லியன் இந்த வெள்ளிக்கிழமை 202 மில்லியனாம். இறங்கி அடிக்கிறன் மில்லியனர் ஆகிறன். காசு வேணுமெண்ட ஆட்கள் இப்பவே சொல்லி வையுங்கள்.

புல‌வ‌ர் அண்ணா

நீங்க‌ள் சொன்ன‌ ப‌ழ‌மொழிய‌ உங்க‌ளுக்கே சொல்லுகிறேன்

நான் உப்பு விக்க‌ போனால் ம‌ழை பெய்யுது , மா விக்க‌ போனால் காற்று வீசுது 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

இப்ப‌ 6 போட்டி முடிந்து விட்ட‌து இன்னும் 67 போட்டி இருக்கு அதில் குருட் ல‌க் வேலை செய்தால் புள்ளி கிடைக்கும் ,

என் 4ல‌ தாண்டினால் பிற‌க்கு என‌க்கு ஏறு முக‌ம் தான்🥰😍.....................ந‌ட‌ந்து முடிந்த‌ அனைத்து விளையாட்டிலும் நாண‌ய‌த்தில் வென்ற‌ அணிக‌ள் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து 4 மைச்சை வென்று இருக்கின‌ம்

ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌ அணி 2மைச் தோத்து இருக்கின‌ம்...................போட்டி இர‌வு நேர‌ம் ந‌ட்ப்ப‌தால் ப‌னிப் பொழிவு மைதான‌த்தில் அதிக‌ம்

விளையாடும் அணிக‌ள் எத்த‌னை ர‌ன்ஸ் அடிப்பின‌ம் என்று க‌ணிப்ப‌து சிர‌ம‌ம்

இப்ப‌ கிடைக்காத‌ புள்ளிக‌ளை

கேள்வி 72க்கு பிற‌க்கு ச‌ரி செய்ய‌லாம் , நான் தெரிவு செய்த‌ வீர‌ர்க‌ள் அணிக‌ள் சாதிச்சால் , 3 புள்ளி , 5 புள்ளி அதில் பெற‌லாம் , என‌க்கு அதில் ந‌ம்பிக்கை இருக்கு அண்ணா

லொத்த‌ரில் வென்றால்

இந்த‌க் கால‌த்தில் கோடி காசு வைச்சு இருந்தாலும் க‌ம்ம‌ன்ன‌ இருக்க‌னும் அண்ணா ஏன் என்றால் நாங்க‌ள் வாழும் உல‌க‌ம் ஆவ‌த்தான‌ உல‌க‌ம் காசுக்காக‌ எதையும் செய்வின‌ம்

லொத்த‌ரில் வென்றால் அது உங்க‌ளுக்குள் ம‌ட்டும் இருக்க‌னும் அண்ணா அப்ப‌ தான் சேவ்ரி.........................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

இது என்ன alvayan 🙏

இங்கே நீங்கள் யாரையும் நோகடிக்கவில்லை

நானும் பம்பலாகத்தான் எழுதினேன்

என்ரை தமிழ் வகுப்பிலை பொடி பெட்டையள் அடிக்காத நக்கலா,,,, விடாத நளினமா...

வாங்கோ கப்பைத் தூக்கும் வரை சேர்ந்தே இந்தத் திரியில் கலந்திருப்போம்

அப்படி ஏதுமில்லை வாத்தியாரே....வாங்கோ கப்பைத் தூக்கும் வரை சேர்ந்தே இந்தத் திரியில் கலந்திருப்போம்.....இதுவே ..தொடர்வோம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

செம்பாட்டானுக்கு எட்டு அடுக்குப் பாதுகாப்பு 😆

பத்துப்பேர் கொண்ட அணி 🤣

யாரும் இப்போது அவரை பதவியில் இருந்து அசைப்பது என்பது

கேள்விக்குறியாகவே உள்ளது😉

கொஞ்ச நாளைக்கு இப்பிடியே இருக்கும் போல. காத்து நம்ம பக்கம்.

3 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை வீரரை 4வதாக இறக்கியிருந்தனர்.

டி கொக் நீங்கள் நினைத்ததை விட நன்றாக விளையாடினார்.

அவர்களின் பயிற்சியாளரும் அதையேதான் சொன்னார். ஹசரங்கவ அனுப்பியது வேலை செய்யவில்லை. சிம்ரன கடைசி பந்து பரிமாற்றத்துக்காக வைத்திருந்தார்கள் போல. அதுவும் வேலை செய்யவில்லை.

