Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி

09 August 2025

1754702318_2170435_hirunews.jpg

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சந்திப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி அலஸ்காவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது, யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சாத்தியமான போர்நிறுத்தம் மற்றும் சமாதான உடன்படிக்கை குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இதன்படி 2019 க்குப் பின்னர், இந்த இரண்டு தலைவர்களும், அமெரிக்க மண்ணில் தமது முதல் நேரடி சந்திப்பை நடத்தவுள்ளனர். யுக்ரைன் போர் நிறுத்தப்படவேண்டும். 

இல்லையேல் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா, ரஷ்யாவுக்கு விடுத்திருந்த காலக்கெடு நேற்று முடிவடைந்த நிலையில், இந்த சந்திப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

https://hirunews.lk/tm/413712/trump-and-putin-are-set-to-meet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஷ்யாவிற்கு வெற்றி நிச்சயம்.😎

தலைவன் ரம்பிற்கு நோபல் பரிசு நிச்சயம்.😀

மேற்குலகு ரஷ்யா மீது 15,20 வருடங்களாக பொருளாதார தடைகள் விதித்தும் பஞ்சத்தில் வாடவும் இல்லை வங்குரோத்து நிலைக்கும் செல்லவில்லை. மாறாக ஐரோப்பிய மக்கள் தங்கள் வாழ்க்கை செலவிற்கு அதிகம் பணம் ஒதுக்கியதுதான் மிச்சம்.

ரஷ்யா கைப்பற்றிய இடங்களை விட்டுக்கொடுக்கப்போவதில்லை.ரம்ப்-புட்டின் பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால்........? எனவே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பலத்த தோல்வியாக வரும்.

ஐரோப்பாவை அமெரிக்கா கட்டுப்படுத்தி வைத்திருக்கலாம். ஆனால் ரஷ்யாவின் எல்லை நாடுகளை எந்த கொம்பனாலும் தன் கைக்குள் வைத்திருக்க முடியாது. இதுதான் இன்றைய பிராந்திய அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் - புதின் சந்திப்பு அலாஸ்காவில் நடப்பது ஏன்?

ரஷ்யா, அலாஸ்கா

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ரஷ்யாவிற்கு சொந்தமான பிரதேசமாக இருந்த அலாஸ்காவில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பு

கட்டுரை தகவல்

  • மேட்லைன் ஹால்பர்ட்

  • பிபிசி செய்திகள்

  • கிறிஸ்டல் ஹேய்ஸ்

  • பிபிசி செய்திகள்

  • 14 ஆகஸ்ட் 2025, 05:28 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதைப் பற்றி விவாதிக்க, ஆகஸ்ட் 15, வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திக்கவிருக்கின்றனர். இந்த சந்திப்பு அலாஸ்காவில் நடைபெறவிருக்கிறது.

யுக்ரேனில் போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால், மேலும் பல கடுமையான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா விதித்திருந்த காலக்கெடு முடிவடையவிருந்த நாளன்று டிரம்ப் இந்த சந்திப்பு பற்றிய செய்தியை அறிவித்தார்.

டிரம்பின் உத்தரவின் பேரில் ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையே இந்த கோடையில் நடைபெற்ற மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இரு தரப்பினரும் எந்தவொரு முடிவுக்கும் வரவில்லை.

ஒரு காலத்தில் ரஷ்யாவிற்கு சொந்தமான பிரதேசமாக இருந்த அலாஸ்காவில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பைப் பற்றி இதுவரை வெளியான தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம்.

டிரம்ப் - புதின் சந்திப்பு, அலாஸ்கா, ஜெலன்ஸ்கி, ரஷ்யா - யுக்ரேன், அமெரிக்கா

பட மூலாதாரம், GETTY IMAGES

சந்திப்பு அலாஸ்காவில் நடப்பது ஏன்?

