Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

fake news 😎

ஜேர்ம‌னிய‌ர்கள் துவ‌ச‌ம் பிடித்த‌வ‌ர்க‌ள் என்று உல‌க‌த்துக்கு ந‌ல்லாக‌ தெரியும்

ஹிட்ல‌ர் வ‌ள‌ப்பு அப்ப‌டி...................கால‌ம் க‌ட‌க்க‌ சில‌ர் திருந்தி இருக்க‌லாம் ,

ஜேர்ம‌னிய‌ர்க‌ளுக்கு த‌ங்க‌ட‌ மொழி தான் பெரிசு என‌ நினைப்பு , ஆங்கில‌ம் அதிக‌ம் தெரியாத‌ கூ முட்டைக‌ள் அதிக‌ம் வாழும் நாடு ஜேர்ம‌ன் , இங்கு வ‌ந்தாலும் அவ‌ர்க‌ளின் பாசையில் தான் க‌தைப்பின‌ம் , ஆங்கில‌த்தில் சொன்னால் புரியாது.................ஆசியா நாடுக‌ளுக்கு ஜேர்ம‌னியின‌ர் ப‌ய‌ண‌ம் செய்தால் சிர‌ம‌ப் ப‌ட‌ போவ‌து அவ‌ர்க‌ள் தான் , ஜேர்ம‌னியில் வ‌சிக்கும் த‌மிழ‌ர்க‌ளுக்கு அந்த‌ பிர‌ச்ச‌னை இல்லை , அவ‌ர்க‌ள் டொச் மொழியும் ஆங்கில‌மும் ந‌ல்லா க‌தைப்பின‌ம்👍.............................

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2025 at 01:35, நியாயம் said:

சீனா ஈரானுக்கு ஆயுதங்கள் கொடுக்கின்றது என்பதற்கு என்ன ஆதாரங்கள்? அறிய ஆவல்.

சீனா ஆயுத‌ம் கொடுத்த‌து என்று எழுத‌ ஆச்ச‌ரிய‌ ப‌ட்டிய‌ல் , இப்போது ஈரானுக்கு அணுகுண்டு கொடுக்க‌ மூன்று நாடுக‌ள் த‌யார் அதில் இர‌ண்டு நாடுக‌ள் வெளிப்ப‌டையாக‌ சொல்லி விட்டின‌ம் ஈரானுக்கு அணுகுண்டு தேவைப் ப‌ட்டால் கொடுக்க‌ நாடுக‌ள் இருக்கென‌......................ர‌ம் கோம‌ன‌த்தை இருக்கி க‌ட்டி கொண்டு வ‌ஸ்சின்ட‌னில் இருந்து வாயால் வ‌டை சுட‌ ச‌ரி...................ஈரானை சும்மா விட்டு இருந்தால் இவ‌ள‌வு பிர‌ச்ச‌னையும் வ‌ந்து இருக்காது........................வேலில போன ஓனான வேட்டிக்கை விட்ட‌ க‌தையா போய் விட்ட‌து......................அமெரிக்க‌ன்ட‌ சொல்லை சின்ன‌ நாடுக‌ள் கூட‌ செவி ம‌டுத்தி கேட்க்காது...............................

  • கருத்துக்கள உறவுகள்

510481804_1168866625256194_7474488204435

511572928_1168866675256189_5090894198587

511996251_1168866668589523_1695068501324

512666604_1168865905256266_6901260766381

509776906_1168866635256193_6073985783873

510242829_1168866075256249_6631909324521

509992125_1168865851922938_2716192305201

நேற்றிரவு ஈரானை தாக்கிய B-2 விமானம் பற்றி உலகமே பேசுகின்றது, முழுமையாக தெரிந்துகொள்வோம்!

அமெரிக்காவின் மிக நவீன மற்றும் மிக ரகசியமான போர் விமானங்களில் ஒன்றான B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் நார்த்ரப் கிரம்மன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த விமானம் 1989 ஜூலை 17-ல் முதல் முறையாக பறந்தது. குளிர் போர் காலத்தில் சோவியத் யூனியனின் ரேடார் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி செல்லும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம், அதன் முக்கோண வடிவமும் சிறப்பு பூச்சுகளும் காரணமாக ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத தன்மையைக் கொண்டுள்ளது.

