Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரூர் கூட்ட நெரிசல், தவெக பரப்புரை, விஜய் பிரசாரம், காவல்துறை வழக்கு

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, கரூர் பரப்புரையை வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

29 செப்டெம்பர் 2025, 09:50 GMT

புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாகவும் அனுமதியின்றி ரோட் ஷோ நடத்தியதாகவும் தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகளின் அறிவுரையையும் மீறி தவெக நிர்வாகிகள் அசாதாரண செயல்களில் ஈடுபட்டதாகவும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. காவல்துறையும் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல், தவெக பரப்புரை, விஜய் பிரசாரம், காவல்துறை வழக்கு

முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) தற்போது வெளியாகியுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்ய அனுமதி கேட்டு செப்டம்பர் 26-ஆம் தேதி தவெக சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதோடு பரப்புரை தினமான சனிக்கிழமை 500 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல், தவெக பரப்புரை, விஜய் பிரசாரம், காவல்துறை வழக்கு

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, தவெகவின் அனுமதி விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் வருவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில்25,000-க்கும் மேற்பட்டோர் வந்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு விஜய் கரூர் வர இருப்பதாக காலை 9 மணிக்கு தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டது, இதனால் காலை 10 மணி முதலே கூட்டம் கூடியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

"இதனால் வேலுச்சாமிபுரம் மெயின்ரோடு, கோவை சாலை, முனியப்பன் கோவில் ஜங்சன், கோவை சாலை, திருக்காம்புலியூர், ரவுண்டானா, மதுரை சேலம் பைபாஸ் ரோடு ஆகிய இடங்களில் கூட்டம் அதிகளவில் வர தொடங்கினார்கள்." என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவின் அனுமதி விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் வருவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் 25,000-க்கும் மேற்பட்டோர் வந்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

கரூரில் பரப்புரை மேற்கொள்ள 12 மணிக்கு அனுமதி வாங்கியிருந்த நிலையில் நாமக்கலில் இருந்து புறப்பட்ட விஜய் மாலை 04:45 மணிக்கு கரூர் மாவட்ட எல்லையை அடைந்ததாக எஃப்.ஐ.ஆர் கூறுகிறது.

காவல்துறையால் விதிக்கப்பட்ட கட்டாய நிபந்தனைகளை வேண்டுமென்றே மீறி வரவேற்பு நடத்தியதாகவும் விஜயின் வாகனத்தை நிறுத்தி கால தாமதம் செய்ததாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.

"வேண்டுமென்றே காலதாமதம் செய்து தெருவில் அனுமதி இல்லாமல் ரோட்ஷோ நடத்தி போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தினர்." என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலதாமதமாக விஜயின் வாகனம் மாலை 06.00 மணிக்கு முனியப்பன் கோவில் ஜங்சனில் ராங்ரூட்டில் (தவறான வழியில்) பயணித்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல், தவெக பரப்புரை, விஜய் பிரசாரம், காவல்துறை வழக்கு

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, காவல்துறையால் விதிக்கப்பட்ட கட்டாய நிபந்தனைகளை வேண்டுமென்றே மீறியதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வேலுச்சாமிபுரம் ஜங்சனில் தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே வாகனத்தை நிறுத்தி வேண்டுமென்றே காலதாமதம் செய்தனர். அதே இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்." என எஃப்.ஐ.ஆர் கூறுகிறது.

"காவல்துறை அறிவுரையை தவெகவினர் புறக்கணித்தனர்"

மாவட்ட செயலாளர் மதியழகன், என். ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலரிடமும் "அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சு திணறல் கொடுங்காயம் உயிர் சேதம் ஏற்படும்" என எச்சரித்ததாக காவல்துறை எஃப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல், தவெக பரப்புரை, விஜய் பிரசாரம், காவல்துறை வழக்கு

"மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர ஒழுங்குபடுத்தவில்லை.

ரோட்டில் அருகிலுள்ள கடைகளுக்கு நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டிருந்த குறுகிய சரிவான தகர கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர்.

தகர கொட்டகை உடைந்ததாலும் மரம் முறிந்ததாலும் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்தனர். இதனால் பொதுமக்களில் பெரும்பாலோனோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது." என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தியதாகவும் காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நீண்ட காலதாமதத்தால் காத்திருந்த மக்கள் வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்து தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் உடல் நிலை சோர்வடைந்தனர் என்றும் காவல்துறை எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c9dx4pw8w6lo

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

தவெகவின் அனுமதி விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் வருவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் 25,000-க்கும் மேற்பட்டோர் வந்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

3 hours ago, ஏராளன் said:

அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தியதாகவும் காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது

3 hours ago, ஏராளன் said:

நீண்ட காலதாமதத்தால் காத்திருந்த மக்கள் வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்து தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் உடல் நிலை சோர்வடைந்தனர் என்றும் காவல்துறை எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே நான் விஜய்க்கு செம்பு தூக்க வரவில்லை

ஆனாலும் எல்லாமே அறிந்த..... அறிந்து கொண்டிருந்த.... அல்லது இப்படி நடக்கலாம்..... ஆபத்தாக முடியலாம்.... என்று எச்சரிக்கை செய்த அந்தக் காவல் துறை.... எந்த நடவடிக்கையையும் எடுக்காமல்

த வெ க பொறுப்பாளர்களிடம் மட்டுமே மேற்கூறிய பரிந்துரைகளையும் எச்சரிக்கைகளையும் செய்திருப்பது சரியா?

