Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வாழ்வில் நோய், மரணம் உறுதி, அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. எல்லோரின் வாழ்வில் ஏற்படும் நோயைப்பற்றி, மரணத்தைப்பற்றி யாரும் அலட்டிக்கொள்வதில்லை. இருந்தபோதிலும் சிலரின் வாழ்வில் இந்த நிலைகள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் தம்மை இழந்து வருத்தி, தம் இன்ப துன்பம், களைப்பு பாக்காமல் அடுத்தவரின் விடிவுக்காக, மகிழ்ச்சிக்காக இடைவிடாமல் உழைப்பார்கள், தங்களால் இயன்றதை செய்வார்கள். அவர்களுக்கு நோயோ, மரணமோ நேரிட்டால் அவரால் பாதுகாக்கப்பட்டவர்கள், பயனடைந்தவர்கள் சொல்வது. "இப்படிப்பட்ட நல்ல மனிதனுக்கான இப்படி நேர்ந்தது? அவர் ஒரு தியாகி, அவருக்கு இப்படி வந்திருக்கவே கூடாது,இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாமென வருந்துவார்கள். அப்படிப்பட்டவர்கள் இறந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள் தியாகியாக. அதேநேரம் தமது அதிகார திமிரினால், வரட்டுகவுரவத்தினால், பழிவாங்கலினால்,மற்றவர்களை வருத்தி, தாம் இன்பம் பெறுவதற்காக அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து வாழ்பவர்களுக்கு இப்படியான நிலை ஏற்படும்பொழுது, பாவி! எத்தனை பேரின் வாழ்வை கெடுத்தார்கள், இப்போ வந்த இந்த நோய், மரணம் பல ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கக்கூடாதா இவருக்கு? எத்தனை பேரின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டிருக்கும் என நினைக்கத்தோன்றும். அவர்கள் வாழ்ந்தாலும் இறந்தவர்களாகவே கருதப்படுவார்கள். அவரவர் வாழ்வு எப்படியானதென்பதை அவர்கள் நோயின், மரணத்தின் போது கூடியிருப்போர் கூறும் கருத்துக்களில் இருந்து வெளிப்படும். நாகாசுரனை கொன்றது தெய்வம். அவன் கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக. அதற்காக தெய்வத்தை குறை கூறுவோமா? அல்லது நாகாசுரனால் வதைக்கப்பட்டவர்களை குறை கூறுவோமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2026 at 12:16, vasee said:

எமக்கான தீர்வினை அமெரிக்க தரப்பு வழங்கும் என எதிர்பார்ப்புடன் இயங்குகின்ற நிலையில் கொங்கிரஸிற்கெதிரான நிலைப்பாடு சாதகமான சூழலை ஏற்படுத்தாது.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உருவாகப்போகும் நட்பு எவ்வாறு ஈழத்தமிழருக்கு உதவியாக அமையும்? அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் உருவாகப்போகும் நட்பு எமக்கு எந்தவிதத்தில் உதவும் என்று கருதுகிறீர்கள்? 1980 களின் ஆரம்பத்தில் இலங்கை அமெரிக்காவின் பக்கம் சாய்கிறது என்பதற்காகவே இந்திரா அம்மையார் ஈழத்தமிழருக்கு உதவ முன்வந்தார், அதுகூட இந்தியாவின் நலன்களுக்காக மட்டும்தான், ஈழத்தமிழருக்கான தனிநாட்டிற்காக இல்லை என்பது எமக்குத் தெரியும். அமெரிக்காவும் இந்தியாவும் எதிரும் புதிருமாக இருந்த காலத்தில் இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட எமக்கு உதவ வேண்டும் என்கிற அழுத்தம் அன்று இருந்தது. ஆனால் அமெரிக்காவோ இன்று இந்தியாவுடன் நட்புப் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறபோது, எமக்கு உதவ வேண்டும் என்கிற தேவையோ அழுத்தமோ காங்கிரஸின் இந்தியாவிற்கு இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

சரி, இந்தியா வழங்கப்போவது இல்லை, ஆனால் அமெரிக்காவே தீர்வை வழங்கும் என்று நீங்கள் கருதினால், அது எப்படி நடக்கப்போகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எமக்கான தீர்வை அமெரிக்கா ஏன் வழங்க விரும்புகிறது? அதற்குப் பிரதியுபகாரமாக அமெரிக்கா எம்மிடம் இருந்து எதனை எதிர்பார்க்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2026 at 12:16, vasee said:

இக்காலகட்டத்தில் தனி நாடு சாத்தியமில்லை அதிக அதிகாரம் கொண்ட ஒரு சுமூகமான தீர்வு சாத்தியம் அதற்கு எமக்கு இந்திய ஆதரவு தேவை.

