Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

ஆனால் இவர் பல குறுக்கு வழிகளை தன் சுயலாபத்துக்கு பயன் படுத்துகின்றார்.அவர் பேச வேண்டிய விடயங்கள் பல இருக்கு அதை விடுத்து பிரபலம் அடைய வேணும் என்பதற்காக ஊர் கொசிப்புக்களை பாராளுமன்றில் பேசுகின்றார்...என்பது என் கருத்து

நிச்சயமாக...

தேர்தலின் முன்னர் அவரின் நடவடிக்கைகளை கவனித்து வைத்தியர் அர்ச்சுனாவை.... அவர் இப்படித்தான்.... என்ற பார்வையில் தான் எனது ஆதரவை அவருக்கு வழங்கியிருந்தேன்.

தேர்தலில் வென்ற பின்னரும்.... சரி.... வெற்றிக் களிப்பில் சில வார்த்தைப் பிரயோகங்கள் வரும் என்று நினைத்தேன் .

ஆனாலும் அவர் தொடர்ந்தும் பாராளு மன்றத்தில் செய்த காரியங்கள்

(முதல் நாள் அல்ல சஜித்துடனான முரண்பாடும் அல்ல)

எனக்குச் சரியாகப் படவில்லை.

சக தமிழ்ப் பாராளமன்ற உறுப்பினர்களை நையாண்டி செய்வது ஒரு உதாரணம்.

பின்னர் அதன் உச்ச கட்டமாக தன்னைவிடப் பெரியவர்கள் இந்த மன்றத்தில் இல்லை என்ற தொனியில் கேம் கேட்டார்

அத்துடன் இஸ்லாமியர்கள் இழிவானவர்கள் என்ற அவரின் கருத்து

இன்னும் காட்டமானது

அவர் தனது பிழைகளை திருத்தி தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலைச் செய்வார் என்ற நம்பிக்கை மனதில் ஒரு மூலையில் இருந்தாலும்..... இப்படியான பிழைகளை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது

அவர் தனது குறைகளை சரி செய்து மீண்டு வரும் போது எனது ஆதரவு எப்போதும் அவருக்கு கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரி ஆரம்பித்த போதே எழுத வேண்டும் என்று நினைத்த ஒரு வரி

அர்ஜுனா ஒரு விசச் செடி அல்ல

விஷயம் தெரியாத சாடியும் அல்ல

அரசியலில் பக்குவம் பெறாத ஒரு மனிதன்

இது தான் உண்மை

அதனால் என்னுடைய வேண்டுகோள்

தலையங்கத்தை மாற்றி விடுங்கள் ஓணாண்டியார்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

பிரபாகரனை பற்றி உவங்கன்ட பாராளுமன்றில் பேசுவதில் எந்த வித பிரயோசனமும் இல்லை ...அப்படி பேசினாலும், பேசுபவர் பிரபாகரனின் பெயரை,கொள்கையை கலங்கப்படுத்தாத‌ வகையில் பேச வேணும்.

ஆனால் இவர் பல குறுக்கு வழிகளை தன் சுயலாபத்துக்கு பயன் படுத்துகின்றார்.அவர் பேச வேண்டிய விடயங்கள் பல இருக்கு அதை விடுத்து பிரபலம் அடைய வேணும் என்பதற்காக ஊர் கொசிப்புக்களை பாராளுமன்றில் பேசுகின்றார்...என்பது என் கருத்து

இது உங்கள் கருத்துகள் என்னுடைய கருத்துகளை மேலே தெளிவாக எழுதியுள்ளேன்

எல்லோரும் ஒரே கருத்துகள் ஒத்த கருத்துகள் உடையவர்களாக இருக்க முடியாது கூடாது

புதிய சிந்தனைகள் கருத்துகள் உருவாக. வேண்டுமாயின் எதிர் கருத்துகள் உடையவர்கள் களத்தில் யாழ் களத்தில் இருக்க வேண்டும் அப்போ தான் எங்கள் சித்தனைகளை கருத்துகளாக எழுத முடியும்,....அதற்காக பதிலையும் நாங்கள் பெற முடியும் அங்கே புதுக் கருத்துகள் பிறக்கும் நன்றி வணக்கம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்களும், தமிழர்களும் கடந்த காலத்தில் தவறு செய்துள்ளார்கள், ஆனால் அதனை உணர்ந்து தவறுகளை திருத்தி முன்செல்லாமல் இரண்டு தரப்பு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது தொடர்கினர், அதற்கு காரணம், தமிழர் தரப்பு மட்டும் தனது தவறினை உணர்ந்து அந்த தவறீற்காக மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் இஸ்லாமியர்கள் தொடர்ந்தும் தமிழர் தரப்பில் குற்றம் சாட்டுவதுடன் இதுவரை தமது தரப்பின் தவறுகளை மூடி மறைத்து மன்னிப்பு கோரவில்லை, அதனாலேயே அர்சுனா போன்றவர்கள் இவ்வாறு இனவாதம் பேசுகிறார்கள்.

