Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, செம்பாட்டான் said:

இனி நானும் ஓடப் போறன். முடியல.

எப்படி ஓடினாலும் நீங்கள் என்னைப் பிடிக்கேலாது .......... ! 😂

kjfl6p.gif

  • Replies 3.3k
  • Views 95k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

எப்படி ஓடினாலும் நீங்கள் என்னைப் பிடிக்கேலாது .......... ! 😂

kjfl6p.gif

நீங்களுமா!!!!!

ஒரே ஓட்டமா ஓடினா. எங்கேயாவது ஒரு மாதத்துக்கு சுற்றுலா போயிடனும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 48வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும் அரைச் சதம் அடிக்கவில்லை எனினும் அவர்களின் வேகமான கமியோ ஆட்டங்களினால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஃபவ் டுபிளெஸிஸ் 62 ஓட்டங்களையும் பின்னர் வந்த அக்ஷர் பட்டேலும் விப்ராஜ் நிகமும் வேகமாக அடித்தாடினாலும், பிற வீரர்கள் கைகொடுக்காததால் இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0750.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை புதன் 30 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்

CSK எதிர் PBKS

21 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் 21 பேருக்கு முட்டைகள் கிடைக்க வாய்ப்பு அதிகமா அல்லது முதல் இருவருக்கும் மாத்திரம் முட்டைகள் கிடைக்குமா? nest-with-eggs_1faba.png

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

இல்ல புரியல🤔

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

CSK எதிர் PBKS

21 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

இதன்படி புள்ளிகளில் மாற்றம் இருக்கும் ஆனால் நிலைகளில் மாற்றம் இருக்காது.

நிரந்தர முதல்வர் நந்தன் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 48வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும் அரைச் சதம் அடிக்கவில்லை எனினும் அவர்களின் வேகமான கமியோ ஆட்டங்களினால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஃபவ் டுபிளெஸிஸ் 62 ஓட்டங்களையும் பின்னர் வந்த அக்ஷர் பட்டேலும் விப்ராஜ் நிகமும் வேகமாக அடித்தாடினாலும், பிற வீரர்கள் கைகொடுக்காததால் இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0750.jpeg

இந்த போட்டிகள் இந்த வருடத்துக்குள் முடியுமா சாமி? தொலைக்காட்சி சீரியல் போல இழுபடுகின்றதே.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நியாயம் said:

இந்த போட்டிகள் இந்த வருடத்துக்குள் முடியுமா சாமி? தொலைக்காட்சி சீரியல் போல இழுபடுகின்றதே.

அவ்வளவு கடுப்பா இருக்கா. அடுத்த வருசம் 94 போட்டிகளோடு 3 மாதம் ஓட்டுறதுக்கு ஒரு அலசல் போய்க்கொண்டிருக்காம்.

இத எப்பிடி?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

இல்ல புரியல🤔

🤣..................

உங்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் எப்படி சென்னையை தெரிவு செய்துள்ளார்கள் என்று புரியவில்லையா.............. போட்டிகள் ஆரம்பிக்கும் முன், சென்னை அணி 'அப்பாக்கள்' விளையாடும் அணி என்று தெரியாமல் தெரிவு செய்துவிட்டோம்...................🤣.

14 வயது பிள்ளை எப்படி விளையாடுகின்றான்............ 41 வயதுக்காரர்கள் இருக்கும் சென்னையால் இவ்வளவு தான் முடியும் போல................

உங்களை எவராலும் இனி இங்கே எட்டிப் பிடிக்கவே முடியாது போல.........👍.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

இல்ல புரியல🤔

நாளைக்கு புரியும்.

முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

இல்ல புரியல🤔

எனக்கும் புரியல!!!!!!

2 hours ago, நந்தன் said:

பஞ்சாப் கிங்ஸ்

  • நந்தன்

  • புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

எனக்கும் புரியல!!!!!!

பரவாயில்ல. நாங்கள் எல்லாரும் முன்னுக்கு இருக்கும் உங்களுக்கு 2 புள்ளி கிட்ட வரலாமோ இல்லையோ. அதுதான் கணக்கு.

ரசோதரன் துணை முதல்வராகிறாரோ.

