Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரின்லாந்து விடயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பின்வாங்கியுள்ளதாக தெரிகிறது.

கிரீன்லாந்தை அமெரிக்கா வசமாக்கியே தீருவோம் என அடம்பிடித்த டிரம்ப் சுவிஸ்லாந்தில் டவோசில் நேட்டோ பிரதானியுடன் நடந்த பேச்சின் பின் - நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்யும் ஒப்பந்தம் செய்வோம், பாதுகாப்பு வளையத்தை அமைப்போம் என நிலையை மாற்றியுள்ளார்.

டிரம்ப் ஏலவே இருந்த டென்மார்க்-அமரிக்கா ஒப்பந்தபடியே நடக்க ஒப்புகொண்டிருப்பதாக தெரிகிறது.

கிரீன்லாந்தை அமெரிக்கா வசமாக்குவது பற்றி முன்னர் கூறினீர்களே என பத்திரிகைகள் கேட்க, மழுப்ப்பல் பதில் சொன்ன டிரம்ப்👇

டிஸ்கி

மார்க் கார்னியும், ஐரோப்பிய தலைவர்களும் போட்ட போட்டில், தம்பர் கிரின்லாந்து வேண்டாம் என்ற நிலைக்கு வந்துள்ளார்.

டவோசில் ஆளை வரவேற்க எவரும் போகவில்லை.

ஆளை எந்த தலைவரும் சந்திக்கவில்லை.

நேட்டோ தலைமை அதிகாரி மூலம் பேசி பணிய வைத்துள்ளார்கள்.

சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் கோமணத்தை கனடா+ஈயூ உருவிய நாள் இன்று😂.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்க நாதியற்று போனியே தம்பா😂

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

மார்க் கார்னியும், ஐரோப்பிய தலைவர்களும் போட்ட போட்டில், தம்பர் கிரின்லாந்து வேண்டாம் என்ற நிலைக்கு வந்துள்ளார்.

டவோசில் ஆளை வரவேற்க எவரும் போகவில்லை.

ஆளை எந்த தலைவரும் சந்திக்கவில்லை.

நேட்டோ தலைமை அதிகாரி மூலம் பேசி பணிய வைத்துள்ளார்கள்.

சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் கோமணத்தை கனடா+ஈயூ உருவிய நாள் இன்று😂.

🤣

ஓம் யேர்மன் பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான தண்டனை வரிவிதிப்பு பயமுறுத்தலை ரம்ப் வாபஸ் பெற்றுள்ளார்.

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் மூலம் பணிய வைத்துள்ளார்கள் 👋

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வரவேற்க நாதியற்று போனியே தம்பா😂

பன்னாடைக்கு உரிய வரவேற்புக் கிடைத்திருக்கிறது👍.

பேச்சின் போது கிறீன்லாந்தையும், ஸ்கன்டினேவிய நாடான "ஐஸ்லாந்தையும்" 4 தடவைகள் போட்டுக் குழப்பிப் பேசி அமெரிக்காவில் தனக்கு வாக்குப் போட்ட முட்டாப் பீசுகளுக்கு தான் உரிய தலைவர் தான் என நிரூபித்து விட்டு வந்திருக்கிறது பன்னாடை😂!

நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல, "பல் துருவ உலகம்" உருவாக வேண்டும். ஆனால், ஐரோப்பியம், கனடா, அவுஸ்திரேலியா- நியூசிலாந்து ஆகிய துருவங்கள் தான் எதிர் துருவங்களாக வளர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

TRUMP-1-2.jpg?resize=750%2C375&ssl=1

ஐரோப்பிய நாடுகளுக்கான வரி விதிப்பு திட்டத்திலிருந்து ட்ரம்ப் பின்வாங்கல்!

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது திட்டங்களை எதிர்த்த ஐரோப்பிய நட்பு நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்கும் தீர்மானங்களிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (21) பின்வாங்கினார்.

