Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெளிவான ரபேல் பாகாத்தின் காணொளியாம்.

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீழ்த்தப்பட்ட இந்தியாவின் SU 30 இன் பாகங்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தெளிவான ரபேல் பாகாத்தின் காணொளியாம்.

ரபேல் விழுந்தது பிரான்சுக்கு பெரிய அதிர்ச்சியில் ஒரு குழுவே விசாரணைக்காக போயுள்ளார்களாம்.

வியாபார வீழ்ச்சி வந்துவிடக் கூடாதென்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஈழப்பிரியன் said:

ரபேல் விழுந்தது பிரான்சுக்கு பெரிய அதிர்ச்சியில் ஒரு குழுவே விசாரணைக்காக போயுள்ளார்களாம்.

வியாபார வீழ்ச்சி வந்துவிடக் கூடாதென்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

படிப்பவன் பாட்டை கெடுத்தானாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

வீழ்த்தப்பட்ட இந்தியாவின் SU 30 இன் பாகங்களாம்.

என்னால் பார்க்க முடியாதுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புலவர் said:

என்னால் பார்க்க முடியாதுள்ளது.

மீண்டும் மிய‌ற்ச்சி பாருங்கோ வேலை செய்யும்

என‌க்கு வேலை செய்து , அப்ப‌டி பார்க்க‌ முடிய‌ வில்லை என்றால் யூடுப்பில் ப‌திவேற்ற‌ம் செய்து விட்டு இணைக்கிறேன் உங்க‌ளுக்காக‌ புல‌வ‌ர் அண்ணா..............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, புலவர் said:

என்னால் பார்க்க முடியாதுள்ளது.

வெறும் சுட்டியாக கொடுத்துள்ளேன். தெரிகிறதா?

https://x.com/clashreport/status/1921603692567867785

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

வெறும் சுட்டியாக கொடுத்துள்ளேன். தெரிகிறதா?

நன்றி கோஷான் கண்கொள்ளாக்காட்சி. இந்தியா பிரன்ஸின் மானத்தையும் சேர்த்து வாங்கிவிட்டது.சைனாக்காரன் சைலண்டாக வேலையைப் பார்த்து விட்டு கம்முன்னு இருக்கிறான்.

Uploading Attachment...

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அமெரிக்கா, இந்தியாவுக்கு உளவில் உதவி இருப்பதன் சாத்திய கூறு மிக அதிகம் (ஏனெனில், இரு தரப்பு, பல் தரப்பு பயிற்சிகளும், அடிப்படை புரிந்துணர்வு ஒப்பந்தங்களும். Trump பதவிக்கு வந்த கையுடன் இருப்பதை சற்று விரிவுபடுத்தி, ஆழப்படுத்தி செய்து இருந்தார் ).

பாகிஸ்தான் எதிர்பார்த்து இருந்ததும் என்றதும் யதார்த்தம்.

ஆனல், பாகிஸ்தானுக்கு எவ்வாறு தெரிந்தது, இந்திய போர்விமான்கள் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்புவது, குறிப்பிட்ட ஆகாய பிரதேசத்துக்கு வருவது?

(இவற்றின் கடுமையை, முக்கியதுவத்தை, அதுவும் ஒலியின் வேகத்திலும் கூடாவாக உள்ள போர்விமானகளை இயக்கும் போது - அனுபவம் உள்ளவர்களோடு கதைத்தால் தெரியும். ஏனெனில் ஒன்றை ஓன்று நேரடியாக பொதுவாக காண்பது இல்லை வான் நாய்ச் சண்டையில், குறிவைப்பது அடிப்படையாக ரேடார் பூட்டினால் , radar locking, கிட்டத்தட்ட இருட்டில் டார்ச் அடித்து தேடுவது போல).

மேற்கின் stealth தொழில்நுட்பம் என்பதும் வரும் ரேடார், லேசர் (ஒளி) சமிக்ஞையை தவிர்ப்பது, சிதறடிப்பது, உறுஞ்சுவது , மற்றும் வேகத்தினால் சமிக்ஞை புலக்கோளத்தில் இருந்து அகலுவது போன்றவை.