தாமாகவே ஒரு நடவடிக்கையை எடுத்திருக்க முடியாதா?

அந்த இடத்தின் கொள்ளளவு தெரிந்தும் மேலதிகமான அளவிற்கு

மக்களை அனுமதித்த காவல் துறையின் செயல் சரியானதா?

விஜய் கரூரில் தொடர்ந்தும் தங்கியிருந்தால்..... (மக்களுடன் மக்களாக நிற்கிறேன் என்ற நிலையில்) இன்னும் பல இழப்புக்கள் அங்கே ஏற்பட்டிருக்கலாம்

சமயோசிதமாக அவர் கரூரில் இருந்து வெளியேறியதால் இன்னும் பல உயிர்களும் அழிவுகளும் தவிர்க்கப்பட்டிருக்கின்றது.

காவல்துறை மக்களுக்கானது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்கெடுத்தாலும் மற்றவனை நோக்கி குற்றம் சாட்டுவதில் எந்த பிரயோசனமும் இல்லை.

கட்சி ஒன்று ஆரம்பித்தால் அதற்கான கட்டுமானங்களும் விதிகளும் இருக்க வேண்டும்.அப்படி ஒன்று விஜய் கட்சிக்கு இருப்பதாக தெரியவில்லை.

தனியே தன் ரசிகர்களை மட்டும் நம்பி திறக்கப்பட்ட தேனீர் கடை போல் அவர் கட்சி அமைந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

சமயோசிதமாக அவர் கரூரில் இருந்து வெளியேறியதால் இன்னும் பல உயிர்களும் அழிவுகளும் தவிர்க்கப்பட்டிருக்கின்றது.

🤣

விஜய் கூட்டத்தில் உயிர் இழப்புகள் ஏதும்ஏற்படாமல் கரூர் அமைதியாக இருந்தால் கூட விஜய் கரூரில் தொடர்ந்தும் தங்கியிருக்க மாட்டர் உடனடியாக வெளியேறி இருப்பார் பின்பு அடுத்த சனி கிழமைதான் மக்களுடன் மக்களாக நிற்பது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

சமயோசிதமாக அவர் கரூரில் இருந்து வெளியேறியதால் இன்னும் பல உயிர்களும் அழிவுகளும் தவிர்க்கப்பட்டிருக்கின்றது

வாத்தியார் அவர் வெளியேறியது சரி.

ஆனால் இன்னமும் வெளியே வராமல் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருப்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் கரூரில் இருந்து வெளியேறிவிட்டார் ஆனால் பல வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் அங்கே சென்று உதவி செய்து இருக்கின்றார்கள் விஜய் கட்சி பொறுப்பாளர்கள் ஒருவரும் உதவிகள் செய்யவில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

எதற்கெடுத்தாலும் மற்றவனை நோக்கி குற்றம் சாட்டுவதில் எந்த பிரயோசனமும் இல்லை.

கட்சி ஒன்று ஆரம்பித்தால் அதற்கான கட்டுமானங்களும் விதிகளும் இருக்க வேண்டும்.அப்படி ஒன்று விஜய் கட்சிக்கு இருப்பதாக தெரியவில்லை.

தனியே தன் ரசிகர்களை மட்டும் நம்பி திறக்கப்பட்ட தேனீர் கடை போல் அவர் கட்சி அமைந்து விட்டது.

சாமி நீங்களுமா??

  • கருத்துக்கள உறவுகள்

தாழ்த்தப்பட்ட சாதி என்று அந்தச் சாதியின் பெண்ணைத் துகிலுரிந்து ரசித்தார்கள். அவர்கள் குடியிருப்புகளைக் கொளுத்தி அட்டகாசம் செய்தார்கள்.

பாலகர்கள், வயதிபர்கள் என்று பாராமல் இலங்கையில் அரசே இலச்சக்கணக்கில் தமிழரைக் கொலை செய்தது.

