Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செயின் அணிந்திருந்த நபரை உள்ளே இழுந்த எம்ஆர்ஐ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் செல்வதற்கு முன்பாக நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள அணிகலன்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

கட்டுரை தகவல்

  • மேடலின் ஹால்பர்ட்

  • பிபிசி

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவில் 9 கிலோ எடை கொண்ட செயினை சுமந்து கொண்டு எம்ஆர்ஐ அறைக்குச் சென்றபோது, அது உள்ளே இழுத்ததில் 61 வயது நபர் உயிரிழந்தார்.

நியூயார்க் நகரில் உள்ள நசாவ் என்ற இடத்தில் உள்ள எம்ஆர்ஐ சென்டரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

அதிகாரிகளின் அனுமதியின்று இவர் ஸ்கேனிங் அறைக்குள் நுழைந்ததாக நசாவ் கவுன்டி போலீஸார் கூறுகின்றனர்.

'எனக்கு ஸ்கேன் எடுக்கும்போது நான்தான் உதவிக்காக என் கணவரை உள்ளே அழைத்தேன்' என உயிரிழந்தவரின் மனைவி கூறுகிறார்.

மேலும் 'உள்ளே நுழைந்ததும் அவரை இந்தக் கருவி இழுத்துவிட்டது. சட்டென்று இயந்திரம் மீது மோதினார். அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுநர் விரைந்து வந்து அவரை காப்பாற்ற முயன்றார். இயந்திரத்தை அணைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன்' என மனைவி ஜோன்ஸ் தெரிவித்தார்.

எம்ஆர்ஐ இயந்திரம் அவரை உள்ளே இழுத்தது எப்படி?

செயின் அணிந்திருந்த நபரை உள்ளே இழுந்த எம்ஆர்ஐ

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொதுவாக இந்த இயந்திரம் துல்லியமாக ஸ்கேன் செய்வதற்காக சக்திவாய்ந்த காந்த ஈர்ப்புகளை கொண்டிருக்கும்.

அதனால்தான் இந்த அறைக்குள் செல்வதற்கு முன்பாக நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள அணிகலன்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

உயிரிழந்த நபர் உடற்பயிற்சிக்கு பயன்படும் பெரிய உலோகச் சங்கிலியை உடலுடன் இணைத்திருந்ததால் இயந்திரத்தின் உள்ளே இழுக்கப்பட்டுள்ளார் என நசாவ் கவுன்டி போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போலீசார் இவரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் பெயர் கெய்த் என மனைவி ஜோன்ஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

"அவர் எனக்கு குட்-பை சொன்னார். பின் அப்படியே உருக்குலைந்துவிட்டார்" என மனைவி வேதனை தெரிவிக்கிறார்.

"முழங்காலில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காக சென்றபோது, எனது கணவரை நான்தான் உதவிக்கு உள்ளே அழைத்தேன். அவர் 9 கிலோ எடையுள்ள சங்கிலியை அணிந்திருந்தார். அவர் உள்ளே நுழைந்ததும் இயந்திரம் அவரை உள்ளே இழுத்துக்கொண்டது. அவர் சட்டென்று இயந்திரத்தின் மீது மோதினார். அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுநர் அவரை மீட்க முயற்சித்தார். 'மெஷினை அணையுங்கள், 911-க்கு போன் செய்யுங்கள்' எனக் கதறினேன்" என சம்பவத்தை நேரில் பார்த்த ஜோன்ஸ் விவரிக்கிறார்.

இது குறித்து மேலும் அறிய, வல்லுநர்களை தொடர்புகொண்டது பிபிசி.

எம்ஆர்ஐ இயந்திரத்தில் உள்ள சக்தி வாய்ந்த காந்தம் சாவி, செல்போன் என எந்த அளவில் உள்ள பொருட்களையும் எளதில் உள்ளே இழுக்கக் கூடியதாகும். இது இயந்திரத்தை பாதிக்கும் அல்லது நோயாளிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் என்கிறது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்.