ரஷ்யாவுக்கு சொந்தமான அலாஸ்காவை 1867ஆம் ஆண்டில் அமெரிக்கா வாங்கியது. 1959இல் அமெரிக்க மாகாணங்களில் ஒன்றாக மாறிய ரஷ்யாவின் பழைய நகரம் ஒன்றில் நடைபெறும் சந்திப்பு என்பது, இந்த சந்திப்பை சரித்திர முக்கியத்துவம் பெறச் செய்கிறது.

அமெரிக்காவும் ரஷ்யாவும் அண்டை நாடுகள், பெரிங் ஜலசந்தி மட்டுமே அவற்றைப் பிரிக்கிறது என்பதை ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் சுட்டிக்காட்டுகிறார்.

"எங்கள் தூதுக்குழுவினர் பெரிங் ஜலசந்தியின் மீது பறப்பதும், அலாஸ்காவில் நடைபெறவிருக்கும் இரு நாடுகளின் தலைவர்களின் முக்கியமான மற்றும் எதிர்பார்க்கப்பட்ட உச்சிமாநாடும் மிகவும் தர்க்கரீதியானதாகவே தெரிகிறது" என்று உஷாகோவ் கூறினார்.

2021 மார்ச் மாதத்தில், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜோ பைடனால் புதிதாக உருவாக்கப்பட்ட ராஜதந்திர மற்றும் தேசிய பாதுகாப்புக் குழு, ஆங்கரேஜில், சீனாவின் பாதுகாப்புக் குழுவை சந்தித்தபோது, அலாஸ்கா கடைசியாக ஒரு அமெரிக்க ராஜதந்திர நிகழ்வின் மையமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்கவில்லை. சந்திப்பின் விளைவால் கடும் கோபமடைந்த சீனா, அமெரிக்கர்கள் "உயர்வு மனப்பான்மை மற்றும் பாசாங்குத்தனம்" கொண்டவர்கள் என்று குற்றம் சாட்டியது.

அலாஸ்காவில் டிரம்பும் புதினும் எங்கு சந்திப்பார்கள்?

இரு நாட்டு அதிபர்களும் அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் சந்திப்பார்கள் என்று வெள்ளை மாளிகை செவ்வாயன்று (2025, ஆகஸ்ட் 11) உறுதிப்படுத்தியது.

இருதரப்பு ஒப்பந்தத்தை அறிவிக்கும் போது, அந்த இடம் "பல காரணங்களுக்காக மிகவும் பிரபலமானதாக" இருக்கும் என்று டிரம்ப் கூறினார், அது மாகாணத்தின் மிகப்பெரிய நகரத்தில் இருக்கும் என்பதை அவர் வெளியிடவில்லை.

அலாஸ்காவின் மிகப்பெரிய ராணுவ நிறுவலான எல்மென்டார்ஃப்-ரிச்சர்ட்சன் கூட்டுத் தளத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்கள் தங்க வைக்கப்படுவார்கள். 64,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தளம் ஆர்க்டிக் ராணுவத் தயார்நிலைக்கு அமெரிக்காவின் முக்கிய தளமாகும்.

டிரம்ப்-புதின் சந்திப்பு பின்னணி

யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் கடுமையாக முயற்சித்து வருகிறார், இருந்தபோதிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க வெற்றி ஏற்படவில்லை.

முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தலில் தான் வெற்றிபெற்று பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நம்புவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

மேலும், 2022இல் ரஷ்யா யுக்ரேனின் மீது படையெடுத்த சமயத்தில் தான் அதிபராக இருந்திருந்தால், இந்தப் போர் "ஒருபோதும் நடந்திருக்காது" என்றும் அவர் பலமுறை வலுவாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம்,பிபிசியிடம் பேசிய டிரம்ப், புதினால் தான் "ஏமாற்றமடைந்ததாக" தெரிவித்தார்.

இதுபோன்ற சூழலில், உடனடியாக ரஷ்யா போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது இன்னும் பல கடுமையான அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆகஸ்ட் 8ஆம் தேதி புதினுக்கு காலக்கெடு நிர்ணயித்தார் டிரம்ப்.

