Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.

  • Replies 59
  • Views 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வேடனை விடுதலை செய்யுங்கள் * "நான் பாணன் அல்ல பறையன் அல்ல புலையன் அல்ல நீ தம்புரானுமல்ல. ஆயிலும் நீ ஒரு மயிருமல்ல!" வேடனின் தாயார் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதி. தந்தையார் விளிம்புநிலை மனிதன்

  • ஏராளன்
    ஏராளன்

    🙏என்னை நிராகரித்தவர்களுக்கும், என்னுடன் நின்றவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள். நான் தொடருவேன்...?

  • நிழலி
    நிழலி

    லண்டன் தமிழ் கடையொன்றில் இப்படியான ஒரு உரையாடல் ( 'தாய் யாழ்ப்பாணத்தில் எவ்விடம்' ) இடம்பெற்றதாக ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டு இருக்கின்றது..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.

இப்போதுதான் கேள்விபடுகிறேன்.

அறிமுகத்துக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

494730537_3130177933804913_7014832457489

ஊர் மாறி பிறந்தாலும்,

பேர் மாறி வளர்ந்தாலும்,

உள்ளுக்குள் இருக்கும்

உணர்வு,

அவன் உதிரத்தில்

கலந்தது தமிழின துடிப்பு,

வெளியில் அவன் வேடன்,

உள்ளுக்குள் அவன் வேங்கை.

சாலையின் ஓரத்தில்

சகதியில் புரண்டவன்,

சாதி மதங்களால்

வேதனை சுமந்தவன்.

ஆதிக்க சமூகத்தால்

அலைந்து திரிந்தவன்,

அன்னை மொழியை

அடி நெஞ்சில் உணர்ந்தவன்.

வேடன் வேடன் என்று

விரட்டியடிக்கப்பட்டவன்,

மக்கள் விரும்பும் ஒருவனாய்

வளர்ந்து நிற்பவன்.

பாட்டில் வறியோரின்

வலியை சொன்னவன்,

பல்லாயிரம் மக்களின்

மனங்களை கவர்ந்வன்.

தாங்கிடா வலிகளை

தனக்குள்ளே சேர்த்தவன்

வேங்கையின் வீரம்பெற்று

வீதியுலா வருகின்றான்.

தயாளன் கனியன்

  • கருத்துக்கள உறவுகள்

மலையாள ராப் பாடகர் வேடன் மீது என்ஐஏவிடம் புகார்!

6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான “வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ்” என்ற பாடலில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறி, வேடன் என்று பிரபலமாக அறியப்படும் ராப்பர் ஹிரந்தாஸ் முரளி மீது பாஜக தலைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

postcard-4-1-2025-05-23T134041.661.webp

மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கடந்த சில நாள்களாக கஞ்சா வழக்கில் கைதாகி வருகின்றனர்.

அந்த வரிசையில் சமீபத்தில் பிரபல ராப் பாடகரான வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளியும் கஞ்சா பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து புலி பல் டாலருக்காக வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைக்ககம் மற்றும் என்ஐஏவிடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நகராட்சி கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் என்பவர் புகார் அளித்துள்ளார்.

பாடகர் வேடன் கடந்த 2019ஆம் ஆண்டு பாடிய “குரலற்றவர்களின் குரல்” என்ற பாடலில் மத்திய அரசின் உச்சத்தில் இருப்பவர்களைப் பற்றி மறைமுகமாக விமர்சித்திருந்தார். புகாரில் இந்த பாடலை குறிப்பிட்டு, பிரதமரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் பிம்பத்தை அவமதிக்கும், ஆதாரமற்ற, அவமரியாதைக்குரிய மற்றும் புண்படுத்தும் கருத்துக்கள் பாடலில் இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சாதியின் அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தி வருவதாகவும், இவரது பின்னணி குறித்தும் விசாரணை செய்ய பாலக்காடு நகராட்சி கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் புகார் அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

https://news7tamil.live/complaint-filed-against-malayalam-rapper-vedan-with-home-ministry-and-nia.html

  • கருத்துக்கள உறவுகள்

வேடன் ஈழத்தமிழனா? | யாழ்ப்பாணத்து பெண் எப்படி கேரளாவில்? | Indian Rapper Vedan| voice of voiceless

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா, அப்பா, அன்பு, அறிவு, அழகு, அரசியல், அஞ்சாமை....