அதேநேரம், நேட்டோவுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், கிரீன்லாந்து குறித்த சாத்தியமான ஒப்பந்தத்தை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து சமூக ஊடகங்களில் சில விடயங்களை மாத்திரம் முன்வைத்த ட்ரம்ப், நேட்டோ தலைவருடனான “மிகவும் பயனுள்ள சந்திப்பு” கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் தொடர்பான சாத்தியமான ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்கு வழிவகுத்ததாகக் கூறினார்.

இந்த சந்திப்பை மிகவும் பயனுள்ளது என்று நேட்டோ விவரித்தது – மேலும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள கட்டமைப்பின் மீதான விவாதங்கள் ஆர்க்டிக் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் என்றும் கூறியது.

முன்னதாக சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் ட்ரம்ப், கிரீன்லாந்து விடயத்தில் இராணுவ பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும், அந்தப் பிரதேசத்தின் உரிமையைப் பெற பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் கூறினார்.

இந்த நிலையில் புதன்கிழமை இது குறித்து ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் ட்ரம்ப், 

கிரீன்லாந்து மற்றும் உண்மையில் முழு ஆர்க்டிக் பிராந்தியத்திற்கும் எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இந்த தீர்வு நிறைவேறினால் அது அமெரிக்காவிற்கும், அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் – என்றார்.

எனினும், தன்னாட்சி பெற்ற டேனிஷ் சார்பு பிரதேசத்தின் அமெரிக்க உரிமையை இந்த திட்டம் உள்ளடக்கியதா என்று அவர் கூறவில்லை.

கிரீன்லாந்தை ‍கையகப்படுத்தும் தனது திட்டங்களை எதிர்த்த  எட்டு ஐரோப்பிய நாடுகளின் அமெரிக்காவிற்குச் செல்லும் ஏற்றுமதிகள் மீது அதிக வரிகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் கடந்த வார இறுதியில் அச்சுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1460895

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல, "பல் துருவ உலகம்" உருவாக வேண்டும். ஆனால், ஐரோப்பியம், கனடா, அவுஸ்திரேலியா- நியூசிலாந்து ஆகிய துருவங்கள் தான் எதிர் துருவங்களாக வளர வேண்டும்.

அதே

சீனா ஒரு துருவமாவது தவிர்க்க முடியாது.

செத்த கிளியின் ஆட்டம் தம்பர் இருக்கும் மட்டும்தான். பிறகு இத்துபோன அனுகுண்டை வைத்து நானும் ரவுடிதான் என காமெடி மட்டுமே பண்ணலாம்.

ஐரோப்பா தனி வழியே பயணிக்க, ஈயூ ஆர்மியை உருவாக்க காலம் கனிந்து விட்டது.

ஜேர்மனி ஆயுதமயப்பட்டால் -ஈயுவும் ஒரு தன்னிறைவுள்ள இராணு சக்தியாகிவிடும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

618642093_1415087236744697_2791728868928

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விளங்க நினைப்பவன் said:

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் மூலம் பணிய வைத்துள்ளார்கள்

இவர்தானே ட்ரம்பை அப்பா என அழைத்தவர்????🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

வரவேற்க நாதியற்று போனியே தம்பா

நான் அப்பவே சொன்னேன் தம்பர் தனிமைப்படப் போறார் என்று இவ்வளவு சீக்கிரம் குத்துக்கரணம் அடிப்பார் என்று நினைக்க வில்லை.ஈயு>நேட்டோ நாடுகள் போட்டதுக்கே இப்படி என்றால் ரஸ்யா >சீனா எல்லாம் பின்னால் வெயிற்றிங்.அமெரிக்காவின் அதிபர் வாயில் இருந்து வரும்வார்ததைகள் எவ்வளவு நிதானமாக இருக்க வேண்டும். ஆனால் ட்ரம்ப் அமெரிக்காவின் மானத்தை வாங்கி விட்டார்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.

தமிழன் அப்பவே சொல்லி விட்டான்.

19 hours ago, Justin said:

பன்னாடைக்கு உரிய வரவேற்புக் கிடைத்திருக்கிறது👍.

