Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புலவர் said:

திமுகவுக்கு முரட்டு முட்டுக்கொடுக்கும் இந்த நாடக நடிகை நடிகை சர்மிளா போட்ட நாடகம்தான் இது. நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில் கொடுப்பதை விடுத்து இது என்ன திசை திருப்பல்.நாடகம் நடித்துப்பழகிப்போனதால் ஒரு புது கதை எழுதுகிறார் இந்த நடிகை.

மருத்துவரும், நடிகைகையுமான சர்மிளா சொன்னது சரி வரும் போல இருக்கே…

அண்ணாமலையுடன் நிற்கும் நிகிதாவின் புகைப்படம்.. நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்!

Yogeshwaran MoorthiPublished: Friday, July 4, 2025, 18:06 [IST]

BJP s Nainar Nagendran Clarifies on Viral Photo of Nikita with Ex-TN Chief Annamalai

காவல்துறையின் கடுமையாக தாக்குதல் காரணமாக திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அனைவரின் கவனமும் நகை திருடுபோனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிகிதா மீது திரும்பியுள்ளது. ஏற்கனவே நிகிதா மீது பல்வேறு பணமோசடி புகார் எழுந்துள்ளன. இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நிகிதா வீடியோ

அதேபோல் நிகிதா தொடர்ச்சியாக திருமண மோசடியில் ஈடுபடுபவர் என்று முன்னாள் கணவரும், ஃபார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவருமான திருமாறன் குற்றம்சாட்டி இருக்கிறார். இதன் காரணமாக நிகிதா கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே கோவையில் உள்ள உணவகம் ஒன்றில் நிகிதா இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.

பாஜக ஆதரவாளர் நிகிதா

இதனிடையே நிகிதாவின் சோசியல் மீடியா பக்கம் மூலமாக அவர் பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அண்மையில் நடந்த முருகன் மாநாட்டில் கூட நிகிதா கலந்து கொண்டிருக்கிறார். அதேபோல் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் நிகிதா புகைப்படம் எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன் பேட்டி

இதனால் நிதிகிதாவிற்கு உதவி செய்வது பாஜகவா என்ற விவாதம் தொடங்கியது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது, அண்ணாமலையுடன் நிகிதா இருக்கும் புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நயினார் நாகேந்திரன், அந்த புகைப்படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை.

நிகிதாவிற்கு சம்பந்தமா?

ஆனால் பொதுவாக நாங்கள் ஒரு இடத்திற்கு செல்லும் போது, நிறைய பேர் புகைப்படம் எடுத்து கொள்வார்கள். புகைப்படம் எடுப்பவர்களின் பின்னணி என்ன என்பது எங்களுக்கு தெரியாது அல்லவா.. முருகன் மாநாட்டை முழுக்க முழுக்க நடத்தியது நாங்கள் தான். நிகிதா என்ற பெண்ணை நீங்கள் சொல்லிதான் எங்களுக்கு தெரியும். அதில் யாருடைய பங்களிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கோவையில் நிகிதா?

நிகிதாவை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் குறித்த புகார்கள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் உள்ளன. கோவையில் முகாமிட்டுள்ள நிகிதாவை விரைவில் போலீசார் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நிகிதாவிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில், அஜித் குமார் மரண விவகாரத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.

https://tamil.oneindia.com/news/madurai/bjp-s-nainar-nagendran-clarifies-on-viral-photo-of-nikita-with-ex-tn-chief-annamalai-717869.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

  • Replies 50
  • Views 2.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ■★◆●உடலில் அணிய வேண்டிய 10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்..? ■★◆● அம்மா / மகள் இருவரில் அது யாருடைய நகை..? என்ன நகை அது..? ■★◆●மதுரையில் இருந்து 25கிமீ மடப்புரம் கோயிலுக்கு காரை ஓ

  • satan
    satan

    சிவநேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து வேட்டை நக்கிறதாம். கேள்விப்படவில்லையா சிறியர்? எய்தவர்கள் பிடிபட வேண்டும். அம்புகளை பிடிப்பதால் பிரச்சனை தீரப்போவதில்லை.

  • goshan_che
    goshan_che

    இந்த கொலை குஜராத் ரயில் எரிப்பு பாணியில் சில சங்கி காவல் அதிகாரிகளை வைத்து பிஜேபி ஆடிய நாடகம் என இப்போ பலர் எழுத ஆரம்பிக்கிறனர். அதாவது நகை காணாமல் போகவே இல்லை, அநியாயமாக ஒரு பொய் குற்றசாட்டை கூறி, சங

  • கருத்துக்கள உறவுகள்

பிண அரசியல் செய்பவர்களுக்கு கொஞ்சம் டெலிகேட் பொசிசன் 👇

இனி இந்த செய்தியை வெளிகொணர்ந்த தமிழ் நாட்டு ஊடகங்களை திட்டுவதை ஆரம்பிப்பார்கள் என நினைக்கிறேன்🤣.

அன்னையே.. அம்மா.. காவலரே! அண்ணாமலை, ஜெயலலிதாவை.. பாராட்டி போஸ்ட் போட்ட நிகிதா!

Shyamsundar IPublished: Friday, July 4, 2025, 18:13 [IST]

சென்னை: கஸ்டடி விசாரணையில் கொலை செய்யப்பட்ட அஜித் குமார் மீது புகார் அளித்த நிகிதா தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர் தீவிரமாக அரசியல் கட்சிகள் தொடர்பாக பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் அஜித் குமார் போலீசார் நடத்திய விசாரணையில் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிகிதா என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டார். தற்போது தாய் சிவகாமியுடன் வசித்து வரும் நிகிதா, தாய்க்கு ஸ்கேன் எடுப்பதற்காக மதுராபுரம் கோவிலுக்கு சென்றபோதுதான் நகை திருட்டு புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே அஜித்குமார் மரணம் நிகழ்ந்துள்ளது. மதுராபுரம் கோவிலில் தனது அம்மாவிற்கு சக்கர நாற்காலி (வீல் சேர்) வேண்டும் என்று நிகிதா கேட்டதற்கு, காவலாளி அஜித் குமார் ரூ.500 கேட்டுள்ளார். அதற்கு ரூ.100 தருவேன் என்று நிகிதா கூறிய நிலையில் அது வாக்குவாதம் ஆகி, இதனால் கோபம் அடைந்த நிகிதா நகை காணவில்லை என்று பொய் வழக்கு போட்டதாகக் கூறப்படுகிறது. ஐஏஎஸ் மூலம் போலீசாருக்கு பிரஷர் போட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா என்பவர் ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 16 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக 2011ஆம் ஆண்டு நிகிதா மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிகிதா அரசியல்

அஜித் குமார் மீது புகார் அளித்த நிகிதா தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர் தீவிரமாக அரசியல் கட்சிகள் தொடர்பாக பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக திமுகவிற்கு எதிராக இருக்கும் கட்சிகளான அதிமுக, பாஜகவிற்கு இவர் ஆதரவளித்து வந்துள்ளார். முக்கியமாக பாஜக தலைவர் அண்ணாமலையை புகழந்து பல முறை போஸ்ட் போட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனக்கு அரசியல் தொடர்பு உள்ளதாக கூறி பலரை ஏமாற்றி வந்தது அம்பலம் ஆகி உள்ளது. அஜித் குமார் காவல் நிலைய மரண வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிகிதா மீது ஏற்கனவே பல மாணவிகள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பணியாற்றிய போது ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டே அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

Sivagangai

தாவரவியல் துறைத் தலைவராக பணியாற்றிய நிகிதா, தனது பொறுப்புகளை சரிவர நிறைவேற்றவில்லை என்றும், கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவுகளை ஏற்க மறுத்ததாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரை பணியிடமாற்றம் செய்யக் கோரி மாணவிகள் அளித்த மனுக்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் இதுகுறித்து விசாரிக்க கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Sivagangai

விசாரணைக்கு பின், இணை இயக்குனர் குற்றச்சாட்டுகளை உறுதி செய்து, கல்லூரி கல்வி இயக்குனருக்கு விரிவான அறிக்கை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. அந்த பைல் பல நாட்களாக மேஜையில் உறங்குவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாலும், தற்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://tamil.oneindia.com/news/chennai/old-post-of-nikita-on-annamalai-jayalalitha-on-limelight-again-amid-ajith-kumar-custodial-row-717873.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2025 at 08:38, ஏராளன் said:

அடி தாங்காமல் இறுதியில் அஜித் தான் அந்த நகையை திருடியதாகவும், அந்த நகையை கோவில் பின்புறம் உள்ள கோவில் அலுவலகத்தின் பின்னால் உள்ள மாட்டு தொழுவத்தில் மறைத்து வைத்திருப்பதாக சொன்னான்.

நகை கிடைத்ததா? பதிவு தலையைச் சுற்றுது.😇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

நகை கிடைத்ததா? பதிவு தலையைச் சுற்றுது.😇

நகை தொலைந்ததாக பொய்யான புகார் வழங்கப்பட்டதாக ஒரு பேச்சு அடிபடுகிறது ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

சாத்தான் குளம் போல அன்றி இங்கே உடனடியாக பிழை இல்லாதா மரண விசாரணை நடந்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள் சிறை எடுக்கப்பட்டு, சாட்சிக்கு ஆயுத பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு, விசாரணை சி பி ஐ வசம் ஒப்படைக்க பட்டுள்ளது.

ஆகவே கொலைக்கு பின்னாவது மாநில அரசின் நடவடிக்கைகள் பராவாயில்லாமல் உள்ளது.

ஓம் 👍

தமிழ்நாட்டு பொலிஸ் மிக மிக மோச மானது. உறவு வீரபையனுக்கு பிடித்தமான வீரப்பன் என்பவரை பிடிப்பதற்காக அனுப்பபட்ட தமிழ்நாட்டு பொலிஸ் பல தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாம் ஜெயலலிதா ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேகமாக செயல்பட்டு பொலிஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டணைகள் அவர்களுக்கு வழங்க வேண்டும். அது தான் இந்த பொலிஸ் காட்டுமிராண்தனத்தை குறைப்பதற்கு வழி.

12 hours ago, goshan_che said:

அதுவரை நயினாரும், எடப்பாடியும், விஜையும், சீமானும், சில யாழ்கள உறுப்பினர்களும் இதை வைத்து நன்றாக பிண அரசியல் செய்ய அவகாசம் இருக்கிறது 😀.

சீமான் முதல் அமைச்சராகவும் சாட்டை துரைமுருகன் அமைச்சராகவும் இருந்தால் எப்படி இருக்கும் அவரே ரேப் பண்ணுவேன் தொலைத்து போடுவேன் என்று இப்போது பயமுறுத்தி கொண்டு திரிகின்றார். முதல் அமைச்சரானால் பொலிஸ்சுடன் சேர்ந்து கும்மி அடிப்பார்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

தற்போது தாய் சிவகாமியுடன் வசித்து வரும் நிகிதா, தாய்க்கு ஸ்கேன் எடுப்பதற்காக மதுராபுரம் கோவிலுக்கு சென்றபோதுதான் நகை திருட்டு புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே அஜித்குமார் மரணம் நிகழ்ந்துள்ளது.