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப அடிபட்டு மிதிபட்டு இங்க வந்துருக்கேன், ஆனா அது எல்லாத்தையும்! - Rapper Vedan | Manjummel Boys

  • கருத்துக்கள உறவுகள்

🙏என்னை நிராகரித்தவர்களுக்கும், என்னுடன் நின்றவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள். நான் தொடருவேன்...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படித்தான் கூட்டிக்கழிச்சு பார்த்தாலும்....அண்மைக்கால செய்திகள் இனவாத சிங்களத்திற்கு நெஞ்சில் உதைப்பது போலவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

501055910_24037724262519131_117769799204

யாழ்ப்பாண மண்ணை பூர்வீக தாய்நிலமாக கொண்ட கிரண் தாஸ் முரளி எனும் வேடன், கேரளத்தில் அவன் பள்ளியில் படிக்கும் போது அவனது கரு நிறத்தை வைத்து அவனுக்கு வேடன் என்று பட்டப்பெயர் சூட்டினர். ஆதிக்ககாரர்களின் இழி சொல்லுக்கு ஆளானான் வேடன் ♥️
எது அவனை ஒதுக்கியதோ அதனை அடக்க அவன் கையில் எடுத்ததோ கலை. சிறு வயதிலிருந்தே எழுதுவதும் பாடுவதும் அவனுக்கு நன்கு வசப்பட்டது.
இப்போது வேடனின் பாடல்கள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றுள்ளன. வேடனை இப்போது உலகமே கொண்டாடுகிறது.
தற்போது கேரளாவின் பேரன்பில் பெரும் புயலாகி விட்டான் வேடன். ஓரிரவில் சமூக ஊடகங்களின் (Trending) பேசு பொருளாகி விட்டான்.
ஒடுக்கப்பட்டவன் மேல் எழுந்தால் அவனை அடக்க முடியாது என்பதற்கு வேடனே நல்ல உதாரணம் ❤️

100% பொழுது போக்கு ·

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பற்றி எரியும் வேடன் விவகாரம்! களத்துக்கு வந்த திரைப் பிரபலங்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 24/5/2025 at 19:28, ஏராளன் said:

அம்மா, அப்பா, அன்பு, அறிவு, அழகு, அரசியல், அஞ்சாமை....

images-4.jpg

விதைகள் எங்கு முளைத்தாலும் அதற்கான வீரியத்தை காட்ட தவறுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