பேச்சின் போது கிறீன்லாந்தையும், ஸ்கன்டினேவிய நாடான "ஐஸ்லாந்தையும்" 4 தடவைகள் போட்டுக் குழப்பிப் பேசி அமெரிக்காவில் தனக்கு வாக்குப் போட்ட முட்டாப் பீசுகளுக்கு தான் உரிய தலைவர் தான் என நிரூபித்து விட்டு வந்திருக்கிறது பன்னாடை😂!

என்ன செய்வது மக்கள் தத்திகளைத் தெரிவு செய்து விட்டு அதன்பலன்களை அனுபவிக்கிறார்கள். இப்போது மெல்ல மெல்ல விழித்துக் கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பர் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். நாங்கள்(அமெரிக்கா)இல்லாவிடால் எல்லோரும் ஜேர்மன் மொழியையும் ஒரளவு யப்பானிய மொழியையும் பேசிக் கொண்டிருப்பார்கள். அதில்பாதி உண்மை. ஐரோப்பா ஹிட்டலருக்கு கோழிக்குஞ்சு யானையைச் சாப்பிட்டால்தான் பசியாறும் என்று சம நேரத்தில் ரஸ்யாவுக்குள் போய் எல்லாப் பக்கமும்அடிவாங்கியது மாதிரி ட்ரம்ப் அடிவாங்கி விட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, புலவர் said:

தம்பர் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். நாங்கள்(அமெரிக்கா)இல்லாவிடால் எல்லோரும் ஜேர்மன் மொழியையும் ஒரளவு யப்பானிய மொழியையும் பேசிக் கொண்டிருப்பார்கள். அதில்பாதி உண்மை. ஐரோப்பா ஹிட்டலருக்கு கோழிக்குஞ்சு யானையைச் சாப்பிட்டால்தான் பசியாறும் என்று சம நேரத்தில் ரஸ்யாவுக்குள் போய் எல்லாப் பக்கமும்அடிவாங்கியது மாதிரி ட்ரம்ப் அடிவாங்கி விட்டார்.

அமெரிக்காவின் பங்களிப்பை மறுக்க முடியாது…

ஆனால் பேர்ள் ஹாபர் தாக்குதல் வரைக்கும்…

அத்தனை வருடமாக தன்னம்தனியாக (சோவியத் ரஸ்யாவோடு ஒப்பந்தம்) நாஜிகளை பிரிதானியா எதிர் கொண்டது…,

இல்லை எண்டால் அமெரிக்கா போரில் குதிக்க முதலே எல்லாம் முடிஞ்சிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகள் அலட்டிகொள்ளாமல் ஒரே ஒரு செக் மேட் மூவ் அவ்வளவுதான் ட்ரம் பல்டி அடிக்க காரணம் என்கிறார்கள் .

அமெரிக்க கருவூல பத்திரங்களின் 12 டிரில்லியன் மதிப்பு மிக்கவை ஐரோப்பிய நாடுகளிடம் உள்ளன வெளியில் சந்தையில் இறக்கினால் டொலர் பெறுமதி ஆதால பாதாளத்துக்கு பாய்ந்து விடும் கடைசியில் Nauru island நிலைமைதான் அமெரிக்காவுக்கு மற்றைய நாடுகளின் கடனில் வாழும் அமெரிக்காவுக்கு இது ஓவர்தான் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

ஐரோப்பிய நாடுகள் அலட்டிகொள்ளாமல் ஒரே ஒரு செக் மேட் மூவ் அவ்வளவுதான் ட்ரம் பல்டி அடிக்க காரணம் என்கிறார்கள் .

அமெரிக்க கருவூல பத்திரங்களின் 12 டிரில்லியன் மதிப்பு மிக்கவை ஐரோப்பிய நாடுகளிடம் உள்ளன வெளியில் சந்தையில் இறக்கினால் டொலர் பெறுமதி ஆதால பாதாளத்துக்கு பாய்ந்து விடும் கடைசியில் Nauru island நிலைமைதான் அமெரிக்காவுக்கு மற்றைய நாடுகளின் கடனில் வாழும் அமெரிக்காவுக்கு இது ஓவர்தான் .

