Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kadancha said:

அப்போது ஏன் சீனா எல்லா கோளங்களிலும் அச்சறுத்தல் என்று அமெரிக்கா பார்க்கிறது?

சீனாவை, சோவியத்தை போல தனிமைப்படுத்தி உடைக்க முயல்கிறது?

(இவற்றை நன்கு அவதானித்தே சீனாவும் அதன் நகர்வுகள், அதை தடுப்பதை நோக்கமாக கொண்டே அமெரிக்கா நகர்வுகள். )

இது போன்றவற்றை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைத்தேன். உங்களுக்கு எத்தனை கோளங்களில் சீன, அமெரிக்கா (ஆயுதம் இல்லாமல்) மோதுகிறது தெரியாது இருக்கிறது. கடலுக்கு அடியேயும் மோதுகின்றன.

ஏன் அமெரிக்கா பில்லியன் கணக்கில் சீனாவை பற்றி பூச்சாண்டி காட்டும் பிரச்சாரத்துக்கு உத்தியோகப்பூர்வமாக செலவிடுகிறது?

இப்படி பல அமெரிக்கா செய்வது, சொல்வது உங்களின் புரிவு பிம்பத்துக்கு எதிர்மாறாக இருக்கிறது.

இதில் முக்கியமானது ஒன்று தொடங்கி விட்டது, credit rating விழுந்தது.

நீங்கள் எதிர்பார்ப்பது மற்ற அமெரிக்கர்களும், இன்று கதைத்தால், நாளை விளைவுகள் என்பது.

அனால் சீனாவும், அமெரிக்கா (கூட), மேற்கு, மற்ற நட்டுகள் அவ்வாறு அப்படியான காலத்தில். நோக்கவில்லை.

(அனல், இதில் குறிப்பாக சீனா ஒன்றும் செய்ய தேவை இல்லை, முன்பே சொன்ன யுக உற்பதி அரிதான உலோக பிடி சீனாவிடம் உள்ளது. வேண்டுமாயின் அது பாவிக்கும்.)

'கிரெடிட் ரேட்டிங்' விழுந்தது அதிபட் ட்ரம்ப் அவர்களின் நிலையற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அதன் பொருட்டான அவசர நடவடிக்கைகளால். அமெரிக்க - சீன போட்டியால் அல்ல.

இந்த அரிதான உலோகங்கள் மீதான சீனாவின் அதிகாரம் என்பது மிகவும் சமீபமாக நடந்த ஒரு நிகழ்வு. அதற்கு பல வருடங்கள் முன்னரேயே அமெரிக்கவும் சீனாவும் ஒன்றும் இரண்டும் என்று உலகில் போட்டாபோட்டியில் இருக்கின்றன. இதன் அடிப்படையே ரஷ்யாவோ அல்லது வேறு எவருமோ அருகில் கூட இல்லை என்பதே.

இன்று சீனாவிடம் அரிதான உலோகங்களின் மீதான அதிகாரம் இருக்கலாம். ஆனால் இன்னும் பல தொழில்நுட்பங்கள் அமெரிக்காவின் கைகளிலேயே இருக்கின்றது. ஒரு சாதாரண பயணிகள் விமானத்தை கூட சீனா பாதுகாப்பாக செய்து விற்க, அதை உலக நாடுகள் வாங்கும் நிலை இன்னும் வரவில்லை. நாங்களும் சீனா செய்யப் போகும் விமானங்களில் பயணிக்கும் நிலையிலும் இல்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. இதுவே தான் மைக்ரோ பிராசசர் தொழில்நுட்பத்திலும்.

இந்த இருவரும் தொழில்நுட்பத்தில் உலகெங்கும் போட்டி போடுவார்கள். ஆனால் இராணுவ ரீதியாக இன்னொரு கண்டம் போய், இன்னொரு நாடு போய், அங்கே நின்று போரிடுவது என்பது இன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவால் மட்டுமே முடியும். வேறு எவரிடமும் அந்த வளங்களும், திறமைகளும் இல்லை.

Edited by ரசோதரன்

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

அதுவா முக்கியம் நமக்கு? "புளகாங்கிதம்" தான் முக்கியம்😎!

எதை வைத்து புளகாங்கிதம் அடைவது ?

முல்லாக்களுக்காக இவ்வளவு பிரசாரம் செய்வது எதற்காக

2 hours ago, ரசோதரன் said:

அமெரிக்கா வல்லரசே இல்லை, அமெரிக்காவிற்கு கேந்திர முக்கியத்துவமே கிடையாது என்று 25 வருடங்களாக வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன். அமெரிக்க டாலரே மூழ்கிவிட்டது என்பதையும் பல வருடங்களாக வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன். சீனா முன்னே போய்விட்டது என்றும் தான். கோவிட் காலத்தில் அமெரிக்க வல்லமை அற்றது என்று வந்த செய்திகள் ஏராளம்.