501130559_1423955019052107_1183976565384

யார் இந்த சொல்லிசைப் பாடகர் (Rap singer ) வேடன்?
இதோ அவரே ஒரு பாடலில் தான் யார் எனச் சொல்லுகின்றார்👇
....................................
`நவீன அடிமைகள் வாழும் நரகம் போல ஓர் இடத்திலே
என்னைப் பெற்றல்லோ, கல்லுப் போல ஒருத்தி
அவளை யப்னாவில் (Jaffna ) இருந்து துரத்தி
அவளின் உதிரத்திலே இருந்து உருவெடுத்தி`
[ இது மலையாளப் பாடல் என்பதாலும், நான் அதே ஒலிப்பினைத் தமிழில் எழுதியதாலும், சில தவறுகள் இருக்கலாம் ]
{ Social Criminal (Official Music Video) | Prod. ‪@Hrishi.8o8 , முதலாவது பின்னூட்டத்தில் பாடலைக் காண்க}
........................................
👆 ஓம், அவரது அம்மா யாழ்ப்பாணத்திலிருந்து பேரினவாதம் தொடுத்த போரினால் துரத்தியடிக்கப்பட்டவர். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்தவர். தமிழ்நாட்டுக்குக் கூலித் தொழில் செய்வதற்கு சேரளத்திலிருந்து வந்த முரளி என்பவரைக் காதலித்து மணம் முடித்தவர். பின்னர் சேரளத்திலுள்ள திருச்சூர் (Thrissur, மலையாளம்: തൃശൂര്‍, Kerala ) என்ற ஊருக்குச் சென்று வாழ்ந்து வருகின்றனர். திருச்சூரில் 1994 ஆம் ஆண்டு பிறந்தவரே இந்த வேடன். அவரது இயற்பெயர் கிரந்தாஸ் முரளி என்பதாகும். சிறுவயதில் ஏழ்மையில் வாடியவரே வேடன். இவருக்கு வேடன் என்ற பெயர் ஏற்பட்டதே ஒரு சுவையான நிகழ்வு. சிறுவனாக இருக்கும் போதே ஊரிலுள்ள பெரியவர்கள் சிலருடன் சேர்ந்து நீர் நிலைகளுக்குச் சென்று மீன்களை வேட்டையாடுவராம், அதனால் ஏற்பட்ட பெயரே வேடன் { மீன் பிடிப்பவர்களைச் சங்க இலக்கியமும் `வேடன்`என்ற பொருளில் அழைப்பதனைக் காணலாம்}. அச் சிறுவன் வளர்ந்து பெரும் பாடகராக வந்த பின்னரும் வேடன் என்ற பெயரே நிலைத்து விட்டது.
இவரது பாடல்கள் எல்லாமே புரட்சிகரமானவை. 2020 ஆம் ஆண்டில் இவரை மிகவும் பரவலடையச் செய்த `"Voice of the Voiceless" {குரலற்றோரின் குரல் } என்ற தொகுப்பின் தலைப்பே இவரது படைப்புகளைப் பற்றிப் பேசும். கலை என்https://scontent-fra3-1.xx.fbcdn.net/v/t39.30808-6/501130559_1423955019052107_1183976565384834506_n.jpg?stp=dst-jpg_p526x296_tt6&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=jVvBIgud-aoQ7kNvwH3aheU&_nc_oc=AdmU8_iWltzxh-5Z5Ld29NE4Fk6OB8hYTEzPl5dPKCdpOa6ZLMx1BTjBPkL1yiJSGjI&_nc_zt=23&_nc_ht=scontent-fra3-1.xx&_nc_gid=Wod9JVFeI9PlLmZNrTPjkQ&oh=00_AfKcwNLFf1mF2qYAmU2D4MRJFW3Q0-dZzJ_R2qlerrtQ1Q&oe=683A2AC9பதே கலைத்துப் போடுவதற்காகத்தானே! சமூகத்தின் பிற்போக்குத்தனங்களான சாதியம், நிறவேறுபாடு, மதவாதம் என்பவற்றினை இவரது பாடல்கள் கடுமையாகச் சாடுவன. எனக்குப் பிடிதத இவரது பாடல் - `பூமி யான் வாழும் இடம்` {Bhoomi Njan Vazhunidam } என்ற பாடலே {இரண்டாவது பின்னூட்டத்தில் காண்க}. அதில் உலகு எங்கும் நடைபெறும் அறமற்ற செயல்களுக்கு எதிரான தனது அறச் சீற்றத்தினை வேடன் வெளிப்படுத்தியிருப்பார். சிரியா முதல் அமெரிக்கா வரை , பாரதத்தையும் உள்ளடக்கித் தனது அறச் சீற்றத்தினைக் காட்டியிருப்பார். உலகம் முழுவதும் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக அறச்சீற்றத்தினைக் காட்டியவர், தனது தாயின் பிறந்த நாட்டினைக் காணாமல் போய் விடுவாரா என்ன!
👇
“இலங்கையில் புலிகள் இனியும் தாகம் மாறாதோடு நடப்பு”
[பதிவின் இரண்டாவது படத்தினையும், பதிவுக்கான இரண்டாவது பின்னூட்டத்தினையும் காண்க]
🙏வேடனின் வேட்டை தொடரட்டும்! சொல்லிசைப் (ராப்) பாடல்களில் மேலும் பல புரட்சிக் கருத்துகள் பிறக்கட்டும்!🙏

Rohini Velusamy ·

  • கருத்துக்கள உறவுகள்

Vedan: அடையாளத் தேடலிலிருந்து அடையாளமாக மாறிய மலையாள ராப் பாடகர்; யார் இந்த வேடன்?

வேடன்... இப்போதைக்கு மலையாள ஊடகங்களின் பேசுபொருள்.

சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞருக்கு இன்று கேரளத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.

யார் இவர்? திடீரென மலையாள ஊடகங்களில் பேசப்படக் காரணம் என்ன? தொடர்ந்து பார்க்கலாம்.

வேடன்:

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர்தான் ஹிரந்தாஸ் முரளி.