ஸ';கேன் எடுப்பதற்கு வைத்தியசாலைக்குதானே போகணும் கோயிலுக்கு ஏன் போனாங்க?

8 hours ago, goshan_che said:

மருத்துவரும், நடிகைகையுமான சர்மிளா சொன்னது சரி வரும் போல இருக்கே…

அப்புறம் எதுக்கு திமுககாரன் 50 இலட்சம் பேரம் பேசினான்.தீவிர பாசக எதிர்ப்பாளரான சர்வாதிகாரிஸ்டாலின் சாட்டையை ஏன் சுழட்டாமல் இருக்கிறார்?.இப்பொழதுAI காலம் எது உண்யைhன படம் எது AIபடம் என்று சாதரண கண்களுக்கு தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

அதுவரை நயினாரும், எடப்பாடியும், விஜையும், சீமானும், சில யாழ்கள உறுப்பினர்களும் இதை வைத்து நன்றாக பிண அரசியல் செய்ய அவஅதுக்காக 10 பவுண் நகைகளை திருடிவிட்டார் என்று யாரோ சொன்ன புகாரை வைத்து அடித்துக் கொல்ல திமுக அரசு சட்டம் இயற்றி ஊள்ளதா?தமிழ்நாட்டு அதிகாரிகள் திமுக அரசுக்கு பணிந்து நடப்பார்களா?பாஜகவுக்கு பணிந்து நடப்பார்களா?தமிழ்நாட்டிலேயே பெரிய திருட்டுக் குடும்பத்திற்கு எப்படியான தணடனை கொடுக்க வேண்டும்.திருட்டு ரயிலேறி வந்து விஞ்ஙான முறையில் ஊழல் செய்தார்கள் என்று நீதிபதிகளால் அறிக்கையிட்ட குடம்பத்திற்கு தண்டனை என்ன 2ப வழக்கிலும் சிபிஐ முறையான சாட்சிகளை தரவில்லை. ஆதாரங்களைத் தரவில்லை என்று குட்டு வைத்தே நீதிமன்றம் சட்டத்தின் பார்வையில் தீர்ப்பு வழங்கியது. சிபிஐக்கே பணத்தைக் கொடுத்து வழக்கை குறுக்கு வழியில் வென்ற குடும்பத்திற்கு வக்காலத்து வாங்குவதே நடிகைக்கும் சங்கிகளை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் கருத்து சொல்பவர்களுக்கும் வாடிக்கையாகி விட்டது. அவர்களின் ஒரே நோக்கம் சங்கி எதிர்ப்பு என்ற போர்வையில் தமிழ்த்தேசிய எதிர்ப்பு.காசம் இருக்கிறத

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, புலவர் said:

ஸ';கேன் எடுப்பதற்கு வைத்தியசாலைக்குதானே போகணும் கோயிலுக்கு ஏன் போனாங்க?

அப்புறம் எதுக்கு திமுககாரன் 50 இலட்சம் பேரம் பேசினான்.தீவிர பாசக எதிர்ப்பாளரான சர்வாதிகாரிஸ்டாலின் சாட்டையை ஏன் சுழட்டாமல் இருக்கிறார்?.இப்பொழதுAI காலம் எது உண்யைhன படம் எது AIபடம் என்று சாதரண கண்களுக்கு தெரியாது.

எல்லாம் சி பி ஐ கேட்க வேண்டிய கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பாசக டீ ரீம் சீமானுக்கு ஓட்டப் போட்டா பாசக உள்ள வந்துரும். அததிமுகவுக்கு ஓட்டுப்போடா பாசக உள்ள வந்துரும். பாசகவுக்கு ஓட்டுப் போடா பாசக நேரடியாக உள்ள வந்துரும் அதைத்தடுக்க எங்களுக்கு ஓட்டுப் போடுங்க என்று சொல்லித்தனெே ஆட்சியைப் புடிச்சீங்க இப்ப எப்படி பாசக உள்ளே வந்தது. உண்மையில் திமுகவுக்கு ஓட்டுப் போட்டால்தான் பாஜக உள்ளே வரும். அவர்களை உள்ளே கொண்டு வந்து எச்ராஸாவை எம்எல் ஏ ஆக்கியதே இந்த த் திருட்டு திமுகதான்.

3 minutes ago, goshan_che said:

எல்லாம் சி பி ஐ கேட்க வேண்டிய கேள்வி.

சிபிஐ எங்க கேள்வி கேட்கிறது?சிபிஐக்கே காசைக் கொடுத்து 2ஜி வழக்கை டீல் செய்த திமுகவுக்கு இது சிம்பிள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புலவர் said:
  14 hours ago, goshan_che said:

அதுவரை நயினாரும், எடப்பாடியும், விஜையும், சீமானும், சில யாழ்கள உறுப்பினர்களும் இதை வைத்து நன்றாக பிண அரசியல் செய்ய அவஅதுக்காக 10 பவுண் நகைகளை திருடிவிட்டார் என்று யாரோ சொன்ன புகாரை வைத்து அடித்துக் கொல்ல திமுக அரசு சட்டம் இயற்றி ஊள்ளதா?தமிழ்நாட்டு அதிகாரிகள் திமுக அரசுக்கு பணிந்து நடப்பார்களா?பாஜகவுக்கு பணிந்து நடப்பார்களா?தமிழ்நாட்டிலேயே பெரிய திருட்டுக் குடும்பத்திற்கு எப்படியான தணடனை கொடுக்க வேண்டும்.திருட்டு ரயிலேறி வந்து விஞ்ஙான முறையில் ஊழல் செய்தார்கள் என்று நீதிபதிகளால் அறிக்கையிட்ட குடம்பத்திற்கு தண்டனை என்ன 2ப வழக்கிலும் சிபிஐ முறையான சாட்சிகளை தரவில்லை. ஆதாரங்களைத் தரவில்லை என்று குட்டு வைத்தே நீதிமன்றம் சட்டத்தின் பார்வையில் தீர்ப்பு வழங்கியது. சிபிஐக்கே பணத்தைக் கொடுத்து வழக்கை குறுக்கு வழியில் வென்ற குடும்பத்திற்கு வக்காலத்து வாங்குவதே நடிகைக்கும் சங்கிகளை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் கருத்து சொல்பவர்களுக்கும் வாடிக்கையாகி விட்டது. அவர்களின் ஒரே நோக்கம் சங்கி எதிர்ப்பு என்ற போர்வையில் தமிழ்த்தேசிய எதிர்ப்பு.காசம் இருக்கிறத

தமிழ் தேசியத்தை வளர்க்க இலங்கைக்கு போங்கள் புலவர்.

அங்கேதான் தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டிய அதீத தேவை உள்ளது.

நான் மேலே சொன்னது நானாககவோ, அல்லது அநேமேதய கணக்கு களில், யுடீப் வீடியோ ஆதாரங்கள் அல்ல.

தட்ஸ் தமில் எனும் நீண்ட்காலமாக உள்ள ஒரு செய்திதளத்தில் இருந்துதான்.

சர்மிளா ஒரு மருத்துவர், அவரை சின்ன திரை நடிகை என கேலி பேசுகிறீர்கள்.

நீங்கள் என்ன? பெரிய திரை நடிகரா?

அரசியலில் யாரும் கருத்து சொல்லலாம்.

அவரின் தொழில் முக்கியம் அல்ல.

ஒரு அநியாய கொலை நடந்துள்ளது.

அதில் பல மர்ம முடிச்சுக்கள்.

அதை எதையும் கதைக்காமல், எழுதாமல் தமிழ் தேசியம் வளர்கிறோம் பேர்வழி என அரசு மீது குற்றம் சுமத்துவது, உண்மையான குற்றவாளிகள் தப்பவே வழி வகுக்கும்.

அதைதான் நீங்கள் செய்கிறீர்கள்.

உங்களுக்கு திமுக மீது பழி தீரக்க வேண்டும் என்பதால் அஜித் குமார் கொலையை அவர்கள்தான் செய்தார்கள் என இழுத்து மூட முடியாது.

5 minutes ago, புலவர் said:

சீமான் பாசக டீ ரீம் சீமானுக்கு ஓட்டப் போட்டா பாசக உள்ள வந்துரும். அததிமுகவுக்கு ஓட்டுப்போடா பாசக உள்ள வந்துரும். பாசகவுக்கு ஓட்டுப் போடா பாசக நேரடியாக உள்ள வந்துரும் அதைத்தடுக்க எங்களுக்கு ஓட்டுப் போடுங்க என்று சொல்லித்தனெே ஆட்சியைப் புடிச்சீங்க இப்ப எப்படி பாசக உள்ளே வந்தது. உண்மையில் திமுகவுக்கு ஓட்டுப் போட்டால்தான் பாஜக உள்ளே வரும். அவர்களை உள்ளே கொண்டு வந்து எச்ராஸாவை எம்எல் ஏ ஆக்கியதே இந்த த் திருட்டு திமுகதான்.

என்ன பச்ச புள்ளை மாதிரி எழுதுறீங்க.

பாஜக உள்ளே வருவது என்பது ஆட்சி அதிகாரத்தை அவர்கள் பெறுவதை குறிக்கும்.

இப்போ நடந்துள்ளதாக கூறப்படுவது அதுவல்ல, இங்கே முன்பு திமுக, அதிமுக வுக்கு நெருக்கமாக இருந்து பின்னர் பாஜகவுக்கு நெருக்கமாகி போன ஒரு பெண்ணும், சில உயர் பாஜக ஆதரவு அதிகாரிகளும் சேர்ந்து, இதை ஒப்பேற்றி உள்ளார்கள் என்பதே ஒரு தரப்பு வாதம்.

இது சரி என நான் சொல்லவில்லை. ஆனால் இதுவும் ஒரு கோணம்.

இதற்கும் பாஜக உள்ளே வருவதை தடுப்பற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

தமிழ் நாடு இந்தியாவில் ஒரு மாநிலம், மத்தியில் அசுர பலத்தோடு ஆட்சியில் இருக்கும் கட்சி, மாநிலத்தில் ஆட்சியில் இல்லாவிடினும் சில தில்லாலங்கடிகளை செய்ய முடியும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சர்மிளா ஒரு மருத்துவர்,

அவர் ஒரு மருத்துவர் போல மனிதாபினமாகவா நடந்து கொள்கிறார். ஒரு அநிஞாயமான கொலை நடந்திருக்கிறது. அது பற்றிய விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. நீதிபதிகள் காவல்துறையின் மீது கடுமையான விமர்சனத்தையும் கேள்விகளையும் வைத்துள்ளார்கள். இந்த வேளையில் சங்கிகளின் வேலை என்று திசைதிருப்புவது நாடகத்தன்மையானது தானே. இவர் எதற்கு இப்படி கருத்துச் சொல்ல வேண்டும் தனது சந்தேகத்தை காவல்துறையிடமோ நீதிமன்றத்திடமோ முறைப்படி தெரிவித்திருக்கலாமே.அப்படிஇல்லாமல் பொதுவெளியில் சொல்வது திமுக தலைமையிடம் விருது பெறுவதற்கான நடிப்பு என்றுதானே பொருள்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

யாழ்களத்தில் மட்டும் 2 பக்கம் ஓடியுள்ளதே புலவர் - அவரிடம் கேட்கும் மனிதாபிமானத்தோடு நாமும் விசாரணை முடியும் வரை சும்மா இருதிருக்க வேண்டும் அல்லவா?