12.6 ரில்லியனில் அமெரிக்க கருவூல பணமுறி 2.34 ரில்லியன் என கூறுகிறார்கள், அந்த 2.34 ரில்லியன் கருவூல பணமுறியினை மட்டும் விற்றாலே 2008 பொருளாதார நெருக்கடியினை விட மோசமான விளைவுகள் ஏற்ப்படும் என கூறப்பட்ட்ட கட்டுரை வேறு திரியில் இணைந்த நினைவுள்ளது.

இதற்கிடையில் ஜப்பான் தனது குழப்படியினை ஆரம்பித்துள்ளது.

கிரீன்லாந்து ஒப்பந்த கட்டமைப்பு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகள் மீது வரிகளை விதிக்க மாட்டோம் என்றும் டிரம்ப் உறுதியளிக்கிறார்.

Olha Kovalchuk, Tetyana Oliynyk — 21 ஜனவரி, 21:44

கிரீன்லாந்து ஒப்பந்த கட்டமைப்பு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகள் மீது வரிகளை விதிக்க மாட்டோம் என்றும் டிரம்ப் உறுதியளிக்கிறார்.

டிரம்ப். புகைப்படம்: கெட்டி இமேஜஸ்

42033 க்கு விண்ணப்பிக்கவும்

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே உடனான சந்திப்பின் போது, கிரீன்லாந்து தொடர்பான எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மூலம்: ஐரோப்பிய பிராவ்தா அறிக்கையின்படி, உண்மை சமூகத்தில் டிரம்ப் .

விவரங்கள்: ரூட்டேவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் விளைவாக, சில ஐரோப்பிய நாடுகள் மீது இனி வரிகளை விதிக்கத் திட்டமிடவில்லை என்று டிரம்ப் கூறினார்.

இந்த ஒப்பந்தம் குறித்த எந்த விவரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை, ஆனால் அது அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் "சிறந்ததாக" இருக்கும் என்றார் .

மேற்கோள்: "நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் நான் நடத்திய மிகவும் பயனுள்ள சந்திப்பின் அடிப்படையில், கிரீன்லாந்து மற்றும் உண்மையில் முழு ஆர்க்டிக் பிராந்தியத்திற்கும் ஒரு எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த தீர்வு, நிறைவேறினால், அமெரிக்காவிற்கும், அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்."

மேலும் விவரங்கள்: கிரீன்லாந்தையும் உள்ளடக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்பான "கோல்டன் டோம்" சுற்றி விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டிரம்ப் கூறினார் .

இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் கையாள்வார்கள்.

பேட்ரியனில் உக்ரைன்ஸ்கா பிராவ்தாவை ஆதரிக்கவும் !

https://www.pravda.com.ua/eng/news/2026/01/21/8017283/

இப்போது முக்கிய பிரச்சினை கிரீன்லாந்து அல்ல, உக்ரைன் என்று நேட்டோ பொதுச் செயலாளர் கூறுகிறார்.

Iryna Kutielieva - 21 ஜனவரி, 13:41

இப்போது முக்கிய பிரச்சினை கிரீன்லாந்து அல்ல, உக்ரைன் என்று நேட்டோ பொதுச் செயலாளர் கூறுகிறார்.

ஸ்டாக் புகைப்படம்: கெட்டி இமேஜஸ்

573 (ஆங்கிலம்)

கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள சூழ்நிலையை விட, தற்போது நேட்டோவின் முக்கிய பிரச்சனை ரஷ்ய-உக்ரைன் போர் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறியுள்ளார்.

மூலம்: டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் ரூட், தி கார்டியன் மேற்கோள் காட்டி ஐரோப்பிய பிராவ்தாவால் அறிவிக்கப்பட்டது.

விவரங்கள்: " இந்த மற்ற பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவதால் நாம் பந்தை இழந்துவிடுவோம் " என்று தான் கவலைப்படுவதாக ரூட் கூறினார் .