திருச்சூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஸ்வப்னபூமி (கனவுகளின் நிலம்) என்ற பகுதியில்தான் வளர்ந்தார்.

சிறுவயது முதலே பாடல், இசை மீது ஆர்வம் இருந்தது. அதனால், தொடர்ந்து கவிதை எழுதுவது, தமிழ்ப் பாடல்களை மலையாளத்தில் எழுதிப் பாடுவது எனத் தன் கலைப் பயணத்தைத் தொடங்கினார்.

VEDAN

VEDAN

VEDAN instagram

சிறுவயதில் ஆற்றில் மீன்பிடிக்கச் செல்லும்போது மீன் அம்புகளைச் சரியாகக் குறிபார்த்து எறிவாராம். அப்போது அவருக்கு விளையாட்டாக வைக்கப்பட்டப் பெயர்தான் வேடன்.

இந்தப் பெயருக்குப் பின்னணியில் சாதிய அடையாளமும் இருக்கிறது என்பது புரிந்து, அந்தப் பெயராலேயே மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அது அப்படியே மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

கட்டுமான தொழில்:

பள்ளிப் படிப்பை மட்டும் முடித்த வேடன், ஒருகட்டத்தில் பொருளாதாரத் தேவைக்காக வேலைக்குச் செல்ல தீர்மானித்தார்.

அதன்படி அங்கிருக்கும் சிலருடன் சேர்ந்து கட்டுமான தொழிலுக்குச் சென்றிருக்கிறார். வேலை செய்துகொண்டிருக்கும்போதுகூட பாடல் பாடிக்கொண்டிருப்பார் என்கின்றனர்.

அவரின் கலை ஆர்வம் அவரை எடிட்டர் பி.அஜித்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. பி.அஜித்தின் அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக வேலைக்கு அமர்த்தப்பட்டார்.

ராப் கலைஞர்கள் அறிமுகம்:

காலப்போக்கில் அவருக்கு டூபக் ஷகுர், எமினெம், அறிவு போன்ற ராப் பாடகர்களின் பாடல் அறிமுகமாகியிருக்கிறது. அவர்களின் பாடலில் இருக்கும் வலியும், உணர்ச்சியும் அவரை அவர் சார்ந்த வரலாறு நோக்கியும், போர் பாதிப்பு உள்ளிட்ட அடக்குமுறைகள் குறித்து அறிந்துகொள்ள வழிசெய்திருக்கிறது.

அப்போதுதான் ராப் பாடல்களை எழுதத் தொடங்கியிருக்கிறார்.

VEDAN

VEDAN

VEDAN

முதல் ஆல்பம்:

"நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக `வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தலைப்பில் ஜூன் 2020-ல் முதல் தனியிசைப்பாடலை வெளியிட்டார்.

அவரின் இசையும், குரலும், உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளும் 'யார்டா இந்தப் பையன்' என மலையாள உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போதுமுதல் வேடனுக்கு ஏறுமுகம்தான்.

தொடர்ந்து குரல்:

வேடனின் ராப் பாடல்களில், புரட்சிகரக் கருத்துகள் நிறைந்திருந்தன. அதேபோல எங்கெல்லாம் அடக்குமுறைகள் நடக்கிறதோ அது தொடர்பாக வேடன் பாடத் தொடங்கினார்.

பாலஸ்தீனம் முதல் அமெரிக்காவில் தாக்கப்பட்ட கறுப்பின பெண் வரை சமூக அடக்குமுறைக்கு எதிராக உறுதியாகத் தெளிவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.திரைப்பயணம்:

2021-ம் ஆண்டில், வெளியான நயட்டு என்ற மலையாளப் படத்தின் நரபலி என்ற பாடலைப் பாடி திரைத்துறையில் முதல் அடியை எடுத்து வைத்தார்.

2023-ம் ஆண்டில், சர்வதேச விருது வென்ற 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தில் 'கிஸ்ஸஸ் இன் தி கிளவுட்ஸ்' பாடலையும் எழுதிப் பாடியிருந்தார்.

மலையாள பிளாக்பஸ்டர் மஞ்சும்மல் பாய்ஸில் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுடன் இணைந்து 'குத்தந்திரம்' பாடலுக்கான வரிகளை எழுதிப் பாடினார்.