இதற்கு முன்பு 2001ம் ஆண்டு, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும்போது 6 வயது சிறுவன் உயிரிழந்தார். எம்ஆர்ஐ இயந்திரத்தின் சக்திவாய்ந்த காந்த ஈர்ப்பு, ஆக்ஸிஜன் டேங்கை அறையில் அங்குமிங்கும் இழுத்தது. ஆக்ஸிஜன் டேங்க் அச்சிறுவன் தலையில் தாக்கியதில் உயிரிழந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg8dny42pgo

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

அமெரிக்காவில் 9 கிலோ எடை கொண்ட செயினை சுமந்து கொண்டு எம்ஆர்ஐ அறைக்குச் சென்றபோது, அது உள்ளே இழுத்ததில் 61 வயது நபர் உயிரிழந்தார்.

நியூயார்க் நகரில் உள்ள நசாவ் என்ற இடத்தில் உள்ள எம்ஆர்ஐ சென்டரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

9 கிலோ சங்கிலியை போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போகின்ற ஆள் என்றால்... மண்டை பழுதான ஆளாக இருக்க வேண்டும். 🤣

அதுசரி... இவர் போட்டிருந்த துலா கயிறு போன்ற அந்த யானை கட்டுகின்ற சங்கிலியை... அங்கிருந்த ஊழியர்கள் ஒருவரும் கவனிக்காமாலா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்ய உள்ளே அனுப்பியவர்கள்.

@ஈழப்பிரியன் இது உங்க ஏரியா. 😂

இதை... ட்ரம்ப் ஐயா கேள்விப்பட்டால், ரொம்ப கடுப்பாகப் போகின்றார். 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

9 கிலோ சங்கிலியை போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போகின்ற ஆள் என்றால்... மண்டை பழுதான ஆளாக இருக்க வேண்டும். 🤣

அதுசரி... இவர் போட்டிருந்த துலா கயிறு போன்ற அந்த யானை கட்டுகின்ற சங்கிலியை... அங்கிருந்த ஊழியர்கள் ஒருவரும் கவனிக்காமாலா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்ய உள்ளே அனுப்பியவர்கள்.

@ஈழப்பிரியன் இது உங்க ஏரியா. 😂

அவராக போகவில்லையாம் அண்ணை! மனைவி ஸ்கான் செய்ய சென்றவர், உதவிக்கு அழைத்து ஆபத்தில் மாட்டிவிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அவராக போகவில்லையாம் அண்ணை! மனைவி ஸ்கான் செய்ய சென்றவர், உதவிக்கு அழைத்து ஆபத்தில் மாட்டிவிட்டுள்ளார்.

ஓ.... உத்தரவின்றி, திறந்த வீட்டிற்குள் நுழைந்து இருக்கின்றார்.

மனைவி ஏதாவது சதி செய்து... ஆளை, மேல்லோகம் அனுப்பினாரோ என்ற கோணத்திலும் விசாரிக்கப் பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

final destination எனும் படத்தில் இதே போல் ஒரு காட்சி வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் நான் இந்த இயந்திரத்தினுள் போயிள்ளேன். கட்டயம் உலோகங்கள் ஏதும் உடலில் இருந்தால் கல‌ட்டி விடுமாறு அறிவுறுத்துவார்கள்.

10 hours ago, vasee said:

final destination எனும் படத்தில் இதே போல் ஒரு காட்சி வந்துள்ளது.

90களில் இருந்து வரும் இந்த படத்தில் உள்ள எல்ல பாகமும் பார்த்துள்ளேன். இது கடசியாக கடந்த மாதம் வந்தது. இங்கு கொழும்பில் பார்த்தேன்

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2025 at 19:10, தமிழ் சிறி said:

ஓ.... உத்தரவின்றி, திறந்த வீட்டிற்குள் நுழைந்து இருக்கின்றார்.