மேற்கோள்: " இங்குள்ள ஆபத்து என்னவென்றால், நீங்கள் நிச்சயமாக கிரீன்லாந்தில் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் அந்தப் பிரச்சினை ஒரு இணக்கமான வழியில் தீர்க்கப்படுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். ஆனால் முக்கிய பிரச்சினை கிரீன்லாந்து அல்ல. இப்போது, முக்கிய பிரச்சினை உக்ரைன். "

விவரங்கள்: கடுமையான உறைபனிக்கு மத்தியில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தற்போது உக்ரைனின் எரிசக்தி துறையை அழித்து வருவதாக ரூட் சுட்டிக்காட்டினார்.

மேற்கோள்: " கெய்வில் இப்போது -20 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது என்பது எங்களுக்குத் தெரியும். உக்ரைன் அதன் சொந்த மின்சாரத்தில் 60% மட்டுமே கவனித்துக் கொள்ள முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆம், டிசம்பரில் ரஷ்யர்கள் ஒரு நாளைக்கு 1,000 பேரைக் கொன்றுள்ளனர் - பலத்த காயம் அடையவில்லை, ஆனால் இறந்துள்ளனர் - உண்மைதான். டிசம்பர் மாதத்தில் அது 30,000 க்கும் அதிகமாகும்... ஆனால் அவர்கள் இன்னும் தாக்குதலைத் தொடர்கிறார்கள், இன்னும் தாக்குதலை அதிகரிக்கிறார்கள். "

விவரங்கள்: உக்ரைனுக்கு இப்போது மேற்கத்திய நாடுகளின் ஆதரவு தேவை என்று அவர் வலியுறுத்தினார், மேலும் எதிர்காலத்தில் ரஷ்யாவிடமிருந்து எந்தவொரு சாத்தியமான சவால்களுக்கும் தயாராக இருக்க ஐரோப்பா அதன் தொழில்துறை தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க: உக்ரைனைத் தாக்கும் கிரீன்லாந்து நெருக்கடி: ஐரோப்பாவுடனான டிரம்பின் மோதல் உக்ரைனின் ஆயுதப் படைகளை எவ்வாறு பாதிக்கலாம்

பின்னணி:

  • முன்னதாக, கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் ஐரோப்பாவிற்கு முன்னுரிமையாக உள்ளது என்று நோர்வே வெளியுறவு அமைச்சர் எஸ்பென் பார்த் எய்ட் கூறினார்.

  • கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள பதட்டங்கள், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை சர்வதேச சமூகம் மறந்துவிட்டதாக அர்த்தமல்ல என்று போலந்து ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கி கூறினார்.

https://www.pravda.com.ua/eng/news/2026/01/21/8017200/

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

டாவோஸில் ஐரோப்பாவை ஜெலென்ஸ்கி விமர்சித்தார்: "நீங்கள் 40 வீரர்களை கிரீன்லாந்திற்கு அனுப்பினீர்கள். அது என்ன செய்தியை அனுப்புகிறது?"

Olha Kovalchuk, Alona Mazurenko - 22 ஜனவரி, 17:04

டாவோஸில் ஐரோப்பாவை ஜெலென்ஸ்கி விமர்சித்தார்: நீங்கள் கிரீன்லாந்திற்கு 40 வீரர்களை அனுப்பினீர்கள். அது என்ன செய்தியை அனுப்புகிறது?

டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

80398 -

டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் தனது உரையின் போது, கிரீன்லாந்து உள்ளிட்ட பாதுகாப்புப் பிரச்சினைகளில் ஐரோப்பாவின் அணுகுமுறையை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டித்தார் .

ஆதாரம்: ஐரோப்பிய பிராவ்தா

விவரங்கள்: நேட்டோ தனது இராணுவ வலிமையை நடைமுறையில் ஒருபோதும் பயன்படுத்தாத போதிலும், அமெரிக்காவின் கீழ் நேட்டோ பாதுகாப்பை ஐரோப்பா நம்பியிருப்பதாக ஜெலென்ஸ்கி விமர்சித்தார்.

" இன்று, ஐரோப்பா ஆபத்து வந்தால், நேட்டோ செயல்படும் என்ற நம்பிக்கையை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால் உண்மையில் கூட்டணி செயல்படுவதை யாரும் பார்த்ததில்லை . புடின் லிதுவேனியாவைக் கைப்பற்றவோ அல்லது போலந்தைத் தாக்கவோ முடிவு செய்தால், யார் பதிலளிப்பார்கள்? " என்று ஜனாதிபதி கேட்டார்.

