Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துபை விமானக் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துபையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் கண்காட்சி நிகழ்வின்போது தேஜஸ் விமானம் (நவம்பர் 20ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்)

24 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

துபையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் இன்று (நவம்பர் 21) பிற்பகல் விபத்திற்குள்ளானது.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:10 மணியளவில் பார்வையாளர்கள் முன்னிலையில் வான் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இந்திய விமானப் படை, இந்த விபத்தில் விமானி உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

"விமானியின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தத் துயரமான நேரத்தில் விமானியின் குடும்பத்தினருடன் துணை நிற்கிறோம்," என்று விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதோடு, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியில், ஏபி செய்தி முகமை, "துபையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. விபத்து நடந்தபோது, விமான நிலையத்தில் புகைமூட்டம் எழுந்தது, சைரன்கள் ஒலித்தன," என்று குறிப்பிட்டுள்ளது.

துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

தேஜஸ் போர் விமானத்தின் சிறப்பு

தேஜஸ் போர் விமானம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் முற்றிலுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.

இது எதிரி விமானங்களைத் தொலைவில் இருந்தே குறிவைத்து தாக்கும் மற்றும் எதிரி ரேடாரை தவிர்க்கும் திறன் கொண்டது. இது சுகோய் விமானத்தைப் போலவே, அதே எண்ணிக்கையிலான ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் சுமந்து செல்லக்கூடியது.

இந்த ஆண்டு செப்டம்பரில், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 97 தேஜஸ் விமானங்களை வாங்குவதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அவை 2027இல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2021ஆம் ஆண்டு, இந்திய அரசு 83 தேஜஸ் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் கையெழுத்திட்டது. கடந்த 2024ஆம் ஆண்டு அவை வழங்கப்படும் எனத் திட்டமிடப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் இருந்து என்ஜின்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இது தாமதமானது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn8el5nzp22o

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:10 மணியளவில் பார்வையாளர்கள் முன்னிலையில் வான் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீழ்ந்தபடியால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சொந்த நாட்டில் என்றாலும் பரவாயில்லை.

இன்னொரு செல்வம் கொளிக்கும் நாட்டில் பழைய விமானத்தை சரிபிழை சரியாக பார்க்காமல் சாகசம் காட்டுவதா?

  • கருத்துக்கள உறவுகள்

என் சிறுவயதில் ஒரு விமான விபத்து செய்தி வந்தால் அது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும், பயமாகவும் இருக்கும், இப்பொதெல்லாம் விபத்துப் பற்றிய செய்திகள் சாதாரணமாகிவிட்டது.

மாட்டு வண்டில் show வுக்குத்தான் இந்தியா லாயக்கு. இவர்களுக்கு ஏன் air show?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

தேஜஸ் போர் விமானம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் முற்றிலுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.

9 hours ago, ஏராளன் said:

அமெரிக்காவில் இருந்து என்ஜின்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக

அமெரிக்கா சக்தி குறைந்த எஞ்சினை கொடுத்து விட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேஜஸ் போர் விமானம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் முற்றிலுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.

கிந்தியர்கள் தம் திறமை,சித்திரங்கள்,வீர தீரங்களை காட்ட ஏற்ற நாடுகள்.

இலங்கை

மாலைதீவு

பங்களாதேஷ்

கச்சதீவு

நேபாளம்

மட்டுமே.

துபாய் சம்பவத்தை கூட கூட அந்த நாடு வீர தீர செயலாகத்தான் பார்க்கும்..🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கிந்தியர்கள் தம் திறமை,சித்திரங்கள்,வீர தீரங்களை காட்ட ஏற்ற நாடுகள்.

இலங்கை

மாலைதீவு

பங்களாதேஷ்

கச்சதீவு

நேபாளம்

மட்டுமே.

துபாய் சம்பவத்தை கூட கூட அந்த நாடு வீர தீர செயலாகத்தான் பார்க்கும்..🤣

பாகிஸ்தானிலும் காட்ட முடியாது. ரபேலையே ஊதித்தள்ளியவர்கள்

17 hours ago, ஏராளன் said:

தேஜஸ் போர் விமானம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் முற்றிலுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.

