Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?

6 Apr 2025, 11:59 AM

Screenshot-2025-04-06-115058.jpg

சென்னையை அடுத்துள்ள காட்டங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். Seeman meets Nirmala Sitharaman

இந்தநிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்து பேசியதாக தவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

rlfad-down-1743915046.jpg

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முரண்பட்டு வரும் செங்கோட்டையன், ஏற்கனவே டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்தநிலையில், நேற்று மீண்டும் சந்தித்து பேசியுள்ளார்.

இதேபோல, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கே.சி.பழனிசாமி கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

Screenshot-2025-04-06-114439.jpg

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிர்மலா சீதாராமனை சந்தித்து 2026 கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.

இந்தநிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு சீமான் அளித்துள்ள பேட்டியில், “நான் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசவில்லை. ஒருவேளை நான் சந்தித்திருந்தால் வெளிப்படையாக சொல்லப்போகிறேன். அதில் எனக்கு எந்த ஒரு தயக்கமோ பயமோ இல்லை.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தியை வேட்பாளராக நியமிக்கப்போவதாக ஊடகங்களில் நேற்று செய்தி வெளியீட்டீர்கள். நான் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போகிறேன் என்றால் வேட்பாளரை ஏன் அறிவிக்கப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 6) தமிழகம் வந்துள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் நடத்திய அடுத்தடுத்த சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

https://minnambalam.com/does-seeman-meets-nirmala-sitharaman/

  • Replies 74
  • Views 3.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    தாத்தாவும் பேரனும் ஒரே கேள்வியை கேட்டதால் ஒன்றாக பதில் சொல்கிறேன். ஸ்டாலினும் கனிமொழியிம் திருடர்கள், நிம்மியை சந்திக்கிறார்கள். அதே போல் சீமானும் திருடன் என நீங்கள் ஒத்து கொண்டால்…. யாரும் பொங்கி எழ

  • goshan_che
    goshan_che

    இதுக்கு பெயர் ஜெயிலோ-போபியா. இந்த நோய் தாக்கம் ஆளுக்கு ஆள் மாறுபடும். நோயாளியை ஊழல் வழக்கில் மத்திய அரசு நிர்வாகம் திரத்தினால் - ஆஸ்பத்தியில் போய் படுக்க வேண்டி வரும். நோயாளியை பாலியல் வன்கொடுமை வழக்க

  • Kandiah57
    Kandiah57

    நீங்கள் சொல்வது சரி ஆனால் ஒரு அல்லது பல. தமிழர்கள் ஐரோப்பாவில் கனடாவில் அவுஸ்திரேலியாவில்,....... ..இது போன்ற நாடுகளில் தேர்தலில் நின்று அந்தந்த நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று வெல்லும் போது ர

  • கருத்துக்கள உறவுகள்

சங்கி என்றால் நண்பன் ஒரு அன்பானவன் அவர் அன்பின் காரணமாக சந்தித்து இருப்பார்

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு சீமான் அளித்துள்ள பேட்டியில், “நான் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசவில்லை. ஒருவேளை நான் சந்தித்திருந்தால் வெளிப்படையாக சொல்லப்போகிறேன். அதில் எனக்கு எந்த ஒரு தயக்கமோ பயமோ இல்லை.

ஸ்டாலினும்,கனிமொழியும் சீதாவை சந்திக்கும் போது சீமானும் சந்திப்பது வரவேற்கத்தக்கதே.

Gn0533QbwAEcs3D?format=jpg&name=small

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஸ்டாலினும்,கனிமொழியும் சீதாவை சந்திக்கும் போது சீமானும் சந்திப்பது வரவேற்கத்தக்கதே.

Gn0533QbwAEcs3D?format=jpg&name=small

சீமான்... நிர்மலாவை மட்டுமல்ல,

ஜெய்சங்கர், அமித் ஷா, மோடி எல்லாரையும் சந்தித்து,

திராவிடத்தின் அடி வயிற்றில், பழப்புளியை கரைத்து ஊத்த வேண்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

489698851_3986771618247836_4455111645844

இன்று நடக்கும் சட்டப்பேரவையில் கூட கலந்து கொள்ளாமல் அவசரமாக மாமியை எதற்கு சந்திக்க வேண்டும்.

Anbu Raj

@goshan_che 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

489698851_3986771618247836_4455111645844

இன்று நடக்கும் சட்டப்பேரவையில் கூட கலந்து கொள்ளாமல் அவசரமாக மாமியை எதற்கு சந்திக்க வேண்டும்.