என்னை பொறுத்தவரை தமது வறுகளுக்காக மன்னிப்பு கேளாமல் அவர்களால் முன்னோக்கி செல்ல முடியாது, திறந்த மனதுடன் உண்மைகளை எதிர்கொள்ளும் பக்குவம் அற்றவர்களாக இஸ்லாமியர்கள்தொடர்ந்தும் இருக்கிறார்கள்.

பார்ப்போம் இந்த நாரதர் (அர்சுனா) கலகத்தால் ஏதாவது நல்ல மாற்றம் நிகழுகிறாதா என.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

அர்ஜுனா ஒரு விசச் செடி அல்ல

எமது தமிழ் சமூகத்தில் பண்பாடற்ற கீழ்தரமான அரசியல், சமூகவியல் கலாச்சாரத்தை உருவாக்கவும் அதற்காக ஆதரவாளர் அமைப்புகள் என்ற போலி முகபுத்தக அணிகளை கொண்டு தனக்கு பிடிக்காதவர்கள் மீது தன்னுடன் கருத்தியல் ரீதியாக முரண்பாடு கொண்டவர்கள் மீதும் அவதூறுகளை புரிவதும், அதிலும் பெண்கள் என்றால் அவர்கள் மீது பாலியல் அவதூறுகளை பொழிவது போன்ற செயல்களை செய்யும் அர்சசுனா ஒரு விஷசெடி தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. இவரோடு முரண்படுபவர்கள் வாய் திறந்தாலே அவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீச ஒரு காவாலி அணிகளை கட்டமைத்துள்ளார்.

முளையிலேயே கிள்ளி தூர எறியவேண்டிய விஷசெடியே அர்சசனா.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kandiah57 said:

இது உங்கள் கருத்துகள் என்னுடைய கருத்துகளை மேலே தெளிவாக எழுதியுள்ளேன்

எல்லோரும் ஒரே கருத்துகள் ஒத்த கருத்துகள் உடையவர்களாக இருக்க முடியாது கூடாது

புதிய சிந்தனைகள் கருத்துகள் உருவாக. வேண்டுமாயின் எதிர் கருத்துகள் உடையவர்கள் களத்தில் யாழ் களத்தில் இருக்க வேண்டும் அப்போ தான் எங்கள் சித்தனைகளை கருத்துகளாக எழுத முடியும்,....அதற்காக பதிலையும் நாங்கள் பெற முடியும் அங்கே புதுக் கருத்துகள் பிறக்கும் நன்றி வணக்கம் 🙏

உண்மை ,ஆனால் எதிர் கருத்துக்கள் ஆரோக்கியமான எதிர் கருத்தாக இருக்க வேண்டும் ...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

இஸ்லாமியர்களும், தமிழர்களும் கடந்த காலத்தில் தவறு செய்துள்ளார்கள், ஆனால் அதனை உணர்ந்து தவறுகளை திருத்தி முன்செல்லாமல் இரண்டு தரப்பு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது தொடர்கினர், அதற்கு காரணம், தமிழர் தரப்பு மட்டும் தனது தவறினை உணர்ந்து அந்த தவறீற்காக மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் இஸ்லாமியர்கள் தொடர்ந்தும் தமிழர் தரப்பில் குற்றம் சாட்டுவதுடன் இதுவரை தமது தரப்பின் தவறுகளை மூடி மறைத்து மன்னிப்பு கோரவில்லை, அதனாலேயே அர்சுனா போன்றவர்கள் இவ்வாறு இனவாதம் பேசுகிறார்கள்.

என்னை பொறுத்தவரை தமது வறுகளுக்காக மன்னிப்பு கேளாமல் அவர்களால் முன்னோக்கி செல்ல முடியாது, திறந்த மனதுடன் உண்மைகளை எதிர்கொள்ளும் பக்குவம் அற்றவர்களாக இஸ்லாமியர்கள்தொடர்ந்தும் இருக்கிறார்கள்.

பார்ப்போம் இந்த நாரதர் (அர்சுனா) கலகத்தால் ஏதாவது நல்ல மாற்றம் நிகழுகிறாதா என.

சிறிலங்கா இஸ்லாமிய சமுகம் சர்வதேச இஸ்லாமிய சமுகத்துடன் நேரடியாக தொடர்புடையது.அவர்கள் மன்னிப்பு கேட்டால் அது உலகலாவிய இஸ்லாமியர்களை பாதிக்கும் என்ற நிலைப்பாட்டை உடையவர்கள்..