காலக்கெடு நெருங்கிய நிலையில், ஆகஸ்ட் 15 அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தான் நேரில் சந்திப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

புதன்கிழமையன்று அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோவில் புதினை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தைகள், "மிகவும் பயனுள்ளதாக" இருந்த நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தான் ரஷ்ய அதிபரை சந்திக்கவிருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

இந்த சந்திப்பிற்கு முன்னதாக, இருதரப்பும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற ஊகங்களை வெள்ளை மாளிகை நிராகரித்தது.

திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவர புதினை வலியுறுத்துவதே அவரை சந்திப்பதன் முக்கிய நோக்கம் என்றும் இது "உணர்ச்சிபூர்வமான சந்திப்பாக" இருக்கும் என்றும் தெரிவித்தார்.

டிரம்ப் - புதின் சந்திப்பு, அலாஸ்கா, ஜெலன்ஸ்கி, ரஷ்யா - யுக்ரேன், அமெரிக்கா

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, யுக்ரேனின் ஐரோப்பியக் கூட்டாளிகளான பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் (இடது) மற்றும் பிரிட்டனின் பிரதமர் கியர் ஸ்டாமர் (வலது) — அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தனர்

அலாஸ்கா கூட்டத்தில் யுக்ரேனும் கலந்துகொள்கிறதா?

யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது சந்தேகம் என்றே தெரிகிறது. திங்களன்று இந்தக் கூட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியபோது, "அவர் கலந்துக்கொள்ளலாம் என்றே நான் கூறுவேன், ஆனால் அவர் இதுவரை பல கூட்டங்களில் கலந்துகொண்டார்" என்று தெரிவித்தார்.

இருப்பினும், அலாஸ்கா சந்திப்பிற்குப் பிறகு, தான் அழைக்கும் முதல் நபர் ஜெலென்ஸ்கியாகவே இருப்பார் என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்க அதிபர் புதினுடனான நேரடி சந்திப்புக்கு முன்னதாக, புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 13) டிரம்பும் ஜெலன்ஸ்கியும் மெய்நிகர் முறையில் சந்தித்துப் பேசுவார்கள் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பின்னர் தெரிவித்தார். ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பில் பல ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொள்வார்கள்.

டிரம்ப், புதின் மற்றும் ஜெலன்ஸ்கி என மூன்று தலைவர்களும் கலந்துகொள்ளும் முத்தரப்பு சந்திப்பை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை முன்பு கூறியிருந்தது. ஆனால், ஜெலன்ஸ்கியை விலக்க வேண்டும் என்று புதின் கோரியிருந்தார்.

யுக்ரேனின் ஈடுபாடு இல்லாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் "உயிரற்ற முடிவுகளுக்கு" சமமானதாக இருக்கும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

சந்திப்பும் இரு தரப்பினரின் எதிர்பார்ப்பும்

போர் முடிவுக்கு வர வேண்டும் என்று ரஷ்யாவும் யுக்ரேனும் நீண்ட காலமாக கூறி வந்தாலும், ஒரு நாடு கடுமையாக எதிர்க்கும் விஷயத்தையே மற்றொரு நாடு விரும்புகிறது என்பது முக்கியமான சிக்கலாக இருந்துவருகிறது.

" சில பகுதிகளை [ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட] யுக்ரேனுக்குத் திரும்பப் பெற்றுத் தர முயற்சிக்கப் போகிறேன்" என்று திங்களன்று டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் "சில பரிமாற்றங்களும், நில மாற்றங்களும்" இருக்கலாம் என்றும் அவர் முன்னெச்சரிக்கையும் செய்துள்ளார்.

இருப்பினும், க்ரைமியா உட்பட மாஸ்கோ கைப்பற்றிய பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை ஏற்கப்போவதில்லை என்பதில் யுக்ரேன் உறுதியாக உள்ளது.

