Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025 இன் 15வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை 16 ஓட்டங்களிலேயே இழந்திருந்தாலும் பின்னர் வந்த வீரர்களாக அய்ங்கியா ரஹானே, அரைச் சதங்களை எடுத்த அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர்கள் எல்லோரும் மிகவும் குறைந்த ஓட்டங்களிலேயே விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பியதால் 16.4 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 120 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 80 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0431.jpeg

  • Replies 3.3k
  • Views 98.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை வெள்ளி 04 ஏப்ரல் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

LSG எதிர் MI

06 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • பிரபா

  • நந்தன்

  • புலவர்

  • அகஸ்தியன்

மும்பை இந்தியன்ஸ்

  • வசீ

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? man-dancing_1f57a.webp

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, செம்பாட்டான் said:

அவரின் பாய்ச்சலைப் பார்த்தீர்களா. அதை ஒருவரும் கேட்பாரில்லை. என்ன லோகமடா இது. விடக்கூடாது.

இனி எலோருடைய கண்ணும் அவர் மேல்தான், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது,

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

மும்பை இந்தியன்ஸ்

  • வசீ

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • வாதவூரான்

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

நாளைக்கு 17 கட்சிகள் சேர்ந்த மெகா கூட்டணியோடு களத்தில் இறங்குகின்றோம்............. லக்னோவை உண்டு இல்லை என்று செய்கின்றோம்..............

இந்த மும்பை இன்டியன்ஸூம், சென்னை சூப்பர் கிங்ஸ்ஸும் கிரிக்கெட் விளையாடுவதை விட படம் காட்டுவதில் தான் முன்னுக்கு நிற்கின்றார்கள்........... அது தான் ஒரு சின்ன யோசனை............🙂.

5 minutes ago, vasee said:

இனி எலோருடைய கண்ணும் அவர் மேல்தான், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது,

யார் கண் பட்டதோ, இன்றைக்கு கதையை ஹைட்ராபாத் முடிச்சிட்டார்களே.............🤣.

நாக்கில் கறுப்பு இருக்கும் சில உறவுகள் இங்கு களத்தில் இருக்கின்றார்கள்............😜.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

200ர‌ன்ஸ் இந்த‌ மைதான‌த்துக்கு காணாது முத‌ல் Bat ப‌ண்ணும் அணி குறைந்த‌து 220ர‌ன்ஸ் ஆவ‌து அடிக்க‌னும் அப்ப‌ தான் வெற்றிய‌ உறுதி செய்ய‌லாம்

கே கே ஆர் அணியில் மூன்று சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்

அவ‌ர்க‌ளின் கையில் தான் வெற்றி தோல்வி

வேக‌ ப‌ந்துக்கு அடிச்சு ஆடுகின‌ம்................................................

ஒரே மைதானத்தில் வெவ்வேறு பட்ட ஆடுகளங்கள் (Pitches) இருக்கும், அவை நேரெதிரான தன்மை கொண்ட ஆடுகளங்களாக இருக்கும், நரேந்திர மோடி மைதானத்தில் சிகப்பு மண் ஆடுகளமும் கறுப்பு மண் ஆடுகளமும் உள்ளதென கூறுகிறார்கள்.

அதனாலேயே விளையாடும் அணிகள் ஆடுகளத்தினை அவதானித்து முடிவுகளை எடுக்கின்றன, குயராத் அணியினர் அண்மையில் மும்பையுடன் நடந்த போட்டியில் கறுப்பு மண் ஆடுகளத்தினை தமக்கு சாதகமாக இருக்கும் எனும் அடிப்படையில் வழங்கினார்கள் என கூறுகிறார்கள்.

கடந்த கால ஓட்ட எண்ணிக்கை என்பது ஆடுகளத்தினை தீர்மானிக்கும் விடயமாக இருக்காது என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

நாளைக்கு 17 கட்சிகள் சேர்ந்த மெகா கூட்டணியோடு களத்தில் இறங்குகின்றோம்............. லக்னோவை உண்டு இல்லை என்று செய்கின்றோம்..............

