Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

10 AUG, 2025 | 10:50 PM

image

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக குடிக்கொண்டுள்ளமை அதனால் ஏற்படும் பாதிப்பை மிக வன்மையாக கண்டிக்கிறோம். இராணுவ பிரசன்னத்துக்கு பாரியதொரு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(15) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஹர்த்தாலினால் முழுமையாக முடங்க வேண்டும். எமது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அநீதிகளை கருத்திற் கொண்டு வர்த்தகர்கள் அன்றைய தினம் கடையடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

முத்தையன்கட்டு  இளைஞன் கொலை வன்மையாக கண்டித்தக்கது. பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள். செம்மணி இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (10) ஊடக சந்திப்பொன்றை நடத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் சனிக்கிழமை (09) அதிகாலை  இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 2025.08.08 ஆம் திகதியன்று நான்கு அல்லது ஐந்து பேர் முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு இராணுவத்தினரால்  அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நால்வர் முகாமில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளார்கள். ஒருவர் காணாமல் போனதாகவும் குறிப்பிடப்பட்டு, காணாமல் போனவரின் உடல் தான் குளத்தில் இருந்து பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

முகாமுக்குள் வைத்து இராணுவத்தினர் தம்மை மிக மோசமாக தாக்கியதாக தப்பித்து வந்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இராணுவத்தினரால் தாக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட  இளைஞரின் சடலம் குளத்தில் வீசப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை செய்யப்பட வேண்டும். பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் மாலை முல்லைத்தீவு பொலிஸாரினால் ஒருசில இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் மூவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பிரதான விடயம் யாதெனில் ஒரு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது பிரயோசனமற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் அப்பிரதேச மக்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள். மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். இதற்கு செம்மணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

சித்துப்பாத்தி செம்மணி பகுதியில் குறுகிய காலத்துக்குள் 147 இற்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பல வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்கள்  என்பது தற்போது தெரியவருகிறது.

இவ்வாறான பின்னணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக குடிக்கொண்டுள்ளதாகலும் அதனால் ஏற்படும் பாதிப்பை மிக வன்மையாக கண்டிக்கிறோம். அதேவேளை இராணுவ பிரசன்னத்துக்கு பாரியதொரு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில்  முழுமையான ஹர்த்தாலில் ஈடுபடுமாறு சகல தரப்பினரிடமும் கோருகிறோம். எமது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அநீதிகளை கருத்திற் கொண்டு வர்த்தகர்கள் அன்றைய தினம் கடையடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சகல நடவடிக்கைகளையும் கைவிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுமையாக முடங்க வேண்டும். இதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகிறோம். ஏனைய அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், வர்த்தகர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/222278

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை ஆதரிக்கிறோம் : வடகிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் - மனோ கணேசன்

Published By: Digital Desk 3

11 Aug, 2025 | 04:21 PM

image

“நீதியான விசாரணை”, “வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை (15) நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம் என தெரிவித்து அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஐந்து தமிழ் இளைஞர்கள், 8 ஆம் திகதி முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தப்பிச் சென்றவர்களில் ஒருவரான, கபில்ராஜ், 9 ஆம் திகதி  முல்லை முத்தையன் கட்டு குளத்தில் சடலமாக மீட்கபட்டுள்ளார். தப்பிச் சென்ற ஏனைய நால்வர், தம்மை இராணுவத்தினர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே என்ன நடந்தது என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல.

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழரசு கட்சி, “நீதியான விசாரணை”, “ வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம்.

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க, இது தொடர்பில் உடன் விசாரணை, தண்டனைக்குரிய சட்ட நடவடிக்கை, ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் இதை அடிப்படையாக கொண்டு, வடக்கு கிழக்கின் மேலதிக இராணுவ பிரசன்னத்தை உடன் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“இராணுவ பிரசன்னம் குறைப்பு” என்பதுதான் இந்த ஹர்த்தால் சொல்ல போகும் செய்தி. போர் செய்த இராணுவம் சும்மா இருக்காது. அதிலும் இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ சிப்பாய்களின் மனங்களில் இனவாதம் தங்கி இருக்கத்தான் செய்யும். எனவே அவர்களை தென்னிலங்கைக்கு கொண்டு வந்து, “குளம் வெட்டுவது, குளத்தில் தூர் எடுப்பது, வீதி அமைப்பது, வீடு கட்டுவது, ஹோட்டல் நடத்துவது, தோட்டம் செய்வது, காய்கறி சந்தை நடத்துவது” போன்ற இன்ன பிற அபிவிருத்தி பணிகளில், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க, ஈடுபடுத்த வேண்டும்.

“இதற்கு முன் இப்படியான சம்பவங்கள் நடக்க வில்லையா? அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?” என எம்மை பார்த்து, தம்மை அறிவாளிகள் என நினைத்து கொண்டு, கேள்வி கேட்கும், ஜேவிபி அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோரின் வாய்களையும் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க மூட வேண்டும். “அன்றைய அரசுகள் மாறி, மாறி செய்தவற்றை செய்ய நாம் வரவில்லை. மாற்றி செய்யவே  நாம் வந்தோம்”, என நீங்கள் தான் மக்களுக்கு கூறினீர்கள். அதையே தான் நீங்களும் செய்ய வந்தீர்கள் என்றால், நாம் எதிர்க்கத்தான் செய்வோம்.

அரச இராணுவ பயங்கரவாதத்தை, நாம் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும் எதிர்கிறோம். எப்போதும் எதிர்ப்போம். வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடை பெற அழைப்பு விடுத்து இருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் கோரிக்கையை, தமிழ் முற்போக்கு கூட்டணி  வரவேற்று, ஆதரவை அறிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார். 

வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை ஆதரிக்கிறோம் : வடகிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் - மனோ கணேசன் | Virakesari.lk

முல்லைத்தீவு இராணுவ தாக்குதல் தொடர்பான ஹர்த்தாலுக்கு இலங்கையராகவும், மலையக தழிழராகவும் ஜீவன் தொண்டமான் முழுமையான ஆதரவு.

11 Aug, 2025 | 01:28 PM

image

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் வெள்ளிக்கிழமை (15) அனுசரிக்கப்படவுள்ள ‘ஹர்த்தால்’ போராட்டத்திற்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், எனது முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துக்கொள்கின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த வியாழக்கிழமை (07), முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டுப் பகுதியில் 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர், இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டு வந்தார். பின்னர் கடந்த சனிக்கிழமை (09) அன்று, அவரது சடலம் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து மீட்கப்பட்டது.

