Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உன்னால் முடியும் தம்பி

--------------------------------------

large.ReturnFlightFromToronto.jpg

இவ்வளவு மலிவாக விமானச்சீட்டை வாங்கி விட்டோமே என்ற சந்தோசம் அமெரிக்காவிலிருந்து கனடா வந்த விமானப் பயணத்திலேயே தொலைந்து போயிருந்தது. அது இன்னொரு கதை. இது அதே மலிவு விலையில் கனடாவிலிருந்து திரும்பி அமெரிக்கா போகும் கதை. 

எங்கள் நான்கு பேர்களுக்கும் விமானத்தின் நாலு இடங்களில் நடு இருக்கைகளை கொடுத்திருந்தார்கள். கனடா விமான நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கைகளை மாற்ற முற்படும் போது, ஒவ்வொரு புது இருக்கைக்கும் பயணச்சீட்டுக்கு கொடுத்திருந்த அளவில் கட்டணம் மீண்டும் கேட்டார்கள். சரி, விமானநிலையத்தில் போய் இலவசமாகக் கேட்டுப் பார்ப்போம் என்று விமான நிலையம் போய்ச் சேர்ந்தோம். கீழே நின்றவர்கள் பெட்டிகளை மட்டும் வாங்கிக் கொண்டார்கள். இருக்கைகள் அவர்களின் பொறுப்பில் வருவதில்லை என்றும், புறப்படும் கதவில் போய் கேளுங்கள் என்றும் சொன்னார்கள். கதவில் நின்ற அழகான, பணிவான பெண்ணிடம் அவரை விட பணிவாக நான் கேட்டேன். சிறிது நேரம் கணினியில் அவர் சுற்றிப் பார்த்தார். பின்னர் இருப்பதெல்லாம் நடு இருக்கைகள் மட்டுமே, அவை கூட முன்னுக்கு பின்னாகவும் இல்லை என்றார். 

விமானம் விழுந்தால், கடைசிக் கணத்தில் நால்வரும் தனித்தனியாக விழப் போகின்றோமே என்ற கவலையும், அக்கம் பக்கம் சரிந்து அடுத்தவர்கள் தோள்களில் விழாமல் தூங்கி வழியவேண்டுமே என்ற யோசனையுடனும் என்னுடைய நடு இருக்கையில் அமர்ந்தேன்.

வலக்கை பக்கம் ஒரு பெரிய பெண் வந்து இருந்தார். இடைக்கை பக்கம் ஒரு பெரிய ஆண் வந்து இருந்தார். என்னுடைய கைகளை இன்னும் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டேன். சமீபத்தில் ஒரு இந்தியர் விமானப் பயணத்தின் போது அருகில் இருந்த பெண்ணுடன் ஏதோ செய்து கைது செய்யப்பட்டிருந்தார். கைபடாமல் இருக்க வேண்டும். அந்தப் பெண் ஏதோ எடுத்துக் கொண்டு என் பக்கம் திரும்பினார். அவரின் பெரிய கை என் விலாவில் நேராக இறங்கியது. 'மன்னிக்கவும், மன்னிக்கவும்............' என்று பதறினார். இடைக்கை பக்கம் அமர்ந்திருந்தவர் மடியில் ஒரு புத்தகம் வைத்திருந்தார், 'The Road To Character' என்று புத்தகத்தின் தலைப்பு இருந்தது. இந்த புத்தகத்தை பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. அதில் இருந்த எழுத்தாளர் பெயரும் கொஞ்சம் கூட பரிச்சயமற்றது.

அருகில் இருந்த பெண்ணின் முன்னால் இருந்த சிறிய திரை அப்படியே உறைந்து போய் நின்று கொண்டிருந்தது. அவர் அந்த திரையில் ஒவ்வொரு புள்ளியையும் தனது விரல்களால் அமத்தினார். திரை அசையவே இல்லை. ஒரு விமான பணிப்பெண்ணைக் கூப்பிட்டார். விமானத்தின் இந்தப் பகுதியில் நடுவில் இருந்து வலப்பக்க முடிவு வரை உள்ள எவருக்கும் திரை வேலை செய்யவில்லை என்றார் பணிப்பெண். அங்கே பாருங்கள், இவருடையை திரை கூட வேலை செய்யவில்லை என்று என் முன்னால் இருந்த திரையைக் காட்டினார். நான் பணிப்பெண்ணைப் பார்த்தேன். பணிப்பெண் என்னுடைய திரையைப் பார்த்தார். அருகில் இருந்த பெண் திரையையும் என்னையும் பார்த்தார். நான் அந்த திரையை ஒரு தடவை கூட தொட்டிருக்கவில்லை. அது அப்படியே இருட்டாகவே இருந்தது. சரிசெய்துவிடுகின்றோம் என்றபடியே பணிப்பெண் அங்கிருந்து மெதுவாக நகர்ந்தார். 

