Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!

adminMay 14, 2025

canada-memorial.jpg?fit=760%2C572&ssl=1

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தமது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இதற்கான எதிர்ப்பை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்தும் தாம் கவலையடைவதாக நாமல் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக எந்த இனப்படுகொலையும் நிரூபிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தவறான இனப்படுகொலை கதையை கனடா ஊக்குவிப்பதாகவும் கூறியுள்ளார்.

‘அ மைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, சில குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டி விட்டன.’

‘பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரிக்கும் கனடாவின் வரலாறு, உலகளாவிய பயங்கரவாதம் குறித்த அதன் நிலைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது’ என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2025/215474/

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய தூதுவரை அழைத்து எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்!

http://seithy.com/siteadmin/upload/Namal-Rajapaksa-130225-seithy.jpg

கனடா ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது. இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். இந்த செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாக தெரிகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்து, கனடா துல்லியமான வரலாற்றுக் கதைகளை ஆதரிக்குமாறு முறையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். ஒரு சட்டபூர்வமான போரின் பின்னணியில் ஒரு தவறான இனப்படுகொலைக் கதையை ஊக்குவிப்பது வரலாற்றைத் திரிபுபடுத்துவது மட்டுமல்லாமல், இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்கு கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடனாவில் பிரம்டன் நகரில் சிங்கௌசி பொதுப்பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.

இலங்கை இராணுவம் , விடுதலைப் புலி பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடுத்த மோதலில் எந்த இனப்படுகொலையும் சர்வதேச சட்டத்துக்கமைய நிரூபிக்கப்படவில்லை அல்லது நிரூபிக்கப்பட முடியாத நிலையில், கனடா ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது.

தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படுவது, கனேடிய அரசாங்கத்தால் அரசியல் ரீதியாக இயக்கப்படும் ஒரு நடவடிக்கையாகத் தெரிகிறது இது நீண்ட காலமாக தமிழ் புலம்பெயர்ந்தோருக்குள் உள்ள சில பிரிவுகளால் முன்னெக்கப்படுகிறது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டிவிடுகின்றன.

1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேயர் ஆல்ஃபிரட் துரையப்பாவைக் கொன்றதன் மூலம் வன்முறை செயற்பாடுகளை தொடங்கிய விடுதலைப் புலிகள், ஏராளமான கொடூரமான செயல்களைச் செய்தனர். இந்தப் பயங்கரவாதக் குழு ஆயிரக்கணக்கான தமிழ் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்து, அவர்களை அவர்களது குடும்பங்களிலிருந்து பிரித்து, பெரும் துன்பத்தை ஏற்படுத்தியது. பல தசாப்த கால வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சட்டபூர்வமான இராணுவ நடவடிக்கையில் இலங்கை ஆயுதப் படைகள் விடுதலைப் புலிகளை ஒழித்தன.

விடுதலைப் புலிகள் மற்றும் காலிஸ்தான் போராளிகள் போன்ற பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரித்த கனடாவின் வரலாறு, உலகளாவிய பயங்கரவாதம் குறித்த அதன் நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். இந்த செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்து, கனடா துல்லியமான வரலாற்றுக் கதைகளை ஆதரிக்குமாறு முறையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். ஒரு சட்டபூர்வமான போரின் பின்னணியில் ஒரு தவறான இனப்படுகொலைக் கதையை ஊக்குவிப்பது வரலாற்றைத் திரிபுபடுத்துவது மட்டுமல்லாமல், இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்கு கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்.

இந்தப் பிரச்சினையில் அரசாங்கம் தீர்க்கமாகச் செயல்படத் தவறுமாயின் அது ஆயுதப்படைகள், நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களுக்கு ஒரு அவமானமாக அமையும். இலங்கையின் தேசிய நலன்களைப் பாதிக்கும் முக்கியமான விஷயங்களை திறம்படக் கையாள அரசாங்கத்தின் இயலாமையையும் இது எடுத்துக்காட்டுகிறது என்றார்.

http://seithy.com/breifNews.php?newsID=333251&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நாமலும்... இப்பவே இனவாதம் கக்க வெளிக்கிட்டுது. தொடர்ந்து பிக்குகளும் ஊளையிட தொடங்குவார்கள்.

