Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

f0b4c1a29fe27c5c7c576eb64515df51.gif

பாகிஸ்தான் ஜிந்தாபாத். 💪

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஏவுகணை தாக்குதல்கள் - பொதுமக்கள் எட்டு பேர் பலி – பாகிஸ்தான்

07 MAY, 2025 | 09:12 AM

image

இந்தியாவின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக  பொதுமக்கள் 8பேர்கொல்லப்பட்டுள்ளனர் என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முசாபராபாத்தில் இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பாக்கிஸ்தான்  தெரிவித்துள்ளது.

35 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் என பாக்கிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/214026

  • கருத்துக்கள உறவுகள்

‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாக். பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: மத்திய அரசு விவரிப்பு

1360769.jpg

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவுக்குப் பின் 1.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பயங்கரவாதத்தின் மீது பதிலடி கொடுக்கும் நமது உரிமையை நிலைநாட்டியுள்ளோம் என்று அவர் எடுத்துரைத்தார்.

ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் ஏன்? - நள்ளிரவுக்குப் பின் 1.30 மணியளவில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். அப்போது அவர், “கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் என 26 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல் மிகவும் கொடூரமானது. பயங்கரவாதிகள் சுற்றுலா வந்தவர்களின் குடும்பத்தினரின் கண் முன்னாலேயே மிகக் கொடூரமான கொலைச் சம்பவத்தை நடத்தினர். இது சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் பயிற்சி மேற்கொண்ட பயங்கரவாதிகள் ஈடுபட்டதை இந்தியா உறுதி செய்தது. உளவுத் துறை அவர்களின் துல்லியமான புகைப்படங்களையும் வெளியிட்டது. கடந்த 2008 நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் உள்நாட்டில் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் பஹல்காம் தாக்குதல். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா ஆதரவு பெற்ற ‘ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் திரும்பிவரும் இயல்பு நிலையை சிதைக்கவும், வளர்ந்துவரும் சுற்றுலாத் துறையை முடக்கவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து அங்கு நிலவும் அமைதியைக் குலைக்கவும், மதக் கலவரங்களைத் தூண்டவும் திட்டமிட்டு இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் புகலிடமாக இருக்கிறது என்பது உலகம் அறிந்ததே. இந்நிலையில், பல்வேறு தருணங்களில் இந்தியாவும் ஐ.நா. சபையிலேயே பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தனது நாட்டு எல்லைக்குள்ளேயே ஊக்குவிப்பதை எடுத்துக் கூறி கண்டித்துள்ளது.

இந்தச் சூழலில்தான் பஹல்காம் தாக்குதலும் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அடுத்த நாளே பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகளை அனைவரும் அறிவர். ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினை ஆற்றுவதும், குற்றச்சாட்டுகளை மறுப்பதும், பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவதுமாகவே பாகிஸ்தான் இருந்தது.

இந்தநிலையில்தான் பஹல்காம் தாக்குதல் நடந்த 15 நாட்களுக்குப் பின்னர் திட்டமிட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே வெகு நேர்த்தியாகக் குறிவைத்து, பொறுப்புடன் தாக்குதல் நடத்தியுள்ளோம். அங்குள்ள 9 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் பயங்கரவாதத்தின் மீது பதிலடி கொடுக்கும் நமது உரிமையை நாம் நிலை நாட்டியுள்ளோம். இன்று என்னுடன் இந்தத் தாக்குதல் குறித்து விவரிக்க கர்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வியாமிகா சிங் ஆகியோரும் இணைந்துள்ளனர்” என்றார்.

6 பேர் உயிரிழப்பு: முன்னதாக, இந்தியா - பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியக் குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

https://www.hindutamil.in/news/india/1360769-india-exercised-right-to-act-on-terror-says-govt-following-strikes-in-pakistan-2.html

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் இந்தியா எப்படி தாக்குதல் நடத்தியது? வெளியுறவு செயலர் கூறியது என்ன? நேரலை

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நள்ளிரவில் தாக்குதல்: பாகிஸ்தான் பதிலடி - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 மே 2025, 00:27 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்

"பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று இந்தியா அறிவித்துள்ளது.

"பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட மற்றும் நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன" என இந்தியா கூறியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தளங்களின் மீது இலக்கு வைக்கப்படவில்லை எனவும் மிகவும் கவனத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது. மேலும், இரு குழந்தைகள் உள்பட குறைந்தது 8 பேர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தார் கூறியுள்ளார். மேலும், இந்தத் தாக்குதலில் 35 பேர் காயமடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அகமதுபூர் கிழக்கு நகரில் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், "ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் மேற்கொண்ட பதில் தாக்குதலில் மூன்று இந்திய பொது மக்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது" என்று ராய்ட்டர்ஸ் மற்றும் ஏ.எஃப்.பி செய்தி முகமைகள் கூறியுள்ளன.

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா தாக்குதல் - என்ன நடக்கிறது? நேரலை

பட மூலாதாரம்,BBC URDU

படக்குறிப்பு,இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறும் பகுதி

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நள்ளிரவில் தாக்குதல்: பாகிஸ்தான் பதிலடி - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,REUTERS

இந்திய அரசு தனது அறிக்கையில், "இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்துள்ளது. அங்கிருந்துதான் இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன," என்று கூறியுள்ளது. மொத்தம் ஒன்பது இலக்குகள் குறிவைக்கப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியதாக சமீப ட்வீட் ஒன்றில் கூறியுள்ளார். இந்தியாவுக்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் எல்லையில் பூஞ்ச்-ராஜௌரி பகுதியில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலை நடத்தியதாக இந்தியா கூறுகிறது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் ஜியோ டிவியில் பேசுகையில், இந்தியா பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறுவது பொய் என்றும் அவை மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன என்றும் குற்றம்சாட்டினார்.