Anbu Raj

@goshan_che 😂

நாம் தமிழர் ஐடி விங் பொய் செய்தியை அப்பாவி போல் நீங்கள் பரப்புவது இதுதான் முதல் முறை அல்ல.

அதை நான் வெளிகொணர்வதும் இதுதான் முதல் முறை அல்ல 🤣.

பிகு

இதை fact check பண்ணாமலே எழுதுகிறேன் - உங்கள் நம்பகதன்மை மீது அப்படி ஒரு நம்பிக்கை🤣.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நாம் தமிழர் ஐடி விங் பொய் செய்தியை

ஆனால் truth உண்மை செய்திகள் சீமான் ஒரே மேடையில் அண்ணாமலையுடன் இருந்து அண்ணாமலையை புகழ்ந்து தள்ளுவது வட்சப்பில் வந்துள்ளது

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஆனால் truth உண்மை செய்திகள் சீமான் ஒரே மேடையில் அண்ணாமலையுடன் இருந்து அண்ணாமலையை புகழ்ந்து தள்ளுவது வட்சப்பில் வந்துள்ளது

அதென்ன‌ சீமான் ச‌ந்திச்சா ம‌ட்டும் பொங்கி எழுறீங்க‌ள்

ஊழ‌ல் மோச‌டியில் திமுக்கா கார‌ங்க‌ள் தின‌ம் தின‌ம் டெல்லியில் மோடியின் காலில‌ விழுகின‌ம் எஜாமான் எங்க‌ளை காப்பாற்றுங்கோ என‌

இந்த‌ ச‌ந்திப்பு ந‌ட‌க்க‌ வில்லை என‌ தான் நான் அறிந்தேன்..................நிதி அமைச்ச‌ரை சீமான் எத‌ற்க்கு ச‌ந்திக்கனும் உற‌வே👍.............................

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2025 at 10:52, குமாரசாமி said:

ஸ்டாலினும்,கனிமொழியும் சீதாவை சந்திக்கும் போது சீமானும் சந்திப்பது வரவேற்கத்தக்கதே.

1 hour ago, வீரப் பையன்26 said:

அதென்ன‌ சீமான் ச‌ந்திச்சா ம‌ட்டும் பொங்கி எழுறீங்க‌ள்

தாத்தாவும் பேரனும் ஒரே கேள்வியை கேட்டதால் ஒன்றாக பதில் சொல்கிறேன்.

ஸ்டாலினும் கனிமொழியிம் திருடர்கள், நிம்மியை சந்திக்கிறார்கள்.

அதே போல் சீமானும் திருடன் என நீங்கள் ஒத்து கொண்டால்….

யாரும் பொங்கி எழ மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வீரப் பையன்26 said:

இந்த‌ ச‌ந்திப்பு ந‌ட‌க்க‌ வில்லை என‌ தான் நான் அறிந்தேன்..

அப்படியானால் சரி உறவே

10 hours ago, goshan_che said:

அதே போல் சீமானும்

இவர் அண்ணாமலையை புகழ்ந்து பேசுவது மோடி தமிழை பரப்புகின்றார் என்று புகழ்வது என்பவற்றை பார்த்தால் நீங்கள் முன்பு சொன்ன பிஜேபி பி ரீம் என்பது போல் தான் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

490086332_686818140685357_70698759440859

நன்றாக இருக்கும் அரசியல்வாதிகளும் அவர்களது குடும்பத்தினரும்,

விசாரணைக்கு அழைத்ததும் உடனே மருத்தவமனையில் போய் சிகிச்சை பெறுவது ஏன்?

அப்படி அவர்களுக்கு மட்டும் ஏற்படும் அந்த நோயின் பெயர் என்ன?

யாருக்காவது தெரியுமா?😂

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

490086332_686818140685357_70698759440859

நன்றாக இருக்கும் அரசியல்வாதிகளும் அவர்களது குடும்பத்தினரும்,

விசாரணைக்கு அழைத்ததும் உடனே மருத்தவமனையில் போய் சிகிச்சை பெறுவது ஏன்?

அப்படி அவர்களுக்கு மட்டும் ஏற்படும் அந்த நோயின் பெயர் என்ன?

யாருக்காவது தெரியுமா?😂

தோழர் பாலன்

இதுக்கு பெயர் ஜெயிலோ-போபியா.

இந்த நோய் தாக்கம் ஆளுக்கு ஆள் மாறுபடும்.

நோயாளியை ஊழல் வழக்கில் மத்திய அரசு நிர்வாகம் திரத்தினால் - ஆஸ்பத்தியில் போய் படுக்க வேண்டி வரும்.