B-2 ஸ்பிரிட் விமானத்தின் தொழில்நுட்ப விவரங்கள் அசாதாரணமானவை. இது 40,000 அடி உயரத்தில் மணிக்கு 1,010 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும். விமானத்தின் நீளம் 21 மீட்டர், அகலம் 52 மீட்டர், உயரம் 5.18 மீட்டர் ஆகும். இதன் எடை 1,52,000 கிலோகிராம் வரை இருக்கும். மிக முக்கியமாக, இந்த விமானம் 18,000 கிலோகிராம் வரை குண்டுகளை சுமக்கும் திறன் கொண்டது. இது மறு எரிபொருள் நிரப்பாமல் 11,100 கிலோமீட்டர் தூரம் பறக்க முடியும்.

B-2 விமானத்தின் சிறப்பம்சம் அது சுமக்கும் அழிவுகரமான ஆயுதங்கள். ஈரானின் அணு தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் மிகப்பெரிய பங்கர் பஸ்டர் குண்டுகளை இதனால் சுமக்க முடியும். இந்த குண்டுகள் 30,000 பவுண்ட் (13,600 கிலோகிராம்) எடையுள்ளவை மற்றும் 200 அடி ஆழம் வரை நிலத்தின் அடியில் உள்ள பங்கர்களை அழிக்கும் திறன் கொண்டவை (ஒவ்வொரு குண்டும் 2 மில்லியன் டொலர்கள்). மேலும் B83 அணுகுண்டுகள், JDAM குண்டுகள், மற்றும் பல்வேறு வகையான துல்லியமான தாக்குதல் ஆயுதங்களையும் இதனால் சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

B-2 விமானத்தின் இயக்க செலவு மிக அதிகம். ஒரு மணி நேர பறப்பிற்கு சுமார் $1,35,000 செலவாகிறது. இதில் எரிபொருள், பராமரிப்பு, மற்றும் பணியாளர் செலவுகள் அடங்கும். ஒரு தாக்குதலுக்கு சராசரியாக $2.2 மில்லியன் டொலர்கள் செலவாகும்.

B-2 விமானங்கள் பல முக்கிய போர்களில் இதற்கு முன்னரும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொசோவோ போரில் 1999-ல் முதல் முறையாக போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் போரில் 2001-ல், ஈராக் போரில் 2003-ல், லிபியா தாக்குதலில் 2011-ல், மற்றும் சிரியாவில் ISIS-க்கு எதிரான தாக்குதல்களில் 2017-ல் சொற்ப அளவிலும் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

B-2 விமானம் ஒன்று இரண்டு பங்கர் பஸ்டர் குண்டுகளையே சுமந்து செல்ல முடியும், ஆறு குண்டுகள் ஈரான் மீது வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுவதால், இந்த தாக்குதலுக்கு 3 B-2 விமானங்கள் அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டுள்ளப்பட்டுள்ளதாக கருதலாம்.

மொத்தம் 21, B-2 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டதாக தகவல். ஆரம்பத்தில் 132 விமானங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அதிக செலவு காரணமாக உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விமானத்தின் விலை $2.1 பில்லியன் டொலர்கள் என்பது இதை உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானமாக ஆக்குகிறது.

அமெரிக்காவின் பலமாக பார்க்கப்படும் இந்த போர் விமானம், மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது, ரஷ்யாவிடம் T-60 விமானம் உள்ளது, இருப்பினும் அமெரிக்காவின் B-2 விமானமானது பலம்பொருந்தியதாக கருதப்படுகிறது. மேலும் சீனா H-20 என்கிற பலம்பொருந்திய ஸ்டீல் பம்பர் விமானத்தை தயாரித்து வருகிறது, இதன் கட்டமைப்பு 2030 அளவிலே முடிவடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனவே, உலகின் பலம்பொருந்திய போர் விமானமாக B-2 தற்போதுவரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஸ
©️Vaanam.lk

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20250622-192535-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்

510511600_24574665242135872_780575021084

28 minutes ago, வீரப் பையன்26 said:

Screenshot-20250622-192535-Chrome.jpg


வீரப் பையன்,

இந்தத் திரியில் நீங்கள் பல பொய்யான தகவல்களை எழுதியுள்ளீர்கள். மேற்கோள் காட்டியுள்ளது போன்று ஆதாரமற்ற சமூக வலைத் தளங்களில் உலாவும் குறுஞ்செய்திகளை நீங்கள் நம்புபவராக இருக்கலாம். அவற்றை யாழில் கொண்டு வந்து ஒட்டி அதன் நம்பகத் தன்மையைக் கெடுக்காதீர்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

510311891_3166412270181479_4760983345981

எங்களை அழிக்கத்

துணை நின்றவர்கள்

தங்களைத் தாங்களே

அழித்துக் கொள்கிறார்கள்.

