Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kandiah57 said:

நோட்டோவில். இணந்தால். வேலிக்குள் நோட்டோவந்து விடும் என்று. கூறுவது. ஏன். ?

முதலில் ரஷ்யா தனது ஆக்கிரமிப்புக்கு சாட்டு சொல்ல இதை சொல்லியிருக்கலாம். பின்பு இதை இந்தியர்கள் -ஹிந்தியர்களும் தமிழர்களும் முகநூல் இணையதளங்கள் மூலம் பரப்ப அதை எங்களது ரஷ்ய விசுவாசிகள் பிடித்து கொண்டனர். இந்திய அரசு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை சரி என்று சொல்லவில்லை இந்தியர்கள் தான்.

  • Replies 69
  • Views 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே? பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி. ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால்,கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி. இப்ப… நா

  • goshan_che
    goshan_che

    இதன் பின்னால் உள்ள இராஜதந்திர முஸ்தீபை புரிந்து கொள்ளும் இயலுமை ஈழத்தமிழருக்கு இருந்திருதால்…. சிங்களவன் ஒன்பதுவாயில்களிலும் பிதுக்கி விட்டிருக்கும் அவல நிலையை அவர்கள் அடைந்திருக்க மாட்டார்கள்.

  • கிருபன்
    கிருபன்

    ஸ்புட்னிக்கில் ஏறி நிலவில் இருந்து கதைக்கின்ற மாதிரி இருக்கின்றது😂 2014 இல் கிரைமியாவைக் கைப்பற்றியது ரஷ்யா. 2022 பெப்ரவரியில் கியேவை நோக்கி படையெடுத்துப் பின்னர் அடி அகோரத்தால் பின்வாங்கியது ரஷ்யக் க

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2025 at 20:49, island said:
  1. அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே?

  2. பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி.

  3. ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால்,கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி.

  4. இப்ப… நாரி முறிய, கீழே விழுந்து கிடக்கிறார்.

  5. சுய புத்தியும் தேவை.

இந்த திரியில் கண்ட வசனங்கள் இவை. 😂

இவை அத்தனையும் முகக்கண்ணீடி முன் நின்று தமிழர்கள் தம்மை தாமே கேட்டிருக்க வேண்டியவை அல்லவா!

கச்சிதமாய பொருந்துது எமக்கும். 😂

இது எப்படி எமது போராட்டத்திற்கு பொருந்தும் நானா? நாம் நேட்டோ போன்று எந்த அமைப்பில் சேரவேண்டும் என்று போராடினோம்? எமக்கு எந்த மேற்குநாடுகள் உதவின?

நாம் போராடியது எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக! இதுக்கு லைக் போட்ட கூட்டத்தை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை!!

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Eppothum Thamizhan said:

இது எப்படி எமது போராட்டத்திற்கு பொருந்தும் நானா? நாம் நேட்டோ போன்று எந்த அமைப்பில் சேரவேண்டும் என்று போராடினோம்? எமக்கு எந்த மேற்குநாடுகள் உதவின?

நாம் போராடியது எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக! இதுக்கு லைக் போட்ட கூட்டத்தை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை!!

அழுங்கோ, பரவாயில்லை😎!

ஈழத் தமிழருக்கு எதிரான அநீதிக்கு எதிராக ஈழத்தமிழர் போராடினர், இந்தியா ஆரம்பத்தில் உதவியது. உக்ரைனியர்கள் தம் விருப்பப் படி தங்கள் நாட்டை கொண்டு நடத்த அனுமதிக்காத பெரியண்ணனின் அநீதிக்கெதிராகப் போராடினர். ஐரோப்பிய நாடுகள் உதவுகின்றன. என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது இரண்டிற்குமிடையில்?

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2025 at 23:32, valavan said:

உக்ரேன் என்பது அனைத்து வளங்களையும் சொந்த அரசியலையும் நாடு மொழி ராணுவம் ஆட்சியென்று அனைத்தையும், உலகதேவையின் பெரும்பங்கை கொண்ண்ட தானியங்கள், எண்ணெய்வளம், கனிமங்கள், பல்கலைகழகங்கள்,உலகத்திலேயே பெரிய சரக்கு விமானத்தை கொண்ட பெருமை ஆயுத உற்பத்தி என்று பலவற்றை கொண்டு தனியாக இயங்கியநாடு. அத்தனையும் இருந்தும் தனது பாதுகாப்பு என்று சொல்லிக்கொண்டு வேற்று வல்லரசு சக்திகளுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்க்க கிளம்பியதால்தான் இந்த போரே ஆரம்பித்தது.

தமிழர்கள் இத்தனை வசதிகள் தம் வசம் இருந்தும் இந்திய வல்லரசுடனும் உலக வல்லரசுகளுடனும் இணைந்து இலங்கையை அழிக்க நினைத்து இறுதியில் தோற்று போனார்களா?

அதைதான் கண்ணாடிமுன் நின்றூ கேட்கவேண்டுமென்று நீங்கள் அர்த்தப்படுத்துகிறீர்களா?

உக்ரேன் மேற்குலகுடன் இணைந்து ரஷ்யாவை மிரட்ட வேண்டுமென்று போர் செய்த நாடு, தமிழர்கள் எவர் உதவியும் இன்றி சிங்களவனிடம் அடிவாங்கி செத்ததால் வேறுவழியின்றி போர் செய்த இனம் இந்த இரு பிரிவுகளையும் ஒப்பிட்டுபார்க்க எந்தரீதியிலான பெளதீக அறிவு உங்களை தூண்டியது?

உக்ரேன் சொந்தநாடு இருந்தும் போருக்கு வழி தேடிய இனம், தமிழர்கள் வேறி வழி இல்லாததால் சொந்தநாடுவேண்டி போராடி தோற்றுபோன இனம் இந்த இரண்டையும் ஒப்பிட்டு எகத்தாளமாய் சிரிக்க உங்கள் ஒரு சிலரால் முடிகிறது அது உலகின் பார்வைக்கு கண்டிப்பாக ஏளனமாய் அமையாது.