அவர்களும் நேற்று உப்புவிக்க போனா மழை பெய்தது. அவர்கள் செய்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

3 hours ago, வீரப் பையன்26 said:

புல‌வ‌ர் அண்ணா

நீங்க‌ள் சொன்ன‌ ப‌ழ‌மொழிய‌ உங்க‌ளுக்கே சொல்லுகிறேன்

நான் உப்பு விக்க‌ போனால் ம‌ழை பெய்யுது , மா விக்க‌ போனால் காற்று வீசுது 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

இப்ப‌ 6 போட்டி முடிந்து விட்ட‌து இன்னும் 67 போட்டி இருக்கு அதில் குருட் ல‌க் வேலை செய்தால் புள்ளி கிடைக்கும் ,

என் 4ல‌ தாண்டினால் பிற‌க்கு என‌க்கு ஏறு முக‌ம் தான்🥰😍.....................ந‌ட‌ந்து முடிந்த‌ அனைத்து விளையாட்டிலும் நாண‌ய‌த்தில் வென்ற‌ அணிக‌ள் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து 4 மைச்சை வென்று இருக்கின‌ம்

ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌ அணி 2மைச் தோத்து இருக்கின‌ம்...................போட்டி இர‌வு நேர‌ம் ந‌ட்ப்ப‌தால் ப‌னிப் பொழிவு மைதான‌த்தில் அதிக‌ம்

விளையாடும் அணிக‌ள் எத்த‌னை ர‌ன்ஸ் அடிப்பின‌ம் என்று க‌ணிப்ப‌து சிர‌ம‌ம்

இப்ப‌ கிடைக்காத‌ புள்ளிக‌ளை

கேள்வி 72க்கு பிற‌க்கு ச‌ரி செய்ய‌லாம் , நான் தெரிவு செய்த‌ வீர‌ர்க‌ள் அணிக‌ள் சாதிச்சால் , 3 புள்ளி , 5 புள்ளி அதில் பெற‌லாம் , என‌க்கு அதில் ந‌ம்பிக்கை இருக்கு அண்ணா

லொத்த‌ரில் வென்றால்

இந்த‌க் கால‌த்தில் கோடி காசு வைச்சு இருந்தாலும் க‌ம்ம‌ன்ன‌ இருக்க‌னும் அண்ணா ஏன் என்றால் நாங்க‌ள் வாழும் உல‌க‌ம் ஆவ‌த்தான‌ உல‌க‌ம் காசுக்காக‌ எதையும் செய்வின‌ம்

லொத்த‌ரில் வென்றால் அது உங்க‌ளுக்குள் ம‌ட்டும் இருக்க‌னும் அண்ணா அப்ப‌ தான் சேவ்ரி.........................

அந்தக் காத்து நம்ம பக்கம் வீசுது. நாங்கள் அந்த மாவையும் உப்பையும் படுத்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றோம். உருண்டு பிரண்டு சிரித்தபடி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

உங்க‌ட‌ நாட்டில் ந‌ட‌க்கும் ( விக் வாஸ் போட்டியில்) 20ஓவ‌ருக்கு அவ‌ர்க‌ள் தொட‌ர்ந்து அடிக்கும் ர‌ன்ஸ் 140தில் இருந்து 168 போன்ற‌ ர‌ன்ஸ் தான் அடிப்பின‌ம் , அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் அதிர‌டி விளையாட்டுக்கு பெய‌ர் போன‌ வீர‌ர்க‌ள்

இந்தியா மைதான‌ங்க‌ள் 20 வ‌ருட‌த்துக்கு முத‌ல் ர‌ன்ஸ் அடிக்க‌ சிர‌ம‌ம் ஆன‌ மைதான‌ங்க‌ள்...................ராஜிவ் காந்தி மைதான‌த்தில் 200ர‌ன்ஸ்ச‌ 16 ஓவ‌ரில் அடித்து விட‌லாம்....................சென்னை மைதான‌த்தை த‌விர்த்து ம‌ற்ற‌ மைதான‌ங்க‌ள் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌து

இதே ஜ‌பிஎல் தொட‌ரை டுபாயில் ந‌ட‌த்தின‌ கால‌த்தில் எந்த‌ அணியும் 200ர‌ன்ஸ் அடிச்ச‌தில்லை டுபாய் மைதான‌த்தில்.......................

டெல்லி எதிர் ல‌க்னோ விளையாடின‌ விளையாட்டை பார்த்தேன் ம‌ட்டையால் மெதுவாய் அடிக்க‌ ப‌ந்து சிக்ஸ்சுக்கு போகுது...............................