எனக்கு இரண்டு பக்கமும் இருந்தவர்கள் பெரும் குடும்பங்களாக வந்திருந்தார்கள். குழந்தைகள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என்று இரு பக்கங்களும் கூட்டங்களாக இருந்தார்கள். அமெரிக்காவை சுற்றிப் பார்க்கப் போகின்றார்கள் என்று அவர்களின் உரையாடல்களில் இருந்து தெரியவந்தது. கொஞ்சம் துணிந்தவர்கள் போல. அதிபர் ட்ரம்பையும் மீறி இவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்கா வந்து கொண்டிருக்கின்றார்கள்.

இடக்கை பக்கம் இருந்தவரின் இரண்டு வயதான குழந்தை ஒன்று மிகவும் சந்தோசத்துடன் முன்னுக்கு இருந்த இருக்கையை கால்களால் உதைத்துக் கொண்டேயிருந்தது. சிறிது நேரம் போக, உதை வாங்கிக் கொண்டிருந்தவர், அவர் ஒரு இந்திய பெண்மணி, எழும்பி வந்தார். குனிந்து மெதுவாக அவர்களிடம் ஏதோ சொன்னார். சிரித்துக் கொண்டே உதைக்கும் இரண்டு வயது குழந்தை இப்பொழுது இடம் மாற்றப்பட்டது. தந்தையின் மடியில் அந்தப் புத்தகத்தின் மேல் அமர வைக்கப்பட்டார். எனக்கும் பின்னால் இருந்து இன்னொரு குழந்தையிடம் இருந்து உதைகள் விழுந்து கொண்டேயிருந்தது. பரவாயில்லை, குழந்தைகள் அழாமல், அடம்பிடிக்காமல் வருவதே பெரிய விடயம் என்று பேசாமல் இருந்துகொண்டேன்.

தந்தையின் மடியில் இருந்து மிகவும் சிநேகபூர்வமாக என்னைப் பார்த்து சிரித்தார். சுருட்டை முடியும், பளிங்குக் கண்களும் கொண்ட ஒரு அழகான பொம்மை போல அந்தக் குழந்தை இருந்தது. திடீரென இரு விரல்களை மடக்கிக் கொண்டு மூன்று விரல்களை காட்டியது. இது இரண்டு விரல்களால் காட்டப்படும் சமாதானத்திற்கும் மேலே. பக்கென்று சிரிப்பு வந்தது. என்னை விட அதிகமாக சிரித்தது குழந்தை. மூன்று விரல்களும், சிரிப்பும், சில கதைகளுமாக பயணம் பறந்து கொண்டிருந்தது. அந்த இந்தியப் பெண் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.

விமானம் நின்றதும் ஒவ்வொருவராக வரிசையில் இறங்கினர். எனக்கு வலது பக்கம் இருந்த பெண் அவரது தலைக்கு மேலே இருந்த அவரது பொருட்களை எடுத்துக் கொண்டு அவரது குடும்பத்துடன்  இறங்கினார். என்னுடைய பொருட்கள் இடது பக்கம் மேலே இருந்தது. ஆனால் இடது பக்க குடும்பம் இறங்கவில்லை. எதையோ தேடிக் கொண்டேயிருந்தார்கள். இவர்களுக்கு நடுவில் புகுந்து என்னுடைய பொருட்களை எப்படி எடுப்பது என்றபடியே எழும்பி நின்று கொண்டிருந்தேன்.