1958 ,1977, 1983 வரை எந்த தமிழர்களும் ஆயிரக்கணக்கில் ஆயுதம் ஏந்தி சிங்களவனுக்கெதிராய் போராட நினைத்ததில்லை, அவன் அரசியல் யாப்பையும் ஆயுதபடைகளையும் ஏற்றும், சொல்லபோனால் படைபலத்தை வைத்து சிங்களவன் எங்களை நீங்கள் வேறு நாங்கள் வேறூ என்று மிதி மிதியென்று மிதித்தபோதும் துடைத்துவிட்டு காவல்துறை ராணுவம் கடற்படை விமானபடை என்று சிங்களவனின் படைகளில் சேவையாற்றியும் வாழ்ந்தார்கள்.

கல்வி சுகாதாரம் பாதுகாப்பு, மொழி, அரசியல் என்று அனைத்திலும் வலிகளை மட்டுமே அவன் எமக்கு தந்தாலும்முடிந்தவரை சிங்கள தேசத்துடன் முரண்படாமலே வாழ நினைத்தார்கள். 83ல் ஜேஆர் எனும் மனிதகுலவிரோதி இலங்கையில் இனக்கலவரம் என்ற ஒன்றை உருவாக்காமல் விட்டிருந்தால் தமிழர் ஆயுத போராட்ட இயங்கங்களின் உறுப்பினர் தொகை இரண்டு இலக்கங்களுக்கிடையே மட்டுமே இருந்து தானாகவே காணாமல் போயிருக்கும்.

லட்சக்கணக்கான தமிழர்கள் ஆயுதபோராட்ட இயக்கங்களுக்கு பின்னால் போக வைத்த பெருமை சிங்கள இனத்தையும் ஆட்சியாளர்களையுமே சேரும்.

உக்ரேன் அப்படியா வாழ்ந்துவிட்டு நேட்டோவுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்த்து போர் செய்து பேரழிவின் முடிவில் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்தது?

எங்கள் காயங்கள் உங்களுக்கு சிரிப்புக்கிடமானதாக தெரிந்தால் விலகி நில்லுங்கள் அதனை பார்த்து கைகொட்டி சிரிக்காதீர்கள்,

பிற விலங்குகள் குட்டி ஈன்று கொண்டிருக்கும்போதே தன்பசியாற தாயின் பிறப்புறுப்பிலிருந்து இழுத்தெடுத்து உண்ணுமாம் ஹயினாஸ் எனும் விலங்கு அதுபோல் எமக்கு வசதியென்றால் எது வேண்டுமென்றாலும் பேசலாமென்ற மனபாங்கில் பேசி பழகுவான் மனிதன்.

அது விலங்குகள் பரவாயில்லை அப்படித்தான் அவற்றின் இயற்கை சுழற்சி இருக்கும், நாம் அப்படியா? அழகானமனிதர்கள்.

அழகான மனிதர்கள் அந்த கொடூர இனத்தில் சேராமல் சுயமாக சிந்தித்து வாழ்ந்தால் அதில் தவறென்று எதுவும் இருக்க போவதில்லை.

தவறான தகவல்களையும், வெறுமனே காலா காலமாக சொல்லிவரும் சென்றிமென்ற் உணர்சசி வசனங்களையும் உங்கள் கருத்துக்கு வலு சேர்க்க பயன்படுத்தியுள்ளீர்கள்.

உக்கிரேன் ரஷயாவை மிரட்ட யுத்தத்தை ஆரம்பித்ததாக கதை கூறி நடந்த உண்மைகளை அப்படியே உங்களுக்கு ஏற்ற போல் திரித்துள்ளீர்கள். உக்கிரேன் யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. ரஷ்யாதான் யுத்தத்தை ஆரம்பித்தது. உக்கிரேனின் பக்கத்து நாடு ரஷ்யா ஆதலால் அதனை அனுசரித்து யுத்தத்தையும் அதனால் விளைந்த இழப்புகளையும் தவிர்த்திருக்கவேண்டும் என்று உக்கிரேனுக்கு அறிவுரை கூறும் நீங்கள் ஈழத்தில் நாம் உலக அரசியல் சூழ்நிலைகள் எமக்கு சாதகம் இல்லாத நிலையை உணர்ந்தும், இணைத்தலைமை நாடுகளின் கடும் எச்சரிக்கையும் புறக்கணித்து யுத்தத்திற்கு சென்று ஏற்கனவே இருந்ததைக் கூட இழந்த செயலுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள். உக்கிரேன் தனது மக்களை காப்பாற்ற யுத்தத்தை தவிர்த்து பக்கது நாட்டுடன் உடன் பாட்டுக்கு வந்திருக்க வேண்டுமென்றால் எமது தலைமையும் ஆயுதப்போராட்டம் இனி சரி வராது என்பதை உரிய நேரத்தில் உணர்ந்து யுத்தத்தை தவிர்த்திருக்க வேண்டும், ராஜதந்திர அணுகுமுறை மூலம் போராட்டத்தை தொடர்ந்து தம்மை நம்பிய மக்களை அழிவில் இருந்து காப்பாற்றி இருக்க வேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு? ஆண்டுகளை 1958, 1977, 1983 என வகைப்படுத்திய நீங்கள் 1987, 1990, 1994, 2002 என வந்த சந்தர்பங்களை எல்லாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்தாமல், பிடிவாதமாக புறக்கணித்ததில் எம்மவருக்கு இருந்த பங்கைப் பற்றி எதுவும் கூறவில்லை.