அதைத் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி வருகிறார். ஆனால், வேடனுக்குப் படத்தில் பாடல் எழுதுவதைவிட தனியிசைப்பாடலுக்காக எழுதுவதுதான் மிகவும் பிடிக்கும் எனப் பேட்டியளித்திருக்கிறார்.

VEDAN

VEDAN

VEDAN

பிரச்னைகளும் - வழக்குகளும்!

Mee Too

2021-ம் ஆண்டு ராப்பர் வேடன் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அப்போதே ராப்பர் வேடன், ``நான் நடந்துகொண்ட விதம் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியதை நினைத்து அவமானப்படுகிறேன். அதற்காக உங்களின் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார்.போதை:

ஏப்ரல் மாதம் கொச்சியில் ராப் நிகழ்ச்சிக்காகச் சென்ற வேடன், அங்கு நண்பர்களுடன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கிறார்.

அங்கு ஆறு கிராம் கஞ்சா வைத்திருந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நான் ஒரு சிறந்த மனிதனாக மாற முயல்வேன். நான் என்னைத் திருத்திக் கொள்ள முயல்கிறேன்.

எனது ரசிகர்கள் அனைவரும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் நல்ல பழக்கங்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

VEDAN

VEDAN

VEDAN

புலிப் பல்:

ஏப்ரல் 28-ம் தேதி போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையின் போது, வேடன் புலிப் பல் கொண்ட ஒரு செயினை அணிந்திருந்ததாக காவல்துறையினர் வன அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதன் விளைவாகக் கஞ்சா வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சில மணி நேரத்தில், வன அதிகாரிகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் வேடனைக் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தனக்கு அந்தப் பல்லைப் பரிசாக அளித்ததாகவும், அதன் சட்டரீதியான தாக்கங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் வாக்குமூலம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து, எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வேடனுக்கு ஜாமீன் வழங்கியது.பா.ஜ.க புகார்:

"வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ் சானலின் மூலம் பிரதமர் மோடியை அவதூறு செய்கிறார். இந்தப் பாடல் மூலம் சாதி அடிப்படையிலான வெறுப்பை ஊக்குவிக்கிறார். அந்த சானல் இந்து சமூகத்தைப் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, வேடன் தொடர்பாக NIA விசாரிக்க வேண்டும்" என மத்திய உள்துறை அமைச்சருக்கும், என்.ஐ.ஏ-க்கும் பாலக்காட்டைச் சேர்ந்த பா.ஜ.க கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் புகார் பதிவு செய்திருக்கிறார்.

சர்ச்சை:

'அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள், உன்னிப்பாகக் கவனிக்கப்படும் வேடனின் செயல்பாடுகள் என அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இது அரசியல் அடக்குமுறை' எனச் சமூக ஊடகங்களில் அவரின் ரசிகர்கள் வேடனுக்கு ஆதரவாகவும், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும் கொந்தளித்து வருகின்றனர்.

ராப்பர் வேடனுக்கு எதிராகவும் - ஆதரவாகவும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

VEDAN

VEDAN

VEDAN

ஆதரவு!

வேடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதற்குப் பிறகு வனத் துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன், ``வேடன் என்று அன்பாக அழைக்கப்படும் ஹிரந்தாஸ் முரளி போன்ற பிரபல பாடகரின் வழக்கைக் கையாளும்போது இன்னும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை.

வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். இந்த வழக்கில் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகள், தார்மீகக் குறைபாடுகள் இருந்ததா என்பதை ஆராய்வோம்" என்றார்.

ஆளும் அரசு தரப்பிலிருந்தும், இளைஞர்கள் தரப்பிலிருந்தும் நாளுக்கு நாள் வேடனுக்கு ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Vedan: கேரள மலையாள ராப் பாடகர் வேடன் என்கிற ஹிரந்தாஸ் முரளி; யார் இவர்?

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில் சர்ச்சையில் சிக்கியிருக்கும் வேடன்: இந்து அமைப்புகள் இவரைக் குறிவைப்பது ஏன்?

கேரளா, வேடன், ராப் இசை, பாஜக, சாதி

பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM

படக்குறிப்பு, கடந்த சில நாட்களாக கேரளாவின் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் யூடியூப் சேனல்களிலும் பரவலாக அடிபடும் பெயர் வேடன்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 29 நிமிடங்களுக்கு முன்னர்

கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சித்துவருகின்றன. பா.ஜ.கவைச் சேர்ந்த தலைவர் ஒருவர், வேடனை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். யார் இந்த வேடன்?