'ஓ.............. மன்னிக்கவும், உங்களின் பொதி இங்கே மேலேயா இருக்கின்றது................' என்று கேட்டார் அந்தக் குழந்தையின் தாய். ஆமாம் என்றேன். அவரே அதை எடுத்துக் கொடுக்க முன்வந்தார். 'நீங்கள் ஏன் எடுத்துக் கொடுக்க வேண்டும். அவரே எடுத்துக் கொள்வார் தானே............' என்று இழுத்தார் அவரின் கணவர். அந்தப் பெண் அதை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே என்னுடைய பொதியை எடுத்துக் கொடுத்தார். குட்டிக் குழந்தை மீண்டும் மூன்று விரல்களைக் காட்டி சிரித்தது. அப்படியே வலப்பக்கத்தால் நான் வெளியே வந்தேன்.

'The Road To Character' என்ற அந்தப் புத்தகம் அந்த இருக்கையிலேயே அப்படியே திறக்கப்படாமல் கிடந்தது. அது வெறுமனே பயணம் போய் வருகின்றது போல. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

கதவில் நின்ற அழகான, பணிவான பெண்ணிடம் அவரை விட பணிவாக நான் கேட்டேன். சிறிது நேரம் கணினியில் அவர் சுற்றிப் பார்த்தார்.

படத்தைப் பார்த்தாலே நீங்க அப்பாவியாவே இருக்கிறீர்கள்.

உங்களைப் பார்த்துமா அந்தப் பெண்ணுக்கு இரக்கம் வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

'The Road To Character' என்ற அந்தப் புத்தகம் அந்த இருக்கையிலேயே அப்படியே திறக்கப்படாமல் கிடந்தது. அது வெறுமனே பயணம் போய் வருகின்றது போல. 

அனைவர் வாழ்வின் விமானப் பயணத்தின் போதும் நடந்திருக்கக் கூடிய ஒரு சம்பவத்தை… நகைச்சுவையுடன் விவரித்த விதம் அழகு. அதிலும் அந்த கடைசிப் பந்தி அருமை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

படத்தைப் பார்த்தாலே நீங்க அப்பாவியாவே இருக்கிறீர்கள்.

உங்களைப் பார்த்துமா அந்தப் பெண்ணுக்கு இரக்கம் வரவில்லை.

அட இவரா அவரு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

படத்தைப் பார்த்தாலே நீங்க அப்பாவியாவே இருக்கிறீர்கள்.

10 hours ago, alvayan said:

அட இவரா அவரு...

இவர் அவர் இல்லை............... இவர் அவராக இருப்பாரோ என்று செயற்கை நுண்ணறிவு உய்த்தறிந்து இப்படி ஒரு படத்தை கீறியிருக்கின்றது...............🤣.

செயற்கை நுண்ணறிவை தொடர்ந்து நச்சரிக்கவும் மனது வர மாட்டேன் என்கின்றது. செயற்கை நுண்ணறிவு செயற்படும் Data Centers இருக்கும் அழகான, அமைதியான கிராமங்கள் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டுப்பட்டிருக்கின்றன என்ற செய்திகள் வெளியே வர ஆரம்பித்துவிட்டன. அங்கங்கே நீர்வளம் அருகி அல்லது கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றது.

செயற்கை நுண்ணறிவை கேள்விகள் கேட்கும் போது, 'Please......' என்னும் ஒரு சொல்லை ஒரு தடவை தவிர்த்தால் ஒரு சிறிய போத்தல் தண்ணீர் மிச்சமாகும் என்று Sam Altman (CEO of OpenAI) சமீபத்தில் சொல்லியிருந்தார். அப்படியாயின் மொத்தமாக எவ்வளவு நீர் இதற்கு தேவைப்படுகின்றது என்ற கணக்கு மலைக்கவைக்கின்றது.

கப்பலின் ஓட்டைகளை அடைப்பது போல உலகம் போய்க் கொண்டிருக்கின்றது போல. ஒரு ஓட்டையை அடைத்தால், இன்னொரு இடத்தில் புதிய ஓட்டை ஒன்று உருவாகின்றது.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

பலி கொடுக்க அழைத்துபோகும் ஆட்டுக்குட்டியை போல( சும்மா சிரிக்க மட்டும் ) ...கனடா அமெரிக்க பக்கத்தில சில மணி நேரங்களென்றபடியால் சமாளித்து விடடீர்கள் . முதல் வேலையாக மகன்கள் சொல்லியிருப்பார்கள் இனிமேல் இப்படி புக் பண்ணாதீங்க அப்பா ...மலிவு பார்க்கப்போனால் இப்படித்தான் இசகு பிசகாக மட்டுப் படுவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

அனைவர் வாழ்வின் விமானப் பயணத்தின் போதும் நடந்திருக்கக் கூடிய ஒரு சம்பவத்தை… நகைச்சுவையுடன் விவரித்த விதம் அழகு. அதிலும் அந்த கடைசிப் பந்தி அருமை. 😂

அந்தப் புத்தகம் என்ன புத்தகம் என்று இணையத்தில் தேடிப் பார்த்தேன், சிறி அண்ணா........🤣.