6 hours ago, செம்பாட்டான் said:

இரண்டு பேரோடும் சேர்ந்தேனே. எந்தேனே. விடுறீங்கள் இல்லையே.

நாம போட்ட பூசையில நம்பிக்கை இருக்கு.

நாளைக்கு மீண்டும் உங்களோட. ஆனால் என்ன மொத்தமா 18 பேர் இன்னும் இருக்கினம். அந்த 18 பேரின் ஈர்ப்பு உங்கள் இரண்டு பேரையும் அடக்கும் என்று நினைக்கிறன். உங்கட இராசி அப்பிடி. நானும் வேற சாமியாரைப் பாக்கப் போகவேணும்.

3 hours ago, Eppothum Thamizhan said:

ஸ்டப்பை அனுப்பின நேரம் விப்ராஜை அனுப்பியிருக்க வேண்டும். Stubb சுழல் பந்து வீச்சிற்கு அவ்வளவாக விளையாட மாட்டார்!

ஆனாலும் வெங்கடேஷை இருக்க வைத்தது அருமை!

ஆரோ எல்லாம் மாற்றி மாற்றி வந்தாங்கள். அக்ஸர் மாதிரி ஒருத்தராலும் செய்ய முடியவில்லை. கையில கட்டோட, என்ன அடி அடிச்சான். இன்னும் ஒரு இரண்டு மூன்று பரிமாற்றத்துக்கு நின்றுருந்தால், கதையே வேற.

ஆஷுதோசையும் கடைசிவரையும் வச்சிருந்தினம். அதுவும் வேலைக்காகேல. என்னத்த யோசிக்கிறாங்களோ

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்பில்ல ராஜா!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

இல்ல புரியல🤔

62 வது போட்டியின் கணிப்புக்களை வெளியிடும்போது புரியும்😜

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2025 at 23:49, செம்பாட்டான் said:

நம்ம சிம்ரன தொடக்க ஆட்டக்காரரா அனுப்பி விடலாம். ஒருக்கா விட்டு அடிச்சுப் பாரக்கலாம்.

இன்றைக்கு அடிச்சாகனும். நம்மளுக்காக.

இது நல்ல தெரிவுதான், ஆனால் கடைசியாக நடந்த போட்டியில் பராக் மட்டுமே ஆட வேண்டிய தேவை ஏற்பட்டது.

30 minutes ago, செம்பாட்டான் said:

நாளைக்கு மீண்டும் உங்களோட. ஆனால் என்ன மொத்தமா 18 பேர் இன்னும் இருக்கினம். அந்த 18 பேரின் ஈர்ப்பு உங்கள் இரண்டு பேரையும் அடக்கும் என்று நினைக்கிறன். உங்கட இராசி அப்பிடி. நானும் வேற சாமியாரைப் பாக்கப் போகவேணும்.

கவலைப்படாதீர்கள் அணையப்போகின்ற விளக்குகள் பிரகாசமாக எரியுமாம் (கொல்கத்தா, ராஜஸ்தான் இன்றைக்கு சென்னை), ஆனால் அவற்றால் ஒரு பிரஜோசனமும் இல்லை.😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

🤣..................

உங்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் எப்படி சென்னையை தெரிவு செய்துள்ளார்கள் என்று புரியவில்லையா.............. போட்டிகள் ஆரம்பிக்கும் முன், சென்னை அணி 'அப்பாக்கள்' விளையாடும் அணி என்று தெரியாமல் தெரிவு செய்துவிட்டோம்...................🤣.

14 வயது பிள்ளை எப்படி விளையாடுகின்றான்............ 41 வயதுக்காரர்கள் இருக்கும் சென்னையால் இவ்வளவு தான் முடியும் போல................

உங்களை எவராலும் இனி இங்கே எட்டிப் பிடிக்கவே முடியாது போல.........👍.