இதன்போதெல்லாம் ஊடகங்கள், மக்கள் பதிவுகள், கள உறவுகளிடம் இருந்து கூட பெருமளவான ஆட்சேபனைகள் வந்ததில்லை. ஆனால் ஒரு தமிழ் நடிகன், தமிழினம் வெற்றிகொள்ள ஒரு கட்சியைத் தொடங்கியதும் அதற்கு மக்கள் ஆதரவு பெருகுவதையம் பொறுக்கமுடியாத தமிழ்தோல் போர்த்தி தமிழர்களை ஆட்சி செய்யும் வேற்றினத் தலைவர்களின் எடுபிடித் துறைகளின் கூற்றுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து அளவற்ற பதிவுகளும், ஊட்டங்களும் இடுவது ஏற்புடையதல்ல. மக்களைப் பாதுகாக்கத் திறன் அற்ற இன்றைய அரசின் ஆட்சியாளர்களே இந்த அவலத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். நன்னெறிகளைப் படித்த தமிழராகிய நாங்களும் போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, ம-பொ-சி மாமியார்கள் என்று இல்லாது வாழ்ந்து வாழ்க்கையை இனிதாக்கி வாழ வேண்டும்.🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இருந்தே விஜய் ஒரு அரசியல் கட்சி தலைவர் போல் நடந்து கொள்ளவில்லை. வெறும் பஞ்ச் டயலாக்கள், வெற்று சுலோகங்கள் என தனது திரைப்பட ஹீரோயிசத்தை மட்டுமே காட்டினார். தனது திரை ரசிகர்களை வைத்து திரைப்பாணியில் தனக்கு விசிலடிக்கும் கூட்டத்தை கட்டியமைக்கவே தனது சக்தி முழுவதையும் செலவிட்டார். அவரது கட்சி மகாநாடுகள், கூட்டங்கள் அவரது திருப்படம் வெளியாகும் வேளை திரையரங்குகள் எப்படி ரசிக பட்டாளங்களின் கும்மாளம் இருக்குமோ அப்படியே இருந்தன. அதன் விளைவே இந்த அனர்ததம். ஐரோப்பிய நாடாக இருந்திருந்தால் விஜய் மற்றும் கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படிருக்கும். விஜய் இவ்வேளை கைது செய்யப்பட்டிருப்பார். விஜய் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது அல்லது மென் நடவடிக்கை என்பது இந்திய தேர்தல் அரசியல் பலவீனங்களில் ஒன்று. எல்லா கட்சிகளும் இந்த விடயத்தில் எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் தமது அரசியல் அஜெண்டாவுக்காக இது உபயோகின்றனரேயொழிய, பொறுப்புணர்வு அற்று செயற்பட்டு இத்தனை உயிர் இழப்புக்கு காரணமான விஜய் மீது நேர்மையான கடுமையான சட்ட நடவடிக்கைக்கு தயக்கம் கொள்கின்றனர். மத்திய மாநில அரசுகள் தமது குறுகிய அரசியலை ஒதுக்கி விட்டு இணைந்து விஜய் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒன்றில் விஜய பொறுப்பான அரசியல் தலைவராக அரசியல் செய்ய வேண்டும் இல்லையெனில் மார்கெட் இருக்கும் வரை தனது ரசிகர்களை மகிழ்விக்க படங்களில் நடிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

கட்சி ஒன்று ஆரம்பித்தால் அதற்கான கட்டுமானங்களும் விதிகளும் இருக்க வேண்டும்.அப்படி ஒன்று விஜய் கட்சிக்கு இருப்பதாக தெரியவில்லை.

ஒரு கட்சியைப் பதிவு செய்யும் பொது தேர்தல் ஆணையம் இதையெல்லாம் கேட்டுத்தான் பதிவு செய்திருக்கும்.

இப்ப அது அல்ல பிரச்னை

வரப்போகும் ஆபத்தை முன் கூட்டியே காவல்துறை அவதானிக்கவில்லையா ? அல்லது நடக்கட்டும் பின்னர் மெதுவாக நாங்கள் உள்ளே செல்வோம் என்ற முன்னேற்பாட்டுடன்

இருந்தார்களா ?

அரசியலுக்காக மக்களை பலிக்கடாவாக்க நினைக்கும் கட்சிகளுக்கு காவல்துறை துணை போகின்றதா ?

விரைவில் தெரிய வரும்

21 hours ago, விளங்க நினைப்பவன் said:

உயிர் இழப்புகள் ஏதும்ஏற்படாமல் கரூர் அமைதியாக இருந்தால் கூட விஜய் கரூரில் தொடர்ந்தும் தங்கியிருக்க மாட்டர்

விஜய் காவல்துறைக்குத் தெரியாமல் கரூரில் இருக்க முடியாது

காவல்துறை அனுமதி கிடைத்து அவர் அங்கு தொடர்ந்தும் இருந்திருந்தால் இந்த அவலத்தைக் காரணம் காட்டியே அலுவலை முடித்திருப்பார்கள்

தி மு க என்ன சும்மா ஒரு கட்சியா

எம் ஜி ஆரை,ஜெயலலிதாவை எதிர்த்து நின்றும் இன்னும் அழியாத ஒரு கட்சி

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

ஆனால் இன்னமும் வெளியே வராமல் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருப்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

அரசியலில் இன்னும் பக்குவம் அடையவில்லை என்பதையும்

அவருடன் சேர்ந்திருக்கும் யாருமே சரியான ஒரு அரசியல் பாதையை விஜய்க்கு வகுத்துக் கொடுக்க முடியாதவர்களுமாக இருப்பதையும் இந்த ஒளிந்து இருக்கும் நிலை காட்டுகின்றது

ஆனாலும் அரசியலுக்கு வந்துவிட்டால் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு முன்னேறலாம் என்பது விஜயிக்குத் தெரியாமலா இருக்கும்

14 hours ago, விளங்க நினைப்பவன் said:

விஜய் கரூரில் இருந்து வெளியேறிவிட்டார் ஆனால் பல வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் அங்கே சென்று உதவி செய்து இருக்கின்றார்கள் விஜய் கட்சி பொறுப்பாளர்கள் ஒருவரும் உதவிகள் செய்யவில்லையாம்.