ஆனால், தற்போது வரை, எந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை பிபிசியால் சுயாதீனமான உறுதி செய்ய முடியவில்லை.

Play video, "பாகிஸ்தான் மீது நள்ளிரவில் இந்தியா நடத்திய தாக்குதல் காட்சிகள் - காணொளி", கால அளவு 1,26

01:26

p0l8mx3n.jpg.webp

காணொளிக் குறிப்பு,பாகிஸ்தான் மீது நள்ளிரவில் இந்தியா நடத்திய தாக்குதல் காட்சிகள் - காணொளி

இந்நிலையில், "பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக" இந்திய ராணுவம் கூறுகிறது.

இந்திய ராணுவம் பதிவிட்ட ஒரு ட்வீட்டில், "ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்-ராஜௌரி பகுதியில் உள்ள பீம்பர் காலியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக" தெரிவித்துள்ளது.

மேலும் அதில், "இந்திய ராணுவம் சரியான முறையில் பதிலடி கொடுத்து வருவதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்தியா எப்படி தாக்குதல் நடத்தியது?

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், "ஏப்ரல் 22ஆம் தேதி லஷ்கரே இ தொய்பாவை சேர்ந்த பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள், கொடூரமான தாக்குதலை பஹல்காமில் சுற்றுலா வந்திருந்த இந்திய குடும்பங்கள் மீது நடத்தியிருந்தன. அதில் அவர்கள் நேபாளத்தை சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேரை கொலை செய்திருந்தனர்" என்று தெரிவித்தார்.

இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறும் பகுதி

பட மூலாதாரம்,BBC URDU

படக்குறிப்பு,இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறும் பகுதி

இதற்குப் பதிலடி கொடுப்பதற்காக புதன்கிழமை அதிகாலை 1:05 மணி மற்றும் 1:30 மணிக்கு இடையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகளைத் தாக்கினோம்" என்று தெரிவித்தார். எதிர்வினை ஆற்றுவதற்கான, எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதில் கொடுப்பதற்கான உரிமையை இந்தியா பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் மிஸ்ரி, "இந்தியாவின் நடவடிக்கை குறிவைக்கப்பட்டது, அளவிடப்பட்டது மற்றும் ஆத்திரமூட்டாதது" என்று கூறினார். பஹல்காம் தாக்குதல் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது என்றும் அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலையைச் சீர்குலைப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அவர் கூறினார். "இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிப்பதன் மூலம் பின்தங்கிய நிலையில் வைத்திருப்பதே இதன் நோக்கம்" என்று அவர் கூறினார். இது தவிர, நாட்டில் மதக் கலவரங்களைத் தூண்டும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

தீவிரவாத உட்கட்டமைப்பை அகற்ற பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்று வெளியுறவுச் செயலாளர் கூறினார். மேலும், இந்திய அரசின் செய்தியாளர் சந்திப்பில் "இந்தத் தாக்குதலில் பொது மக்கள் யாரும் உயிரிழக்கவில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் இந்தியா எப்படி தாக்குதல் நடத்தியது? வெளியுறவு செயலர் கூறியது என்ன? நேரலை

பட மூலாதாரம்,ANI

பாகிஸ்தான் எதிர்வினை என்ன?

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் எதிர்வினையாற்றியுள்ளார். இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளித்துப் பேசிய அவர், திருப்பித் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று தெரிவித்தார்.

"எதிரி நாடு மிகவும் கோழைத்தனமாக பாகிஸ்தானின் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தியாவின் இந்தத் தாக்குதலை "போர்ச் செயல்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், "இந்தப் போர்ச் செயலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலளித்த ஷாபாஸ் ஷெரீஃப், பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உள்ளது என்று கூறியுள்ளார். (கோப்புப் படம்)

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலளித்த ஷாபாஸ் ஷெரீஃப், பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உள்ளது என்று கூறியுள்ளார். (கோப்புப் படம்)

பாகிஸ்தான் நாட்டு மக்கள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்திற்குத் துணை நிற்கிறார்கள், நாட்டின் மன உறுதி வலிமையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேநேரம், "ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் பிரிவு 51இல் குறிப்பிடப்பட்டுள்ள தற்காப்பு உரிமையின்படி, பாகிஸ்தான் தனக்கு விருப்பமான நேரத்தில் மற்றும் இடத்தில் இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"எதிரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் நன்றாகத் தெரியும். எதிரியின் தீய எண்ணங்கள் வெற்றி பெற ஒருபோதும் விடமாட்டோம்" என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்தார்.

ஷார்ட் வீடியோ

Play video, "பாகிஸ்தானில் இந்திய நடத்திய தாக்குதலின் விளைவை காட்டும் காணொளி", கால அளவு 0,50

00:50

p0l8mz49.jpg.webp

காணொளிக் குறிப்பு,பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலின் விளைவை காட்டும் காணொளி

பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் மீது தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா அறிவித்துள்ளது. முசாபராபாத்தில் நடந்த தாக்குதலுக்கு பிந்தைய காணொளியை ஏபி செய்தி முகமை வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்தக் காணொளியை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

பிபிசி உருதுவிடம் பேசியிருந்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப், "தீவிரவாதிகளின் மறைவிடங்களைக் குறி வைத்துள்ளதாக இந்தியா கூறுகிறது. சர்வதேச ஊடகத்துக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். அவை தீவிரவாத மறைவிடங்களா அல்லது பொதுமக்கள் வசிப்பிடங்களா என்பதை இங்கு வந்து அனைத்து பக்கங்களிலும் பாருங்கள்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் இரண்டு மசூதிகளும் அடங்கும். எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துல்லியமான சமீபத்திய தரவுகள் தற்போது என்னிடம் இல்லை. தாக்குதல் நடந்ததாக உறுதி செய்யப்படுள்ள ஏழு இடங்களில் இரண்டு காஷ்மீரிலும் ஐந்து பாகிஸ்தானிலும் உள்ளன. இவை அனைத்துமே பொது மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள்" என்று தெரிவித்தார்.

