Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்களுக்கு மீசை அழகா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குளிரிக்கையும், வெக்கையுக்கையும் நாங்கள் ஹீட்டரையும் ஏசியையும் பாவிக்கிறம். நீங்கள் சொன்னமாதிரி உரோமம் ஒரு சீர்த்திடநிலையை ஏற்படுத்த காட்டுமனிதனுக்கு உதவக்கூடும். இஞ்ச மைனஸ் மூண்டு துவக்கம் மைனஸ் பதினைஞ்சு டிகிரியுக்க ஜக்கட்ட போட்டு, ஹீட்டருக்க இருந்தால் ஒழிய இல்லாவிட்டால் எங்கட கதை காலி. இத மாதிரி வெக்கை காலத்தில ஏசி...

மொடேர்ன் மனிதன் உரோமங்களை நம்பி வாழவில்லை. எல்லாம் பிசினசு உலகம். பல்லைக் காட்டினால் பலகோடி கிடைக்கும். உம்மெண்டு வாயை வச்சு இருந்தால் போலீசு பயங்கரவாதி எண்டு விசாரணைக்கு கூட்டிக்கொண்டு போகும்.

இப்படியான நிலமைகளில உரோமங்கள வளர்த்து காட்டுமிராண்டிகள் மாதிரி மற்ற ஆக்கள பயப்படுத்தாமல் நாகரீகமான மனிதனா டீசண்டா (ஆகக்குறைந்தது உடல் தோற்றத்திலாவது) இருக்கலாம்.

உரோமம் சாப்பாட்டுக்க விழுந்தால், போகக்கூடாத இடத்துக்க போனால் எல்லாம் சுகாதாரக் கேடுதான். இதுபற்றி மேலதிகமாக உங்களுக்கு விளக்கமா சொல்லி நிருவாகத்திடம் நான் வெட்டு வாங்கமுடியாது.

உரோமம் இல்லாமல் வழுக் வழுக் எண்டு உடம்பு இருந்தால் அதிலும் ஒரு சுகம் உள்ளது. கண்டபடி உடம்பை சொறியத் தேவையில்லை. இலகுவாக சவுக்காரம் போட்டு குளிக்கலாம். உடம்பில் ஊத்தை கிலோக் கணக்கில் ஒட்டிப்பிடித்துக்கொண்டு இருக்காது.

உங்களுக்கும் விருப்பம் எண்டால் லேசர் கதிர் மூலம் உரோமங்களை அகற்றி பாருங்கோ. வெட்கம் எண்டால் சொல்லுங்கோ, ரெண்டு பேரும் சேர்ந்து போவம். ஆனா என்ன இதுக்கு ஒரு $3,000 செலவாகும்.

எனக்கு இயற்கையாகவே உரோமம் குறைவு. இருந்தாலும் நான் இயற்கைப் பாதுகாப்புக்கு முக்கியம் அளிக்கிறனான். ஏனென்னா எங்க உடல் இயற்கையில் உள்ள தீயவற்றை சமாளிக்க என்று பல விடயங்களை இயற்கையாகவே தன் வசப்படுத்தி இருக்குது. அதை உடல் பாவிக்க அனுமதிக்கிறது உடல் தன்னை இந்த இயற்கையில் சிறந்த முறையில் தக்க வைக்க உதவும்..!

தடிமன் வந்தால் கூட உடனடியாக மருந்து எடுக்கேன். காரணம் தடிமனை உருவாக்கும் வைரசுகள் பல வகைகள். அவற்றுக்கு எதிராக எமது உடல் நிர்பீடணத்தை உருவாக்க அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதிப்பின் உடலே தன்னை எதிர்காலத்தில் குறித்த வைரசுகளுக்கு எதிராகப் போராட தயார் பண்ணி வைக்கும். ஒவ்வொரு தடவையும் செயற்கை மருந்துகளாலான சூழலை ஏற்படுத்தும் போது அது இயற்கையான நிர்பீடனச் செயற்பாடுகளில் குழப்பத்தை அல்லது பூர்த்தியின்மைக்கு வழிவகுக்கலாம். மருந்துகளால் வைரசுகளை கட்டுப்படுத்த முடியாது என்பது தெரிந்த பின்னும்.. இயற்கை பாதுகாப்பை வளர்க்கிறது முக்கியமாகிறது.

