Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முசுலீம்கள் இன்று உலகம் முழுவதிலும் பரந்து வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைமுறை வாழும் நாட்டின் பூகோள நிலைக்கு ஏற்றதா என்று சிறிதும் சிந்திப்பதில்லை. தங்கள் மதத்தின் சட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்வதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள். அந்தவழியில் அவர்கள் தங்கத்தையோ, தங்க நகைகளையோ நிறைய வைத்திருந்தார்கள் என்பது சந்தேகமே. இந்நிலையில் புலிகள் அவர்களின்ன தங்கத்தைப் பறித்தார்கள் என்று குற்றம் சாட்டுவது சிந்திக்க வேண்டியதொன்று.

உம்மு சலமா (ர­) அவர்கள் கூறுகிறார்கள் :
எனது கழுத்தில் தங்கத்தால் ஆன கழுத்து மாலைகளை நான் அணிந்திருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என் அறைக்குள்) வந்தார்கள். என்னை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். நான் (அவர்களிடம்) என் அலங்காரத்தை நீங்கள் பார்க்கமாட்டீர்களா? என்று வினவினேன். அதற்கு அவர்கள் உனது அலங்காத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று கூறினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒருத்தி வெள்ளியால் ஆபரணத்தை செய்து பிறகு அதனுடன் குங்குமச் சாயத்தை சேர்த்துக்கொள்வதில் என்ன சிரமம் இருக்கிறது? என்று கூறியதாக இதன் அறிவிப்பாளர்கள் கருதினார்கள்.
அஹ்மத் (25460)

  • Replies 67
  • Views 2.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஐயா ஒரு ஆய்வு ஒரு ஆய்வு எங்கிறாரேயொழிய இறுதிவரை அது என்ன ஆய்வு என்று எவரால் எங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதை சொல்லாமலே போய்க்கொண்டிருக்கிறார். வடக்கிலிருந்து முஸ்லீம்கள் அவர்களால் எடுத்து செல்லக்கூட

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    1993 கார்த்திகை மாதம். உயர்தரம் எழுதிவிட்டு பெறுபேற்றிற்காகக் காத்திருந்த காலம். கொழும்பு தெகிவளையில் அமைந்திருந்த மயோன் கம்பியூட்டர் நிறுவனத்தில் புலமைப் பரிசிலூடாக ஒரு வருட காலம் கற்கை நெறி ஒன்றை மே

  • குமாரசாமி
    குமாரசாமி

    உங்கள் உதாரணங்களுக்கு வேறு தெரிவுகளே இல்லையா? பக்கிங்காம் அரண்மனையே நாறி நசிந்து சகதிக்குள் அழிந்து கொண்டிருக்கு. (அண்மைய சம்பவங்கள் கேவலத்திலும் கேவலம்) சகோ! இன்னும் றோயல் நினைப்பிலையே திரியிறியள் போ

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

முசுலீம்கள் இன்று உலகம் முழுவதிலும் பரந்து வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைமுறை வாழும் நாட்டின் பூகோள நிலைக்கு ஏற்றதா என்று சிறிதும் சிந்திப்பதில்லை. தங்கள் மதத்தின் சட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்வதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள். அந்தவழியில் அவர்கள் தங்கத்தையோ, தங்க நகைகளையோ நிறைய வைத்திருந்தார்கள் என்பது சந்தேகமே. இந்நிலையில் புலிகள் அவர்களின்ன தங்கத்தைப் பறித்தார்கள் என்று குற்றம் சாட்டுவது சிந்திக்க வேண்டியதொன்று.

உம்மு சலமா (ர­) அவர்கள் கூறுகிறார்கள் :
எனது கழுத்தில் தங்கத்தால் ஆன கழுத்து மாலைகளை நான் அணிந்திருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என் அறைக்குள்) வந்தார்கள். என்னை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். நான் (அவர்களிடம்) என் அலங்காரத்தை நீங்கள் பார்க்கமாட்டீர்களா? என்று வினவினேன். அதற்கு அவர்கள் உனது அலங்காத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று கூறினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒருத்தி வெள்ளியால் ஆபரணத்தை செய்து பிறகு அதனுடன் குங்குமச் சாயத்தை சேர்த்துக்கொள்வதில் என்ன சிரமம் இருக்கிறது? என்று கூறியதாக இதன் அறிவிப்பாளர்கள் கருதினார்கள்.
அஹ்மத் (25460)

இஸ்லாம் பகட்டை எதிர்கிறதே ஒழிய, தங்கத்தை அல்ல.

ஆண்களதிலம் தங்கம் அணிவதில்லை எனிலும், பெண்கள் அணிவார்கள் அத்தோடு அரபி நாட்டில் வாழ்ந்த உங்களுக்கு தெரியும் அவர்கள் தங்கத்தை செல்வத்தின் store value வாக எப்படி சேமிப்பார்கள் என்பது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, vasee said:

இந்த விடயத்தில் எப்படி சம்பந்தப்பட்ட இருதரப்பும் தங்களில் பிரச்சினை இல்லை என நிறுவ முயற்சிப்பதாலேயே இது ஒரு தொடர்கதையாக தொடரும் நிலை உருவாகிறது.