நீதிக்கான கோரிக்கையிலும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு, எனது ஒற்றுமையையும் உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துகின்றேன். 

யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்வது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்துகின்றேன் என்றார். 

முல்லைத்தீவு இராணுவ தாக்குதல் தொடர்பான ஹர்த்தாலுக்கு இலங்கையராகவும், மலையக தழிழராகவும் ஜீவன் தொண்டமான் முழுமையான ஆதரவு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்த காலம் தொட்டு இன்றுவரை கதவடைப்பு நடைபெறுகின்றது.

கதவடைப்பை பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பும் வைக்கின்றது.

மக்களின் நாளாந்த வாழ்க்கையை பாதித்தது நீங்கலாக கதவடைப்புக்கள் அவை வைக்கப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றி உள்ளனவா?

Edited by நியாயம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

நாம் பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்த காலம் தொட்டு இன்றுவரை கதவடைப்பு நடைபெறுகின்றது.

கதவடைப்பை பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பும் வைக்கின்றது.

மக்களின் நாளாந்த வாழ்க்கையை பாதித்தது நீங்கலாக கதவடைப்புக்கள் அவை வைக்கப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றி உள்ளனவா?

நாங்கள் பாடசாலைக்கு செல்ல முதலிருந்து பொலிசும் ,இராணுவமும் அட்டுழியங்களை செய்கின்றனர்...பெரிய இனப்ப்டுகொலை நடந்த பின்பும் அட்டுழிய்ங்களை செய்கின்றனர் ...

அவர்கள் நியாயமாக நடந்தால் மக்கள் அநியாயமாக நடக்க மாட்டார்கள் ...

😆

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன்2010 இல் இருந்து அரசியலில இருக்கிறார். தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கக் கூடிய நிலையிலும் இருந்திருக்கிறார்.மைத்திரி ஜனாதிபதியாக இருந்த காலத்தில்வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத வகையில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்த வேளையில் ஒருங்கிணைந்த கூட்டரசாங்கத்துக்கு முழு ஆதரவளித்த எதிர்க்கட்சியில் இருந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம். இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இராணுவ பிரசன்னத்தைக் குறைக்குமாறு கோரவில்லை.ரணில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் பல முறை தமிழத்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாலேயே தப்பிப் பிழைத்தது.அப்பொழுதெல்லாம் இதனை ஒரு துருப்புச்சீட்டாகாப் பாவித்து ஏன் பேரம் பேசவில்லை. மாறாக அதே இராணுவ பாதுகாப்புடனேயேதமிழ்ப்பிரதேங்களில் உலாவித் திரிந்தார்.இப்பொழுது மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் வடமாகாண முதலமைச்சர் கனவில் பம்மாத்து அரசியல் செய்கிறார். இது ஒரேநாளில் நெல் முளைத்த வயலை ஊழுது விதைத்து அறுவடை செய்து நெருப்பில்லாம் பொங்கல் பொங்கி படம்காட்டிய நடிப்பு அரசியல் போலத்தான் இ.ருக்கப் போகிறது.நல்லூர்த்திருவிழா காலத்தில் யாழ்நகர்பகுதியில் சனநடமாட்டம் அதிகரித்த வேளையில் வர்த்தகர்களின் வணிகத்துக்கு ஆப்பு வைக்க நினைக்கிறார். நல்லூர்த்திருவிழாவையே நம்பி வாழும்கடலை கச்சான்,தும்புமிட்டாயக் கடைகளையும் சாத்த வேண்டும் என்று சொல்கிறாரோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, புலவர் said:

மைத்திரி ஜனாதிபதியாக இருந்த காலத்தில்வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத வகையில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்த வேளையில் ஒருங்கிணைந்த கூட்டரசாங்கத்துக்கு முழு ஆதரவளித்த எதிர்க்கட்சியில் இருந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம். இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இராணுவ பிரசன்னத்தைக் குறைக்குமாறு கோரவில்லை.ரணில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் பல முறை தமிழத்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாலேயே தப்பிப் பிழைத்தது.அப்பொழுதெல்லாம் இதனை ஒரு துருப்புச்சீட்டாகாப் பாவித்து ஏன் பேரம் பேசவில்லை. மாறாக அதே இராணுவ பாதுகாப்புடனேயேதமிழ்ப்பிரதேங்களில் உலாவித் திரிந்தார்.இப்பொழுது மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் வடமாகாண முதலமைச்சர் கனவில் பம்மாத்து அரசியல் செய்கிறார். இது ஒரேநாளில் நெல் முளைத்த வயலை ஊழுது விதைத்து அறுவடை செய்து நெருப்பில்லாம் பொங்கல் பொங்கி

எம்பியாக இருக்கும் போது ஒரு கொள்கை...

வேலை வெட்டியில்லாமல் இருக்கும் போது இன்னொரு வகையான கொள்கை...

இதெல்லாம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

நாங்கள் பாடசாலைக்கு செல்ல முதலிருந்து பொலிசும் ,இராணுவமும் அட்டுழியங்களை செய்கின்றனர்...பெரிய இனப்ப்டுகொலை நடந்த பின்பும் அட்டுழிய்ங்களை செய்கின்றனர் ...

அவர்கள் நியாயமாக நடந்தால் மக்கள் அநியாயமாக நடக்க மாட்டார்கள் ...

😆

எதிர்ப்பை வெளிப்படுத்த கதவடைப்பு வினைத்திறனான பொறிமுறையா என்பதுதான் எனது வினா.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே அரசியல் செய்து வெற்றி அடைய வேண்டும் என்றால் வழமை போல மக்களை பாதிக்கின்ற செயற்பாடுகளே பயன் தரும் என்ற முடிவுக்கு சுமந்திரன் வந்திருக்கின்றார் போல தெரிகின்றது 😒

வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை ஆதரிக்கிறோம் - மனோ கணேசன்

ஜீவன் தொண்டமான் முழுமையான ஆதரவு.

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி - ரணில் அரசாங்க உறவும் ஹர்த்தாலும்

******** ****** ****

*இராணுவ எண்ணிக்கையை குறைக்க ரணில் முன்வைத்த யோசனை.

*இராணுவ எண்ணிக்கை குறைப்பு - IMF பரிந்துரை!

*முல்லைத்தீவு சம்பவத்துக்கு பின்னணி இதுதான்!

*** *** ***

2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலில், வடக்கு கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடைபெறுகின்றன.

ஆனால், 2009 இற்கு முன்னரான முப்பது வருட ஆயுதப் போராட்டம் ஒட்டுமொத்த இன விடுதலை என்ற அடிப்படையில் நடந்தது.

ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரான முப்பது வருடங்கள் அதாவது, 1950 களில் இருந்து அஹிம்சை வழியில் நடந்தன.

அது சட்ட மறுப்பு போராட்டமாகவே இருந்தது.

இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் யாப்புச் சட்டங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்பதை மையப்படுத்தியே "தமிழ்த் தேசியம்" என்ற கோட்பாடு எழுந்தது.

ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தால் தான், ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் பேச முடியும் என்ற புதிய கற்பிதம் ஒன்றை சில தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதிகள் முன்வைத்தனர்...

இக் கற்பிதம் வேடிக்கையானது என்ற பின்னணியில், 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்தை எப்படி நோக்குவது?

தேர்தலில் தத்தமது கட்சிகளின் ஆசனங்களை அதிகரிப்பது என்ற ஒரேயொரு இலக்கைத் தவிர, வேறு அரசியல் உத்திகள் - இராஜதந்திரம் எந்த ஒரு அரசியல் கட்சியிடமாவது இருந்ததா?

ஆகக் குறைந்த பட்சம் வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு நிதி வழங்கும் நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே பரிந்துரைத்திருந்தன.

ஆனால், இப் பரிந்துரைகள் கூட உரியமுறையில் இலங்கை அரசாங்கம் செயற்படுத்த விரும்பவில்லை என்று ஏதாவது ஒரு தமிழ்க் கட்சி பிடிவாதமாக நின்று அழுத்தம் கொடுத்ததா?

இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இராணுவத்துக்கான ஓய்வூதியத் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருந்ததாக எகனாமி நெக்ஸ்ட் (EconomyNext) என்ற சஞ்சிகை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரசுரித்திருந்த கட்டுரை ஒன்றில் கூறியிருந்தது.

இக் கட்டுரையை மேற்கோள் காண்பித்து "த டிப்ளோமற்“ (thediplomat) என்ற ஆங்கில செய்தித் தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த ரதீந்திர குருவிற்ற (Rathindra Kuruwitaa) என்ற சிங்களப் பத்திரிகையாளர், ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தை (International Monetary Fund - IMF) மகிழ்விக்க, ரணில் இராணுவ எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக விமர்சித்திருந்தார்.

ஆனாலும் ஐஎம்எப் வழங்கிய பல பரிந்துரைகளின் பிரகாரம் அரச செலவினங்களை குறைக்க, இராணுச் செலவினங்களை குறைப்பது போன்ற ஒரு ஏற்பாட்டை ரணில் அப்போது செய்திருக்கிறார்.

இராணுவ எண்ணிக்கை குறைப்பு பற்றி ஐஎம்எப் ஒருபோதும் வெளிப்படையாக பரிந்துரைக்கவில்லை.

அவ்வாறிருந்தும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜேபிவியும் ரணிலின் இராணுவ எண்ணிக்கை குறைப்பு முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

ஐஎம்எப்பின் பல பரிந்துரைகளின் பிரகாரம் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமே தவிர, இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க அனுமதிக்க முடியாது என தேர்தல் பிரச்சாரங்களிலும் ஜேவிபி சொல்லியிருந்தது.

எவ்வாறாயினும் வடக்குக் கிழக்கில் இதுவரை இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அதேநேரம், வடக்கு கிழக்கு இராணுவ முகாம்கள் பற்றிய விடயங்களைத் தவிர வேறு பரிந்துரைகளுக்கு செவிசாய்க்க முடியும் என்ற தொனியில் கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்திடம் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருந்தது.

ஆகவே, இப் பின்னணியில் தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்துள்ள ஜேவிபியிடம் இராணுவத்தை குறைக்கும் திட்டத்தை எதிர்பாரக்க முடியாது.

ஆனாலும், மீள் நல்லிணக்கம் (Reconciliation) என ஐஎம்எப் அடிக்கடி ஞாபகப்படுத்தி வரும் மொழியின் உள்ளடக்கத்தின் (Content) பிரகாரம், வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். இராணுவ முகாம்கள் பலவற்றையும் மூடித்தான் ஆக வேண்டும்...

ஆனால், இதற்கு அநுர அரசாங்கம் மாத்திரமல்ல வேறு எந்தவொரு சிங்கள அரசியல் தலைவர்களும் உட்படுவார்கள் என்று கூறுவதற்கு இல்லை.

எவ்வாறாயினும் உள்ளகத் தகவல்களின் பிரகாரம், இராணுவ எண்ணிக்கைகள் குறைக்கப்பட வேண்டும் என ஐஎம்எப் அநுர அரசாங்கத்திடம் மறைமுகமாக பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகிறது. இல்லையேல் நிதி கிடைக்காது போலும்.

ஆகவே இதனை அறிந்துதான் ஹர்த்தால் ஏற்பாட்டை சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் செய்திருக்கக் கூடும்....என்ற சந்தேகங்கள் இல்லாமில்லை....

அவ்வாறு இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டால், தமது போராட்டமே காரணம் என காணிப்பித்து தமிழரசுக் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கமாகவும் அது இருக்கலாம்.

ஆனால், இராணுவ எண்ணிக்கை குறைப்பிற்கு அநுர அரசாங்கம் தயாராக இல்லை என்பதை சமீபகால அணுகுமுறைகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

இப் பின்புலத்தோடு----

2015 ஆம் ஆண்டு ரணில் - மைத்திரி அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து இலங்கையை பிணை எடுத்தது சம்பந்தன் தலைமையிலான அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும்.

இந்த ஞாபகப்படுத்தலின் பிரகாரம் ----

முல்லைத்தீவு இராணுவ முகாமுக்குச் சென்ற ஐந்து இளைஞர்கள் தாக்கப்பட்டு ஒருவர் மரணித்தமைக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியதற்கு யார் பொறுப்பு என சிந்திக்க வேண்டும்!

ஏனெனில் 2015 இல்தான் இராணுவ முகாம் விஸ்தரிப்பு - காணி அபகிரிப்பு- புத்த கோவில் கட்டும் நகர்வுகள் போன்ற ஆக்கிரமிப்புகள் சட்ட ரீதியாக மாற்றப்பட்டன. அதாவது கொழும்பை மையமாகக் கொண்ட அரச திணைக்களங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் இன்றுவரை முன்னெடுக்கப்படுகிறது.

ஆகவே -----

2015 இல் இழைத்த இக் குற்றத்துக்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டாலும், வரலாறு மன்னிக்காது. இயற்கை நீதி பதில் சொல்லும்.