“போராட்டம்” என்பது, ஆயுதப்போராட்டம் அல்லது வெறுமனே பிடிவாதம் பிடிப்பது மட்டுமல்ல, பேச்சுவார்ததை மேசையில் கலந்து அங்கு செய்வதும் போராட்டம் தான். நட்பு சக்திகளை இயன்ற அளவுக்கு வளர்தது கொள்வதும் அவர்களுடன் உடன்பாடுகளை ஏற்படுத்துவதும் போராட்டத்தின் ஒரு வழி முறை தான். மக்கள் போராடினார்கள் மக்கள் போராடினார்கள் என்கின்றீர்கள். ஆனால், போராட்ட வழிமுறைகளையோ தீர்மானங்களையோ எடுப்பதில் மக்கள் பங்களிப்பு இருக்கவில்லை தலைமை மட்டுமே தீர்மானித்தது . 1987 ல் சுதுமலைக் கூட்டதிலேயே ஆயுதங்களை கையளிக்கிறோம் என்ற கூறியவுடன் கரகோசம் செய்து அதை ஆதரித்தவர்கள் தமிழ் மக்கள். ஆனால் அவ்வேளையில் மக்களின் மனவோட்டத்தை புறக்கணித்ததன் விளைவு என்ன,? பாரிய மக்கள் அழிவுக்கு பின்னர் 22 வருடம் கழித்து ஆயுதங்களை பலவந்தமாக கைவிட வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். அதாவது 1987 மக்கள் எதை கரகோசம் செய்து வரவேற்றார்களோ அதே முடிவை அவமானத்துடன் பின்னர் எடுக்க வேண்டிய நிலை வந்தது.

உக்கிரேன் அதிபர் ரஷயாவின் ஆக்கிரமிப்பை எதிர்தது போராடியதை தவறு என்று ஏளனப்படுத்துகின்றீர்கள், இத்தனைக்கும் உக்கிரேன் இன்றும் இராணுவ பொருளாதார பலத்துடன் தான் இருக்கிறது. இழந்ததை கட்டியெழுப்புவது அவர்களுக்கு ஒன்றும் சிரமம் இல்லை. ஆனால் , தமிழ் மக்களின் அரசியல் நிலை அப்படியா உள்ளது? இந்த நிலையில் உக்கிரேனுக்கு அட்வைஸ் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

நேட்டொவில் இணைந்துகொள்ளும் தனது விருப்பத்தினை உக்ரேன் முழுவதுமாகக் கைவிட்டு விட்டது என்று நான் நினைக்கவில்லை. நடைபெற்றுவரும் பேச்சுக்களுக்கு உக்ரேனின் நேட்டோவில் இணையும் கோரிக்கை தடங்கலாக அமையும் என்பதாலேயே அது அடக்கி வாசிப்பதாக நினைக்கிறேன். மேலும் நடைபெற்று வரும் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு நேட்டோவில் இணையும் தனது விருப்பினை உக்ரேன் கைவிடவேண்டும் என்று நிபந்தனை முன்வைக்கப்பட்டிருந்தாலும், நேட்டோவிற்கு வெளியே இருந்துகொண்டு தனக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்கக்கூடிய ஏற்பாடுகளை நேட்டோ நடுகளிடமிருந்து அது பெற்றிருக்கிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் நேட்டோவில் அங்கத்துவம் வகிக்கும் நாடொன்றின் மீது எதிரி நாடொன்று தாக்குதல் நடத்தும் வேளையில் ஏனைய அங்கத்துவ நாடுகள் அந்நாட்டினைப் பாதுகாக்க போரில் இறங்கும் எனும் சரத்துக்கு இணையான உத்தரவாதத்தினை நேட்டோவிற்கு வெளியில் இருந்து உக்ரேன் பெற்றுக்கொள்ளவிருக்கிறது. இது நேட்டோவில் இணையும் தனது விருப்பத்தினை உக்ரேன் முழுமையாகக் கைவிட்டு விட்டது என்பதற்கு மாறாக, சூழ்நிலைகளுக்கேற்ப தனது தந்திரங்களை உக்ரேன் மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மையாகும்.

இதைத்தவிரவும் உக்ரேனினை தற்போது நேட்டோவினுள் உள்வாங்குவதன் ஊடாக , ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் புட்டினுடன் நேரடியான மோதல் ஒன்றிற்குச் செல்வதையும் சில நேட்டோ அங்கத்துவ நாடுகள் தற்போதைக்கு விரும்பவில்லை.

ஆகவே தன்னை நோக்கி இதுவரையில் நேட்டோவில் இணைவதற்கான அழைப்பினை எந்த நாடும் முன்வைக்காத நிலையிலும், மாறிவரும் உலக சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டுமே உக்ரேன் நேட்டோவில் இணையும் தனது விருப்பினை தற்காலிகமாக மடித்து வைத்திருக்கிறது.

இங்கு குறிப்பிடத்தக்க இன்னொரு விடயம் என்ன‌வென்றால், நேட்டோவில் இணையும் தனது விருப்பினை உக்ரேன் தனது அரசியலமைப்புச் சட்டத்தினுள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது என்பதுடன், அச்சரத்து இன்னமும் உயிர்ப்புடனேயே இருக்கிறது. இதைவிடவும் உக்ரேனின் அரசியல்வாதிகள் இன்றுவரை உக்ரேன் நேட்டொவில் இணைவதையே தாம் விரும்புவதாகக் கூறிவருகின்றனர்.

ஆக, நேட்டோவில் இணையும் தமது கோரிக்கையினைத் தற்போதைக்குக் கிடப்பில் போட்டாலும் நீண்டகால அடிப்படியில் உக்ரேன் நிச்சயமாக‌ நேட்டோவில் சேரும் அல்லது உள்வாங்கப்படும் என்பது தவிர்க்க முடியாதது. இது இன்னுமொரு 10 வருடங்களிலோ அல்லது நாளை ரஸ்ஸியாவின் சர்வாதிகாரி புட்டினின் மரணத்துடன் நடந்தாலுமோ ஆச்சரியப்படுதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ஸிய கோடீஸ்வரர்கள், தொழில் அதிபர்கள், புட்டினுக்கு நெருக்கமான அரசியல்வாதிகள் என்று பலராலும் ஐரோப்பாவில் பல வங்கிகளில் பணமாகவும், ஆடம்பர கப்பல்கள், மாளிகைகள் போன்றவற்றி முதலீடாகவும் வைப்பிலிடப்பட்ட சுமார் 245 பில்லியன் யூரோக்களின் ஒரு பகுதியினை உக்ரேனின் செலவுகளுக்காகப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது.

