Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!

Published By: Digital Desk 1

12 Jan, 2026 | 11:06 AM

image

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை (12) காலை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இசுருபாயவில் உள்ள  கல்வி அமைச்சின் முன் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/235812

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தார் விமல்

Jan 12, 2026 - 10:28 AM

சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தார் விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 

இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இன்று காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். 

புதிய கல்வி சீர்த்திருத்தத்தை கைவிட வேண்டும் என்றும், கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmkaoztso03soo29npx4xd6w4

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcQOLUW6B4xUgJCyO9v14RF

விமல் வீரவன்ச... சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து,

சாக... முற்கூட்டிய வாழ்த்துக்கள். 👍

இவன் சில வருடங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்த போது...

உண்ணாவிரத மேடைக்கு பின்புறம் "மலிபன் பிஸ்கட்" பெட்டிகள்

கண்டெடுக்கப் பட்டமை பத்திரிகைகளில் செய்தியாக வந்திருந்தது குறிப்பிடத் தக்கது. 😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

அததெரண கருத்துப்படம்.

  • கருத்துக்கள உறவுகள்

615404830_1418984849797474_8953797092140

மத்தியான சாப்பிட்டுக்கு ஒருக்கால்... மறக்காமல் எழுப்பி விடுங்கோ. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமலின் சத்தியாக்கிரக போராட்டம்: நீதிமன்றின் உத்தரவு

Jan 12, 2026 - 03:54 PM

விமலின் சத்தியாக்கிரக போராட்டம்: நீதிமன்றின் உத்தரவு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று, இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

வீதியை மறிக்காத வகையிலும், உயர்தரப் பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாதெனவும் குறித்த நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmkb0n6j503tco29nt0my6oly

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

615404830_1418984849797474_8953797092140

மத்தியான சாப்பிட்டுக்கு ஒருக்கால்... மறக்காமல் எழுப்பி விடுங்கோ. 😂

ஆஆஆ முதல்நாளே படுத்திட்டாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

ஆஆஆ முதல்நாளே படுத்திட்டாரோ?

முதல் நாள் இன்னும் முடியவில்லை.

இது... ஐந்தாவது மணித்தியாலத்தில் எடுத்த படம். 😂

அதிகமாக உணவு உண்ட களைப்பாகவும் இருக்கலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதமில்லை

சத்தியாகிரகமே.

அதுவும் தொடர்ந்து செய்யமாட்டேன்.

நான் வீட்டுக்குப் போனால் வேறொரு கூட்டம் வந்து சத்தியாக்கிரகம் செய்வார்கள்.

கரிணி அமரசூரியாவுக்கு உணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் லால்காந்தவுடன் சேர்ந்து கொள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

உண்ணாவிரதமில்லை

விமலுக்கு நன்றாகவே தெரியும், தான் உண்ணாவிரதமிருந்தால் எல்லாரும் சேர்ந்து தன்னை சாக விட்டுவிடுவார்கள் என்பது. அதனாலேயே சத்தியாக்கிரகமாக மாற்றியிருப்பார். அவர் என்ன போராட்டம் செய்தாலும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படப்போவதில்லை, இருந்து, எழும்பி, பின் களைத்து வராமலே போய்விடுவார். இவருக்கு இருப்பது வாய் மட்டுந்தான். திஸ்ஸ விகாரைக்கு மக்களை திரட்ட பிக்குகளையும் திரட்டிக்கொண்டு தெருவில நின்று ஊழையிட்டு விட்டு போய் படுத்தவர், இப்போ வந்து கருணாநிதி ஸ்ரைலில் கருப்பு கண்ணாடி, வந்த கணத்திலேயே படுத்துவிட்டார், தூக்கம் கலைய எழும்பிப்போவார்.

5 hours ago, ஈழப்பிரியன் said:

கரிணி அமரசூரியாவுக்கு உணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் லால்காந்தவுடன் சேர்ந்து கொள்.