கனடா அமைச்சரவையில்... இரண்டு தமிழர்கள் உள்ளார்கள். அதுகும் இதுகளுக்கு... வயித்து எரிச்சலாய் இருக்கும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன... எந்தக் காலத்திலும், ஆட்சிக்கு வராமல் இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

மிக விரைவாக அரசியலுக்கு வர இனவாதம் எனும் சுலபமான பாதையை நாமலும் தெரிவு செய்துள்ளார். தானொரு தேசப்பற்றான ஆளாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

கனடா ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது. இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். இந்த செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாக தெரிகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

உலகிலேயே சிங்கள ஸ்ரீலங்கா இனப்படுகொலைகளில் முன்னணி வகிக்கும் நாடு.

https://pulikalinkuralradio.com/padukolai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு ,அந்த குடும்பத்தின் கரங்களினால் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது- பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்

Published By: Rajeeban

15 May, 2025 | 10:42 AM

image

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை  ராஜபக்ச குடும்பம்  எதிர்ப்பiது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு ,அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம்என்பதற்கான உறுதியான சமிக்ஞை

patrick_brown.jpg

ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கைகொண்டிருந்தால்; நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைள்,வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றை கைவிட்டுவிட்டு சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

இது அவர்களின் நியுரம்பேர்க் தருணம்,இந்த குடும்பம் பொறுப்புக்கூறலை எதிர்கொள்வதற்கு பதில், இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட நிலையில்,ஆடம்பரத்தில் மறைந்துள்ளது. இது வெட்கக்கேடான விடயம்.

ராஜபக்ச குடும்பம் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போல்பொட் ,ஸ்லோபடான் மிலோசோவிக்,ஹென்றிச் ஹிம்லர்,மற்றும் புளிசியான் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் போட்டியிடும் அளவிற்கும் மோசமானவை.

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை  ராஜபக்ச குடும்பம்  எதிர்ப்பiது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும்.

https://www.virakesari.lk/article/214767

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஒரு இனப்படுகொலை என்றூல், அது வடக்கு முஸ்லிம்களுக்கு LTTE செய்த கொடூர இன அழிப்புத்தான்

Thursday, May 15, 2025 செய்திகள்

Ali-sabry.jpg

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் என்று அழைக்கப்படும் ஒன்றை சமீபத்தில் திறந்து வைத்ததற்காக கனடாவை விமர்சித்து முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கையில் எப்போதாவது ஒரு இனப்படுகொலை நடந்திருந்தால், அது வடக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களை LTTE கொடூரமாக இன அழிப்பு செய்தது. 

1990 அக்டோபரில், சக சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு, தங்கள் மூதாதையர் வீடுகளை விட்டு வெளியேற 24 மணிநேரம் மட்டுமே வழங்கப்பட்டது. சுமார் 75,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். 

அத்துடன், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன, மசூதிகள் அழிக்கப்பட்டன, வாழ்க்கை சிதைக்கப்பட்டது, அவர்களின் நம்பிக்கையின் காரணமாகவே. சிங்கள குடும்பங்களும் விரட்டியடிக்கப்பட்டன, பலர் திரும்பி வர ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. இது நமது வாழ்நாளில் நடந்த உண்மையான, ஆவணப்படுத்தப்பட்ட இன அழிப்பாகும்.

இன்று, வடக்கு மாகாணம் இன தூய்மைக்கு அல்ல, அரசியல் பங்கேற்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது. சமீபத்தில் முடிவடைந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி அந்த மாகாணத்தில் வெற்றி பெற்றது. அரசால் ‘இனப்படுகொலை’ செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நாட்டில் அது சாத்தியமா? நேர்மையாகச் சொல்லப் போனால், என்ன ஒரு கேலிக்கூத்து.