🤣

அண்ணா அமெரிககா ஒரு காகித புலி எல்லோ

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இதில் முக்கியமானது ஒன்று தொடங்கி விட்டது, credit rating விழுந்தது.

இந்த இரண்டு நாடுகளினதும் இன்றைய கிரெடிட் ரேட்டிங் என்னதான் என்று தேடிப் பார்த்தால் ஆச்சரியம் தான் மிஞ்சுகின்றது. AAA ரேட்டிங்கிலிருந்து அமெரிக்காவின் ரேட்டிங் AA1 ஆகியுள்ளது. AA1 என்பது Stable Outlook.

சீனாவின் ரேட்டிங் A1 என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. A1 என்றால் Negative Outlook.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரசோதரன் said:

இந்த இரண்டு நாடுகளினதும் இன்றைய கிரெடிட் ரேட்டிங் என்னதான் என்று தேடிப் பார்த்தால் ஆச்சரியம் தான் மிஞ்சுகின்றது. AAA ரேட்டிங்கிலிருந்து அமெரிக்காவின் ரேட்டிங் AA1 ஆகியுள்ளது. AA1 என்பது Stable Outlook.

சீனாவின் ரேட்டிங் A1 என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. A1 என்றால் Negative Outlook.

இது சிந்தனையில்லாத பேச்சு! நீங்கள் கடலுக்கடியில் தேடாமல் இணையத்தில் தேடி தகவல் சரி பார்க்கிறீர்கள்! இது இங்கே செல்லாது☺️!

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவு தமிழ்நாட்டு செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென்று ஒரு செய்தி பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் கேட்பது சரிதானா என்று மிகவும் உன்னிப்பாகக் கேட்டேன். என் காதில் செய்தி சரியாகவே விழுந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு ஊரில் அங்கிருக்கும் டாஸ்மாஸ்க் கடையை அகற்ற வேண்டாம் என்று சில பெண்கள் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்!!

அதைத் தொடர்ந்து வந்த அடுத்த செய்தியில் இன்னொரு ஊரில் அங்கிருக்கும் டாஸ்மாஸ்க் கடையை அகற்றும் படி பெண்கள் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

இதில் எது உண்மை, எது சோடிக்கப்பட்ட ஒரு நாடகம், களநிலை எது, தேவையானது எது என்பதை இந்த இரண்டு செய்தித் துண்டுகளில் இருந்தோ அல்லது இவற்றை துண்டு துண்டாக கொண்டு வரப் போகின்ற யூடியூப் காணொளிகளில் இருந்தோ மட்டும் சொல்லிவிடமுடியாது. தமிழ்நாட்டுக் கிராமங்களின் நிலை மற்றும் டாஸ்மாஸ்க் பற்றிய புரிதல் ஏற்கனவே இருந்தால் மட்டுமே இவற்றின் பின்புலங்கள் என்னவென்று தர்க்கரீதியாக சிந்திக்கமுடியும். அப்படியான புரிதல்கள் இல்லாவிட்டால், டாஸ்மாஸ்க் கடைகளுக்கு குடும்பப் பெண்களே ஆதரவு கொடுக்கின்றார்கள் என்ற செய்தியும் சரியென்றே தோன்றும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இந்த இரண்டு நாடுகளினதும் இன்றைய கிரெடிட் ரேட்டிங் என்னதான் என்று தேடிப் பார்த்தால் ஆச்சரியம் தான் மிஞ்சுகின்றது. AAA ரேட்டிங்கிலிருந்து அமெரிக்காவின் ரேட்டிங் AA1 ஆகியுள்ளது. AA1 என்பது Stable Outlook.

சீனாவின் ரேட்டிங் A1 என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. A1 என்றால் Negative Outlook.

மற்றதுக்கு பின்பு.

அனால், அமெரிக்காவின் இவ்வளவு 'வளத்தின்' காரணம் என்ன?

மிக முக்கியமானது கடன் வாங்கும் தகமை. அதனால் தான் அமெரிக்கா எதுக்கும் காசை எறியக் கூடிய நிலையில் இருப்பது.

(சீன கடன் வழங்குவது - அதனால் அதுக்கு ரேட்டிங் அவ்வளவு தாக்கம் இல்லை, ஆயினும் உயர்வதை விரும்பும். இதவும் ஒரு காரணம் அமெரிக்கா சீனாவின் சர்வதேச வர்த்தகத்தை குழப்ப எத்தனிப்பது வரியால் மற்ற நாடுகளுக்கும் சேர்த்து, வரி குறைப்பின் ஒரு பேரம் சீனவியுடன் வர்த்தகத்தை குறைப்பது. சீனாவை தனிமைப்படுத்துவது. ஏனெனில், சீனாவின் அமெரிக்காவுக்கான வர்த்தக தொகையான 500 பில்லியன் கொடுக்கும் 'முழு பொருளாதார' நன்மையையும் எடுத்தால், புறக்கணிக்க தக்க தொகை. அதாவது TRump இன் வரியின் நோக்கம் வேறு.)