தனது பணத்தினை உக்ரேனுக்குக் கொடுத்தால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஸ்ஸியா அச்சுருத்தியிருக்கும் நேரத்திலும், போலந்து இந்த முடிவில் உறுதியாக இருப்பதுடன் ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் இதுகுறித்து சாதகமான முடிவினை எடுக்கும்படி கேட்டு வருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வரும் உக்ரேன் ஜனாதிபதியின் வேண்டுகோள்களில் ஒன்றான ரஸ்ஸியப் பணத்தினை உக்ரேனுக்கு வழங்கும் கோரிக்கையினை ஐரோப்பிய நாடுகள் சாதகமான முறையில் பரிசீலிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்பணத்தினை வெறுமனே ஆயுதங்களை வாங்குவதற்காக மட்டுமே பாவிப்பதுடன் நின்றுவிடாது ரஸ்ஸிய ஆக்கிரமிப்பினால் அழிக்கப்பட்டிருக்கும் உக்ரேனைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும் பாவிப்பது சாலப்பொறுத்தமாக இருக்கும் என்பது எனது கணிப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, ரஞ்சித் said:

உந்த நரிப்புத்தி தெரிந்துதான் ரஷ்யா உக்ரேனின் கரைப்பகுதிகளை கைப்பற்றி வைத்திருக்கின்றது.

11 minutes ago, ரஞ்சித் said:

ரஸ்ஸிய கோடீஸ்வரர்கள், தொழில் அதிபர்கள், புட்டினுக்கு நெருக்கமான அரசியல்வாதிகள் என்று பலராலும் ஐரோப்பாவில் பல வங்கிகளில் பணமாகவும், ஆடம்பர கப்பல்கள், மாளிகைகள் போன்றவற்றி முதலீடாகவும் வைப்பிலிடப்பட்ட சுமார் 245 பில்லியன் யூரோக்களின் ஒரு பகுதியினை உக்ரேனின் செலவுகளுக்காகப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது.

மற்றவர்கள் சொத்துக்களை ஆட்டைய போடுவதில் மேற்குலகினருக்கு நிகர் யாருமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரஞ்சித் said:

ரஸ்ஸிய கோடீஸ்வரர்கள், தொழில் அதிபர்கள், புட்டினுக்கு நெருக்கமான அரசியல்வாதிகள் என்று பலராலும் ஐரோப்பாவில் பல வங்கிகளில் பணமாகவும், ஆடம்பர கப்பல்கள், மாளிகைகள் போன்றவற்றி முதலீடாகவும் வைப்பிலிடப்பட்ட சுமார் 245 பில்லியன் யூரோக்களின் ஒரு பகுதியினை உக்ரேனின் செலவுகளுக்காகப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது.

தனது பணத்தினை உக்ரேனுக்குக் கொடுத்தால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஸ்ஸியா அச்சுருத்தியிருக்கும் நேரத்திலும், போலந்து இந்த முடிவில் உறுதியாக இருப்பதுடன் ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் இதுகுறித்து சாதகமான முடிவினை எடுக்கும்படி கேட்டு வருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வரும் உக்ரேன் ஜனாதிபதியின் வேண்டுகோள்களில் ஒன்றான ரஸ்ஸியப் பணத்தினை உக்ரேனுக்கு வழங்கும் கோரிக்கையினை ஐரோப்பிய நாடுகள் சாதகமான முறையில் பரிசீலிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்பணத்தினை வெறுமனே ஆயுதங்களை வாங்குவதற்காக மட்டுமே பாவிப்பதுடன் நின்றுவிடாது ரஸ்ஸிய ஆக்கிரமிப்பினால் அழிக்கப்பட்டிருக்கும் உக்ரேனைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும் பாவிப்பது சாலப்பொறுத்தமாக இருக்கும் என்பது எனது கணிப்பு.

இரஸ்சிய மத்திய வங்கியின் பணம் அது.

அனைத்து நாடுகளு இதே போல நடைமுறையினை பின்பற்றுகின்றன, இது தனியார் பணமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, vasee said:

இரஸ்சிய மத்திய வங்கியின் பணம் அது.

உண்மை, ஆனால் தனியாரின் பணமும் முடக்கப்பட்டிருக்கிறது.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

உண்மை, ஆனால் தனியாரின் பணமும் முடக்கப்பட்டிருக்கிறது.

இந்த பணம் யூரோ கிளியர் வங்கியில் பெல்ஜியத்தில் முடக்கியுள்ளது (இது முழுக்க இரஸ்சிய மத்தியவங்கியின் பணம்) இதனை பற்றியே தற்போது பேசுகிறார்கள், இந்த பணத்தினில் கை வைப்பது சட்ட விரோதமானது (உலக மற்றும் ஐரோப்பிய), அதற்கு மாற்று வழி தேடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முயல்கிறது, இதனை ஐரோப்பிய வங்கியின் தலைவர் கிறிஸ்ரின் லகார்ட் கூட எதிராக கருத்து கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

ஸ்புட்னிக்கில் ஏறி நிலவில் இருந்து கதைக்கின்ற மாதிரி இருக்கின்றது😂

2014 இல் கிரைமியாவைக் கைப்பற்றியது ரஷ்யா. 2022 பெப்ரவரியில் கியேவை நோக்கி படையெடுத்துப் பின்னர் அடி அகோரத்தால் பின்வாங்கியது ரஷ்யக் கரடி.