தயாளன் கனியன்

  • கருத்துக்கள உறவுகள்

@வீரப் பையன்26 ஈரானிடம் சவுண்ட் விட்ட அளவிற்கு சரக்கு ஏதும் இல்லை. சரக்கு இல்லாமல் சவுண்ட் விட்டது பெரிய தவறு. இது மற்றைய பல நாடுகளுக்கும் நல்லதொரு படிப்பினை. வான் எல்லை பாதுகாக்கபட முடியாத நிலையில் அணுவாயுதமும் பயன் அற்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நியாயம் said:

@வீரப் பையன்26 ஈரானிடம் சவுண்ட் விட்ட அளவிற்கு சரக்கு ஏதும் இல்லை. சரக்கு இல்லாமல் சவுண்ட் விட்டது பெரிய தவறு. இது மற்றைய பல நாடுகளுக்கும் நல்லதொரு படிப்பினை. வான் எல்லை பாதுகாக்கபட முடியாத நிலையில் அணுவாயுதமும் பயன் அற்றது.

எல்லாத்திலும் இருந்து மீண்டு வ‌ருவின‌ம்...................துரோக‌த்தால் ஈரான் இழ‌ந்த‌வை ப‌ல‌....................இப்ப‌வாவ‌து விழித்து கொண்டின‌மே.........................

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நியாயம் said:

@வீரப் பையன்26 ஈரானிடம் சவுண்ட் விட்ட அளவிற்கு சரக்கு ஏதும் இல்லை. சரக்கு இல்லாமல் சவுண்ட் விட்டது பெரிய தவறு. இது மற்றைய பல நாடுகளுக்கும் நல்லதொரு படிப்பினை. வான் எல்லை பாதுகாக்கபட முடியாத நிலையில் அணுவாயுதமும் பயன் அற்றது.

தமக்குள் ஒற்றுமை மற்றும் ஐக்கியம் அற்ற எந்த நாடும் எந்த இனமும் வெற்றி பெற்று விடமுடியாது.

நாமே சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20250622-214055-Chrome.jpg

24552781.jpg

images-3.jpg

இவ‌ர்க‌ள் அள‌வுக்கு ஈரான் எங்க‌ட‌ போராட்ட‌த்தை அழிக்க‌ துணை போக‌ வில்லை

திருமாள‌வ‌ன் க‌னிமொழி கூட‌ தான் மகிந்த ராசபக்ச கூட‌ ப‌ட‌ம் எடுத்த‌வை................இவ‌ர்க‌ள் செய்த‌தை விட‌வா ஈரான் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு துரோக‌ம் செய்த‌து..........................இல‌ங்கை பிச்சைக் கார‌ நாடு , ஈரான் இல‌ங்கை அர‌சு கேட்க்க‌ காசு உத‌வி செய்து இருக்க‌லாம்.................போர் த‌ள‌பாட‌ங்க‌ள் ஈரான் இல‌ங்கைக்கு கொடுத்த‌து என்று நான் அறிந்த‌து இல்லை

ம‌கிந்தா ஈரான் ஜனாதிபதிய‌ ச‌ந்திச்சா அது எம‌க்கு எதிரான‌ ச‌ந்திப்பா.......................

2009 இன‌ அழிப்புக்கு

முத‌ல் இட‌ம் இந்தியா.................................