அத்துடன் போக்கையும் - அதாவது இது இன்னும் மோசமாகும் நிலைட்டே காணப்படுவதுஎன்பதை rating agencies சொல்வது. காரணம் உள்ளமைப்பு பிரச்சனைகளும்.

அமெரிக்காவின் ஒவ்வொரு தொழில்நுட்ப மேலாண்மையும் பார்த்தல் - எவ்வளவு காசு எறியப்பட்டு உள்ளதோ அவ்வளவு மேலாண்மை.

அதுக்காக அமெரிக்காவிடம் தொழில்நுடப்பா திறமை இல்லை என்று சொல்லவில்லை, ஏனெனில் தொழில்ட்பம் முதலில் idea. ஆனால் ஐடியா வேறு, அதை யதார்த்தத்தில் கொண்டுவருவது வேறு.

இதையும் உள்ளடக்கி பணம், கடன் வாங்கும் தகமை மிக முக்கியம்.

பொருளாதாரம் அப்படி இயங்குவத்தால், அதாவது வெளியார் கடனில்.

முதலில் வேறு திரியில் சொல்லி இருக்கிறேன்

gdp - வெலிக்கடன்

அமெரிக்கா 36 - 26

சீனா 19 - 2.5 (3)

அமெரிக்கா பொருளாதார நிபுணர்கள் சொல்வது 26 ஐ வாங்கி , 36 ஐ உடற்பதி செய்து, 10 நிகர லாபம் எனது கடன் வாங்கும் தகைமையையில் மிக கூட தங்கி இருப்பது.

சீனாவுக்கு சொல்ல தேவை இல்லை, ஏனெனில் அது வர்த்தகத்தில் பணம் பெறுவது,

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kadancha said:

அனால், அமெரிக்காவின் இவ்வளவு 'வளத்தின்' காரணம் என்ன?

மிக முக்கியமானது கடன் வாங்கும் தகமை. அதனால் தான் அமெரிக்கா எதுக்கும் காசை எறியக் கூடிய நிலையில் இருப்பது.

முதலீடுகள் இரண்டு வழிகளில் மட்டுமே வரும். ஒன்று சேமிப்பு. இரண்டாவது, போதிய சேமிப்பு இல்லாவிட்டால், கடன்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மிகக் குறைவாக சேமிப்பவர்கள் அமெரிக்கர்கள். சேமிப்பே கிடையாது. பிறகு முதலீடுகளுக்கு எங்கே போவது............. ஆனால் உலகமே அமெரிக்காவில் முதலிடுகின்றது. அமெரிக்காவிற்கு ஒவ்வொரு நாட்டுடனும் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. இலங்கையுடன் கூட. அது இலங்கை அமெரிக்காவில் இடும் முதலீடு. சீனா முதலிடுகின்றது, மெக்சிக்கோ முதலிடுகின்றது............. எல்லாமே கடன்களாக இந்த நாட்டுக்குள் வருகின்றன. அதுவே கட்டிடங்களாக, தொழில்நுட்பங்களாக, ஐபிஓக்களாக, எலான் மஸ்க்குகளாக மாறுகின்றன.

இதை ஏன் வேறு ஒரு நாட்டில் உலகம் முதலிட முடியாதுள்ளது............ ரஷ்யாவில் முதலிட முடியாதா, சைனாவில் முதலிட முடியாதா.............. முடியாது என்பதே இன்றைய நிலவரம். இத்தனைக்கும் சைனாவிலோ அல்லது ரஷ்யாவிலோ அதன் தலைவர்கள் இறக்கும் வரை மாறுவதில்லை, அவர்களின் கொள்கைகளில் மாற்றம் இல்லை, அரச நிர்வாகத்தில் தனித்தனியான சுதந்திரம் உள்ள அமைப்புகளினால் ஏற்படும் கட்டுப்பாடுகள் அங்கு இல்லை. ஆனாலும் முதலிடுபவர்கள் எதிர்பார்க்கும் ஒரு நம்பகத்தன்மையும், வெளிப்படையும், சுதந்திரமான நிர்வாக அமைப்புகளும் அங்கு இல்லை. இந்த காரணங்களுக்காகவே டாலர் பெறுமதியாக இருக்கின்றது, அமெரிக்காவிற்கு கடன்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா எறியும் காசு அவர்களுடையது அல்ல. ஆனாலும் மற்றவர்களுக்கு அதை கொடுப்பதற்கு வேறு இடமும் இல்லை.

அமெரிக்காவின் பிரச்சனை திருப்பிச் செலுத்தும் வட்டியின் அளவு. இது இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாது என்று சிந்திக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். அதனால் அரசாங்கம் இனி சேமிக்கப் போகின்றார்களாம்.