அனால், இப்போது சீன செய்வது, அதுக்கேற்ற (மேற்கில் உள்ளது போன்ற ) தொழில்நுட்பத்தை விருத்தி செய்வது, மற்றது எதிரான தொழிநுட்பத்தையும் விருத்தி செய்வது.

அதே போல, இந்தியா தரை வழி ஏவுகணை (இந்தியாவிடம் அதன் உற்பதி இருக்கிறது, Brahmos , cruise missile மூன்று ஊடகத்திலும் இயங்க கூடியது, இந்தியா அறிவுப்பு படி), அது பாவிக்கப்படவில்லை என்பதும். தடுப்பது போர்விமானதை விட கடுமையானது, ஏனெனில் தரையை (அல்லது நீர்மட்டத்தை) ஒற்றி பயணிப்பதால்.

(இந்தியாவின் (எந்த நாடகிலும்) தெரிவுக்கும் காரணம் - பிழைத்தால் வேறு நாட்டின் தொழில்நுட்பம், இந்தியாவில் தொழில் நுட்பம் பாதுகாக்கப்படும், வேறு கைகளுக்கும் கிடைக்காது.)

இவை எல்லாம் சுட்டுவது, சீன பாகிஸ்தானுக்கு உளவில் உதவி இருப்பதன் சாத்திய கூறும் அதிகம்.

இதன் யதார்த்தம், மேற்கை போல, சீனாவும் இலத்திரனியல், மற்றும் செய்ம்மதி உளவில் வளர்ந்துள்ளது என்பது. வேறுபாடுகளும் இருக்கலாம்.

இதன உடனடி விளைவுகள் - சீன பங்கு சந்தையில் இராணுவ, பாதுகாப்பு துறை பங்குகள் உச்சமாக 30% கடந்து கூடியது.

நீண்ட, மத்திம கால பொருளாதார, இராணுவ, அரசியல் விளைவுகளும்.

ஏனெனில், மேற்கு, வேறு வேறு நாடுகளின் தொழில்நுற்பம் என்றாலும், களத்தில் தொழிநுட்ப படைத்துறை ஒருங்கமைவு, ஒருங்கிணைப்பு என்பதில் மிகவும் செலவழித்து கட்டி எழுப்புவது, பயிற்சி அனுபவத்தினால்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தானில் கேக்குக்கு த‌ட்டு பாடாம்

ச‌ந்தோஷ‌த்தில் கேக் வெட்டி கொண்டாட்ட‌மாம்............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, புலவர் said:

நன்றி கோஷான் கண்கொள்ளாக்காட்சி. இந்தியா பிரன்ஸின் மானத்தையும் சேர்த்து வாங்கிவிட்டது.சைனாக்காரன் சைலண்டாக வேலையைப் பார்த்து விட்டு கம்முன்னு இருக்கிறான்.

Uploading Attachment...

பாகிஸ்தானின் விமானப்படைத் தளபதி அவுரங்கசீப் (என்னே பெயர் பொருத்தம்!) கிட்டதட்ட ஒரு இண்டெர்நெட் லெஜண்ட் ஆகி விட்டார்.

இன்று அவரிடம் ரபேல் பற்றி கேட்டதும்… அவர் சொன்ன பதில்….

எம்மிடம் இருப்பதற்கு நிகரான, மிக வினை திறனான போர் விமானம் ரபேல்…

சரியாக பாவிக்கத்தெரிந்தால் 🤣.


இந்த போரில் வெற்றி பாக்கிஸ்தானிடம் என்பதே வெளிப்படையாக தெரியும் உண்மை.

ஜெய்சங்கரும், அஜித் டோவலும் வாசிங்டனை தொடர்பு கொண்டு, இப்படியே யுத்தம் மேலே மேலே படி ஏறிக்கொண்டே போனால்…அணு யுத்தம் வர வாய்ப்புண்டு என சொன்ன பின்பே டிரம் தலையிட்டதாக சொல்கிறார்கள்.