அவரவர் தம் அஜண்டாவோடு கருத்து சொல்லலாம்.

இப்போ அண்ணாமலையோடு அந்த படத்தில் இருப்பது நிகிதா அல்ல தான் என இன்னொரு பாஜக பெண் கூறியுள்ளார்.

அவர் கருத்து சொல்வது, திசை திருப்பல் என நீங்கள் கருதினால் அதை எழுதலாம்.

ஆனால் சின்ன திரை நடிகை, நடிக்கிறார் என்பது தேவைதானா?

நீங்கள் எழுதும் கருத்தை, உங்கள் தொழிலோடு தொடர்புபடுத்தி, எழுதினால் சரியாக இராதுதானே?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

ஸ';கேன் எடுப்பதற்கு வைத்தியசாலைக்குதானே போகணும் கோயிலுக்கு ஏன் போனாங்க?

நல்லவேளை ஸ்கான் எடுப்பதற்காக அவர் பாராளுமன்றம் போகவில்லை. ஆசுபத்திரியில, சிறையிலே இருக்கவேண்டிய கேசுகளெல்லாம் இப்போ பாராளுமன்றத்தில நிறைஞ்சு இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'44 காயங்கள், மூளையில் ரத்தக் கசிவு, காதுகளில் உலர்ந்த ரத்தம்' - மரணத்திற்கு காரணம் என்ன?

காவலாளி அஜித்குமார், திருப்புவனம், குற்றம், கொலை, சிவகங்கை

படக்குறிப்பு, உடற்கூறாய்வு அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 வெளிப்புறக் காயங்களும் பல வகையான உள்புறக் காயங்களும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 4 ஜூலை 2025

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரின் உடற்கூறாய்வு அறிக்கையின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. உடலில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டாலும், மரணத்துக்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை.

அதேவேளையில், ஒரே இடத்தில் தொடர்ச்சியாகத் தாக்கியதன் விளைவாக ஏற்பட்ட ரத்தக் கசிவால் மரணம் நேர்ந்திருக்க வாய்ப்புள்ளதாக தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அஜித்குமாரின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்தது எது?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள மடப்புரத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வந்த மதுரையைச் சேர்ந்த நிகிதா என்பவரின் ஒன்பதரை சவரன் நகை காணாமல் போனதாக புகார் எழுந்தது.

புகார் அடிப்படையில், கோவிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரை திருப்புவனம் காவல் நிலையத்தில் கோவில் ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

காவலாளி அஜித்குமார், திருப்புவனம், குற்றம், கொலை, சிவகங்கை

படக்குறிப்பு, கோவிலின் பின்புறம், இங்கு வைத்துதான் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது

திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கை தனிப்படை பிரிவுக்கு மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் மாற்றியுள்ளார். காவலாளி அஜித்குமாரிடம் தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மறுநாள் (28ஆம் தேதி) அவர் உயிரிழந்தார்.

கோவிலில் இருந்து அஜித்குமாரை ஆட்டோவில் கொண்டு செல்லும் போதே உயிரிழந்துவிட்டதாக, அவரது சகோதரர் நவீன்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் ஆனந்த், கண்ணன், ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 28ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் இறந்த நிலையில் அஜித்குமார் கொண்டு வரப்பட்டதாக, உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுநாள் காலை 5.45 மணியளவில் அஜித்குமாரின் உடலை மருத்துவர் சதாசிவம் மற்றும் மருத்துவர் ஏஞ்சல் தலைமையிலான குழுவினர் உடற்கூறாய்வு செய்துள்ளனர். சுமார் மூன்று மணிநேரம் 35 நிமிடங்கள் அது நடந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 வெளிப்புறக் காயங்களும் பல வகையான உள்புறக் காயங்களும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், மரணம் ஏற்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இதில் காயங்கள் பலவும் கன்றிப் போன நிலையில் இருந்துள்ளன.

மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாகவும் இரு காதுகளிலும் உலர்ந்த நிலையில் ரத்தம் காணப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அஜித்குமாரின் இதயம், நுரையீரல், கல்லீரல், மூளை ஆகியவை ரசாயனம் (chemical analysis) மற்றும் திசுப் பகுப்பாய்வுக்கு (histopathological) அனுப்பப்பட்டுள்ளது.

'ஒரே இடத்தில் பலமுறை அடிக்கப்பட்ட காயங்கள்'

காவலாளி அஜித்குமார், திருப்புவனம், குற்றம், கொலை, சிவகங்கை

படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம்

"மரணத்துக்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படாத நிலையில், காவலர்கள் தாக்கியதால் காவலாளிக்கு மரணம் ஏற்பட்டிருக்குமா?" என்று மருத்துவரும் மீனாட்சி மருத்துவக் கல்லூரியின் தடய அறிவியல் துறையின் தலைவருமான டிகாலிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"மொத்தமாக 44 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் 13 முதல் 16 வரை வகைப்படுத்தப்பட்டுள்ள காயங்கள் என்பது ஒரு காயம் மட்டும் அல்ல. இவை ஒரே இடத்தில் பலமுறை அடிக்கப்பட்ட காயங்களாக உள்ளன" என்கிறார்.

தொடர்ந்து ஒரே இடத்தில் அடித்ததால் ஏற்பட்ட காயம் எனக் கணக்கிட்டால் சுமார் 70க்கும் மேற்பட்ட புறக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பார்க்கலாம் எனக் கூறும் டிகால், "சுமார் 12 செ.மீ அளவில் தசைகள் வரை காயம் ஏற்பட்டுள்ளது" என்கிறார்.

மரணத்திற்கு காரணம் என்ன?

காவலாளி அஜித்குமார், திருப்புவனம், குற்றம், கொலை, சிவகங்கை

படக்குறிப்பு, திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவில்

"அதேநேரம், இதயம், நுரையீரல் உள்பட பிரதான உறுப்புகளில் எங்கும் அடிபடவில்லை. மூளையில் மட்டும் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அது உயிரிழப்பை உடனே ஏற்படுத்த வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார் டிகால்.

"அஜித்குமாரின் உடலில் எலும்பு முறிவு எதுவும் காணப்படவில்லை" எனக் கூறும் டிகால், "எல்லாம் கன்றிப் போன காயங்களாக உள்ளன. அஜித்குமார் இறந்து போவார் என காவலர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லை" எனக் குறிப்பிட்டார்.

"பல்வேறு காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் ரத்தக் கசிவினால் இறப்பு ஏற்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறும் டிகால், "இது நியூரோ ஜெனிக் ஷாக் (neuro genic shock) எனக் கூறப்படுகிறது. அடிக்கும்போது ஒவ்வோர் இடத்தில் ஏற்படும் வலியும் மூளைக்குக் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்" என்கிறார்.

உடலில் மூன்று லிட்டருக்கும் குறைவாக ரத்த சுழற்சி ஏற்பட்டால் உயிரிழப்புக்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் இது ஹைப்போ வாலிமிக் ஷாக் (hypo volemic shock) என அழைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உதாரணமாக, ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது நீரிழப்பு ஏற்படுவதை மேற்கோள் காட்டிய டிகால், "நீரிழப்பைச் சரிசெய்யாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும். அதைப் போல ரத்தம் சுழற்சி அடைவதில் (blood circulation) பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும்" என்கிறார்.

"அடிக்கும்போது ஒவ்வொரு காயத்துக்கு உள்ளும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. மூளைக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரத்தக்கசிவு வேகமாக ஏற்பட்டிருந்தால் மரணமும் விரைவாக ஏற்பட்டிருக்கும்" எனக் கூறுகிறார் டிகால்.

காவலாளியின் உடலில் காயங்கள் பலவும் கன்றிப் போய் இருப்பதால், உடலில் உள்ள ரத்தம் மீண்டும் சுழற்சிக்கு வரவில்லை எனக் கூறும் டிகால், "அழுத்தம் குறையும்போது போதிய ஆக்சிஜனை மூளைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அதுவே உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கலாம்" என்றார்.

மிளகாய்ப் பொடி போட்டதற்கான ஆதாரம் உள்ளதா?

காவலாளி அஜித்குமார், திருப்புவனம், குற்றம், கொலை, சிவகங்கை

படக்குறிப்பு, மடப்புரம் கிராம மக்கள்

கோவிலில் அஜித்குமாரை தாக்கும்போது அவர் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டபோது, அங்கிருந்த மிளகாய்ப் பொடியைக் கரைத்து அவர் வாயில் காவலர்கள் ஊற்றியதாக அவரது சகோதரர் நவீன்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஆனால், இதுதொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படவில்லை. "பிரேத பரிசோதனையின்போது ஆடைகளையும் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதன் முடிவுகள் வரும்போது மிளகாய்த் துகள்கள் இருந்ததா எனத் தெரிய வரும். ஆனால், அவரது உடலில் மிளகாய்ப் பொடி இருந்ததாக விவரங்கள் இல்லை" எனக் கூறுகிறார் டிகால்.

"நாக்கு கடிபட்டுக் காயம் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அவர் கடித்திருக்கலாம். திசுப் பகுப்பாய்வு முடிவுகள் வருவதற்கு ஓரிரு மாதங்கள் தேவைப்படும். அதன் பிறகே இறுதி முடிவை வெளியிடுவார்கள்" எனக் கூறுகிறார் டிகால்.

அவரது கூற்றுப்படி, "அஜித்குமாருக்கு உடல்ரீதியாக எந்தப் பிரச்னைகளும் இல்லை. முதல்கட்ட அறிக்கை எனக் கூறப்பட்டாலும் இதை இறுதி அறிக்கையாகவும் பார்க்கலாம். இவ்வளவு காயங்களுடன் ஒரு மனிதர் உயிர் வாழ்வது கடினம்."

அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

'24 மணிநேர சித்ரவதை'

காவலாளி அஜித்குமார், திருப்புவனம், குற்றம், கொலை, சிவகங்கை

படக்குறிப்பு, அஜித் குமாரின் தம்பி நவீன்குமார்

"மதியம் 1 மணியளவில் வேன் மூலமாக அஜித்குமாரை அழைத்துச் சென்ற தனிப்படைக் காவலர்கள், மறுநாள் மரணம் ஏற்படும் வரை அடித்துள்ளனர். அவர் அடி தாங்க முடியாமல் நகையை எடுத்ததாகப் பொய் கூறியிருக்கிறார்" என்கிறார் மதுரை 'எவிடென்ஸ்' அமைப்பின் கதிர்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அஜித்குமார் உடன் பணியாற்றும் வினோத்குமார், அருண்குமார் உள்பட மூன்று பேர் முன்னிலையில் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது கோவிலில் நடந்த காவல் படுகொலையாகப் பார்க்க வேண்டும்" எனக் கூறுகிறார்.

சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கன்றிப் போன காயங்கள் உள்ளதாக உடற்கூறாய்வு அறிக்கை கூறுவதை மேற்கோள் காட்டிய கதிர், "24 மணிநேரமும் அஜித்குமாரின் உடல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கோபம் வரும் அளவுக்கு எதுவும் நடந்துவிடவில்லை" என்கிறார்.

"ஒன்பதரை சவரன் நகைத் திருட்டு என்பது கொடூரமான குற்றம் கிடையாது. இது கொள்ளை வழக்கு அல்ல திருட்டு வழக்கு" எனக் கூறும் கதிர், "அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு அதிகாரத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. ஒரு சாதாரண காவலாளி என்ற எண்ணத்தில் திருட்டுப் புகார் கொடுத்துள்ளார்" என்கிறார்.

காவலாளி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதைக் குறிப்பிட்டுப் பேசிய கதிர், "சாத்தான்குளத்தில் தந்தை-மகன் காவல் மரண வழக்கின் விசாரணையை இன்னமும் சிபிஐ முடிக்கவில்லை. அஜித்குமார் வழக்கை விரைந்து விசாரிக்குமாறு சிபிஐக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதே கோரிக்கையை முன்வைக்கும் காவலாளி அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் கணேஷ்குமார், "சிபிஐ விசாரணை நடந்தால் வழக்கின் விசாரணை தாமதமாகும். நீதிமன்ற மேற்பார்வையில் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

சாட்சியம் அளித்த கோவில் பணியாளர்கள்

காவலாளி கொலை வழக்கை விசாரித்து அறிக்கை தருமாறு மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை, கடந்த ஜூலை 1 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நியமித்தது.

திருப்புவனத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் ஆய்வு மாளிகையில் தங்கி மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் எனக் கூறப்பட்டு இருப்பதால், அஜித்குமார் தாக்கப்பட்டதைப் பார்த்த நபர்கள் சாட்சியம் அளித்து வருகின்றனர்.

அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார் மற்றும் அவரது உறவினர்கள், காவலர்கள், கோவில் பணியாளர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார்.

இதன் அறிக்கையை ஜூலை 8ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. அதற்குள் சி.பி.ஐ தனது விசாரணையைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy5w0qn2pv7o

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கன்றிப் போன காயங்கள் உள்ளதாக உடற்கூறாய்வு அறிக்கை கூறுவதை மேற்கோள் காட்டிய கதிர், "24 மணிநேரமும் அஜித்குமாரின் உடல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கோபம் வரும் அளவுக்கு எதுவும் நடந்துவிடவில்லை" என்கிறார்.

"ஒன்பதரை சவரன் நகைத் திருட்டு என்பது கொடூரமான குற்றம் கிடையாது. இது கொள்ளை வழக்கு அல்ல திருட்டு வழக்கு" எனக் கூறும் கதிர், "அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு அதிகாரத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. ஒரு சாதாரண காவலாளி என்ற எண்ணத்தில் திருட்டுப் புகார் கொடுத்துள்ளார்" என்கிறார்.

அஜித்குமாருக்கும் அவரைத்தாக்கிய காவலர்களுக்கும் முன் விரோதம் இருந்திருக்க வாய்ப்பில்லை.ஒரு சந்தேக நபரை இறக்கும்வரை அடித்துது;துன்புறுத்தியதற்கு மேலிட உத்தரவு நிச்சயம் இருந்திருக்கும்.மேற்கு நாடுகளில் இதுபோல் நடந்திருந்தால் இதற்குப் பொறுப்பேற்று பிரதமரே பதவி விலகியிருப்பார். காவல்துறை யார்கட்டுப்பாட்டில் இருக்கிறது? முதல்வர்கட்டுப்பாட்டில் ஈரப்பது போல் தெரியவில்லை. முதல்வரே காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சவுக்கு சங்கர் அடிக்கடி கூறி வருவது சரிதான் போலிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.vikatan.com/government-and-politics/governance/special-story-about-tiruppuvanam-ajithkumar-lockup-death31 கொடூரங்கள்! - முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை!

எஸ்.மகேஷ்ந.பொன்குமரகுருபரன்

7 Min Read

“கடந்த நான்கு ஆண்டுகளில், 31 காவல் மரணங்கள் நடந்திருக்கின்றன. 2021-ம் ஆண்டில் 4 பேரும், 2022-ம் ஆண்டில் 11 பேரும், 2023-ல் ஒருவரும், 2024-ல் 10 பேரும், 2025-ம் ஆண்டில் இதுவரை 5 பேர் என மொத்தம் 31 பேர் காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் உயிரிழந்திருக்கிறார்கள்.

Published:Today at 1 AMUpdated:Today at 1 AM

ஸ்டாலின்

ஸ்டாலின்

Join Our Channel

67Comments

Share

31 கொடூரங்கள்! - முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை!

31 கொடூரங்கள்! - முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை!

audio-waves.png

Listen to Vikatan stories on our AI-assisted audio player

“உடலில் ஒரு இடம்கூட விடாமல் அடித்திருக்கின்றனர். வாயில் மிளகாய்ப்பொடி தூவியிருக்கின்றனர். வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர். ஒருவரைக் கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இந்த அளவுக்குக் கொடூரமாகத் தாக்கியிருக்க மாட்டார்கள். காயங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. மாநில அரசே, தன் குடிமகனைக் கொலைசெய்திருக்கிறது...” - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சமீபத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கில், ஆதங்கத்தோடு சொன்ன வார்த்தைகள்தான் இவை!

போலீஸ் அத்துமீறல்களால், வன்முறைகளால் மரணங்கள் ஏற்படுவது இது முதன்முறையல்ல. அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடிவரும் எதிர்க்கட்சிகள், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன. ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களிலோ, 31 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. ‘யாருக்கும் கட்டுப்படாத காவலர்கள், ஒழுங்கீனம் பெருகிப்போன காவல்துறைக் கட்டமைப்பு, அடியாட்களாக மாறிப்போன தனிப்படை, அவர்களைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாத உயரதிகாரிகள்’ எனக் காவல்துறை மீது தொடர்ந்து பொதுமக்களால், மனித உரிமை அமைப்புகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வளவு நடந்தும், காவல்துறையில் எந்த மாற்றமும் நிகழாதிருப்பதால், ‘தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா..?’ என்கிற சந்தேகக் கேள்வியை எழுப்புகிறார்கள் எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும், மனித உரிமை ஆர்வலர்களும்.

அஜித்குமாரின் மரணத்தில் என்ன நடந்தது... காவல் மரணங்கள் ஏன் தொடர்ந்து நிகழ்கின்றன... காவல்துறையைக் கட்டுப்படுத்த ஏன் தவறுகிறார் முதல்வர்..? இந்தக் கேள்விகளுக்கு விடைதேடிக் களமிறங்கினோம்.

அஜித்குமார்

அஜித்குமார்

“நான் திருடவே இல்லை சார்..!”

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோயிலில், தற்காலிகக் காவல் ஊழியராகப் பணிபுரிந்துவந்தவர் அஜித்குமார். கடந்த ஜூன் 27-ம் தேதி, கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண், காரில் வைத்திருந்த தன் அம்மா சிவகாமியின் ஒன்பதரை பவுன் நகைகளையும் 2,600 ரூபாய் பணத்தையும் காணவில்லை’ என்றும், காரின் சாவியை அஜித்குமாரிடம்தான் கொடுத்ததாகவும்’ திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தச் சமயத்தில் நகையைப் பறிகொடுத்ததற்கு வெறும் சி.எஸ்.ஆர் மட்டுமே போடப்பட்டிருந்தது. எஃப்.ஐ.ஆர் போடப்படவில்லை. அடுத்த ஒரு சில மணி நேரத்தில் நடந்ததுதான், ஒரு பெரும் கொடூரத்துக்கே தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கிறது.

மடப்புரம் சுற்றுவட்டாரப் பொதுமக்களும், மனசாட்சியுள்ள காவலர்கள் சிலரும் அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளைக் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார்கள். “தான் எதிர்பார்த்ததுபோல தன் புகார்மீது திருப்புவனம் காவல்துறையினர் ‘அதிரடியாக’ எதுவும் செய்யவில்லை என்றதும், யாரோ ஒரு சீனியர் அதிகாரிக்கு போனில் தகவல் தெரிவித்திருக்கிறார் நிகிதா. அந்த சீனியர் அதிகாரி கொடுத்த உத்தரவில் வியர்த்துப்போன மானாமதுரை டி.எஸ்.பி-யாக இருந்த சண்முகசுந்தரம், உடனடியாகத் தன்னுடைய தனிப்படை போலீஸாரை விசாரணைக்கு அனுப்பியிருக்கிறார். தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் விடுப்பு என்பதால், ஏட்டு கண்ணன் தலைமையில் காவலர்கள் பிரபு, ராஜா, சங்கர மணிகண்டன், ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய ஆறு பேரும் ஜூன் 27-ம் தேதி, இரவு 8:30 மணிக்கே அஜித்குமாரிடம் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். விசாரணை என்றால், வாயால் அல்ல.

ஒரு தோப்புக்கு அஜித்குமாரை அழைத்துச் சென்ற தனிப்படை, அவரை அடித்து உதைத்திருக்கிறது. திருடிய நகையை ஒப்படைக்கச் சொல்லி கொடுமைப்படுத்தியிருக்கிறது. ‘நான் திருடவே இல்லை சார்...’ என அஜித்குமார் எவ்வளவோ கதறியும் விடாத காவலர்கள், அன்றைய தினம் அவரோடு தொடர்பிலிருந்த தினகரன், அருண், லோகேஸ்வரன் எனப் பலரையும் தூக்கிக்கொண்டு வந்து கண்டபடி அடித்திருக்கிறார்கள். அஜித்குமாரின் வீட்டை எந்தவித வாரன்ட்டும் இல்லாமல் சோதனை செய்தவர்கள், அவருடைய தம்பி நவீன்குமாரையும் அழைத்துவந்து அடித்திருக்கிறார்கள். ஒரு விடுதிக்குப் பின்புறம், பேருந்து டெப்போவுக்கு அருகில், ஆற்றோரமிருக்கும் ஒத்தையடிப் பாதையில் எனப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்திருக்கிறது தனிப்படை. அதற்குள் விடிந்துவிட்டது.

அஜித்குமார் மீது தாக்குதல்

அஜித்குமார் மீது தாக்குதல்

அடித்தே கொல்லப்பட்ட அஜித்குமார்... தாண்டவமாடிய ‘சைக்கோ’ தனிப்படை!