பிரதேசங்களை "மாற்றிக்கொள்ளும்" எந்தவொரு யோசனையையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று இந்த வாரம் கூறிய ஜெலென்ஸ்கி, "ரஷ்யா செய்த செயலுக்கு நாங்கள் பரிசு வழங்க முடியாது" என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டார்.

ரஷ்ய அதிபர் புதினும், தனது பிராந்திய கோரிக்கைகள், யுக்ரேன் நடுநிலைமையாக இருப்பது மற்றும் ராணுவத்தின் எதிர்கால அளவு போன்ற பிரச்னைக்குரிய பல விசயங்களில் இருந்து பின்வாங்கவில்லை.

தனது படைகளை ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் கொண்டு வருவதற்காக யுக்ரேனை மேற்கத்திய தற்காப்பு கூட்டணியான நேட்டோ பயன்படுத்திக் கொள்கிறது என்று நம்பிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார்.

யுக்ரேனின் சில பகுதிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பிய தலைவர்களை சமாதானப்படுத்த, டிரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருவதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் ரஷ்யாவை க்ரைமிய தீபகற்பத்தின் கட்டுப்பாட்டை வைத்திருக்க அனுமதிக்கும், மேலும் கிழக்கு யுக்ரேனின் டான்பாஸ் பகுதியை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கும், இது டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா, 2014இல் க்ரைமியாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது மற்றும் ரஷ்ய படைகள் டான்பாஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துகின்றன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், தற்போது தனது ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சன் மற்றும் சபோரிஷியாவை ரஷ்யா விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கலாம்.

ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், எந்தவொரு எதிர்கால ஒப்பந்தமும் "யாரையும் முழுமையாக திருப்திப்படுத்தவோ, மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யவோ போவதில்லை" என்று கூறினார்.

மேலும், "இங்கே சமாதானம் செய்ய வேண்டும்... யாரையும் விரல் நீட்டி பேசமுடியாது," என்று அவர் கூறினார்.

"அமைதிக்கான ஒரே வழி, மக்களை ஒன்று சேரும்படி கட்டாயப்படுத்தி, வழிநடத்திச் செல்லக்கூடிய தீர்க்கமான தலைவர் ஒருவரைக் கொண்டிருப்பதாகும்" என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c80dg4lj77lo

  • கருத்துக்கள உறவுகள்

செத்தகிளிக்கு அலாஸ்காவில் வைத்து சீவிச் சிங்காரம் இருக்கு!😂

  • கருத்துக்கள உறவுகள்

ரம் எப்படியாவது போர்நிறுத்தத்தைக் கொண்டுவந்து சரித்திரத்தில் இடம்பெற எண்ணுகிறார்.(நோபல் பரிசு)

பூட்டினைப் பொறுத்தவரை உக்ரேன் நேட்டோவில் சேர முடியாது.

பிடித்த இடத்தை விட முடியாது.

இரண்டுக்கும் ரம் தலையசைப்பார் என்றே எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ரம் எப்படியாவது போர்நிறுத்தத்தைக் கொண்டுவந்து சரித்திரத்தில் இடம்பெற எண்ணுகிறார்.(நோபல் பரிசு)

பூட்டினைப் பொறுத்தவரை உக்ரேன் நேட்டோவில் சேர முடியாது.

பிடித்த இடத்தை விட முடியாது.

இரண்டுக்கும் ரம் தலையசைப்பார் என்றே எண்ணுகிறேன்.

அது உண்மையில் ஒரு புத்திசாலித்தனமான முடிவுதான், ஆனால் தற்போது உடனடி போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும், பின்னர் பேச்சுவார்த்தை தொடரலாம் எனவும் உக்கிரேனின் இடங்கள் தொடர்பிலான விட்டுக்கொடுப்பினை உக்கிரேனே தீர்மானிக்க வேண்டும் என கூறப்படுகிறது, உக்கிரேன் சட்டத்திற்கு அமைவாக ஒரு வாக்கெடுப்பின் மூலமே அது தீர்மானிக்கப்படவேண்டும்.

பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படுவதனை செலன்ஸ்கி விரும்பவில்லை என தெரிகிறது, நிரந்தர தீர்வு ஏற்படும் பட்சத்தில் ஒரு தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலையினை செலன்ஸ்கி விரும்பவில்லை போல தெரிகிறது, போரை தொடர்வதில் ஐரோப்பிய ஒன்றியம் ஆர்வம் காட்டுகிறது.

பிரான்ஸ் அதிபர், உக்கிரேன் நேட்டோவில் அங்கம் பெறாது ஆனால் பாதுகாப்பு உறுதி வழங்கப்படும் எனும் ஒரு கர்த்தினை முன்வைத்துள்ளார், இது அமெரிக்க பிரசன்னம் உக்கிரேனில் ஏற்படுவதற்கான ஐரோப்பிய நாடுகளின் விருப்பாக இருக்கலாம்.

இந்த பேச்சுவார்த்தையில் இரஸ்சியாவிற்கு இழப்பதற்கு எதுவுமில்லை, அலாஸ்கா கனிமங்களை வழங்குவது மற்றும் போயிங் உதிர்ப்பாகங்கலை இரஸ்சியா பெறுவது பற்றிய விடயங்கள் இரஸ்சியாவிற்கு இலாபகரமற்ற அமெரிக்காவிற்கு மட்டும் இலாபமான முயற்சி, இந்த பேச்சுவார்த்தை முறிந்தால் இரஸ்சியா விரும்பும் விடயங்கள் கிடைக்காவிட்டால் இரஸ்சியா இந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலகிவிடும்.

அமெரிக்கா அதன் பின்னர் பொருளாதார தடையினை போடலாம் நீண்ட தூர ஏவுகணைகள் வழங்கலாம் ஆனால் போரின் போக்கினை மாற்ற முடியாது.

இது ஒன்றும் இரஸ்சியாவிற்கு புதிய விடயமல்ல, ஆனால் இந்த சமாதான பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்தால் இரஸ்சியாவிற்கு இலாபம் உண்டு அதனால் இரஸ்சியாவிற்கு இந்த் பேச்சினால் இழப்பதற்கு எதுவுமில்லை ஆனால் அடையகூடிய இலாபம் உண்டு மறுதரப்பிற்கு இந்த பேச்சுவார்த்தையால் எந்த இலாபமும் இல்லை ஆனால் இழப்பு மட்டுமே உண்டு.

ஆனால் ஒரு விதி விலக்கு செலன்ஸ்கி மட்டுமே.🤣

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாக ட்ரம்பிற்கு இந்த ப்பெச்சுவார்த்தை மிக முக்கியமான ஒன்றாக இருக்கலாம், ட்ரம்பிற்கு மட்டுமல்ல அமெரிக்க அரசிற்கும் இந்த பேச்சுவார்த்தை ஒரு முக்கியமான ஒன்றாக இருக்கலாம், அமெரிக்க பாதுகாப்பு பெருமளவில் ஆசிய நாடுகளில் தங்கியுள்ள நிலையில் ஒரு புறம் திட்டமிடாத வரிப்போரின் தாக்கம் இருக்கும் நிலையில் இந்த போரை தொடர்ந்தால் அமெரிக்காவின் பாதுகாப்பு நிலை கேள்விக்குள்ளாகலாம் அதனால் ஒரு புறம் ஐரோப்பிய நாடுகளை சமாதானப்படுத்திக்கொண்டு மறுபுறம் ஈழப்பிரியன் கூறுவது இரஸ்சியாவிற்கு சாதகமான தீர்வினை எட்டுவதற்கு அதிகமான வாய்ப்புள்ளதனை மறுக்கமுடியாதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் ட்ரம்ப் சந்திப்பு நேரலை.