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு வால் பிடிப்ப‌வ‌ர்க‌ள் 2006ம் ஆண்டு இல‌ங்கை அர‌சுக்கு போர் க‌ப்ப‌ல‌ அமெரிக்கா இல‌வ‌ச‌மாய் கொடுத்த‌வை.....................2009க்கு பிற‌க்கு அமெரிக்காவோ அல்ல‌து இஸ்ரேலோ நேட்டோ நாடுக‌ள் ஈழ‌த்தை பெற்று த‌ந்து விட்டார்க‌ளா....................விடுத‌லைப் புலிக‌ள் மீதான‌ த‌டையை த‌ன்னும் நீக்கினார்க‌ளா........................ ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை.....................அநீதி எங்கு ந‌ட‌ந்தாலும் அநீதி அநீதி தான் ஈரானுக்கு இஸ்ரேல் அமெரிக்கா செய்த‌து ப‌க்கா அநீதி😡.........................அமெரிக்கா ஒன்றும் போற்றி புக‌ழ‌க் கூடிய‌ நாடு கிடையாது , எங்க‌ட‌ நாட்டில் எண்ணை வ‌ள‌ம் த‌ங்க‌ம் இருந்து இருக்க‌னும் அமெரிக்க‌ன் எங்க‌ட‌ ப‌க்க‌ம் நின்று இருப்பான்...................அமெரிக்காவை ப‌ற்றி ந‌ங்கு தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு இது புரியும்😉.....................

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

ஈரான் இந்த தீவிர மதவாத ஆட்சியில் இருந்து விடுதலை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் அந்த மக்களுக்கு வந்துள்ளது, மன்னராட்சி தற்போதுள்ள ஆட்சியினை போல மிக மோசமாக இருக்காது என நம்புகிறேன்,

சரியாகச் சொன்னீர்கள்

முல்லாக்கள் ஆட்சியில் தொடர் துன்பம் அனுபவித்து வருகின்ற ஈரான் மக்களும் அணுவாயுத போர் வெறி அற்ற அயல்நாடுகளில் உள்ள முஸ்லிம் மதவெறி அமைப்புகளுக்கு ஆயுதங்கள் வழங்கி ஊக்குவிக்காத பதிலுக்கு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் ஈரான் அரசு மாற்றத்தையே அவர்கள் விரும்புகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

த‌லைவ‌ர் 150 போராளிக‌ளுட‌ன் இருக்கிறார்................அருனா த‌ன‌து ச‌கோத‌ரிய‌ நேரில் சென்று பார்த்த‌தாக‌வும் , அதை வெளி உல‌கிற்க்கு ப‌ர‌ப்பின‌ ஆட்க‌ள் இதுக்கை வ‌ந்து முட்டை க‌ண்ணீர் விடுவ‌தை பார்க்க‌ வேடிக்கையா இருக்கு....................

ஈரானிய‌ர் ஒற்றுமையா இருந்த‌ ப‌டியால் தான் அமெரிக்கா போட்ட‌ ப‌ல‌ பொருளாதார‌ த‌டையையும் தாண்டி ப‌ல‌தை சாதிச்சு இருக்கின‌ம்........................

எதிரிக்கு விலை போன‌ கூட்ட‌த்தோட‌ தொட‌ர்பில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒற்றுமையை ப‌ற்றி க‌தைக்க‌ சிறு த‌குதி கூட‌ இல்லை.....................சொந்த‌ ச‌கோத‌ரி குடும்ப‌த்தின் தியாக‌த்தை கொச்சை ப‌டுத்தின‌ பையித்திய‌ம் தான் டென்மார்க்கில் வ‌சிக்கும் த‌லைவ‌ரின் ம‌னைவியின் அக்கா.......................இப்ப‌டியான‌ சில்ல‌ரைக‌ள் எதிரிய‌ விட‌ ஆப‌த்தான‌வ‌ர்க‌ள்.......................த‌மிழீழ‌த்தை ஆண்ட‌வ‌ரே பார்த்துக்க‌ட்டும்🙏👍........................

  • கருத்துக்கள உறவுகள்

[ஆங்கில‌ம் அதிக‌ம் தெரியாத‌ கூ முட்டைக‌ள் அதிக‌ம் வாழும் நாடு ஜேர்ம‌ன்]

சீமான் பல இலட்சங்களை செலவு செய்து தமிழ்நாட்டில் தமிழை நிராகரித்து தனது மகன்களுக்கு ஆங்கிலம் மூலம் கல்வி கற்ப்பிக்கும் நோக்கத்தை விளங்கி கொண்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

சவூதியிலுள்ள முல்லா ஆட்சியும் அகற்றப்பட வேண்டும். அங்கும் மன்னருக்கு எதிராக கருத்து சொன்ன துருக்கிய ஊடவியலாளர் சத்தம் இல்லாமல் தூக்கில் இடப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

[ஆங்கில‌ம் அதிக‌ம் தெரியாத‌ கூ முட்டைக‌ள் அதிக‌ம் வாழும் நாடு ஜேர்ம‌ன்]