கிரீன்லாந்திற்கான சமீபத்திய ஐரோப்பிய இராணுவப் பணியைப் பற்றியும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார். மூலோபாய ரீதியாக முக்கியமான பிரதேசத்தைப் பாதுகாக்க 40 வீரர்களை அனுப்புவது ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது என்று அவர் கூறினார்.

மேற்கோள்: " ஐரோப்பா தன்னை எப்படி தற்காத்துக் கொள்வது என்று தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் 14 அல்லது 40 வீரர்களை கிரீன்லாந்திற்கு அனுப்பினால், அது எதற்காக? அது என்ன செய்தியை அனுப்புகிறது? புடினுக்கும் சீனாவுக்கும் என்ன செய்தி? இன்னும் முக்கியமாக, அது டென்மார்க்கிற்கும் என்ன செய்தியை அனுப்புகிறது?

விவரங்கள்: கிரீன்லாந்து அருகே ரஷ்ய போர்க்கப்பல்களை அழிக்க உக்ரைன் ஐரோப்பாவிற்கு உதவ முடியும் என்று ஜனாதிபதி பரிந்துரைத்தார்.

" கிரீன்லாந்தைச் சுற்றி ரஷ்ய போர்க்கப்பல்கள் சுதந்திரமாகப் பயணித்தால் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியும். உக்ரைன் உதவ முடியும். அந்தக் கப்பல்களில் ஒன்று கூட எஞ்சியிருக்காமல் பார்த்துக் கொள்ளும் நிபுணத்துவமும் ஆயுதங்களும் எங்களிடம் உள்ளன. கிரிமியாவிற்கு அருகில் மூழ்குவது போல் கிரீன்லாந்திற்கு அருகிலும் அவை மூழ்கக்கூடும். எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்களிடம் கருவிகளும் மக்களும் உள்ளனர் ," என்று ஜெலென்ஸ்கி கூறினார், உக்ரைன் இதைச் செய்யும்படி கேட்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டார்.

ஈரானில் நிலவும் சூழ்நிலை குறித்து ஐரோப்பா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். சுயாதீனமான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, அயதுல்லாக்களின் ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா செயல்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

" ஈரானைப் பொறுத்தவரை, அமெரிக்கா என்ன செய்யும் என்பதைப் பார்க்க அனைவரும் காத்திருக்கிறார்கள். உலகம் எதையும் வழங்கவில்லை. ஐரோப்பா எதையும் வழங்கவில்லை, இந்தப் பிரச்சினையில் நுழைய விரும்பவில்லை ... ஆனால் சுதந்திரத்திற்காகப் போராடும் மக்களுக்கு நீங்கள் உதவ மறுக்கும் போது, விளைவுகள் திரும்பும், அவை எப்போதும் எதிர்மறையாகவே இருக்கும். 2020 இல் பெலாரஸ் ஒரு உதாரணம். யாரும் தங்கள் மக்களுக்கு உதவவில்லை, இப்போது ரஷ்ய ஓரெஷ்னிக் ஏவுகணைகள் பெலாரஸில் பெரும்பாலான ஐரோப்பிய தலைநகரங்களின் எல்லைக்குள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 2020 இல் பெலாரஷ்ய மக்கள் வெற்றி பெற்றிருந்தால் அது நடந்திருக்காது ," என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார், பெலாரஷ்ய ஆட்சிக்கு எதிராக செயல்பட ஐரோப்பிய தலைவர்களை பலமுறை அழைத்ததாகக் கூறினார்.

பின்னணி:

https://www.pravda.com.ua/eng/news/2026/01/22/8017403/

டிரம்பின் முன்மாதிரியைப் பின்பற்றி ரஷ்யாவின் நிழல் கடற்படை டேங்கர்களை முற்றிலுமாக நிறுத்துமாறு ஐரோப்பாவை ஜெலென்ஸ்கி வலியுறுத்துகிறார்.