இஸ்லாமியனாக பிறக்காவிட்டால் அவன் "கறாமி"பாவி "யகுதி" என்ற கொள்கையை உடையவ்ர்கள் ..அவர்களிடமிருந்து மன்னிப்பை எதிர் பார்க்க முடியாது முக்கியமாக வேற்று மதத்தினர்...

பலஸ்தீன விடுதலைக்கு சிறிலங்காவிலிருந்து குரல் கொடுப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உலகலாவிய பெரும்பான்மை முஸ்லிம்கள் அவர்கள் மத அடிப்படையில் தவறுகளை மூடி மறைப்பவர்கள். இலங்கையில் உள்ளவர்களோ தீவிர முஸ்லிம்கள். அர்ச்சுனா தமிழ் பெண்களையும் இழிவுபடுத்தும் போது அவர்களையும் இழிவுபடுத்தியுள்ளார் நல்ல மாற்றமோ எந்த நன்மையும் இவரால் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, island said:

இவரோடு முரண்படுபவர்கள் வாய் திறந்தாலே அவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீச ஒரு காவாலி அணிகளை கட்டமைத்துள்ளார்.

இதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா

உங்களின் கற்பனையான சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை

நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, vasee said:

தமிழர் தரப்பு மட்டும் தனது தவறினை உணர்ந்து அந்த தவறீற்காக மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் இஸ்லாமியர்கள் தொடர்ந்தும் தமிழர் தரப்பில் குற்றம் சாட்டுவதுடன் இதுவரை தமது தரப்பின் தவறுகளை மூடி மறைத்து மன்னிப்பு கோரவில்லை,

ஒருவர் மன்னிப்பு கேட்டால், அவர்தான் குற்றவாளி என்பது சிலரின் சித்தாந்தம். அதை சொல்லிச்சொல்லியே தம்மை குற்றமற்றவர் என காண்பிப்பார்கள். மன்னிப்பு கேட்பது என்பது தவறு செய்து விட்டோம் என்பது பொருளல்ல பல இடங்களில். அதன் பொருள், தவறுகளை மறந்து இணக்கமாக வாழ்வோம் என்பதே பொருள். தமிழரை பொறுத்தமட்டில் பல பக்கத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள், இழப்புகளை சந்தித்தவர்கள், ஆதரவு கொடுக்க யாருமில்லாமல் தனித்து விடப்பட்டவர்கள். ஆகவே சுமுகமாக வாழுவதற்காக மன்னிப்பு கோருகின்றனர். அவர்கள் திட்டமிட்டு யாரையும் அழிக்கவில்லை, தம்மை தற்காத்துக்கொள்வதற்காகவே தாக்குதலை நடத்த வற்புறுத்தப்பட்டனர். ஆனால் தாம் செய்ததெல்லாம் சரியென நிரூபிப்பது தமிழர் கோரிய மன்னிப்பு அவர்களுக்கு சாதகமாகிறது. அவர்களுக்கு மன்னிக்கவும் தெரியாது, மன்னிப்பு கேட்கவும் தெரியாது. இவர்களிடம் அதை எதிர்பார்ப்பது நம்ம முட்டாள்த்தனம். நிஞாயமாக உரிமைகளை பகிர்ந்து வாழுங்கள் என்றால், நல்லிணக்கம் கெட்டுவிடும், நாட்டில் இன கலவரம் வெடிக்கும் என்கிறார்கள். இவர்களின் அறிவு எத்தகையது? மதம் என்பது சக மனிதனை மதித்து, அன்பு செய்து, பகிர்ந்து வாழ வலியுறுத்துகிறது. இங்கு, மதம் அடுத்தவனை கொன்று, அவர்களின் சொத்துக்களை அபகரித்து வாழ போதிக்கிறது. இவர்களுடன் நாம் விவாதிப்பதால் என்ன லாபம்? வெள்ளையை கறுப்பு என நிறுவும் கூட்டம். அவர்களை பொறுத்த வரையில், கறுப்பு என்றால் அதுதான் வெள்ளை. நீதி, நல்லிணக்கம் என்றால், அடுத்தவரை துன்புறுத்துவது.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2025 at 22:58, வாத்தியார் said:

இதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா

உங்களின் கற்பனையான சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை

நன்றி வணக்கம்

உங்கள் அர்சனாவும் அவரது அடி பொடிகளான வன்னி அணியும் தமிழ் பெண்கள் மீது மேற்கொண்ட அவதூறுகளுக்கு ஆதாரம் உண்டா வாத்தியாரே. பெண் யூருப்பர் சங்கவி மீது அபாண்டமான அவதூறுகளை தனது வன்னி அணி மூலம் பரப்பி அதை தானே share செய்து அர்சசனாவிடம் நீங்கள் அதற்கு ஆதாரம் நீங்கள் கேட்கவில்லையே!