நோயாளியை பாலியல் வன்கொடுமை வழக்கில் மாநில அரசு நிர்வாகம்/ஹைகோர்ட் துரத்தினால் சுப்ரீம்கோர்ர்ட்டுக்கு சில பாஜக வக்கீல்கள் சகிதம் போய் தோஷ நிவர்த்தி செய்ய வேண்டி வரும் 🤣.

ஆனால் தோழன் பாலனுக்கு இதில் ஒருவகை மட்டும்தான் தெரியும். ஏன் என்றால் அவருக்கு செலக்டிவ்-மாலைகண்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/4/2025 at 12:41, goshan_che said:

தாத்தாவும் பேரனும் ஒரே கேள்வியை கேட்டதால் ஒன்றாக பதில் சொல்கிறேன்.

ஸ்டாலினும் கனிமொழியிம் திருடர்கள், நிம்மியை சந்திக்கிறார்கள்.

அதே போல் சீமானும் திருடன் என நீங்கள் ஒத்து கொண்டால்….

யாரும் பொங்கி எழ மாட்டார்கள்.

சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லை. பங்கு ஆட்சிகளிலும் பங்கு போடவில்லை?

அப்போ எங்கு திருடியிருப்பார்?

பிளீஸ் ரெல் மீ.😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லை. பங்கு ஆட்சிகளிலும் பங்கு போடவில்லை?

அப்போ எங்கு திருடியிருப்பார்?

பிளீஸ் ரெல் மீ.😎

போன தேர்தலில் சொத்து கணக்கில் இல்லாத ஆறு கோடி நீலாங்கரை பங்களா இப்போ எப்படி வந்தது?

பிலீஸ் டெல் மீ🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

போன தேர்தலில் சொத்து கணக்கில் இல்லாத ஆறு கோடி நீலாங்கரை பங்களா இப்போ எப்படி வந்தது?

பிலீஸ் டெல் மீ🤣

சீமானின் மனைவி கயல்விழி பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். 😎

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

சீமானின் மனைவி கயல்விழி பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். 😎

  1. தேர்தலில் வேட்பாளரின் மனைவி சொத்தும் விபரமும் தாக்கல் செய்யப்படும்.

போன தேர்தலில் கயல் அண்ணி சார்பில் தாக்கல் ஆன பத்திரத்தில் இந்த சொத்து இல்லை.

  1. சாதா சட்ட கல்லூரி மாணவர் காளிமுத்து, பெரிய வக்கீல் இல்லை. உழைத்த சொத்து எல்லாம் தமிழக அரசியலில் உழைத்த திருட்டு சொத்து. மாமனாரின் சொத்தில் வாழ்க்கையை ஓட்டுவது சீமானின் இஸ்டம். ஆனால் அதுவே திருட்டு சொத்து. அண்ணன் மானஸ்தன் இப்படி செய்யலாமா?

  2. தமிழ் நாட்டு அரசியல்வாதி யாரும் சுத்தம் இல்லை என நீங்கள் முன்பு எழுதியுள்ளீர்கள். இப்ப சீமான் சொக்கதங்கம், சொக்கதங்கம் ஜுவல்லரி என எழுதுகிறீர்கள்.

பிகு

போனதேர்தல் - அதற்கு முந்திய தேர்தல் இடையில் இதே போல் சீமான், மனைவி பெயரில் ஒரு மலை வாசஸ்தலத்தில் கோப்பி தோட்டம் பதிவாகி இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

அப்ப‌டியே உத‌ய‌நிதியும் ச‌ப‌ரிச‌னும் திமுக்கா ஆட்சிக்கு வ‌ந்த‌ கையோட‌ 30ஆயிர‌ம் கோடி ஊழ‌ல் செய்த‌ ப‌ண‌ம் இப்ப‌ யார் கையில் இருக்கு என்று கேட்டு சொல்லுங்கோ

அதுக்கு பிற‌க்கு சின்ன‌ மேட்ட‌ருக்கு வ‌ர‌லாம்....................க‌ய‌ல்விழியின் அப்பா ஆதிமுக்காவில் அமைச்ச‌ரா இருந்த‌தை ம‌ற‌க்க‌ வேண்டாம் அண்ணா...........................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

அப்ப‌டியே உத‌ய‌நிதியும் ச‌ப‌ரிச‌னும் திமுக்கா ஆட்சிக்கு வ‌ந்த‌ கையோட‌ 30ஆயிர‌ம் கோடி ஊழ‌ல் செய்த‌ ப‌ண‌ம் இப்ப‌ யார் கையில் இருக்கு என்று கேட்டு சொல்லுங்கோ

அவர்கள் இருவரும் கள்ளர் நான் கேட்டா, சொல்லவா போறாங்க🤣.