கடந்த சில நாட்களாக கேரளாவின் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் யூடியூப் சேனல்களிலும் பரவலாக அடிபடும் பெயர் வேடன். கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருப்பதால், ஒரு பெரிய சர்ச்சையின் மையப்புள்ளியாக உருவெடுத்திருக்கிறார் அவர்.

வேடனை தேசிய பாதுகாப்பு முகமை விசாரிக்க வேண்டுமென உள்துறை அமைச்சகத்திற்கு பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதியது தேசிய அளவில் இவர் மீது கவனத்தைத் திருப்பியிருக்கிறது.

'வேடன்' என்ற பெயர்

கேரளா, வேடன், ராப் இசை, பாஜக, சாதி

பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM

படக்குறிப்பு, ஒரு பாடகராக உருவெடுக்க முடிவுசெய்த பிறகு, தனக்கு 'வேடன்' என்ற பெயரை அவர் தேர்வுசெய்துகொண்டார்.

கேரளாவின் திருச்சூரில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, சில காலம் கட்டுமானத் தொழிலாளராக வேலை பார்த்த ஹிரந்தாஸ், ஒருகட்டத்தில் திரைப்பட இயக்குநரும் எடிட்டருமான பி. அஜீத் குமாரின் ஸ்டுடியோவில் பணியாற்ற ஆரம்பித்தார்.

இந்த காலகட்டத்தில்தான் அமெரிக்க ராப் பாடகரான ட்யுபக் ஷகூரின் தாக்கம் ஏற்பட்டதாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வேடன். ஒரு பாடகராக உருவெடுக்க முடிவுசெய்த பிறகு, தனக்கு 'வேடன்' என்ற பெயரை அவர் தேர்வுசெய்துகொண்டார்.

2020ஆம் ஆண்டில், கோவிட் பெருந்தொற்று உச்சகட்டத்தில் இருந்தபோது அகில் ராமச்சந்திரன், ஹ்ரித்விக் சசிகுமார் என்பவர்களோடு இணைந்து Voice of the Voiceless என்ற தனது முதல் பாடல் வீடியோவை யூடியூபில் வெளியிட்டார் வேடன். சாதி பிரச்சனை, நிறம் சார்ந்த ஒதுக்கல், விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டம் ஆகிவற்றை அந்தப் பாடலில் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறுகிய காலத்திலேயே அந்தப் பாடல் 6,00,000 பார்வைகளைக் கடந்தது. (தற்போது 13 மில்லியன் பேர் அந்தப் பாடலைப் பார்த்திருக்கின்றனர்). இதற்கடுத்ததாக Bhoomi Njan Vazhunidam என்ற பாடலை வெளியிட்டார். அதுவும் பிரபலமான நிலையில், கேரளாவில் ஒடுக்கப்பட்டோருக்கான குரல்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டார் வேடன்.

கேரளா, வேடன், ராப் இசை, பாஜக, சாதி

பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM

அதே ஆண்டில் கொச்சி மியூசிக் ஃபவுண்டேஷனின் ஹிப் ஹாப் இசைத் திருவிழாவில் பங்கேற்று கவனத்தை ஈர்த்தார். இதற்குப் பிறகு அவரது இசைத் தொகுப்புகள் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. 2021ஆம் ஆண்டில் நாயாட்டு படத்தில் "நரபலி" என்ற பாடலை எழுதிப் பாடினார் வேடன்.

இதற்குப் பிறகு மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற மஞ்சுமோல் பாய்ஸ் படத்தில் 'குதந்திரம்' என்ற பாடலை எழுதிப் பாடினார் வேடன். இந்தப் பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டாகின. டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் 'வாடா வேடா' என்ற பாடலையும் எழுதி பாடியிருக்கிறார் வேடன்.

கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணியும் (எல்டிஎஃப்) எதிர்க்கட்சியான காங்கிரசும் வேடனை ஆதரித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்து அமைப்புகள் பாடகர் வேடன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் துவங்கியுள்ளன.