இந்த மும்பை இன்டியன்ஸூம், சென்னை சூப்பர் கிங்ஸ்ஸும் கிரிக்கெட் விளையாடுவதை விட படம் காட்டுவதில் தான் முன்னுக்கு நிற்கின்றார்கள்........... அது தான் ஒரு சின்ன யோசனை............🙂.

குரு , வ‌ர‌ வ‌ர‌ ரோகித் ச‌ர்மா நிலைத்து நின்று விளையாடுகிறார் இல்லை

நான‌ய‌த்தில் வெல்லும் அணிக்கே இந்த‌ மைதான‌த்தில் வெற்றி வாய்ப்பு அதிக‌ம்..............................இர‌ண்டு நாளுக்கு முத‌ல் 16 , 1 ப‌ந்தில் ப‌ஞ்சாப் இதே மைதான‌த்தில் ல‌க்னோவை வென்ற‌து

பூரான் தான் இப்போது வ‌ரை அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ வீர‌ர்...................ல‌க்னோ நாளைக்கு ஒரு சுழ‌ல் ப‌ந்து வீர‌ரை க‌ல‌ட்டி விடும் என‌ நினைக்கிறேன்.................உந்த‌ மைதான‌த்துக்கு சுழ‌ல் ப‌ந்துக்கு ந‌ல்ல‌ அடிச்சு ஆடுவின‌ம்................................

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

முதல்வர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.

முதல்வர் செம்பாட்டானுக்கும் துணை முதல்வர் alvayan

அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

அமெரிக்கன் ஐயா உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகின்றது😇

சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தால் 🤣

எனது ஆதரவு துணை முதல்வருக்கே 😅

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, கிருபன் said:

ஐபிஎல் 2025 இன் 15வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை 16 ஓட்டங்களிலேயே இழந்திருந்தாலும் பின்னர் வந்த வீரர்களாக அய்ங்கியா ரஹானே, அரைச் சதங்களை எடுத்த அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர்கள் எல்லோரும் மிகவும் குறைந்த ஓட்டங்களிலேயே விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பியதால் 16.4 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 120 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 80 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0431.jpeg

நாளைக்கு மும்பை வென்றால் செம்பாட்டான் எட்டாத உயரத்திற்குப் போய் விடுவார். மும்பை தோற்றால் அல்வாயானும் நந்தனும் முதல்வர்பதவிக்கு செம்பாட்டானோடு மல்லுக்கு நிற்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புலவர் said:

நாளைக்கு மும்பை வென்றால் செம்பாட்டான் எட்டாத உயரத்திற்குப் போய் விடுவார். மும்பை தோற்றால் அல்வாயானும் நந்தனும் முதல்வர்பதவிக்கு செம்பாட்டானோடு மல்லுக்கு நிற்பார்கள்.

முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவியில் நாளை மாற்றம்

யாருக்கு சனி பெயர்ச்சி வேலை செய்யுது என்று நாளை தெரியும் 😂😅

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, வாத்தியார் said:

முதல்வர் செம்பாட்டானுக்கும் துணை முதல்வர் alvayan

அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

அமெரிக்கன் ஐயா உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகின்றது😇

சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தால் 🤣

எனது ஆதரவு துணை முதல்வருக்கே 😅

அதுதான் எனக்கும் ஆசை.லக்னோ வெல்லும் @alvayan முதலமைச்சரென்ன பிரதமரே ஆகலாம் ஆக்குவோம்.

1 hour ago, ரசோதரன் said:

யார் கண் பட்டதோ, இன்றைக்கு கதையை ஹைட்ராபாத் முடிச்சிட்டார்களே.............🤣.

நாக்கில் கறுப்பு இருக்கும் சில உறவுகள் இங்கு களத்தில் இருக்கின்றார்கள்...

அதுசரி பாதயாத்திரை போகலையோ?

செருப்பு என்ன மாதிரி?

அல்வாயன் உங்க காலைகாலையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, வாத்தியார் said:

முதல்வர் செம்பாட்டானுக்கும் துணை முதல்வர் alvayan

அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

அமெரிக்கன் ஐயா உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகின்றது😇

சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தால் 🤣

எனது ஆதரவு துணை முதல்வருக்கே 😅

மிகவும் நன்றி வாத்தியாரே... ஏதோ எனக்கென்று இரங்கும் இதயம் உள்ளதென்று மகிழ்ச்சி அடைகின்றேன்

10 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுதான் எனக்கும் ஆசை.மும்பை வெல்லும் @alvayan முதலமைச்சரென்ன பிரதமரே ஆகலாம் ஆக்குவோம்.