நான் இளவயதில் இருக்கும் போது ஆனந்த விகடனில் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார். எங்களில் பலரும் அவற்றை அன்று வாசித்திருப்போம். கிட்டத்தட்ட அது போன்ற கட்டுரைகள் கொண்டது இந்தப் புத்தகம்.

'உன்னால் முடியும் தம்பி' என்பதே உதயமூர்த்தி அவர்களின் ஒரு பிரபலமான தலைப்புத்தான்................ பின்னர் பாலச்சந்தர் - கமல் - ஜெமினி கணேசன் ஆக்கத்தில் இதே பெயரில் ஒரு படமும் வந்தது. மூன்று விரல்கள் காட்டிய அந்தக் குழந்தைக்காக அதை இங்கே எடுத்துக்கொண்டேன்..........

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

படத்தைப் பார்த்தாலே நீங்க அப்பாவியாவே இருக்கிறீர்கள்.

பூனைக்குட்டிய பிடிக்க பயந்தவர்(பகிடிக்கு தான்) வேற எப்பிடி இருப்பார் அண்ணை?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பூனைக்குட்டிய பிடிக்க பயந்தவர்(பகிடிக்கு தான்) வேற எப்பிடி இருப்பார் அண்ணை?!

🤣........................

நானே ஒரு பூனைக்குட்டி போல ஆகிவிட்டேன் அந்த விமானப் பயணத்தில்.........

கனடாவிலிருந்து திரும்பி வந்தவுடன் ஓடிப் போய் குட்டிகளைத்தான் எட்டிப் பார்த்தோம். ஒரு குட்டியும் அங்கிருக்கவில்லை. அன்று நாள் முழுவதும் குட்டிகள் கண்களில் படவேயில்லை குட்டிகளை யாரோ பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள் போல என்று கவலையாகவும், பரவாயில்லை, அவைகள் எங்காவது வீடுகளில் வளரட்டும் என்று ஒரு ஆறுதலாகவும் இருந்தது.

நேற்று மீண்டும் பார்க்கும் போது மூன்று குட்டிகள் நின்றன. ஒன்றைத்தான் காணவில்லை.

பொதுவாக மனிதர்கள் இல்லாத பிரச்சனைகளை அவர்களே உருவாக்கி, அதற்குள் சுற்றிச் சுழல்வார்கள் என்று சொல்வார்கள். உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன் போல...............🤣.

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைக் குட்டி உள்ள குட்டிக் கதையாகினும் நகைச்சுவை நன்றாக இருந்தது . ........ ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2025 at 20:02, ரசோதரன் said:

உன்னால் முடியும் தம்பி

--------------------------------------

large.ReturnFlightFromToronto.jpg

இவ்வளவு மலிவாக விமானச்சீட்டை வாங்கி விட்டோமே என்ற சந்தோசம் அமெரிக்காவிலிருந்து கனடா வந்த விமானப் பயணத்திலேயே தொலைந்து போயிருந்தது. அது இன்னொரு கதை. இது அதே மலிவு விலையில் கனடாவிலிருந்து திரும்பி அமெரிக்கா போகும் கதை. 

எங்கள் நான்கு பேர்களுக்கும் விமானத்தின் நாலு இடங்களில் நடு இருக்கைகளை கொடுத்திருந்தார்கள். கனடா விமான நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கைகளை மாற்ற முற்படும் போது, ஒவ்வொரு புது இருக்கைக்கும் பயணச்சீட்டுக்கு கொடுத்திருந்த அளவில் கட்டணம் மீண்டும் கேட்டார்கள். சரி, விமானநிலையத்தில் போய் இலவசமாகக் கேட்டுப் பார்ப்போம் என்று விமான நிலையம் போய்ச் சேர்ந்தோம். கீழே நின்றவர்கள் பெட்டிகளை மட்டும் வாங்கிக் கொண்டார்கள். இருக்கைகள் அவர்களின் பொறுப்பில் வருவதில்லை என்றும், புறப்படும் கதவில் போய் கேளுங்கள் என்றும் சொன்னார்கள். கதவில் நின்ற அழகான, பணிவான பெண்ணிடம் அவரை விட பணிவாக நான் கேட்டேன். சிறிது நேரம் கணினியில் அவர் சுற்றிப் பார்த்தார். பின்னர் இருப்பதெல்லாம் நடு இருக்கைகள் மட்டுமே, அவை கூட முன்னுக்கு பின்னாகவும் இல்லை என்றார். 