மனைவி ஏதாவது சதி செய்து... ஆளை, மேல்லோகம் அனுப்பினாரோ என்ற கோணத்திலும் விசாரிக்கப் பட வேண்டும்.

அந்தாள் அப்பாவி

மனைவி சொல் தட்டாமல் பழகிவிட்டது. என்ன செய்யும்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2025 at 13:05, ஏராளன் said:

அவராக போகவில்லையாம் அண்ணை! மனைவி ஸ்கான் செய்ய சென்றவர், உதவிக்கு அழைத்து ஆபத்தில் மாட்டிவிட்டுள்ளார்.

இது இந்த மருத்துவ சேவை நிலையத்தின் ஒரு பாரதூரமான குறைபாடாக தெரிகிறது. எக்ஸ் கதிர்கள் பயன்படும் அறை, காந்தப் புலம் பயன்படும் எம்.ஆர்.ஐ அறை என்பன பயன்பாட்டில் இருக்கும் போது உள்ளே யாரும் நுழைய முடியாதபடி கதவு பூட்டப் பட்டிருக்க வேண்டும். அனேகமாக தொழில் நுட்பவியலாளரின் வேலை பறி போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை மாக்கிரெட் தட்சருக்கு எம் ஆர் ஐ எடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2025 at 03:00, தமிழ் சிறி said:

ட்ரம்ப் ஐயா கேள்விப்பட்டால், ரொம்ப கடுப்பாகப் போகின்றார்.

அவரே அப்படி போகக்கூடிய ஆள்தான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, x-ray, hospital and text that says "9 கிலோ சங்கிலி! MRI கருவியில் சிக்கி பலியான நபர்! அமெரிக்கா: 61 வயது மதிக்கத்தக்க ஒருவர் MRI கருவிக்குள் இழுக்கப்பட்டு உயிரிழப்பு; கழுத்தில் 9 kg எடையுள்ள உலோகச் சங்கிலி அணிந்திருந்த அவர், நோயாளிக்கு MRI ஸ்கேன் நடந்துகொண்டிருந்த அறைக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்துள்ளார்; அப்போது MRI கருவியின் சக்திவாய்ந்த காந்தப்புலம், அந்த உலோகச் சங்கிலியை ஈர்த்ததால், அவர் கருவிக்குள் வேகமாக இழுக்கப்பட்டுள்ளார்!"

எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் நுழைந்த நபர் ஒருவர் அந்த இயந்திரத்தால் அதிவேகமாக ஈர்க்கப்பட்டு, விபத்தின் தாக்கத்தால் மரணமடைந்திருக்கிறார்..

அன்னாரை இழந்து வாடும் அவருடைய மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வுக் கட்டுரையை ஆரம்பம் செய்கிறேன்.

சம்பவம் நிகழ்ந்திருப்பது அமெரிக்காவில் என்றாலும் நவீன மருத்துவ முறை சிகிச்சை வழங்கும் பெரிய மருத்துவமனைகள் அனைத்திலும் தற்போது எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது.

நமக்கோ நமது உறவினர்களுக்கோ ஸ்கேன் செய்து பார்க்கும் தேவை என்பது எப்போதும் வரக்கூடும் என்பதால் நிச்சயம் எம் ஆர் ஐ குறித்த விழிப்புணர்வு நமக்கு அத்தியாவசியமாகிறது.

முதலில் எம்.ஆர்.ஐ என்றால் என்ன?

அது இயங்கும் தத்துவம் குறித்து அறிந்தால் நாம் அந்த ஸ்கேன் செய்யும் அறைக்குள் செல்லுமுன் எடுத்துக் கொள்ள வேண்டிய எச்சரிக்கை குறித்து புரிந்து கொள்ள முடியும்.