பல மணி நேரம் அடித்தும், யாருக்குமே நகை பற்றிய தகவல் தெரியவில்லை என்றதும், காவலர்கள் ‘சைக்கோ’போல மாறத் தொடங்கியிருக்கிறார்கள். மற்றவர்களை அனுப்பிவிட்டு, அஜித்குமாரிடம் மட்டும் தொடர்ந்து விசாரித்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் காவலர்களின் அடியைத் தாங்கிக்கொள்ள முடியாத அஜித்குமார், ‘மடப்புரம் காளி கோயிலுக்குப் பின்புறம் இருக்குற மாட்டுக் கொட்டகையில நகை இருக்கு சார்...’ என்றிருக்கிறார். கோயிலுக்கு அருகில் சென்றுவிட்டால், ஊர் மக்கள் எப்படியும் தன்னைக் காப்பாற்றிவிடுவார்கள் என நம்பி அப்படிச் சொல்லியிருக்கிறார். ஆனால், அங்கு வந்து தேடியவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றதும் ஆத்திரமாகி, பி.வி.சி பைப்பை எடுத்து அஜித்குமாரைச் சகட்டுமேனிக்குத் தாக்கியிருக்கிறார்கள். அஜித்குமார் அழுது புரண்டும் ‘சைக்கோ’ காவலர்கள் அவரை விடவில்லை.

அஜித்குமாரின் அலறல் சத்தம், சுற்றியிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் பலரையும் குலைநடுங்கச் செய்திருக்கிறது. எட்டிப்பார்க்கப் போனவர்களையும் மிரட்டி விரட்டியிருக்கிறது தனிப்படை. தண்ணீர் கேட்ட அஜித்குமாருக்கு, மிளகாய்ப்பொடியை வாயில் போட்டு தண்ணீரை ஊற்றியிருக்கிறார்கள். தொடர்ந்து தனிப்படை காட்டிய மிருகத்தனத்தால், மாலை 6 மணிக்கு மேல் நிலைகுலைந்துபோன அஜித்குமார், மாட்டுக் கொட்டகையிலேயே சரிந்து விழுந்திருக்கிறார். சிறுநீருடன் ரத்தமும் மலமும் வெளியேறி யிருக்கின்றன. அப்போதுதான் அடிப்பதை நிறுத்தியிருக்கிறார்கள். திடீரென நிசப்தமானவுடன், ஓடிப்போன பொதுமக்கள் அஜித்குமாரை ஆட்டோவில் தூக்கிப்போட்டு கிளினிக்குக்குக் கொண்டு செல்ல, உடன் தனிப்படையும் சென்றிருக்கிறது. ஆனால், ஆட்டோவிலேயே அஜித்குமாரின் உயிர் பிரிந்துவிட்டது.

சிறிது நேரத்தில், போலீஸ் தாக்குதலில் அஜித்குமார் இறந்துவிட்ட தகவல் கசிய, மடப்புரம் வியாபாரிகளும் பொதுமக்களும் கொதித்துப் போய்விட்டார்கள். உடனே, கோயிலைச் சுற்றி யிருந்த அத்தனை கடைகளும் அடைக்கப்பட்டன. திருப்புவனம் காவல் நிலையம் முன்பாக பொது மக்கள் கூடிவிட்டனர். அப்போது, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அஜித்குமாரின் உடலை வைத்திருந்தால் பிரச்னை பெரிதாகும் எனக் கருதி, மதுரை இராசாசி அரசு மருத்து வமனைக்கு உடலைக் கொண்டுபோய்விட்டது தனிப்படை.

ஸ்டாலின்

ஸ்டாலின்

சென்னையிலிருந்து வந்த உத்தரவு ஆளாய் பறந்த அரசு இயந்திரம்!

போலீஸ் அராஜகத்தில் ஓர் உயிர் பலியானது எவ்வளவு கொடூரமானதோ, அதைவிடக் கொடூரமானது இந்த விவகாரத்தை மூடி மறைக்க ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தி.மு.க-வும் செய்த அடாவடிகள். 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றே அஜித்குமாரின் உடலைப் பிரேத பரிசோதனை செய்து எரித்துவிட, படாத பாடுபட்டது காவல்துறை. ‘விடிந்தால் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் முறையிடப்படும். பல கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டி வரும். அதற்குள்ளாக உடலை எரித்துவிடுங்கள்...’ என்று சென்னையிலிருந்து பறந்துவந்த உத்தரவை நிறைவேற்ற, ஆளாய் பறந்தது அரசு இயந்திரம்.

அஜித்குமாரின் குடும்பத்தினரிடம், தி.மு.க-வின் சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறனும், அவரின் அடிப்பொடிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களோடு சேர்ந்து டி.எஸ்.பி சண்முகசுந்தரமும் கடுமையாக அழுத்தம் கொடுத்திருக்கிறார். அந்தக் குடும்பம் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கிறது. அதற்குள்ளாக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் அஜித்குமாரின் காவல் கொலையைக் கண்டித்துவிட்டன. விவகாரமும் பெரிதாகிக்கொண்டே போனது. அஜித்குமாரின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள், ரொம்பவும் ஜாக்கிரதையாக உடலிலிருந்த 44 காயங்களையும் ஆவணப்படுத்தி விட்டனர். இரவு 10 மணிக்கெல்லாம் உடலை திருப்புவனத்துக்குக் கொண்டுவந்து, கையோடு இருந்து உடல் எரிந்த பிறகுதான் கிளம்பியது போலீஸ்” என்று நடந்த சம்பவங்களை விரிவாகச் சொன்னார்கள்.

பிரஷர் கொடுத்த சீனியர் அதிகாரி யார்?

இந்தக் காவல் கொலை குறித்த செய்திகள் அனைத்தும் இப்போது வெட்டவெளிக்கு வந்துவிட்டன. இதில், காவல்துறையின் அலட்சியம், அதிகாரம், அத்துமீறல், திமிர், வன்முறை குறித்து ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன. ‘போலீஸ் தாக்குதலில் மகன் கொல்லப்பட்டதாக’ அஜித்குமாரின் தாயார் மாலதி அளித்த புகாரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாத காவல்துறை, கொலை செய்த தனிப்படைக்குத் தலைமை தாங்கிய காவலர் கண்ணன் அளித்த புகாரை மட்டும் பதிவுசெய்தது ஏன்... விசாரணையின்போது தப்பியோடப் பார்த்தார். தவறி விழுந்தவருக்கு வலிப்பு வந்துவிட்டது; அதில் இறந்துவிட்டார்’ எனக் கூசாமல் எப்படிப் பொய் சொன்னது போலீஸ்... நிகிதாவின் புகார் உண்மையானதா என்பதை விசாரிக்காமல், அவர் புகாரில் எஃப்.ஐ.ஆரும் போடாமல், அவசர அவசரமாகத் தனிப்படை விசாரிக்கச் சென்றது ஏன்... அவர்களுக்கு பிரஷர் கொடுத்த சீனியர் அதிகாரி யார்... அஜித்குமார் மீது குற்றப் பின்னணியோ, ஆதாரமோ இல்லாத நிலையில், இவ்வளவு கொடூரமாக அவரைத் தாக்கும் துணிச்சல் போலீஸுக்கு எப்படி வந்தது... இன்னும் கேள்விகள் வரிசைகட்டுகின்றன. ஆனால், யாரிடமும் பதில்தான் இல்லை.

“அரசு, தன் குடிமகனைக் கொலை செய்திருக்கிறது!”

அஜித்குமாரின் மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, கடந்த ஜூலை 1-ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளீட் ஆகியோரின் அமர்வில், அஜித்குமாருக்கு நடந்த போலீஸ் சித்ரவதைகள் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்படவும், கொதித்தெழுந்துவிட்டனர் நீதிபதிகள். குறிப்பாக, தமிழக அரசையும் காவல்துறையையும் விளாசியெடுத்துவிட்டார் நீதிபதி சுப்பிரமணியம். “தனிப்படை போலீஸாருக்கு ஆர்டர் போட்டது யார்..?” என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்ட நீதிபதி சுப்பிரமணியம், அரசு, தன் குடிமகனையே கொலை செய்திருக்கிறது” எனக் கொதித்தார். பதற்றமான அரசுத் தரப்பு, காவலர்கள் சஸ்பெண்ட் விவரங்களைக் குறிப்பிட்டதோடு, “சி.பி.ஐ விசாரணைக்கும் நாங்கள் தயார்” என்றது.

ஆனாலும் சாந்தமடையாத நீதிபதி, “இதைச் சாதாரண கொலை வழக்குப்போல விசாரிக்க முடியாது. மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் வழக்கின் விசாரணையை ஒப்படைக்கிறோம். அஜித்குமார் காவல் மரணம் குறித்து அவர் உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும். ஜூலை 8-ல் அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தன்னுடைய விசாரணையைத் தொடங்கியிருக்கிறார் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ். இதற்கிடையே, அஜித்குமார் காவல் மரண வழக்கை, சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியிருக்கிறது தமிழக அரசு.

31 கொடூரங்கள்! - முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை!

31 கொடூரங்கள்... எண்ணிக்கையற்ற வன்முறைகள்!

அஜித்குமாரின் காவல் மரணம் குறித்து, ‘மக்கள் கண்காணிப்பக’த்தின் இயக்குநர் ஹென்றி திபேனிடம் பேசினோம். “கடந்த நான்கு ஆண்டுகளில், 31 காவல் மரணங்கள் நடந்திருக்கின்றன. 2021-ம் ஆண்டில் 4 பேரும், 2022-ம் ஆண்டில் 11 பேரும், 2023-ல் ஒருவரும், 2024-ல் 10 பேரும், 2025-ம் ஆண்டில் இதுவரை 5 பேர் என மொத்தம் 31 பேர் காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், இந்த உயிரிழப்புகளை தமிழக காவல்துறையும் சிறைத்துறையும் ஒப்புக்கொள்வதில்லை. நாங்கள் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விசாரித்துத்தான் இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறோம். ‘31 மரணங்கள்’ என்று சொல்வதைவிட, அவற்றை ‘31 கொடூரங்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

காவல் மரணங்களின் எண்ணிக்கை இவ்வளவு என்றால், காவல்துறையால் கை கால்கள் உடைக்கப்பட்டவர்கள்...கண்கள், பற்களை இழந்தவர்கள்... உடல்நலம், மனநலம் குன்றியவர்களின் பட்டியலை எடுக்க முற்பட்டால், அதைக் கணக்கிட பல ஆண்டுகள் ஆகும். இந்திய சட்டப்படி, ‘டார்ச்சர்’ என்கிற செயலுக்குத் தண்டனை வழங்க, சட்டப் பிரிவுகள் இல்லை. அதனால்தான், காவல்துறையினரின் டார்ச்சரால் உயிரிழப்புகள் நடந்தால், அவை `கொலை’ என்கிற சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகின்றன. ‘லாக்கப் டெத்’ தொடர்பாகப் பதிவுசெய்யப்படும் வழக்குகளின் விசாரணை இழுத்தடிக்கப் படுகின்றன. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கை விசாரித்த நீதிபதிகளில் மூன்று பேர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதுவரை 252 நாள்கள் மட்டுமே விசாரணை நடந்திருக்கிறது. இவ்வாறு விசாரணை இழுத்தடிக்கப்படுவதால்தான், நீதி கிடைக்க, காலதாமதம் ஆகிறது.