அந்த பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நேர்மையாக காணொளி மூலம் அர்சனாவிடம் நீதி கோரிய போது, அதற்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு அர்சனா சைக்கோ ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில் அந்த பெண்மீது மீது தானே நேரடியாகவே அவதூறுகளும் இழிவு படுத்தும் விதாமாகவும் ஒரு சைக்கோவை போல் பேசியிருந்த அரச்சனாவிடம் ஆதாரம் கேட்டீர்களா? அர்சனாவின் அந்த அவதூறு காணொளியை பார்தத பின்னும் அவரை ஆதரிப்பவர்களும் மன நிலை பாதிக்கப்பட்ட சைக்கோக்களே.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

ஆதரிப்பவர்களும் மன நிலை பாதிக்கப்பட்ட சைக்கோக்களே

எப்படி??? நான் அர்ச்சுனாவின். அரசியலை மட்டுமே பார்க்கிறேன் பெரும்பாலானவறறை ஆதரிக்கிறேன் அவனும் மனிதன் தான் தனிப்பட்ட வாழ்க்கை அவனுக்குமுண்டு அதில் அவன் எதனையும் செய்யட்டும். பாராளுமன்ற உறுப்பினர் ஆகி நான்கு மாதங்கள் மட்டுமே

அதாவது அரசியலில் ஒரு குழந்தை போல் அர்ச்சுனாவை சிறிதரன். சுமத்திரன். அமிர்தலிங்கம். .........போன்ற. 20வருடங்கள் 30வருடங்கள் பாராளுமன்ற கதிரைகளை சுடக்கியவர்களுடன் ஒப்பிட. முடியாது எந்தவொரு மனிதனும் பிழையின்றி ஒரு செயலை முன்பு செய்யாத ஒரு செயலை செய்ய முடியாது பல தடவைகள் பாராளுமன்றம் சென்றவர்கள் மீண்டும் மீண்டும் அதே பிழைகளை. விடுகிறார்கள் அர்ச்சுனாவை ஆதரிப்பவர்கள் சைக்கோக்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதி உண்டு ?? என்ன உரிமை உண்டு” ?? இது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். அவனை மட்டத்தட்ட. பாராளுமன்றத்தில் இருந்து அகற்ற முயல்பவர்களிடம். அவன் கொஞ்சி விளையாட. முடியாது உங்களிடம் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்பு இருந்து உள்ளார்களா ?? இல்லை இனி உங்களால் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாகக்கூடுமா? அல்லது முடியுமா?? பாராளுமன்றத்தில் பேசாதவரகள் பற்றியும் நித்திரை. கொள்பவர்கள் பற்றியும் ஏன் கதைக்க. எழுத பேச. முடியவில்லை ??

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kandiah57 said:

முன்பே தெளிவாக கூறி இருந்தேன், அர்ச்சனா என்ற சைக்கோவால் அவதூறு கூறப்பட்ட சங்கவி என்ற பெண் யூருப்பர் நேர்மையாகவும் பண்பாகவும் அவரிடம் நீதி கேட்டதற்கு பதில் கூறுவதாக தனது முகப்புத்தகத்தில் அரச்சுனா பதில் கூற அந்த கேடுகெட்டவனின் மிக மலினமான கிண்டல் அவதூறு காணொலியை பார்தத பின்பும் அர்சனாவை மனப்பூர்வமாக ஆதரிப்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட சைக்கோகளே.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, island said:

முன்பே தெளிவாக கூறி இருந்தேன், அர்ச்சனா என்ற சைக்கோவால் அவதூறு கூறப்பட்ட சங்கவி என்ற பெண் யூருப்பர் நேர்மையாகவும் பண்பாகவும் அவரிடம் நீதி கேட்டதற்கு பதில் கூறுவதாக தனது முகப்புத்தகத்தில் அரச்சுனா பதில் கூற அந்த கேடுகெட்டவனின் மிக மலினமான கிண்டல் அவதூறு காணொலியை பார்தத பின்பும் அர்சனாவை மனப்பூர்வமாக ஆதரிப்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட சைக்கோகளே.

இல்லை இப்படி பார்த்தால் உலகில் உள்ள அனைவரும் சைக்கோக்கள் தான்

இயேசு கிறிஸ்து. சொன்னார் உங்களின் பாவம்’ சொய்யாதவன். அவள் மீது ஒரு கல்லை ஏறியுங்கள். என்று திருப்பி பார்த்த போது எவருமில்லை  🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.