தேசிய பாதுகாப்பு முகமைக்கு அனுப்பப்பட்ட கடிதம்

கேரளா, வேடன், ராப் இசை, பாஜக, சாதி

பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM

2021ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று எல்டிஎஃப் மீண்டும் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கேரள அரசு பல நிகழ்வுகளை நடத்தியது. அப்படி நடத்தப்பட்ட பல நிகழ்வுகளில் வேடன் பங்கேற்றார். கடந்த மே 18ஆம் தேதியன்று பாலக்காட்டின் கோட்டை மைதானத்தில் வேடனின் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. மாநில அரசின் எஸ்.சி. - எஸ்.டி. மேம்பாட்டுத் துறை இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த இசை நிகழ்ச்சிக்கு பெருமளவில் ரசிகர்கள் திரண்டனர். இதனால் அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டு சிலர் காயமடைந்தனர்.

இதையடுத்து, அந்த மைதானத்தில் சேதமடைந்த நகராட்சி சொத்துகளுக்கு மாநில எஸ்.சி. - எஸ்.டி மேம்பாட்டுத் துறை உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் உள்ள பாலக்காடு நகராட்சி கூறியுள்ளது.

இதற்குப் பிறகு, பாலக்காட்டைச் சேர்ந்த பா.ஜ.கவின் கவுன்சிலரான வி.எஸ். மினிமோல் என்பவர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தேசியப் பாதுகாப்பு முகமைக்கும் (என்ஐஏ) வேடன் குறித்து கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், வேடனின் பாடல்களில் பிரதமர் நரேந்திர மோதி குறித்து அவதூறான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகவும் சாதியை முன்வைத்து இந்து சமூகத்தைப் பிளக்க வேடன் முயல்வதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் அவரை தேசிய பாதுகாப்பு முகமை விசாரித்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர் கோரியிருக்கிறார்.

வேடன் மீது ஏற்கனவே சில வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கும் மினிமோல், இருந்தபோதும் ஜாமீனில் வெளிவந்திருக்கும் வேடன் பெரிய அளவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வன்முறையையும் வெறுப்பையும் தூண்டுவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

வேடன் மீதான வழக்குகள்

கேரளா, வேடன், ராப் இசை, பாஜக, சாதி

பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM

மினிமோல் குறிப்பிடும் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. ஏப்ரல் 28ஆம் தேதியன்று, கொச்சியில் ஒரு ஃப்ளாட்டில் தங்கியிருந்த வேடனும் அவரது நண்பர்கள் எட்டுப் பேரும் கேரள மாநில கலால் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 6 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதற்குப் பிறகு காவல்துறை அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, அவரது சங்கிலியில் புலிப் பல் (அது சிறுத்தையின் பல் என்றும் குறிப்பிடப்படுகிறது) பதிக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சங்கிலி தாய்லாந்தில் வாங்கப்பட்டதாக வேடன் தெரிவித்தார்.

கஞ்சா வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வேடனை, புலிப் பல் விவகாரத்தில் கேரள வனத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். பிறகு இந்த வழக்கிலும் வேடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த கைது விவகாரங்கள் அனைத்திலும் கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாகவே வேடனுக்கு ஆதரவாக நின்றது.

அக்கட்சியின் மாநிலச் செயலர் எம்.வி. கோவிந்தன், வனத் துறை அவசரப்பட்டு கைதுசெய்ததாகக் குறிப்பிட்டார். அதேபோல வனத்துறை அமைச்சர் இதுபோன்ற விவகாரங்களில் பொதுமக்களின் உணர்வுகளையும் மனதில் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார்.

இந்து அமைப்புகள் குறிவைக்க காரணம் என்ன?

இந்து அமைப்புகள் அவரைக் குறிவைக்க, அவரது பாடல்களில் இருக்கும் அரசியல்தான் முக்கியக் காரணம் என்கிறார் கேரளாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான எம்.ஜி. ராதாகிருஷ்ணன்.

"அவரது பாடல்கள் தீவிரமான அரசியல்தன்மை உள்ளடக்கமும் கொண்டவை. தலித்துகளின் குரலை வலுவாக வெளிப்படுத்துபவை. பிராமண மேலாதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்துபவை. அதனால்தான் இந்து அமைப்புகள் ஆத்திரமடைகின்றன." என்கிறார் அவர்.