இல‌ங்கை , அவுஸ்ரேலியா , சிம்பாவே , வெஸ்சின்டீஸ் , இப்ப‌டியான‌ நாட்டு மைதான‌ங்க‌ளில் ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம்................ஜ‌மேக்காவில் இருக்கும் மைதான‌த்தில் முந்தி ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம் ,

இந்தியா மைதான‌ங்க‌ள் ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ங்க‌ள்...........

இங்லாந் மைதான‌ங்க‌ளில் 200ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம் அப்ப‌டி ஏதாவ‌து ஒரு மைச்சில் அடிச்சால் நூற்றுக்கு நூறு வெற்றி உறுதி👍..........................

மைதானங்களை விட இந்த ஐபிஎல் போட்டிகளே பணத்துக்காக தான். ஆறுகளும் நான்குகளும் பறந்தால் தான் மக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் கொண்டாட்டம். அதிகமான விதிகள் மட்டையாளர்களுக்குச் சாதகமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதனால் தான் நான் ஜபிலை பெரிதாகப் பார்ப்பதில்லை. இந்தக் களத்தில் கலந்து கொண்ட பின்னர் தான் கூடுதலாக பார்த்திருக்கின்றேன், பார்த்துக் கொண்டிருக்கின்றேன், தொடர்ந்தும் பார்ப்பேன் போல தான் உள்ளது. ஏனென்றால் இந்தக் களம் கொடுக்கும் போதை.

இந்த முறை எந்த அணி 300 ஓட்டங்கள் அடிக்கும் என்று அடிக்கடி கதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் நோக்கமே இப்படி உசுப்பி விட்டு பணம் பார்ப்பது தான். கிரிக்கெட் என்ற விளையாட்டின் அடிப்படையே காணாமல் போய்விட்டது.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வீரப் பையன்26 said:

புல‌வ‌ர் அண்ணா

நீங்க‌ள் சொன்ன‌ ப‌ழ‌மொழிய‌ உங்க‌ளுக்கே சொல்லுகிறேன்

நான் உப்பு விக்க‌ போனால் ம‌ழை பெய்யுது , மா விக்க‌ போனால் காற்று வீசுது 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

இப்ப‌ 6 போட்டி முடிந்து விட்ட‌து இன்னும் 67 போட்டி இருக்கு அதில் குருட் ல‌க் வேலை செய்தால் புள்ளி கிடைக்கும் ,

என் 4ல‌ தாண்டினால் பிற‌க்கு என‌க்கு ஏறு முக‌ம் தான்🥰😍.....................ந‌ட‌ந்து முடிந்த‌ அனைத்து விளையாட்டிலும் நாண‌ய‌த்தில் வென்ற‌ அணிக‌ள் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து 4 மைச்சை வென்று இருக்கின‌ம்

ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌ அணி 2மைச் தோத்து இருக்கின‌ம்...................போட்டி இர‌வு நேர‌ம் ந‌ட்ப்ப‌தால் ப‌னிப் பொழிவு மைதான‌த்தில் அதிக‌ம்

விளையாடும் அணிக‌ள் எத்த‌னை ர‌ன்ஸ் அடிப்பின‌ம் என்று க‌ணிப்ப‌து சிர‌ம‌ம்

இப்ப‌ கிடைக்காத‌ புள்ளிக‌ளை

கேள்வி 72க்கு பிற‌க்கு ச‌ரி செய்ய‌லாம் , நான் தெரிவு செய்த‌ வீர‌ர்க‌ள் அணிக‌ள் சாதிச்சால் , 3 புள்ளி , 5 புள்ளி அதில் பெற‌லாம் , என‌க்கு அதில் ந‌ம்பிக்கை இருக்கு அண்ணா

லொத்த‌ரில் வென்றால்

இந்த‌க் கால‌த்தில் கோடி காசு வைச்சு இருந்தாலும் க‌ம்ம‌ன்ன‌ இருக்க‌னும் அண்ணா ஏன் என்றால் நாங்க‌ள் வாழும் உல‌க‌ம் ஆவ‌த்தான‌ உல‌க‌ம் காசுக்காக‌ எதையும் செய்வின‌ம்

லொத்த‌ரில் வென்றால் அது உங்க‌ளுக்குள் ம‌ட்டும் இருக்க‌னும் அண்ணா அப்ப‌ தான் சேவ்ரி.........................