இந்தியாவின் தாக்குதல்கள் குறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் அதுல்லா தரார், "அவர்கள் எங்கள் எல்லையைத் தாண்டியுள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறிய கருத்துகளை தரார் மீண்டும் வலியுறுத்தினார். அவர், "இந்தத் தாக்குதல் நியாயமற்றது. இது முற்றிலும் திட்டமிடப்படாத தாக்குதல். நாங்கள் இதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம். எங்கள் பதில் தாக்குதல் வானிலும் நிலத்திலும் தொடரும்" என்று தெரிவித்தார்.

தாக்குதலை நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல், பதிலடி கொடுத்த பாகிஸ்தான் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தாக்குதல் நடந்த இடத்தின் தற்போதைய நிலைமை குறித்து நேரில் கண்ட சிலர் பிபிசியிடம் பேசுகையில், "நாங்கள் எங்கள் வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட வெடிச்சத்தம் எங்களை உலுக்கியது. இப்போது எங்கள் குடும்பங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வெளியே இருக்கிறோம். பாதுகாப்பான இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்," என்று முசாபராபாத்தில் வசிக்கும் ஷாநவாஸ் கூறினார்.

தாக்குதல்கள் மேலும் தொடரக்கூடும் என்று அங்குள்ள பலரும் அஞ்சுகிறார்கள்.

"முதல் குண்டுவெடிப்பு என் வீட்டை உலுக்கியபோது நான் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்," என்று தாக்குதல் நடந்த பகுதியிலுள்ள பிலால் மசூதியில் வசிக்கும் முகமது வாஹீத் கூறினார்.

"நான் உடனடியாக வெளியே ஓடிச் சென்றபோது, மற்றவர்களும் அதே நிலையில் இருப்பதைக் கண்டேன். மேலும் மூன்று ஏவுகணைகள் வந்து விழுந்தபோது, அனைவரையும் பீதி மற்றும் குழப்பம் ஆட்கொண்டிருந்தது. எங்களால் நிலைமையைப் புரிந்துகொள்ளவே முடியாமல் இருந்தோம்," என்று கூறினார் வாஹீத்.

மேலும், "டஜன் கணக்கான பெண்களும் ஆண்களும் காயமடைந்துள்ளனர். மக்கள் அவர்களை இங்கிருந்து சுமார் 25கி.மீ தொலைவிலுள்ள சி.எம்.ஹெச் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். நாங்கள் முசாபராபாத் நகருக்கு மிக அருகில் இருக்கிறோம். காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்," என்று வஹீத் கூறுகிறார்.

தாக்குதல் குறித்து டிரம்ப் கூறியது என்ன?

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் தாக்குதலில் 7 பேர் பலி, பாகிஸ்தான் பதிலடி - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்நிலையில் இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இது அவமானகரமானது. இப்போதுதான் கேள்விப்பட்டோம் ஓவல் அலுவலகத்திற்குள் இப்போது வரும்போதுதான் தெரிய வந்தது," என்று தெரிவித்தார்.

மேலும், "கடந்த கால அனுபவங்களால், ஏதோ நடக்கப் போகிறது என மக்கள் அறிந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் நீண்ட காலமாக, பல தசாப்தங்களாக, நூற்றாண்டுகளாகப் போரிட்டு வருகின்றனர். இது விரைவில் முடிவுக்கு வருமென நம்புகிறேன்," என்று பதிலளித்தார்.

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "சர்வதேச எல்லையில் இந்தியாவின் ராணுவ தாக்குதல் குறித்து மிகவும் கவலை கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

மேலும், "முடிந்த வரை இரு நாட்டு ராணுவமும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று இரு நாடுகளுக்கும் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுக்கிறார். மற்றொரு இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலுக்கான அபாயத்தை உலகம் தாங்காது" என்று தெரிவித்தார்.

"இரு நாட்டு தலைவர்களின் பெரிய சூதாட்டம்"

"இது இரண்டு அணு ஆயுத போட்டியாளர்களுக்கு இடையிலான ஒரு வியத்தகு மோதல்" என்று பிபிசி உலக சேவையின் தெற்கு ஆசிய ஆசிரியர், அன்பரசன் எத்திராஜன் தெரிவிக்கிறார்.

மேலும், "இந்தியா ஏதாவது ராணுவ நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், பாகிஸ்தானுக்குள் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களின் தீவிரம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் குண்டு வீசிய சில இடங்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவை என்றும், அவை பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறிவைக்கவில்லை என்றும் இந்தியா கூறுகிறது.

பாகிஸ்தான் பதிலடி கொடுப்பதாக சூளுரைத்துள்ளது, இதன் தன்மையும் இலக்குகளும் டெல்லியின் எதிர்வினையைத் தீர்மானிக்கும்.

"இரு நாடுகளும் தீவிரமடையும் நிலைமைகளைச் சமாளிக்க முடியும் என்று நினைக்கின்றன, ஆனால் பதற்றங்கள் அதிகமாக உள்ளன. எந்தவொரு ராணுவ மோதலின் போக்கையும் கணிப்பது கடினம். கடந்த காலங்களில் அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் அவற்றைக் கட்டுப்படுத்த தலையிட்டன.

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா தாக்குதல் - என்ன நடக்கிறது? நேரலை

பட மூலாதாரம்,BBC URDU

மற்ற உலகளாவிய பிரச்னைகள் காரணமாக டிரம்ப் நிர்வாகத்தின் கவனம் திசை திருப்பப்பட்ட நிலையில், பதற்றத்தைத் தணிக்க வாஷிங்டன் எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்," என்கிறார் அன்பரசன்.