அதுசரி பாதயாத்திரை போகலையோ?

வாழ்துக்கள் பிரியன் சார்..பிரதமர் அதுவென்றால் என்னங்க சார்..

10 minutes ago, ஈழப்பிரியன் said:

செருப்பு என்ன மாதிரி?

அல்வாயன் உங்க காலைகாலையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

போங்க என்னையே உத்து நோக்கிட்டு இருக்கீங்க

முதல்வர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுசரி பாதயாத்திரை போகலையோ?

செருப்பு என்ன மாதிரி?

அல்வாயன் உங்க காலைகாலையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அல்வாயனுக்கு வெற்றியில் தலை கால் தெரியவில்லை, அண்ணா...................🤣.

அவர் பாரதத்தையும், ராமாயணத்தையும் கலந்து போட்டார்.............

இப்போதைக்கு செருப்பை கொடுப்பதாக இல்லை, அண்ணா.............. நாளைக்கு மும்பை தோற்றால், மும்பை என்று சுவரில் எழுதி, அதை அடிப்பதற்கு அது வேண்டுமே..............🤣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, வாத்தியார் said:

முதல்வர் செம்பாட்டானுக்கும் துணை முதல்வர் alvayan

அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

அமெரிக்கன் ஐயா உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகின்றது😇

சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தால் 🤣

எனது ஆதரவு துணை முதல்வருக்கே 😅

என்ன நீங்களும் கட்சி மாறீட்டீங்கள். எல்லாத் தடைகளையும் உடைத்து வெல்லுவம்.

31 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுதான் எனக்கும் ஆசை.மும்பை வெல்லும் @alvayan முதலமைச்சரென்ன பிரதமரே ஆகலாம் ஆக்குவோம்.

@alvayan கவனம். இப்ப உங்களை ஏத்தி விடுவினம். பிறகு எப்பிடி கவுக்கிறது என்று பார்ப்பினம். ஒருத்தரையும் விடுகிற மாதிரித் தெரியேல.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, alvayan said:

மிகவும் நன்றி வாத்தியாரே... ஏதோ எனக்கென்று இரங்கும் இதயம் உள்ளதென்று மகிழ்ச்சி அடைகின்றேன்

வாழ்துக்கள் பிரியன் சார்..பிரதமர் அதுவென்றால் என்னங்க சார்..

போங்க என்னையே உத்து நோக்கிட்டு இருக்கீங்க

முதல்வர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.

😁.................................

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, வாத்தியார் said:

முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவியில் நாளை மாற்றம்

யாருக்கு சனி பெயர்ச்சி வேலை செய்யுது என்று நாளை தெரியும் 😂😅

ஏன் வெள்ளி புதன் என்று பெயர்ச்சி இல்லையோ. எப்பவுமே சனிப்பெயர்ச்சிதானா.

வெள்ளிக் கிழமை வேற. மும்பை வெல்வதற்கு எல்லா பெயர்ச்சியையும் செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, செம்பாட்டான் said:

என்ன நீங்களும் கட்சி மாறீட்டீங்கள். எல்லாத் தடைகளையும் உடைத்து வெல்லுவம்.

எல்லோரும் எங்கட கட்சி ஆட்கள் தான்.

வேவு பார்க்க அனுப்பியுள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

அல்வாயனுக்கு வெற்றியில் தலை கால் தெரியவில்லை, அண்ணா...................🤣.

அவர் பாரதத்தையும், ராமாயணத்தையும் கலந்து போட்டார்.............

உந்த பெரிசு படம் பார்த்ததாலை...கொஞ்ச தடுமாற்றம்😁

2 hours ago, செம்பாட்டான் said:

ஏன் வெள்ளி புதன் என்று பெயர்ச்சி இல்லையோ. எப்பவுமே சனிப்பெயர்ச்சிதானா.