இது உண்மையாயின் இந்தியாதான் யுத்த நிறுத்தத்தை கோரி உள்ளது. தானே தொடங்கி, தானே நிறுத்த கோரும் அவமானகரமான நிலை.

பல காலமாக இந்தியா காஸ்மீர் விடயத்தில் யாரையும் தலையிட விடுவதில்லை.

ஆனால் மோடி விட்டுள்ளார்.

அது மட்டும் அல்ல மோடி சொல்ல முன்பே போர் நிறுத்தம் என அமெரிக்கா சொல்லி விட்டது.

இந்தியாவுக்கு சரியான இராணுவ, இராஜதந்திர மூக்குடைவை, பின்னடைவை தந்துள்ளது இந்த ஆப்பரேசன் சிந்தூர்.

உலக அரங்கில் கூட ஒரு நாடும் துணைக்கு வரவில்லை.

இதற்கு பெரும் பங்கு - ஆர் எஸ் எஸ் சித்தாந்த வழியில் மோடியின் பிஜேபி அரசியல் தலைமை, ஜெய்சங்கர் எடுத்த வெளிநாட்டு கொள்கை முடிவுகள்தான்.

2019 இல் அப்போதே ராகுல் காந்தி எதிர்வுகூறியது இப்போ சரியாகி உள்ளது. காஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது என்பது ஆர் எஸ் எஸ் சின் நீண்ட நாள் அரசியல் கனவு. அதை பிஜேபி நடத்தி காட்டியது.

இது சீனாவிற்கு ஏற்புடையது அல்ல (காஸ்மீரை சீனாவும் உரிமை கோருகிறது).

அதே போல் மேற்குடன், இஸ்ரேலுடன் முன்பை விட அதி நெருக்கம் காட்டி கிட்டதட்ட அணி சேரா கொள்கையை கையேவிட்டார் மோடி.

கஸ்மீரில் தன்னிச்சையா நடந்தது, ரபேல், இஸ்ரேல் டிரோன் உட்பட மேற்கோடு இராணுவ அரசியல் ரீதியில் நெருங்கியது - இந்த அரசியல் நகர்வுகளை மோடி அரசு எடுத்தமை…

முன்பை விட பாகிஸ்தான்+சீன உறவை பலப்படுத்தி விட்டது.

கார்கில் யுத்த நேரம் இந்தளவுக்கு சீனா பாக்கிஸ்தானுக்காக இறங்கவில்லை.

இப்போ இறங்க மோடி அரசின் தப்பான நகர்வுகளே காரணம்.


மோடி அரசு காஸ்மீருக்கு உள்ள அரசியல் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய நேரம் - இது எப்படி பட்ச விளைவை தரும் என ராகுல் காந்தி இந்திய பாராளுமன்றில் ஆற்றிய உரை.

பப்பு என நாமெல்லாம் கிண்டல் செய்தாலும்…இப்படிதான் இப்போ நடந்துள்ளது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, vasee said:
54 minutes ago, வீரப் பையன்26 said:

56 minutes ago, வீரப் பையன்26 said:

பாக்கிஸ்தானில் கேக்குக்கு த‌ட்டு பாடாம்

ச‌ந்தோஷ‌த்தில் கேக் வெட்டி கொண்டாட்ட‌மாம்............................

இந்தியாவ்வின் அந்த பரப்புக்குள் வைத்து பாகிஸ்தான் இந்திய விமானங்களை அழித்தது, எவர் கை ஓங்கி இருக்கிறது என்பது வெளிப்படை.

வீடியோ இல் இருப்பது உண்மை என்றால் பாக்கிஸ்தான், தொடர்பாடலையும் ஊடறுத்து இருக்கிறது போல இருக்கிறது. அது பெரிய தோல்வி இந்தியாவுக்கு. ஏனெனில் இப்போதைய தொடர்பாடல் எல்லாம் encrypted. இதனால் தான் பாகிஸ்தான் அத்தனை இந்திய விமானங்களை அழிக்க முடிந்ததாக இருக்கலாம்.