மயிரைப் புடுங்கிறதால கீற்றர் போட்டிட்டு இருப்பம் என்று சொல்லுறீங்க.. அங்கும் ஓர்சீர்திடநிலை என்பதை கீற்றர் தீர்மானிக்கல்ல. எமது உடல்தான் தீர்மானிக்கிறது. என்னதான் கீற்றர் ஏசி பாவித்தாலும் உடல் தான் தன்னை ஒருசீர்திடநிலைக்கு கொண்டு வரணும். அதற்கு ஏற்ப அது தன்னை மாற்றி அமைக்க வழிவிடனும்.

உடலில் படியும் அழுக்கு என்பது தூசிகள் உடலில் படிவதால் வருவது. அதற்குக் காரணமும் இந்த கீற்றர்கள் தான். குறிப்பாக வெப்பக்காற்றை விசிறிகள் மூலம் செலுத்தும் கீற்றர்கள் நிலத்தில் சுவரில் படிந்து உள்ள தூசித்துணிக்கைகளை அள்ளி வீசுகின்றன. வாகனங்கள் மில்லியன் தொன் தூசிகளைக் கக்குகின்றன. தொழிற்சாலைகள் கக்குகின்றன. இவையும் தான் உடலில் அழுக்குப் படியக் காரணமாக அமைகின்றன. உரோமத்தை நீக்காமல் கிரமமாக குளிச்சிட்டு வந்திங்கண்ணாவே ( காலையும் மாலையும்) இந்த அழுக்கு சொறி போன்ற பிரச்சனைகள் வராது.

மயிரைப் பிடுங்கப் போய் தோலையும் சேதப்படுத்தி இயற்கையாக உள்ள நுண்கிருமிகளின் செயற்பாட்டைத் தடுக்கக் கூடிய தோற் சுரப்புக்களையும் இழந்து நிற்க வேண்டிய அவசியம் எழாது. பணச் செலவுக்கு மேல இது. நான் அவதானித்திருக்கிறேன் மயிர் பிடிங்கின ஆக்களுக்கு தகுந்த செயற்கைவழி பராமரிப்பு இன்றேல் தோல் நோய்கள் வருவது அதிகம். காரணம் தோல் கொண்டிருந்த இயற்கையான பாதுகாப்புத் தொழிற்பாடுகளை அவர்கள் இழக்கிறதாலக் கூட இருக்கலாம்..! இந்த கிறீம்களின் செயற்பாட்டால் வியர்வைத் துவாரங்கள் அடைப்பட்டு சிலருக்கு தோலில் பருக்கள் வருவதும் அதிகம்.

இது ஒருவகையில் மக்களை வியாபார தந்திரத்துக்குள் அடிமைகளாக்கும் செயல். மயிரைப் பிடிங்கிறதை நாகரிகம் என்று காட்டி.. பிறகு பிடுங்கின பிற்பாடு தோல் பராமரிப்புக்கு என்று செயற்கை இரசாயன சாதனங்களை விற்பனை செய்யுறதெல்லாம்.. வியாபாரம். அதுமட்டுமன்றி இவை தோல் முதிர்ச்சியடைவதை தீவிரப்படுத்த பிறகு அதற்கு ஒரு கிறீம் விற்பினம். ஆக ஒன்றைச் செய்யப் போய் தொடர்சியா உங்களை ஒரு செயற்கைத்தனமான சூழலுக்குள்ள அடிமையாக்கி வைச்சிடுவினம். நீங்க பணத்தைக் கொட்டிட்டே இருப்பீர்கள்.