வெள்ளிக் கிழமை வேற. மும்பை வெல்வதற்கு எல்லா பெயர்ச்சியையும் செய்வோம்.

அந்த வெள்ளிப் பெயற்சிக்கு பரிகாரம் தலைக்கடாவை பலி கொடுப்பதுதான்...அதுதான் ரோகித்தை நிற்பாட்டி விடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

மிட்ச் மார்ஷ், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தனியே பட்ஸ்மனாக விளையாடுமளவுக்கு திறமையானவர்களில்லை! பேட் கம்மின்சும் T20 விளையாடுவதற்கு தகுதியானவரில்லை!! ஆனால் அவர்களுக்கு வேற வழியில்லை! மொத்தமாகவே ஐந்து பட்ஸ்மனைத்தான் வாங்கியிருக்கினம். அதில் நாலுபேர் விளையாடுகினம். மற்றவர் சச்சின் பேபி!! அடம் சம்பாவை கூட நேற்று எடுக்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று லக்னோ ஏக்கனா விளயாட்டு மைதானத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.

இந்த ஆடுகளம் பஞ்சாப்புடன் விளையாடிய சிகப்பு மண் கொண்ட மெதுவான ஆடுகளம், அதனால் ஆரம்ப ஓவர்களில் வேகப்பந்து மற்றும் சுழல் பந்திற்கு சாதகமாக இருக்கும், முதல் 6 ஓவர்களில் பந்து மட்டைக்கு வருவது இலகுவாகவும் பின்னர் கடினமாகவும் மாறும் ஆனாலும் ஆரம்ப ஓவர்களில்(0-6) வேகபந்திற்கு சாதகமாக இருப்பதால், அவசரமாக ஆடி அதிக விக்கெட்டுக்களை(ஒரு விக்கெட்டிற்கு அதிகமாக) இழந்தால் அணி நெருக்கடிக்குள் உள்ளாகும்.

இந்த ஆடுகளத்தில் 180 -190 ஒரு நல்ல ஓட்டமாகும், முதல் 10 ஓவர்களில் 80/2 அடுத்த 10 ஓவர்களில் 110 ஓட்டங்களை எடுத்தால் குறித்த இலக்கை எட்டலாம், இறுதியாக லக்னோ அணி அண்ணளவாக 170 ஓட்டங்களை எடுத்திருந்தும் அதனை மிக இலகுவாக பஞ்சாப் அணி விரட்டியதாக நினைவுள்ளது.

இங்கு மைதான ஈரலிப்பு இருக்காது என கூறப்படுகிறது, அதனால் முதலில் துடுப்பெடுத்தாடுவது சாதகமானது, சிகப்பு மண் ஆடுகளம் வேகமாக உடையும் அதனால் இரண்டாவதாக ஆடும் அணிக்கு மைதான ஈரலிப்பு இல்லாவிட்டால் கடினமாகிவிடும்.

இந்த ஆடுகளங்களில் 7-10 ஓவர்கள் முக்கிய பங்கு வகிக்கும், ஆரம்ப ஓவர்களில் ஓட்டங்களை எடுப்பதற்கு சிரமப்படும் அணி இந்த பகுதியில் ஓட்டங்களை துரிதப்படுத்த முயலும் போது விக்கெட்டுக்களை இழக்கும் இந்த பகுதியில் விக்கெட்டுக்களை தக்கவைத்து சராசரியான ஓட்டங்களை எடுத்தால் இறுதி ஓவர்களில் அதிக ஓட்டங்களை எடுக்க முடியும்.

பவர் பிளேயில் வேகபந்து வீச்சாளர்களிற்கு பந்து சுவிங் ஆகாவிட்டால் அளவு கூடிய (Full) பந்து வீச்சுகளை தவிர்ப்பார்கள் ஏனெனில் இந்த ஆடுகளத்தில் செலுத்தி ஆடுவது சிறப்பான தெரிவு, அளவு குறைந்த பந்துகளை பந்து வீச்சாளருக்கு மேலாக தூக்கி இலகுவாக அடித்து ஓட்டங்களை குவித்து விடுவார்கள் இந்த முதல் 6 ஓவர்களில் நல்ல அளவுகள் (good) மற்றும் அளவு குறைந்த (back of length) பந்து வீச்சுகளுக்கு இரண்டு தடுப்புகளுடன் பந்து வீசுவார்கள் (mid on mid off பிடி எடுப்பதற்காக).