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் பார்க்க பூட்டின் டிரம்ப்புடன் ஒப்பிடும்போது வயது போனவர் போல் தென்படுகின்றது. இன்னும் நான்கு ஐந்து வருடம் வண்டியை இழுப்பாரோ? பூட்டினுக்கு பிறகு யார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தால் ஹிட்லருக்கு சமமாக விமர்சிக்கப்படும் புட்டினுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் புட்டினும் டொனால்ட் ரம்ப் அவர்களும் பள்ளி தோழர்கள் போல் கை குலுக்கி உரையாடுகின்றார்கள்.

இஸ்ரேல் காஸாவை ஆக்கிரமிப்பதை ஐரோப்பிய ஒன்றியம் வாய் மூடிக்கொண்டு ஆதரிக்கும் போல்.....உக்ரேனில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களை விட்டுக்கொடுப்பதுதான் நியாயம்.

4 minutes ago, நியாயம் said:

படத்தில் பார்க்க பூட்டின் டிரம்ப்புடன் ஒப்பிடும்போது வயது போனவர் போல் தென்படுகின்றது. இன்னும் நான்கு ஐந்து வருடம் வண்டியை இழுப்பாரோ? பூட்டினுக்கு பிறகு யார்?

அமெரிக்காவின் திரைமறைவு அரசியல் எப்படி பலமானதோ அதே போல் ரஷ்ய ரஷ்ய திரைமறைவு அரசியலும்.....

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, நியாயம் said:

இன்னும் நான்கு ஐந்து வருடம் வண்டியை இழுப்பாரோ? பூட்டினுக்கு பிறகு யார்?

சர்வாதிகார ஆட்சியில் இவை பிரச்சனை தான் பிரசடிமிட்ரி மெட்வெடேவ் என்று ஒருவர் முன்பு ரஷ்ய அதிபராக 4 வருடங்கள் இருந்துவிட்டு இதுவரை பூட்டினுக்கு பொம்மையாக இருந்து காத்திருக்கின்றார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, vasee said:

புட்டின் ட்ரம்ப் சந்திப்பு நேரலை.

உலகின் முக்கிய இரு தலைவர்களது உக்ரேன் சம்பந்தமான பத்திரிகை சந்திப்பு முடிவடைந்தது. ஆனால் இரு தலைவர்களும் உண்மையான நிலவரத்தை கூறவில்லை என ஜேர்மனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எல்லாவற்றையும் விட உக்ரேன் விடயம் தொடர்பாக சந்திப்பு நடைபெற்ற அலஸ்கா நிலப்பரப்பு உண்மையில் ரஷ்யாவிற்கு சொந்தமானது எனவும் 18ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவிற்கு விற்கப்பட்டது எனவும் ஊடகவியளார்கள் ஆராய ஆரம்பித்து விட்டார்களாம்.

அடி யாருக்கோ எங்கேயோ விழப்போகின்றது என்பது இன்றைய சந்திப்புகள் சாத்திரம் கூறுகின்றது.

புட்டினின் விருப்பம் ரம்ப் அவர்களுடன் அடுத்த சந்திப்பு மொஸ்கோவில்......பாவம் செலென்ஸ்கி....😂

எனக்கு என்னவெண்டால் அலஸ்காவை திருப்பி தா....உக்ரேனைநீ வைச்சிரு பீலிங்...😎

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிப்பாளன் விளாடிமிர் புடினுடன் எனக்கு எப்போதும் நல்ல உறவு fantastic relationship உண்டு என்று ட்ரம் சொல்லும் பேnது தெரிந்து கொள்ளலாம் பேச்சுவார்த்தை நேர்மை பற்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவும் ரஷ்யாவும் தான் இந்த உலகை நிர்ணயிக்கும் சக்திகள் என்பதை உறுதி படுத்தும் சந்திப்பாக பலர் கூறுகின்றார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிரிகள் இருவரும் சந்தித்திருக்கின்றார்கள். கதை அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உலகின் முக்கிய இரு தலைவர்களது உக்ரேன் சம்பந்தமான பத்திரிகை சந்திப்பு முடிவடைந்தது. ஆனால் இரு தலைவர்களும் உண்மையான நிலவரத்தை கூறவில்லை என ஜேர்மனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எல்லாவற்றையும் விட உக்ரேன் விடயம் தொடர்பாக சந்திப்பு நடைபெற்ற அலஸ்கா நிலப்பரப்பு உண்மையில் ரஷ்யாவிற்கு சொந்தமானது எனவும் 18ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவிற்கு விற்கப்பட்டது எனவும் ஊடகவியளார்கள் ஆராய ஆரம்பித்து விட்டார்களாம்.