17 hours ago, ஏராளன் said:

ஆனால் அமெரிக்காவில் இருந்து என்ஜின்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இது தாமதமானது.

உள்நாட்டில் தயாரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு முழுக்க இறக்குமதி போல. உள்நாட்டில் assembled செய்யப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுபாய் விமான கண்காட்சியில் இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது - விமானி பலி

Published By: Digital Desk 3 21 Nov, 2025 | 06:01 PM

image

டுபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டுபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விமான கண்காட்சி கடந்த திங்கள் கிழமை (நவம்பர் 17) ஆரம்பமானது.

இதில் உலகம் முழுவதிலிருந்து சுமார் 1,500 விமானங்கள் பங்கேற்றன. இந்நிலையில் விமான கண்காட்சியின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கண்காட்சியில் ஆயிரக்காணக்கான மக்கள் சாகசத்தை பார்த்துக்கொண்டு இருக்கும்போது இந்த விபத்து நடந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேஜஸ் விமானம் இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவத்தால் தயாரிக்கப்படும் மிக முக்கியமானது எனக் கூறப்படுகிறது. இது மணிக்கு 2200 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக செல்லக் கூடியது. மேலும் விமானம் தாங்கி கப்பலில் இருந்து புறப்படவும், அதில் தரையிறங்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

https://www.virakesari.lk/article/231030

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேஜஸ் விமான விபத்து பற்றி துபை ஊடகங்களும், நேரில் கண்டவர்களும் சொல்வது என்ன?

துபையில் நடைபெற்ற விமான கண்காட்சி, தேஜஸ் போர் விமானம்

பட மூலாதாரம், Giuseppe CACACE / AFP via Getty Images

படக்குறிப்பு, நவம்பர் 20 அன்று துபையில் நடைபெற்ற விமான கண்காட்சிக்கு முன்பு எடுக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

வெள்ளிக்கிழமை (2025 நவம்பர் 20) துபையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின்போது, இந்திய போர் விமானம் தேஜஸ் விபத்துக்குள்ளான செய்தியே துபை ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த விபத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில், அதை இயக்கிய விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால் உயிரிழந்தார்.

துபையில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான கல்ஃப் நியூஸ், தேஜஸ் விபத்து தொடர்பான பல செய்திகளை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தேஜஸ் விமானத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்தியா, அது போலிச் செய்தி என்று கூறியதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் பி.ஐ.பி-யின் உண்மைச் சரிபார்ப்பு சமூக ஊடகக் கணக்கில் இருந்து வெளியிடப்பட்டுள்ள பதிவு ஒன்றில், "துபை விமானக் கண்காட்சியில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று பகிரப்படுகிறது. அதில் விமானத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூற்றுகள் முற்றிலும் போலியானவை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்குப் பிறகு, துபை விமான நிலைய தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல்-மக்தூம், விமானியின் குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்ததாக துபை செய்தி ஊடகமான அமராத் அல்-யூம் தெரிவித்துள்ளது.

நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?

கல்ஃப் நியூஸ் வெளியிட்ட மற்றொரு செய்தியில், "தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளான நேரத்தில் எங்கள் செய்தியாளர்களில் ஒருவர் அங்கு இருந்தார். விமானம் கீழே விழுந்தவுடன், அந்த இடம் முழுவதும் புகைமூட்டம் பரவியது. அவசரக் குழு உடனடியாக விபத்து நடந்த இடத்தை நோக்கி விரைந்தது" எனத் தெரிவித்துள்ளது.

மேலும் "விமானக் கண்காட்சியைக் காண காலையில் இருந்தே கூட்டம் கூடியிருந்தது. மதியம் 1:30 மணியளவில், இந்தியாவின் சூர்ய கிரண் குழுவினர் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவுகளைக் கொண்டாடும் விதமாக வானில் சாகசம் நிகழ்த்தினர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

குறிப்பாக இதய வடிவிலான சாகசத்திற்குப் பிறகு மக்கள் சத்தமாகக் கைதட்டினர். நூற்றுக்கணக்கான மக்கள் அதைப் பார்த்து ரசித்துக்கொண்டே தங்கள் மொபைல் போன்களில் சாகசங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்."

விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால்

பட மூலாதாரம், @Suryakiran_IAF

படக்குறிப்பு, துபையில் விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானத்தின் விமானி விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால்

"சில நிமிடங்களுக்குப் பிறகு, எஃப்-35 விமானத்தின் ஓசை கூட்டத்தின் கவனத்தை ஈர்த்தது. மதியம் 2:10 மணியளவில், மற்றொரு ஜெட் விமானம் தோன்றியது. அது இந்தியாவின் தேஜஸ் என்று செய்தியாளர்கள் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டனர்" என்று கல்ஃப் நியூஸ் எழுதியிருக்கிறது.

சம்பவ இடத்தில் இருந்த கல்ஃப் நியூஸ் செய்தியாளர், "விமானம் தோன்றிய சுமார் மூன்று நிமிடங்கள் கழித்து வேகமாக உயர்ந்தது. ஆனால் மேலே ஏறும்போது நடுவில் அது திடீரெனத் தனது சக்தியை இழந்து கீழே வந்து மோதியது. ஒரு கணம் நான் அப்படியே உறைந்துபோனேன். என்னைச் சுற்றி குழப்பமும் பீதியும் நிலவிய போதும், என் மொபைல் போன் அங்கு நடந்து கொண்டிருந்தவற்றைப் பதிவு செய்து கொண்டிருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

அருகில் நின்றிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், "அடக் கடவுளே... விமானி நலமாக இருப்பார் என நம்புகிறேன்" என்று கூறியதாக கல்ஃப் நியூஸ் செய்தியாளர் கூறினார்.

கல்ஃப் நியூஸ் செய்தியின்படி, "கூட்டத்தில் பீதி எப்படி இருந்தது என்பதை மற்றவர்கள் விவரித்தனர். வெளிநாடுவாழ் இந்தியர் ஷாஜுதீன் ஜப்பார் தனது மனைவி மற்றும் மகளுடன் விமான சாகச நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தத் துயர சம்பவம் சில நொடிகளில் நடந்துவிட்டதாக அவர் கூறினார்."

"விமானங்களின் சாகசக் காட்சியை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று விபத்து ஏற்பட்டது. மக்கள் அலறத் தொடங்கினார்கள். பின்னர் ஆம்புலன்ஸ் வந்தது. சிறந்த நிகழ்ச்சியாக நடந்து கொண்டிந்தபோது திடீரென இந்தத் துயர விபத்து நடைபெற்றது. விமானியைக் காப்பாற்ற முடியாதது துரதிர்ஷ்டவசமானது. நம் கண் முன்னே ஒருவர் இறப்பதைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது" என்று விபத்தை நேரில் கண்ட ஷாஹத் அல்-நக்பி கூறினார்.

தேஜஸ் போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒற்றை எஞ்சின் கொண்ட தேஜஸ் போர் விமானம் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட் நிறுவனத்தால் முழுக்கவும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

எட்டு ஆண்டுகளாக துபையில் வசித்து வரும் ஹாபிஸ் ஃபைசல் மதனி, "இதுவொரு துயரமான, எதிர்பாராத சம்பவம். நான் பார்த்த முதல் விமானக் கண்காட்சி இதுதான். என் சகோதரர் முகமது உஸ்மானுடன் வான்வழிக் கண்காட்சிப் பகுதிக்குள் அப்போதுதான் நுழைந்தோம். திடீரென்று ஜெட் விமானம் ஒன்று கீழே விழுவதைக் கண்டோம். அது நமது தேஜஸ் என்பதை அறிந்ததும் வருத்தமாக இருந்தது. விமானியைக் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிய வந்தது" என்று கல்ஃப் நியூஸிடம் கூறினார்.

'பிரிட்டனை சேர்ந்த வில் கில்மோர் என்பவர் விபத்து நடந்தபோது விமானக் கண்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்' என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு நாளிதழ் தி நேஷனல் நியூஸ் தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

"யாரும் வெளியேறுவதையோ அல்லது அதுபோன்ற எதையும் நான் பார்க்கவில்லை. எல்லாம் மிக வேகமாக நடந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்துவிட்டதாக நினைக்கிறேன்" என்று வில் கில்மோர் கூறினார்

"நான் ஒரு கூடாரத்தின் பின்னால் இருந்தேன், அதனால் விமானம் தரையில் மோதியது சரியாகத் தெரியவில்லை" என்று கில்மோர் கூறினார்.