ஒரு தரப்பு தமது தரப்பு தவறினை ஒப்புக்கொண்ட பின்னரும்; அவர்கள் சார்ந்தவர்கள் அதனை நியாப்படுத்த முனைகின்றனர், மறு தரப்போ தம்மீது எந்த தப்புமில்லை என பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடிப்பது போல முயற்சிக்கிறார்கள், பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு பிரச்சினைக்கான மூல காரணம் அறியப்பட வேண்டும் ,ஆனால் இங்கு அதனை வெளிக்கொணர சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விரும்பாத போது; இது போல பிரச்சினைகள் சமூகங்களிடையே மீண்டும் மீண்டும் எதிர்காலத்திலும் தோன்றும்.

ஒரு சிலரின் செயல்களை ஒரு சமூகத்தின் மீது சுமத்துவதனை என்னவென்று கூறலாம்?

தலைவரும் அஸ்ரப்பும் ஒன்றாக இருந்து பேசியவுடனே அந்த முரண்பாடு மற்றும் வலி முடிவுக்கு வந்தாயிற்று.

அப்புறம் சிங்களவனை சொறிய அல்லது நக்க வேண்டிய தேவை வரும்போதெல்லாம் பலமற்ற ஆதரவற்ற தமிழருக்கு முதுகில் குத்துதல் மட்டுமே அவர்களுக்கு இலகுவாக கிடைக்கும் அல்லா தந்த வரம்.

இத்தனை நடக்கும் இஸ்ரேலை இவர்கள் மறந்து மன்னித்து விடுவதால் தானே என்னவோ இத்தனை அழிவுகள் பாலஸ்தீனத்தில் நடக்கிற போதும் என் மனம் உருகுதில்லை.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புலவர் said:

vஎது செருப்பு தைச்சு உடுப்பு தைச்சு உழைச்ச காசில் வாங்கிய தங்கத்தைப்பறிப்பதற்காகவா?

இதை கண்டும் காணாமல் கடந்து போவது சரியில்லை.

நீங்கள் ஜேர்மனியில் வந்து இறங்கிய நேரம் தொட்டு சான்சிலராகவா வேலை பார்த்தீர்கள்?

அல்லது யூகேயுக்கு மாறி வரும் போது பக்கிங்காம் அரண்மனையில் பிரதானி பதவிக்கா வந்தீர்கள்?

இந்த கேள்வி உங்கள் கருத்துக்கு சிரிப்புகுறி இட்டவருக்கும்தான்.

புலம்பெயர் தேசத்தில் மொழி அறியாமல் நாய் பிஸ்கெட்ட்டை மனித உணவு என சாப்பிட்ட யாழ்ப்பாணத்தமிழன், இன்னொரு இனத்தை செருப்புதைப்பவன் என கிண்டல் அடிக்கலாமா?

90 க்கு முன் அவர்களும் கணிசமான வியாபார நிலையங்கள் யாழ் நகரில் நடத்தினார்கள். முண்ணனி பாடசாலைகளிலும் படித்தார்கள்.

சிலவேளை நாளைக்கு ஒரு பஸ் வரும் ஊரில் இருந்தவர்களுக்கு செருப்பு தைக்கும் முஸ்லிமை மட்டும்தான் தெரிந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தலைவரும் அஸ்ரப்பும் ஒன்றாக இருந்து பேசியவுடனே அந்த முரண்பாடு மற்றும் வலி முடிவுக்கு வந்தாயிற்று.

🤣 இப்படியாக இருந்து பேசி நாமும் பல வலிகளை மறக்கலாம் போல இருக்கு! கருணாநிதி, சோனியா காந்தி, ஏன் கோத்தா ரீமோடு கூட இருந்து பேசி வலியைக் கடந்து விடலாம் போல!

மேலே வசி சொல்லியிருப்பதைப் போல, ஒரு தரப்பு தங்களுக்கு நடந்த அநியாயத்தைப் பற்றிப் பேசினாலே கோபம் கொள்கிறவர்களும், "அவங்கள் நகை போடுவதில்லையே?" என குர் ஆன் வரையில் தேடிப் போய் நியாயம் கற்பிப்போரும் வலியை மறைய விடப் போவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

தகவல்களுக்கு நன்றி.

எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். மன்னார் பையன். எல்லாமும் நடந்து முடிந்த பின் கொழும்பில் பழக்கமானோம்.

நாம் புலிகளை போற்றி ஏற்றும் போதெல்லாம், அவனிடம் எந்த சலனமும் இருக்காது. தமிழ் மொழி மீது அதீத பற்றுடன் இருந்தான்.