விஜய் என்ற ஒரு மக்கள் ரசிக்கும் நபரை அரசியலில் யாருமே எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள்

அப்படியான நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்து நேரடியாகவே ஆழும் தரப்பினரை குறி வைத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா ?

அல்லது அந்த விஜயின் கட்சியையே கருவிலே அழிக்க நினைப்பார்களோ?

ஆகவே தான் விஜயின் குஞ்சுகளுக்கு கொஞ்சம் புத்தி இருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, island said:

விஜய் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது அல்லது மென் நடவடிக்கை என்பது இந்திய தேர்தல் அரசியல் பலவீனங்களில் ஒன்று. எல்லா கட்சிகளும் இந்த விடயத்தில் எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் தமது அரசியல் அஜெண்டாவுக்காக இது உபயோகின்றனரேயொழிய

விஜய் கைது என்பது தமிழ் நாட்டையே பிரளயமாக்கும் என்பது ஆழும் தரப்பினருக்குத் தெரியும்

அதே வேளை இந்த அனர்த்தத்தில் ஆழும் தரப்பினரின் பங்கு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்

விஜய் குற்றவாளி என்றால் காவல் துறைக்குப் பொறுப்பான ஸ்டாலினும்

குற்றவாளி தான்

சிறிய கைதுகளுடன்.... விசாரணைக்கு குழுக்களின் அறிக்கைகளைத் தயாரிப்பதில் இழுத்தடிப்புச் செய்து...... இந்தப் பிரச்சனையை மழுங்கடித்து விடுவார்கள்.இரு தரப்பினரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, வாத்தியார் said:

வரப்போகும் ஆபத்தை முன் கூட்டியே காவல்துறை அவதானிக்கவில்லையா ? அல்லது நடக்கட்டும் பின்னர் மெதுவாக நாங்கள் உள்ளே செல்வோம் என்ற முன்னேற்பாட்டுடன்

இருந்தார்களா ?

அரசியலுக்காக மக்களை பலிக்கடாவாக்க நினைக்கும் கட்சிகளுக்கு காவல்துறை துணை போகின்றதா ?

நடந்தது ஆர்ப்பாட்ட ஊர்வலம் அல்ல.காவல் துறையை ஆயிரக்கணக்கில் குவித்து வைத்திருப்பதற்கு. சர்வ சாதாரண தேர்தல் பிரச்சார கூட்டம்.சினிமா கவர்ச்சியால் கடவுள் மாதிரி திரிபவர்கள் அரசுடன் தொடர்பு கொண்டு சொந்த செலவில் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

இன்றைய கால தமிழ்நடிகர்களின் அளவிற்கு மீறிய பில்டப்பால் அவர்களை எனக்கு பிடிப்பதில்லை. இருந்தாலும் கருவூர் சம்பவத்தின் பின்னர் அஜித் ஒரு தீர்க்கதரிசியாக எனக்கு தெரிகின்றார்.ரசிகர்களின் பைத்தியக்காரத்தனத்தை நன்றாகவே நாடி பிடித்து பார்த்திருக்கின்றார். ரசிகர் மன்றமும் இல்லை ஒரு கோதாரியும் இல்லை.எனது படத்தை பிடித்தால் பார். இல்லையேல் உன்ர வேலையை பார் பீலிங்....😎

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, island said:

ஆரம்பத்தில் இருந்தே விஜய் ஒரு அரசியல் கட்சி தலைவர் போல் நடந்து கொள்ளவில்லை. வெறும் பஞ்ச் டயலாக்கள், வெற்று சுலோகங்கள் என தனது திரைப்பட ஹீரோயிசத்தை மட்டுமே காட்டினார். தனது திரை ரசிகர்களை வைத்து திரைப்பாணியில் தனக்கு விசிலடிக்கும் கூட்டத்தை கட்டியமைக்கவே தனது சக்தி முழுவதையும் செலவிட்டார். அவரது கட்சி மகாநாடுகள், கூட்டங்கள் அவரது திருப்படம் வெளியாகும் வேளை திரையரங்குகள் எப்படி ரசிக பட்டாளங்களின் கும்மாளம் இருக்குமோ அப்படியே இருந்தன. அதன் விளைவே இந்த அனர்ததம். ஐரோப்பிய நாடாக இருந்திருந்தால் விஜய் மற்றும் கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படிருக்கும். விஜய் இவ்வேளை கைது செய்யப்பட்டிருப்பார். விஜய் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது அல்லது மென் நடவடிக்கை என்பது இந்திய தேர்தல் அரசியல் பலவீனங்களில் ஒன்று. எல்லா கட்சிகளும் இந்த விடயத்தில் எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் தமது அரசியல் அஜெண்டாவுக்காக இது உபயோகின்றனரேயொழிய, பொறுப்புணர்வு அற்று செயற்பட்டு இத்தனை உயிர் இழப்புக்கு காரணமான விஜய் மீது நேர்மையான கடுமையான சட்ட நடவடிக்கைக்கு தயக்கம் கொள்கின்றனர். மத்திய மாநில அரசுகள் தமது குறுகிய அரசியலை ஒதுக்கி விட்டு இணைந்து விஜய் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒன்றில் விஜய பொறுப்பான அரசியல் தலைவராக அரசியல் செய்ய வேண்டும் இல்லையெனில் மார்கெட் இருக்கும் வரை தனது ரசிகர்களை மகிழ்விக்க படங்களில் நடிக்க வேண்டும்.