மேலும், "இரு நாடுகளிலும் உள்ள அரசியல் தலைவர்கள் தாங்கள் தீர்க்கமாகச் செயல்பட்டுள்ளோம் என்று தங்கள் மக்களுக்குக் காட்ட விரும்புவார்கள், வெற்றியைக் கோருவார்கள். அவர்கள் ஒரு பெரிய சூதாட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறார் அவர்.

'மத்தியஸ்தம் செய்ய சரியான தருணம்'

மத்தியஸ்தம் செய்வதற்குச் சரியான தருணம் இது என்று வாஷிங்டனில் உள்ள தெற்காசிய ஆய்வாளர் மைக்கல் குகல்மேன் தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்தியா தாக்குதல் நடத்தியதாலும், பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் குறித்து எச்சரித்ததாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது மோதல் அபாயங்கள் அதிகமாக உள்ளன. இந்த ஆரம்ப நடவடிக்கைகளின் தன்மையின் அடிப்படையில், மேலும் விரோதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு, "கடந்த மாதம் பஹல்காமில் நடந்த தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் உடன்படுவதாகத் தெரிகிறது, ஆனால் பதற்றத்தைத் தணிப்பது அவசியம். ஏற்கெனவே தீப்பற்றி எரியும் உலகத்தில், குறிப்பாக இரண்டு அணு ஆயுத போட்டியாளர்களுக்கு இடையிலான ஒரு போரை யாரும் விரும்பவில்லை.

இந்தியா, பாகிஸ்தானுடன் நல்ல உறவுகளைக் கொண்ட நாடுகளான, அமெரிக்காவும் அரபு வளைகுடா நாடுகளும் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டிய நேரம் இது. அணுசக்தி அபாயங்கள் தொடங்குவதற்கு முன்பு இதைத் தணிப்பதற்கான வழிகளைத் தேடுமாறு இரு நாடுகளையும் வலியுறுத்த வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy8q8dw0yj2o

  • கருத்துக்கள உறவுகள்+

என்னடா விழுந்ததில ஒன்று முல்லாக்களின்ரையாம் 😅🤣

அச்சோ!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ரஷ்யா எனும் உலக வல்லரசு இருக்கும் வரை இந்தியாவை யாரும் நகத்தால் கீறிப்பார்க்க கூட முடியாது. இதில் உங்கள் செங்குத்து கனவுகளை புராண காலத்துடன் வைத்துக்கொள்ளுங்கள். 😂

அப்பனுக்கே அரைக்கோவணம்….இழுத்தி போர்ர்திகடா மவனே எண்டாராம்🤣.

சிரிய அதிபர் அசாத்தினை சுகம் கேட்டதாக சொல்லவும்🤣.

7 hours ago, வாலி said:

இது இந்து மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கிடையேயான போர். பயங்கரவாதம் எந்த விலைகொண்டும் அழிக்கப்படவேண்டும். இதில் எந்தப் பயங்கரவாத தேசம் தோற்றாலும் மகிழ்ச்சிதான்.

அங்காலை ஹூத்திகளுக்கு கச்சேரி நடக்குது. செத்தகிளிதான் பாவம் எங்கட ட்ரம்பை நம்பி ஏமாந்து போய் கிடக்கு.😂

அதே

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவிப்பு

07 MAY, 2025 | 07:40 AM

image

இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் ரக விமானங்கள் மூன்றையும், மிக் 29 விமானம் ஒன்றையும், எஸ்யு 30 போர் விமானமொன்றையும் தற்பாதுகாப்பிற்காக சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஆளில்லா விமானமொன்றையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இதனை உறுதி செய்துள்ளார்.

இந்திய விமானங்கள் எந்த பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டன என்பதை பாகிஸ்தான் தெரிவிக்கவில்லை.

இதேவேளை இதனை சிஎன்என்னினால் உறுதிப்படுத்தமுடியவில்லை.

இதேவேளை இவ்வாறானதொரு தகவலை பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமட் அசீவினை மேற்கோள்காட்டி புளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது. சில இந்திய படையினர் போர்க்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/214034

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

அதே பேச்சாளர், ஐந்து இந்திய விமானங்கள் சுட்டுத் தள்ளப்பட்டதாக கூறியுள்ளார், ஆனால் இதை தன்னிச்சையாக உறுதிப்படுத்த முடியவில்லை. இந்திய விமானங்கள் இந்திய வான்வெளியில் இருந்தபோது பாகிஸ்தான் அவற்றை சுட்டுத் தள்ளியதாக அந்த பேச்சாளர் ராய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார்.

-theguardian.com

இந்தியன் , பாகிஸ்தானுக்கு குங்கும பொட்டு (Sindoor)வைக்க போய் குண்டியில் அடி வாங்கி உள்ளார்கள் போல் உள்ளது.😅

சும்மாவே பொய் சொல்லுவதில் இந்தியாரும் பாக்கிஸ்தானியரும் நம்பவர் வன் - இப்ப ஆளாளுக்கு என்ன மதுரயில கேட்டாக, மாயவரத்தில கேட்டாக என அவிட்டு விடுகிறார்கள்.

ஐந்து விமானத்தை பாக் சுட்டிருக்க வாய்பில்லை.

அதேபோல் இந்தியா இன்னுமொரு முறை வெறும் பள்ளிவாசல்களை மட்டும் தகர்த்துள்ளது.