இன்றைக்கு சென்னை தனது சகாக்கள் போல விளையாடும் (கொல்கத்தா, ராஜஸ்தான்)😂

  • கருத்துக்கள உறவுகள்

494406457_1252543569566690_9038520808049

வாழ்க்கை பையனை அந்த அடி அடித்திருக்கு , அதில் இருந்து எழுந்தவன் இந்த அடி அடிக்கிறான் .......... ! 👍

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, suvy said:

494406457_1252543569566690_9038520808049

வாழ்க்கை பையனை அந்த அடி அடித்திருக்கு , அதில் இருந்து எழுந்தவன் இந்த அடி அடிக்கிறான் .......... ! 👍

இப்பிடியான கதைகளை மீண்டும் மீண்டும் கேட்கிறோம். மனிதம் இன்னும் வாழ்கிறது என்ற நம்பிக்கை இன்னும் கூடிக் கொண்டே போகிறது. அவனுக்கு RR கொடுக்கும் அந்த ஒரு கோடி ரூபாய் எவ்வளவு பெரிய தொகை. அவர்களின் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் இல்லையா.நேற்றைய அடி, அதற்கு இன்னும் அதிகமாகக் கொடுக்கும். கொடுக்க வேண்டும்.

அவன் இப்பத்தானே ஆரம்பிச்சே இருக்கிறான்!!!! அதை நினைத்தாலே ஜிவ் என்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

62 வது போட்டியின் கணிப்புக்களை வெளியிடும்போது புரியும்😜

அதென்ன கணக்கு. 62வது போட்டி டெல்லிக்கும் குஜராத்துக்கும். என்ன ஏதென் பெட்டி கை மாறிட்டுதோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இன்றைக்கு சென்னை தனது சகாக்கள் போல விளையாடும் (கொல்கத்தா, ராஜஸ்தான்)😂

கடைசி 2 போட்டியிலும் வென்ற அணிகள் கடைசி 4 இடங்களில் இருந்த அணிகள். இதே போல சென்னை இன்று வெல்லுமா? 2024 ஐபிஎல் இருந்து இன்று வரை சென்னை மைதானம் சென்னை அணிக்கு பெரிதாக உதவவில்லை.குறிப்பாக 2024 இல் சென்னை சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை. தீக்சனா, ஜடேஜா போன்றவர்கள் 2024 இல் சிறப்பாக பந்து வீசவில்லை. இம்முறை 2024 இனை விட சுழல் பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவு சாதகமாக இருந்தாலும், 2023 க்கு முன்பு சென்னை மைதானம் இருந்தது போல இருக்கவில்லை. எப்படி மைதானம் செயற்படும் என்று சொல்லமுடியாமல் இருப்பதாக சில வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

🤣..................

உங்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் எப்படி சென்னையை தெரிவு செய்துள்ளார்கள் என்று புரியவில்லையா.............. போட்டிகள் ஆரம்பிக்கும் முன், சென்னை அணி 'அப்பாக்கள்' விளையாடும் அணி என்று தெரியாமல் தெரிவு செய்துவிட்டோம்...................🤣.

முன்புதான் சென்னை அணியை அப்பாக்களின் அணி என்று சொல்வார்கள். ஏலத்தில் அதிக வயது போனவர்கள் சென்னை அணியில் எடுப்பதினால் சொல்லுவார்கள். ஆனால் இம்முறை சென்னை அணியில் 3 பேர் மட்டுமே 35 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும் இருக்கிறார்கள். தோனி 43 வயது. அஸ்வின் 38 வயது. ஜடேஜா 35 வயது. மும்பாய் அணியில் 3 பேர். ஆனால் கொலகத்தா அணியில் 5 பேர் 35 ம், 35 வயதுக்கு மேல் இருக்கிறார்கள். இம்முறை கொல்கத்தா அணியில் அதிக வயது போனவர்கள் இருக்கிறார்கள். இம்முறை சென்னை அணியில் இருக்கும் 25 பேரில் 10 பேர் 25 வயதை விட குறைவானவர்கள். நூர் அகமது 19 வயது, பத்திரானா 21 வயது . ரச்சின் ரவீந்திரா 24 வயது. ஆயுஷ் ம்ஹாத்ரே 17 வயது. அன்சுல் கம்போஜ் 23 வயது . ஷாகிக் ரஷித் 20 வயது. டெவால்ட் பிரேவிஸ் 21 வயது . இன்று சிலவேளை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் vansh bedi 21 வயது. தமிழக வீரர் சித்தார்த் 18 வயது .