இது எல்லாம் தெரிந்திருந்தும் நோஞ்சான் உக்கிரேன் பயில்வான் ரஷ்யாவை மிரட்டிப் போருக்கு வெளிக்கிட்டது என்ற கதையாடலை (narrative) எல்லோருக்கும் தீத்தமுடியாது.

1954 வரை கிரிமியா ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருந்தது என்று தரவுகள் கூறுகின்றன. பின்பு குருஷேவினால் உக்ரேனுடன் இணைக்கப்பட்டதாகவும், சோவியத் உடைவின் பின்னர் உக்ரேனிடம் இருந்த கிரிமியா மேற்குலகினூடான உக்ரேனின் நெருக்கத்தின் காரணமாக கருங்கடலில் ரஷ்யாவின் ஆதிக்கம் கையைவிட்டு போய்விடுமோ என்ற அச்சமும் கனிமங்களின் சுரண்டலும் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமிக்க காரணங்களில் ஒன்றாக இருந்தது என்பது நான் சொல்லி கிருபன் அறியும் நிலையில் இருக்காது என்று நினைக்கிறேன், அதன் தொடர்ச்சியே மறைமுக மேற்குலகுக்கெதிராக ரஷ்யா தொடுத்த கீவ் நோக்கிய ரஷ்யாவின் படையெடுப்பும் என்பது பின்னாளில் அனைவரும் அறிந்த வரலாறு.

உக்ரேன் ரஷ்ய பலத்துடன் ஒப்பிடும்போது நோஞ்சான்தான், ஆனால் உக்ரேனுக்கு பின்னாலிருந்த மேற்குலகும் நேட்டோ ஆதரவும் நிச்சயமா நோஞ்சான்கள் இல்லை என்பது நம் அன்னைவரையும்விட ரஷ்யாவுக்கு நல்லாவே தெரியும். அதுவே போராக வெடித்தது.

ஆக்கிரமிப்புகள் நியாயப்படுத்த முடியாதவை, இங்கே காரணங்களைதான் சொல்கிறேன், மற்றும்படி ரஷ்ய &உக்ரேன் பக்கம் நிக்கவோ நியாயப்படுத்தவோ எந்த நிமிடமும் முயற்சிக்கவில்லை, ஒரு இன ஆக்கிரமிப்புபோரில் இருவருமே எமக்கெதிராய் நின்றவர்கள்.

3 hours ago, island said:

1987, 1990, 1994, 2002 என வந்த சந்தர்பங்களை எல்லாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்தாமல், பிடிவாதமாக புறக்கணித்ததில் எம்மவருக்கு இருந்த பங்கைப் பற்றி எதுவும் கூறவில்லை.

இந்த நான்கு சந்தர்ப்பங்களிலும் 1987ல் வந்த உடன்படிக்கையும் அதன் பின்னரான புலிகள் நிலைப்பாடு பற்றியும் சிலமாதங்களின் முன்னர் ஏற்கனவே நீண்ட விளக்கம் ஒன்றை உங்களுக்கு தந்திருந்தேன் அதனை மீண்டும் பதிவு செய்ய விரும்பவில்லை நீங்கள் விரும்பினால் தேடி பிடித்து சரிபார்த்து கொள்ளுங்கள்.

அப்புறம் 1990,94,2002ல் எந்த வகையான சிங்கள அரச உள சுத்தியான பாலைபழம்போன்ற தீர்வுகள் தமிழர்களை நோக்கி நெருங்கி வந்தன , எப்படி அநியாயமாக அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டோம் என்பதை உங்களிடமிருந்து அறியவிரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, valavan said:

1954 வரை கிரிமியா ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருந்தது என்று தரவுகள் கூறுகின்றன. பின்பு குருஷேவினால் உக்ரேனுடன் இணைக்கப்பட்டதாகவும், சோவியத் உடைவின் பின்னர் உக்ரேனிடம் இருந்த கிரிமியா மேற்குலகினூடான உக்ரேனின் நெருக்கத்தின் காரணமாக கருங்கடலில் ரஷ்யாவின் ஆதிக்கம் கையைவிட்டு போய்விடுமோ என்ற அச்சமும் கனிமங்களின் சுரண்டலும் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமிக்க காரணங்களில் ஒன்றாக இருந்தது என்பது நான் சொல்லி கிருபன் அறியும் நிலையில் இருக்காது என்று நினைக்கிறேன்

ஏன் வரலாற்றை 1954 ஓடு நிறுத்தி விட்டீர்கள்😂?

அப்படியே 1922 வரை பின்னோக்கிப் போனால் உக்ரைன் பிரதேசமே சோவியத் ஒன்றியத்தில் இருக்கவில்லை. 1922 இல் வலுக்கட்டாயமாக இணைத்தார்கள்.

இன்னும் ஒரு 600 ஆண்டுகள் பின்னோக்கிப் போனால் கிரைமியா இன்றைய துருக்கியை உள்ளடக்கியிருந்த ஒட்டோமான் பேரரசின் சொத்து. 1800 களில் ரஷ்ய சாம்ராஜ்ஜியம் கைப்பற்றிக் கொண்டது.

இதெல்லாம் தாண்டி 1991 - 94 களில் ரஷ்யா கிரைமியாவை உள்ளடக்கிய உக்ரைன் தேசத்தை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது - இது தான் இறுதியாக எல்லைகள் ஏற்றுக் கொள்ளப் பட்ட சந்தர்ப்பம்.

"கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் கூட வர மாட்டோம்.." என்ற வாய் வார்த்தையை இங்கே மந்திரம் போல ஓதும் "புரின் புரியன்மார்" எவரும் 90 களில் ஏற்றுக் கொண்ட உக்ரைன் எல்லையை 2014 இல் ஏன் புரின் கிழித்தெறிந்தார் என்று ஆராய முனைய மாட்டார்கள்! ஏனெனில், அவர்கள் தகவல் பெறுவது சந்திரனுக்குப் போன ஸ்புட்னிக்கில் இருந்து😎!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, vasee said:

இந்த பணம் யூரோ கிளியர் வங்கியில் பெல்ஜியத்தில் முடக்கியுள்ளது (இது முழுக்க இரஸ்சிய மத்தியவங்கியின் பணம்) இதனை பற்றியே தற்போது பேசுகிறார்கள், இந்த பணத்தினில் கை வைப்பது சட்ட விரோதமானது (உலக மற்றும் ஐரோப்பிய), அதற்கு மாற்று வழி தேடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முயல்கிறது, இதனை ஐரோப்பிய வங்கியின் தலைவர் கிறிஸ்ரின் லகார்ட் கூட எதிராக கருத்து கூறியுள்ளார்.

பெல்ஜியத்தில் முடக்கப்பட்ட ரஷ்ய பணத்தை வெளியே எடுத்து உக்ரேனுக்காக அதாவது சண்டை மற்றும் அபிவிருத்திக்காக பயன்படுத்த ஜேர்மனி உத்தரவாதம் வழங்க இருக்கின்றதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக இனங்களின் வரலாறுகளை திரும்ப திரும்ப நாம் எடுத்து பேசக்கூடாது. அப்படி பேச வெளிக்கிட்டால் குடியேறிய அமெரிக்கனும் கனேடியனும் அவுஸ்ரேலியனும் எங்கே போய் மீள குடியேறுவதாம்?

அமெரிக்கா செவ்விந்தியர்களுக்கு சொந்தமானது.

கனடா செவ்விந்தியர்களுக்கு சொந்தமானது

அவுஸ்ரேலியா பூர்வீக தொல்குடிகளுக்கு சொந்தமானது.

முதலில் நாகரீகமடைந்த உலகினர் தங்கள் பிரச்சனைகளை தீர்க்கட்டும்.அவர்களுக்குள்ளேயே சீழ் பிடித்த பிரச்சனைகள்.இதில் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள பிரிவினைகளுக்கு தீர்வு காண்பார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, valavan said:

அப்புறம் 1990,94,2002ல் எந்த வகையான சிங்கள அரச உள சுத்தியான பாலைபழம்போன்ற தீர்வுகள் தமிழர்களை நோக்கி நெருங்கி வந்தன , எப்படி அநியாயமாக அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டோம் என்பதை உங்களிடமிருந்து அறியவிரும்புகிறேன்.

தீர்வுகள் தானே வருவதில்லை. பொதுவாகவே உலகில் அரசியல் பேச்சுவார்ததைக்கு வரும் எந்த தரப்பும் முழுமையாக மற்றய தரப்பை ஏற்றுக் கொண்டு சமாதானப் பேச்சுவார்ததைக்கு வருவதில்லை. தீர்வுகளை கொண்டு வருவதும் இல்லை. தொடர்சசியான பேச்சுக்களின் மூலம் பரஸ்பர நம்பிக்கையை கட்டி வளர்தது தீர்வு திட்டத்தை இரு தரப்பும் இணைந்த தயாரிக்கிறார்கள். அதனால் தான் ஆங்கிலத்தில் Negotiation என்று அழைக்கின்றனர். ஆனால் 1990,1994,2002 பேச்சுவார்ததையில் அது நடைபெறவில்லையே! அப்படி இருக்கையில் எப்படி தீர்வுகள் வரும்.

ஒரு தரப்பின் உள சுத்தி எப்படி உள்ளது என்று உரசிப் பார்தது அது பத்தரை மாற்று தங்கமா, என்று கேள்வி கேட்கும் நீங்கள் மறு தரப்பும் அதே போலவே உள சுத்தியுடன் இருக்கவில்லை அதுவும் கறள் கட்டிய இரும்பாகவே இருந்தது என்பதை ஏன் மறைக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

பெல்ஜியத்தில் முடக்கப்பட்ட ரஷ்ய பணத்தை வெளியே எடுத்து உக்ரேனுக்காக அதாவது சண்டை மற்றும் அபிவிருத்திக்காக பயன்படுத்த ஜேர்மனி உத்தரவாதம் வழங்க இருக்கின்றதாம்.

போரினை நிறுத்தி சமாதானமாக சில ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை, அதற்கான காரணமாக நான் கருதுவது அந்தந்த நாடுகளின் அரச தலைமைகளின் தோல்விகளை திசை திருப்ப அவர்கள் இந்த மோதலை பயன்படுத்துகிறார்கள் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

ஒரு நாட்டின் பற்றாக்குறை பாதிட்டின் அளவு 3% மேல் இருந்தால் அந்த நாடு பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகும் நாடாகும் என்பதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பாதீட்டு பற்றாக்குறை 3% இற்குள் இருக்க வேண்டும் எனும் நியதியினை உருவாக்கியிருக்ககூடும் (இதனை பற்றி ஆழமாக தெரியவில்லை, ஆர்வமுமில்லை).

ஜேர்மனியின் பாதீட்டு பற்றாக்குறை 2025 இல் 3.1% என கூறப்படுகின்றது ஆனால் 2026 இல் 4% - 5% வரை பாதீட்டு பற்றாக்குறை ஏற்படலாம் என கூறப்படுகிறது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இசைவாக செயற்படுவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் இந்த விடயங்களை கண்டும் காணாது விடலாம் எனும் முயற்சியாக இருக்கலாம்.

போரினால் ஏற்படும் இலாபம் ஒரு குறுகிய இலாபம், அதனை அரசியல்வாதிகள் தமது பதவிக்காலத்தினை பாதுகாப்பதற்காக பயன்படுத்துகிறார்கள், ஒரு நீண்டகால நோக்கில் ஜேர்மனிக்கு மட்டுமல்ல ஐரோப்பாவிற்கே இந்த போர் ஒரு தேவையற்ற இழப்பான போர், இந்த உலகிற்கும் தான், தமது குறுகிய கால இலாபங்களிற்காக சாதாரண மக்களை கவர்வதற்காக கூறப்படும் கதைகளால் ஈர்க்கப்பட்டால் எமது எதிர்கால சந்ததிகளுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும்.