உண்மை என்னவென்றால், இந்த மோதலில் அனைத்து சமூகங்களும் பாதிக்கப்பட்டன. தமிழர்கள் தங்கள் நிலங்களில் நடந்த போரிலிருந்தும், 1983ஆம் ஆண்டு போன்ற பயங்கரமான கலவரங்கள். முஸ்லிம்களும் சிங்களவர்களும் கூட இடம்பெயர்வு மற்றும் இழப்புகளைச் சந்தித்தனர். ஆனால், இலங்கையை மிகக் கடுமையான குற்றங்களான இனப்படுகொலை என்று தவறாக முத்திரை குத்துவது தவறு மட்டுமல்ல, அது பிளவுபடுத்தும், ஆபத்தானது மற்றும் மிகவும் பொறுப்பற்றது.

கனேடிய அரசாங்கம் இதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் வாக்கு வங்கி அரசியலால் குருடாக்கப்பட்டுள்ளனர், வாக்குகளை துரத்துகிறார்கள், சமநிலையை அல்ல. இந்த பொறுப்பற்ற தன்மை குணமடையாது. அது ஒன்றுபடாது.

இது தீவிரவாதத்தைத் தூண்டுகிறது, காயங்களைத் தூண்டுகிறது, மேலும் நாம் அனைவரும் அடைய விரும்பும் நல்லிணக்கத்தை அச்சுறுத்துகிறது.

நாம் உண்மைக்காக, அனைத்து சமூகங்களுக்காகவும், பொய் மற்றும் வெளிநாட்டு தோரணையில் வேரூன்றிய எதிர்காலத்திற்காகவும், ஒவ்வொரு இலங்கையருக்கும் நீதி, ஒற்றுமை மற்றும் கண்ணியத்தில் வேரூன்றிய எதிர்காலத்திற்காகவும் நிற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

இலங்கை இராணுவம் , விடுதலைப் புலி பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடுத்த மோதலில் எந்த இனப்படுகொலையும் சர்வதேச சட்டத்துக்கமைய நிரூபிக்கப்படவில்லை

அது சரி, சில நாட்களுக்கு முன், இவரேதான் அறிக்கை விட்டிருந்தார். போரில் சம்பந்தப்படாத சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டபோது தனது தந்தை மிகவும் கவலையடைந்திருந்தார் என்று. மாற்றி மாற்றி கதைப்பது இவர்களுக்கு கைதேர்ந்த கதை. அப்படி இனப்படுகொலை நடைபெறவில்லை என்றால், ஏன் இவரின் தந்தை தன்னை மின்சாரக்கதிரையில் ஏற்றப்போகிறார்கள் என்று ஒப்பாரி வைத்தவர்? இன்னும் ஐ. நாவுக்கு படையெடுக்கிறார்கள்?

3 hours ago, கிருபன் said:

ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கைகொண்டிருந்தால்; நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைள்,வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றை கைவிட்டுவிட்டு சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

அதே! போர்குற்றவிசாரணையை மறுத்துக்கொண்டு, நாம் நல்லவர்கள் என்று அலம்புவதை விட்டு, விசாரணைக்கு ஒத்துழைப்புக்கொடுத்து உங்களை நிரூபியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நமல் கொதிக்கமாட்டார் சந்தோஷப்படுவார் காரணம் கனடாவில் உள்ள இலங்கைத் தமிழர்க்கு தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது என.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nunavilan said:

மிக விரைவாக அரசியலுக்கு வர இனவாதம் எனும் சுலபமான பாதையை நாமலும் தெரிவு செய்துள்ளார். தானொரு தேசப்பற்றான ஆளாம்.

என‌க்கு இவ‌னை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது

இவ‌னை இவ‌னின் தேப்ப‌னின் புகைப் ப‌ட‌ங்க‌ளை இணைய‌த்தில் பார்த்தால் என்னை அறியாம‌லே கோவ‌ம் வ‌ரும்....................