மிகவும் சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இந்த இழப்பிலும் சகலரும் அரசியல் அனுகூலங்களை கணக்குப் போடுகின்றார்களோ தவிர, இழந்து நிற்கும் குடும்பங்களுக்காக ஒரு தார்மீக ஆதரவைக் கூட காட்ட முன்வருகின்றார்கள் இல்லை. இங்கு யாழ் களத்தில் கூட ஒவ்வொரு பக்கங்களிலும் இருந்து வரும் இணைப்புகளும் தங்களின் பக்கத்தை இந்தப் பாதகத்தில் இருந்து தப்பிக்க வைக்கும் ஒரு தலைப்பட்ச நியாயங்களும் மற்றும் இதில் ஆதாயம் தேடும் ஒரு போக்குமே அன்றி, ஒரு நடுநிலையான பார்வையினூடு நிகழ்வுகளை ஆராய்வதாக இல்லை. இத்தனைக்கும் இங்கு சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில்களும் இணையத்திலேயே இருக்கின்றது.

இந்தப் பாதகத்தை திட்டமிட்டவர்கள், அப்படி யாராவது இருந்தால், மேல் வரும் அதே அருவருப்பும் கோபமுமே, ஓடி ஒழிந்த விஜய் மீதும், அவரது இரண்டாம் கட்ட தலைவர்களின் மீதும் வருகின்றது. 'த்தூ..............' என்று விஜய்காந்த் ஒரு தடவை பேசியதும் இந்த நேரத்தில் தவிர்க்க முடியாமல் நினைவில் வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பாதகத்தை திட்டமிட்டவர்கள் என்று அப்படி யாராவது இருந்தால் அது விஜய்யின் கட்சியை சேர்ந்தவர்களாக தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2025 at 22:26, வாத்தியார் said:

இங்கே நான் விஜய்க்கு செம்பு தூக்க வரவில்லை

ஆனாலும் எல்லாமே அறிந்த..... அறிந்து கொண்டிருந்த.... அல்லது இப்படி நடக்கலாம்..... ஆபத்தாக முடியலாம்.... என்று எச்சரிக்கை செய்த அந்தக் காவல் துறை.... எந்த நடவடிக்கையையும் எடுக்காமல்

த வெ க பொறுப்பாளர்களிடம் மட்டுமே மேற்கூறிய பரிந்துரைகளையும் எச்சரிக்கைகளையும் செய்திருப்பது சரியா?

தாமாகவே ஒரு நடவடிக்கையை எடுத்திருக்க முடியாதா?

அந்த இடத்தின் கொள்ளளவு தெரிந்தும் மேலதிகமான அளவிற்கு

மக்களை அனுமதித்த காவல் துறையின் செயல் சரியானதா?

விஜய் கரூரில் தொடர்ந்தும் தங்கியிருந்தால்..... (மக்களுடன் மக்களாக நிற்கிறேன் என்ற நிலையில்) இன்னும் பல இழப்புக்கள் அங்கே ஏற்பட்டிருக்கலாம்

சமயோசிதமாக அவர் கரூரில் இருந்து வெளியேறியதால் இன்னும் பல உயிர்களும் அழிவுகளும் தவிர்க்கப்பட்டிருக்கின்றது.

காவல்துறை மக்களுக்கானது

இந்த திரியில் எத்தனையோ மானுட நேயர்கள் வந்து கருத்து சொல்லி போயுள்ளார்கள்…

ஆனால் இந்த பதிவில் நீங்கள் தமிழ் நாட்டு காவல் துறையின் பொறுப்பு பற்றி எழுப்பிய எந்த கேள்விக்கும் அவர்கள் பதில் சொல்ல முயற்சிக்க கூட இல்லை.

ஏன்?

ஏனென்றால் அப்படி பதில் சொன்னால் இந்த இழப்புகளுக்கு தவெக வும் தமிழக அரசும் கூட்டு பொறுப்பு என்பதை ஒத்துகொள்ள வேண்டி வரும்.

அப்படி ஒத்துகொண்டால், (ஏதோ ஒரு அல்லது பல காரணங்களுக்காக ) இந்த விடயத்தில் விஜையை ஒரு பக்க சார்பாக போட்டு வெளுக்கமுடியாது போய் விடும்.

(எமக்கும் விஜயகாந்த் நினைவில் உள்ளார்😂).

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இல்லாத எந்தக் கட்சியும், சிறிதோ பெரிதோ புதிதோ பழையதோ, ஆளும் கட்சியையும் அரசையும் எதிர்த்தே அரசியல் செய்யும். புதிய தமிழகம் கூட திமுகவை எதிர்த்தே அரசியல் செய்கின்றது. இந்த விடயத்தில் திமுகவின் மேல் முற்று முழுதாக குற்றமும் சுமத்தியிருக்கின்றது. அன்புமணி பிரிவு பாமகவும் திமுகவை எதிர்த்தே அரசியல் செய்கின்றது. அன்புமணி கரூரில் நின்று கொண்டே இரவு நேரத்தில் எப்படி பிரேத பரிசோதனைகள் செய்தீர்கள் என்று பத்திரிகையாளர்களின் முன் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார். ஆளும் கட்சியையும், அரசாங்கத்தையும் எதிர்க்காமல் பிற கட்சிகளுக்கு அரசியலே கிடையாது.