இதுதான் பெண்களுக்கு நடக்கிறது. அவர்கள் இந்தச் சூழலுக்குள்ள இருந்து விடுபட முடியாத அளவுக்கு அடிமைப்பட்டுப் போயுள்ளனர். அந்தளவுக்கு அவர்களின் அழகுக் கனவும் நாகரிகப் பித்தலாட்ட போலிச் சிந்தனையும் அவர்களை அறிவுபூர்வமா சிந்திக்க விடுகுதில்ல..! :lol:

Edited by nedukkalapoovan

சரி நெடுக்காலபோவான், நீங்கள் உங்கள் உடலில் உள்ள உரோமத்தை புடுங்காதிங்கோ.

இங்கு என்றால் உரோமம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாங்கள் உடம்புக்கு கிரீம் தடவவேண்டும். தோலில் உரோமம் இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலான கிரீம் தேவைப்படும்.

இயற்கையுடன் வாழுதல் என்பது நல்ல விசயம். ஆனால், நவீன உலகில் மனிதவாழ்வு இயற்கையைப் பிரிந்து சென்று பல ஆண்டுகளாகிவிட்டது.

உரோமம் இல்லாவிட்டால் எமது உடலில் ஒரு சீர்த்திடநிலை ஏற்படாது என்று யார் உங்களுக்கு சொன்னது?

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி! எங்கடை சாமியளும் மீசை வைக்கேல்லை??????உதாரணத்துக்கு சிவன் முருகன் பிள்ளையார் அப்பிடியெண்டால்.*-*-*-*-*-* !!!!!!!!!!!!!அவையளும் அமிதாப்பச்சன் ஷாருக்கான் இடத்து ஆக்களோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உரோமம் இல்லாவிட்டால் எமது உடலில் ஒரு சீர்த்திடநிலை ஏற்படாது என்று யார் உங்களுக்கு சொன்னது?

ஓர்சீர்திடநிலை ஏற்படாது என்பதல்ல அர்த்தம். ஓர்சீர்திடநிலையில் பங்களிக்கும் ஒரு கூறை அகற்றுவதன் மூலம் உடல் சிரமங்களுக்கு இலக்காக நேரிடுகிறது. உடலின் தோலில் சிறைபிடிக்கப்படும் காற்றுப்படலத்தை அகற்றுவதன் மூலம் வெப்ப இழப்பு அதிகளவில் நிகழ வாய்ப்பு ஏற்படுகிறது. இது பல தொடரான விளைவுகளுக்கு இடமளிக்கிறது..! அதில் பாதகங்களும் அடங்குகின்றன..! காசைக்கொடுத்து உடலை சிரமப்படுத்தவும் வேணுமா..??! பெண்களுக்குத்தான் புத்தியில்லைன்னா.. ஆண்களும்...??! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

31417160449.jpg

என்னயிருந்தாலும் நெடுக்கு!பொடியன்ரை உடம்பு தோலுரிச்ச கோழி மாதிரி இருக்கு.அதிலையும் ஒரு பளபளப்பு இருக்கத்தானே செய்யுது :lol:

31417160449.jpg

என்னயிருந்தாலும் நெடுக்கு!பொடியன்ரை உடம்பு தோலுரிச்ச கோழி மாதிரி இருக்கு.அதிலையும் ஒரு பளபளப்பு இருக்கத்தானே செய்யுது :lol:

கு.சா தாத்தாவும் இப்படி ஒருக்கா டிரை பண்ணி பாருங்கோவேன் அப்ப தாத்தா கூட இப்படி படத்தில போஸ் கொடுக்கலாம் :lol: !!ஆனா நான் கண்ணை மூடிடுவேன்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