  • கருத்துக்கள உறவுகள்

487473063_1126289036177608_2482310674476

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Eppothum Thamizhan said:

ஆனால் வெங்கடேஷ் ஐயரை 23 .75 கோடிக்கு வாங்கினார்கள்!! தேவையா இது? இதற்குப்பதில் அவரை தக்கவைத்திருக்கலாமே!!

ஒரு அணி எல்லோரையும் தக்கவைக்க முடியாது. விரும்பிய 4, 5 பேரை தக்கவைத்தபின்பு (அல்லது தாங்கள் வழங்க விருக்கும் பணத்தினை ஏற்காதவர்களையும்)மாற்றவர்களை ஏலம் மூலம் விரும்புவார்கள். ஏலத்தில் KKR ஷிரேஷா ஐயரை அணியில் எடுக்க முயற்சித்தார்கள். அவர் கிடைக்காத்ததினால் வெங்கடேச ஐயரை எடுத்தார்கள்.

பஞ்சாப் அணி அர்ஷ்தீப் கானை தக்கவைக்காமல் ஏலத்தில் 18 கோடிக்கு பெற்றார்கள். 2022 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங் இவ்வாறே தீபக் சகாரை 14 கோடிக்கும், மும்பாய் இந்தியா ஏலத்தில் 15.25 கோடி குடுத்து இஷான் கிருஷ்ணனை எடுத்தார்கள்.

19 hours ago, வீரப் பையன்26 said:

KKR த‌க்க‌ வைச்ச‌ வீர‌ர்க‌ளின் விளையாட்டு ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது க‌ந்துப்பு அண்ண‌..............................

ஆனால் நேற்று வெங்கடேச ஐயர் 29 பந்துகளில் 60 ஓட்டங்களையும், ரிங்கு சர்மா 17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுக்களையும் பெற்றார்கள். ரஷல் 2 விக்கெட்டையும், சுனில் நரேன் 1 விக்கெட்டையும் எடுத்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, vasee said:

இன்று லக்னோ ஏக்கனா விளயாட்டு மைதானத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.

இந்த ஆடுகளம் பஞ்சாப்புடன் விளையாடிய சிகப்பு மண் கொண்ட மெதுவான ஆடுகளம், அதனால் ஆரம்ப ஓவர்களில் வேகப்பந்து மற்றும் சுழல் பந்திற்கு சாதகமாக இருக்கும், முதல் 6 ஓவர்களில் பந்து மட்டைக்கு வருவது இலகுவாகவும் பின்னர் கடினமாகவும் மாறும் ஆனாலும் ஆரம்ப ஓவர்களில்(0-6) வேகபந்திற்கு சாதகமாக இருப்பதால், அவசரமாக ஆடி அதிக விக்கெட்டுக்களை(ஒரு விக்கெட்டிற்கு அதிகமாக) இழந்தால் அணி நெருக்கடிக்குள் உள்ளாகும்.

இந்த ஆடுகளத்தில் 180 -190 ஒரு நல்ல ஓட்டமாகும், முதல் 10 ஓவர்களில் 80/2 அடுத்த 10 ஓவர்களில் 110 ஓட்டங்களை எடுத்தால் குறித்த இலக்கை எட்டலாம், இறுதியாக லக்னோ அணி அண்ணளவாக 170 ஓட்டங்களை எடுத்திருந்தும் அதனை மிக இலகுவாக பஞ்சாப் அணி விரட்டியதாக நினைவுள்ளது.

இங்கு மைதான ஈரலிப்பு இருக்காது என கூறப்படுகிறது, அதனால் முதலில் துடுப்பெடுத்தாடுவது சாதகமானது, சிகப்பு மண் ஆடுகளம் வேகமாக உடையும் அதனால் இரண்டாவதாக ஆடும் அணிக்கு மைதான ஈரலிப்பு இல்லாவிட்டால் கடினமாகிவிடும்.