Edited by நிழலி
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து மறைக்கப்பட்டமையால், எடிட் செய்யப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

'ஆட்சியில் இருப்பவர்களின் சொல்லை ஏற்று சிலர் நாடகத்தை அரங்கேறி இருப்பார்கள்............. இது தான் உலகம்....................' என்று உலகம் முழுவதையுமே சுட்டுவீர்கள் என்று பார்த்தால், திராவிடத்துக்குள் நின்று விட்டீர்கள், பையன் சார்...................🤣.

எல்லா நாடுகளிலும், சமூகங்களிலும் நாடகங்கள் உண்டு போல...............

பெரும்த‌லைவ‌ர் த‌மிழ் நாட்டு முத‌ல‌மைச்ச‌ரா இருந்த‌ போது அங்கு எல்லாம் ந‌ல்ல‌ நிலையில் தான் இருந்த‌து

அந்த‌ ம‌னுச‌ன் ஊழ‌ல் செய்ய‌ வில்லை , ப‌ல‌ ஆயிர‌ம் ப‌ள்ளிக‌ளை க‌ட்டி பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைச்சார் , திராவிட‌ம் பிள்ளைக‌ளை குடிக்க‌ வைச்ச‌து இது ம‌றுப்ப‌துக்கு இல்லை அண்ணா...................

நான் த‌மிழ்சினிமா 18வ‌ய‌தோட‌ பார்க்காம‌ விட்டு விட்டேன் , X இன்று த‌ள‌த்தில் ஒரு காணொளி பார்த்தேன் யாரோ ந‌டிக‌ர் போதை பொருள் பாவித்த‌தாக‌ ,

ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளே டாஸ்மார்க்கில் வேண்டி குடிக்கின‌ம்😮👎....................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

பையன் சார்,

தமிழ்நாட்டை பற்றிய உங்களின் ஆதங்கம் புரிகின்றது.

ஆனால் நான் இங்கே சொல்ல விரும்பிய விடயம் இதுவல்ல. இன்று இணையத்தில் உலாவும் காணொளிகள் எவ்வளவு போலியானவை, திட்டமிட்டு சோடிக்கப்பட்டு தயாரிக்கப்படுபவை என்றே சொல்ல நினைத்தேன். அதனால் இவற்றை மட்டும் ஆதாரங்களாகக் கொண்டு எதையும் நிறுவ முயலாமல் அல்லது புரிந்து கொள்ள முயலாமல், பல்வேறு தரப்புகளையும் நிகழ்வுகளையும் ஒன்றாகத் தொகுத்து ஒரு முடிவுக்கு வருவதே ஓரளவாவது சரியாக இருக்கும் என்று சொல்லவே வந்தேன். தமிழ்நாட்டு டாஸ்மாஸ்க் விடயம் ஒரு உதாரணம் மட்டுமே...................🤝.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

அமெரிக்கா வல்லரசே இல்லை, அமெரிக்காவிற்கு கேந்திர முக்கியத்துவமே கிடையாது என்று 25 வருடங்களாக வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன். அமெரிக்க டாலரே மூழ்கிவிட்டது என்பதையும் பல வருடங்களாக வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன். சீனா முன்னே போய்விட்டது என்றும் தான். கோவிட் காலத்தில் அமெரிக்க வல்லமை அற்றது என்று வந்த செய்திகள் ஏராளம்.

அடுத்த 25 வருடங்களுக்கும் இதே செய்திகள் வரும். ஆனால் அமெரிக்கா இருக்கும் இடத்திலேயே இருக்கும், அமெரிக்க டாலரும் அங்கேயே இருக்கும். அப்படியே நான் போய்ச் சேர்ந்து விடுவேன்............ வேற யாராவது வந்து இதைப் போல யாழில் எழுதுவார்கள்....................🤣.

என்ர‌ வ‌ண்டி இன்னும் 5வ‌ருட‌ம் ஓடுமோ தெரியாது , நீங்க‌ள் 25வ‌ருட‌த்துக்கு போய் விட்டிங்க‌ள் அப்ப‌ உங்க‌ளுக்கு 81வ‌ய‌து ஆகி விடும் , புகை பிடிக்காம‌ ம‌து அருந்தாம‌ கிமிக்க‌ள் சாப்பாடுக‌ளை த‌விர்த்தால் உங்க‌ட‌ விருப்பம் நிறைவேறும்............................இன்னும் 25வ‌ருட‌ம் க‌ழித்து யாழ்க‌ள‌த்தில் யாரும் எழுதுவின‌மான்னா ச‌ந்தேக‌ம் தான் குரு , தின்ட‌ சோறு செமிக்க‌ இதுக்கை இருந்து குப்பைய‌ கொட்டுகிறோம் லொள்😁😛.........................