கு.சா தாத்தாவும் இப்படி ஒருக்கா டிரை பண்ணி பாருங்கோவேன் அப்ப தாத்தா கூட இப்படி படத்தில போஸ் கொடுக்கலாம் :lol: !!ஆனா நான் கண்ணை மூடிடுவேன்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஏன் நீங்களும் செய்து பார்க்கலாமே. அப்பத்தான் கெதியில அவுஸ்திரேலிய பிரதமரா வரலாம். இப்பிடிச் செய்தால் வெள்ளைகளிண்ட வோட்டுக்கள் உங்களுக்குத்தான் விழும்

மீசையில துவங்கி இப்ப நாங்கள் எங்கையோ வந்திட்டம். அடுத்தது என்ன? எப்பிடி திரும்பி போறது?

ஜெனரல் நீங்க சொல்லுறது சரிதான் என்றாலும் அவுஸ்ரெலியாவில் உள்ள வெள்ளைகார பெண்களுக்கு சரீரத்தில் உரோமம் இருப்பவர்களை தான் பிடிக்கும் அத்துடன் கைகளிள் இருப்பதும் அவர்களுக்கு பிடிக்கும் :D !!எப்படி பேபிக்கு இதை பற்றி எல்லாம் தெரியும் என்று கேட்கிறீங்களோ!எல்லாம் பேபியின் மொண்டசூரியில சொல்லி தந்தது :( தான் ஜெனரல் நம்ம லெக்சர் ஏதாவது ஒன்றை பற்றி ஆராய்ந்து கொண்டு இருப்பா லெக்சர்ஸ் நேரம் அவாவும் சரியான இளமையான ஆள் தான் நல்ல ஜாலி டைப் :lol: !!ஒரு நாள் அவாவின் ஆய்வு உடலில் மற்றும் கைகளிள் உரோமம் இருக்கும் ஆண்களை உங்களுக்கு பிடிக்குமா இல்லையா என்பது அவா தனக்கு வந்து உரோமம் இருக்கும் ஆடவர்களை தான் பிடிக்கு என்றும் சொன்னா அதில் பல வெள்ளிகாரிகளும் உரோமம் ஓரளவு இருப்பவர்களை தான் தங்களுக்கு பிடிக்கும் என்று சொன்னார்கள் :( இறுதியில் உரோமம் இருப்பவர்களை விரும்பும் பெண்கள் தான் கூடுதலாக வந்தது :lol: !!பிறகு லெக்சர் சொன்னா சிட்னியில் கடந்த ஆண்டு இவ்வாறான ஆய்வு ஒரு நிறுவனத்தினால (அழகு சாதன நிறுவனம் பெயர் ஞாபகதிற்கு வருகிறது இல்லை ) நடந்தது அதில் கூட உரோமம் உள்ள ஆடவர்களை விரும்பும் பெண்கள் தான் கூடுதலாக இருந்தார்கள் என்றும்!! :D

ஆகவே இப்படி எல்லாம் செய்து வாக்குகளை இழக்க விரும்பவில்லை :( ஜெனரல் அத்துடன் தற்போதைய பிரதமர் ஜோன் கவார்ட்டை பார்தீங்க என்றா விளங்கும் அவரின் கைகளிள் உள்ள உரோமத்தை :unsure: !!ஓரளவு உரோமம் இருப்பதை தான் அவுஸ்ரெலிய வெள்ளைகாரிகள் விரும்புகிறார்கள் ஜெனரல் :D !!இந்த 24 திகதி அவுஸ்ரெலிய தேர்தல் இதில யார் வருவார்களோ தெரியவில்லை இன்னும் 10 ஆண்டுகளின் பிறகு தான் ஜம்மு பேபி தேர்தலில் நிற்கும் ஏன் என்றா இப்ப நான் சின்ன பிள்ளை!! :(

அப்ப நான் வரட்டா!!

இதுக்கு ஒரு வாக்கேடுப்பு எடுத்திருக்கலாம் போல இருக்கு.