அஜித்குமாரின் மரணத்தில் அதிக அளவு அக்கறை காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் நிலைய சித்ரவதைகளைத் தடுப்பது தொடர்பாகப் புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும், மாநில உரிமை ஆணையத்துக்கும் வரும் வழக்குகளின் விசாரணையையும் அரசு துரிதப்படுத்த வேண்டும்” என்றார்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

கிடப்பில் 14,000 வழக்குகள்... சிக்காத உயரதிகாரிகள்!

‘காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்க’த்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதத்திடம் பேசினோம். “ஏப்ரல் 18, 2022-ல், சென்னை தலைமைச் செயலகக் காவல் நிலையத்தில் விக்னேஷ் என்பவர் ‘லாக்கப் டெத்’தில் உயிரிழந்தார். அந்தக் காவல் மரணத்தைத் தவறான தகவலுடன் சட்டமன்றத்தில் பதிவுசெய்தார் முதல்வர் ஸ்டாலின். அடுத்த நாளே, மாற்றிப் பேசினார். அப்போதே, தனக்குத் தவறான தகவலை அளித்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படியான கொடூரங்கள் தொடர்ந்திருக்காது. ஏப்ரல் 2024-ல் மட்டுமே நான்கு மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வுப் பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. `கஸ்டடி டெத்’களுக்குக் காரணமாக இருக்கும் உயரதிகாரிகள் எந்தச் சம்பவத்திலும் சிக்குவதில்லை. அப்படியே சிக்கினாலும் அவர்கள் காப்பாற்றப்பட்டுவிடுகின்றனர். உதாரணமாக, விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கிய குற்றச்சாட்டில் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர்சீங் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ஆனாலும், அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில் ம.தி.மு.க நிர்வாகி வளையாபதி தொடர்புடைய வழக்கில், மாநில மனித உரிமை ஆணையமே ஏ.எஸ்.பி உதயகுமாருக்கு எதிராக உத்தரவிட்டது. அதன் பின்னரும், கொங்கு மண்டலத்தில் அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆறு ஆண்டுகளில், மாநில மனித உரிமை ஆணையத்தில் 14,000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன. ‘கஸ்டடி மரணங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை இருக்கும்’ என்ற பயம் இருந்தால் மட்டுமே, காவலர்களுக்கு அச்சம் வரும். இது போன்ற குற்றங்களும் நடக்காது” என்றார்.

தி.மு.க ஆட்சியில் நடந்த காவல் சித்ரவதைகள்..!

கடந்த நான்கு ஆண்டுக்கால தி.மு.க ஆட்சியில், 24 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகச் சொல்கின்றன எதிர்க்கட்சிகள். ‘31 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன’ என அடித்துச் சொல்கிறார் வழக்கறிஞர் ஹென்றி திபேன். ஆனால், காவல்துறை தரப்பிலிருந்து முதல்வருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில், ‘2021-ல் இரண்டு மரணங்களும், 2022-ல் ஒரு மரணமும், 2023, 2024 ஆண்டுகளில் எந்த மரணமும் நிகழவில்லை. 2025-ல் இப்போதுதான் அஜித்குமார் மரணம் நிகழ்ந்திருக்கிறது’ எனக் கூறியிருக்கிறார்கள். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்த்தால் பரவாயில்லை, பூசணிக்காய்த் தோட்டத்தையே சோற்றில் மறைக்கப் பார்க்கிறது காவல்துறை.

திருட்டு வழக்கின் விசாரணைக்காக அழைத்துச் சென்று, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் இடது காலை இரும்பு ராடால் அடித்து உடைத்தது ஊட்டி ஊரகக் காவல்துறை. மணல் கடத்தலைத் தடுக்க முற்பட்ட இளைஞர் விஜய்யை, கண்மூடித்தனமாகத் தாக்கிய புகாரில் சிக்கினார் வேலூர் மாவட்டம், விருத்தம்பட்டு காவல் நிலைய எஸ்.ஐ ஆதர்ஷ். புதுக்கோட்டை பெரியார் நகரில், போதை ஊசி பயன்படுத்தியதாக விக்னேஷ்வரன் என்ற இளைஞரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், பிணமாகத்தான் அவரை திருப்பிக் கொடுத்தனர்.கோவை சரவணம்பட்டியில், ஜெயக்குமார் என்பவரை நான்கு நாள்கள் சட்டவிரோத கஸ்டடியில் வைத்து போலீஸார் தாக்கியதில், ஜெயக்குமாரின் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. புகாரளித்தும், தாக்கிய போலீஸார்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. திருப்பூர் மாவட்டம், சேமலைக்கவுண்டம் பாளையத்தில், ஒரு கொலை வழக்கில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற அவிநாசி காவல் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை, ஹரிதாஸை மூன்று நாள்கள் காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கினார். அதில் அவருக்கு உடல்நலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இவையெல்லாம், கடந்த நான்கு ஆண்டு தி.மு.க ஆட்சியில் நடந்த கொடூரங்களின் மீச்சிறு துளிதான். பெரிய லிஸ்ட் நம்மிடமிருக்கிறது.

ஹென்றி திபேன்,  ஆசீர்வாதம்

ஹென்றி திபேன், ஆசீர்வாதம்

முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை?

இந்தப் பிரச்னைகள் குறித்து நம்மிடம் பேசிய சீனியர் அதிகாரிகள் சிலர், “முதல்வருக்குச் சரியான தகவல்களை உயரதிகாரிகள் தெரியப்படுத்துவதில்லை. ‘சரியான தகவல்களைத் தராத அதிகாரிகளை முதல்வர் ஏன் முக்கியப் பொறுப்பில் வைத்திருக்கிறார்... முதல்வர் கையில்தான் காவல்துறை இருக்கிறதா..?’ என்கிற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. ஏனென்றால், துறையில் சில குறிப்பிட்ட அதிகாரிகள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. சிலருக்கு அளவற்ற அதிகாரம் தரப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சமூகம், மாவட்ட அரசியல், கட்சிப் புள்ளிகளின் தொடர்புகள்; உறவுகள் எனக் காவல்துறைக்குள் முதல்வருக்குத் தெரியாத தனி ராஜாங்கமே நடக்கிறது. இதையெல்லாம் முதல்வர் கவனிப்பதே இல்லை. அஜித்குமாரின் மரணம் தந்த அதிர்வே அடங்காத நிலையில், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் நடத்திய போராட்டத்தில், ‘மரியாதையா போயிடுங்க, இல்லைன்னா வேற மாதிரி ஆகிடும்’ என ஓப்பன் மைக்கில் மிரட்டுகிறார் விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணன். ராஜேஸ் தாஸ் விவகாரத்தில், ஒரு பெண் எஸ்.பி-யை மிரட்டி சஸ்பெண்டான கண்ணன், தற்போது பொதுமக்களை மிரட்டுகிறார். இந்த அளவுக்கு, அவருக்கு அதிகாரமும் தைரியமும் அளித்தது யார்..?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய சைலேஷ் குமாருக்கு, பதவி உயர்வு வழங்க தன்னிடம் கோப்பு வந்தபோதே, அதை வீசி எறிந்திருக்க வேண்டும் முதல்வர். அந்தக் கோப்பை தயாரித்தவர்கள் அனைவரையும் பந்தாடியிருக்க வேண்டும். அதைச் செய்யாததன் விளைவு, காவல்துறையின் ராஜ்ஜியமாக தி.மு.க அரசாங்கம் மாறிப்போய்விட்டது. இனியும் முதல்வர் சுதாரிக்கவில்லை என்றால், ஆட்சிக்கு அவப்பெயர் கூடிக்கொண்டே தான் போகும்” என்றனர்.

காவல்துறை அதிகாரிகள், தன் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டிருப்பதை இப்போதாவது முதல்வர் உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. அஜித்குமாரின் தம்பிக்குக் கொடுக்கப்பட்ட ஆவின் வேலையும், அவர் அம்மாவுக்கு அளித்த இலவச வீட்டுமனைப் பட்டாவும் ஆட்சியின் பெயரைக் காப்பாற்றிவிடும் என நம்பிக்கொண்டிருக்கிறார் முதல்வர். ஆனால் மக்கள், காவல்துறையின் அராஜகத்தால் வெகுண்டு போயிருக்கிறார்கள். ‘முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை?’ எனக் கேட்கிறார்கள். அவர்களின் கோபமும், விமர்சனமும், வெறுப்பும் சரியான சமயத்தில்... இந்த ஆட்சிமீதும், முதல்வர் மீதும்தான் வெளிப்படும் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவின் முரட்டு முட்டு

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, புலவர் said:

மருத்துவரும், நடிகைகையுமான சர்மிளா சொன்னது சரி வரும் போல இருக்கே…

பாடகியும் ஆன சர்மிளா!

https://www.facebook.com/share/v/1BmLTVBYiY/?mibextid=wwXIfr

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புலவர் said:

மேற்கு நாடுகளில் இதுபோல் நடந்திருந்தால் இதற்குப் பொறுப்பேற்று பிரதமரே பதவி விலகியிருப்பார்.

நீங்களும் கஞ்சா கப்ஸா கதைகள் சொல்ல ஆரம்பித்து விட்டீர்களா?🤣.

George Floyd கொலையில் எந்த அமெரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

பாடகியும் ஆன சர்மிளா!

https://www.facebook.com/share/v/1BmLTVBYiY/?mibextid=wwXIfr

அவர் பாடகி…

நடிகை….

மருத்துவர்….,

நக்கல் அடிக்கும் நாம்?🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகிதா புகாருடன் முரண்படும் முதல் தகவல் அறிக்கை - காவலாளி வழக்கில் என்ன நடக்கிறது?

சிவகங்கை, திருப்புவனம், அஜித் குமார், காவல் மரணம், விசாரணை

கட்டுரை தகவல்

  • பிரபுராவ் ஆனந்தன்

  • பிபிசி தமிழுக்காக

  • 6 ஜூலை 2025

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்தது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின் பெயரில் மாவட்ட நீதிபதியின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காவலாளி அஜித் குமாருக்கு எதிராக நகையை காணவில்லை என மனுதாரர் நிகிதா அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதாக குற்றம்சாட்டு வைக்கும் அஜித் குமார் தரப்பு வழக்கறிஞர்கள் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், வரும் 8ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் கடந்த 2-ம் தேதி முதல் திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தங்கியிருந்து நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

தற்போது வரை யாரெல்லாம் விசாரிக்கப்பட்டுள்ளார்கள்?

சிவகங்கை, திருப்புவனம், அஜித் குமார், காவல் மரணம், விசாரணை

படக்குறிப்பு, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்

முதல் மூன்று நாட்கள் நடந்த விசாரணையின் போது, ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோவில் அலுவலர் பெரியசாமி, அஜித்குமாரை தாக்கியது தொடர்பான வீடியோவை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், கோயில் பணியாளர்கள் பிரபு, கார்த்திக் ராஜா, அஜித் குமாரின் தாயார் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், ஆட்டோ ஓட்டுநர் அய்யனார், அஜித் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சதாசிவம், ஏஞ்சல் உள்ளிட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

நான்காவது நாளான வெள்ளிக்கிழமை காலை நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் திருப்புவனம் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். அஜித் குமார் மீதான நிகிதாவின் புகார் மனு, அந்தப் புகாரை பதிவு செய்த ஆவணத்தை ஆய்வு செய்த அவர், சம்பவத்தன்று பணியில் இருந்த போலீஸாரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.