இருபது வருடங்களின் பின் ஒருநாள் மிக சாதாரணமாக ஒரு நாள் சொன்னான் ……

“நான் எங்கடா புத்தளம், என் சொந்த ஊர் மன்னார் - ஒரு நாள் இரவு கொட்டும் மழையில், உடுத்த உடுப்பையும் சொப்பிங் பாக்கில் சிலதையும் தவிர மிகுதி அனைத்தையும் பறிகொடுத்து விட்டு, ஒரு வள்ளத்தில் புத்தளம் வந்து இறங்கினோம். போக இடமில்லை. களைப்பு. அந்த கடற்கரை மணலிலே, கொட்டும் மழையில் படுத்து தூங்கினோம், இதுதான் எனக்கும் புத்தளத்துமுமான உறவு”…

என்போன்றவர்களிடம் எல்லாம் அவனால் எப்படி சிரித்து பழக முடிகிறது என்பது இன்று வரை புரியவில்லை.

எனக்கு, இந்த முஸ்லிம்கள் வெளியேற்றம் பற்றி இரண்டு வகையான அனுபவங்களும் கிடைத்திருக்கின்றன. ஒரு தடவை ஜனாதிபதி மாவத்தையில் போக வேண்டியிருந்த ஒரு இடத்திற்கு, பஸ்ஸில் இடம் மாறி இறங்கி விட்டேன். நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் நபரிடம் வழி கேட்டேன். "அந்த வழியாகத் தான் போகிறேன், வாருங்கள்" என்று அழைத்துப் போகும் போது "எங்கிருந்து வருகிறீர்கள்?" எனக் கேட்டார், "யாழ்ப்பாணம்" என்றேன். ஆங்கிலத்தில் எனக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார் (ஆனால், எனக்கு முன்னால் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்😂). நான் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். 5 நிமிடங்களில் இடம் வந்தது. "அந்த நேரம் நீங்கள் சிறுவனாக இருந்திருப்பீர்கள், நீங்களும் தான் என்ன செய்திருக்க முடியும்? உங்களிடம் நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது, மன்னியுங்கள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

மன்னாரில் இருந்து வெளியேறிய ஒரு முஸ்லிம் முதியவரை, புத்தளத்தில் ஒரு ஆட்டுப் பண்ணையில் சந்தித்தேன். சந்திரிக்கா, ரத்வத்தை போன்றோர் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த காலம். "புலிகளால் தான் இவங்களுக்கு ஒரு முடிவு வரும், வேறெவரும் எதுவும் செய்ய முடியாது" என்றார். ஏன் சொல்கிறார், கொக்கி போடுகிறாரா என்று புரியாததால், நான் சிரித்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

🤣 இப்படியாக இருந்து பேசி நாமும் பல வலிகளை மறக்கலாம் போல இருக்கு! கருணாநிதி, சோனியா காந்தி, ஏன் கோத்தா ரீமோடு கூட இருந்து பேசி வலியைக் கடந்து விடலாம் போல!

மேலே வசி சொல்லியிருப்பதைப் போல, ஒரு தரப்பு தங்களுக்கு நடந்த அநியாயத்தைப் பற்றிப் பேசினாலே கோபம் கொள்கிறவர்களும், "அவங்கள் நகை போடுவதில்லையே?" என குர் ஆன் வரையில் தேடிப் போய் நியாயம் கற்பிப்போரும் வலியை மறைய விடப் போவதில்லை!

உங்களுக்கு என் கருத்தும் பெயரும் அலர்ஜி என்பதை பலமுறை கண்டு விட்டேன். அது முற்றிவிட்டதும் அதற்கு நிதானம் என்றொரு மருந்துண்டு.

ஆம் மகிந்தவும் தலைவரும் பேசியிருந்தாலும் வலிகள் மன்னிக்கப்பட்டு மறக்கப்பட்டிருக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சுடும் என்றும் சொல்வார்கள். சூடுபட்டு கொதிப்போரையும் களத்தில் காணலாம்.

“பாலை ஊற்றிப் பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே கடிக்கத்தானே வரும் அதை அடித்துக் கொல்ல நேருமே”.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து பா(ப)ஞ்(சம்)😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கருத்து பா(ப)ஞ்(சம்)😂

எழுத்துகளை சிறைவைப்பதால் கருத்து சோர்ந்து சுருங்கிவிடாது.🤩

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Paanch said:

எழுத்துகளை சிறைவைப்பதால் கருத்து சோர்ந்து சுருங்கிவிடாது.🤩

சுருக்கம் அதிகம் என்பதால் தான் சூட்டை பற்றி எழுதினீர்கள் என புரிந்து கொள்கிறேன்😀.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2025 at 14:26, goshan_che said:

இந்த விளக்கம் இங்கே பலமுறை கொடுக்கபட்டு விவாதிக்கபட்ட ஒன்றுதான்.

ஆனால் இங்கே சிலாகிப்பது வெளியேற்றியமைக்கான காரணம் பற்றி அல்ல.

மாறாக தங்கத்தை பறித்து விட்டு அனுப்பினார்களா என்பதை பற்றியே.

அதை பற்றி உங்கள் கருத்தை எழுதுங்கள் ஐயா.

ஏன் என்றால் இது நடந்த அதே மாதம் சரியாக நான்கு ஆண்டுகளில் ரிவிரெச ஆமி யாழைப் பிடித்த போது தமிழர்களையும் “அவர்கள் பாதுகாப்பு கருதி” புலிகள் முதலில் வரணிக்கும், பின் வன்னிக்கும் இடம்பெயர பணித்தார்கள்.