ஆனால் ஒட்டு மொத்தமாக பார்ப்பின் இந்த தாக்குதலில் இந்தியாவின் பலவீனமே அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

எவ்வளவு வாய் ஜம்பம். இரெண்டு வாரம் டைம் எடுத்து விட்டு ஒரு பெரிய ஆயுததாரியையோ, முகாமையோ கூட தாக்கவில்லை. இதுவே இஸ்ரேல் எண்டால் இப்போதைக்கு ஒட்டு மொத்த கஸ்மீரை மீட்டிருப்பார்கள்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

இந்தியன் , பாகிஸ்தானுக்கு குங்கும பொட்டு (Sindoor)வைக்க போய் குண்டியில் அடி வாங்கி உள்ளார்கள் போல் உள்ளது

இவை பொட்டு வைக்க போக, அவன் பூவைத்து பின்னியும் விட்டிருக்கான் போல.

இனி சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு என வடிவேலு வசனம் பேச வேண்டியதுதான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாக். பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: மத்திய அரசு விவரிப்பு

1360769.jpg

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவுக்குப் பின் 1.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பயங்கரவாதத்தின் மீது பதிலடி கொடுக்கும் நமது உரிமையை நிலைநாட்டியுள்ளோம் என்று அவர் எடுத்துரைத்தார்.

ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் ஏன்? - நள்ளிரவுக்குப் பின் 1.30 மணியளவில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். அப்போது அவர், “கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் என 26 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல் மிகவும் கொடூரமானது. பயங்கரவாதிகள் சுற்றுலா வந்தவர்களின் குடும்பத்தினரின் கண் முன்னாலேயே மிகக் கொடூரமான கொலைச் சம்பவத்தை நடத்தினர். இது சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் பயிற்சி மேற்கொண்ட பயங்கரவாதிகள் ஈடுபட்டதை இந்தியா உறுதி செய்தது. உளவுத் துறை அவர்களின் துல்லியமான புகைப்படங்களையும் வெளியிட்டது. கடந்த 2008 நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் உள்நாட்டில் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் பஹல்காம் தாக்குதல். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா ஆதரவு பெற்ற ‘ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் திரும்பிவரும் இயல்பு நிலையை சிதைக்கவும், வளர்ந்துவரும் சுற்றுலாத் துறையை முடக்கவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து அங்கு நிலவும் அமைதியைக் குலைக்கவும், மதக் கலவரங்களைத் தூண்டவும் திட்டமிட்டு இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் புகலிடமாக இருக்கிறது என்பது உலகம் அறிந்ததே. இந்நிலையில், பல்வேறு தருணங்களில் இந்தியாவும் ஐ.நா. சபையிலேயே பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தனது நாட்டு எல்லைக்குள்ளேயே ஊக்குவிப்பதை எடுத்துக் கூறி கண்டித்துள்ளது.

இந்தச் சூழலில்தான் பஹல்காம் தாக்குதலும் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அடுத்த நாளே பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகளை அனைவரும் அறிவர். ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினை ஆற்றுவதும், குற்றச்சாட்டுகளை மறுப்பதும், பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவதுமாகவே பாகிஸ்தான் இருந்தது.

இந்தநிலையில்தான் பஹல்காம் தாக்குதல் நடந்த 15 நாட்களுக்குப் பின்னர் திட்டமிட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே வெகு நேர்த்தியாகக் குறிவைத்து, பொறுப்புடன் தாக்குதல் நடத்தியுள்ளோம். அங்குள்ள 9 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் பயங்கரவாதத்தின் மீது பதிலடி கொடுக்கும் நமது உரிமையை நாம் நிலை நாட்டியுள்ளோம். இன்று என்னுடன் இந்தத் தாக்குதல் குறித்து விவரிக்க கர்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வியாமிகா சிங் ஆகியோரும் இணைந்துள்ளனர்” என்றார்.

6 பேர் உயிரிழப்பு: முன்னதாக, இந்தியா - பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியக் குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

https://www.hindutamil.in/news/india/1360769-india-exercised-right-to-act-on-terror-says-govt-following-strikes-in-pakistan-2.html

இதை நம்பாதவன், இரத்தம் கக்கி சாவான். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

f0b4c1a29fe27c5c7c576eb64515df51.gif

பாகிஸ்தான் ஜிந்தாபாத். 💪

“The tea is fantastic”

Abinandan - IAF pilot 🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

“The tea is fantastic”

Abinandan - IAF pilot 🤣

இந்த முறை பாகிஸ்தானில் சப்பாத்தியும், பருப்புக்கறியும் சாப்பிட்டு விட்டு...

"பேஷ்... பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கு" என்று சேர்ட்டிபிக்கேற் கொடுப்பார்கள். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

இவை பொட்டு வைக்க போக, அவன் பூவைத்து பின்னியும் விட்டிருக்கான் போல.

இனி சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு என வடிவேலு வசனம் பேச வேண்டியதுதான்🤣

என்ரை ஆசை என்னெண்டால் லண்டனிலை குவிஞ்சு போய் கிடக்கிற கிந்தியளும் பாக்கியளும் ஒண்டுக்கு ஒண்டு குத்துப்படவேணுமெண்டு.....நடக்குமா நடக்காதா சார்? 😁

ரபேல் விமானங்களை இலகுவாக வீழ்த்த முடியாது. தரையிலிருந்து விமான ஏவுகளை ஏவப்பட்டால் அதனை உடனே கண்டுகொண்டு எதிர் நடவடிக்கையை மேற்கொள்ளும். அதுவும் 3 ரபேல் விமானங்கள் என்பது ஆச்சரியம். இச் செய்தி உண்மையாக இருந்தால் சீனாவின் அதியுயர் தொழில்நுட்பம் பாகிஸ்தானுக்குள் நன்றாக ஊடுருவி உள்ளதாக அனுமானிக்கலாம். இந்திய விமானங்கள் வரும் என்று காத்திருந்து தாக்கியுள்ளனர். ஒரு சிறு தாக்குதலுக்கு இந்தியா பெரிய விலை கொடுத்தது அவமானம்.