எம் ஆர் ஐ என்றால் மேக்னெட்டிக் ரெசோனன்ஸ் இமேஜிங் என்று பொருள். MRI - MAGNETIC RESONANCE IMAGING

அதாவது காந்தப் புலத்தில் அதிர்வை உண்டாக்கி அதன் வழியாக படம் பிடித்தல் என்பதாகும்.

எம் ஆர் ஐ இயந்திரமே ஒரு அதிசக்தி வாய்ந்த காந்தமாகும்.

மின்சாரம் இந்த இயந்திரத்தில் பாய்ச்சப்படும் போது அதி கடத்தல் காந்தமாக உருமாற்றம் பெறுகிறது.

மனித உடலில் உள்ள அனைத்து செல்களிலும் நீர் இருக்கிறது.

நீர் என்பது இரண்டு ஹைட்ரஜனும் ஒரு ஆக்சிஜனும் இணைந்து உருவாக்கும் வெற்றிக் கூட்டணி என்பது நாம் அனைவரும் கற்ற பால பாடமாகும்.

எம்.ஆர்.ஐ இயந்திரத்தின் காந்தப் புலத்துக்குள் மனித உடல் படுத்த வாக்கில் காந்த புலத்துக்கு பக்கவாட்டில் நுழையும் போது, நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்குள் இருக்கும் நீர் மூலக்கூறில் உள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள ப்ரோடான்கள் அனைத்தும் எம் ஆர் ஐ இயந்திரத்தின் காந்தப் புலத்துடன் ஒன்றுபட்டும் வரிசைப்பட்டும் இருக்கும்.

இப்போது எம் ஆர் ஐ இயக்குநர், ரேடியோ அலைகளை குறிப்பிட்ட இடைவெளியில் உடல் மீது பாயச் செய்வார்.

இவ்வாறு மின்காந்த விசை பெற்ற ரேடியோ அலைகள் ஊடுறுவும் போது, ஹைட்ரஜன் அணுவில் உள்ள ப்ரோடான்கள் இந்த அலைகள் மூலம் சக்தியைப் பெற்று தனது முந்தைய சுழலும் நிலையில் இருந்து அடுத்த சுழலும் நிலைக்கு சற்று முன்னேறிச் செல்லும்.

ரேடியோ அலை பாய்ச்சுவது நிறுத்தப்படும் போது, தான் உள்வாங்கிய சக்தியை வெளியிட்டு விட்டு மீண்டும் பழைய மாதிரி எம்.ஆர்.ஐ காந்தத்தின் காந்தப் புலத்துடன் ஓர்மையில் ஓரணியில் நிற்க பழைய நிலைக்குத் திரும்பும்.

இவ்வாறு பழைய நிலைக்குத் திரும்ப அந்த ப்ரோடான்கள் வெளியிட்ட சக்தியைக் கொண்டும் ஏற்கனவே இருந்த பழைய நிலையில் அதற்கு இருந்து சக்தியையும் முன்வைத்து கணிணியானது நமது உடலின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படமாக ஆக்கி நமது திரையில் கொண்டு வரும்.

இதன் வழியாக சிறுநீரகம், கல்லீரல், குடல் , நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் தசை, ஜவ்வு, மூளை ஆகியவற்றில் உள்ள மாற்றங்களைத் துல்லியமாகக் காண முடிகிறது.

இதுவே எம் ஆர் ஐ தத்துவம்.

எம்.ஆர்.ஐ இயந்திரம் என்பது ஒவ்வொரு ஸ்கேன் செய்யும் போதும் ஆஃப் செய்து ஆன் செய்யும் இயந்திர வகை அல்ல.

காரணம் - எம் ஆர் ஐ இயந்திரம் மிகக் குறைவான வெப்பத்தில் இயங்கக் கூடிய அதி கடத்தல் மின் காந்தமாகும்.

இத்தனை அதி திறன் கொண்ட காந்தப் புலத்தை உருவாக்க குறைந்த வெப்ப நிலை அவசியமாகிறது.