தனிநாடு என்பது எமது சிந்தனை வட்டத்திற்குள் இருந்து காணாமற்போய் பல வருடங்கள் கடந்துவிட்டது. எம்மில் எவரும் இப்போது தனிநாடு பற்றி யோசிப்பதில்லை.

எமக்கான நியாயமான தீர்வொன்று கிடைக்க இந்தியாவின் ஆதரவு தேவை என்கிற அவலமான நிலையில் நாம் இருப்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும், இந்தியா அதனை ஏன் செய்யவேண்டும்? புலிகளை முற்றாக அழித்தபின்னர், தமிழருக்குக்கான நியாயமான தீர்வினை நான் வழங்குவேன் என்று மகிந்த எம்மிடம் வாக்குறுதி அளித்தார், நாமும் அதனை நம்பியே போருக்கான உதவிகளைப் புரிந்தோம், ஆனால் போர் முடிந்தபின்னரோ மகிந்த எம்மை ஏமாற்றிவிட்டார் என்று தாமே முன்னின்று நடத்திய இனக்கொலையினை பசப்பு வார்த்தைகளால் அன்று மூடி மறைத்த காங்கிரஸ் கட்சி, தான் பதவியில் இருந்து விரட்டப்படும்வரை குறைந்த பட்சத் தீர்வான 13 ஆம் சட்டத் திருத்தத்தைத்தன்னும் நடைமுறைப்படுத்த விரும்பவில்லை. அப்படியிருக்கையில் இனிமேல் அதனைச் செய்யும் என்று எப்படி நம்புகிறீர்கள்? குறிப்பாக ஈழத்தமிழர் மீது இன்றுவரை, அடிமட்டத் தொண்டன் முதல் கட்சியின் தலைமைவரை தனிப்பட்ட ரீதியில் பகையுணர்வு பாராட்டும் காங்கிரஸ் கட்சி எதற்காக எமக்கான தீர்வைத் தர விரும்புகிறது? அதனைச் செய்யவேண்டிய தேவை அதற்கு ஏன் வருகிறது?

On 9/1/2026 at 12:16, vasee said:

நேரடியாக இந்திய அபிமானி என்று சொல்வதோ அல்லது இரஸ்ஸிய அபிமானி, வேறு மதங்களின் அபிமானி என சொல்வதன் மூலம் எனது கருத்திற்கு எதிராக சில சார்பு மனநிலையானவர்களை (bias) எனது கருதிற்கெதிராக அணிதிரட்டுவதால் என்ன நன்மை ஏற்பட்டுவிட போகிறது.

இல்லை. உண்மையாகவே நீங்கள் ரஸ்ஸிய அபிமானி என்று நாம் நம்புகிறேன். அமெரிக்காவின் அழுத்தங்களை மீறி இந்தியா இன்றுவரை ரஸ்ஸியாவின் எண்ணையினையும், வான்பாதுகாப்பு ஏவுகணைகளையும் வாங்கிக் குவித்து வருகிறது. அதாவது ரஸ்ஸியாவுடன் மிகவும் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை இந்தியா கொண்டிருக்கிறது. இதனாலேயே இந்தியாவுடன் பகைக்கவேண்டாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று எழுதினேன். மற்றையவர்களுக்கு எழுதிய கருத்தில் உங்களை மேற்கோள் காட்டியதன் காரணம் உங்களின் சிந்தனையினை மற்றையவர்களுக்கும் அறியத்தரவே. இதில் குழுச்சேர்ப்பு இடம்பெற்றிருப்பின், அதனையும் மறுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2026 at 12:16, vasee said:

நோய்வாய்ப்பட்ட ஒரு மூதாட்டியினை துன்பப்பட்டு சாகவேண்டும் என கூறும் கருத்து உவப்பானதாக இல்லை

அழுந்திச் சாதல் என்பதன் மூலம் நான் சொல்ல வந்தது சாகும் தறுவாயிலாவது தான் ஈழத்தமிழருக்குச் செய்த கொடுமைகளை நினைத்துக் கொண்டு சாகவேண்டும் என்பதுதான். அதைவிடுத்து சாதாரண மரணம் என்பது கூடாது என்பதே எனது எண்ணம். அடுத்தது, தான் செய்த கொடுமைகளுக்கான தண்டனையினை அவர் வாழும் காலத்தில் அனுபவிக்கவேண்டும். அவர் சாகும் முன்னர் இது நடக்கவேண்டும். இவருக்கெதிரான வழக்குகள் பதியப்பட்டு இவரது குற்றங்களுக்கான தண்டனை கிடைக்கவேண்டும். இதுவே நான் விரும்புவது.