ஹர்த்தால் நடத்தி சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காமல், இராணுவ எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் தொடர்பாக கொழும்பில் உள்ள ஐஎம்எப் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளை சந்திப்பது பற்றிச் சிந்திப்பதே சிறந்த பரிகாரம்.

இராணுவ எண்ணிக்கை குறைப்பு பரிந்துரை தமிழர்களுக்கானது அல்ல. இலங்கையின் பொருளாதார நெருக்கடி மீட்சிக்கானது.

இருந்தாலும், அழுத்தம் கொடுத்து குறைந்த பட்சம் இராணுவ எண்ணிக்கை குறைக்கும் பணியையாவது உருப்படியாக செய்ய வேண்டும்.

அத்துடன், ஜெனீவா மனித உரிமை சபைக்கு எழுத்து மூலம் உடனடியாகவும் கூட்டாகவும் அறிவிக்கவும் வேண்டும்.

மாறாக...

இது இன அழிப்பு என்று தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரம் போலியாகக் கருத்துச் சொல்லி, கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் வியூகங்களை வகுக்க வேண்டாம்.

இப் பிழையான அரசியல் உத்திகள் ஊடே சர்வதேசச் சட்டங்கள், புவிசார் அரசியல் தன்மைகளை அறிந்து அதன் ஊடாக காய் நகர்த்தும் இராஜதந்திர முறைமை, 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தரப்பிடம் அற்றுப் போயுள்ளது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றம் என்பதன் ஊடாக தமிழ் மரபு அடையாள அழிப்பு நடவடிக்கைகள் வெவ்வேறு வடிவங்களில் 2009 இற்குப் பின்னரும் அரங்கேறுவதற்கு இதுவே காரண - காரியம் என்பதும் பட்டவர்த்தனம்.

ஆனால் இயற்கை நீதியும் மக்களின் சமகால பட்டறிவு - உணர்வுடன் கூடிய புரிதல்களும் பலருடைய வாக்கு வங்கிச் சரிவை ஏற்படுத்தும் என்பது கண்கூடு...

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/1457391262/posts/pfbid033Brh5tG5HfTNqrkELWcoZy3LPn39sDRg411GtATRu2PzgKsDEEy7EivmTZLyB53il/?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

எவ்வாறாயினும் உள்ளகத் தகவல்களின் பிரகாரம், இராணுவ எண்ணிக்கைகள் குறைக்கப்பட வேண்டும் என ஐஎம்எப் அநுர அரசாங்கத்திடம் மறைமுகமாக பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகிறது. இல்லையேல் நிதி கிடைக்காது போலும்.

ஆகவே இதனை அறிந்துதான் ஹர்த்தால் ஏற்பாட்டை சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் செய்திருக்கக் கூடும்....என்ற சந்தேகங்கள் இல்லாமில்லை....

அவ்வாறு இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டால், தமது போராட்டமே காரணம் என காணிப்பித்து தமிழரசுக் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கமாகவும் அது இருக்கலாம்.

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ பிரசன்னம் தற்போதைய பேர் அற்ற சூழலில் நியாயப்படுத்த முடியாத ஒனரு விடயம் மட்டுமல்ல. இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழ்மக்களுக்கு சொந்தாமான காணிகள் 30 ஆண்டுகளக்கு மேலாக இராணுவத்தின் வசம் இருப்பதால் தமிழ்மக்களின் பொருளாதாரம் பலத்த அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதுமட்டுமன்றி தமிழ்மக்களுக்கு சொந்தமான காணிகளில் இராணுவம் விசாய நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றது.அதுமட்டுமன்றி வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கை அரசாங்கத்து தேவைக்கு அதிகமான இராணுவம் இருப்பது அதன் பொருளாதாரத்தை பலமடங்கு ஏப்பம் விடுகின்றது.இதற்கு செலவிடும் பணத்தை வேற ஆக்க பூர்வமான தேவைகளுக்கு ப் பயன்படுத்தலாம் என்ற கோணத்திலும் சர்வதேச நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.அதை விடுத்து வெறுமனே ஏனைய கட்சிகளோடு கலந்துரையாடாமல் தான் நினைத்த நேரத்து கர்த்தால் அறிவிப்பது நலிவடைந்திரக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தை மேலும் நலிவடையச் செய்யும். எனக்கென்னவோதமிழ்மக்கள் இந்த கர்த்தால் கோரிக்கையையே கர்தாலாக்கி விடுவார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

#ஹர்த்தால்_திகதியில்_மாற்றம்

இந்த வெள்ளிக்கிழமை (15.08.2025) நடத்த திட்டமிட்ட ஹர்த்தால் தவிர்க்கமுடியாத காரணங்களால் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு 18.08.2025) ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக சுமந்திரன் ஐயா அறிவிப்பு…

தகவல் #காலைமுரசு_மாலைப்பதிப்பு

👇👇👇கூலி திரைப்படத்தை முன்னிட்டு கர்த்தால் பின்போடப்பட்டுள்ளதாம்.ரஜனி நன்றி தெரிவிப்பாம்.

இந்திய சுதந்திர தினம் வேறையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2025 at 18:33, நியாயம் said:

நாம் பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்த காலம் தொட்டு இன்றுவரை கதவடைப்பு நடைபெறுகின்றது.

கதவடைப்பை பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பும் வைக்கின்றது.

மக்களின் நாளாந்த வாழ்க்கையை பாதித்தது நீங்கலாக கதவடைப்புக்கள் அவை வைக்கப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றி உள்ளனவா?

சுமந்திரன் தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது பைத்தியக்காரத்தனமான செயல்களில் ஈடுபட்டு, தனது மூக்கை அறுத்துக் கொள்வதுதான் வழமை. அதில்... செல்வநாயகம் காலத்து அரதப் பழசான கடையடைப்பை தூசிதட்டி எடுத்து, இப்போ செய்ய முற்படுகின்றார். அதற்கு மக்களின் ஆதரவு இல்லை என்று இப்போதே தெரிந்து விட்டது.

சுத்துமாத்து சுமந்திரன் புதிதாக சிந்தித்து, கீழ் வரும் போராட்டங்களை முன் எடுக்க வேண்டும்.

1) தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தல்.

2) சாகும் வரை உண்ணா விரதம்.

3) பெற்றோல் ஊத்தி தீக்குளித்தல்.

போன்றவற்றை செய்தால்... மக்களின் அமோக ஆதரவு அவருக்கு நிச்சயம் உண்டு. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்தால் ஒத்திவைப்பு: 18ஆம் திகதியே நடக்கும்!