2 hours ago, வீரப் பையன்26 said:

அதுக்கு பிற‌க்கு சின்ன‌ மேட்ட‌ருக்கு வ‌ர‌லாம்...................

அதே போல, ஆனால் இன்னும் வாய்ப்பில்லாதபடியால் சின்ன லெவல் களவு செய்பவர் சீமான் என்கிறீர்களா?

2 hours ago, வீரப் பையன்26 said:

க‌ய‌ல்விழியின் அப்பா ஆதிமுக்காவில் அமைச்ச‌ரா இருந்த‌தை ம‌ற‌க்க‌ வேண்டாம் அண்ணா...........................................

ஓம் செம்ம அடி அடித்த ஊழல் மன்னன்.

அது மட்டும் இல்லை தலைவரை தூக்கில் போடவேணும் என தீர்மானம் இயற்றிய சட்டசபை சபாநாயகர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2025 at 14:32, தமிழ் சிறி said:

490086332_686818140685357_70698759440859

நன்றாக இருக்கும் அரசியல்வாதிகளும் அவர்களது குடும்பத்தினரும்,

விசாரணைக்கு அழைத்ததும் உடனே மருத்தவமனையில் போய் சிகிச்சை பெறுவது ஏன்?

அப்படி அவர்களுக்கு மட்டும் ஏற்படும் அந்த நோயின் பெயர் என்ன?

யாருக்காவது தெரியுமா?😂

தோழர் பாலன்

ஞாபக சத்தியை இழக்க மருத்துவம் செய்கிறார்கள் அடித்த. கொள்ளைகள். எல்லாத்துக்கும் தெரியாது என்று பதிலளிப்பார்கள்.

On 11/4/2025 at 23:33, குமாரசாமி said:

சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லை. பங்கு ஆட்சிகளிலும் பங்கு போடவில்லை?

அப்போ எங்கு திருடியிருப்பார்?

பிளீஸ் ரெல் மீ.😎

இலட்சிமிகளிடமிருந்து திருடி. இருப்பார். திருடுவதற்க்கு

ஆட்சியில் இருக்க தேவையில்லை

ஆட்சியில் பங்கு கொள்ளவும் தேவையில்லை 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அவர்கள் இருவரும் கள்ளர் நான் கேட்டா, சொல்லவா போறாங்க🤣.

அதே போல, ஆனால் இன்னும் வாய்ப்பில்லாதபடியால் சின்ன லெவல் களவு செய்பவர் சீமான் என்கிறீர்களா?

ஓம் செம்ம அடி அடித்த ஊழல் மன்னன்.

அது மட்டும் இல்லை தலைவரை தூக்கில் போடவேணும் என தீர்மானம் இயற்றிய சட்டசபை சபாநாயகர்.

அமலாக்கத்துறை த‌மிழ் நாட்டில் தூங்க‌ வில்லை

அவ‌ர்க‌ள் பார்க்க‌ வேண்டி அலுவ‌ல‌ நீங்க‌ள் பார்ப்ப‌து தான் வேடிக்கையாக‌ இருக்கு.......................இதுவ‌ரை சீமான் ஊழ‌ல் மோச‌டி செய்தார் என்று நான் எங்கும் கேள்வி ப‌ட‌ வில்லை....................சீமான் அப்ப‌டி செய்து இருந்தால் திமுக்கா போல் ம‌த்திய‌ அர‌சுக்கு அடி ப‌ணிந்து போகும் நிலை வ‌ரும்............இதுவ‌ரை கூட்ட‌னிக்கு அழைத்தும் த‌னித்து தான் போட்டி என்று அறிவித்து இருக்கிறார்...............................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, goshan_che said:

தமிழ் நாட்டு அரசியல்வாதி யாரும் சுத்தம் இல்லை என நீங்கள் முன்பு எழுதியுள்ளீர்கள். இப்ப சீமான் சொக்கதங்கம், சொக்கதங்கம் ஜுவல்லரி என எழுதுகிறீர்கள்.

நான் எங்கேயாவது சீமான் சொக்கத்தங்கம் என எழுதியதற்கான ஆதாரங்களை காட்டவும்.

சீமான் ஒரு அரசியல்வாதி. அதிலும் இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர் விடயத்தில் அதிக கரிசனை காட்டுபவர்.

