Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

கடந்த வாரம் ஒரே அமைப்பாகவுள்ள கட்சிகள்

பிரிந்து நின்று கனடிய புதிய தூதுவரை சந்தித்துள்ளனர்.

1)சுமந்திரனும் சிவஞானமும் ஒரு சந்திப்பு

2) அதே கட்சியைச் சேர்ந்த சிறிதரன் ஒரு சந்திப்பு

3)சுரேஸ் பிரேமசந்திரன் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் தனியாக சந்திப்பு.

4) முன்னணியுடன் சந்திப்பே இல்லை.

வெளிநாட்டு தூதுவருடன் குடும்ப பிரச்சனை பற்றியா பேசுகிறார்கள்.

மக்களுக்காக பேசுவதானால் ஒன்றாக பேசலாமே?

images?q=tbn:ANd9GcTYKE1puA0FY6W1H3OC9Ej

சுமந்திரனுக்கு.... இப்போ ஒரு பதவியும் இல்லாததால்....

ஏற்பட்ட அவமானத்தை மறைக்க... நானும் "ரவுடி" தான் என்ற நினைப்பில் செய்கின்ற வேலைகளை எல்லாம்... அவருக்கு எதிராகவே திரும்புகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்தில் தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த களமிறங்கிய அரியநேந்திரனை கட்சியில் இருந்து வெளியேற்றிவிட்டு, தனது பதவிக்காக சங்கோடு புதிய உறவை ஆரம்பித்திருக்கிறார் சுமந்திரன்.

  • Replies 144
  • Views 6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    இதுவும் நீங்கள் நம்பக்கூடியதுதான். ஆனால், புலிகளுக்கெதிரான உங்களது நிலைப்பாட்டில் இருந்து சற்று வெளியே வந்து, (அதாவது 2009 இற்கு முன்னர் நீங்கள் இருந்த நிலைப்பாடு) இதனைச் சிந்தித்தீர்கள் என்றால், புலி

  • ஒரு எடுகோளுக்கு, ஐலண்ட் இஸ்லாமியராகவே இருக்கட்டும் (எவருக்கும் அவரது இன அடையாளம் தெரியாது என்பதே உண்மை). இப்படி ஒரு இனவாதக் கருத்து? அதற்கு பல விருப்பக் குறிகள் வேற! இது போன்ற கருத்துக்களை உங்களைப்

  • நான் முதலில் உங்கள் கருத்தினை சரியாக பார்க்கவில்லை, நீங்கள் குறிப்பிட்ட கோடாரிக்காம்பு என்பதன் மூலம் தமது இனத்தினை தாமே கருவறுப்பவர்களுக்கெதிராக பயன்படுத்தப்படுவதனை ஜஸ்ரின் தவறாக புரிந்து கொண்டாரோ

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

ஆதாரம் இருக்கா அல்லது புலவர் எழுதினாலே அது ஆதாரம்தான் என்கிறீர்களா? 😂

ஆனால் இவை எல்லாம் புலிகள் மீது நான் உட்பட பலரும் முன்வைத்த விமர்சனங்கள்தான்.

ஆனால் இதை வைத்து புலிகளை அழித்தமைக்கு மகிந்தவுக்கு நன்றி சொன்னார் என்றோ அல்லது மேற்கு நாடு தன்னிடம் புலிகளை அழித்த பின் தீர்வு தருவதாக சொன்னார்கள் என சொன்னார் என்றோ நிறுவ முடியாது.

2008, 2009 நேரம் சம்பந்தரிடம் மட்டும் அல்ல, போரை நிறுத்த சொல்லி இலண்டன் உட்பட வெளிநாட்டில் சந்தித்த இடங்களில் கூட,….

போரை நிறுத்த முயல்கிறோம், இல்லை எனில் போரின் பின் தக்க தீர்வை கொடுக்க வலியுறுத்துவோம் என பலரிடம் கூறினார்கள்.

மன்மோகன் சிங் நேரடியாகவே இலங்கை விஜயத்தில் 13+ கொடுப்பதாக சொன்னீர்களே என வலியுறுத்தினார் என வாசித்த நியாபகம்.

அதைத்தான் சம்பந்தர் சொல்லியுள்ளார்.

புலவர் இனிப் போய் விடுவார்! வேறெங்காவது மீண்டும் வருவார், கேள்வி கேட்டால் மீண்டும் போய் விடுவார்😎!

"சிவப்பு, பச்சை, நாவல்" என்று கலர் அடித்து விளையாடும் "முதிர்ந்தும் வளராத" பெரிசுகளுக்குரியவை தான் இது போன்ற திரிகள்😂! உண்மையா, திரிப்பா என்று உரசிப் பார்த்து வாசகர்களுக்கு தகவல் தெளிவை உருவாக்கும் பதிவர்களுக்குரியவையல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள சுமந்திரன் லவ்வர்ஸ்சின் இப்போதைய நிலை👇

(சு)மந்திரம் இது..

(சு)மந்திரம் தினம் தோறும்..

மனம் மோதும்ம்ம்ம்..

(பா)ஆவி நீ எமில்..

துரோகி நீ இதை...

கேட்டு வர வேண்டும்ம்ம்ம்ம்..

(சு)மந்திரம் இது

(சு)மந்திரம் தினம் தோறும்...

மனம் மோதும்..

மந்திரம் இது..

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பிகு

எம்பி இல்லாவிட்டாலும் தமிழ் தேசிய அரசியலில் சவுண்டு பார்ட்டியாக இன்னமும் சுமன் உள்ளார் என்பதை இந்த திரியே காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நியாயம் said:

என்னய்யா, எங்கள் அரசியல் பனங்காய்கள் கடைசியில் புதிய உலக ஒழுங்கின் பிரகாரம் நாங்கள் இலங்கையில் இருந்து பிரிந்து உலக வல்லரசு இந்தியாவுடன் இணைந்திடலாம் என கதையை முடித்து வைக்க போகின்றார்களோ? எதற்கும் முப்பது நாட்களில் கிரமமாக கிந்தியில் கதைப்பது எப்படி என்கிற புத்தகத்திற்கு ஒரு ஓடர் கொடுப்போம்.