5 minutes ago, ரசோதரன் said:

பையன் சார்,

தமிழ்நாட்டை பற்றிய உங்களின் ஆதங்கம் புரிகின்றது.

ஆனால் நான் இங்கே சொல்ல விரும்பிய விடயம் இதுவல்ல. இன்று இணையத்தில் உலாவும் காணொளிகள் எவ்வளவு போலியானவை, திட்டமிட்டு சோடிக்கப்பட்டு தயாரிக்கப்படுபவை என்றே சொல்ல நினைத்தேன். அதனால் இவற்றை மட்டும் ஆதாரங்களாகக் கொண்டு எதையும் நிறுவ முயலாமல் அல்லது புரிந்து கொள்ள முயலாமல், பல்வேறு தரப்புகளையும் நிகழ்வுகளையும் ஒன்றாகத் தொகுத்து ஒரு முடிவுக்கு வருவதே ஓரளவாவது சரியாக இருக்கும் என்று சொல்லவே வந்தேன். தமிழ்நாட்டு டாஸ்மாஸ்க் விடயம் ஒரு உதாரணம் மட்டுமே...................🤝.

புரியுது👍................

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2025 at 10:44, Maruthankerny said:

நான் கொஞ்ச பங்குகள் ( Northern Minerals) நொர்தேன் மினெரல்ஸ் இல் $.2௦ சத்தத்திற்கு வாங்கி இருக்கிறேன் இப்படி பல மைனிங் கொம்பனிகளில் வாங்கி கோவில் உண்டியலில் போடட கதைதான் நடந்திருக்கிறது

மேற்கு, அமெரிக்கா உலகை சுரண்டுகிறது என தர்மவான் போல எழுதுவது.

ஆனால் தனி வாழ்வில், அதே கம்பனிகளில் முதலிட்டு, அல்லது வேலைக்கு போய் பணம் பார்ப்பது.

ஊருக்குத்தான் உபதேசம் கிளியே, உனக்கல்ல 🤣

# சோறு முக்கியம் பிகிலு🤣

On 25/6/2025 at 09:58, உடையார் said:

இந்த Project இல் நானுமிருக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

ஈரான் மீது போர் தொடுப்பதை விட அங்கு மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள்.மக்கள் அவதிப்படுகின்றார்கள் தனிமனித சுதந்திரம் இல்லை எனவும் ஊடகங்கள் இரண்டாம் செய்தியாக பிரசுரிக்கின்றன. அதற்காகத்தான் நான் எழுதினேன் அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு சுதந்திரம் உள்ளது என...

அங்கே நிச்சயமாக தனிமனித சுதந்திரம் இல்லைத்தான்.

ஒவ்வொரு சில வருடங்களுக்கு ஒரு தரமும் சும்மா ஜாலிக்காக ஈரானிய இளையோர் உயிரை கொடுத்து போராடவில்லை.

அவர்கள் எம்மை போல அல்ல, தம் நாட்டில் இருந்து போரடுகிறார்கள்.

முன்னர் தப்பி வந்த பல ஈரானியர்களுடன், பெண்களுடன் நலன்புரி வேலைகள் செய்துள்ளேன்.

ஈரான் எப்படி பட்ட ஆணாதிக்கமே சட்டமாகி போன நாடு என்பதை அவர்களிடம் இருந்து நேரடியாக கேட்டும் உள்ளேன்.

சர்வாதிகாரத்திலும் படிநிலைகள் உண்டு. சதாம், கடாபி, கிம் போன்றோர் அரசியல் எதிரிகளை மட்டுமே ஒடுக்குவர்.

பெண்கள் விடயத்தில் மிகமோசமான சர்வாதிகாரிகள் என்றால் அது ஆப்கான், ஈரான், சவுதிதான்.

இதற்கும் இப்போதைய மோதலுக்கும் அதிக சம்பந்தமில்லைத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய அறிவிப்பு

யாழ்களத்தில் இளகிய மனம் படைத்தோர், கர்பிணிகள், சதி கோட்பாளர்கள், சிறுவர் பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தி எழுதியோர், நேரடி/மறைமுக ஆணாதிக்கவாதிகள், நியாயம் பிளப்பதாக சொல்லி கொள்ளும் இஸ்லாமிய சகோதரர், மற்றும் பொதுவாகவே மேற்கோ-போபியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கீழ் கண்ட காணொளியை காணும் முன் வைத்திய ஆலோசனை எடுக்கவும்.

எவ்வாறு தெஹ்ரானில் பெண்கள் சுததிரமாய் உள்ளார்களோ அதேபோல் இலங்கையிலும் தமிழர்கள் மிக சுதந்திரமாக இருந்தனர், புலிகள்தான் தேவையில்லமால் போராடி, மக்களை இம்சித்தனர் என்பதை காட்டும் வீடியோ இது. இலங்கை இராணுவம் எவ்வளவு பத்திரமாக மனிதாபிமான நடவடிக்கை எடுத்து, புலிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றியது என இந்த வீடியோ சொல்கிறது 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில் இலங்கையில் உள்ள யூதர்களை வெளியேற்ற போராட்டங்கள் நடந்தாலும் நடக்கலாம்.