(ஏனெனில் , தொடர்பாடலை ஊடறுத்தால் பொறிவைக்கலாம். அதுவும் ஒலியின் வேகத்திலும் கூடிய விமானங்களில், இருட்டை தவிர வேறு எதுவுமே தெரியாத நிலையில். தொடர்பாடல் ஒரு கண்.)

(இந்தியவின் பாக்கித்தான் மீதான தாக்குதல் நிலையான இலக்குகள் மீது, பாகிஸ்தான் ஏவுகணைகளை தடுத்தது ஆகவும். பாகிஸ்தானும் இந்திய ஏவுகணைகளை தடுத்தது ஆகவும்)

அனால், மனித வினைத்திறனை இயக்கப்படும் விமானம் இந்தியாவ்வின் அந்த பரப்புக்குள் வைத்து அழிக்கப்பட்டது என்பது, வான் மேலாண்மையை இந்தியா அந்த சந்தர்ப்பத்தில் இழந்துவிட்டது. அதுவும் 1 க்கு மேற்பட்ட (dropping like flies என்று துறை சார் பேச்சு மொழியில் அழைப்பது)

இது காட்டுவது, இந்தியா விமான படை அமைப்பில் பிரச்சனைகள் இருக்கிறது என்பது.

முதல் சொன்னது போல, இது ஒரு அம்சம் அல்ல, மனித திறன், பயிற்சி, தொழில்நுட்பம், உளவு, tactics, திட்டங்கள் போன்றவை எல்லாம் ஒருங்கமையும் போது ஏற்படுவது விமான வான் தாக்குதல் அழிவுகள் எதிரிக்கு. (இதனாலேயே, மேற்கு (ஆய்வாளர்) இதுவரை சீனாவின் போர்விமான வான் பலத்தை எள்ளி நகையாடுவது , எந்த தொழில் நுடம் என்றாலும் சீனாவுக்கு யுத்தக கள யதார்த்த அனுபவம் இல்லை என்று).

(இந்தியா நிரந்தரமாகவும் மேலாண்மையை இழந்து இருக்கிறதோ தெரியாது, அதுக்கு முதல் அமெரிக்கா புகுந்து நிறுத்திவிட்டது, அமெரிக்கா இந்திய விமான அழிவை எதிர்பார்க்கவில்லை என்பதும்)

தொடங்கும் பொது இந்திய-பாகிஸ்தான் என்று தொடங்கி முடியும் போது அமெரிக்கா / மேற்கு - சீனா என்று முடிந்து இருக்கிறது.

பாகிஸ்தானின் விமானம் ஏதாவதை இந்தியா வானில் தாக்கி அழித்து இருக்கிறதா?

(அப்படி என்று சில செய்திகள் முதலில் வந்தது.)

மறு வளமாக, இந்திய பாக்கிஸ்தான் தொடர்பாடலை ஊடறுத்து உள்ளது என்பதற்கு ஏதவாது வெளியிட்டு இருக்கிறதா?

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

26 பேர் கொல்லப் பட்டதற்கு பதிலடியாக…. போர் நடத்தி,

இந்தியா 56 இராணுவ வீரர்களையும் இழந்து,

இரண்டு பெண் விமானிகள் சிறை பிடிக்கப் பட்டு,

சில ரபேல் விமானங்களையும், பல ட்ரோன்களையும் இழந்து உள்ளது.

இந்தியாவிற்கு இது பெரும் அவமானகரமான தோல்வி.

பிற் குறிப்பு: இதன் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம். இந்தியாவின் இழப்பை கணக்கு எடுத்து வைத்தவர்கள் அதன் எண்ணிக்கைகளை பதிவு இடுவது வரவேற்கப் படுகின்றது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

என்னால் பார்க்க முடியாதுள்ளது.

BREAKING 🚨🚨 Another Video, Ano...
No image preview

22 тыс. просмотров · 684 реакции | BREAKING 🚨🚨 Another...