வேடன் பிரதமர் மோதி குறித்து நேரடியாக விமர்சித்திருக்கிறாரா, இல்லையா என்பது ஒருபுறமிருக்க, சாதிய அடக்குமுறை குறித்து அவர் தொடர்ந்து கேள்வியெழுப்புகிறார், அதுதான் அவர்கள் வேடனைக் குறிவைக்கக் காரணம் என்கிறார் எம்.ஜி. ராதாகிருஷ்ணன்.

இது ஒருபுறமிருக்க, பாலக்காட்டில் நடந்த இந்து ஐக்கிய வேதி கூட்டத்தில் பேசிய அதன் தலைமை டிரஸ்டி பி. சசிகலா, பட்டியல் இன மக்களின் வலுவான நாட்டுப் புற பண்பாட்டில் விழுந்த கறைதான் வேடனின் இசை எனக் குறிப்பிட்டிருக்கிறார். வேடனை சாதி தீவிரவாதி எனக் குறிப்பிட்டதற்காக கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். நடத்திவரும் இதழான கேசரியின் ஆசிரியர் என்.ஆர். மது மீது கொல்லம் நகரக் காவல்துறை மே 17ஆம் தேதி வழக்குப் பதிவுசெய்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1ldq0pdgjzo

  • கருத்துக்கள உறவுகள்

Vedan | Subair | அநீதிகளை எதிர்த்து பாடும் வேடம்!

  • கருத்துக்கள உறவுகள்
On 21/5/2025 at 02:24, zuma said:

அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன்.

முன்பு Tulpen ம் அறிவின் பாடலை விரும்பி கேட்பதாக எழுதியவர் . சாதி வெறியர்களினால் அவர் ஒடுக்கபட்டார் என்றும் கேள்விபட்டேன்.


ஒரு திராவிட பாடகருக்கு இங்கே வரவேற்பு இருப்பது ஆச்சரியமாக உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழ் சார்ந்தும் புலி சார்ந்தும் கொஞ்சம் ஓவராக பாடுகிறார்

அவரின் கையை பிடித்து இழுத்தார் என்று ஒரு விபச்சாரியை கண்ணகி ஆக்கினால்தான் என் தாகம் தீரும்

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Maruthankerny said:

இவர் தமிழ் சார்ந்தும் புலி சார்ந்தும் கொஞ்சம் ஓவராக பாடுகிறார்

அவரின் கையை பிடித்து இழுத்தார் என்று ஒரு விபச்சாரியை கண்ணகி ஆக்கினால்தான் என் தாகம் தீரும்

விரைவில் அதனை… திராவிடமும், ஆரியமும் செய்யும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

விரைவில் அதனை… ஆரியமும் செய்யும். 😎

அண்ணை, கஞ்சா வழக்கு, புலிப்பல் வழக்கு போட்டாயிற்று.

இனி தேசிய புலனாய்வு முகமை வழக்கு(NIA) போடலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் வாயை வாடகைக்கு விடுபவர் மேல் மட்டும் இன்னும் கஞ்சா, புலிப்பல், NIA எதுவும் பாயவில்லை.

ஏன்?

ஏன்னா வாயை நாக்பூருக்கு வாடகைக்கு விட்டிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

ஆனால் வாயை வாடகைக்கு விடுபவர் மேல் மட்டும் இன்னும் கஞ்சா, புலிப்பல், NIA எதுவும் பாயவில்லை.

ஏன்?

ஏன்னா வாயை நாக்பூருக்கு வாடகைக்கு விட்டிருக்கு.

அவர் கட்சி வைத்திருக்கிறார் அண்ணை!

இவர் எழுதி, இசையமைத்து பாடுபவர் தானே? என்றாலும் மக்களாதரவால் தான் பிணையில் விட்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

அவர் கட்சி வைத்திருக்கிறார் அண்ணை!

இவர் எழுதி, இசையமைத்து பாடுபவர் தானே? என்றாலும் மக்களாதரவால் தான் பிணையில் விட்டிருக்கிறார்கள்.

ஜெயாலிதா கட்சி வைத்திருந்தவர்தானே தம்பி?

லேடியா, மோடியா எண்டு கேட்டிருக்காவிட்டால் பார்பன அக்ரகாராத்து பெண்ணை பார்பாஹன அக்ரகஹாராவுக்கு அனுப்பி இருப்பார்களா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.