உதாரணத்திற்கு ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ளாமலும், கைதுசெய்யப்படாமலும் உலகின் ஏதோ ஒரு மூலையில், வயது முதிர்ந்து மரணிக்கும் தறுவாயினை எட்டுகிறான் என்று ஒரு பேச்சிற்கு வைத்துக்கொள்வோம். அப்போதும்கூட அவனை, "வயது முதிர்ந்த ஒரு மனிதனை அழுந்திச் சாகு என்று கூறுவது சரியில்லை" என்றுதான் சொல்வீர்களோ? நீங்கள் மிகச் சிறந்த மனிதாபிமானியாக இருக்கலாம், என்னால் அப்படியிருக்க முடியாது. ஒற்றை மனிதனின் மரணத்திற்காக ஒன்றரை இலட்சம் தமிழரைக் கொன்றும், அவர்களின் ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்தும் பழிவாங்கிய ஒருவரை சாதாரணமாக "வயது முதிர்ந்த மூதாட்டி" என்று கருணை காட்ட என்னால் முடியவில்லை. அவரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களிடம் நீங்கள் சென்று கூறிப்பார்க்கலாம்.

ஒருவர் வயது முதிர்ந்துபோவதால் மட்டுமே அவர் செய்த குற்றங்கள் மன்னிக்கப்பட்டு விடுமா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2026 at 12:16, vasee said:

நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பது எனக்கு தெரியும்

இதனை ஏன் கூறினீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் நல்ல மனிதர் என்று எப்படி முடிவுசெய்தீர்கள் என்றும் எனக்குத் தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை எம்மை அழித்தவர்கள் நிம்மதியாக வாழவோ அல்லது அமைதியான வழியில் மரணிப்பதையோ நான் விரும்பவில்லை. அவர்களின் குற்றங்களுக்கான தண்டனையினை அவர்கள் நிச்சயம் அனுபவித்தே தீரவேண்டும், ஏதோ ஒரு வகையில். அதிலும் குறிப்பாக ஒரு இனத்தின் இருப்பையே நிர்மூலமாக்கிவீட்டுச் செல்பவர்கள் தமக்கான தண்டனையினை அனுபவிக்கவேண்டும். இதனைக் கூறுவதால் நான் கெட்ட மனிதன் என்று ஆகுமானால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை.

On 9/1/2026 at 12:26, vasee said:

சீன ஆதரவற்ற இந்தியவிற்கு நேசமான தரப்பாக தமிழர்கள் இருப்பதனையே அமெரிக்காவும் விரும்புகின்றது

இது எப்போது நடந்தது? அமெரிக்கா இதனை யாரிடம் தெரிவித்திருக்கிறது? தமிழர் பற்றி அமெரிக்கா திடீரென்று அக்கறை கொள்வது ஏன்? இதனை எப்படி அறிந்துகொண்டீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2026 at 16:42, vasee said:

இந்தியாவினை எதிர்பபதால் எமக்கு எந்த இலாபமும் ஏற்படாது(not to resist) அதனாலேயே எமது நலனனுக்கு ஏற்ப நிலமையினை மாற்றுதல் (repositioning).