1999724848.jpeg

ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்ட ஹர்த்தால், ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுமந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழர்களின் தாயகமான வடக்கு - கிழக்கில் நிலைகொண்டுள்ள அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்றும், முத்துஐயன் கட்டுப் பகுதியில் இராணுவத்தினரின் தாக்குதலில் உயிரிழந்ததாக் கூறப்படும் இளைஞரின் இறப்புக்கு நீதிகோரியும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஹர்த்தாலை நடத்துவதற்கு தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

எனினும், ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதியன்று மன்னார் மடுத்திருத்தலப் பெருவிழா நடைபெறவுள்ளது. இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் திருவிழா நாளில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு பல தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். குறிப்பாக, ஹர்த்தாலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மன்னார் மறைமாவட்டம் வெளிப்படையாக அறிவித்தது.

அத்துடன், நல்லூர் உற்சவத்தைக் காரணமாகக் குறிப்பிட்டும், ஹர்த்தாலை பிறிதொரு தினத்துக்கு மாற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியிலேயே, ஹர்த்தால் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளது.

https://newuthayan.com/article/ஹர்த்தால்_ஒத்திவைப்பு:_18ஆம்_திகதியே_நடக்கும்!#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2025 at 22:40, புலவர் said:

சுமத்திரன்2010 இல் இருந்து அரசியலில இருக்கிறார். தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கக் கூடிய நிலையிலும் இருந்திருக்கிறார்.மைத்திரி ஜனாதிபதியாக இருந்த காலத்தில்வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத வகையில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்த வேளையில் ஒருங்கிணைந்த கூட்டரசாங்கத்துக்கு முழு ஆதரவளித்த எதிர்க்கட்சியில் இருந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம். இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இராணுவ பிரசன்னத்தைக் குறைக்குமாறு கோரவில்லை.ரணில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் பல முறை தமிழத்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாலேயே தப்பிப் பிழைத்தது.அப்பொழுதெல்லாம் இதனை ஒரு துருப்புச்சீட்டாகாப் பாவித்து ஏன் பேரம் பேசவில்லை. மாறாக அதே இராணுவ பாதுகாப்புடனேயேதமிழ்ப்பிரதேங்களில் உலாவித் திரிந்தார்.இப்பொழுது மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் வடமாகாண முதலமைச்சர் கனவில் பம்மாத்து அரசியல் செய்கிறார். இது ஒரேநாளில் நெல் முளைத்த வயலை ஊழுது விதைத்து அறுவடை செய்து நெருப்பில்லாம் பொங்கல் பொங்கி படம்காட்டிய நடிப்பு அரசியல் போலத்தான் இ.ருக்கப் போகிறது.நல்லூர்த்திருவிழா காலத்தில் யாழ்நகர்பகுதியில் சனநடமாட்டம் அதிகரித்த வேளையில் வர்த்தகர்களின் வணிகத்துக்கு ஆப்பு வைக்க நினைக்கிறார். நல்லூர்த்திருவிழாவையே நம்பி வாழும்கடலை கச்சான்,தும்புமிட்டாயக் கடைகளையும் சாத்த வேண்டும் என்று சொல்கிறாரோ?

On 11/8/2025 at 23:25, குமாரசாமி said:

எம்பியாக இருக்கும் போது ஒரு கொள்கை...

வேலை வெட்டியில்லாமல் இருக்கும் போது இன்னொரு வகையான கொள்கை...

இதெல்லாம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை...

530666510_24956266340674211_612098089504

சுமந்திரன்... மைத்திரியின் கூட்டரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கும் போது மட்டும்... இராணுவத்துடன் தோழில் கை போட்டுக் கொண்டு, "டூயட்" பாடி திரிவாராம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்று, செருப்படி வாங்கி... வீட்டில் குந்தி இருக்கும் போது மட்டும், இராணுவம் கசக்குதாம். இந்தப் புத்தி முன்பு ஏன் வரவில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்று, செருப்படி வாங்கி... வீட்டில் குந்தி இருக்கும் போது மட்டும், இராணுவம் கசக்குதாம். இந்தப் புத்தி முன்பு ஏன் வரவில்லை.

ஹர்த்தால் உண்ணாவரதம் என்று ஈடுபட்டாலே

தமிழ் மக்களின் மனங்களைக் கவரலாம்

அப்போ தான் முதலமைச்சர் பதவியை எட்டிப் பார்க்கலாம்

என்று யாரோ சொல்லிவிட்டார்கள்.

மாகாணசபை தேர்தல் மட்டும் இப்படி நிறையவே நடக்கும்.

முதலமைச்சராகிய பின்பு இதே இராணுவமே எனக்கு பாதுகாப்பு வழங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஹர்த்தால் உண்ணாவரதம் என்று ஈடுபட்டாலே

தமிழ் மக்களின் மனங்களைக் கவரலாம்

அப்போ தான் முதலமைச்சர் பதவியை எட்டிப் பார்க்கலாம்

என்று யாரோ சொல்லிவிட்டார்கள்.

மாகாணசபை தேர்தல் மட்டும் இப்படி நிறையவே நடக்கும்.

முதலமைச்சராகிய பின்பு இதே இராணுவமே எனக்கு பாதுகாப்பு வழங்கும்.

சுமந்திரனுக்கு வாக்குப் போட்டு, முதல் அமைச்சாராக்குகின்ற மக்கள் அங்கு இல்லை. ஏற்கெனவே சுத்துமாத்தின் அரசியலுக்கு… சென்ற பாராளுமன்றத் தேர்தலில் முடிவுரை எழுதியாகி விட்டது. இனி… சுமன் முக்குவதில் அர்த்தமில்லை. மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 😂

வேலியிலை போற ஓணானை பிடித்து, வேட்டிக்குள் விட தமிழ் மக்களுக்கு விசரே. 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது - மறவன்புலவு சச்சிதானந்தம்

15 AUG, 2025 | 05:03 PM

image

தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தற்போது அழைப்பு விடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் என்பது கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்துள்ள அழைப்பு. இதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

கடை அடைப்புக்கான தேவை இன்றைய சூழலுக்கு தேவையற்ற ஒன்று. அத்துடன் கடை அடைப்புக்கு என்பது காலத்துக்கும் ஒவ்வாத போராட்டம்.

முல்லைத்தீவில் இளைஞன் இறந்த சம்பவத்துக்கு அது தொடர்பில் குற்றம் சாட்டபட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நேரம் இராணுவ பிரசன்னம் என்பது தோல்வி அடைந்த இனம் சந்திக்கும் ஒரு இயல்பானது தாக்கம் அல்லது அடக்கு முறைதான்.

மடு மாதாவின் நலன் கருதி போராட்டத்தை பின்நகர்த்திய குறித்த தரப்பினர் நல்லூர் திருவிழாவை குறிவைத்து.