தாக்குதல்கள் மாறிமாறித் தொடருமாக இருந்தால் முதலில் பாதிக்கப்படுவது பாகிஸ்தான்தான். இந்தியா போன்று பொருளாதார உறுதி அதனிடம் இல்லை. ஏற்கனவே விளிம்பில் உள்ள அதன் பொருளாதார வீழ்ச்சி மேலும் பலவீனம் அடையும்.

இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ரை ஆசை என்னெண்டால் லண்டனிலை குவிஞ்சு போய் கிடக்கிற கிந்தியளும் பாக்கியளும் ஒண்டுக்கு ஒண்டு குத்துப்படவேணுமெண்டு.....நடக்குமா நடக்காதா சார்? 😁

அவர்கங்களும் எங்கள போலதான் அண்ணை - ஓடி வந்த கூட்டம், சும்மா சமூகவலை உலகில் கம்பு சுத்துவதோடு அடங்கி விடுவார்கள்🤣.

4 hours ago, தமிழ் சிறி said:

இந்த முறை பாகிஸ்தானில் சப்பாத்தியும், பருப்புக்கறியும் சாப்பிட்டு விட்டு...

"பேஷ்... பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கு" என்று சேர்ட்டிபிக்கேற் கொடுப்பார்கள். 😂

பருப்பு கறியா? ஓ இதுதான் இந்தியாவின் இரசாயன ஆயுதமா🤣

1 hour ago, இணையவன் said:

ரபேல் விமானங்களை இலகுவாக வீழ்த்த முடியாது. தரையிலிருந்து விமான ஏவுகளை ஏவப்பட்டால் அதனை உடனே கண்டுகொண்டு எதிர் நடவடிக்கையை மேற்கொள்ளும். அதுவும் 3 ரபேல் விமானங்கள் என்பது ஆச்சரியம். இச் செய்தி உண்மையாக இருந்தால் சீனாவின் அதியுயர் தொழில்நுட்பம் பாகிஸ்தானுக்குள் நன்றாக ஊடுருவி உள்ளதாக அனுமானிக்கலாம். இந்திய விமானங்கள் வரும் என்று காத்திருந்து தாக்கியுள்ளனர். ஒரு சிறு தாக்குதலுக்கு இந்தியா பெரிய விலை கொடுத்தது அவமானம்.

தாக்குதல்கள் மாறிமாறித் தொடருமாக இருந்தால் முதலில் பாதிக்கப்படுவது பாகிஸ்தான்தான். இந்தியா போன்று பொருளாதார உறுதி அதனிடம் இல்லை. ஏற்கனவே விளிம்பில் உள்ள அதன் பொருளாதார வீழ்ச்சி மேலும் பலவீனம் அடையும்.

War economy என்று ஒரு விடயமும் இருக்கு அல்லவா? சிலசமயம் இதை வைத்தே பாகிஸ்தானில் ஒரு பொருளாதார மீட்சி ஏற்படவும் கூடும்.

உண்மையில் ரபேல், மிக், மிராஜ் ஒன்றை தன்னும் இழந்திருப்பினும் இந்தியாவுக்கு பெரிய தோல்விதான்.

2 வாரமாய் தீவிரவாதிகள் அதே இடத்திலா இருப்பார்கள்.

சும்மா கொஞ்சம் மசூதியை தகர்க்க விமானங்களினை பறி கொடுப்பது மிக பெரும் மூக்குடைவே.

பறிகொடுத்து இருந்தால்.

  • கருத்துக்கள உறவுகள்

495050386_713353084548491_12716610460114

பாகிஸ்தான் காரனெண்டால் சும்மா இல்லேடா... நெருப்புடா.

இந்தியாவின் 5 போர் விமானத்துக்கு சமாதி கட்டிய பாகிஸ்தான் வீரர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நிழலி said:

இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

இடம் தேடுகிறார்களாம்…பங்களதேஸ், சீனா, இலங்கை, நேபாளம், பூட்டானை பாதிக்காத ஒரு இடமாய் தேடுகிறார்களாம்.

Just now, தமிழ் சிறி said:

495050386_713353084548491_12716610460114

பாகிஸ்தான் காரனெண்டால் சும்மா இல்லேடா... நெருப்புடா.

இந்தியாவின் 5 போர் விமானத்துக்கு சமாதி கட்டிய பாகிஸ்தான் வீரர்கள்.

கோர்ட்டு சூட்டு போட்டுகொண்டு…

This is India’s century, we have 1/3 of the world wம் எண்டு பேட்டி கொடுக்கத்தான் ஜெய்சங்கர்வாழ் எல்லாம் இலாயக்கு🤣.

அமெரிக்கா, சீனா அல்ல, சோத்துக்கு சிங்கி அடிக்கும் பாகிஸ்தானை எதிர்த்து ஒரு சின்ன தாக்குதல் கூட செய்யமுடியாத ஆட்கள்.

இரெண்டு பக்கமும் தலைவர்கள் சுடிதார் போட்டாலும், வீரம் பாகிஸ்தானிடம்தான் போல கிடக்கு🤣.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இடம் தேடுகிறார்களாம்…பங்களதேஸ், சீனா, இலங்கை, நேபாளம், பூட்டானை பாதிக்காத ஒரு இடமாய் தேடுகிறார்களாம்.

கோர்ட்டு சூட்டு போட்டுகொண்டு…

This is India’s century, we have 1/3 of the world wம் எண்டு பேட்டி கொடுக்கத்தான் ஜெய்சங்கர்வாழ் எல்லாம் இலாயக்கு🤣.

அமெரிக்கா, சீனா அல்ல, சோத்துக்கு சிங்கி அடிக்கும் பாகிஸ்தானை எதிர்த்து ஒரு சின்ன தாக்குதல் கூட செய்யமுடியாத ஆட்கள்.

இரெண்டு பக்கமும் தலைவர்கள் சுடிதார் போட்டாலும், வீரம் பாகிஸ்தானிடம்தான் போல கிடக்கு🤣.