இந்த அரசியல்வாதிகளின் மக்களாதரவினை பாருங்கள்.

https://yougov.co.uk/politics/articles/53597-how-popular-are-national-leaders-in-europe-november-2025

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

பெல்ஜியத்தில் முடக்கப்பட்ட ரஷ்ய பணத்தை வெளியே எடுத்து உக்ரேனுக்காக அதாவது சண்டை மற்றும் அபிவிருத்திக்காக பயன்படுத்த ஜேர்மனி உத்தரவாதம் வழங்க இருக்கின்றதாம்.

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் தற்காலிகமாக இரஸ்சிய பணத்தினை கையாட இயலாமையால் 90 பில்லியன் யூரோவினை உக்கிரேனுக்கு வட்டியற்ற கடனாக கொடுக்க முன் வந்துள்ளது, இரஸ்சியாவின் இழப்பீட்டு தொகை கிடைக்காவிட்டால் மட்டுமே உக்கிரேன் அந்த பணத்தினை திருப்பி கொடுக்க வேண்டும் (உண்மையில் கடைசியாக உக்கிரேன் தான் இந்த பணத்தினை திரும்ப கொடுக்க வேண்டும்).

அமெரிக்கா தான் கொடுத்ததாக 350 பில்லியன் கடனை உரிமை கோருகிறார்கள், முன்னர் செலன்ஸ்கி 350 பில்லியன் தரவில்லை என கூறினார், கடைசியாக செலன்ஸ்கியும் பதவிக்காலம் முடிந்து போய்விடுவார், முதலில் காசு கொடுப்பார்கள் பிறகு அந்த காசினை திருப்பி கேட்பார்கள்.

உக்கிரேனின் நிலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என தெரியாது, அப்படி உக்கிரேன் காசு கொடுக்காவிட்டாலும் ஐரோப்பியர்களும் அமெரிக்களும் சும்மாவா இருப்பார்கள்?

புட்டின் வேறு ஐரோப்பிய நாடுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்.

கொடுத்த கடனுக்கு பதிலாக இடங்களை இலங்கையில் சீனா பெற்றது போல செய்வார்களா? இந்த யுத்தம் தொடர மேலும் மேலும் புதிய நெருக்கடிகள் அதிகரிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, vasee said:

கொடுத்த கடனுக்கு பதிலாக இடங்களை இலங்கையில் சீனா பெற்றது போல செய்வார்களா? இந்த யுத்தம் தொடர மேலும் மேலும் புதிய நெருக்கடிகள் அதிகரிக்கும்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல்..... போர் என வந்து விட்டால் ரஷ்யா என்ன செய்யும் என்பதை ரம்ப் அவர்களும் அறிவார்.அதே போல் பென்ரகோனும் அறிந்து வைத்திருக்கும்.

இதனை தனித்தனி ஐரோப்பிய நாடுகளும் அறிவர்.இந்த ஐரோப்பிய ஒன்றியம் எனும் பெயரில் இவர்கள் செய்யும் கூத்துக்கள் இன்னும் அழிவுகளையே தரும்.

பாவம் உக்ரேன் பொதுமக்கள்.☹️

5 hours ago, vasee said:

ஜேர்மனியின் பாதீட்டு பற்றாக்குறை 2025 இல் 3.1% என கூறப்படுகின்றது ஆனால் 2026 இல் 4% - 5% வரை பாதீட்டு பற்றாக்குறை ஏற்படலாம் என கூறப்படுகிறது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இசைவாக செயற்படுவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் இந்த விடயங்களை கண்டும் காணாது விடலாம் எனும் முயற்சியாக இருக்கலாம்.

ஜேர்மனியில் தினசரி சிறு சிறு நிறுவனங்கள் மூடப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் என பார்க்கும் போது ஒரு மாதாந்தம் பல ஊழியர்கள் வேலையிருந்து நீக்கப்படுகின்றார்கள். அதை விட பெரிய உருக்கு தொழிற்சாலைகள் தமக்கு எரிசக்தி செலவை சமாளிக்க முடியவில்லை என கையை விரிக்கின்றார்கள். இப்படி பல பொருளாதார அடிகளை வாங்கிக்கொண்டு இருக்கின்றது ஜேர்மனி.

இந்த நிலையில் அமெரிக்கா நேட்டோவை விட்டு விலகுமேயானால்....சாத்தியம் உள்ளது.அப்புறம் ஐயோ பாவம் ஐரோப்பா😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, island said:

தீர்வுகள் தானே வருவதில்லை. பொதுவாகவே உலகில் அரசியல் பேச்சுவார்ததைக்கு வரும் எந்த தரப்பும் முழுமையாக மற்றய தரப்பை ஏற்றுக் கொண்டு சமாதானப் பேச்சுவார்ததைக்கு வருவதில்லை. தீர்வுகளை கொண்டு வருவதும் இல்லை. தொடர்சசியான பேச்சுக்களின் மூலம் பரஸ்பர நம்பிக்கையை கட்டி வளர்தது தீர்வு திட்டத்தை இரு தரப்பும் இணைந்த தயாரிக்கிறார்கள். அதனால் தான் ஆங்கிலத்தில் Negotiation என்று அழைக்கின்றனர். ஆனால் 1990,1994,2002 பேச்சுவார்ததையில் அது நடைபெறவில்லையே! அப்படி இருக்கையில் எப்படி தீர்வுகள் வரும்.

ஒரு தரப்பின் உள சுத்தி எப்படி உள்ளது என்று உரசிப் பார்தது அது பத்தரை மாற்று தங்கமா, என்று கேள்வி கேட்கும் நீங்கள் மறு தரப்பும் அதே போலவே உள சுத்தியுடன் இருக்கவில்லை அதுவும் கறள் கட்டிய இரும்பாகவே இருந்தது என்பதை ஏன் மறைக்கின்றீர்கள்?