விமானம் விழுந்தால், கடைசிக் கணத்தில் நால்வரும் தனித்தனியாக விழப் போகின்றோமே என்ற கவலையும், அக்கம் பக்கம் சரிந்து அடுத்தவர்கள் தோள்களில் விழாமல் தூங்கி வழியவேண்டுமே என்ற யோசனையுடனும் என்னுடைய நடு இருக்கையில் அமர்ந்தேன்.

வலக்கை பக்கம் ஒரு பெரிய பெண் வந்து இருந்தார். இடைக்கை பக்கம் ஒரு பெரிய ஆண் வந்து இருந்தார். என்னுடைய கைகளை இன்னும் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டேன். சமீபத்தில் ஒரு இந்தியர் விமானப் பயணத்தின் போது அருகில் இருந்த பெண்ணுடன் ஏதோ செய்து கைது செய்யப்பட்டிருந்தார். கைபடாமல் இருக்க வேண்டும். அந்தப் பெண் ஏதோ எடுத்துக் கொண்டு என் பக்கம் திரும்பினார். அவரின் பெரிய கை என் விலாவில் நேராக இறங்கியது. 'மன்னிக்கவும், மன்னிக்கவும்............' என்று பதறினார். இடைக்கை பக்கம் அமர்ந்திருந்தவர் மடியில் ஒரு புத்தகம் வைத்திருந்தார், 'The Road To Character' என்று புத்தகத்தின் தலைப்பு இருந்தது. இந்த புத்தகத்தை பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. அதில் இருந்த எழுத்தாளர் பெயரும் கொஞ்சம் கூட பரிச்சயமற்றது.

அருகில் இருந்த பெண்ணின் முன்னால் இருந்த சிறிய திரை அப்படியே உறைந்து போய் நின்று கொண்டிருந்தது. அவர் அந்த திரையில் ஒவ்வொரு புள்ளியையும் தனது விரல்களால் அமத்தினார். திரை அசையவே இல்லை. ஒரு விமான பணிப்பெண்ணைக் கூப்பிட்டார். விமானத்தின் இந்தப் பகுதியில் நடுவில் இருந்து வலப்பக்க முடிவு வரை உள்ள எவருக்கும் திரை வேலை செய்யவில்லை என்றார் பணிப்பெண். அங்கே பாருங்கள், இவருடையை திரை கூட வேலை செய்யவில்லை என்று என் முன்னால் இருந்த திரையைக் காட்டினார். நான் பணிப்பெண்ணைப் பார்த்தேன். பணிப்பெண் என்னுடைய திரையைப் பார்த்தார். அருகில் இருந்த பெண் திரையையும் என்னையும் பார்த்தார். நான் அந்த திரையை ஒரு தடவை கூட தொட்டிருக்கவில்லை. அது அப்படியே இருட்டாகவே இருந்தது. சரிசெய்துவிடுகின்றோம் என்றபடியே பணிப்பெண் அங்கிருந்து மெதுவாக நகர்ந்தார். 

எனக்கு இரண்டு பக்கமும் இருந்தவர்கள் பெரும் குடும்பங்களாக வந்திருந்தார்கள். குழந்தைகள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என்று இரு பக்கங்களும் கூட்டங்களாக இருந்தார்கள். அமெரிக்காவை சுற்றிப் பார்க்கப் போகின்றார்கள் என்று அவர்களின் உரையாடல்களில் இருந்து தெரியவந்தது. கொஞ்சம் துணிந்தவர்கள் போல. அதிபர் ட்ரம்பையும் மீறி இவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்கா வந்து கொண்டிருக்கின்றார்கள்.