"புகைமூட்டத்தைத்தான் நாங்கள் பார்த்தோம். விபத்து நடைபெற்றவுடன் அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். உடனடியாக சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின. சூழல் முற்றிலும் மாறியது. மிகவும் உற்சாகமாக இருந்த சூழல், ஒரே நொடியில் சோகமயமாகிவிட்டது."

நமான்ஷ் ஸ்யால்

பட மூலாதாரம், @SukhuSukhvinder

படக்குறிப்பு, விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால்

நிபுணர்களின் கருத்து என்ன?

கலீஜ் டைம்ஸ், லண்டனை தளமாகக் கொண்ட ஸ்ட்ராடஜிக் ஏரோ ரிசர்ச் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் சஜ் அகமதுவிடம் இந்த விபத்து குறித்துப் பேசியது.

"தரையில் இருந்து மிகக் குறைந்த உயரத்தில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது. விமானி தனது சுழற்சியை (லூப்) முடித்த நேரத்தில் விமானத்துக்கும் தரைக்கும் இடையில் போதுமான இடைவெளி இல்லை. இதனால் விமானம் விபத்துக்குள்ளாகி விமானி உயிரிழந்தார்" என்று அவர் கூறினார்.

இருப்பினும், "விசாரணை ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. முக்கிய விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவம் பல கேமராக்களில் பதிவாகியுள்ளது" என்று அவர் கூறுகிறார்.

"சூலூர் விமானப்படை தளத்தின் நம்பர் 45 ஸ்குவாட்ரன் 'ப்ளையிங் டாகர்ஸ்-இன் மிகவும் திறமையான விமானி நமான்ஷ் ஸ்யால். ஏரோ இந்தியா மற்றும் பல தேசிய விமானக் கண்காட்சிகளில் தனது அற்புதமான பறக்கும் திறன்களால் பார்வையாளர்களின் இதயங்களை வென்றவர் எனக் கூறப்படுகிறது" என்று கலீஜ் டைம்ஸ் எழுதிய மற்றொரு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"வெளிநாட்டு இயந்திரம் பொருத்தப்பட்ட இந்தியாவின் உள்நாட்டு இலகுரக போர் விமானமான (LCA) HAL தேஜஸை நமான்ஷ் ஸ்யால் ஓட்டிச் சென்றார். இந்த விபத்து தேஜஸ் சம்பந்தப்பட்ட இரண்டாவது விபத்து" என்று அந்தச் செய்தி கூறுகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேஜஸ் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்து நடப்பதற்கு முன்னர் விமானத்தில் இருந்த விமானி பாதுகாப்பாக வெளியேறிவிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgexdpe802do

  • கருத்துக்கள உறவுகள்

அந்த விமானம் புறப்படுவதற்கு முன், அதன் எரிபொருள் தாங்கியிலிருந்து எரிபொருள் வழிந்து கொண்டிருந்ததை… எவரும் பெரிதாக கவனத்தில் எடுக்கவில்லை என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

இதில் உலகம் முழுவதிலிருந்து சுமார் 1,500 விமானங்கள் பங்கேற்றன. இந்நிலையில் விமான கண்காட்சியின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய விமானப்படைக்கே பரிசு கொடுக்க வேண்டும்.

விமானத்தையே விழுத்தி சாகசம் புரிந்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

இந்திய விமானப்படைக்கே பரிசு கொடுக்க வேண்டும்.

விமானத்தையே விழுத்தி சாகசம் புரிந்துள்ளனர்.

வானத்தில் பறக்க வேண்டியதை… கீழே விழுத்தி,

ஒரு அழகிய வாண வேடிக்கையே காட்டியதற்கு… பரிசு கொடுக்கத்தான் வேண்டும்.

பாரத் மாதாகீ ஜே….