இதனால் எம் ஆர் ஐ இயந்திரத்தின் காந்தம் - திரவ ஹீலியத்தால் சூழப்பட்டிருக்கும்.

ஹீலியம் திரவ நிலையிலேயே இருப்பதற்கு எம் ஆர் ஐ இயந்திரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

அதை ஆஃப் செய்தாலோ அல்லது திடீரென அது ஆஃப் ஆனாலோ திரவ ஹீலியம் - வாயு நிலையை அடையும். அப்போது அந்த அறைக்குள் வாயு நிலை ஹீலியம் கசியலாம். இது அறைக்குள் இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடும்.

எம் ஆர் ஐ இயந்திரமானது குறைவான மின் உபயோகத்தில் இயங்கும் ஆற்றல் கொண்டது. ஆனால் அதை அடிக்கடி ஆஃப் செய்து ஆன் செய்யும் போது மின் தேவை அதிகரிக்கும்.

மேற்கூறிய காரணங்களால் நோயாளிகளுக்கு ஸ்கேன் செய்யப்படும் போதும் சரிநோயாளிகள் உள்ளே இல்லாத நிலையிலும் சரி எப்போதும் எம் ஆர் ஐ இயந்திரம் "ரெடி டு டேக்" நிலையில் தான் இருக்கும்.

எனவே எம் ஆர் ஐ அறைக்குள் இரும்பு, ஸ்டீல் உள்ளிட்ட காந்தத்தால் ஈர்க்கப்படக்கூடிய சாதனங்களுடன் நுழைவது பேராபத்தை வரவழைக்கும் செயலாகும்.

முதல் ரூல்ஸ்

எம் ஆர் ஐ அறைக்குள் அந்த அறையின் இயக்குநரின் அனுமதியின்றி உள்ளே நுழைதல் கூடாது.

இரண்டாவது ரூல்ஸ்

அப்படி நோயாளியாக உள்ளே நுழைய வேண்டுமெனில் கட்டாயம் தங்கள் உடலில் ஆபரணங்கள், ஹேர் க்ளிப், ஹேர் பின் உள்ளிட்ட எந்த காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருளும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்த பின் நுழைய வேண்டும்.

மூன்றாவது ரூல்ஸ்

மருத்துவ ரீதியாக பேஸ் மேக்கர்/ இதய வால்வு உள்ளிட்ட இயந்திரங்கள் / உபகரணங்கள் உங்களுக்கு பொருத்தப்பட்டிருக்குமானால் தாங்கள் அது குறித்து முன்கூட்டியே தெரிவித்து ஸ்கேன் அறைக்குள் நுழையும் அனுமதி பெற்ற பிறகே உள்ளே நுழைய வேண்டும். உங்களது உடலில் உள்ள உபகரணம் எம் ஆர் ஐ பாதுகாப்பானதா என்பதை அறிய mrisafety.com சென்று உபகரணம் குறித்த தயாரிப்பு தகவல்களைக் கொடுத்து பயன்பெறலாம்.

இவையெல்லாம் எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யுமுன் நாம் கற்க வேண்டிய முக்கியமான பாலபாடங்கள்.

காந்தத்தின் புலத்தின் வலிமை குறித் கணக்கீடு "டெஸ்லா" கொண்டு கூறப்படுகிறது.

பொதுவாக எம் ஆர் ஐ எடுக்க 0.5 (குறைவான காந்தப்புலம்) முதல் 3.0 (அதி காந்தப் புலம்) வரை கொண்ட இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதில் பொதுவாக பெரும்பான்மையான இடங்களில் 1.5 டெஸ்லா இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன.

இவை நமது பூமியின் காந்தப் புலத்தைக் காட்டிலும் 21,000 மடங்கு வலிமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய காந்தப் புலத்துக்குள் சாதாரண காகிதம் கோர்க்கும் க்ளிப்போ அல்லது ஹேர் பின் உள்ளே போனாலும் உடனடியாக அவை "ஏவுகணைகள்" போன்ற வேகத்தில் ஈர்க்கப்படும்.