ஆனால் யாழ் தமிழர்கள் ஆடு மாடு கோழி, வீட்டு கதவு ஈறாக எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

இரெண்டு வெளியேற்றத்துக்கும் வித்தியாசம் உள்ளதா? அப்படியாயின்…

ஏன்?

அனைவரிடமும் அல்ல.

கொடுக்க கூடிய தமிழரிடம் மட்டுமே மண்மீட்பு நிதி சேகரிக்கப்பட்டது.

கொஞ்சம் அதட்டி வாங்கினாலும், ரசீது தந்தார்கள். சுழற்சி முறையில் அதிஸ்டசாலிகளுக்கு புலி இலச்சினை போட்டு மீளவும் அளித்தார்கள்.

இது தமிழரிடம்.

முஸ்லீம்களிடம் சுபீகரித்தார்கள் எண்டால் - அது இரெண்டு பவுணுக்கு மேலே வருமே, அதுவும் ஏழை பணக்காரன் எல்லாரிடமும்?

தலைவர் இருக்கு மட்டும், அதுவும் யாழில், வன்னியில் இதுக்கு வாய்ப்பே இல்லை. அதுவும் ஊரறிய முஸ்லிகளிடம் பணத்தை, பவுனை ஒரு போராளியோ, தளபதியோ வாங்கி தம் பையில் போட்டால் - அவர் கதையே ஓவர்.

நாம் அகதிகள் என அறிந்தும் கடினமான சூழலில் எம்மிடம் இரண்டு பவுண்கள் வலியுறுத்தி பெறப்பட்டது. பெண் போராளிகள் மூன்று தடவைகள் வந்தார்கள். எமது உறவினர் ஒருவர் கொடுக்கவில்லை என்பதற்காக பதுங்குகுழிக்கு அனுப்பப்பட்டார்.

2009 சம்பவங்கள், அதன் பின்னரான பல சம்பவங்கள் நடைபெறவில்லை என்றால் நீங்கள் சொல்வதை நம்பி இருப்பேன்.

1990ல் முஸ்லீம் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சமயம் நாம் யாழ் நகரில் இருக்கவில்லை. சற்று தள்ளிய கிராமத்தில் வசித்தோம். ஒவ்வொருவரும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு தமக்குள் மறைத்து வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள்/பொருட்கள் காணப்பட்டால் முஸ்லீம் மக்களிடம் பறித்து எடுக்கப்பட்டது என்பதே நாம் அப்போது அறிந்த தகவல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

அல்லது யூகேயுக்கு மாறி வரும் போது பக்கிங்காம் அரண்மனையில் பிரதானி பதவிக்கா வந்தீர்கள்?

உங்கள் உதாரணங்களுக்கு வேறு தெரிவுகளே இல்லையா? பக்கிங்காம் அரண்மனையே நாறி நசிந்து சகதிக்குள் அழிந்து கொண்டிருக்கு. (அண்மைய சம்பவங்கள் கேவலத்திலும் கேவலம்)

சகோ! இன்னும் றோயல் நினைப்பிலையே திரியிறியள் போல...😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நியாயம் said:

நாம் அகதிகள் என அறிந்தும் கடினமான சூழலில் எம்மிடம் இரண்டு பவுண்கள் வலியுறுத்தி பெறப்பட்டது. பெண் போராளிகள் மூன்று தடவைகள் வந்தார்கள். எமது உறவினர் ஒருவர் கொடுக்கவில்லை என்பதற்காக பதுங்குகுழிக்கு அனுப்பப்பட்டார்.

2009 சம்பவங்கள், அதன் பின்னரான பல சம்பவங்கள் நடைபெறவில்லை என்றால் நீங்கள் சொல்வதை நம்பி இருப்பேன்.

1990ல் முஸ்லீம் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சமயம் நாம் யாழ் நகரில் இருக்கவில்லை. சற்று தள்ளிய கிராமத்தில் வசித்தோம். ஒவ்வொருவரும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு தமக்குள் மறைத்து வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள்/பொருட்கள் காணப்பட்டால் முஸ்லீம் மக்களிடம் பறித்து எடுக்கப்பட்டது என்பதே நாம் அப்போது அறிந்த தகவல்.

நன்றி.

இரெண்டு பவுண் - உங்கள் அனுபவத்தை நான் மறுதலிக்க முடியாது.

நான் அப்போது பதின்ம வயதையும் அடையவில்லை. ஆகவே விளக்க குறைபாடு இருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் வேலை பார்த இரு குடும்பங்களுக்கு ஏழ்மை காரணமாக விலக்கு அளித்தார்கால்.

12 hours ago, குமாரசாமி said:

உங்கள் உதாரணங்களுக்கு வேறு தெரிவுகளே இல்லையா? பக்கிங்காம் அரண்மனையே நாறி நசிந்து சகதிக்குள் அழிந்து கொண்டிருக்கு. (அண்மைய சம்பவங்கள் கேவலத்திலும் கேவலம்)

சகோ! இன்னும் றோயல் நினைப்பிலையே திரியிறியள் போல...😂

நான் ஜப்னா ரோயல் 😂

1 hour ago, goshan_che said:

நன்றி.