BREAKING 🚨🚨 Another Video, Another Blow to India! 🚨 A new video has surfaced clearly showing a fighter jet shot down by PAF 🇵🇰. Upon closer inspection,...
56 minutes ago, தமிழ் சிறி said:

26 பேர் கொல்லப் பட்டதற்கு பதிலடியாக…. போர் நடத்தி,

இந்தியா 56 இராணுவ வீரர்களையும் இழந்து,

இரண்டு பெண் விமானிகள் சிறை பிடிக்கப் பட்டு,

சில ரபேல் விமானங்களையும், பல ட்ரோன்களையும் இழந்து உள்ளது.

இந்தியாவிற்கு இது பெரும் அவமானகரமான தோல்வி.

பிற் குறிப்பு: இதன் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம். இந்தியாவின் இழப்பை கணக்கு எடுத்து வைத்தவர்கள் அதன் எண்ணிக்கைகளை பதிவு இடுவது வரவேற்கப் படுகின்றது. 🙂

பாகிஸ்தானின் 8 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி 100 பயங்கரவாதிகள் ( முக்கிய தளபதிகள் உட்பட) கொல்லப்பட்டுள்ளார்கள் என மேற்கு ஊடகங்கள் சொல்கின்றன. (இந்தியா கூறியதாக)

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

பாகிஸ்தானின் 8 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி 100 பயங்கரவாதிகள் ( முக்கிய தளபதிகள் உட்பட) கொல்லப்பட்டுள்ளார்கள் என மேற்கு ஊடகங்கள் சொல்கின்றன. (இந்தியா கூறியதாக)

இந்தியா… இலங்கையில் அப்பாவி பொது மக்களையும், மாணவர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு, பயங்கரவாதிகளை அழித்தோம் என்று அறிக்கைகள் விட்டதை நேரில் பார்த்தோமே.

இந்தியா கூறும் தகவல்கள் வடித்து எடுத்த பொய் மூட்டைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா… இலங்கையில் அப்பாவி பொது மக்களையும், மாணவர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு, பயங்கரவாதிகளை அழித்தோம் என்று அறிக்கைகள் விட்டதை நேரில் பார்த்தோமே.

இந்தியா கூறும் தகவல்கள் வடித்து எடுத்த பொய் மூட்டைகள்.

நம்ம தலைவரையே போட்டுவிட்டோம் என்று 80 களிலேயே சொன்னவர்கள் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

நம்ம தலைவரையே போட்டுவிட்டோம் என்று 80 களிலேயே சொன்னவர்கள் தானே.

ஆம். தலைவர் இறந்து விட்டார் என்று செய்தி வந்த பத்திரிகையை...

தலைவரே சிரித்துக் கொண்டு வாசித்த படங்களும் அப்போது வந்திருந்தது.

@நன்னிச் சோழன் இடம் சிலவேளை அந்தப் படம் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

495783437_1108714127960225_7730536211907

ட்றம்பு ஜீ.... 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் ராணுவம் தனது போர் விமானம் சேதமடைந்ததாக ஒப்புதல் - நேரலை தகவல்கள்

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,PTV

படக்குறிப்பு,பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை குறித்த விவரங்களை அளித்தார்.

3 மணி நேரங்களுக்கு முன்னர்

பாகிஸ்தான் தனது போர் விமானங்களில் ஒன்று சேதமடைந்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீப நாட்களாக நிலவும் பதற்றமான சூழலில், பாகிஸ்தான் இவ்வாறு தெரிவிப்பது இதுவே முதன் முறையாகும்.

பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அதில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது தங்களது போர் விமானங்களில் ஒன்று சிறிய சேதத்தை சந்தித்ததாக தெரிவித்தார்.

இருப்பினும், அந்த போர் விமானம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் கூடுதல் தகவல்கள் எதையும் வழங்கவில்லை.

சனிக்கிழமை இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தரை, வான் மற்றும் கடல் வழியிலான துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த முடிவு செய்தன.

ஒரே ஒரு பாகிஸ்தான் விமானம் மட்டுமே சிறிதளவு சேதமடைந்ததாக கூறிய பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், அதைத் தவிர வேறு எந்த தகவலையும் வழங்கவில்லை.

ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானி யாரும் இல்லை என்றும், இதுபோன்ற செய்திகள் அனைத்தும் 'போலி சமூக ஊடக தகவல்களை' அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் கூறினார்.

ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா?

முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, இந்திய ராணுவத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மாலை செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர்.

அப்போது, இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,ANI

இதற்கு பதிலளித்த ஏ.கே.பார்தி ,"நாம் தற்போது போர்ச் சூழலில் இருக்கிறோம். இழப்புகள் என்பது போர்ச்சூழலில் பொதுவானது. இந்த சூழலில் நாம் நமது நோக்கங்களை அடைந்தோமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டால், அதற்கான பதில் 'ஆம்' பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கத்தை நிறைவேற்றினோமா என்று கேட்டால் மீண்டும் இதற்கு வலிமையான பதில் 'ஆம்'.'' என்றார்

மேலும் அவர், ''இதன் முடிவுகளை உலகமே பார்க்கிறது. ஆனால் தற்போதைய நிலையில் மேலும் விரிவாக என்ன நடந்தது? எத்தனை எண்ணிக்கை? எந்த தளத்தில்? நாம் இழந்தோமா? போன்றவை குறித்து இந்த நேரத்தில் பதிலளிக்க நான் விரும்பவில்லை. நாம் இன்னமும் போர்ச்சூழலில் தான் இருக்கிறோம். இப்போது நான் கருத்து தெரிவித்தால், அது நன்மை பயப்பதாக இருக்காது. எனவே எதிரிகளுக்கு இந்த நிலையில் எந்த சாதகமான நிலையையும் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை'' என்றார்

''என்னால் சொல்ல முடிவது இதுதான்,'நாம் நமது நோக்கங்களை அடைந்து விட்டோம்'. மேலும் 'நம்முடைய அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக திரும்பினர்'' என்று கூறினார் ஏ.கே.பார்தி.

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,ANI

'கராச்சியை எந்நேரமும் தாக்க தயாராக இருந்தோம்' - இந்திய கடற்படை

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கடற்படை வைஸ் அட்மிரல் பிரமோத்," இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையுடன் இணைந்து கடலில், இந்திய கடற்படையின் அபாரமான செயல்பாட்டுத்திறன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கு காரணமாக அமைந்தது" என்றார்.

ஏப்ரல் 22ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, இந்திய கடற்படை விரைவான மற்றும் அளவுக்குட்பட்ட கடல்சார் பதில் நடவடிக்கைகளை எடுத்ததாக கூறிய பிரமோத்," அரபிக் கடல் பகுதியில் ஆயுதங்கள் ஏவி, தயார் நிலை உறுதிப்படுத்தப்பட்டது'' என கூறினார்.

"தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளில் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு துல்லியமாக தாக்க தளவாடங்கள் மற்றும் கள தயார்நிலையை மறு மதிப்பீடு செய்வதே இதன் நோக்கமாகும்," என்று பிரமோத் தெரிவித்தார்.

கராச்சி உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் தாக்கும் விதமாக கடற்படை முழுமையான தயார் நிலையில் இருந்தது எனக் கூறும் பிரமோத், "இந்திய கடற்படையின் முன்னிலைச் செயல்பாடு, பாகிஸ்தானின் கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியது. இதனை தாங்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்தோம்'' என்றார்

தற்போதும் இந்திய கடற்படையின் செயல்பாடுகள் அதே நிலையில் இருப்பதாக அட்மிரல் பிரமோத் கூறினார்.

- இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg747mpp4do

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

26 பேர் கொல்லப் பட்டதற்கு பதிலடியாக…. போர் நடத்தி,

இந்தியா 56 இராணுவ வீரர்களையும் இழந்து,

இரண்டு பெண் விமானிகள் சிறை பிடிக்கப் பட்டு,

சில ரபேல் விமானங்களையும், பல ட்ரோன்களையும் இழந்து உள்ளது.