இந்தியாவினை அன்று ஆட்சிசெய்த தலைமையினால் எம்மீது நடத்தப்பட்ட கொடுமைகள் பற்றிப் பேசுவதும், நீதிகேட்பதும் இந்தியாவையே எதிர்ப்பதாக அமைகின்றது என்று எப்படி முடிவுசெய்தீர்கள்? அப்படியானால் நாம் எமக்கு நடந்தவைக்கான நீதியினைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கக் கூடாது என்பதுதானே உங்கள் முடிவாகிறது? இதையேதான் இலங்கை அரசாங்கத்தின் அன்றைய கால தலைமைப்பீடத்திற்கும் பொருந்தும் என்றும் கூறுவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2026 at 16:42, vasee said:

இந்தியாவினை எதிர்ப்பதால் ஏற்படும் வெற்றிடம் இலங்கைக்கு சாதகமான சீனாவினை அந்த வெற்றிடத்தினை நிரப்ப சாதகமாகி விடும்

உலக விடயங்களில் நிறைவான அறிவினைக் கொண்டிருக்கும் நீங்கள் இப்படி எழுதுவது வியப்பினை அளிக்கிறது. ஏனென்றால், இலங்கையில் சீனத் தலையீட்டினை அனுமதித்ததே இந்தியாதான் என்பதை எப்படி நீங்கள் உணர மறந்தீர்கள்?

இறுதி யுத்தச் காலத்தின் ஆரம்ப நாட்களில் போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களைத் தருமாறு கோத்தாபய முதலில் கேட்ட நாடு இந்தியாதான். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து வரக்கூடிய எதிர்ப்பினால் போரில் நேரடியாகப் பாவிக்கும் ஆயுதங்களை தரமுடியாது என்று மறுத்த இந்தியா, இலங்கை "நீங்கள் தராவிட்டால் நாங்கள் வேறு நாடுகளிடம்தான் செல்லவேண்டும்" என்று கோத்தா கூறியபோது சீனாவிடமும் பாக்கிஸ்த்தானிடமும் இர்நுது ஆயுதங்களை நீங்கள் வாங்கலாம் என்று இந்தியா அனுமதியளித்தது. இதன் மூலம் சீனா இலங்கையில் காலடி எடுத்துவைக்க இந்தியாவே வழிகோலியது.

ஆனால், தமிழரைப் பழிவாங்க இந்தியா எந்தப் பேயிடமாவது ஆயுதங்ம் வாங்குங்கள் என்று இலங்கையிடம் தெஹ்ரிவித்துபிட, சீனாவும் பாக்கிஸ்த்தானும் இலங்கைக்குள் குடியேறின. இந்த நிலைமை யுத்தம் முடிந்தபின்னர் இன்னும் மோசமாகியது. மகிந்த இந்தியாவை எட்டி உதைந்துவிட்டு சீனாவிடம் அடைக்கலமானார். இதன்பிறகே அம்பாந்தோட்ட, கொழும்பு துறைமுக நகர் என்று சீன ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2026 at 16:42, vasee said:

இந்தியாவினை எதிர்ப்பதால் எந்த வகையான அரசியல் அனுகூலம் ஏற்படும் என விவாவிப்பது நல்ல விடயமாகும்

மீண்டும் அதே திசையில்த்தான் சிந்திக்கிறீர்கள்.

சோனியா எனும் தனி மனிதர் செய்த தவறுகள் குறித்துப் பேசுவதும், நீதிகேட்பதும் எவ்வாறு இந்தியாவைப் பகைப்பது ஆகிவிடுகிறது? பாரதீய ஜனதாக் கட்சி மீது ஈழத்தமிழர்களுக்குப் பகையிருக்கிறதா, என்ன? அல்லது இந்திய மக்கள் மீதுதான் எமக்குப் பகையிருக்கின்றதா? இருப்பதெல்லாம் எம்மீது படுகொலை ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்ட சோனியா எனும் தனிப்பட்ட மனிதருக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனும் தேவைமட்டுமே.

ஒரு குற்றவாளி மீது தண்டனையினைக் கோரும்போது அந்த நாட்டினையே பகைப்பது ஆகிவிடுவதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் சோனியா என்பது ஒரு நாடல்ல, தனி மனிதர் மட்டுமே.

யூகொஸ்லாவியாவின் சேர்பியப் போர்க்குற்றவாளி சுலொபொடான் மிலோசொவிச்சினை கைதுசெய்தபோது அதனை சேர்பியாவுக்கெதிரான பகையுணர்வாக அந்த நாட்டு மக்களே பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த நாட்டு மக்களின் உதவியுடனேயே அவன் சர்வதேசப் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டான். அப்படியிருக்க, சோனியா மீதான விமர்சனம் என்பதோ அல்லது தண்டனைக்கான கோரல் என்பதோ எப்படி இந்தியா எனும் மொத்த நாட்டையே பகைப்பதாக ஆகிவிடுகிறது??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.