இரெண்டு பவுண் - உங்கள் அனுபவத்தை நான் மறுதலிக்க முடியாது.நான் அப்போது பதின்ம வயதையும் அடையவில்லை. ஆகவே விளக்க குறைபாடு இருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் வேலை பார்த இரு குடும்பங்களுக்கு ஏழ்மை காரணமாக விலக்கு அளித்தார்கால்.

நான் ஜப்னா ரோயல் 😂

என் வீட்டுக்கு அருகில் இரண்டு பெண் பிள்ளைகள், மகன் ஆகியோருடன் (பிள்ளைகள் மூவமும் 10 வயதுக்குட்பட்டவர்கள்) ஒரு பெண்மை வாழ்ந்து வந்தார். அவரது கணவர் குடியால் இறந்து போன அரச சேவையில் கடைநிலை ஊழியராக வேலை செய்தவர். அவரது சொற்ப வருமானத்தில் தான் சீவியம் போய்க் கொண்டு இருந்தது. அவர்களிடம் தங்கம் வாங்க வந்த ஆண் போராளிகள், மூத்த மகளின் காதில் ஒட்டிக் கொண்டு இருந்த மிகச் சிறு தோட்டை கட்டாயப்படுத்தி புடுங்கிக் கொண்டு போனார்கள்.

இது என் கண் முன்னால் நிகழ்ந்தது.

புலிகள் மரபுவழி இராணுவமாக மாற முன் நிகழ்ந்த விடயங்கள் இவை.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

உங்களுக்கு என் கருத்தும் பெயரும் அலர்ஜி என்பதை பலமுறை கண்டு விட்டேன். அது முற்றிவிட்டதும் அதற்கு நிதானம் என்றொரு மருந்துண்டு.

ஆம் மகிந்தவும் தலைவரும் பேசியிருந்தாலும் வலிகள் மன்னிக்கப்பட்டு மறக்கப்பட்டிருக்கும்....

நீங்கள் ஒவ்வாமை அல்ல!

பாதிக்கப் பட்டவன் (victim) தான் வலி இல்லாமல் போய் விட்டதா என்று உறுதி செய்ய வேண்டுமேயொழிய, பாதிப்பைக் கொடுத்தவர்களின் தரப்பு (perpetrator) அல்ல. இதை சிங்களவர்களுக்கும், இந்தியாவிற்கும் நாம் சொல்லிக் கொண்டு, "வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் வலி முடிவுக்கு வந்தது"😎 என்று எழுதுவதை என்னவென்று சொல்வது?

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Justin said:

வலியை தந்தவனுடன் வலியை அனுபவித்தவர் தான் பேசவேண்டும். அப்படித் தான் தலைவரூம் மற்றும் அஸ்ரப்பும் பேசி முடித்தார்கள்.

ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தம் உட்பட தமிழர்கள் மீது வெளியாரால் திணிக்கப்பட்ட அனைத்து திணிப்புகளையும் மெச்சும் நீங்கள் வலியை அனுபவித்தவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது தமிழர்கள் என்றால் மட்டும் ....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

என் வீட்டுக்கு அருகில் இரண்டு பெண் பிள்ளைகள், மகன் ஆகியோருடன் (பிள்ளைகள் மூவமும் 10 வயதுக்குட்பட்டவர்கள்) ஒரு பெண்மை வாழ்ந்து வந்தார். அவரது கணவர் குடியால் இறந்து போன அரச சேவையில் கடைநிலை ஊழியராக வேலை செய்தவர். அவரது சொற்ப வருமானத்தில் தான் சீவியம் போய்க் கொண்டு இருந்தது. அவர்களிடம் தங்கம் வாங்க வந்த ஆண் போராளிகள், மூத்த மகளின் காதில் ஒட்டிக் கொண்டு இருந்த மிகச் சிறு தோட்டை கட்டாயப்படுத்தி புடுங்கிக் கொண்டு போனார்கள்.

இது என் கண் முன்னால் நிகழ்ந்தது.

புலிகள் மரபுவழி இராணுவமாக மாற முன் நிகழ்ந்த விடயங்கள் இவை.

தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வலியை தந்தவனுடன் வலியை அனுபவித்தவர் தான் பேசவேண்டும். அப்படித் தான் தலைவரூம் மற்றும் அஸ்ரப்பும் பேசி முடித்தார்கள்.

ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தம் உட்பட தமிழர்கள் மீது வெளியாரால் திணிக்கப்பட்ட அனைத்து திணிப்புகளையும் மெச்சும் நீங்கள் வலியை அனுபவித்தவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது தமிழர்கள் என்றால் மட்டும் ....