இங்கும் மைதானங்கள் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக உள்ளது ஆனால் எல்லைகள் பெரிதாக இருக்கும் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

என்னப்பா இது ?கிரிக்கட்டை பிரித்து மேயும் வீரப்பையன்,வசீ எல்லோரும் கீழே கிடந்து நசிபடுகினம். நான் கடைசி நேரத்தில் பங்கேடுக்காமல் முதலே வந்திருந்தால் இப்ப செம்பாட்டானைக் கலைத்துக்கொண்டு வந்திருப்பன்.குருட்டு வாய்ப்பில் தெரிவு செய்த என்கு;கு அதிஸ்டம் கைகொடுக்குது போல ஈரோ மில்ல.லியன் இந்த வெள்ளிக்கிழமை 202 மில்லியனாம். இறங்கி அடிக்கிறன் மில்லியனர் ஆகிறன். காசு வேணுமெண்ட ஆட்கள் இப்பவே சொல்லி வையுங்கள்.

பெரிதாக பள்ளிக்கூடத்தில் கனகாலம் குப்பை கொட்டாததால் (இடைநிலை கல்வியோடு முடிந்து விட்டது) இந்த ராங்குகளில் ஏனோ ஆர்வம் ஏற்படவில்லை.

நான் எப்போதும் இறுதியாகவே வருவேன் அது தொடர்பில் எந்த வித உணர்வும் ஏதோ இருப்பதில்லை.🤣

ஆனால் சுவாரசியத்திற்காக எழுதுவதுண்டு நிங்களும் அவ்வாறே சுவாரசியத்திற்காக கூறுகிறீர்கள், ஆனால் பையன் இறுதியாக நடந்த சாம்பியன் கிண்ண சாம்பியன், அவரை இறுதியாக வந்த என்னுடன் இணைத்து விட்டீர்களே இது நியாயமா?🤣

செம்பாட்டான், எப்பொதும் தமிழன், கந்தப்பு, கோசான் என பலர் எங்களை விட விபரம் புரிந்தவர்கள் இருக்க எங்களை மட்டும் நீங்கள் குறிப்பிட்டுள்ளதனை உன்னிப்பாக கவனிக்கின்றோம்.🤣

ஆனால் இந்த போட்டிகளில் கலந்து கொண்ட பின் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க தொடங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

சிம்ரன கடைசி பந்து பரிமாற்றத்துக்காக வைத்திருந்தார்கள் போல

பந்து வீச்சினை சரியாக பயன்படுத்துவது மற்றும் களத்தடுப்பு என்பவற்றிலும் ரியான் பராக் (ஆர்வமில்லாமல் இருந்தது போல காணப்பட்டது) சொதப்பினார், அனுபவமின்மையும் காரணமாக இருக்கலாம்.

இந்த அணி அனைத்து போட்டிகளிலும் தோற்கும் அணியாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

486385460_664022209479371_38556757068762

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, செம்பாட்டான் said:

மைதானங்களை விட இந்த ஐபிஎல் போட்டிகளே பணத்துக்காக தான். ஆறுகளும் நான்குகளும் பறந்தால் தான் மக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் கொண்டாட்டம். அதிகமான விதிகள் மட்டையாளர்களுக்குச் சாதகமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதனால் தான் நான் ஜபிலை பெரிதாகப் பார்ப்பதில்லை. இந்தக் களத்தில் கலந்து கொண்ட பின்னர் தான் கூடுதலாக பார்த்திருக்கின்றேன், பார்த்துக் கொண்டிருக்கின்றேன், தொடர்ந்தும் பார்ப்பேன் போல தான் உள்ளது. ஏனென்றால் இந்தக் களம் கொடுக்கும் போதை.

இந்த முறை எந்த அணி 300 ஓட்டங்கள் அடிக்கும் என்று அடிக்கடி கதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் நோக்கமே இப்படி உசுப்பி விட்டு பணம் பார்ப்பது தான். கிரிக்கெட் என்ற விளையாட்டின் அடிப்படையே காணாமல் போய்விட்டது.

தெய்வ‌மே ச‌ரியா சொன்னீங்க‌ள் 👍👍👍👍👍👍👍👍👍

ஜ‌பிஎல் தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ கால‌த்தில் 160ர‌ன்ஸ் அடிப்ப‌தே சிர‌ம‌ம்

இப்ப‌ எல்லாம் 160 ர‌ன்ஸ்ச‌ 13 , 14 ஓவ‌ரில் அடிக்கின‌ம்.......................