இந்த ஆடுகளங்களில் 7-10 ஓவர்கள் முக்கிய பங்கு வகிக்கும், ஆரம்ப ஓவர்களில் ஓட்டங்களை எடுப்பதற்கு சிரமப்படும் அணி இந்த பகுதியில் ஓட்டங்களை துரிதப்படுத்த முயலும் போது விக்கெட்டுக்களை இழக்கும் இந்த பகுதியில் விக்கெட்டுக்களை தக்கவைத்து சராசரியான ஓட்டங்களை எடுத்தால் இறுதி ஓவர்களில் அதிக ஓட்டங்களை எடுக்க முடியும்.

பவர் பிளேயில் வேகபந்து வீச்சாளர்களிற்கு பந்து சுவிங் ஆகாவிட்டால் அளவு கூடிய (Full) பந்து வீச்சுகளை தவிர்ப்பார்கள் ஏனெனில் இந்த ஆடுகளத்தில் செலுத்தி ஆடுவது சிறப்பான தெரிவு, அளவு குறைந்த பந்துகளை பந்து வீச்சாளருக்கு மேலாக தூக்கி இலகுவாக அடித்து ஓட்டங்களை குவித்து விடுவார்கள் இந்த முதல் 6 ஓவர்களில் நல்ல அளவுகள் (good) மற்றும் அளவு குறைந்த (back of length) பந்து வீச்சுகளுக்கு இரண்டு தடுப்புகளுடன் பந்து வீசுவார்கள் (mid on mid off பிடி எடுப்பதற்காக).

கருப்பு மண் உள்ள மைதானத்தில் விளையாடுவார்கள் என்று வாசித்த ஞாபகம். சூழல் பந்து வீச்சாளர்களுக்கு கருப்பு மண் சாதகம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

ஒரு அணி எல்லோரையும் தக்கவைக்க முடியாது. விரும்பிய 4, 5 பேரை தக்கவைத்தபின்பு (அல்லது தாங்கள் வழங்க விருக்கும் பணத்தினை ஏற்காதவர்களையும்)மாற்றவர்களை ஏலம் மூலம் விரும்புவார்கள். ஏலத்தில் KKR ஷிரேஷா ஐயரை அணியில் எடுக்க முயற்சித்தார்கள். அவர் கிடைக்காத்ததினால் வெங்கடேச ஐயரை எடுத்தார்கள்.

https://www.hindustantimes.com/cricket/makes-me-teary-eyed-venkatesh-iyer-emotional-after-exclusion-from-kkr-retention-list-shares-logical-explanation-101730563803710.html

Prior to the auction, KKR retained Rinku Singh, Varun Chakravarthy, Andre Russell, Sunil Narine, Harshit Rana and Ramandeep Singh.

ரம்தீப் சிங்கை தக்கவைத்ததற்கு பதிலாக வெங்கடேஷை தக்க வைத்திருந்தால் ராம்தீபை குறைந்தவிலைக்கே ஏலம் எடுத்திருக்கலாம்!!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Eppothum Thamizhan said:

https://www.hindustantimes.com/cricket/makes-me-teary-eyed-venkatesh-iyer-emotional-after-exclusion-from-kkr-retention-list-shares-logical-explanation-101730563803710.html

Prior to the auction, KKR retained Rinku Singh, Varun Chakravarthy, Andre Russell, Sunil Narine, Harshit Rana and Ramandeep Singh.

ரம்தீப் சிங்கை தக்கவைத்ததற்கு பதிலாக வெங்கடேஷை தக்க வைத்திருந்தால் ராம்தீபை குறைந்தவிலைக்கே ஏலம் எடுத்திருக்கலாம்!!

இந்த முறை ஒரு அணி 5 capped players இணையும் 1 uncapped players இனையும் ( அல்லது 4 capped players, 2 uncapped players) தக்கவைக்கலாம் uncapped player க்கு அதிகபட்சம் 4 கோடிதான் வழங்க வேண்டும். ராம்தீப் சிங் uncapped player முறையில் 4 கோடிக்கு தெரிவு செய்யப்பட்டார்

Harshit Rana வும் uncapped player முறையில் 4 கோடிக்கு தெரிவானார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.