சீமான் பல இலட்சங்களை செலவு செய்து தமிழ்நாட்டில் தமிழை நிராகரித்து தனது மகன்களுக்கு ஆங்கிலம் மூலம் கல்வி கற்ப்பிக்கும் நோக்கத்தை விளங்கி கொண்டேன்

ஈரானிய‌ பெண்க‌ள் கைப‌ந்து விளையாட்டில் மெதுவாய் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருகின‌ம் ,உல‌க‌ கிண்ண‌ கைப‌ந்து போட்டியில் ஈரான் பெண்க‌ள் ஜ‌ரோப்பா பெண்க‌ள் கூட‌ விளையாடின‌தை பார்த்தேன்👍....................

ஈரான் வீர‌ர்க‌ள் ஒவ்வொரு கால்ப‌ந்து உல‌க‌ கிண்ண‌ போட்டியிலும் க‌ல‌ந்து கொள்ளுகிற‌வை....................கூடைப‌ந்து விளையாட்டில் ஆசியாவில் ஈரான் தான் ப‌ல‌மான‌ அணி....................ஈரானில் ப‌ல‌ விளையாட்டு கில‌ப்புக‌ள் இருக்கு

இந்தியாவை விட‌ ஈரான் நாட்ட‌வ‌ர்க‌ள் ப‌ல‌ விளையாட்டில் திற‌மை மிக்க‌வ‌ர்க‌ள்..........................ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு ச‌ட்ட‌ம் இருக்கு அதை ம‌திச்சு தான் ந‌ட‌க்க‌னும்..........................

இப்ப‌டி ஈரான் நாட்டை ப‌ற்றி சொல்ல‌ நிறைய‌ இருக்கு.........................கால்ப‌ந்து உல‌க‌ கிண்ண‌ போட்டியில் இந்த‌ நூற்றாண்டில் இந்தியா க‌ல‌ந்து கொண்டு இருக்கா , ஆனால் ஈரான் ஒவ்வொரு முறையும் க‌ல‌ந்து கொள்ளின‌ம்..........................

ம‌க்க‌ளுக்கான‌ முழு சுத‌ந்திர‌ம் ஈரானிட‌ம் இருக்கு........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, nunavilan said:

சவூதியிலுள்ள முல்லா ஆட்சியும் அகற்றப்பட வேண்டும். அங்கும் மன்னருக்கு எதிராக கருத்து சொன்ன துருக்கிய ஊடவியலாளர் சத்தம் இல்லாமல் தூக்கில் இடப்பட்டுள்ளார்.

பூரண கும்பத்திற்கு பொட்டு வைத்தது போல்....

இந்த திரியின் ஒட்டுமொத்த கருத்துக்களுக்கும் தடாலடி கருத்து .👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌க்க‌ளுக்கான‌ முழு சுத‌ந்திர‌ம் ஈரானிட‌ம் இருக்கு........................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

சவூதியிலுள்ள முல்லா ஆட்சியும் அகற்றப்பட வேண்டும். அங்கும் மன்னருக்கு எதிராக கருத்து சொன்ன துருக்கிய ஊடவியலாளர் சத்தம் இல்லாமல் தூக்கில் இடப்பட்டுள்ளார்.

ஏன் அண்ணா ஈரானுக்கு ச‌வுதிக்கு போவான் , த‌மிழ் நாட்டில் என்ன‌ ஆட்ச்சி ந‌ட‌க்குது

முத‌ல் க‌ருணாநிதி , பிற‌க்கு ஸ்டாலின் , பிற‌க்கு உத‌ய‌நிதி , பிற‌க்கு இன்ப‌நிதி..........................இந்த ஆட்சிய‌ எம்ம‌வ‌ர்க‌ள் விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌ மாட்டின‌ம்😁😛...........................

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

வசியவர்களே, எப்படி எண்ணெய் சட்டியிலிருந்து அடுப்பினுள் வீழ்வது போன்றா? இது இன்னும் நிலைமையை மோசமாக்குவதோடு மேலும் கொதிநிலைக்கான வழியாக மாறாதா?

10 hours ago, Kadancha said:

மற்ற மேற்றகில் உள்ளவர்கள் தங்களுக்கு எதோ ஈரானை பற்றி முழுமையாக தெரியும் என்றது போலவே நீங்கள் சொல்வது இருக்கிறது.