கிழக்கு மாகாணத்தில் அறுகம்பே என்ற இடத்தில் சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேல்காரர்கள் கோவில் குளம் எல்லாம் கட்டி நீண்டகால இருப்புக்கு ஆயத்தமாகிறார்கள்.

இஸ்ரேலிய புலனாய்வுப்பிரிவே கூடுதலாக இங்கே வந்து தங்குவதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் கூறுகின்றன.

அது அறுகம் பே அல்ல, அறுகம் குடா.

இது கிழக்கில் உள்ள இனவாத முஸ்லிம்களால் கிளப்பி விடப்ப்ட்ட புரளி.

நான் நேரில் போய் பார்த்துள்ளேன். அப்படி அங்கே பெரிய எடுப்பில் எதுவும் இல்லை. அங்கே இருக்கும் முஸ்லிம்களும் சந்தோசமாக அவர்களுக்கு வியாபாரம் செய்து வாழ்கிறார்கள்.

வழமையாக இலங்கையில் ரஸ்யர்கள், உக்ரேனியர் இருப்பதை விட இந்த யூதர் அளவு குறைவே.

இதை விட பல மடங்கு இஸ்லாமியர்கள், பாகிஸ்தானிகள், போரா முஸ்லிம்கள், பாய்கள் என இலங்கை வெளிநாட்டு முஸ்லிம்களால் நிரம்பி வழிகிறது.

ஆனால் அதை எதையும் அடிப்படைவாத முஸ்லிம்கள் கதைக்க மாட்டார்கள். சும்மா ஒரு கொஞ்சம் யூதர் இலங்கையில் சட்டபடி வீசா எடுத்து வாழ்ந்தால், தமக்கென ஒரு பிரார்தனை குடிலை கட்டினால் - தாம் தூம் என குதிப்பார்கள்.

இலங்கையர் யூதரை வெளியேற்ற போராட தேவை வர பல நூறு வருடங்கள் முன்பே அது ஒரு இஸ்லாமிய நாடாகி விடும். இதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தகவலுக்கு நன்றி கோசான்.

இதைப்பற்றி @தனிக்காட்டு ராஜா இன்னும் விபரமாக தெரிந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மேட்ற்கு, us , இஸ்ரேல், Trump வெளிப்படையாகவே வென்று கொண்டு இருக்கிறோம், இரான் அம்மணமாக நிற்கிறது வேண்டிய இடத்தில் தொடலாம் என்று மேட்ற்கு, us, இஸ்ரேல் துள்ளி குதித்தும்

ஏன் Trump சண்டை நிறுத்தத்துக்கு வந்தார்?

அநேகமாக கீழே இருக்கும் செய்தியால் வந்த விளைவும் பெரிய பங்கு வகித்து இருக்கும் என்றே கொள்ள வேண்டி இருக்கிறது.

(அத்துடன் Trump இன் சண்டை நிறுத்த தொனியும்)

https://www.wsj.com/world/china/china-rare-earths-exports-2fd0dab4

China Is Still Choking Exports of Rare Earths Despite Pact With U.S.

Western companies are struggling to secure approvals for rare-earth imports from Chinese authorities, despite U.S.-China deal

...

(முழுச்செய்திக்கும் சந்தா செலுத்த வேண்டும்.)

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

மேற்கு, அமெரிக்கா உலகை சுரண்டுகிறது என தர்மவான் போல எழுதுவது.

ஆனால் தனி வாழ்வில், அதே கம்பனிகளில் முதலிட்டு, அல்லது வேலைக்கு போய் பணம் பார்ப்பது.

ஊருக்குத்தான் உபதேசம் கிளியே, உனக்கல்ல 🤣

# சோறு முக்கியம் பிகிலு🤣

மேற்குலக நாடு ஒன்றில் செற்றிலாகிவிட வேண்டும் என்பது கனவு தனிப்பட்ட உயிர் விருப்பு அது நிறைவேறி அங்கே பாதுகாப்பான வாழ்வு அமைத்து கொண்ட பின்பு சும்மா ஜாலிக்காக சர்வாதிகளுக்கு ஆதரவு முல்லாக்கள் ஆதரவு எழுத வேண்டியது.

9 hours ago, goshan_che said:

இது கிழக்கில் உள்ள இனவாத முஸ்லிம்களால் கிளப்பி விடப்ப்ட்ட புரளி.