+5வயசு ஜம்முவுக்கு மீசை முளைச்சிருக்குதாம். டும் டும் டும் டும் :unsure::lol:

இதுக்கு ஒரு வாக்கேடுப்பு எடுத்திருக்கலாம் போல இருக்கு.

+5வயசு ஜம்முவுக்கு மீசை முளைச்சிருக்குதாம். டும் டும் டும் டும் :lol::icon_idea:

இதற்கு எல்லாம் வாக்கெடுப்பு நடத்த ஏலாது நிலா அக்கா பேபியிற்கு மீசை வளர்ந்திட்டு நான் என்ன செய்ய :) ஆனாலும் நான் மேலே சொன்ன லெக்சருக்கு என்ட "தாடி" விருப்பம் இல்லை :( ..........பேபியின் முகதிற்கு தாடி வடிவில்லை என்று சொல்லுவா அதனாலே அந்த லெக்சர்சிற்கு போகும் போதேல்லாம் நாம சேவ் பண்ணி தான் போறனான் :( என்றா பாருங்கோ ஆனாலும் பேபியின் மீசை அவாவிற்கு விருப்பமே :lol: (நல்ல காலம் விருப்பம் என்ற படியா தப்பினேன் நிலா அக்கா :huh: )

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு எல்லாம் வாக்கெடுப்பு நடத்த ஏலாது நிலா அக்கா பேபியிற்கு மீசை வளர்ந்திட்டு நான் என்ன செய்ய :huh: ஆனாலும் நான் மேலே சொன்ன லெக்சருக்கு என்ட "தாடி" விருப்பம் இல்லை :) ..........பேபியின் முகதிற்கு தாடி வடிவில்லை என்று சொல்லுவா அதனாலே அந்த லெக்சர்சிற்கு போகும் போதேல்லாம் நாம சேவ் பண்ணி தான் போறனான் :( என்றா பாருங்கோ ஆனாலும் பேபியின் மீசை அவாவிற்கு விருப்பமே :lol: (நல்ல காலம் விருப்பம் என்ற படியா தப்பினேன் நிலா அக்கா :icon_idea: )

அப்ப நான் வரட்டா!!

மொண்டகூரிக்கு படிக்க போறனிங்களோ இல்லையெண்டால்..... :lol:

மொண்டகூரிக்கு படிக்க போறனிங்களோ இல்லையெண்டால்..... :lol:

ஏன் சபேஷ் மாமா இப்படி எல்லாம் சந்தேகம் பேபி மொண்டசூரிக்கு படிக்க தான் போறனான் டீச்சரும் நைஸ் மாமா :lol: !!பேபிக்கு பிடித்த ஒரே லெக்சர் வந்து இந்த டீச்சரின்ட லெக்சர் தான் மொண்டசூரியில மாமா!! :icon_idea:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

:icon_idea::huh: ஜம்முவுக்கு தாடி வளார்ந்தால் ரொம்ப அசிங்க. தாடி இல்லையெனில் சிங்கம். :) எனக்கு தெரியும் தானே. தாடியோ மீசையோ என்னதான் இருந்தாலும் ஜம்முவுக்கு பால் மட்டும் இல்லையெனில் தூக்கமே வராதாமே மம்மி சொன்னாங்க. உண்மையோ ஜம்மு :lol:

லெக்சர் லெக்சர் என்று யாரை சொல்லுறியளோ? ஆமா உங்கட லெக்சர் பாடம் படிப்பிக்கிறாவோ இல்லை மீசை தாடி என்று நோட்டம் விடுறாவோ ஆ? :lol:

நானும் ஒரு சின்ன கருத்து கணிப்பு என்னுடைய குடும்பத்தில் எடுத்து பார்த்தேன்.அப்பாவும் ஒரு தங்கச்சியும் மீசை வேண்டுமென்றும்,அம்மா,மற்ற தங்கச்சி,அண்ணா மீசை வேண்டாமென்று வாக்களிச்சினம்.அப்போ அம்மாவின் கட்சி 3:2 என்ற வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.