மற்றும் படி சீமானுக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள். ஈழ தமிழர்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நான் எங்கேயாவது சீமான் சொக்கத்தங்கம் என எழுதியதற்கான ஆதாரங்களை காட்டவும்.

சீமான் ஒரு அரசியல்வாதி. அதிலும் இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர் விடயத்தில் அதிக கரிசனை காட்டுபவர்.

மற்றும் படி சீமானுக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள். ஈழ தமிழர்கள் அல்ல.

எனக்கு புரியவில்லை.

கனிமொழி மற்றும் திருமால் வளவன் போன்றோர் இனக்கொலையாளி மகிந்தவை சந்தித்தபோது வராத கேள்வி கோபம்

வேகோ மற்றும் திருமால் வளவன் போன்றோர் இனக்கொலையாளர்கள் காங்கிரசோடு கூட்டு சேர்ந்தபோது வராத கேள்வி கோபம்

தமிழச்சியை இன்னொரு தமிழன் சீமான் சந்தித்ததால் ஏன் வருகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

அமலாக்கத்துறை த‌மிழ் நாட்டில் தூங்க‌ வில்லை

அவ‌ர்க‌ள் பார்க்க‌ வேண்டி அலுவ‌ல‌ நீங்க‌ள் பார்ப்ப‌து தான் வேடிக்கையாக‌ இருக்கு.......................இதுவ‌ரை சீமான் ஊழ‌ல் மோச‌டி செய்தார் என்று நான் எங்கும் கேள்வி ப‌ட‌ வில்லை....................சீமான் அப்ப‌டி செய்து இருந்தால் திமுக்கா போல் ம‌த்திய‌ அர‌சுக்கு அடி ப‌ணிந்து போகும் நிலை வ‌ரும்............இதுவ‌ரை கூட்ட‌னிக்கு அழைத்தும் த‌னித்து தான் போட்டி என்று அறிவித்து இருக்கிறார்...............................................

இந்திய அமலாக்கத்துறை மத்திய அரசில் யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் சொல்படி, அவர்களின் அரசியல் எதிரிகள் வீட்டை மட்டுமே தட்டும்.

சீமான் பிஜேபி பி டீம் எனும் போது அவர்கள் ஏன் சீமானை நோண்ட போகிறார்கள்.

ஊழல் செய்ய அதிகாரம் வேண்டும்.

சீமானுக்கு அதிகாரம் வாய்க்கவில்லை.

ஆனால் கோப்பி தோட்டம், பஜிரோ ஜீப்புகள், நீலாங்கரை பங்களா என சுத்தமாக வருவாய் ஏதும் இல்லாமல் சீமானும் மனைவியிம் பல சொத்துக்களை வாங்கியுள்ளது அவர்கள் கொடுக்கும் பிரமாண பத்திரத்திலேயே உள்ளது.

வழசரவாக்க வீடு பிரச்சனை வந்த போது, சீமானுக்கு மணம் ஆகி விட்டிருந்தது. ஆனால் நான் ஏழை வாடகை வீட்டில் இருக்கிறேன் என சீமான் கூறிய வீடியோவை நீங்கள் இங்கே பகிர்ந்தீர்கள்.

இந்த அரியவகை ஏழைக்கு இப்படி சொல்லி சில வருடங்களில் எப்படி நீலாங்கரையில் 8 கோடி பங்களா சொந்தமாகியது?

கடந்த 15 வருடமாக, சீமானோ கயல் அண்ணியோ வேலை, வியாபாரம் ஏதுவும் செய்யவில்லை.

அப்போ இந்த பணம் எல்லாம்?

திரள்நிதியில் தின்றதா?

அல்லது பி டீம் வேலைக்கு பிஜேபி கொடுத்த கூலியா?

16 minutes ago, குமாரசாமி said:

நான் எங்கேயாவது சீமான் சொக்கத்தங்கம் என எழுதியதற்கான ஆதாரங்களை காட்டவும்.

அப்போ சீமானும் கனிமொழி போல ஒரு திருட்டு அரசியல்வாதி அதாவது நான் அடிக்கடி கூறும் “சின்ன கருணாநிதி” என்பதை ஏற்கிறீர்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

அப்போ சீமானும் கனிமொழி போல ஒரு திருட்டு அரசியல்வாதி அதாவது நான் அடிக்கடி கூறும் “சின்ன கருணாநிதி” என்பதை ஏற்கிறீர்கள்.

நன்றி.

இல்லை... நான் கூற வரும் கருத்து நீங்கள் கருதும் பொருள் பட வராது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.