இடக்கை பக்கம் இருந்தவரின் இரண்டு வயதான குழந்தை ஒன்று மிகவும் சந்தோசத்துடன் முன்னுக்கு இருந்த இருக்கையை கால்களால் உதைத்துக் கொண்டேயிருந்தது. சிறிது நேரம் போக, உதை வாங்கிக் கொண்டிருந்தவர், அவர் ஒரு இந்திய பெண்மணி, எழும்பி வந்தார். குனிந்து மெதுவாக அவர்களிடம் ஏதோ சொன்னார். சிரித்துக் கொண்டே உதைக்கும் இரண்டு வயது குழந்தை இப்பொழுது இடம் மாற்றப்பட்டது. தந்தையின் மடியில் அந்தப் புத்தகத்தின் மேல் அமர வைக்கப்பட்டார். எனக்கும் பின்னால் இருந்து இன்னொரு குழந்தையிடம் இருந்து உதைகள் விழுந்து கொண்டேயிருந்தது. பரவாயில்லை, குழந்தைகள் அழாமல், அடம்பிடிக்காமல் வருவதே பெரிய விடயம் என்று பேசாமல் இருந்துகொண்டேன்.

தந்தையின் மடியில் இருந்து மிகவும் சிநேகபூர்வமாக என்னைப் பார்த்து சிரித்தார். சுருட்டை முடியும், பளிங்குக் கண்களும் கொண்ட ஒரு அழகான பொம்மை போல அந்தக் குழந்தை இருந்தது. திடீரென இரு விரல்களை மடக்கிக் கொண்டு மூன்று விரல்களை காட்டியது. இது இரண்டு விரல்களால் காட்டப்படும் சமாதானத்திற்கும் மேலே. பக்கென்று சிரிப்பு வந்தது. என்னை விட அதிகமாக சிரித்தது குழந்தை. மூன்று விரல்களும், சிரிப்பும், சில கதைகளுமாக பயணம் பறந்து கொண்டிருந்தது. அந்த இந்தியப் பெண் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.

விமானம் நின்றதும் ஒவ்வொருவராக வரிசையில் இறங்கினர். எனக்கு வலது பக்கம் இருந்த பெண் அவரது தலைக்கு மேலே இருந்த அவரது பொருட்களை எடுத்துக் கொண்டு அவரது குடும்பத்துடன்  இறங்கினார். என்னுடைய பொருட்கள் இடது பக்கம் மேலே இருந்தது. ஆனால் இடது பக்க குடும்பம் இறங்கவில்லை. எதையோ தேடிக் கொண்டேயிருந்தார்கள். இவர்களுக்கு நடுவில் புகுந்து என்னுடைய பொருட்களை எப்படி எடுப்பது என்றபடியே எழும்பி நின்று கொண்டிருந்தேன்.

'ஓ.............. மன்னிக்கவும், உங்களின் பொதி இங்கே மேலேயா இருக்கின்றது................' என்று கேட்டார் அந்தக் குழந்தையின் தாய். ஆமாம் என்றேன். அவரே அதை எடுத்துக் கொடுக்க முன்வந்தார். 'நீங்கள் ஏன் எடுத்துக் கொடுக்க வேண்டும். அவரே எடுத்துக் கொள்வார் தானே............' என்று இழுத்தார் அவரின் கணவர். அந்தப் பெண் அதை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே என்னுடைய பொதியை எடுத்துக் கொடுத்தார். குட்டிக் குழந்தை மீண்டும் மூன்று விரல்களைக் காட்டி சிரித்தது. அப்படியே வலப்பக்கத்தால் நான் வெளியே வந்தேன்.

'The Road To Character' என்ற அந்தப் புத்தகம் அந்த இருக்கையிலேயே அப்படியே திறக்கப்படாமல் கிடந்தது. அது வெறுமனே பயணம் போய் வருகின்றது போல. 

அப்ப கனடாவில் நடந்த கரப்பந்தாட்டப் போட்டிகள் எப்படி? உங்கள் அணி கிண்ணம் ஏதும் வென்று வந்தீர்களா?