இலங்கைக்கு அமைதிப் படை என வந்து....

குறிப்பிட்ட அளவு ஆயுதங்களை மட்டுமே வைத்திருந்த, சாரம் கட்டிய புலிகளிடம்... ஆயிரக் கணக்கில் உயிரை பலி கொடுத்து, பல்லாயிரக் கணக்கில் அங்கவீனர்களாக திரும்பிப் போன நாடுதான் இந்தியா.

இப்படியிருக்க... பாகிஸ்தான் என்ற நாட்டிடம்... வளமாக வாங்கிக் கட்டப் போகின்றார்கள். இந்திய பாதுகாப்பு படைகளிடம்.. பாகிஸ்தானிடம் உள்ள மனவலிமை குறைவு என்பது எனது கணிப்பு. அவர்கள்... எளிதில் விலை போகக் கூடியவர்கள். அரசியல் வாதிகளும், ஊடகங்களும், இணைய வாசிகளும் அளவுக்கு அதிகமாக ஊதி பெருப்பித்து இந்திய இராணுவத்திற்கு குழை அடித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதே உண்மை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஆபரேஷன் சிந்தூர்: ஊடகங்களுக்கு விளக்கமளித்த பெண் அதிகாரிகள் யார்?

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த இரண்டு பெண் அதிகாரிகள் யார்

பட மூலாதாரம்,MINISTRY OF EXTERNAL AFFAIRS, INDIA

படக்குறிப்பு, விங் கமாண்டர் வ்யோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி

3 மணி நேரங்களுக்கு முன்னர்

பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களின் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்கிற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 22 அன்று, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

அதன் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த தாக்குதலுக்கு பதிலாக கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்துப் பேசியிருந்தனர்.

இந்திய ராணுவம் தனது நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்டது. மேலும் இது குறித்த தகவல்களை வழங்க, இந்திய ராணுவத்தின் இரண்டு பெண் அதிகாரிகள் புதன்கிழமை காலை பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.

கர்னல் சோஃபியா குரேஷி

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த இரண்டு பெண் அதிகாரிகள் யார்

பட மூலாதாரம்,@SPOKESPERSONMOD

படக்குறிப்பு,கர்னல் சோஃபியா குரேஷி

2016ஆம் ஆண்டில், ஒரு பன்னாட்டு களப் பயிற்சி இந்தியாவின் புனே நகரத்தில் நடைபெற்றது. 'ஃபோர்ஸ் 18' எனப்படும் இந்தப் பயிற்சி, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பை (ASEAN Plus) உள்ளடக்கியது. இந்திய மண்ணில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய தரைப்படைப் பயிற்சி இதுவாகும்.

இதில், 40 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் படைக்கு, லெப்டினன்ட் கர்னல் சோஃபியா குரேஷி தலைமை தாங்கினார். அந்த நேரத்தில், இவ்வளவு பெரிய பன்னாட்டுப் பயிற்சியில் இந்திய ராணுவப் பயிற்சிக் குழுவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றார்.

பாதுகாப்பு அமைச்சகமும் இந்த தகவலை அதன் முந்தைய பதிவுகளில் ஒன்றில் வழங்கியிருந்தது, மேலும் சோஃபியா குரேஷியின் படங்களையும் பகிர்ந்துள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த குரேஷி, உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். குரேஷி ஒரு ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர்.

ஓர் இந்திய ராணுவ அதிகாரியை அதிகாரியை சோஃபியா குரேஷி மணந்துள்ளார்.

சோஃபியா குரேஷி ஆறு ஆண்டுகள் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையிலும் பணியாற்றியுள்ளார். இதில் 2006ஆம் ஆண்டு காங்கோவில் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றியதும் அடங்கும்.

அப்போது அவரது முக்கிய பணி என்பது அமைதி நடவடிக்கைகளுக்கான, பயிற்சிகள் தொடர்பான பங்களிப்புகளை வழங்குவதாகும்.

வ்யோமிகா சிங்

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த இரண்டு பெண் அதிகாரிகள் யார்

பட மூலாதாரம்,MINISTRY OF EXTERNAL AFFAIRS, INDIA

படக்குறிப்பு,வ்யோமிகா சிங் கடினமான சூழ்நிலைகளில் ஹெலிகாப்டர்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி ஊடகங்களுக்கு விளக்கிய இரண்டாவது அதிகாரி விங் கமாண்டர் வ்யோமிகா சிங் ஆவார்.

வ்யோமிகா சிங் இந்திய விமானப்படையில் ஹெலிகாப்டர் விமானியாக உள்ளார். செய்திகளின்படி, ஒரு விமானியாக வேண்டும் என்பதே அவரது வாழ்க்கை லட்சியமாக இருந்துள்ளது.

வியோமிகா சிங், என்சிசி-இல் இருந்தவர். பொறியியல் படித்துள்ளார். அவர் 2019ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் முழு நேர விமானியாக நியமிக்கப்பட்டார்.

வ்யோமிகா சிங் 2500 மணி நேரத்திற்கும் மேலாக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஓட்டிய அனுபவம் கொண்டவர். ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கடினமான சூழ்நிலைகளில் சேடக் மற்றும் சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களை அவர் இயக்கியுள்ளார்.

பல மீட்பு நடவடிக்கைகளிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். அதில் ஒன்று அருணாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 2020இல் நடந்த மீட்பு நடவடிக்கை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c7878ex321xo

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் உண்மை போல் உள்ளதே???

இணையவன் சொன்னது போல் சீன ஆயுதங்களால் தாக்கி இருப்பார்களா?

How Many Indian Rafael Jets Get Destroyed? PM Shehbaz Tells in National Assembly

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீரில் விழுந்து நொருங்கியது போர் விமானம்

07 MAY, 2025 | 09:09 AM

image

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் விமானமொன்று விழுந்துநொருங்கியுள்ளது.