க‌ன‌டா நாட்டில் நினைதூவி செய்த‌து போல் ஒட்டு மொத்த‌ ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளில் அந்த‌ அந்த‌ நாட்டு அர‌சாங்க‌த்தின் அனும‌தியுட‌ன் திற‌க்க‌னும்..................அதை பார்த்து இவ‌ன் போன்ர‌ இன‌ வெறிய‌ர்க‌ள் வ‌யிறு எரிஞ்சு சாக‌னும்😡..........................

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, வீரப் பையன்26 said:

ஆமாம் சரி தான் முதலில் டென்மார்க்கிலிருநது தொடங்குவம் ...எப்போது கட்டப் போகிறீர்கள் ???? ஜேர்மனியில் தாத்தா இடம் கொடுக்கலாம். 😀

  • கருத்துக்கள உறவுகள்

497605447_1088191470003267_3812787058400

அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம்.

- கனடாவின் பிரம்டன் நகரபிதா பட்ரிக் பிரவுன்.-

  • கருத்துக்கள உறவுகள்

497534522_717088554119285_59920840417035

495625257_717090924119048_40324240197271

493553383_717088617452612_26361342632721

சிங்களம் கதறுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

ஆமாம் சரி தான் முதலில் டென்மார்க்கிலிருநது தொடங்குவம் ...எப்போது கட்டப் போகிறீர்கள் ???? ஜேர்மனியில் தாத்தா இடம் கொடுக்கலாம். 😀

ந‌க்க‌ல்

பெரும்பாலான‌ டென்மார்க் ம‌க்க‌ளுக்கு முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு முத‌லே தெரியும் சிங்க‌ள‌ அர‌சு இன‌வாத‌ அர‌சு என்று

எங்க‌ட‌ போராட்ட‌த்தை அவ‌ர்க‌ள் தீவிர‌வாத‌ போராட்ட‌ம் என்று சொன்ன‌து கிடையாது Tamilsk Tiger என்று தான் எங்க‌ட‌ போராட்ட‌த்தை சொல்லுவின‌ம் , அவ‌ர்க‌ள் எத‌ற்காக‌ போராடின‌ர்க‌ள் என்று இந்த‌ நாட்டு ம‌க்க‌ளுக்கும் தெரியும் அர‌சாங்க‌த்துக்கும் தெரியும்....................க‌ன‌டாவில் ப‌ல‌ ல‌ச்ச‌ம் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் வாழுகின‌ம் டென்மார்க்கில் 12ஆயிர‌த்துக்கு உள்ளை தான்.......................இந்த‌ நாட்டில் மாவீர‌ நாள் மூன்று இட‌ங்க‌ளில் ஒரே நேர‌த்தில் ந‌ட‌த்துகிற‌து.......................இந்த‌ அர‌சாங்க‌த்துக்கு நாங்க‌ள் முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்பு நினைவுதூவி அமைக்க‌ விரும்புகிறோம் என்றால் அவ‌ர்க‌ளே இட‌த்தையும் த‌ந்து க‌ட்டுவ‌த‌ற்கான‌ ப‌ண‌த்தையும் இந்த‌ நாட்டு அர‌சாங்க‌மே த‌ருவின‌ம்.......................Aarhus ந‌க‌ரில் க‌ட்டினால் பொதுவாய் டென்மார்க்கில் இருக்கும் எல்லா த‌மிழ‌ர்க‌ளும் வ‌ந்து பார்த்து நினைவு கூர‌ ச‌ரியான‌ இட‌மாய் இருக்கும்.....................நான் டென்மார்க் வ‌ந்த‌ கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை இங்க‌த்தை வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளுட‌ன் இருந்து தான் வ‌ள‌ந்த‌தேன் இந்த‌ நாட்டு ச‌ட்ட‌ திட்ட‌ம் என‌க்கு அதிக‌ம் தெரியும்.................அது தான் என்ர‌ த‌மிழ் இப்ப‌வும் அரைகுறை................ஊரிலும் போர் சூழ‌ல் கார‌ண‌மாய் பெரிசா ப‌டிக்க‌ வில்லை இங்கை வ‌ந்தும் த‌மிழ் பாட‌சாலைக்கு போக‌ வில்லை..................என‌து த‌மிழ் வ‌ள‌ர்ச்சிக்கு யாழ்க‌ள‌ம் தான் உத‌வின‌து..................ந‌ன்றி யாழ்🙏👍.........................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