  • கருத்துக்கள உறவுகள்

586404167_10240790413524816_117180724098

586188753_10240790414364837_866852317545

துபாயில்... பறந்து காட்டிய இந்தியாவின் தேஜஸ் விமானம் அனைத்து பார்வையாளர்களின் கண் முன்பாக விழுந்து நொறுங்கிஇருக்கிறது.

வீடியோக்களைப் பார்க்கும்போது விமானம் விழுந்து நொறுங்கும்முன்பாக விமானி எஜக்ஷன் சீட்டின் மூலம் பாராசூட்டில் தப்பித்ததாக தெரியவில்லை.

ஆக விமானியும் மரித்திருப்பார் என்பதே கணிப்பு..

உலகின் கண்களுக்கு முன் நடந்த ஆகப் பெரிய துயர மற்றும் அவமானகரமான சம்பவம் இது.

இதே தேஜஸ் விமானம் இந்தியாவில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் விபத்துக்கு உள்ளானது. இதே போன்ற விபத்துதான்அது. அந்த விபத்தில் நல்வாய்ப்பாக அந்த விமானத்தின் விமானி எஜக்ஷன் சீட்டின் மூலம் பாராசூட்டில் குதித்து தப்பிவிட்டார்.

ஆனால் இன்று சற்று முன் நடந்த இந்த விபத்தில் விமானி தப்பித்திருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

என்ன கொடுமை என்றால் ஏர் ஷோவுக்கு முன்பாக விமானத்தின் எரிபொருள்டேங்க்கில் இருந்து எரிபொருள் கசிந்ததை கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் இந்த எரிபொருள் கசிவது ஓவர் ஃபில்லிங் எனப்படும் கொள்ளளவுக்கு மேல் எரிபொருளை ஊற்றியதால் நடந்தது என்று முடிவு செய்திருக்கிறார்கள். விமானத்தில் இருந்து கசிந்த எரிபொருளை அட்டைப் பெட்டிகள் வைத்து பிடித்திருக்கிறார்கள்.

இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்ட விமானம் என்பதுதான் இதிலுள்ள ஹை லைட்டே..

தேச பக்தியை வைத்தே ஆட்சியைப் பிடித்த ஒரு கட்சியின்ஆட்சியில் போர் விமானங்கள் கூட ஊழலின் காரணமாக எவ்வளவு தரம் தாழ்ந்து தயாரிக்கப் படுகின்றன என்பதற்கான உதாரணம்தான் இந்த விபத்து.

மேலே உள்ள படத்தில்... விமானத்தில் நடந்த எரிபொருள் லீக்கேஜை அட்டைப் பெட்டி வைத்து பிடித்த போட்டோக்களும் தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கிய வீடியோவும் கொடுத்திருக்கிறேன்.

முபாரக் அலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேஜஸ் விமான விபத்தில் இறந்த விமானிக்கு கோவை, இமாச்சலில் இறுதி அஞ்சலி

நமாம்ஷி சியாலின் உடலை சுமந்து செல்லும் வீரர்கள்

பட மூலாதாரம், @IafSac

படக்குறிப்பு, விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யாலின் உடல் கோயம்புத்தூரில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது, அங்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

துபையில் தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யாலின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த கிராமத்தில் நடைபெற்றது.

இறுதி மரியாதை செலுத்துவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பட்டியல்கரில் காலை முதலே மக்கள் திரண்டிருந்தனர்.

நமான்ஷ் ஸ்யாலின் மனைவியும் விங் கமாண்டருமான அஃப்ஷான் ஸ்யால், விமானப்படை சீருடையில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அவர் ராணுவ மரியாதையுடன் தனது கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன், விங் கமாண்டர் நமான்ஷின் உடல் கோயம்புத்தூரில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

அங்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் அவரது உடல் காங்க்ரா விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

தந்தை கூறியது என்ன?