கடை அடைப்பு என கூறி சுயநல அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதால் நாளாந்தம் உழைத்து வாழும் மக்களின் வழ்வே பாதிக்கும்.

அந்தவகையில் ஏழை மக்களை பகடைக்காயாக்க முயற்சிக்கும் நரித்தன அரசியலுக்கு இடம்கொடுக்கக்கூடாது.

இந்த கடை அடைப்பு போராட்டத்துக்கு வர்த்தகர்களோ, போக்குவரத்து சார் சங்கங்களோ, பொது அமைப்புகளோ எதுவானாலும் ஒத்துழைப்பு வழங்க கூடாது என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/222630

  • கருத்துக்கள உறவுகள்

514410238_2213989435698790_5943724996495

ஆண்மையுள்ள வவுனியா வர்த்தக சங்கம்: சுமந்திரனுக்கு முதல் அடி!

ஹர்த்தால் என்பது தேவையற்றது, ஏன் தேவையற்றது என்பது தொடர்பிலும் முன்னைய பதிவில் போட்டிருந்தேன்.

தவிர சுமந்திரன் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து ஹர்த்தாலுக்கு ஆதரவு கேட்டு வந்தார், ஆனால் ஆண்மையுள்ள வர்த்தக சங்கம் சுமந்திரனின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று நானும் வலியுறுத்தியிருந்தேன்.

அந்த வகையில் வவுனியா வர்த்தக சங்கம் சரியான முடிவை துணிச்சலாக எடுத்திருக்கின்றது.

இந்த முடிவு சாதாரணமானது இல்லை, தமிழர்கள் நலனை தாண்டி சுமந்திரனை முதல் முறை நேரடியாக எதிர்த்து ஒரு முடிவை வவுனியா வர்த்தக சங்கம் எடுத்திருக்கின்றது.

இதில் உங்களுக்குள் ஒரு கேள்வி வரும் சுமந்திரன் அவ்வளவு பெரிய ஆளா என்று, ஆம் எல்லாத்துக்கும் ஜிங் ஜக் போட்டு எதாவது பதவிகளை பெற வேண்டும் என்று நினைக்கிற, தற்போது பெற்றிருக்கிற அனைவருக்கும் அவர் பெரிய ஆள்த்தான்.

ஒருவருக்கு அரசியல் ஆசை, அதிகாரம் மீது மோகம் இருக்கின்றது என்றால் அவர்கள் அதை அடைய தற்போது வரை நாடுகின்ற கட்சி தமிழரசு கட்சிதான், அப்படி இருக்கும் போது அங்கு சுமந்திரனுக்கு செம்பு தூக்கினால்தான் இந்த அற்பர்களுக்கு எதாவது பதவி எலும்பு துண்டாக கிடைக்கும்.

அப்படி இருக்கும் போது வவுனியா வர்த்தக சங்கத்தில் இருக்கிறவர்களுக்கும் அரசியல் ஆசை, அதிகார மோகம் இருக்கலாம், ஆனால் அதற்காக விலை போகாமல் இந்த முடிவை எடுத்ததற்கு பாராட்டுக்கள்.

இனி ஏனைய வர்த்தக சங்கங்கள் இந்த முடிவை முன்மாதிரியாக வைத்து சுமந்திரன் மீது விசுவாசம் இருந்தாலும், என்ன தலைவரே வவுனியா வர்த்தக சங்கம் இப்படி செய்து விட்டார்கள், இனி நாங்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்தால் மக்கள் மதிக்கமாட்டார்கள், ஆகவே கடை மூட முடியாது என்று முடிவெடுக்கலாம்.

ஆக மொத்தத்தில் ஹர்த்தால் இல்லை, அத்தோடு நான் நினைத்தால் எதை வேண்டுமென்றாலும் எந்த வழியிலோ செய்து முடிக்கலாம் என்று நினைக்கிற சுமந்திரனுக்கு இது நேரடியாக மக்கள் கொடுக்கும் முதல் செருப்படியாக அமையும்.

Nadarasa Jeyakanthan

  • கருத்துக்கள உறவுகள்

கடையடைப்பு குறித்து தமிழரசு கட்சி வெளியிட்ட கடிதம்.

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கடையடைப்புக்கு ஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் ஆதரவை திரட்டுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியிட்டுள்ள கடிதத்தில் கட்சியின் பதில் தலைவரான சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.  

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை தமிழரசுக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சகல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும்

அன்புடையீர்,

எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி கடையடைப்பு தொடர்பானது எமது கட்சியினால் மேற்சொன்ன நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே.

முழுமையான பங்களிப்பு

இதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உங்கள் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பு அத்தியாவசியமானது.

கடையடைப்பு குறித்து தமிழரசு கட்சி வெளியிட்ட கடிதம் | Letter Issued By Tamilarasu Katchi On Hartal

நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளூராட்சி தவிசாளர்களும் ஊடக சந்திப்புக்களை நடாத்தி சகலரது ஆதரவை கோருவது அவசியமாகும்.

அத்தோடு அனைத்து வணிகர் சங்கங்களையும் சந்தித்து ஆதரவை கோருவதோடு உறுப்பினர்கள் நேரடியாக சந்தைக்கும் கடைக்கும் சென்று இதை செய்வது நல்லது.

கடையடைப்பு குறித்து தமிழரசு கட்சி வெளியிட்ட கடிதம் | Letter Issued By Tamilarasu Katchi On Hartal

கட்சியின் நிர்மானத்தை வலுவாக நிறைவேற்ற உங்கள் முழுமையான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் - என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilwin
No image preview

கடையடைப்பு குறித்து தமிழரசு கட்சி வெளியிட்ட கடிதம் - தமிழ...

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கடையடைப்புக்குஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் ஆதர...

சுமந்திரனின் ஹர்த்தாலுக்கு வலுக்கும் எதிர்ப்பும் பின்னணியும்.

  • கருத்துக்கள உறவுகள்

elmo-hello.gif

சுமந்திரனும், சிவஞானமும் சேர்ந்து தீக்குளித்தால்…. எனது ஆதரவு உண்டு. 👍🏽😀

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

532945308_1229368792326064_7867513866009

நல்லாட்சி (?) அரசாங்கம் பதவியிலிருந்த போது யாழ்ப்பாண பல்கலை கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் இராணுவத்தினரின் அழுத்தத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்

அதாவது உயர் கல்வி நிறுவனமொன்றின் தலைவர் ஒருவரை தன் எண்ணத்திற்கேற்ப இராணுவம் பதவி நீக்கியிருந்தது

இந்நிலையில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் தான் பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் .