அடி யாருக்கோ எங்கேயோ விழப்போகின்றது என்பது இன்றைய சந்திப்புகள் சாத்திரம் கூறுகின்றது.

புட்டினின் விருப்பம் ரம்ப் அவர்களுடன் அடுத்த சந்திப்பு மொஸ்கோவில்......பாவம் செலென்ஸ்கி....😂

எனக்கு என்னவெண்டால் அலஸ்காவை திருப்பி தா....உக்ரேனைநீ வைச்சிரு பீலிங்...😎

அலாஸ்காவினை இரஸ்சியா பெற முயற்சிக்கவில்லை என கருதுகிறேன், அது முடிந்த ஒரு தீர்வு.

அது பிரச்சினைக்கு தீர்வாகவும் இருக்க போவதில்லை என கருதுகிறேன், இரஸ்சியா நிலப்பரப்புக்களை பெறுவதற்காக முயற்சிக்கவில்லை மாறாக தமது பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிக்கிறார்கள்.

பலஸ்தீன மேற்கு கரை போன்ற ஒரு தீர்வினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இரஸ்சியர்கள் வாழும் இந்த பகுதிகளின் பொருளாதார இராணுவ அதிகாரங்கள் மட்டும் இரஸ்சியாவிடம் இருக்கும் ஆனால் குறித்த பகுதிகள் உக்கிரேன் பகுதிகள்தான்.

இது கொங்க் கொங்கினை போன்ற தீர்வினை விட உக்கிரேனுக்கு அதிக ஆழுமை இருக்கும் எனகருதுகிறேன்.

இது ஒன்றும் பாதகமான தீர்வல்ல, பெரும்பான்மையான இரஸ்சியர்கள் வாழும் பகுதியில் அவர்கள் கடந்த காலங்களில் உக்கிரேனியர்களின் அடக்குமுறையினால் பாதிக்கப்பட்ட நிலையில் இது ஒரு சிறந்த முடிவுதான்.

ஆனால் தனிய இரஸ்சியர்கள் வாழும் பகுதி மட்டும் இரஸ்சியாவினால் பாதுகாகப்படுவதுடன் நிற்காமல் மற்ற இன மக்களும் உக்கிரேனியர்களினால் அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகிறார்கள் அவர்களது உரிமைகளையும் கவனத்தில் கொள்ளப்பட்டு அவர்களிற்கான அலகுகள் உருவாக்கப்பட வேண்டும், உதாரணமாக பொலிஸ், கங்கேரியன், ருமேனியன் மக்கள் உக்கிரேனால் அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகிறார்கள் அவர்களது உரிமைகளை பேண் அந்த மக்களுக்கும் ஏற்ற ஒரு பொதுவான தீர்விற்கு இந்த பேச்சுவார்த்தையில் முயற்சித்தால் சிறப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

534163926_839342238773980_12734262405718

"போர் முடிவது செலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது"

உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு வருவது ஜெலன்ஸ்கியின் கையில்தான் இருக்கிறது - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

உக்ரைனில் அமைதியை கொண்டுவர விரும்புவதாக புதின் கூறியிருந்த நிலையில், டிரம்ப் கருத்து.

Thanthi TV 

ஆஹா... பந்து இப்ப, செலென்ஸ்கியின் கையில். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.