Olha Kovalchuk, Alona Mazurenko - 22 ஜனவரி, 16:35

டிரம்பின் முன்மாதிரியைப் பின்பற்றி ரஷ்யாவின் நிழல் கடற்படை டேங்கர்களை முற்றிலுமாக நிறுத்துமாறு ஐரோப்பாவை ஜெலென்ஸ்கி வலியுறுத்துகிறார்.

டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

57728 க்கு விண்ணப்பிக்கவும்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் எண்ணெய் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்துமாறு ஐரோப்பாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார், மேலும் அதில் ரஷ்யாவின் நிழல் கடற்படையில் இருந்து டேங்கர்களை நிறுத்துவதும் அடங்கும்.

ஆதாரம்: ஐரோப்பிய பிராவ்தா

விவரங்கள்: டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் தனது உரையின் போது, ஐரோப்பா தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்த்து வருவதாக ஜெலென்ஸ்கி கூறினார், குறிப்பாக ரஷ்ய எண்ணெயை கண்டத்திற்கு கொண்டு செல்லும் நிழல் கடற்படையைக் குறிப்பிடுகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய டேங்கர்களை தடுத்து நிறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

" ஐரோப்பா எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க விரும்புகிறது, ஆனால் இன்று நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கிறது - நமக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் இருக்கும் என்பதை வரையறுக்கும் நடவடிக்கை. அதுதான் பிரச்சனை. ஜனாதிபதி டிரம்ப் ஏன் நிழல் கடற்படையில் இருந்து டேங்கர்களை நிறுத்தி எண்ணெய் [விநியோகங்களை] நிறுத்த முடியும், ஆனால் ஐரோப்பா ஏன் அவ்வாறு செய்யவில்லை?" என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்துவதன் மூலம், ஐரோப்பா தனது சொந்த மக்களைப் பாதுகாக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேற்கோள்: " ரஷ்ய எண்ணெய் ஐரோப்பிய கடற்கரைகள் வழியாக நேரடியாக கொண்டு செல்லப்படுகிறது. அந்த எண்ணெய் உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதியளிக்கிறது; அந்த எண்ணெய் ஐரோப்பாவை சீர்குலைக்க உதவுகிறது. எனவே ரஷ்ய எண்ணெய் நிறுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு ஐரோப்பாவின் நலனுக்காக விற்கப்பட வேண்டும். ஏன் கூடாது? புடினிடம் பணம் இல்லையென்றால், ஐரோப்பாவிற்கு போர் இல்லை."

பின்னணி:

Ukrainska Pravda
No image preview

Zelenskyy urges Europe to follow Trump's example and comp...

Ukrainian President Volodymyr Zelenskyy has called on Europe to completely stop the supply of Russian oil, and that includes stopping tankers from Russia's shadow fleet.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

அதே

சீனா ஒரு துருவமாவது தவிர்க்க முடியாது.

செத்த கிளியின் ஆட்டம் தம்பர் இருக்கும் மட்டும்தான். பிறகு இத்துபோன அனுகுண்டை வைத்து நானும் ரவுடிதான் என காமெடி மட்டுமே பண்ணலாம்.

ஐரோப்பா தனி வழியே பயணிக்க, ஈயூ ஆர்மியை உருவாக்க காலம் கனிந்து விட்டது.

ஜேர்மனி ஆயுதமயப்பட்டால் -ஈயுவும் ஒரு தன்னிறைவுள்ள இராணு சக்தியாகிவிடும்.

இரஸ்சியா உக்கிரேன் போர் ஆரம்பித்த காலப்பகுதியிலேயே யாழ்களத்தில் விவாதிக்கப்பட்ட அந்த போரின் விளைவால் ஏற்ப்ட போகும் புதிய உலக ஒழுங்கு விவாதத்தில் கூறப்பட்ட விடயங்கள் அப்போது வெறும் சதிக்கோட்பாடாக பார்க்கப்பட்டது, 10 வருடங்கள் கூட இல்லை 4 வருடத்திலேயே உலக நிகழ்வுகள் கள யதார்த்தினை சொல்கிறது.