இவை மைதான‌த்தை ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மாய் அமைக்க‌ , விளையாட்டு நேர‌ம் கூடிட்டே போகும் , உதார‌ண‌த்துக்கு ப‌ந்து சிக்ஸ்சுக்கு போனால் அதுவும் மைதான‌த்தை தாண்டி போனால் புது ப‌ந்தில் போட‌ விட‌னும் , ந‌டுவ‌ர் ப‌ந்துக‌ளை பார்த்து ப‌ந்து போடும் வீர‌ரிட‌ம் புது ப‌ந்தை கொடுக்கையிலே அதிலையே மூன்று நிமிட‌த்துக்கு மேல் போய் விடும்😁😁😁😁😁😁😁😁

ப‌ந்து சிக்சுக்கு போனால் அந்த‌ ஓவ‌ர் போட்டு முடிக்க‌ கூடுத‌ல் நேர‌ம் எடுக்கும்

என‌க்கு ஜ‌பிஎல்ல‌ விட‌ இங்லாந்தில் ந‌ட‌க்கும் உள்ளூர் கில‌ப் 100 ப‌ந்து விளையாட்டு ம‌ற்றும் 20ஓவ‌ர் விளையாட்டு அதிக‌ம் பிடிக்கும்😍🥰🙏......................................

இங்லாந் மைதான‌ங்க‌ளில் 20ஓவ‌ரில் 180ர‌ன்ஸ் தான் கூடின‌ ஸ்கோர் , சில‌து 200ர‌ன்ஸ் அடிச்சால் அந்த‌ அணி ரென்ச‌ன் இல்லாம‌ வெற்றிய‌ உறுதி செய்து விடும்

இவ‌ங்க‌ள் ஒரு நாளுக்கு ஒரு ஜ‌பிஎல் மைச்சை தான் ந‌ட‌த்துவானுங்க‌ள்

இங்லாந்தில் ஒரே நாளில் 8 விளையாட்டு ந‌ட‌க்கும் கிட்ட‌ த‌ட்ட‌ ஒரே நேர‌த்தில் , விரும்பின‌ அணி விளையாடும் போது அதை யூடுப்பில் நேர‌டியாக‌ பார்க்க‌லாம்💪.......................................

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, வீரப் பையன்26 said:

ஐபிஎல் இல் இது நடக்கவே நடக்காது. எட்டு போட்டிகளை ஒரே நாளில் வைத்தால், யார் போட்டிகளை பார்ப்பது. தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை எப்படி சந்தைப்படுத்துவது. பணத்தை எப்படி அள்ளுவது.

இது இப்போது ஒரு இரண்டு மாத திருவிழா. எங்கட நல்லூர் திருவிழா போன்று. ஒரே ஒரு நல்ல விடயம், வீரர்கள் எல்லாரும் நன்றாக சம்பாதிக்கின்றார்கள். நன்றாக வாழ்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் இதற்கு தகுதியானவர்களே. விளையாட்டு வீரனுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, செம்பாட்டான் said:

ஜ‌பிஎல் விளையாட்டுக்காக‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளை புர‌க்க‌னித்த‌ வீர‌ர்க‌ளும் இருக்கின‌ம்

ஒரு நாளுக்கு இர‌ண்டு ஜ‌பிஎல் விளையாட்டு ந‌ட‌த்தினால் கூட‌ ஜ‌பிஎல் தொட‌ரை குறைந்த‌து 6கிழ‌மைக்குள் முடிக்க‌லாம்

இந்தியா தொலைக் காட்சியில் ஒவ்வொரு ஓவ‌ர் முடிய‌ குறைந்த‌து இர‌ண்டு விள‌ம்ப‌ர‌ம் அல்ல‌து ஒரு பெரிய‌ விள‌ம்ப‌ர‌ம் போடுவின‌ம் தொலைக் காட்சியில்

இங்லாந்தில் 8மைச் ஒரே நேர‌த்தில் ந‌ட‌த்தாலும் பெரிய‌ ச‌ண‌ல் ஆன‌ sky sports ஒரு விளையாட்டை தான் நேர‌டியா காட்டுவின‌ம்

மீத‌ விளையாட்டுக்க‌ளை யூடுப்பில் நேர‌டி ஒளிப‌ர‌ப்பு செய்வின‌ம்...........................................

  • கருத்துக்கள உறவுகள்

குஜ‌ராத் க‌ப்ட‌ன் நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கிறார்............................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.