தவெக ஓடி ஒழிந்ததிற்கு அவர்கள் ஆளும் கட்சியை எதிர்த்தது அரசியல் செய்தார்கள் என்பது காரணம் அல்ல. விஜய்யும், புஸ்ஸி ஆனந்தும், ஆதவ் ஆனந்தும், ஜான் ஆரோக்கியசாமியும், நிர்மலும் தங்களின் செல்ஃபோன்களை ஆஃப் செய்து விட்டு தலைமறைவானது அவர்களுக்கு இந்த சூழ்நிலையை கையாளும் திராணி கிடையாது என்பதனாலேயே. தவெகவின் அந்த மாவட்டச் செயலாளரும் தலைமறைவாகினார். இதற்கு மேல் தவெகவில் ஒரு கட்டமைப்பும் கிடையாது. விஜய்யின் ரசிகர்கள் தங்கள் தங்கள் வீடுகளுக்கு போயிருப்பார்கள். தவெகவிற்கு தொண்டர்களோ அல்லது ஒரு கட்டமைப்போ இருந்திருந்தால், அதில் சிலராவது மக்களுடன் நின்றிருக்கவேண்டும்.

இப்படியே ஓடி ஒழிந்து கொண்டிருந்தால், எப்போது மக்களுடன் நிற்கப் போகின்றீர்கள்.......

திமுக உங்களை அழித்து விடும் என்றால், இதற்குப் பிறகு திமுக ஓய்ந்து விடப் போகின்றதா......... இன்னுமொரு சூழ்நிலையில் மீண்டும் ஓடி ஒழியப் போகின்றீர்களா...........

தமிழ்நாட்டில் இதற்கு முன் எந்தக் கட்சியாவது இப்படி முற்றாகப் பதுங்கிய வ்ரலாறு இருக்கின்றதா.................... முக்கியமாக நாங்கள் தான் இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லிய கட்சி ஒன்று, அது சம்பந்தப்பட்ட அனர்த்தம் ஒன்றில் இருந்து இப்படி ஓடிப் பதுங்கி இருந்தது உண்டா............

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாத்தியார் said:

ஒரு கட்சியைப் பதிவு செய்யும் பொது தேர்தல் ஆணையம் இதையெல்லாம் கேட்டுத்தான் பதிவு செய்திருக்கும்.

இப்ப அது அல்ல பிரச்னை

வரப்போகும் ஆபத்தை முன் கூட்டியே காவல்துறை அவதானிக்கவில்லையா ? அல்லது நடக்கட்டும் பின்னர் மெதுவாக நாங்கள் உள்ளே செல்வோம் என்ற முன்னேற்பாட்டுடன்

இருந்தார்களா ?

அரசியலுக்காக மக்களை பலிக்கடாவாக்க நினைக்கும் கட்சிகளுக்கு காவல்துறை துணை போகின்றதா ?

விரைவில் தெரிய வரும்

விஜய் காவல்துறைக்குத் தெரியாமல் கரூரில் இருக்க முடியாது

காவல்துறை அனுமதி கிடைத்து அவர் அங்கு தொடர்ந்தும் இருந்திருந்தால் இந்த அவலத்தைக் காரணம் காட்டியே அலுவலை முடித்திருப்பார்கள்

தி மு க என்ன சும்மா ஒரு கட்சியா

எம் ஜி ஆரை,ஜெயலலிதாவை எதிர்த்து நின்றும் இன்னும் அழியாத ஒரு கட்சி

பத்து ரூபாய்ப் பாட்டில்

டாஸ்மார்க்கு

நாளொன்றிற்கு

மூணு கோடி

திராவிடம் வேணும்

டமில் வேண்டாம்

போங்கய்யா

வட பலகரலா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு காவல் துறை கரூர் பிரிவு இங்கு மிகவும் தர்மசங்கடமான நிலைமைக்கு உள்ளாகியிருக்கிறது.

காவல்துறை dossier இல் உள்ள அதிகபட்ச High Risk பிரிவையும் தாண்டிய uncivilized hooligan mobs எனும் பிரிவை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்ற எந்த instruction உம் அவர்களிடம் இல்லை. உண்மையாகவே இது imposition of Section 144 of the Code of Criminal Procedure (CrPC) in India, போன்ற ஒரு Procedure ஐ பாவித்து கையாளப்படவேண்டிய mobs. உண்மையிலேயே காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அணில் குஞ்சுகளின் மொகரைகளை பெயர்த்திருந்தாலொழிய இந்த stampede கரூர் இல்லாவிட்டாலும் வேறு எங்கேயாவது மிக விரைவில் நடந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, அக்னியஷ்த்ரா said:

உண்மையிலேயே காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அணில் குஞ்சுகளின் மொகரைகளை பெயர்த்திருந்தாலொழிய இந்த stampede கரூர் இல்லாவிட்டாலும் வேறு எங்கேயாவது மிக விரைவில் நடந்திருக்கும்.