பொதுஅரங்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இப்படி அசிங்கமாக பேசிக்கொண்டு, எப்படி கல்வி திட்டத்திற்கு எதிராக சத்தியாக்கிரகம் செய்ய முடியுது இவரால்? அசிங்கமாக பேசுவது இவர்களுக்கு சர்வ சாதாரணம், பிறகு கல்வி திட்டம் பிழையாம் என்கிற குற்றச்சாட்டு. இவரை ஏன் இன்னும் போலீசார் கைது செய்யவில்லை? ஒரு நாட்டின் பிரதமரை பகிரங்கமாக இழிவு படுத்துவதை வேடிக்கை பார்ப்பது தான் பொலிஸாரின் கடமையா? ஐ .நாவின் மனித உரிமையாளரை தான் கலியாணம் கட்டுகிறேன் என்று சொன்னார் மேவின், அது அவரின் கருத்து சுதந்திரமென்று விளக்கமளித்தார் மஹிந்தா. இதுதான் ஒரு நாட்டின் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம், கருத்துச்சுதந்திரம். நாமல் பேரணி நடத்தினார் எதுவும் சாதிக்க முடியவில்லை. வந்தது இயற்கை சீற்றம். பயமுறுத்தல், இல்லாத விடயங்களை பரப்புதல், சேறடித்தல் வேலைகளை செய்கிறார். பூச்சாண்டி பிடிக்கும் என்று குழந்தைகளுக்கு பயம் காட்டுவதுபோல், அமெரிக்கா இலங்கைக்குள் நுழையப்போகுதாம் என்று அனுராவுக்கு பயம் காட்டுகிறார். இவர் எதிர்கால ஜனாதிபதியாம். இவர் ஜனாதிபதியாக வந்தால் எப்படியிருக்கும்? இனவாதம் மதவாதம் பேசும் அரசியல் கலாச்சாரமே இந்த நாட்டில் இருக்கவேண்டும், அது இல்லாத, பேசாதவர் அரசியல் செய்யக்கூடாது என்பது இவர்களின் எழுதப்படாத சட்டம். எப்போ இவர்களின் ஊழல், கொலை, கொள்ளை வெளிவருகிறதோ, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறதோ உடனே நாட்டை குழப்பி, ஆட்சியை பிடித்து தம்மை புனிதர்களாக, சிங்கள, பௌத்த காவலர்களாக காட்டுவார்கள்.

இதில இன்னொரு பகிடி என்னவென்றால்; தேசிய மக்கள் சக்தி பாரியளவில் பொய்பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சியை கைப்பற்றியதால்தெய்வ கோபம் ஏற்பட்டு நாடு அனர்த்தங்களை எதிர்நோக்கியதாம், வஜிர அபேவர்த்தன சொல்கிறார். அப்போ, சுனாமி ஏன் வந்தது? எத்தனை உயிர்களை துடிக்க துடிக்க கொன்று குவிக்கும்போது தெய்வம் மகிழ்ச்சியடைந்ததோ? சரி, இவர்களது பொய்யால் அனர்த்தம் ஏற்பட்டதென்றால் அவர்கள் ஆட்சியை கைப்பற்றியவுடன் அல்லவா அனர்த்தம் நேரிடிருக்க வேண்டும்? பருவகால அனர்தத்திற்கும், தெய்வ கோபத்திற்கும் வேறுபாடு தெரியாத அமைச்சர். கல்வியறிவு இல்லை, திறமையில்லை நாட்டை நிர்வகிக்க. இனவாதம், மதவாதம் பேசி அரசியலை கைப்பற்றி கொள்ளையடிப்பது, கேள்வி கேட்போரை கொலை செய்வது, இவர்கள்தான் சிறந்த அரசியல்வாதிகள். நாட்டில் மக்களை சிந்திக்க விடுவதில்லை, உண்மையை தெரிந்துகொள்ள அனுமதிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

616326404_2363181984181626_5679841371196

இரவு, பகல் போராட்டம் என கூறி... நள்ளிரவில் வீட்டிற்கு சென்று திரும்பிய விமல் வீரவன்ச. 😂

  • கருத்துக்கள உறவுகள்

sl-flag.gif 615262891_2362817210884770_7369929516110

கண்கள் செருகிக் கொண்டு வருகின்றது. ஆள்… தப்புவது கடினம். animiertes-gefuehl-smilies-bild-0029.gif

தேசியக் கொடியை... அரைக் கம்பத்தில் பறக்க விடுங்கப்பா. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்

616255140_2363146100851881_4345089515514

சென்ற முறை... "மலிபன் பிஸ்கற்" சாப்பிட்டு உண்ணாவிரதம் இருந்த போது...

கோத்த பாயா... தவண்டு வந்து, ஆறுதல் சொல்லிய காட்சி. 😂

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி: 👉 https://www.facebook.com/reel/860162666636509 👈

தண்ணீர் குடித்து... உண்ணாவிரதம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

MediaFile-9.jpeg?resize=750%2C375&ssl=1

சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச!