முதலில் தலைவர்கள் வேறு மக்கள் வேறு என்பதை நீங்கள் உங்கள் பக்திப் பரவசத்தை இறக்கி வைத்து விட்டுப் புரிந்து கொள்ள முனைய வேண்டும்! பிரபாகரன் பின்னால் எல்லாத் தமிழரும் நிற்கவில்லை (நிச்சயமாக இந்த முஸ்லிம்கள் வெளியேற்ற விடயத்தில் நிற்கவில்லை). அஷ்ரப்பின் பின்னால் எல்லா இலங்கை முஸ்லிம்களும் நிற்கவில்லை. பாதிக்கப் பட்டவர்கள் மக்கள், அவர்கள் வலி இருக்கும் வரை பேசுவர். பேசாதே என்று சொல்லும் உரிமை முஸ்லிம்கள் வெளியேற்றத்தையே வெள்ளையடிக்க முயலும் எந்த தமிழருக்கும் இல்லை.

எந்த ஒப்பந்தங்களை நான் மெச்சியிருக்கிறேன்? தமிழர்களுக்கு வாய்ப்புகள் வந்தன, மெச்சக் கூடியதாக ஒரு ஒப்பந்தமும் வரவில்லை. ஆனால், "புலிகளும், மக்களும் அழிதல்" என்ற தீர்வை விட, இது வரை வந்த எந்த ஓட்டை ஒப்பந்தமும் திறம் தானே? இதைப் புரிந்து கொள்ள எத்தனை நியூரோன்கள் ஒருவருக்குத் தேவை?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நியாயம் said:

நாம் அகதிகள் என அறிந்தும் கடினமான சூழலில் எம்மிடம் இரண்டு பவுண்கள் வலியுறுத்தி பெறப்பட்டது. பெண் போராளிகள் மூன்று தடவைகள் வந்தார்கள். எமது உறவினர் ஒருவர் கொடுக்கவில்லை என்பதற்காக பதுங்குகுழிக்கு அனுப்பப்பட்டார்.

2009 சம்பவங்கள், அதன் பின்னரான பல சம்பவங்கள் நடைபெறவில்லை என்றால் நீங்கள் சொல்வதை நம்பி இருப்பேன்.

1990ல் முஸ்லீம் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சமயம் நாம் யாழ் நகரில் இருக்கவில்லை. சற்று தள்ளிய கிராமத்தில் வசித்தோம். ஒவ்வொருவரும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு தமக்குள் மறைத்து வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள்/பொருட்கள் காணப்பட்டால் முஸ்லீம் மக்களிடம் பறித்து எடுக்கப்பட்டது என்பதே நாம் அப்போது அறிந்த தகவல்.

அருமையான .சாட்சி

On 22/10/2025 at 12:04, Justin said:

எனக்கு, இந்த முஸ்லிம்கள் வெளியேற்றம் பற்றி இரண்டு வகையான அனுபவங்களும் கிடைத்திருக்கின்றன. ஒரு தடவை ஜனாதிபதி மாவத்தையில் போக வேண்டியிருந்த ஒரு இடத்திற்கு, பஸ்ஸில் இடம் மாறி இறங்கி விட்டேன். நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் நபரிடம் வழி கேட்டேன். "அந்த வழியாகத் தான் போகிறேன், வாருங்கள்" என்று அழைத்துப் போகும் போது "எங்கிருந்து வருகிறீர்கள்?" எனக் கேட்டார், "யாழ்ப்பாணம்" என்றேன். ஆங்கிலத்தில் எனக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார் (ஆனால், எனக்கு முன்னால் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்😂). நான் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். 5 நிமிடங்களில் இடம் வந்தது. "அந்த நேரம் நீங்கள் சிறுவனாக இருந்திருப்பீர்கள், நீங்களும் தான் என்ன செய்திருக்க முடியும்? உங்களிடம் நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது, மன்னியுங்கள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

மன்னாரில் இருந்து வெளியேறிய ஒரு முஸ்லிம் முதியவரை, புத்தளத்தில் ஒரு ஆட்டுப் பண்ணையில் சந்தித்தேன். சந்திரிக்கா, ரத்வத்தை போன்றோர் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த காலம். "புலிகளால் தான் இவங்களுக்கு ஒரு முடிவு வரும், வேறெவரும் எதுவும் செய்ய முடியாது" என்றார். ஏன் சொல்கிறார், கொக்கி போடுகிறாரா என்று புரியாததால், நான் சிரித்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டேன்.

இது நற்சான்றிதழ் சாட்சி

இப்படியே சாட்ட்சியும் சான்றிதழ்களும் பெறவே ...அக்குரணை நியூஸ் இதில் இணைக்கப்பட்டது ...எதிர் பார்த்ததைவிட அதிகம் கிடைத்திருக்கிறது ...இன்னமும் கிடைக்கும்

இனி இந்த முசுலிம் சட்டத்தரணி ஒருலட்டசமல்ல இரண்டுலட்சம் முசுலிம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தோம் ...பறித்த தங்கத்தின் பெறுமதி ஒரு டன் என்பார்...இப்ப விளங்குதோ தலைவர் ஏன் நேரத்துக்குப் போனவர் என்பது

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, alvayan said:

என்னுடைய அனுபவம் இது. இது முஸ்லிம் தரப்பிற்கு நற்சான்றிதழாக மாறி விடும் என்பதற்காக நான் பகிராமல் மௌனமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ தெரியவில்லை.