முஸ்லிம்களின் குரான் அவர்களுக்கு யூத வெறுப்பு வெறியை ஊட்டி வருகின்றது

இலங்கையில் இனவாத முஸ்லிம்களுடன் சிறிதும் பழக்கம் அற்றவர்கள் அவர்களுடன் வாழ்ந்திருக்காதவர்களே இப்படியான புரளிகளை ஒரு போதும் நம்ப தயார் இல்லாத போது இலங்கையில் பல காலம் வாழ்ந்த இவர்கள் எப்படி புரளியை நம்பினார்களாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

-----அடுத்த பஞ்சாயத்து வரும் போது வாங்கப்பா----

அப்பிடியெல்லாம் அரைகுறையில விட்டுட்டு போகேலாது.🤣

ஈரான் அடிச்ச அடியில இஸ்ரேலின் நாடி நரம்பெல்லாம் கதி கலங்கிப்போச்சுதாம்.

மேற்குலக ஊதுகுழல் ஊடகங்கள் இப்ப அடக்கி வாசிக்க வெளிக்கிட்டினம் கண்டியளோ.. 😂

11 hours ago, goshan_che said:

முன்னர் தப்பி வந்த பல ஈரானியர்களுடன், பெண்களுடன் நலன்புரி வேலைகள் செய்துள்ளேன்.

நானும் நாட்டை விட்டு ஓடி வந்த ரானியர்களுடன் வேலை செய்கின்றேன்.

அவர்கள் ஈரான் அரசியல் பற்றி நிறைய சொல்வார்கள்.அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து உங்களுக்கு சொல்கின்றேன்.

ஈரானில் ஆட்சி மொழியாக சீன மொழி வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றார்கள். மீதியை நீங்களே கூட்டிக்கழித்து பெருக்கி விடையை கண்டு பிடியுங்கள்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2025 at 00:40, goshan_che said:

யார் எவர் என்பதை சற்று விலகி நிண்டு அவதானித்தால் கண்டு கொள்ளலாம்.

🤣

இவர் ஓம் நமசிவாய என்று இந்து மந்திரத்தை யாழ்களத்தில் சொன்னவர்

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்களை அமைப்பதற்கு இலங்கை அனுமதிக்கக் கூடாது - உதுமாலெப்பை Mp

இலங்கையில் சுற்றுலாத்துறை பிரதேசங்களில் இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்களை அமைப்பதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு அனுமதி வழங்கக் கூடாது -  சுற்றுலாத்துறை அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை

லங்கையில் சுற்றுலாத்துறை பிரதேசங்களில் இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்கள் அமைக்கப்படுவதால் சுற்றுலாத்துறை வருமானங்களில் வீழ்ச்சி ஏற்படுவதுடன் அமைதியான சுற்றுலாத்துறை பிரதேசங்களில் பொதுமக்கள் அச்சம் அடையும் நிலைமையும் ஏற்பட்டு வருகின்றன. எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு இனிமேல் சுற்றுலாத்துறை அமைச்சு அனுமதி வழங்கக் கூடாது. 

அம்பாறை மாவட்டத்தில் அருகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனத்தை அகற்றி சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யக்கூடிய நடவடிக்கைகளில் சுற்றுலாத்துறை அமைச்சு ஈடுபட வேண்டும் எனவும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் தான் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

Jaffna Muslim
No image preview

இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்களை அமைப்பதற்கு இலங்கை அனுமதி...

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலருக்கு உள்ளதை உள்ளபடி சொன்னால் எரிகிறது.

மேற்கின் பொருளாதாரமே முதலாளித்துவ அடிப்படை என்பதன் பின் சுரண்டலை பற்றி ஏன் கவலைப்படுவான், அது ஒரு பகுதி தானே எந்த மட்டத்திலும்.

மேற்கின் இப்போதைய பொருளாதாரம் rentier capitalism சாய்வானது. அது மேலும் சுரண்டல் தன்மை கொண்டது எல்லா மட்டத்திலும்.

முதல் வைத்து இருப்பவர்கள் (இது எப்போதுமே ஒப்பீடட்டளவு தான்), அப்படி இல்லாதவர்களை மறைமுகவேனும் சுரண்டுவார்கள், இது தான் உண்மை.

இல்லை ஒரு உதாரணம் மட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

வேறை எவருக்கோ சொன்னது விளங்காட்டி ஒதுங்கி நிண்டு வேடிக்கை பார்க்கோணும். சும்மா அலம்பாமல்.

மேற்கில் மட்டும் அல்ல மனிதன் என்ற விலங்கின் அடிப்படை இயல்புகளில் ஒன்று சுரண்டல்.

மேற்கில் மட்டும் அல்ல சீனாவிலும், ரஸ்யாவிலும், சுரண்டலை ஒழிப்பதாக ஆரம்பித்த சோவியத்திலும், கியூபாவிலும் சுரண்டலே வென்றது.