இந்தியாவிற்கு இது பெரும் அவமானகரமான தோல்வி.

பிற் குறிப்பு: இதன் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம். இந்தியாவின் இழப்பை கணக்கு எடுத்து வைத்தவர்கள் அதன் எண்ணிக்கைகளை பதிவு இடுவது வரவேற்கப் படுகின்றது. 🙂

இந்த‌ இழ‌ப்புக்க‌ளை சொல்லாம‌ சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளுக்கு

இந்தியா அகோர‌ அடி

பாக்கிஸ்தானின் க‌தை முடிஞ்சுது.................இப்ப‌டி சொல்லி தானே சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை ந‌ம்ப‌ வைச்ச‌வை

கைதான‌ இர‌ண்டு விமானிக‌ளை ஒந்திய‌ அர‌சு வெளிப்ப‌டையா மீட்பின‌மா அல்ல‌து அவ‌மான‌ம் க‌ருதி போய் தொலையுங்கோ என்று விட்டு விடுவின‌மா...............................

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண்டுக்கு எத்த‌னையோ ல‌ச்ச‌ம் கோடிய‌ நாட்டின் பாதுகாப்புக்கு செல‌விடின‌ம் மான‌ம் கெட்ட‌ ம‌த்திய‌ அர‌சு ,

இவ‌ள‌வு ப‌ண‌ம் செல‌விட்டும்

இவ‌ர்க‌ள் என்ன‌த்தை சாதிச்ச‌வை....................

எத்த‌னையோ ல‌ச்ச‌ ம‌க்க‌ள் இருக்க‌ வீடுக‌ள் இல்லாம‌ ம‌ர‌த்த‌டியில் சாலை ஓர‌ங்க‌ளில் வாழுதுக‌ள்

ப‌ல‌ ம‌க்க‌ளுக்கு க‌ழிவ‌றை வ‌ச‌திக‌ள் இல்லாம‌ ந‌ர‌க‌ வாழ்க்கை வாழுதுக‌ள்

த‌மிழ் நாடு தொட்டு ப‌ல‌ மானில‌ங்க‌ளில் மின்சார‌ம் போய் சேராத‌ ப‌ல‌ ஊர்க‌ள் இருக்கு.................இதை எல்லாம் இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் ம‌ன‌ம் வைச்சா உட‌ன‌ ச‌ரி செய்ய‌லாம்..........................இந்திய‌ ம‌க்க‌ள் உண்மையில் விப‌ர‌ம் தெரியாத‌ பாவ‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள்....................................

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாயினும்,இந்தியா செய்த / செய்யாத அரசியலோடு இந்த இழப்பு / தோல்வி தொடர்பு படவில்லை.

இநதியாவின் கொள்கையான ஒரு பகுதியில் / தரப்பில் மட்டும் ஆயுதத்துக்கு தங்கி இருக்க கூடாது எனும் கொள்கை அப்படியே இருக்கிறது.

இநதியா அரசாங்கங்கள் அவ்வப்போது supplier ஐ தெரிந்து எடுப்பது போல, பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆயுத கொள்வனவு நாடுகளை மாற்றுவது.

இதன் அடிப்படை சீனாவின் இராணுவ துறைசார் சிறப்பு தேர்ச்சி, தொழில் நுட்ப வளர்த்தி, அதை இந்தியாவும் , மேற்கு எள்ளிநகையாடி புறக்கணித்தது.

குறிப்பாக பாகிஸ்தானை கொசு போல அடித்து சப்பள்ளிக்கலாம் என்ற நம்பிக்கை.

தவிர இந்தியாவுக்கு மேற்கின் வரவேட்ப்பு எப்போதும், எதிலும் இருக்கிறது.

மாறாக எந்த மேற்கு தொழில்நுட்பம் கிடைத்து இருந்தாலும், இந்தியாவுக்கு இதுவே முடிவாக இருந்து இருக்கும், பாகிஸ்தான் செய்தது போல (வேறு எந்த நாடு இந்தியாவை எதிர்த்து இருந்தாலும், சீனாவின் பின்னணியுடன்).