குறித்த வழக்கின் போது அப்போதைய பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் உயர் நீதிமன்றிற்கு வழங்கிய சத்தியக் கூற்றில் 'தமிழமுதம்' என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டமை, தமிழ் அரசியல் கோரிக்கைகள் உள்ளடங்கிய நினைவு தூபி அமைக்கப்படுவதை தடுக்கத் தவறியமை ஆகியன தொடர்பில் இராணுவப் புலனாய்வு தனக்களித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறியிருந்தார்.

இந்த மோசமான விளக்கத்தையும் ஏற்று உயர் நீதிமன்றம் பேராசிரியர் விக்கினேஸ்வரனின் பதவி நீக்கத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுவை விசாரணை கூட இன்றி தள்ளுபடி செய்திருந்தது

எந்த குற்றமும் செய்யாத துணைவேந்தரான தன்னை இராணுவ மேலாதிக்கம் பதவி நீக்கம் செய்தமை , அதனை ஏற்று தன் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தமை உட்பட்ட மன அழுத்தங்களால் பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் மாரடைப்பினால் இறந்து போயிருந்தார்

ஆனால் நல்லாட்சி அரசங்கத்தில் அதிகாரமிக்கவர்களாகவிருந்த திரு சுமந்திரன் அவர்கள் உட்பட எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவமேலாதிக்கம் குறித்து ஒரு மூச்சு கண்டனம் தானும் விடவில்லை.

மாறாக திரு சுமந்திரன் உட்பட எங்கள் பாராளமன்ற உறுப்பினர்களே இராணுவத்தை மக்கள் மத்தியில் இயல்பாக்கம் (normalisation of the military) செய்யும் வேலையை செய்தார்கள்

இது போதாதென்று திரு ரணில் விக்ரமசிங்கேவின் பங்காளிகளாக உயர் கல்வி அமைச்சராகவிருந்த திரு ரவூப் ஹக்கீம் முதல் அமைச்சராகவிருந்த திரு மனோ கணேசன் யாருமே இராணுவ அதிகாரத்தின் அத்துமீறல்கள் குறித்தோ இராணுவமயமாக்கல் குறித்தோ ஒரு போதும் பேசவில்லை

இது போதாதென்று நல்லாட்சியில் எங்கள் பாராளமன்ற உறுப்பினர்கள் அதிகாரமிக்கவர்களாகவிருந்த போது தான் நாவற்குழி காணாமல்போனோர் ஆட்கொணர்வு வழக்கின் விசாரணையின் போது நீதிமன்ற வளாகத்தில் வைத்தே மனுதாரர்கள் , அவர்களின் சட்டத்தரணிகளை அச்சுறுத்துமளவிற்கு எல்லை மீறியிருந்தது

ஆனால் எல்லா அக்கிரமங்கள் போதும் எங்கள் பாராளமன்ற உறுப்பினர்கள் மிக மௌனமாகவே கடந்து இராணுவமயமாக்கலை இயல்பாக்க துணை போனார்கள்

இங்கே இராணுவமயமாக்கலை எதிர்ப்பது ஓர் அரசியல் சித்தாந்த நிலைப்பாடக மட்டும் இருக்க முடியாது

இது சமூகத்தின் இருத்தல் (existentialist) பிரச்சனை. தனி நபர்களின், சமூகத்தின் கூட்டு உளவியல் எதிர்காலம் தொடர்பான பிரச்சனை.

ஆனால் சாதாரண மக்கள் (கேப்பாப்பிலவு. இரணைதீவு, காணாமல் போனோர் உறவுகள் இன்னும் வேறு பல) துணிந்து இராணுவத்திற்கு எதிராகப் போரிட தேர்தல் அரசியலால் பதவிக்கு வந்தோர் இராணுவமயமாக்கலை இயல்பாக்க துணை போனார்கள்

இப்போது எந்தவித அதிகாரமும் அற்ற நிலையில் இருக்கும் எமது அரசியல் வாதிகள் இப்போதாவது தங்களின் நடவடிக்கைகளால் மக்களுக்கு சோர்வை கொடுக்காமல் இருக்க நேர்மையாக முயற்சிக்க வேண்டும்.

இனமொன்றின் குரல்

  • கருத்துக்கள உறவுகள்

533400042_4068060883435876_8090083634426

வடக்கு & கிழக்கு மாகாணங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 10% மட்டுமே பங்களிப்பு வழங்குகின்றன. அதில் பெரும்பாலானவை முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்குமே சொந்தமானவை.

வடக்கு-கிழக்கு தமிழர்கள் நமது நாட்டுப் பொருளாதாரத்தில் வழங்கும் பங்களிப்பு மிகக் குறைவாகும்.

வடக்கு கிழக்கில் தமிழர்கள் ஹர்த்தால் நடத்துவதால் அது நாட்டின் பொருளாதாரத்தில் எந்தப் பாதிப்பையும் கொடுக்கப் போவதில்லை.

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறுறதாலதான் இந்த ஹர்த்தால் என்று உருளுறீங்களே. ஐக்கிய நாடுகள் சபை என்பது எவ்வளவு பெரிய டம்மிப் பீஸ் என்று இப்ப காஸால நடக்குற அழிவைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியுறல்லயா?

வர்த்தக சங்கங்கள் ஹர்த்தால் அன்றைக்கு கடைய முடிடுவானுகள். கடைகள்ல இருக்கிற பொருள் அன்றைக்கு விற்காட்டி அடுத்த நாள் விற்கலாம். ஆனால் அந்தக் கடைகள்ல வேலை செய்யுற ஆட்களுக்கு அன்றைய நாள் சம்பளம் கிடைக்காது. அதே மாதிரி தினக்கூலி வேலை செய்யுற எவருக்குமே அன்றைய நாள் வருமானம் கிடையாது.

வடக்கு கிழக்கில் இருக்குறதுல 50%க்கு மேற்பட்ட மக்கள் தினக்கூலிகள்தான்.

ஒவ்வொருத்தனுக்கும் கட்ட வேண்டிய லீசிங் காசு, லோன் காசு, வட்டிக் காசு, சேமிக்க வேண்டிய காசு என்று எல்லாத்துலயும் துண்டு விழும்.

அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்றால் மக்களை ஒன்றாகத் திரட்டி பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் பண்ணுங்க. ஆர்ப்பாட்டம் பண்ண விரும்புறவன் வருவான். அதுல மக்கள் ஆதரவு உங்களுக்கு எந்த அளவு இருக்குது எண்டு தெரியும்.

இதுவரைக்கும் பல ஹர்த்தால்கள் நடத்தியிருக்கிறீங்க, அதனால ஏதாவது பயன் வந்திருக்குதா?