சில நாட்களுக்கு முன், இவரேதான் அறிக்கை விட்டிருந்தார். போரில் சம்பந்தப்படாத சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டபோது தனது தந்தை மிகவும் கவலையடைந்திருந்தார் என்று. மாற்றி மாற்றி கதைப்பது இவர்களுக்கு கைதேர்ந்த கதை

❤️

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

ஆமாம் சரி தான் முதலில் டென்மார்க்கிலிருநது தொடங்குவம் ...எப்போது கட்டப் போகிறீர்கள் ???? ஜேர்மனியில் தாத்தா இடம் கொடுக்கலாம். 😀

பிள்ளைக‌ள் இங்கு த‌மிழ் ப‌டிக்க‌ இந்த‌ நாட்டு அர‌சாங்க‌ம் தான் உத‌வுது..................நினைவு தூவி அமைக்குவிள் நாங்க‌ள் வின்ன‌ப்பிக்க‌லாம்................நோர்வே , டென்மார்க் , சுவிட‌ன் , இந்த‌ மூன்று நாடும் ஸ்க‌ன்ரிநேவிய‌ன் , 2002ம் ஆண்டு நோர்வே நாடு தானே ச‌மாத‌ன‌ பேச்சு வார்த்தைக்கு த‌ல‌மை தாங்கின‌து.......................அத‌னால் இந்த‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ம‌க்க‌ளுக்கு எங்க‌ட‌ போராட்ட‌ம் ப‌ற்றி ந‌ங்கு தெரியும்..................இந்த‌ நாட்டில் எங்க‌டை ஆட்க‌ள் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்துக்கு வ‌ர‌ வில்லை..................அன்மையில் ஒரு காணொளி பார்த்தேன் டென்மார்க் பெண் பிர‌மினிஸ்த‌வா , சிறுவ‌ர் இல்ல‌த்துக்கு சென்று அந்த‌ பிள்ளைக‌ள் கேட்க்கும் கேள்விக‌ளுக்கு ப‌தில் அளித்தா.....................இந்த‌ நாட்டில் இந்த‌ அர‌சு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌து முத‌ல் ஊன‌முற்ற‌வைக்கு 🙏🙏🙏

பெரும்பாலான‌ காசை அவைக்கு செல‌விடின‌ம்........................மாவீர‌ நாளை முன் நின்று செய்யும் உற‌வுக‌ள் தான் இந்த‌ நாட்டு அர‌சாங்க‌த்துக்கு கோரிக்கை வைக்க‌னும் க‌ன‌டாவில் இன‌ அழிப்பு நினைவு தூவி செய்த‌து போல் இந்த‌ நாட்டிலும் செய்ய‌ அனும‌தி த‌ரும் ப‌டி.................அடிச்சு சொல்லுகிறேன் இந்த‌ நாட்டு அர‌சாங்க‌ம் ஓம் என்று தான் சொல்லுவின‌ம்........................