சுமார் ஒரு மணிநேரத்திற்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் ஈர்க்கப்படும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தற்காலத்தில் வடிவமைக்கப்படும் நோயாளிகளை கொண்டு செல்லும் ஸ்ட்ரெட்சர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவை இரும்பு , ஸ்டீல் அல்லாத காந்தத்தால் ஈர்க்கப்படாத உலோகங்களால் செய்யப்படுகின்றன.

தற்காலத்தில் செய்யப்படும் பேஸ் மேக்கர்கள்/ இதய வால்வுகள் அனைத்தும் எம் ஆர் ஐ இயந்திரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும் கட்டாயம் தங்களது உடலுக்குள் மருத்துவ உபகரணங்கள்/ இயந்திரங்கள் இருப்பின் வெளிப்படுத்தி அதற்குரிய எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பின்னரே எம் ஆர் ஐ அறைக்குள் நுழைய வேண்டும்.

2 டெஸ்லா அளவுள்ள எம் ஆர் ஐ இயந்திரங்கள் வரை செய்யப்பட்ட ஆய்வுகளில் அவற்றால் மனிதர்களின் செல்களுக்கு எந்த பாதகமும் விளைவிக்க இயலவில்லை. இவற்றால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கவில்லை.

தற்காலத்தில் குறைவான டெஸ்லா அளவுகள் எம் ஆர் ஐ இயந்திரங்கள் பரவலாக்கம் அடையத் தொடங்கியுள்ளன.

எம் ஆர் ஐ என்பது நவீன மருத்துவத் துறையில் முக்கியமான அங்கமாக விளங்கி வருகிறது.

அதன் வழியாக பல நோய்களை அதன் ஆரம்ப நிலையில் கண்டு சிகிச்சை அளிக்க முடிகிறது.

பல அறுவை சிகிச்சைகளை துல்லியமாகவும் கனகச்சிதமாகவும் செய்து முடிக்க முடிகிறது.

தற்போது அமெரிக்காவில் நடந்த நிகழ்வுக்கு வருவோம்..

மத்திய வயது மனைவி கால் மூட்டு பகுதிக்கு எம் ஆர் ஐ எடுக்க உள்ளே சென்று ஸ்கேன் செய்யப்பட்டு இருக்கிறார். .

பிறகு ஸ்கேன் படுக்கையில் இருந்து கீழிறங்க தனது 61 வயது கணவரை உள்ளே அழைக்கக் கூறியிருக்கிறார்.

ஸ்கேன் எடுத்த நபர் வெளியே சென்று அன்னாரது கணவரை உள்ளே செல்லக் கூறியிருக்கிறார்.

ஆனால் ஸ்கேன் எடுத்த நபரும் கணவரும் ஒன்றைக் கருத்தில் கொள்ளவில்லை.

ஸ்கேன் எடுத்த நபர் - உள்ளே செல்லும் நபரிடம் இரும்புப் பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.

உள்ளே சென்ற நபர் - தன்னிடம் இரும்பு உள்ளிட்ட பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு உள்ளே சென்றிருக்க வேண்டும்.

நிச்சியம் ஸ்கேன் அறைக்கு வெளியே பல பெரிய எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் ஒட்டியிருக்கும். ஆனால் வயது 60+ என்பதால் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.

தனது கழுத்து வலிக்காகவோ அல்லது எடை பயிற்சிக்காவோ தனது கழுத்தில் 9 கிலோ எடை கொண்ட இரும்புச் சங்கிலியை அவர் அணிந்திருந்திருக்கிறார்.

அந்த சங்கிலியோடு உள்ளே சென்றதால் சங்கிலி வேகமாக எம் ஆர் ஐ இயந்திரத்தால் ஈர்க்கப்பட வேகமாக இயந்திரத்தில் மோதியதால் அவர் இறந்திருக்கலாம்.