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

ஆனால் அவங்கள் எல்லாரையும்தானே கழுவி ஊத்துறீங்கள். பாவம் சின்னப் பசங்க.

தோனியக் கேக்காம, அவங்களை ஏலத்தில் எடுத்திட்டாங்கள் என்று ஒரு உருட்டு ஓடித்திரியுது. பார்த்தீங்களா. அதனால, தோனியால என்ன செய்ய முடியும். ஏதோ தன்னால ஆனதச் செய்யுறாராம். அவரைக் கேட்டு எடுத்திருந்தா, இப்ப நிலமையே வேறவாம். உருட்டுறதுக்கு ஒரு நியாயம் வேண்டாமா.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

இன்றைக்கு சென்னை தனது சகாக்கள் போல விளையாடும் (கொல்கத்தா, ராஜஸ்தான்)😂

Kayo இல்லாமல் நான் அனுப்பிய இணைப்பினுடாக போட்டிகளை பார்க்க முடிகிறதா? பெரும்பாலான போட்டிகள் அவுஸ்திரேலியா நேரம் இரவு 12 மணிக்கு ஆரம்பிப்பதினால் போட்டிகளை பார்க்க உங்களுக்கு நேரம் கிடைக்குமா ?

1 hour ago, செம்பாட்டான் said:

ஆனால் அவங்கள் எல்லாரையும்தானே கழுவி ஊத்துறீங்கள். பாவம் சின்னப் பசங்க.

தோனியக் கேக்காம, அவங்களை ஏலத்தில் எடுத்திட்டாங்கள் என்று ஒரு உருட்டு ஓடித்திரியுது. பார்த்தீங்களா. அதனால, தோனியால என்ன செய்ய முடியும். ஏதோ தன்னால ஆனதச் செய்யுறாராம். அவரைக் கேட்டு எடுத்திருந்தா, இப்ப நிலமையே வேறவாம். உருட்டுறதுக்கு ஒரு நியாயம் வேண்டாமா.

நான் எங்கே கழுவி ஊத்துகிறனான்? நான், நீங்கள், வசி, கிருபன் உட்பட ஒரு சிலர் மட்டுமே ஒரு போட்டியாளர்களையும் இந்த திரியில் கழுவி ஊத்துவதில்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கந்தப்பு said:

நான் எங்கே கழுவி ஊத்துகிறனான்? நான், நீங்கள், வசி, கிருபன் உட்பட ஒரு சிலர் மட்டுமே ஒரு போட்டியாளர்களையும் இந்த திரியில் கழுவி ஊத்துவதில்லை என நினைக்கிறேன்.

வேண்டிய காசுக்கு ஒழுங்கா விளையாடாவிட்டால் கழுவி ஊத்தத்தான் வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

Kayo இல்லாமல் நான் அனுப்பிய இணைப்பினுடாக போட்டிகளை பார்க்க முடிகிறதா? பெரும்பாலான போட்டிகள் அவுஸ்திரேலியா நேரம் இரவு 12 மணிக்கு ஆரம்பிப்பதினால் போட்டிகளை பார்க்க உங்களுக்கு நேரம் கிடைக்குமா ?

ஈழப்பிரியன், எப்போதும் தமிழனாகியோரும் சில் தளங்கல்கள் கொடுத்துள்ளார்கள், அவற்றை முயற்சித்துப்பார்க்கலாம்தான் ஆனால் அதற்கு முன்னர் இன்றய போட்டியினை hotstar முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்துள்ளேன், வேலை இடைவேளையில் வேலையில் வழங்கப்பட்ட கணனி பாவிப்பதுண்டு (எனது கணனி 30 நிமிடத்தில் பற்றரி முடின்ட்குவிடும்) அதில் சில வேளைகளில் யாழ் கூட வராது, நான் நினைக்கிறேன் பாதுகாப்பு சான்றிதழ் காலாதி ஆகியிருந்தால் அப்படி ஏற்படுகிறதன, இந்த தளங்கள் பாதுகாப்பற்ற தளமாக இருந்தால் அனுமதிக்காது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.