கல்வியமைச்சர் ஹரணி அமரசூரிய பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த சத்தியாகிரப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில்,
புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்னால் முன்னெடுத்திருந்த தனது சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இந்த சத்தியாகிரகத்தை ஆரம்பித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் வாசலுக்கு முன்பாக கூடாரம் ஒன்றை அமைப்பதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டிருந்தனர்.

இதன்போது, கூடாரத்தை அகற்றுமாறு பொலிசார் அறிவுறுத்தியிருந்த நிலையில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்தது.

இதேவேளை புதிய கல்வி சீர்திருத்தத்தை ஒத்திவைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தையடுத்து, தனது போராட்டத்தைக் கைவிடுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளமை குறிப்பிப்பிடதக்கது.

https://athavannews.com/2026/1459826

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

பொதுஅரங்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இப்படி அசிங்கமாக பேசிக்கொண்டு, எப்படி கல்வி திட்டத்திற்கு எதிராக சத்தியாக்கிரகம் செய்ய முடியுது

இவர் இப்போது பாராளுமன்றில் இல்லை.

மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளார்.

6 hours ago, தமிழ் சிறி said:

616326404_2363181984181626_5679841371196

இரவு, பகல் போராட்டம் என கூறி... நள்ளிரவில் வீட்டிற்கு சென்று திரும்பிய விமல் வீரவன்ச. 😂

இது சுழற்சி முறையிலான நுhதனமான போராட்டம்.

எட்டுமணிநேர வேலை மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

காணொளி: 👉 https://www.facebook.com/reel/860162666636509 👈

தண்ணீர் குடித்து... உண்ணாவிரதம். 😂 🤣

இது உப்பு சத்தியாக்கிரகம் ....உப்பில்லாத சாப்பாடு எவ்வளவும் சாப்பிடலாம் ....இவர் இங்கு இரவு தங்கி நின்றால் ...மனிசி வீட்டிலை ..மகனின் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்திடுவா என்ற பயத்தில்தான் ...வீட்டிற்கு அடிக்கடி போய்வருகிறார் ...தப்ப எடுக்காதையுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நாட்டை திவாலாக்கியவர்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பது வேடிக்கையானது" – நிருக்ஷ குமார கடும் தாக்கு

13 Jan, 2026 | 05:14 PM

image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தற்போதைய அரசியல் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார, நாட்டைப் பொருளாதார ரீதியாகப் படுகுழியில் தள்ளியவர்களுக்கு மக்கள் குறித்துப் பேச எந்த உரிமையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இந்த நாட்டு மக்கள் எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக நீண்ட வரிசைகளில் நின்று சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தபோது, இந்த விமல் வீரவங்ச எங்கே மறைந்திருந்தார் என கேள்வி எழுப்பிய அவர், ராஜபக்சக்களுடன் இணைந்து நாட்டை திவாலாக்கியதில் இவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு எனக் குற்றம் சாட்டினார்.

மேலும், விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினர் கடந்த காலங்களில் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள இனவாதத்தைப் பயன்படுத்தியதாகச் சாடிய நிருக்ஷ குமார, ஒரு அப்பாவி வைத்தியர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தியும், பெண்களுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்தும் சமூகத்தில் அச்சத்தையும் வெறுப்பையும் விதைத்தனர் எனக் குறிப்பிட்டார்.

தற்போது கல்வி மறுசீரமைப்பில் உள்ள பாலினக் கல்வி தொடர்பான விடயங்களைத் தவறாகச் சித்தரித்து, விமல் வீரவங்ச அரசியல் லாபம் தேட முயல்வதாகவும், எட்டு வகுப்பு கூடத் தேறாத அவருக்கு கல்வி மறுசீரமைப்பு பற்றிப் பேச தகுதி இல்லை என்றும் அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.

அமைச்சராக இருந்தபோது அனுபவித்த சொகுசு வாழ்க்கை மற்றும் சலுகைகள் பறிபோன விரக்தியில் விமல் வீரவங்ச தற்போது வீதிக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உண்மையில் நாட்டு மக்கள் மீது அக்கறை இருந்தால், நாட்டைச் சூறையாடியவர்களுக்கு எதிராகத் தான் போராடியிருக்க வேண்டும் என்றார். 

இறுதியாக, இனங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கி குளிர் காய்ந்தவர்களின் இந்த நாடகம் இனி செல்லுபடியாகாது என்றும், முடிந்தால் உண்மையாகவே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து காட்டுங்கள் என்றும் விமல் வீரவங்சவுக்கு நிருக்ஷ குமார சவால் விடுத்தார்.

https://www.virakesari.lk/article/235948

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.