அத விட்டுப்போட்டு Elite குரூப் நீங்க எல்லாம் ஹர்த்தால் என்ற பெயர்ல ஒருநாள் லீவு போட்டு குடும்பத்தோட இருக்கிறதுக்கு எதுக்கு தினக்கூலிகள் பாதிக்கப்படனும்?

உண்மை உரைகல்

  • கருத்துக்கள உறவுகள்

534416282_122277498572023926_29344845134

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்தால் ஊடாக வலுவான செய்தியை வெளிப்படுத்த வேண்டும் - சுமந்திரன் வடக்கு, கிழக்கு மக்களிடம் வலியுறுத்தல்

Published By: VISHNU

17 AUG, 2025 | 08:10 PM

image

(இராஜதுரை ஹஷான்)

இராணுவமயமாக்கலின் சிறு உதாரணமே முத்தையன்கட்டு இளைஞனின் மரணம். இராணுவ முகாமை அண்மித்து வாழும் மக்கள் இராணுவ முகாமை அண்டி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருதரப்பிற்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் இடம்பெறுகிறது. இதுவே மிகமோசமான சமூக பிரச்சினை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தோம். வடக்கு மற்றும் கிழக்கில் திங்கட்கிழமை (18) காலை முதல் மதியம் வரை ஹர்த்தாலில் அனைவரும் ஈடுபட வேண்டும். இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக அரசாங்கத்துக்கு இந்த ஹர்த்தால் ஊடாக வலுவான செய்தியை வெளிப்படுத்த வேண்டும் என என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் வலியுறுத்தினார்.

முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் ஐந்து இளைஞர்களை அழைத்துச்சென்றதற்காக இரண்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்கின்ற போது இளைஞர்கள் அனுமதியின்றி முகாமிற்குள் உள்நுழைந்தார்கள் என்று எவ்வாறு குறிப்பிட முடியும். இந்த சம்பவத்தின் உண்மையையே வெளிப்படுத்த முனைகிறோம். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் நீரில் மூழ்கி தான் உயிரிழந்தார் என்று அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிடுவது முறையற்றது எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஞாயிற்றுக்கிழமை (17) அரசாங்க தகவல் திணைக்களத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். இந்த ஊடக சந்திப்பில் இராணுவ ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் கலந்துக்கொண்டுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுக்கப்பட்ட ஹர்த்தால் பற்றி பேசப்பட்டுள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் விசேடமாக குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு பதிலளிக்க வேண்டும். இந்த சம்பவம் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல, இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் எப்பகுதியில் இடம்பெற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். அத்துடன் இதற்கு ஹர்த்தாலின் ஈடுபட வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

நாட்டில் ஏனைய மாகாணங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருப்பதை போன்று மக்கள் மத்தியில் இராணுவ பிரசன்னம் ஏதும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தான் இராணுவத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இதனை நாங்கள் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகிறோம்.

இராணுவத்தினரின் இடையூரின் ஒரு விளைவுதான் இந்த இளைஞனின் துரதிஸ்டவசமான மரணம். இராணுவ முகாமிற்குள் அனுமதியன்றி நுழைந்தார்கள், அவர்களை விரட்டியடிக்கும் போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தற்போது குறிப்பிடுகிறார்கள். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் நீரில் மூழ்கி தான் உயிரிழந்தார் என்று அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிடுவது முறையற்றது.

முகாமிற்குள் சென்ற ஐவரையும் தாக்கி காயப்படுத்திய குற்றத்துக்கான ஒரு இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிடுகிறார். கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் இந்த ஐந்து பேரை இராணுவ முகாமுக்குள் அழைத்து வந்ததாக குறிப்பிடப்படுகிறது. இராணுவத்தினர் இவர்களை அழைத்து வந்திருப்பார்களாயின் அதனை அனுமதியற்ற நுழைவு என்று எவ்வாறு குறிப்பிட முடியும்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரரிடம் ' அனுமதியற்ற வகையில் முகாமிற்குள் நுழைந்தவர்களை இராணுவம் கைது செய்திருக்க வேண்டும், அவர்களை கைது செய்யாமல் ஏன் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று கேள்வியெழுப்பப்படுகிறது. இதற்கு அமைச்சர் 'அவர்கள் சேர்ந்து வாழ பழகிவிட்டார்கள். இவர்களுக்கிடையே நல்லதொரு உறவு உள்ளது. அதனால் அவ்வாறு நடந்தது' என்று பதிலளித்துள்ளார். இதைத்தான் வெளிக்கொண்டு வர வேண்டும்.

இராணுவ மயமாக்கலின் சிறு உதாரணமே இது. இராணுவ முகாமை அண்மித்து வாழும் மக்கள் இராணுவ முகாமை அண்டி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருதரப்பிற்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் இடம்பெறுகிறது. இதுவே மிகமோசமான சமூக பிரச்சினை. கடந்த 15 ஆண்டுகாலமாக இந்நிலைமையே காணப்படுகிறது. இதனையே தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறோம், சுட்டிக்காட்டுகிறோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியினர் எதிர்க்கட்சியாக இருந்த போது இராணுவ மயமாக்கலுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்தபோது அதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இராணுவமயமாக்கலை தடுக்கவில்லை, இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை. 

இராணுவத்தினர் மக்கள் மத்தியில் ஒன்றிணைந்திருப்பதால் ஏற்படும் விளைவுளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தோம். எவரையும் நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட கூடாது.

காலையில் (இன்று) மாத்திரம் ஹர்த்தாலில் ஈடுபடுவது தொடர்பில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கிறோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் ஸ்தம்பிதமடையும் வகையில் ஹர்த்தாலில் அனைவரும் ஈடுபட வேண்டும். காலை முதல் மதியம் வரை ஹர்த்தாலில் ஈடுபட்டு இந்த செய்தியை வெளிப்படுத்த வேண்டும்.

விடேசமாக நல்லூர் திருவிழா நடைபெறுகிறது. இதனையும் கரிசனையில் கொண்டு செயற்பட வேண்டும். இந்த ஹர்த்தால இராணுவ பிரசன்னத்துக்கு எதிரானது என்ற செய்தியை அரசாங்கத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

முத்தையன்கட்டு உட்பட மக்கள் மத்தியில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்  என்ற கோரிக்கையை விடுக்கிறோம். இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக எதிர்வரும் 25 ஆம் திகதி பருத்தித்துறை நகராட்சிமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளவுள்ள போராட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/222764

  • கருத்துக்கள உறவுகள்

534931923_25050280897907635_597203046801

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.