தமிழர் உட்பட்ட கனேடிய ஆண்கள் கம்யூனிஸ்ட் கியூபாவுக்கு பாலியல் சுரண்டலுக்கு போவது நாம் அறிந்ததே.

ஆகவே சுரண்டல் தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும்.

நான் மேலே சொன்னது அதை அல்ல.

மேற்கில் இருக்கும் வளங்களை சுரண்டி கொழுக்கும் PLCகளில் பங்குகள் வாங்கி, பணம் பார்க்கும், அல்லது இந்த சுரண்டல் நிறுவனங்களில் நவீன கங்காணிகளாக வேலை செய்யும் அதே ஆட்கள், ஐயோ மேற்கு உலகை சுரண்டுகிறது என virtue signaling செய்து தம்மை பெரும் நியாயவான்களாக காட்டுவது வெறும் நாடகம்.

சொந்த வாழ்வில் தாமே மேற்கின் சுரண்டலில் பங்குதாரராக இருக்கும் இவர்களுக்கு, பொதுவெளியில் அந்த சுரண்டலை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிற்கு எதிரான போரில் வெற்றி - ஈரானின் ஆன்மீக தலைவர்

26 JUN, 2025 | 03:53 PM

image

இஸ்ரேலிற்கு எதிரான போரில் ஈரான் வெற்றிபெற்றதாக தெரிவித்துள்ள அந்த நாட்டின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனி அந்த வெற்றிக்காக ஈரான் மக்களிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்த அளவுக்கு சத்தம் எழுப்பப்பட்ட போதிலும் அந்த கூற்றுக்கள் அனைத்திற்கும் மத்தியிலும் சியோனிச ஆட்சி கிட்டத்தட்ட சரிந்து "இஸ்லாமிய குடியரசின் தாக்குதல்களால் நசுக்கப்பட்டது" என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/218531

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வேறை எவருக்கோ சொன்னது விளங்காட்டி ஒதுங்கி நிண்டு வேடிக்கை பார்க்கோணும். சும்மா அலம்பாமல்.

மேற்கில் மட்டும் அல்ல மனிதன் என்ற விலங்கின் அடிப்படை இயல்புகளில் ஒன்று சுரண்டல்.

மேற்கில் மட்டும் அல்ல சீனாவிலும், ரஸ்யாவிலும், சுரண்டலை ஒழிப்பதாக ஆரம்பித்த சோவியத்திலும், கியூபாவிலும் சுரண்டலே வென்றது.

தமிழர் உட்பட்ட கனேடிய ஆண்கள் கம்யூனிஸ்ட் கியூபாவுக்கு பாலியல் சுரண்டலுக்கு போவது நாம் அறிந்ததே.

ஆகவே சுரண்டல் தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும்.

நான் மேலே சொன்னது அதை அல்ல.

மேற்கில் இருக்கும் வளங்களை சுரண்டி கொழுக்கும் PLCகளில் பங்குகள் வாங்கி, பணம் பார்க்கும், அல்லது இந்த சுரண்டல் நிறுவனங்களில் நவீன கங்காணிகளாக வேலை செய்யும் அதே ஆட்கள், ஐயோ மேற்கு உலகை சுரண்டுகிறது என virtue signaling செய்து தம்மை பெரும் நியாயவான்களாக காட்டுவது வெறும் நாடகம்.

சொந்த வாழ்வில் தாமே மேற்கின் சுரண்டலில் பங்குதாரராக இருக்கும் இவர்களுக்கு, பொதுவெளியில் அந்த சுரண்டலை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை.

எங்கள் மென்ரல் டிசைனை சரியாகக் சொல்லியிருக்கிறீர்கள்.

மேற்கு நாடுகளில் வசித்து வேலை செய்கிற நாம் எல்லோருமே மேற்கின் பெருவணிக, முதலாளித்துவ சிஸ்ரத்தில் இருந்து உறிஞ்சி தங்கள் உடலையும் குடும்பத்தையும் வளர்ப்போர் தான் (cogs in the wheel/machine). ஆனால், சிலர் மட்டும் நீங்கள் சுட்டியிருப்பது போல, "சுரண்டுறான், பிறாண்டுறான்" என்று சொல்லிக் கொண்டு தாங்கள் கூட்டுப் பண்ணை வாழ்வில் இயற்கையோடு ஒன்றிப் பகிர்ந்து வாழ்வதாக ஒரு தோற்றம் காட்டுவர். எல்லாம் ஒரு "வில்டப்" தான்😎!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

எல்லாம் சொல்லி போட்டியள் இந்த virtue signaling க்கு தமிழ் என்ன எண்டும் சொல்ல முடியுமா?

நியாயம் நான் ஆங்கில வார்த்தைகளை தூவுவதாக குறைபடுகிறார் (அரபு என்றால் ஓக்கேயாம்🤣).

வச்சு கொண்டா வஞ்சகம் செய்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.