அது போல சீன ஆயுத, தொழ்ல்நுட்ப, சிறப்பு தேர்ச்சி வழங்குதல் / விற்பனை, இந்தியாவின் அரசியலில் தங்கவில்லை .

உண்மையில் சீன, சர்தேச வாடிக்கையாளரை பிடிப்பதில் முயற்சி எடுக்கிறது, ஏனெனில் இதுவரை மேட்ற்கு தொழில்நுட்பம் பலவேறு யதார்த்த நிலைமைகளில் பாவிக்கப்பட்டு, அதன் நம்பகத்தன்மை யதார்த்தம் வழியாக என்பதால்.

பாகிஸ்தானுக்கு சீன பயிற்றுவித்து இருக்கிறது இந்த துறைகளில், தொழில்நுட்பங்களில் .

ஆனால் , பாகிஸ்தான் அதை அப்படியே உள்வாங்கி கொண்டு வேலை செய்யும் என்று இல்லாமல், எப்படி பாவித்தால் வினைத்திறன் கூடியது என்பதை சோதித்து அதுவாக தீட்டிய திட்டம்.

(அநேகமாக சீனாவவுக்கே விபரங்கள் தெரியாது இருக்கும் - உறவும் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சீனாவிடம்)

தொடர்பாடல் ஐ இப்போதைய நிலையில் ஊடறுப்பது சில நாட்கள் , வார வேலை அல்ல, அதுவும் சண்டையில் ஊடறுக்கப்படும் என்ற நம்பகத்தன்மை உருவாகுவதற்கு.

அதாவது, இந்தியாவின் மிக நலிந்த பகுதியை பாகிஸ்தான் ஆய்ந்து அறிந்து உள்ளது. லாவகமாக பாவித்து உள்ளது.

(தொடர்பாடல் இல்லாவிட்டால் அடுத்தது என்ன என்பதற்கும் பாகிஸ்தான் வைத்து இருக்கும்)

இப்படியான திட்டமிடல் இந்தியாவிடம் இல்லை என்பது வெளிப்படை.

இந்தியாவின் நம்பிக்கை பலத்தால் பாகிஸ்தானை (அடித்து) வீழ்த்தலாம் என்று.

அமெரிக்காவும் / மேற்கும் அதை நம்பி இருந்த / இருக்கும் தோற்றமே இருக்கிறது.

பாகிஸ்தானை இந்தியா வழி அடித்து, சீன விமானப்படை தேர்ச்சி / தொழில்நுட்பம் கைகொடுக்காது என்ற நிலையை உருவாக்கி, மேற்கின் / அமெரிக்காவின் செல்வாக்குக்கு கீழ் கொண்டு வருவது.

(மற்றது, இன்னொரு மிக முக்கியமான காரணி, இதுவரை மேற்கு / ருசியா தொழிலநுட்பம் பாவிக்கப்பட்டது (ருசியா - உக்கிரைன் தவிர) சமச்சீர் இல்லாத, தொழில்நுட்பத்தில் மிகவும் குன்றிய தரப்புக்கு எதிராக .

அப்படி சமச்சீர்அல்லாத Houthi உடன் அமெரிக்கா சமாதானம் பேச வேண்டிய நிலை.

தொழில்நுட்பம் கணிசமான அளவு சனநாயாக மயப்பட்டு விட்டது (இதில் பாகிஸ்தானின் தொடர்பாடல் ஊடறுப்பது இருப்பது போல)

)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பத்து அல்லது இருபது விமானங்களை பாகிஸ்தான் சுட்டு. விழுத்தினாலும்கூட. இந்த போரில் இந்தியா வெல்லும் பாகிஸ்தான் இரண்டு நாடுகள் ஆகும் பொறுத்து இருந்து பார்ப்போம் இது எனது விருப்பம் இல்லை இந்த விடயத்தில் எனக்கு எந்தவொரு விருப்பமும் இல்லை யார் வென்றாலும். அல்லது தோற்றாலும். ஒன்று தான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.