:lol: இப்ப என்ன சொல்ல வாறீங்க? அம்மாவின் கட்சி வெற்றிபெற்றதெனில் நீங்கள் மீசச விட்டிருக்கிறியள் அப்படியா? :icon_idea::):lol::huh:

ஆண்களுக்கு மீசை அழகா

அதக் கேட்கிற பெண்களின்

பாசை அழகா...?

மீசைக்கு அழகு பாரதி

அதைப் பார்த்து மிரண்டால் ரேவதி

ஆசிய ஆண்களுக்கு சில நேரம் மீசை அழகு..:lol:

பலநேரம் மீசை இல்லாமல் இருப்பதும் அழகு:lol:

இங்குள்ள பெண்களுக்கு மீசை இல்லாமல் இருக்கும்

ஆண்களைத்தான் பிடிக்கும் என்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன்:icon_idea:

ஜம்முவுக்கு தாடி வளார்ந்தால் ரொம்ப அசிங்க. தாடி இல்லையெனில் சிங்கம். :lol: எனக்கு தெரியும் தானே. தாடியோ மீசையோ என்னதான் இருந்தாலும் ஜம்முவுக்கு பால் மட்டும் இல்லையெனில் தூக்கமே வராதாமே மம்மி சொன்னாங்க. உண்மையோ ஜம்மு :wub:

லெக்சர் லெக்சர் என்று யாரை சொல்லுறியளோ? ஆமா உங்கட லெக்சர் பாடம் படிப்பிக்கிறாவோ இல்லை மீசை தாடி என்று நோட்டம் விடுறாவோ ஆ? :wub:

என்ன சிங்கமோ அது சுண்டல் அண்ணா நேக்கு வேண்டாம் :( (பிறகு அவர் டென்சன் ஆகிடுவார் எங்கே சுண்டல் அண்ணா) :wub: அக்சுவலா படுக்கும் போது பேபிக்கு ஜபோட்டில நல்ல பாட்டும் போக வேண்டும் இதை பற்றி சொல்லவில்லையோ மம்மி!! :lol:

லெக்சர் வந்து மொண்டசூரியில பேபியை படிபிகிறவா ரொம்ப நல்லவா பேபியோட :( !!சா அவா வந்து நம்ம பேஸ்ட் பிரண்ட் மாதிரி அவா படிபிக்கிற பாடம் நேக்கு நல்லா பிடிக்குமே :lol: !!அரைவாசியில எழும்பி எல்லாம் வரமாட்டேன் என்றா பாருங்கோ!! :)

அப்ப நான் வரட்டா!!

:lol::D ஒரு காலத்திலை ஏனடா மீசை வளருதில்லையெண்டு கவலை இப்ப இது ஏண்டா வளருது எண்ட கவலை. :D:D

அதே அதே :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே அதே :wub:

தம்பி ஈழவன் நல்லாய்த்தான் கஷ்டப்படுகிறியள் போலை இருக்கு எதுக்கும் தும்புக்கட்டைமீசை வைச்சுப்பாருங்கோ :(

  • கருத்துக்கள உறவுகள்

பரிணாம வளர்சியின் கரணமாக...................... இனிவரும் காலங்களில் மனிதருக்கு மயிர் அற்றுப் போகும் என பள்ளியில் கற்பித்தார்கள்....... தற்போதைய ஆண்களுக்கு முடி உதிர்தல் இதன் காரணமே எனவும் சொல்கின்றார்கள்...... உதாரணத்திற்கு முந்தைய மனிதர்களை காட்டுகின்றார்கள் அவர்களுக்கு உரோமம் அதிகமாகவே இருக்கிறது! மீசை வைத்த ஆண்களைப் பிடிக்கும் பெண்கள் காலம் தாழ்த்தாதீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.