உண்மை தான்

24 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அணில் குஞ்சுகளின் மொகரைகளை பெயர்த்திருந்தாலொழிய

கரூரில் அப்படி செய்திருந்தால் பழனிசாமியும் பாஜகவும் திமுக பொலிஸ் அநீதி என்று தீவிரமாக குரல் கொடுத்து விஜய் இரசிகர்கள் வாக்கை அள்ள முயற்சிப்பார்கள்.

கரூரில் விஜய்யை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தை உயரத்தில் இருந்து எடுக்கபட்ட காணொளிகளில் மக்கள் கூட்டத்தின் நெருக்கத்தை பார்க்கும் போது நடுக்கம் தான் ஏற்படுகின்றது. இதற்கு தங்கள் குழந்தை போதாது என்று சகோதரன் குழந்தை சகோதரி குழந்தையையும் தூக்கி கொண்டு வந்திருக்கின்றார்கள். பழனிசாமியும் பாஜகவும் பொலிஸ் பாதுகாப்பு குறைபாடு தான்இறப்பு துயரத்திற்கு காரணம் என்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

1. டிரோனில் பார்த்து நடு நடுங்கும் கூட்டத்துக்கு 500 பொலிஸ்காரரை மட்டும் போட்டது ஏன்

  1. கூட்டம் அதிகமானது என தெரிந்தால் - நேரடியாக விஜை, அல்லது ஆனந்த், ஆதவ் எவரையாவது அழைத்து கரூருக்கு வர வேண்டாம் என பொலிச் கேட்டதா?

  2. மீறிவந்தால் மக்கள் நலனை காட்டி ஒரு நீதிபதி வீட்டுக்கு போய் தடைஉத்தரவு கூட வாங்கி இருக்கலாம்.

  3. இங்கே மேற்க்கை உதாரணம் காட்டும் பலருக்கு, மேற்கில் பொலிசார் செய்யும் dynamic risk assessment பற்றி தெரிந்திருக்கும். ஒரு கூட்டம் கூடுகிறது என்றால் அனுமதி அளித்தவுடன் பொலிசாரின் கடமை முடிவதில்லை. அந்த கூட்டத்தை நடக்கும் போதும் அவதானித்து, தக்க நடவடிக்கை எடுப்பது அவர்களின் கடமை.

  4. இன்று செந்தில் பாலாஜியே சொல்கிறார். விஜை பேச தொடங்கி 3 நிமிடத்தில் அவர் மீது செருப்பு வீசியதாக. யார் வீசி இருப்பார்கள்? நிச்சயமாக திமுக அனுப்பிய ஆட்களை தவிர வேறுயாருக்கும் இந்த தேவையில்லை. இப்படி எடப்பாடிக்கு, அன்புமணிக்கு நடப்பதை தமிழக உளவுதுறை விடுமா?

  5. 500 பொலிஸ்காரரர் இருந்தார்களே, சிலரை விஜை பேசும்போது வேனுக்கு அருகில் கூட தடிகளுடன் காண முடிகிறது.

    எத்தனை பொலிசார் தள்ளுமுள்ளில் இறந்தார்கள்? யாராவது காயமாவது பட்டார்களா?

  6. இதில் சதி இருக்கலாம் இல்லாதிருக்கலாம். ஆனால் கணிசமான தவறு தமிழ் நாடு அரசின் பொலிஸ்மீது என்பது மறுக்கவியலாத உண்மை.

  7. RCB கூட்ட நெரிசலுக்கு யாரும் RCB கொலைகாரர்கள் என சொல்லவில்லை. RCB யும் பங்களூரு பொலிசும் கடமை தவறினர் என்றே சொன்னார்கள்.

  8. எடப்பாடி, அன்புமணி, பிரேமலதா இதில் அரசியல் செய்வது உண்மை. ஸ்டெரலைட் நேரம் மாண்பு மிகு முதல்வர் ஸ்டாலின் பொம்மை விளையாடி கொண்டு இருக்கவில்லைதானே? ஆனால் அரசியலையும் தாண்டி தவறில் கணிசமான பங்கு தமிழக அரசுக்கு என்பது அடிப்படை உண்மை.

  9. இன்னொரு விடயம் - ஸ்டெரலைட் முதல் - அஜித்குமார் கொலை வரை, தமிழக பொலிஸ் தமது அரசியல் எஜமானர்களுக்காக எந்த நிலைக்கும் போக கூடியவர்கள் என்பது ஏலவே நிறுவப்பட்ட ஒன்று.

    விஜைக்கு முட்டை அடிக்கும் அந்தரிப்பில் நாம் இதை மறக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

இப்படியே ஓடி ஒழிந்து கொண்டிருந்தால், எப்போது மக்களுடன் நிற்கப் போகின்றீர்கள்.......

அரசியலில் யாரும் ஓடிப்பிடித்து விளையாட முடியாது என்பதை உணர விஜய்க்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டிருக்கின்றது.

அவ்வளவுதான்

5 hours ago, விளங்க நினைப்பவன் said:

கரூரில் விஜய்யை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தை உயரத்தில் இருந்து எடுக்கபட்ட காணொளிகளில் மக்கள் கூட்டத்தின் நெருக்கத்தை பார்க்கும் போது நடுக்கம் தான் ஏற்படுகின்றது. இதற்கு தங்கள் குழந்தை போதாது என்று சகோதரன் குழந்தை சகோதரி குழந்தையையும் தூக்கி கொண்டு வந்திருக்கின்றார்கள்.