ம‌க்க‌ளுக்கு இடையூரு இல்லாத‌ இட‌த்தில் வையுங்கோ என்று சொல்லுவின‌ம் , ஆனால் எம்ம‌வ‌ர்க‌ள் இதுவ‌ரை இத‌ற்க்கு முன் வ‌ந்த‌தாக‌ தெரிய‌ வில்லை....................க‌ன‌டா ந‌ல்ல‌ ஒரு தொட‌க்க‌ம்🙏👍...........................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

ந‌க்க‌ல்

இல்லை நம்புங்கள் உங்கள் பதிலுக்கு நன்றி பல 🙏

அரசாங்கம் கட்டுமாயின். முயற்சித்தால் நல்லது சின்ன நாடு 12 ஆயிரம் மக்கள் போதும் இலங்கை எதிர்க்கும் போது உங்கள் அரசாங்கம் என்ன சொல்கிறது என்பதை பார்க்க ஆசையாக இருக்கிறது எனவே முயற்சிகள் செய்யவும் ஜேர்மனியில் அரசாங்கம் செய்யும் சாத்தியம் இல்லை ஆனால் ஐரோப்பாவில் ஒரு நாட்டில் கட்டினால் மற்றைய நாடுகளில் படிப்படியாக கட்டப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

பிச்சைக்கார‌ இல‌ங்கை அர‌சை இந்த‌ உல‌கில் எந்த‌ நாடு ம‌திக்குது

உந்த‌ நாச‌மாய் போன‌ இந்தியாவை த‌விற‌ எவ‌ன் ம‌திக்கிறான்

சீனன் பாதி இல‌ங்கைய‌ வேண்டி விட்டான் அது த‌மிழ‌ர்க‌ளின் இட‌ங்க‌ள் இல்லை சிங்க‌ள‌வ‌ர்க‌ள் வ‌சிக்கும் இட‌ங்க‌ள்.......................

த‌மிழ் நாட்டில் தான் 2013ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுதூவி க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து..................க‌ன‌டாவில் சிங்க‌ள‌வ‌னின் ப‌ருப்பு வேக‌து , க‌ன‌டா அர‌சு ம‌கிந்தாவை த‌ங்க‌ட‌ நாட்டுக்கை அனும‌தியோம் என்று 12வ‌ருட‌த்துக்கு முத‌ல் சொன்ன‌வை..................

த‌மிழ‌ர்க‌ள் ஒற்றுமையாக‌ இருந்தால் ந‌ல்ல‌தே ந‌ட‌க்கும்....................இங்கைத்தை அர‌சிய‌ல் வாதிக‌ளை தொட‌ர்வு கொள்வ‌து ஈசி.....................ம‌க்க‌ளோடு ம‌க்க‌ளாய் நிப்ப‌வ‌ர்க‌ள் தான் இங்க‌த்தை அர‌சிய‌ல் வாதிக‌ள்👍...........................

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வீரப் பையன்26 said:

............இங்கைத்தை அர‌சிய‌ல் வாதிக‌ளை தொட‌ர்வு கொள்வ‌து ஈசி.....................ம‌க்க‌ளோடு ம‌க்க‌ளாய் நிப்ப‌வ‌ர்க‌ள் தான் இங்க‌த்தை அர‌சிய‌ல் வாதிக‌ள்👍...

அப்படியென்றால் ஏன் இன்னும் டென்மார்க்கில். நினைவு சின்னம் கட்டவில்லை?? உங்கு வாழும் தமிழர்கள் கோரவில்லையா?? அல்லது ஒற்றுமை இல்லையா??

  • கருத்துக்கள உறவுகள்

497840873_1111798314318473_2004019710487

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

அப்படியென்றால் ஏன் இன்னும் டென்மார்க்கில். நினைவு சின்னம் கட்டவில்லை?? உங்கு வாழும் தமிழர்கள் கோரவில்லையா?? அல்லது ஒற்றுமை இல்லையா??

என்ன‌த்த‌ சொல்ல‌ எப்ப‌டி சொல்ல‌

2009க்கு முத‌ல் ந‌ல்ல‌ ஒற்றுமை இங்கை எல்லாரும்

இப்ப‌ ?...................