''நாடு ஒரு சிறந்த விமானியை இழந்துள்ளது, நான் என் இளம் மகனை இழந்துள்ளேன். அவர் வாழ்க்கையில் ஒருபோதும் சலிப்பு என்பதே இருந்ததில்லை; பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றார். இந்திய அரசு தனது தரப்பில் விசாரணை நடத்துகிறது, அதே நேரத்தில் துபை அரசும் விசாரணை செய்து வருகிறது." என்று நமான்ஷின் தந்தை ஜகன் நாத் ஸ்யால் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

"எங்கள் விமானி நமான்ஷின் இறுதிச் சடங்கில் நான் கலந்துகொள்ள வந்துள்ளேன். அவர் 12ஆம் வகுப்புக்குப் பிறகு தேசியப் பாதுகாப்பு அகாடமியில் (NDA) சேர்ந்தார்," என உள்ளூர்காரரான ராஜீவ் ஜம்வால் கூறுகிறார்.

"என்டிஏவில் அவர் சிறப்பாக செயல்பட்டார், மேலும் விமானப்படையிலும் அவர் சிறந்த விமானிகளில் ஒருவராக இருந்தார். அவருக்கு மரியாதை செலுத்த நாங்கள் இங்கு வந்துள்ளோம்," என்று கூறினார்.

"எங்கள் கிராமத்தில் துக்க சூழல் நிலவுகிறது... மிகவும் மோசமாக உணர்கிறேன். வார்த்தைகள் இல்லை... இப்படி நடந்திருக்கக் கூடாது," என நமான்ஷ் ஸ்யாலின் கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் கூறுகிறார்.

கணவர் நமாம்ஷ் சியாலுக்கு இறுதி வணக்கம் செலுத்திய அவரது மனைவி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கணவர் நமான்ஷ் ஸ்யாலுக்கு அஞ்சலி செலுத்திய அவரது மனைவி

விபத்து நடந்தது எப்படி?

இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் வெள்ளிக்கிழமை துபை ஏர் ஷோவின் போது விபத்துக்குள்ளானது. இதில் விமானி விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால் உயிரிழந்தார்.

துபையில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் நிகழ்ந்தது. இந்த விபத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

காணொளியில், விமானம் புறப்பட்ட உடனேயே தரையில் விழுந்து, தீப்பிடித்து எரியத் தொடங்கியது தெரிகிறது.

இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெள்ளிக்கிழமை துபை ஏர் ஷோவில் விமான சாகசத்தின்போது இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி தனது உயிரை இழந்தார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உருவான தேஜஸ்

தேஜஸ் விமானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒற்றை எஞ்சின் கொண்ட தேஜஸ் போர் விமானம் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும்

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் முற்றிலும் உள்நாட்டில் தயாரித்த ஒற்றை எஞ்சின் கொண்ட போர் விமானம்தான் தேஜஸ்.

இந்த விமானம் வெகு தொலைவில் இருந்தே எதிரி விமானங்களைக் குறிவைத்துத் தாக்கக்கூடியது மற்றும் எதிரி ரேடாரைத் தவிர்க்கும் திறனையும் கொண்டுள்ளது. இந்த விமானத்தால், தன்னைவிட அதிக எடை கொண்ட சுகோய் விமானம் தாங்கக்கூடிய அதே அளவு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளைத் தாங்கிப் பறக்க முடியும்.

2004 ஆம் ஆண்டிலிருந்து தேஜஸில் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் எஞ்சின் F404-GE-IN20 பயன்படுத்தப்படுகிறது. தேஜஸ் மார்க் 1 வகை தற்போது F404 IN20 எஞ்சினைப் பயன்படுத்துகிறது.

தேஜஸ் போர் விமானங்கள் சுகோய் போர் விமானங்களை விட இலகுவானவை மற்றும் எட்டு முதல் ஒன்பது டன் வரை எடையைத் தாங்கக்கூடியவை.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(ஹெச்ஏஎல்) உடன் 97 தேஜஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. அவற்றின் விநியோகம் 2027 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன், 2021 இல் இந்திய அரசு ஹெச்ஏஎல் உடன் 83 தேஜஸ் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் விநியோகம் 2024 இல் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஞ்சின்கள் பற்றாக்குறை காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd6xqg74pwxo

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து மக்களின் வரிபணத்தில் தமிழ் பி பி சி செத்த வீடு கொண்டாடுது .

  • கருத்துக்கள உறவுகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.