உங்கள் போன்றோர் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் ஒரு விடயம், இந்த சட்டத்தரணி போன்றோர் வெளியே வந்து பேசி, வரவேற்பைப் பெறுவதற்கு பிரதான தூண்டிகளாக இருப்பது உங்கள் போன்ற பிழையைப் பிழை என்று ஏற்றுக் கொள்ளாமல் கடைந்தெடுத்த இனக்குரோதத்தோடு விடயங்களை அணுகும் ஆட்கள் தான். நீங்கள் பேசும் வரை, இவர் போன்றவர்களும் பேசுவார்கள், அவை அக்குரணை நியூசில் வரும், இங்கேயும் பகிரப் படும்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இந்த விடையம் என்ன ...இனம் சர்ந்த எந்த விடையமானலும் உங்கள் எழுத்தில் காண்பது வெள்ளிடை மலை...இத்துடன் முற்றுப்புள்ளி

  • கருத்துக்கள உறவுகள்

1993 கார்த்திகை மாதம். உயர்தரம் எழுதிவிட்டு பெறுபேற்றிற்காகக் காத்திருந்த காலம். கொழும்பு தெகிவளையில் அமைந்திருந்த மயோன் கம்பியூட்டர் நிறுவனத்தில் புலமைப் பரிசிலூடாக ஒரு வருட காலம் கற்கை நெறி ஒன்றை மேற்கொள்ளும் தகுதி பெற்றிருந்தேன். எனது வகுப்பில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 15 அல்லது 16 மாணவர்கள் இருந்தார்கள். தமிழர்கள், முஸ்லீம்கள் என்று ஆண்களும் பெண்களும். இவர்களுள் ஒரு சிலருடன் உடனடியாகவே நட்பாகிப் போய்விட்டேன். மலர்மன்னன் (என்னுடன் உயர்தரத்தில் சில டியூஷன் வகுப்புகளுக்கு வந்ததனால் முன்னரே பழக்கமானவன்), மதியக்கா(உடுப்பிட்டி), கலா அக்க (சிலாபம்), பைரூஸ் (புத்தளம்), சிவா (காரைநகர்) என்று விரல் விட்டு எண்ணக் கூடிய சில நண்பர்கள். இவர்களுள் மலர் மன்னனும், பைரூஸும் என்னூடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். வகுப்புக்கள் முடிந்த நேரங்களுள் இவர்களுடன் ஊர்சுற்றுவதே வழமையாகிவிட்டது. பைரூஸ் பாணதுறையில் இருந்தே கொழும்பிற்கு வந்து போவான். மலர்மன்னன் கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தான். 

மலரும், பைரூஸும் இயல்பாகவே கவிதை எழுதுவதில் வல்லவர்கள். வைரமுத்து, கவிக்கோ எழுதிய கவிதைகளை எனக்கு அடையாளம் காட்டி கவிதைகளில் ஈடுபாட்டினை உருவாக்கித் தந்தவன் பைரூஸ். அவன் தமிழ் எழுதுவது அச்சியந்திரத்தில் எழுதப்பட்ட‌துபோல அழகாயிருக்கும். விரயமாகும் வேளைகளில் ஏதோவொரு தலைப்பிற்குக் கவிதை எழுதுவோம். பைரூஸ் எழுதும் கவிதைகள் இரு வரிகளில் ஹைக்கூ வடிவத்தில் பளிச்சென்று பற்றிக்கொள்ளும். மலர் மன்னனும் அப்படித்தான். 

இப்படிச் சென்று கொண்டிருந்த நாட்களில் நான் கொழும்பிலிருந்து வெளிவரும் சரிநிகரில் எழுதத் தொடங்கியிருந்தேன். ஒரு முறை இந்தியப்படை ஈழத்தமிழர்களுக்கு தியாகங்களைப் புரிந்தது என்று மாலன் எனும் பெயரில் வெளிவந்த கட்டுரைக்கு நான் எழுதிய எதிர்வினையினை சரிநிகர் அப்படியே பிரசுரித்திருந்தது. அதனை நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகவே அதுபற்றி நான் பைரூஸுடனும், மலருடனும் பேசும்போது வெகுவாகவே பாராட்டியிருந்தார்கள். ஒரு நாள் தனது கதைபற்றி பைரூஸ் பேசிக்கொண்டிருக்கும்போது, தனது தகப்பனார் ஒரு தமிழ் ஆசிரியர் என்றும், மன்னாரில் அவர்கள் வசித்து வந்தார்கள் என்றும், புலிகள் வெளியேறச் சொல்லி அறிவித்ததன் பின்னர் கையில் அகப்பட்ட ஒரு சில உடைகளோடு தாம் கிளம்பி புத்தளத்திற்கு வந்ததாகக் கூறினான். தமிழரின் விடுதலைப் போராட்டம் குறித்து ஆதரவான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்த அவன் புலிகளின் தாக்குதல்கள் குறித்து நானும் மலரும் கிலாகித்துப் பேசும்போது தவறாமல் அவனும் கருத்துப் பகிர்வான். ஆகவே, அவன் முன்னால் எமது விடுதலைப் போராட்டம் குறித்துப் பேசுவது எமக்குச் சிரமாமாக இருந்ததில்லை. ஒருமுறை அவனது வெளியேற்றம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது முதன்முறையாக அவனது இடத்தில் இருந்து அவ்வெளியேற்றத்தினை என்னால் உணர முடிந்தது.