பின்னர், நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகைக்கு வந்த நீதிபதி, சிவகங்கை ஏடிஎஸ்பி சுகுமாறனிடம் விசாரித்தார். தொடர்ந்து, திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ. சிவக்குமார், அன்று பணியில் இருந்த போலீஸ்காரர் இளையராஜா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தார்.

இதையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்திடமும் விசாரணை நடத்தினார்.

முதல் தகவல் அறிக்கையில் என்ன உள்ளது?

சிவகங்கை, திருப்புவனம், அஜித் குமார், காவல் மரணம், விசாரணை

படக்குறிப்பு,திருப்புவனம் காவல் நிலையம்

நிகிதாவின் புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் முரண்பட்டதாக உள்ளதாகவும், அறிக்கையின் அடிப்படையில் சட்டத்திற்கு புறம்பாக அஜித் குமார் உட்பட ஐந்து இளைஞர்களை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அடித்தது தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா.

புகார் மனுவில் உள்ள நேரமும் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நேரமும் வேறு வேறாக உள்ளது என்கிறார் கார்த்திக் ராஜா. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசியவர், " முதல் தகவல் அறிக்கையில் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நகை காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிகிதா கொடுத்த புகார் மனுவில் காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து தானும் (நிகிதா) அம்மா சிவகாமியும் கோவிலுக்குப் புறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்."

முதல் தகவல் அறிக்கையில் குளறுபடிகளா?

சிவகங்கை, திருப்புவனம், அஜித் குமார், காவல் மரணம், விசாரணை

படக்குறிப்பு, அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா.

நிகிதா 27ம் தேதி இரவு அளித்த பேட்டியில். காவலாளி சீருடையில் இருந்த அஜித் குமார் , தனது தாய்க்கு சக்கர நாற்காலியை எடுத்து வந்து கொடுத்தற்காக ரூ.500 கொடுக்க வேண்டும் என வாக்குவாதம் செய்ததாகவும், கோவிலில் இருந்து வீடு திரும்பிய பின்னர் காரில் இருந்த நகை காணாமல் போனதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் நிகிதா அளித்த புகார் மனுவில் உயிரிழந்த அஜித்குமார் 500 ரூபாய் கேட்டதாக குறிப்பிடப்படவில்லை என்கிறார் கார்த்திக் ராஜா. தொடர்ந்து பேசிய அவர். "நிகிதா 27ஆம் தேதி காலை 11 மணிக்கு கோவிலுக்கு வந்து சென்றுள்ளார். நகை காணாமல் போனதாக 3 மணிக்கு திருப்புவனம் காவல் நிலையத்தில் வாய் மொழியாக முதலில் புகார் அளித்துள்ளார். பிறகு இரவு 7 மணிக்கு வழக்கறிஞர் ஒருவர் உதவியுடன் புகார் மனு அளித்துள்ளார்."

"எனவே முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முரண்பட்ட தகவல்கள் உள்ளன. நீதிமன்றத்தில் அஜித் குமார் கொல்லப்பட்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு திருப்புவனம் காவல்துறையினரால் தாமதமாக அவசரகதியில் தயாரிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையாக இதனை நான் பார்க்கிறேன்." என்று கூறினார்.

இந்த வழக்கில் நிகிதாவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார். "உயிரிழந்த அஜித் குமார் மீது இதுவரை எந்த காவல் நிலையத்திலும் குற்ற பின்னணி இல்லை, ஆனால் புகார் அளித்த நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. அஜித்குமார் மரணத்தில் தற்போது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மாற்றி எதிரியாக நிகிதாவை சேர்க்க வேண்டும்" என்றார்.

சட்டத்திற்குப் புறம்பாக விசாரித்துள்ளனரா?

சிவகங்கை, திருப்புவனம், அஜித் குமார், காவல் மரணம், விசாரணை

பட மூலாதாரம்,HENRI TIPHAGNE

படக்குறிப்பு, மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன்

நிகிதா புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிபிசி தமிழிடம் பேசிய மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர். "நகை காணவில்லை என்பது தொடர்பாக 27 ஆம் தேதி 3 மணிக்கு நிகிதா புகார் அளித்ததாகவும் அது தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது."

"முதல் கட்ட விசாரணை தொடங்கிய திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் திருக்கோயில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அஜித் குமாரை விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்ததன் அடிப்படையில் அஜித் குமார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்றிருக்கிறார்."

"காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த அஜித் குமார் காணாமல் போன நகை தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது தான் எடுக்கவில்லை என தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், நிகிதா இரவு 7 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையத்தின் முன்பு நின்று கொண்டு ஊடகங்களுக்கு காரில் வைத்திருந்த நகையைக் காணவில்லை, நகையை காவலாளி அஜித் குமார் திருடியதாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்." என்று தெரிவித்தார்

நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறிய டிஎஸ்பி

சிவகங்கை, திருப்புவனம், அஜித் குமார், காவல் மரணம், விசாரணை

பட மூலாதாரம்,NIKITHA

படக்குறிப்பு, நிகிதா

திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்திருந்த மானாமதுரை டி.எஸ்.பி சிறப்பு தனிப்படை போலீசாரை அழைத்து அஜித் குமாரை விசாரிக்குமாறு ஒப்படைத்துள்ளார்.

ஒப்படைக்கப்பட்ட அஜித் குமாரை காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சிறப்பு தனிப்படை சார்பு ஆய்வாளர் பிரதாப் விடுப்பில் இருந்தால் தனிப்படை தலைமைக் காவலர் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரத்தை அழைத்து அஜித் குமார் தொடர்பாக தகவல்களை அளித்ததாக அஜித் குமார் இறப்பு தொடர்பாக தனிப்படை தலைமைக் காவலர் கண்ணன் அளித்துள்ள புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.எஸ்.பி அஜித் குமாரை விசாரிக்க அனுமதி அளித்தன் அடிப்படையில் அஜித்குமாரை 27ஆம் தேதி இரவு கடுமையாக தாக்கியுள்ளனர் என்கிறார் ஹென்றி திபென்

அஜித் குமார் நகையை தான் திருடவில்லை எனச் சொல்வதாக தலைமை காவலர் மீண்டும் டிஎஸ்பியை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அதற்கு டி.எஸ்.பி சண்முகசுந்தரம் அஜித் குமாரை "நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறியுள்ளார்".

தொடர்ந்து பேசிய அவர், "டி.எஸ்.பி உத்தரவின் பெயரில் சம்மன் அளிக்காமல் அருண்குமார், அஜித் குமார் மற்றும் அவரின் தம்பி நவீன் குமாரையும் விசாரணைக்கு அழைத்து வந்து கடுமையாக போலீசார் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் 28ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நிகிதா கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது."

"அப்படியெனில் சட்டத்திற்கு புறம்பாக வழக்குப்பதிவு செய்யப்படாமல் மூன்று இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்து இரவு முழுவதும் கடுமையாக தாக்கியது முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே நிகிதாவின் முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது." என்றார்.

"காவல் அதிகாரிகளை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை?"

ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென்.

"அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்து செல்ல போலீசாருக்கு உத்தரவிட்ட திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் இதுவரை ஏன் வழக்கில் சேர்த்து அவர்களை கைது செய்யவில்லை என்ற கேள்வி நிகிதாவின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் எழுகிறது" என அவர் விவரித்தார்.

உடற்கூராய்வுக்கு அனுப்ப ஏற்பட்ட காலதாமதம் குறித்தும் கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென்.

"28 ஆம் தேதி மாலை அஜித்குமார் உயிரிழந்ததாக காவல் ஆய்வாளர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த நிலையில் 29ஆம் தேதி மாலை வரை உடற்கூராய்வுக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்ததற்கு என்ன காரணம் என்று பல்வேறு கேள்விகள் எழுகிறது" என்றார்.

"2011 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு மோசடி வழக்குகள் உள்ள நிகிதாவை ஏன் காவல்துறை இதுவரை அழைத்து விசாரிக்கவில்லை" என்ற கேள்வி எழுவதாக கூறுகிறார் மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c939xwd2z69o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/7/2025 at 12:45, goshan_che said:

வழக்கை மத்திய அரசின் கீழ் உள்ள புலனாய்வு அமைப்பான சி பி ஐக்கு 3 நாளுக்கு முன்பே மாற்றியாகி விட்டது. அவர்கள் எந்த மாநில அரசின் அளுத்தமும் இன்றி எவரையும் உலுக்கலாம். அப்படி உலுக்கி முடிவு வரட்டுமே?

அதுவரை பொறுக்காமல் அமைச்சராம், அவராம், இவராம் என ஊகம் பரப்புவது கொலையை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே.

இனியென்ன..... அஜித்குமார் செய்திகளும் சூடான விவாதங்களும் அடங்கி விட்டது. வழமை போல கரண்ட் வயர் கடித்து தற்கொலை செய்த சம்பவமும்.மாடியால் விழுந்து தற்கொலை செய்த மாணவியின் சம்பவமும் போல.....

இந்திய அரசியலும் அதிலும் பிரத்தியேகமாக தமிழ்நாட்டு அரசியல் நடைமுறைகளும் அதன் கிளை அரசியல் அடாவடிகளின் நடவடிக்கைகள் தெரியாமல் கண்டபடி விவாதிக்கும் பாலகர் நீவீர்.

ஒருவர் செய்த குற்றத்திற்காக அப்பாவிகளை தேடி பிடித்து குற்றவாளிகளாக்கும் நாடு அது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இங்க கனபேர் கூட்டமாச்சேர்ந்து திமுகாவிற்கு நல்லா முட்டுக்குடுக்கினம் பாருங்கோ சாமியார்!!

ஈவேராவின் பக்தர்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இந்தியாவும் தமிழ் நாடும் அப்படித்தான் ஐயா, பெரியவரே.

ஆனால் பாலகன் நான் சொல்ல வந்தது - இப்படியான கொலைகள் நடக்கும் போது முன்னர் இருந்த அரச அலட்சியம் இங்கே இல்லை.

மாறாக ஒரு மாநில அரசு செய்ய கூடிய, வேண்டியதை தா நா அரசு செய்துள்ளது.

6 hours ago, Eppothum Thamizhan said:

இங்க கனபேர் கூட்டமாச்சேர்ந்து திமுகாவிற்கு நல்லா முட்டுக்குடுக்கினம் பாருங்கோ சாமியார்!!

ஈவேராவின் பக்தர்கள்!!

🤣 ஈ வே ரா வோ….

வே. பி யோ….

நல்லதை நல்லதெனவும், அல்லதை அல்ல எனவும் சொல்லியே பழக்கம்.