ஐரோப்பாவில் இரஸ்சியாதான் ஒரு பலச்சமனிலை, அது வரலாற்று ரீதியாக தவிர்க்க முடியாத உணமை.

இரஸ்சியாவின் நீண்ட கால நோக்கம் ஐரோப்பிய பிராந்தியத்தில் பிராந்திய வல்லரசாக தன்னை நிலை நிறுத்துவதே, அதற்கு சமமான ஒரு இரஸ்சிய முதன்மையான ஒரு ஐரோப்பிய பாதுகாப்பு பொறிமுறையினை உருவாக்கவேண்டும் என்பதே, கடந்த காலத்தில் நேட்டோ - இரஸ்சிய கவுன்சில் போன்றவையோ அல்லது சாதாரண கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பாணியிலான நேட்டோ உறுப்புரிமையினை இரஸ்சியா விரும்பவில்லை.

இரஸ்சியாவின் எதிர்ப்பார்ப்பு நேட்டோ பொறிமுரையில் சாத்தியமாகாது என கருதியமையாலேயே 2008 இல் ஐரோப்பாவிற்கு தனியான பாதுகாப்பு பொறிமுறை வேண்டும் என புட்டின் கூறினார், தற்போது மேற்கு ஐரோப்பிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகளே கோருகிறார்கள்.

ஐரோப்பிய பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரத்தில் இரஸ்சியா தவிர்க்க முடியாத சக்தி, தற்போது அமெரிக்காவிற்கு ஐரோப்பாவில் இருக்கும் துருப்பு சீட்டு இரஸ்சியா எனும் நிலையினை ஐரோப்பிய நாடுகள் வலிந்து உருவாக்கி விடக்கூடாது.

ஐரோப்பிய ஒன்றியம் தனது அதிகாரப்பேணலிற்காக இரஸ்சியாவினை எதிர்த்தரப்பில் வைத்தால் ஐரோப்பாவிற்குத்தான் நட்டம், அல்லது மேற்கு எப்போதும் கனவு காணும் பொறிஸ் எல்சின் போன்ற ஒரு ஆட்சியாளர் ஒரு தற்கால தீர்வு மட்டுமே.

இந்த பல்துருவ உலக ஒழுங்கில் ஐரோப்பிய நாடுகள் கூட்டணியில் இரஸ்சியா முதன்மை நாடாக வருவது இயல்பான விடயம், ஆனால் இரஸ்சியாவினை தவிர்த்து ஐரோப்பா; இரஸ்சியா அற்ற ஐரோப்பா என தற்போது போல செயற்பட்டால் அது ஒரு நெருக்கடி நிலையினை தொடர்ந்து காணப்படும் அது ஐரோப்பிய நலனிற்கு நீண்டகால அளவில் நல்லதல்ல.

ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுடன் ஒரு நெருக்கமான தொடர்பாடலை உருவாக்க முனைகிறது(அண்மைய நடவடிக்கைகள்), இது ஆசிய பிராந்திய வல்லரசான சீனாவிற்கான ஒரு பலச்சமனிலையினை மட்டும் பேணுவதற்கல்ல, இரஸ்சியாவினை பலவீனமாக்குவதற்கும், இனிவரும் காலங்களில் ஊசலாடும் பலமான இந்தியாதான் பிராந்தியத்தில் அரசியல் ரீதியான செல்வாக்கினை செலுத்த போகிறது.

இதனாலேயே நாங்களும் இந்தியாவுடன் எமது தொடர்புகளை அதிகப்படுத்தவேண்டும் என கருதுகிறேன், இந்தியா ஆசிய பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத சக்தி, ஐரோப்பாவில் உக்கிரேன் தன்னை ஒரு ஊசலாடும் பலமாக (இந்தியா போல்) மாற்றினால் நிலமை மாறலாம் ஆனால் உக்கிரேன் வேண்டுமென்றே தவறினை செய்வது போல இருக்கிறது (அதற்கு பின்னால் ஏதாவது உள்குத்து இருக்கலாம்).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.