  • கருத்துக்கள உறவுகள்

496110321_662302566682470_37588819895929

  • கருத்துக்கள உறவுகள்+
On 15/5/2025 at 02:44, alvayan said:

இலங்கையில் ஒரு இனப்படுகொலை என்றூல், அது வடக்கு முஸ்லிம்களுக்கு LTTE செய்த கொடூர இன அழிப்புத்தான்

Thursday, May 15, 2025 செய்திகள்

Ali-sabry.jpg

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் என்று அழைக்கப்படும் ஒன்றை சமீபத்தில் திறந்து வைத்ததற்காக கனடாவை விமர்சித்து முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கையில் எப்போதாவது ஒரு இனப்படுகொலை நடந்திருந்தால், அது வடக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களை LTTE கொடூரமாக இன அழிப்பு செய்தது. 

1990 அக்டோபரில், சக சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு, தங்கள் மூதாதையர் வீடுகளை விட்டு வெளியேற 24 மணிநேரம் மட்டுமே வழங்கப்பட்டது. சுமார் 75,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். 

அத்துடன், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன, மசூதிகள் அழிக்கப்பட்டன, வாழ்க்கை சிதைக்கப்பட்டது, அவர்களின் நம்பிக்கையின் காரணமாகவே. சிங்கள குடும்பங்களும் விரட்டியடிக்கப்பட்டன, பலர் திரும்பி வர ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. இது நமது வாழ்நாளில் நடந்த உண்மையான, ஆவணப்படுத்தப்பட்ட இன அழிப்பாகும்.

இன்று, வடக்கு மாகாணம் இன தூய்மைக்கு அல்ல, அரசியல் பங்கேற்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது. சமீபத்தில் முடிவடைந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி அந்த மாகாணத்தில் வெற்றி பெற்றது. அரசால் ‘இனப்படுகொலை’ செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நாட்டில் அது சாத்தியமா? நேர்மையாகச் சொல்லப் போனால், என்ன ஒரு கேலிக்கூத்து.

உண்மை என்னவென்றால், இந்த மோதலில் அனைத்து சமூகங்களும் பாதிக்கப்பட்டன. தமிழர்கள் தங்கள் நிலங்களில் நடந்த போரிலிருந்தும், 1983ஆம் ஆண்டு போன்ற பயங்கரமான கலவரங்கள். முஸ்லிம்களும் சிங்களவர்களும் கூட இடம்பெயர்வு மற்றும் இழப்புகளைச் சந்தித்தனர். ஆனால், இலங்கையை மிகக் கடுமையான குற்றங்களான இனப்படுகொலை என்று தவறாக முத்திரை குத்துவது தவறு மட்டுமல்ல, அது பிளவுபடுத்தும், ஆபத்தானது மற்றும் மிகவும் பொறுப்பற்றது.

கனேடிய அரசாங்கம் இதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் வாக்கு வங்கி அரசியலால் குருடாக்கப்பட்டுள்ளனர், வாக்குகளை துரத்துகிறார்கள், சமநிலையை அல்ல. இந்த பொறுப்பற்ற தன்மை குணமடையாது. அது ஒன்றுபடாது.

இது தீவிரவாதத்தைத் தூண்டுகிறது, காயங்களைத் தூண்டுகிறது, மேலும் நாம் அனைவரும் அடைய விரும்பும் நல்லிணக்கத்தை அச்சுறுத்துகிறது.

நாம் உண்மைக்காக, அனைத்து சமூகங்களுக்காகவும், பொய் மற்றும் வெளிநாட்டு தோரணையில் வேரூன்றிய எதிர்காலத்திற்காகவும், ஒவ்வொரு இலங்கையருக்கும் நீதி, ஒற்றுமை மற்றும் கண்ணியத்தில் வேரூன்றிய எதிர்காலத்திற்காகவும் நிற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அப்ப சோனகர்களை விரட்டுவதற்கு வழிசமைத்த தென் தமிழீழத்தில் சோனகர்களால் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், கட்டாய விரட்டியடிப்புகள், ஊர் வன்வளைப்பு, தமிழ் பெண்கள் மீதான வன்புணர்வுகள் எல்லாம் என்னவகை?

சோனகருக்கு வந்தால் ரத்தம் தமிழருக்க வந்தால் தக்காளி சட்னியோ?

அதுதான் இனப்படுகொலை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.