முதலில் இரான், காலனித்துவதில் இருந்து விடுதலை பெற்றதாயினும், புதிய நாடு இல்லை.

இரான் அரசின் இருப்பு ஆகக்குறைந்தது சைரஸ் கி.மு 600 இல் இருந்து. அதுக்கு முதல் மெடியன் பேரரசு. அதுக்கும் முதல் Elam (Elamites, கி.மு 2700 அளவில்) பெரிய அரசு உட்பட, மற்றும் சிற்றரசுகள் இப்பொது உள்ள இரானையும், இராக்கின் பகுதிகளையும் உள்ளடக்கி. தெற்கில் பாரசீக (Persian), Achaemenid இராச்சியங்கள்,

இந்த தென் இராச்சியங்களில் இருந்தே சைரஸ் இன் Achaemenid பேரரசாக எழும்பியது.

இப்போதைய நிலையில், ஒரு சிறு உதாரணம் இஸ்லாமிய அரசு 1979 இல் வந்தபோது, யாப்பு கூட கொண்டுவந்தது எல்லோரும் சமம், சம உரிமை ... என்று

(அமெரிக்காவின் / மேற்றுகின் அரபு நாடுகள் வால்கள் இப்போதும் இருப்பது மன்னர் இராச்சியங்களாக)

சிறிய உதாரணம் ஈரானில் பெண்கள் வாகனம் ஓடலாம் என்பது 1979 யிலேயே கொண்டு வரப்பட்டு அனுமதிக்க படுகிறது.

அமெரிக்காவின் வாலான சவூதியில் 2018 இல் இருந்தே குறியீடாக அனுமதிக்கப்படுகிறது.

11 hours ago, வீரப் பையன்26 said:

பெரும்பாலான‌ ஈரான் ம‌க்க‌ள் ayatollah ali khameneiயின் ஆட்சிய‌ விரும்புகின‌ம் , இல்லையெனில் ஈரானில் எப்பவோ க‌ல‌வ‌ர‌ம் வெடித்து இருக்கும் , 36வ‌ருட‌மாய் இந்த‌ ஆட்சிக்கு கீழ் தானே வாழ்ந்த‌வை

பெண்க‌ளுக்கு சிறு அட‌க்குமுறை இருக்கு அது அவ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம்........................த‌லைவ‌ர் ஈழ‌ ம‌ண்ணில் வாழ்ந்த‌ கால‌த்தில் பெண்க‌ள் இர‌வு நேர‌ம் சுத‌ந்திர‌மாய் ந‌ட‌மாட‌ முடியும் , இப்போது அந்த‌ நிலை இருக்கா , பெண் பிள்ளைக‌ளை பெத்த‌ பெற்றோர்க‌ள் ப‌ய‌ப்பிடுகின‌ம் இர‌வு நேர‌ங்க‌ளில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் வெளியில் விட‌

அப்ப‌டி ஈரானிலும் க‌லாச்சார‌ ச‌ட்ட‌ திட்ட‌ம் இருக்கு👍.............................

அமெரிக்க‌ன் த‌லைகீழாக‌ நின்றாலும் ஈரானில் ஒரு போதும் ஆட்ச்சி மாற்ற‌ம் வ‌ராது...................அமெரிக்க‌ன் ஈராக்கில் செய்த‌ ச‌தி , அது ஈரானில் எடுப‌டாது.........................

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சரியாகச் சொன்னீர்கள்

முல்லாக்கள் ஆட்சியில் தொடர் துன்பம் அனுபவித்து வருகின்ற ஈரான் மக்களும் அணுவாயுத போர் வெறி அற்ற அயல்நாடுகளில் உள்ள முஸ்லிம் மதவெறி அமைப்புகளுக்கு ஆயுதங்கள் வழங்கி ஊக்குவிக்காத பதிலுக்கு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் ஈரான் அரசு மாற்றத்தையே அவர்கள் விரும்புகின்றனர்