ஸ்ரீநகரிலிருந்து 19 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வுயான் என்ற கிராமத்தில் இந்த  விமானம் விழுந்துநொருங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமான சத்தம் கேட்டது அதன் பின்னர் பாரிய சத்தம் கேட்டது நாங்கள் வெளியில் ஓடிச்சென்றுபார்த்தவேளை விமானம் விழுந்து தீப்பிடித்திருந்தது என ஒருவர் தெரிவித்துள்ளார்.

போர் விமானமொன்று விழுந்து நொருங்கியுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/214068

பஞ்சாபில் பத்திண்டா விமானப்படை தளம் அருகே அடையாளம் தெரியாத விமானம் விபத்து: ஒருவர் பலி, 9 பேர் காயம்

07 MAY, 2025 | 01:45 PM

image

indianexpress

பஞ்சாபில் பட்டிண்டா அருகே உள்ள அகாலி குர்த் கிராமம் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் விமான விபத்து காரணமாக ஏற்பட்ட வெடிச்சத்தத்தால் திடுக்கிட்டு விழித்தது. விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட வெடிவிபத்தில் ஹரியானாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஒன்பது பேர் தீக்காயமடைந்தனர் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

அடையாளம் தெரியாத அந்த விமானம் பட்டிண்டாவில் உள்ள பிசியானா விமானப்படை நிலையத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்திற்கு அருகிலுள்ள வயல்களில் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. விரைவில் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

விபத்து குறித்து அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. விபத்து மற்றும் வெடிவிபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

சம்பவம் குறித்து பஞ்சாப் போலீஸாருக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பிறகு தீயணைப்பு படை வரவழைக்கப்பட்டது. இராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சூரிய உதயத்திற்கு முன்பு சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர். இராணுவம் அந்த பகுதியை சுற்றி வளைத்தது. மேலும் விமானப்படை ஒரு கூடாரத்தை அமைத்தது. விமானப்படை அதிகாரிகள் விரைவாக விமானத்தின் சிதைவுகளை சேகரிக்கத் தொடங்கினர்.

கிராம மக்கள் உயிரிழந்த  ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த கோவிந்த் என்று அடையாளம் காட்டினர். மேலும் அவர் வீடியோ பதிவு செய்ய முயன்றபோது இறந்ததாகக் கூறினர். விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல முயன்றபோது மேலும் ஒன்பது பொதுமக்கள் காயமடைந்தனர். அவர்கள் பட்டிண்டாவின் கோனியானா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

"கோவிந்த் கோதுமை அறுவடைக்காக இங்கு வந்து விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு அறையில் தங்கியிருந்தார். அவர் சம்பவ இடத்திற்கு முதலில் சென்றவர்களில் ஒருவர். அவர் விபத்தை வீடியோ பதிவு செய்யத் தொடங்கினார், ஆனால் அதற்கு மிக அருகில் சென்றுவிட்டார். திடீரென்று எரிந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கோவிந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்" என்று பெயர் வெளியிட விரும்பாத கிராமவாசி ஒருவர் கூறினார்.

பொழுது விடிந்ததும் மேலும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வரத் தொடங்கினர். மேலும் அவர்களை வெடிவிபத்து நடந்த இடத்திலிருந்து விலக்கி வைப்பதற்காக காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டனர்.

https://www.virakesari.lk/article/214101

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சம்பவம் உண்மை போல் உள்ளதே???

இணையவன் சொன்னது போல் சீன ஆயுதங்களால் தாக்கி இருப்பார்களா?

How Many Indian Rafael Jets Get Destroyed? PM Shehbaz Tells in National Assembly

கஸ்மீரில், பஞ்சாபில் என்ன சிறிலங்கா விமானமா வீழ்ந்திருக்கும்….

இந்திய மீடியா “அடையாளம் தெரியாத” என சடையும் போதே வடிவா அடையாளம் தெரியுது🤣.

2 hours ago, தமிழ் சிறி said:

ஊடகங்களும், இணைய வாசிகளும் அளவுக்கு அதிகமாக ஊதி பெருப்பித்து இந்திய இராணுவத்திற்கு குழை அடித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதே உண்மை. 🤣

100% உண்மை. இவர்கள் எல்லாம் வெள்ளி திரையில் பாகிஸ்தானை வெல்லத்தான் இலாயக்கு போல கிடக்கு🤣.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

கஸ்மீரில், பஞ்சாபில் என்ன சிறிலங்கா விமானமா வீழ்ந்திருக்கும்….

இந்திய மீடியா “அடையாளம் தெரியாத” என சடையும் போதே வடிவா அடையாளம் தெரியுது🤣.

100% உண்மை. இவர்கள் எல்லாம் வெள்ளி திரையில் பாகிஸ்தானை வெல்லத்தான் இலாயக்கு போல கிடக்கு🤣.

கோசான்…. இந்தியனும், பாகிஸ்தான்காரனும்…

உக்ரைன், ரஷ்யா, இஸ்ரேல், பாலஸ்தீன சண்டையில் எரியும் சண்டை காட்சிகளையும் இடையில் சொருகி விட்டு, நமது காதில் பூ சுற்றப் பார்ப்பார்கள், நாங்கள்தான் உசாராக இருக்க வேண்டும். ஏனென்றால்… திருட்டு வீடியோ தயாரிப்பதில் இவர்கள் பயங்கர கில்லாடிகள். 😂 🤣

பாகிஸ்தான் எல்லையைத் தாக்க ஏன் ரபேல் விமானத்தைப் பாக்கிஸ்தான் எல்லைக்குள் கொண்டு சென்றார்கள் என்று பிரான்சில் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனென்றால் இந்த விமானங்களிலிருந்து 400 கி.மீ எல்லையைத் துல்லியிமாகத் தாக்க முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.