இந்த சம்பவத்தில் நமக்கும் படிப்பினை உண்டு சொந்தங்களே...

எம் ஆர் ஐ இயந்திரங்கள் மீதோ எம் ஆர் ஐ தொழில்நுட்பம் மீதோ பிழையில்லை.

எம் ஆர் ஐ இயந்திரங்கள் நமக்கு நன்மை செய்பவை. நாள்தோறும் நன்மை செய்து வருபவை.

எனினும் அவற்றிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிந்து நடந்து கொண்டால் எல்லாம் சுகமே...

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை

https://web.facebook.com/story.php?story_fbid=24502030766120102&id=100002195571900&rdid=6q8I3kLMv1557NMI#


  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

நல்லவேளை மாக்கிரெட் தட்சருக்கு எம் ஆர் ஐ எடுக்கவில்லை.

நல்ல வேளையாக இந்தியாவின் வல்லபாய் பட்டேல் வாழ்ந்த போது எம்.ஆர்.ஐ இருக்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

நல்ல வேளையாக இந்தியாவின் வல்லபாய் பட்டேல் வாழ்ந்த போது எம்.ஆர்.ஐ இருக்கவில்லை!

நல்லவேளையாக முன்னர் நல்லூர் எம்பி நாகநாதன் காலத்திலும் எம் ஆர் ஐ இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2025 at 14:38, Justin said:

நல்ல வேளையாக இந்தியாவின் வல்லபாய் பட்டேல் வாழ்ந்த போது எம்.ஆர்.ஐ இருக்கவில்லை!

On 23/7/2025 at 14:42, goshan_che said:

நல்லவேளையாக முன்னர் நல்லூர் எம்பி நாகநாதன் காலத்திலும் எம் ஆர் ஐ இல்லை!

இப்போது யாழ்களத்திலும் நுளையப் பயமாக இருக்கிறது. அங்கும் ஒன்றுரண்டு எம் ஆர் ஐ இயந்திரங்கள் இருப்பதுபோல் தெரிகிறது.🫨

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

இப்போது யாழ்களத்திலும் நுளையப் பயமாக இருக்கிறது. அங்கும் ஒன்றுரண்டு எம் ஆர் ஐ இயந்திரங்கள் இருப்பதுபோல் தெரிகிறது.🫨

தம்மை தாமே “இரும்பு மனிதர்” என நினைத்து கொள்வோர்தான் எம் ஆர் ஐ களுக்கு பயப்படவேண்டும் ஐயா.

ஏனையோருக்கு அவை நோய் அறிகுறிகளை கண்டு பிடித்து, நிவாரணம் தேட உதவும் கருகிவிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

இப்போது யாழ்களத்திலும் நுளையப் பயமாக இருக்கிறது. அங்கும் ஒன்றுரண்டு எம் ஆர் ஐ இயந்திரங்கள் இருப்பதுபோல் தெரிகிறது.🫨

யாழ் இணையமே ஒரு எம்.ஆர்.ஐ தானே ஐயா! உள்ள இழுத்தால் லேசில விடாதே!

உயிராபத்தில்லை என்பது தான் ஒரே ஆறுதல்!!

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcRUehT8BFSalyMke_O9pyo

எம். ஆர். ஐ. என்று வாசிக்க வேண்டியதை....

எம். ஜி. ஆர். என்று, அடிக்கடி மாறி வாசிக்கின்றேன். 😂

ஒருக்கால் கண் வைத்தியரிடம் போகவேணும் போலை கிடக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcRUehT8BFSalyMke_O9pyo

எம். ஆர். ஐ. என்று வாசிக்க வேண்டியதை....