தம்பி விஜயுடன் நாங்கள்.... அண்ணா விஜயுடன் நாங்கள்.... நம்ம பிள்ளை விஜயுடன் நாங்கள்..... நிற்போம் என்ற வார்த்தைகள் தான் காதில் கேட்கின்றது

தி மு க வும் அதன் காவல்துறையும் தான் மக்களுடன் நாங்கள்..... மக்களின் நலன்களுக்காக நாங்கள்..... என்று கூவியவர்கள்.

ஆனாலும் சரியான நேரத்தில் மக்களைக் கவிழ்த்து விட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

திமுக அரசு, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் என்பவற்றின் மேல் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளும், எழுப்பப்படும் கேள்விகளும் நியாயமானவையே.

10,000 பேர்களே என்று அனுமதி வாங்கப்பட்டாலும், காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் முன்னரே தோராயமாக எவ்வளவு பேர்கள் வருவார்கள் என்று தெரியாதா என்பதே அரச நிர்வாகத்தின் அடிப்படைத் தவறாகத் தெரிகின்றது.அதற்குப் பின்னர் நடந்தவை எல்லாம் இந்த அடிப்படைத் தவறின் தொடர்வுகளே, தொடர் நிகழ்வுகளுக்கும் அழிவுகளுக்கும் தவெகவும், திமுக அரசுமே பொறுப்பு. ஆனாலும் இதற்கு எந்த தரப்பும் மன்னிப்பும் கேட்கப் போவதில்லை. அதைப் போலவே இதில் நேரடியாக பங்கு இல்லாத மற்றைய தரப்புகள் எல்லாம் தங்களின் சுயலாபம் ஒன்றில் மட்டுமே குறியாகவும் இருக்கப் போகின்றார்கள். கள்ளக்குறிச்சி கல்வராயன்மலைக்கு போகாத தலைவர்கள் எல்லோரும் கரூரில் நின்றதன் காரணம் இதுவே.

கரூர் மக்களின் இழப்புக்கு ஈடில்லை. நியாயமும் கிடைக்கப் போவதில்லை. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் எந்த மெத்தனத்திற்கும், அதனால் உண்டாகும் அழிவுகளுக்கும் எவரும் பொறுப்பு கூட ஏற்பதில்லை.

அடுத்ததாக விஜயை மட்டுமே நம்பி உள்ள அவரது ரசிகர்களின் நிலை. இவர்கள் தவெக என்னும் அரசியல் கட்சியின் தொண்டர்களே கிடையாது. அங்கு அப்படி ஒரு அமைப்பே கிடையாது. உதாரணமாக, தவெக கரூர் மாவட்டச் செய்லாளர் மதியழகனை காவல்துறை பாண்டிச்சேரியில் வைத்து கைது செய்கின்றார்கள். பின்னர் அவர் அப்படியே காணாமல் போகின்றார். அவரின் மனைவி அழுது புலம்பிக் கொண்டே என் கணவர் எங்கே என்று தேடுகின்றார். ஒரு தவெக வழக்கறிஞர் கூட அந்தப் பெண்ணுடன் இல்லை. தவெக தொண்டர்கள் ஒரு சிறு அமைதியான எதிர்ப்பைக் கூட எங்கேயும் காட்டவில்லை.

மதியழகனுக்கு மட்டும் இல்லை, இன்று புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டாலும் இதுவே தான் அங்கே நிலை. ஒரு தவெக தொண்டர் கூட எங்கேயும் எதிர்ப்பு காட்டப் போவதில்லை. ஆதவ் அர்ஜூனா கைது செய்யப்பட்டால் லாட்டரி மார்ட்டின் மத்திய அரசு வரை போய் ஆதவ் அர்ஜூனாவை வெளியே எடுத்துவிடுவார். ஆனால் மற்றைய தவெகவினர் ஒரு கைவிடப்பட்ட நிலையிலேயே, கரூர் மக்களைப் போன்றே, உள்ளார்கள்.

இறுதியில் வந்த உளவுத்துறை அறிக்கையின் படி, மக்களின் கோபம் இரு தரப்புக்குக்கும் மேலேயே இருந்தாலும், விஜய் மேலேயே அதிகமாக இருக்கின்றது என்கின்றார்கள். அதன் எதிரொலியே திமுகவால் அதிகரிக்கப்பட்டிருக்கும் விஜய்க்கு எதிரான நடவடிக்கைகளும், தொடர் கைதுகளும். எடப்பாடியாரிடம் போய்ச் சேர்வதை விடுத்து வேறு எந்த தெரிவுமே இல்லாத ஒரு நிலை விஜய்க்கு. எடப்பாடியாருக்கும் அது இப்போது தெரியும்.

முதலில் செய்ய வேண்டியது 'ரோட் ஷோ' என்பதை தமிழ்நாட்டில் முற்றாக தடைசெய்யவேண்டும். அரங்கினுள் மட்டுமே இவர்களின் பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும்.

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.