என்னையும் இந்த அணியொன்றில் இணைத்து வார இறுதியில் சீரியசாகப் பெண்டு நிமித்தி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். பின்னர் ஒரே நேரத்தில் பல குடும்பங்கள் அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழாவிற்காக வட கரோலினாவிற்குப் போக வேண்டியதாகி விட்டது! ரீம் காலி😂! பின்னர் வட கரோலினா பற்றி விரிவாக எழுதுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

உங்களை நேரில் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் இப்படி நழுவிப் போய்விட்டதே, ஜஸ்டின். இதே போலவே நியூ ஜெர்சியில் இருந்து வருவதாகச் சொல்லிய ஒரு அணியும் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போய்விட்டது. அங்கிருந்து ஒரு சிலர் மட்டும் வந்தார்கள்.

என்னுடைய அணி செட்அப் வாலிபால் கிண்ணத்தை வென்றது. மொத்தமாகவே உலகெங்கும் எங்களில் செட்அப் வாலிபால் விளையாடுபவர்கள் குறைவு. இரண்டு 2கே அணிகள் கனடாவிலிருந்தும், ஒரு 2கே அணி அமெரிக்காவிலிருந்தும், மற்றும் என்னுடைய அணியும் கலந்துகொண்டன. அந்த இளையோர் அணிகள் எதிர்பார்க்காத விதத்தில் போட்டிகள் அமைந்தன.

ஓவர் கேம் வாலிபாலில் கனடா அணி ஒன்று வென்றது.

இரவு ஒன்றுகூடலும் நன்றாகவே இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2025 at 17:55, ரசோதரன் said:

வாழ்த்துக்கள்! எப்படியும் வென்று வருவீர்கள் என்று தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2025 at 11:15, ஈழப்பிரியன் said:

படத்தைப் பார்த்தாலே நீங்க அப்பாவியாவே இருக்கிறீர்கள்.

உங்களைப் பார்த்துமா அந்தப் பெண்ணுக்கு இரக்கம் வரவில்லை.

யாரோ அப்பாவி சின்னப்பையன், பெற்றோரோடு அமர ஆசைப்படுகிறார் என்று நினைத்திருப்பார்.

On 11/7/2025 at 11:29, தமிழ் சிறி said:

அனைவர் வாழ்வின் விமானப் பயணத்தின் போதும் நடந்திருக்கக் கூடிய ஒரு சம்பவத்தை… நகைச்சுவையுடன் விவரித்த விதம் அழகு. அதிலும் அந்த கடைசிப் பந்தி அருமை. 😂

அது சரி, தங்களின் பயணக்கட்டுரை எப்போ வெளிவருகுதாம்? படிக்க ஆவல்! கொண்டுவந்த பொட்டலங்கள் பகிர்ந்தளிச்சாச்சா உரியவர்களுக்கு, அன்பானவர்களுக்கு, வேண்டப்பட்டவர்களுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

யாரோ அப்பாவி சின்னப்பையன், பெற்றோரோடு அமர ஆசைப்படுகிறார் என்று நினைத்திருப்பார்.

அது சரி, தங்களின் பயணக்கட்டுரை எப்போ வெளிவருகுதாம்? படிக்க ஆவல்! கொண்டுவந்த பொட்டலங்கள் பகிர்ந்தளிச்சாச்சா உரியவர்களுக்கு, அன்பானவர்களுக்கு, வேண்டப்பட்டவர்களுக்கு?

DHL_800x800.gif

சாத்தான்... மன்னிக்கவும். இப்ப பயணக் கட்டுரை எழுதிறதுக்கெல்லாம் பொறுமை இல்லை.

கொண்டுவந்த பொட்டலங்களை சொந்தக்காரர், அயலில் உள்ள நண்பர்கள் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தாயிற்று. 😂

@குமாரசாமி அண்ணையின் விலாசம் தெரியாத படியால்... அவரின் பார்சல் அனுப்பவில்லை. அவரின் விலாசம் கிடைத்த அடுத்த நிமிடம்.... "எக்ஸ்பிரஸ்" வேகத்தில் பார்சல் அனுப்பி வைக்கப்படும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது? நல்ல நண்பர்கள், கலியாண வீட்டில் பொட்டலம் எல்லாம் கடத்தி, கட்டியணைத்தீர்கள். விலாசம் தெரியாமலா? விலாசம் தராமலா பார்சல் வரவில்லை என்று ஏங்குகிறார்? பயணம் போவதும் வருவதும் பிரச்சனையல்ல, கொண்டுவரும் பொருட்களை கொடுத்து முடிப்பதே பெரிய வேலை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.