முன்னர் மன்னராட்சிக்காலத்தில் (அமெரிக்க மேற்கு ஆதரவினால் உருவாக்கப்பட்ட) கொடுங்கோல் ஆட்சியினாலேயே மக்கள் அதற்கெதிராக கிளர்ந்தெழுந்தார்கள் என்பதனை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் மக்கள் ஆட்சியினை வளங்களை சுரண்டும் மேற்கு கடந்த கால அனுபவ அறிவின் மூலம் அனுமதிகாது (மக்கள் தமது தேசியம் சார்பான விழிப்புணர்வு உள்ளதால்), தற்போது கூட அவர்கள் தெரிவாக மன்னர் சாவின் (ஈரானின் 🤣) வாரிசினையே ஆட்சிக்கு கொண்டு வர முனைகிறார்கள் என கூறப்படுகிறது, அதனால் ஈரானியர்களுக்கு வேறு தெரிவு இருப்பதாக தெரியவில்லை, தற்போதுள்ள அரசாட்சியினை விட ஓரளவு நன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்க வேண்டியதுதான், ஆனால் மக்கள் தற்போதுள்ள ஆட்சியில் வெறுப்புடன் இருக்கிறார்கள் என கருதுகிறேன் ( அங்கு நடைபெறும் சிறு சிறு போராட்டங்கள் அதனையே குறிக்கிறது)

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானில் அட‌க்குமுறை இருக்கு அது அவ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் ]

இதை கேள்விபட்டால் வெளிநாட்டில் உள்ள ஈரான்காரர் தாங்கி கொள்ள மாட்டார் .தமிழர்களிடம் சாதி ஒடுக்கு முறை இருக்கு மூட நம்பிக்கைகள் இருக்கு அது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஈரானில் அட‌க்குமுறை இருக்கு அது அவ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் ]

இதை கேள்விபட்டால் வெளிநாட்டில் உள்ள ஈரான்காரர் தாங்கி கொள்ள மாட்டார் .தமிழர்களிடம் சாதி ஒடுக்கு முறை இருக்கு மூட நம்பிக்கைகள் இருக்கு அது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம்

ஈரானியர்கள் அந்த அடக்குமுறைக்கெதிராக போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள் ஆனால் கடும் அடக்குமுறை சட்டங்கள் அதனை வெளித்தெரியாதவாறு மறைக்கிறது என கருதுகிறேன்.

எனது அபிப்பிராயம் ஈரானின் அணுசக்தி மீதான தாக்குதல் என கூறிக்கொண்டு ஒரு ஆட்சி மாற்றத்திற்கான முயற்சியே மேற்கொள்ளப்படுகிறது என கருதுகிறேன், இரண்டு வாரமாக அணுநிலைகள் மீதா தொடர்ந்து தாக்குதல் செய்தார்கள்? ஆட்சியின் ஒவ்வொரு மட்டத்தலைமைகளை முடிப்பதிலேயே இஸ்ரேல் கவனம் செலுத்தியது போல இருக்கிறது அதே நேரம் அவர்களது கவனத்தினை அணுநிலைகளில் குவிக்கவைத்து மெதுவாக இரண்டுவார கால அவகாசம் கொடுத்து ஈரானியர்கள் அணுநிலைகளைன் முக்கியமானவற்றை இடமாற்றம் செய்வது என அதே விடயத்தில் கவனத்தினை திசை திருப்பும் முயற்சியாக இந்த அணுகுண்டு செய்திகளை கருதுகிறேன், ஆட்சி மாற்றத்திற்கு தேவையான படுகொலைகளை செய்து சதுரங்கத்தில் ஒவ்வொரு காயாக வெட்டி கடைசியாக அரசனுக்கு கெடுவைப்பார்கள் என கருதுகிறேன்.

ஈரானில் உறுதியான ஆட்சிமாற்றம் நிகழலாம் என கருதுகிறேன் அது பிசகினால் ஈரான் பேரழிவிற்குள்ளாகலாம்.

எனது கருத்து தவறாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, vasee said:

ஈரானில் உறுதியான ஆட்சிமாற்றம் நிகழலாம் என கருதுகிறேன் அது பிசகினால் ஈரான் பேரழிவிற்குள்ளாகலாம்.

எனது கருத்து தவறாக இருக்கலாம்.

ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை, இரு நாறுகளிலும் பேரழிவு காத்திருக்கு, அத்துடன் உலக பொருளாதாரமும் அடிவாங்கும், மின்சார கார் / சைக்கிள் வாங்கி வைத்திருக்கவும்👍

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=TriASB-F5UY

BUNKER BUSTER BOMB Myth /MIT Prof Ted Postol & Lt Col Daniel Davis

தாக்குதலுக்கு பிந்திய படங்களை பார்க்கும் போது மேலே வீடியோவில் சொன்னமாதிரிதானிருக்கு, பெரிய பாதிப்பில்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.