அப்படி சொல்லும் போது எந்த வண்ணத்தை எவர் தீட்டினாலும் பரவாயில்லை 🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருப்புவனம் கோவில் காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒரு ஆதாரமா? புதிய வீடியோவால் சர்ச்சை

சிவகங்கை, திருப்புவனம், அஜித் குமார், காவல் மரணம், விசாரணை

கட்டுரை தகவல்

  • பிரபுராவ் ஆனந்தன்

  • பிபிசி தமிழுக்காக

  • 6 ஜூலை 2025

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மடப்புரம் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. அஜித்குமார் உயிரிழந்த பிறகு, அவரது தம்பியை அதிகாலையில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஜூன் 28-ம் தேதி அதிகாலை 5.38 மணி அளவில் பதிவானதாக கூறப்படும் அந்த சிசிடிவி காட்சியில், வெள்ளை நிற போலீஸ் வேன் ஒன்று வந்து நிற்கிறது. அந்த வாகனத்தில் அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் ஏறும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சியில், லுங்கி அணிந்தபடி நவீன் குமாரை அழைத்துச் சென்ற நபர் சீருடை அணியாமல் வந்த காவலர் என்று கூறப்படுகிறது.

நகை திருட்டுப் புகாரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஜூலை 8-ம் தேதி நீதிபதியின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை மாநில காவல்துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்ற முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதனை கொலை வழக்காக பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நிகிதா புகாருடன் முரண்படும் முதல் தகவல் அறிக்கை

காவலாளி அஜித் குமாருக்கு எதிராக நகையை காணவில்லை என மனுதாரர் நிகிதா அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியிருந்தது. இதில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதாக குற்றம்சாட்டு வைக்கும் அஜித் குமார் தரப்பு வழக்கறிஞர்கள் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், ஜூலை 8ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் கடந்த 2-ம் தேதி முதல் திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தங்கியிருந்து நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வந்தார்.

நீதிபதி விசாரணை: யாரெல்லாம் விசாரிக்கப்பட்டுள்ளார்கள்?

சிவகங்கை, திருப்புவனம், அஜித் குமார், காவல் மரணம், விசாரணை

படக்குறிப்பு, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்

முதல் மூன்று நாட்கள் நடந்த விசாரணையின் போது, ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோவில் அலுவலர் பெரியசாமி, அஜித்குமாரை தாக்கியது தொடர்பான வீடியோவை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், கோயில் பணியாளர்கள் பிரபு, கார்த்திக் ராஜா, அஜித் குமாரின் தாயார் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், ஆட்டோ ஓட்டுநர் அய்யனார், அஜித் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சதாசிவம், ஏஞ்சல் உள்ளிட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

நான்காவது நாளான வெள்ளிக்கிழமை காலை நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் திருப்புவனம் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். அஜித் குமார் மீதான நிகிதாவின் புகார் மனு, அந்தப் புகாரை பதிவு செய்த ஆவணத்தை ஆய்வு செய்த அவர், சம்பவத்தன்று பணியில் இருந்த போலீஸாரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.

பின்னர், நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகைக்கு வந்த நீதிபதி, சிவகங்கை ஏடிஎஸ்பி சுகுமாறனிடம் விசாரித்தார். தொடர்ந்து, திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ. சிவக்குமார், அன்று பணியில் இருந்த போலீஸ்காரர் இளையராஜா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தார்.

இதையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்திடமும் விசாரணை நடத்தினார்.

முதல் தகவல் அறிக்கையில் என்ன உள்ளது?

சிவகங்கை, திருப்புவனம், அஜித் குமார், காவல் மரணம், விசாரணை

படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம்

நிகிதாவின் புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் முரண்பட்டதாக உள்ளதாகவும், அறிக்கையின் அடிப்படையில் சட்டத்திற்கு புறம்பாக அஜித் குமார் உட்பட ஐந்து இளைஞர்களை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அடித்தது தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா.

புகார் மனுவில் உள்ள நேரமும் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நேரமும் வேறு வேறாக உள்ளது என்கிறார் கார்த்திக் ராஜா. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசியவர், " முதல் தகவல் அறிக்கையில் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நகை காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிகிதா கொடுத்த புகார் மனுவில் காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து தானும் (நிகிதா) அம்மா சிவகாமியும் கோவிலுக்குப் புறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்."

முதல் தகவல் அறிக்கையில் குளறுபடிகளா?

சிவகங்கை, திருப்புவனம், அஜித் குமார், காவல் மரணம், விசாரணை

படக்குறிப்பு, அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா.

நிகிதா 27ம் தேதி இரவு அளித்த பேட்டியில். காவலாளி சீருடையில் இருந்த அஜித் குமார் , தனது தாய்க்கு சக்கர நாற்காலியை எடுத்து வந்து கொடுத்தற்காக ரூ.500 கொடுக்க வேண்டும் என வாக்குவாதம் செய்ததாகவும், கோவிலில் இருந்து வீடு திரும்பிய பின்னர் காரில் இருந்த நகை காணாமல் போனதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் நிகிதா அளித்த புகார் மனுவில் உயிரிழந்த அஜித்குமார் 500 ரூபாய் கேட்டதாக குறிப்பிடப்படவில்லை என்கிறார் கார்த்திக் ராஜா. தொடர்ந்து பேசிய அவர். "நிகிதா 27ஆம் தேதி காலை 11 மணிக்கு கோவிலுக்கு வந்து சென்றுள்ளார். நகை காணாமல் போனதாக 3 மணிக்கு திருப்புவனம் காவல் நிலையத்தில் வாய் மொழியாக முதலில் புகார் அளித்துள்ளார். பிறகு இரவு 7 மணிக்கு வழக்கறிஞர் ஒருவர் உதவியுடன் புகார் மனு அளித்துள்ளார்."

"எனவே முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முரண்பட்ட தகவல்கள் உள்ளன. நீதிமன்றத்தில் அஜித் குமார் கொல்லப்பட்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு திருப்புவனம் காவல்துறையினரால் தாமதமாக அவசரகதியில் தயாரிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையாக இதனை நான் பார்க்கிறேன்." என்று கூறினார்.

இந்த வழக்கில் நிகிதாவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார். "உயிரிழந்த அஜித் குமார் மீது இதுவரை எந்த காவல் நிலையத்திலும் குற்ற பின்னணி இல்லை, ஆனால் புகார் அளித்த நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. அஜித்குமார் மரணத்தில் தற்போது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மாற்றி எதிரியாக நிகிதாவை சேர்க்க வேண்டும்" என்றார்.

சட்டத்திற்குப் புறம்பாக விசாரித்துள்ளனரா?

சிவகங்கை, திருப்புவனம், அஜித் குமார், காவல் மரணம், விசாரணை

பட மூலாதாரம்,HENRI TIPHAGNE

படக்குறிப்பு, மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன்

நிகிதா புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிபிசி தமிழிடம் பேசிய மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர். "நகை காணவில்லை என்பது தொடர்பாக 27 ஆம் தேதி 3 மணிக்கு நிகிதா புகார் அளித்ததாகவும் அது தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது."

"முதல் கட்ட விசாரணை தொடங்கிய திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் திருக்கோயில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அஜித் குமாரை விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்ததன் அடிப்படையில் அஜித் குமார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்றிருக்கிறார்."

"காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த அஜித் குமார் காணாமல் போன நகை தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது தான் எடுக்கவில்லை என தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், நிகிதா இரவு 7 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையத்தின் முன்பு நின்று கொண்டு ஊடகங்களுக்கு காரில் வைத்திருந்த நகையைக் காணவில்லை, நகையை காவலாளி அஜித் குமார் திருடியதாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்." என்று தெரிவித்தார்

நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறிய டிஎஸ்பி

சிவகங்கை, திருப்புவனம், அஜித் குமார், காவல் மரணம், விசாரணை

பட மூலாதாரம்,NIKITHA

படக்குறிப்பு, நிகிதா

திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்திருந்த மானாமதுரை டி.எஸ்.பி சிறப்பு தனிப்படை போலீசாரை அழைத்து அஜித் குமாரை விசாரிக்குமாறு ஒப்படைத்துள்ளார்.

ஒப்படைக்கப்பட்ட அஜித் குமாரை காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சிறப்பு தனிப்படை சார்பு ஆய்வாளர் பிரதாப் விடுப்பில் இருந்தால் தனிப்படை தலைமைக் காவலர் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரத்தை அழைத்து அஜித் குமார் தொடர்பாக தகவல்களை அளித்ததாக அஜித் குமார் இறப்பு தொடர்பாக தனிப்படை தலைமைக் காவலர் கண்ணன் அளித்துள்ள புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.எஸ்.பி அஜித் குமாரை விசாரிக்க அனுமதி அளித்தன் அடிப்படையில் அஜித்குமாரை 27ஆம் தேதி இரவு கடுமையாக தாக்கியுள்ளனர் என்கிறார் ஹென்றி திபென்

அஜித் குமார் நகையை தான் திருடவில்லை எனச் சொல்வதாக தலைமை காவலர் மீண்டும் டிஎஸ்பியை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அதற்கு டி.எஸ்.பி சண்முகசுந்தரம் அஜித் குமாரை "நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறியுள்ளார்".

தொடர்ந்து பேசிய அவர், "டி.எஸ்.பி உத்தரவின் பெயரில் சம்மன் அளிக்காமல் அருண்குமார், அஜித் குமார் மற்றும் அவரின் தம்பி நவீன் குமாரையும் விசாரணைக்கு அழைத்து வந்து கடுமையாக போலீசார் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் 28ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நிகிதா கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது."

"அப்படியெனில் சட்டத்திற்கு புறம்பாக வழக்குப்பதிவு செய்யப்படாமல் மூன்று இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்து இரவு முழுவதும் கடுமையாக தாக்கியது முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே நிகிதாவின் முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது." என்றார்.

"காவல் அதிகாரிகளை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை?"

ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென்.

"அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்து செல்ல போலீசாருக்கு உத்தரவிட்ட திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் இதுவரை ஏன் வழக்கில் சேர்த்து அவர்களை கைது செய்யவில்லை என்ற கேள்வி நிகிதாவின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் எழுகிறது" என அவர் விவரித்தார்.

உடற்கூராய்வுக்கு அனுப்ப ஏற்பட்ட காலதாமதம் குறித்தும் கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென்.

"28 ஆம் தேதி மாலை அஜித்குமார் உயிரிழந்ததாக காவல் ஆய்வாளர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த நிலையில் 29ஆம் தேதி மாலை வரை உடற்கூராய்வுக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்ததற்கு என்ன காரணம் என்று பல்வேறு கேள்விகள் எழுகிறது" என்றார்.

"2011 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு மோசடி வழக்குகள் உள்ள நிகிதாவை ஏன் காவல்துறை இதுவரை அழைத்து விசாரிக்கவில்லை" என்ற கேள்வி எழுவதாக கூறுகிறார் மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c939xwd2z69o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.