சிங்களம் எந்த தீர்வையும் தர தயாரில்லை என அன்றே தலைமைப்பீடத்திலிருந்து சொல்லப்பட்ட வாக்கியம்.

அதை விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து முன்னேற்றம் முன்னேற்றம்,மாற்றுவழி என விலகியவர்களாலும் எதனையுமே இன்றுவரை சாதிக்க முடியவில்லை.நீங்களோ அதே இடத்தில் நின்று சுழன்று கொண்டிருக்கின்றீர்கள்.

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு முன் சிங்களம் சர்வதேசத்திற்கு புலிகள் இல்லையென்றால் நாங்கள் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்போம் என ஒரு வாக்குறுதி கொடுத்ததாக தகவல் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2025 at 10:33, குமாரசாமி said:

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல்..... போர் என வந்து விட்டால் ரஷ்யா என்ன செய்யும் என்பதை ரம்ப் அவர்களும் அறிவார்.அதே போல் பென்ரகோனும் அறிந்து வைத்திருக்கும்.

இதனை தனித்தனி ஐரோப்பிய நாடுகளும் அறிவர்.இந்த ஐரோப்பிய ஒன்றியம் எனும் பெயரில் இவர்கள் செய்யும் கூத்துக்கள் இன்னும் அழிவுகளையே தரும்.

பாவம் உக்ரேன் பொதுமக்கள்.☹️

இது ஒரு புத்திசாலித்தனமான ஆக்கிரமிப்பு, கத்தியின்றி இரத்தமின்றி ஒரு யுத்தமின்றி ஒரு நாட்டினை இலகுவாக ஆக்கிரமிக்க முடிகிறதல்லவா?

On 20/12/2025 at 10:33, குமாரசாமி said:

ஜேர்மனியில் தினசரி சிறு சிறு நிறுவனங்கள் மூடப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் என பார்க்கும் போது ஒரு மாதாந்தம் பல ஊழியர்கள் வேலையிருந்து நீக்கப்படுகின்றார்கள். அதை விட பெரிய உருக்கு தொழிற்சாலைகள் தமக்கு எரிசக்தி செலவை சமாளிக்க முடியவில்லை என கையை விரிக்கின்றார்கள். இப்படி பல பொருளாதார அடிகளை வாங்கிக்கொண்டு இருக்கின்றது ஜேர்மனி.

இந்த நிலையில் அமெரிக்கா நேட்டோவை விட்டு விலகுமேயானால்....சாத்தியம் உள்ளது.அப்புறம் ஐயோ பாவம் ஐரோப்பா😁

இங்கும் நிலமை இதே நிலைதான், இதற்கு பெருமளவிலான காரணம் தவறான அரசியல்வாதிகள் என கருதுகிறேன்.

நான் இங்கு அவுஸ்ரேலியாவிற்கு வந்த ஆரம்பத்தில் ஒருவர் கூறினார் இங்கு அவுஸ்ரேலியாவில் மற்ற நாடுகளை போல படிக்காத எம்மவர்கள் இருக்கும் நாடல்ல, இங்கு உள்ளவர்கள் படித்தவர்கள் என கூறினார் (நான் படிக்காத நபர் என தெரிந்தே🤣)

இவர்கள் பெரும்பாலும் வலது சாரி லிபரல் கட்சியினை ஆதரிப்பவர்கள், இலங்கையிலிருந்து படகு என அகதிகளுக்கெதிரான கொள்கைகளை உடையவர்களை ஆதரிப்பார்கள் (யாழ்பாண மோட்டுக்குடி மனநிலை).

இந்த வலதுசாரி கட்சியின் ஆட்சிக்காலத்தில் பல உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளை நிறுவனங்களினை பாதுகாப்பதாக கூறி இல்லாது செய்தார்கள், அதனை உழைக்கும் வர்க்கத்தில் இருந்த இவர்க்ளே ஆதரித்து இதனால்தான் நிறுவனங்கள் மூடப்படுகின்றன என கூறுவார்கள், அத்துடன் அவர்கள் ஆட்சியில் இருந்த 3 தவணைகளில் ஊதிய அதிகரிபில்லாமல் போனது.

அது ஒரு பொருளாதார பிரச்சினையாக கண்ணுக்குதெரியாமல் உருவெடுக்கத்தொடங்கியது.

உற்பத்தி வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும் போது வருமான வளர்ச்சி பல மடங்கு மிக குறைவாக வளர்ச்சியேற்பட்டது, அது உற்பத்தி துறையினையும் பொருளாதார தூண்டலையும் சுருங்க வைத்தது, ஆரம்பத்தில் அதிகரித்த இலாபம் பெற்ற நிறுவனங்களின் பொருள்களுக்கான உள்ளூர் சந்தைகளை பெருமளவில் இழந்தது.

இது சமூக மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பினை உருவாக்கி விட்டுள்ளது, இங்கு தற்போது உள்ள இளைய தலைமுறையால் வீடுகளை வாங்க முடியாத நிலை போன்ற நீண்ட கால சமூக பொருளாதார விளைவுகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.

தற்போதும் குடிவரவினை நிறுத்து என கூச்சல் போடுகிறார்கள், ஒரு கதையில் ஒரு கன்றின் தலை பானைக்குள் சிக்கி விடும் கன்றிடமிருந்து பானையினை எடுப்பதற்கு கன்றின் தலையினை வெட்ட கூறுவார், பின்னர் கன்றின் தலையினை பானையிலிருந்து எடுப்பதற்கு பானையினை உடைக்க சொல்வார்; அவ்வாறான வலது சாரி அரசியல்வாதிகளை ஆதரிக்கும் எம்மவர்கள்😁.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.