ஆகவே அன்றிரவு வட மாகாணத்திலிருந்து முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றியதுபற்றி சரிநிகரில் எழுதுவதென்று தீர்மானித்தேன். முதன்முறையாக புலிகளுக்கெதிராக என்னால் முன்வைக்கப்பட்ட விமர்சனம் அது. முஸ்லீம்களை எதற்காக அன்று வெளியேற்றினார்கள், வெளியேறும்போது எவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன, எத்தனை முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டார்கள் என்கிற எதுவித தெளிவும் இன்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. 1988 இற்குப் பின்னர் அங்கு வாழ்ந்ததுகூடக் கிடையாது. ஆகவே வெளியேற்றம் குறித்த சரியான பார்வையின்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. 

எதிர்பார்த்தது போலவே சரிநிகரும் எந்தத் தணிக்கையும் இன்றி அதனைப் பிரசுரித்தது. பைரூஸுடன் அக்கட்டுரை பற்றி பகிர்ந்துகொண்டேன். உணர்ச்சி மேலீட்டால் கண்கலங்கிய அவன், அக்கட்டுரையினை எழுதியதற்காக எனக்கு நன்றி கூறினான். பின்னர் ஒருநாள் என்னிடம் வந்து எனது கட்டுரையினை அகதி என்ற பெயரில் வெளிவந்த முஸ்லீம்களுக்கான பத்திரிக்கை ஒன்றில் மீள் பிரசுரிக்க அனுமதியளிக்கிறாயா என்று கேட்டான். நானும் ஆமென்று கூறவே, அக்கட்டுரை மீளவும் பிரசுரமானது. இதனை அறிந்தபோது மலர்மன்னன் கொதித்துப் போனான். வெளியேற்றியது பிழை என்று உன்னால் எப்படிக் கூறமுடியும்? கிழக்கில் அவர்கள் எம்மை நடத்தும் முறை பற்றி நீ அறிந்திருக்கிறாயா? கொழும்பில் இருந்துகொண்டு, நீ நினைத்தபடி இப்படி எழுதியிருக்கிறாய் என்று கடிந்துகொண்டான். கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட அவனுக்கு 90 களின் ஆரம்ப காலப்பகுதியில் அங்கு இடம்பெற்ற தமிழ் மக்கள் படுகொலைகள், அவற்றில் முஸ்லீம் ஊர்காவற்படையினரின் பங்களிப்பு என்பன நன்கு தெரிந்தே இருந்தது. ஆகவே, நான் வெறுமனே புலிகளை விமர்சித்து எழுதியிருந்தது அவனுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. 

எது எப்படியிருந்தபோதிலும், முஸ்லீம்களை வெளியேற்றியதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. பேரினவாதத்தில் இருந்து விடுபட போராடும் ஒரு சிறுபான்மையினம், தன்னிலும் சிறுபான்மையான இன்னொரு இனத்தை பேரினவாதம் போன்று நடத்துவது சரியாகப் படவில்லை. அதனாலேயே அப்படி எழுத நேர்ந்தது. ஆனால் வெளியேற்றத்தின்பின்னர் அவர்களின் அரசியல்த் தலைமைகளும், ஊர்காவற்படையினரும், சாதாரண முஸ்லீம்களில் ஒருபகுதியினரும் நடந்துகொண்ட விதம் இதுபற்றித் தொடர்ந்து நான் பேசுவதை நிறுத்தி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

பைரூஸ் இடம் பெயர்ந்து வாழ்ந்த இடம் நுரைச்சோலை என நினைக்கிறேன்.

வீரகேசரியில் கவிதைகள் எழுதுவார்.

பண்பாண மனிதர்.

இப்போ எப்படி இருக்கிறார் என் அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, alvayan said:

இந்த விடையம் என்ன ...இனம் சர்ந்த எந்த விடையமானலும் உங்கள் எழுத்தில் காண்பது வெள்ளிடை மலை...இத்துடன் முற்றுப்புள்ளி

என்ன "வெள்ளிடைமலை" உங்களுக்குத் தெரிந்தது?

"தமிழேண்டா!" என்று கண்ணை மூடிக் கொண்டு எல்லாவற்றையும் ஆதரிக்கா விட்டால், பல்வேறு முத்திரைகளை இங்கே குத்துவார்கள்: மதம் உள்ளே வரும் (பெயர் ஜஸ்ரின் என்பதால்!), படிப்பு வரும், பிறகு "மாற்று இயக்கத்தில் இருந்தவர் போல" என்றும் ஊகம் பரப்புவர். எதுவும் செய்ய முடியா விட்டால் "முற்றுப் புள்ளி" போட்டு விட்டு ஓடி விட வேண்டியது தான்😎!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.