எம். ஜி. ஆர். என்று, அடிக்கடி மாறி வாசிக்கின்றேன். 😂

ஒருக்கால் கண் வைத்தியரிடம் போகவேணும் போலை கிடக்கு. 🤣

கால்தான் போச்சுது என்று பார்த்தால் கண்ணும் போச்சா.🫣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

கால்தான் போச்சுது என்று பார்த்தால் கண்ணும் போச்சா.🫣

என்ன செய்யிறது... சின்னனிலை கரட் சாப்பிடச் சொன்னவை. 🥕

நான்தான்... அதை சாப்பிடாமல் விட்டதால் வந்த வினை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தம்மை தாமே “இரும்பு மனிதர்” என நினைத்து கொள்வோர்தான் எம் ஆர் ஐ களுக்கு பயப்படவேண்டும் ஐயா.

எம்.ஆர்.ஐ எப்படி வேலை செய்கிறது என்று தெரியாதோரும், இந்த அறைகளுக்கு வெளியே சிவப்பு எழுத்தில் ஒட்டியிருக்கும் அறிவிப்பை வாசிக்க இயலாதோருக்கும் கூட எம்.ஆர்.ஐ எமன் தான்!

ஆகவே, "ஆங்கிலம் ஒரு மொழியே ஒழிய அது அறிவல்ல" என்பதை மீள ஆராய வேண்டும்!

4 hours ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcRUehT8BFSalyMke_O9pyo

எம். ஆர். ஐ. என்று வாசிக்க வேண்டியதை....

எம். ஜி. ஆர். என்று, அடிக்கடி மாறி வாசிக்கின்றேன். 😂

ஒருக்கால் கண் வைத்தியரிடம் போகவேணும் போலை கிடக்கு. 🤣

நானும் இந்த club இல் இணைகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcRUehT8BFSalyMke_O9pyo

எம். ஆர். ஐ. என்று வாசிக்க வேண்டியதை....

எம். ஜி. ஆர். என்று, அடிக்கடி மாறி வாசிக்கின்றேன். 😂

ஒருக்கால் கண் வைத்தியரிடம் போகவேணும் போலை கிடக்கு. 🤣

38 minutes ago, நிழலி said:

நானும் இந்த club இல் இணைகின்றேன்.

கண்ணில பிரச்சனை இருக்காதண்ணை! எங்கட மூளை தான் தவறாக முன் அனுமானம் செய்கிறது, கொஞ்சம் பொறுமையாக வாசித்தால் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, எம்.ஆர்.ஐ எல்லாம் தெளிவாக புரிந்து கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

நானும் இந்த club இல் இணைகின்றேன்.

எனக்குத்தான் இந்தப் பிரச்சினை இருக்கு என்று பயந்து கொண்டு இருந்தேன்.

இப்போ நீங்களும் இணைந்து கொண்டதில் சந்தோசம். 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கண்ணில பிரச்சனை இருக்காதண்ணை! எங்கட மூளை தான் தவறாக முன் அனுமானம் செய்கிறது, கொஞ்சம் பொறுமையாக வாசித்தால் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, எம்.ஆர்.ஐ எல்லாம் தெளிவாக புரிந்து கொள்வோம்.

அட ஆமா... எம். ஆர். ராதாவும்.... எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்குள் வந்து போகின்றார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcRUehT8BFSalyMke_O9pyo

எம். ஆர். ஐ. என்று வாசிக்க வேண்டியதை....

எம். ஜி. ஆர். என்று, அடிக்கடி மாறி வாசிக்கின்றேன். 😂

ஒருக்கால் கண் வைத்தியரிடம் போகவேணும் போலை கிடக்கு. 🤣

நீங்கள் இருவரும் இப்போதுதான் முதன் முதலால காதலிக்க ஆரம்பிக்கிறீர்கள் என நான் கண்டுபிடித்துவிட்டேன்🤣.

2 hours ago, நிழலி said:

நானும் இந்த club இல் இணைகின்றேன்.

காதலித்துப் பார்

காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!

கவிஞர் : வைரமுத்து

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.