12 hours ago, vasee said:

இந்தியா, இலங்கை எல்லாம் வெறும் லேபிள்தான், உரிமைகள்தான் முக்கியம்.

பிச்சைக்கார இலங்கையுடன் ஒட்டிக்கொண்டிருபதனை விட ட்ரம்பிடம் காசு வாங்கிக்கொண்டு அமெரிக்காவுடன் சேர்ந்தால் (கிறீன்லாந்து பேரம்) நல்ல தனிமனித உரிமை, பொருளாதார சுதந்திரம் எல்லாம் இருக்கும் (இந்தியா என லோக்கலா சிந்திக்காமல் இன்ரனெசனாலா போகலாமே), பிச்சைக்கார இலங்கையுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் இருக்கிறதையும் பிடுங்கி விடுவார்கள்🤣.

20.           இந்தியாவின் அரசியல், பொருளாதார பங்களிப்புகளைப் பற்றி உங்கள் பார்வை என்ன? 

இந்தியா இந்தப் பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான நாம் இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது. 

இந்தியா என்றைக்குமே உலக வல்லரசாக முடியாது என்பதே தற்போதய யதார்த்தம் .

இது புதிய உலக ஒழுங்கின் பிரகாரம் இல்லை என நினைக்கிறேன்.

எனது நண்பர் ஒருவர் இருந்தார் (இப்போதும் இருக்கிறார் என நம்புகிறேன்), அவர் பேச்சுக்கள் அவரரது தோற்றத்திற்கும் எதிரும் புதிருமாக இருக்கும், அவர் 90 களின் பிற்பகுதிகளில் கூறினார் புலிகள் இல்லாவிட்டால் இலங்கை (அவர் கூறிய வார்த்தையினை அப்படியே கூற முடியாது) பாலியல் தொழில் செய்பவரது வீட்டில் இருக்கும் வெத்திலை பெட்டி போன்றது என்றார்.

அது தற்போது கண்முன்னால் நடைமுறையாகி நிற்கின்றததனை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.

4 வகையான போர் விளைவுகளை கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொள்கிறார்கள் என கூறுகிறார்கள்.

  1. அரசியல் ரீதியான வெற்றி

  2. போர் முடக்கம்

  3. வெற்றி மோசமான விளைவுகளுடன்

  4. அற்புதமான வெற்றி

புலிகளை தோற்கடித்ததன் மூலம் இலங்கை பெற்ற வெற்றி 3 ஆவது வகை அதன் பின்விளைவுகள் தற்போது புலிகள் இல்லாத நிலை ஏற்படுத்திய வெற்றிடம் இலங்கையில் பல சக்திகள் தலையீடு உறுதி செய்யப்பட்டுள்ளது (இது ஒரு ஆச்சரியமான பலச்சமனிலையின் பண்பாக இருக்கின்றது).

இலங்கை இதிலிருந்து என்றும் வெளியேற முடியாது (இலங்கை அரசியல் பொருளாதார ரீதியாக பிச்சைக்கார நிலையிலிருந்து).

இந்த நிலையினை இலங்கை மாற்றமுடியுமா?

முடியும்! ஆனால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மதிப்பளிக்கப்பட்டு உரிமைகள் வழங்கி சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு ஒரே சக்தியான நாடாக கட்டியமைத்தால் மட்டுமே சாத்தியம், மகா வம்ச சிங்கள மேலாதிக்க எண்ணத்தில் இருக்கும் இலங்கையால் அது சாத்தியமல்ல.

இந்தியாவினை பொறுத்தவரை இலங்கை ஒரு நேர வெடிகுண்டு (உடைந்த அயல் தேசம்) எந்த ஒரு நாடும் தனது அயல் நாடு ஒரு உடைந்த தேசமாக இருக்க விரும்பாது அதனால் அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எப்போதும் இருக்கும்.

அதனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்விற்கு இந்தியா கடும் அழுத்தத்தினை இலங்கை மேல் பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலையினை தவிர்க்கவே முடியாது.

இங்கு மகாவம்ச சிங்கள மேலாதிக்கத்தின் தோல்வி (ஆனால் இலங்கையின் தோல்வி எப்போதோ நடந்து விட்டது அதன் பெறுபேறுகள்தான் தற்போது நிகழ்கிறது) உறுதிப்படுத்தாத முறையில் (சுய நிர்ணயம், கூட்டாட்சி போன்றவற்ற வாசகங்களை தவிர்த்து ஆனால் அதே உரிமைகளை) அதிகாரப்பகிர்வு எனும் பதத்திற்கு தமிழர்கள் வரவேண்டும், அதனால் தமிழ் தேசியம் என கூறுவதனை தவிர்ப்பதன் மூலம் (மகா வம்ச சிங்கள மேலாதிக்கத்தின் முகத்தினை காக்க) பிரச்சினையினை இலகுவாக தீர்க்கலாம் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

யாழ்கள சுமந்திரன் லவ்வர்ஸ்சின் இப்போதைய நிலை👇

(சு)மந்திரம் இது..

(சு)மந்திரம் தினம் தோறும்..

மனம் மோதும்ம்ம்ம்..

(பா)ஆவி நீ எமில்..

துரோகி நீ இதை...

கேட்டு வர வேண்டும்ம்ம்ம்ம்..

(சு)மந்திரம் இது

(சு)மந்திரம் தினம் தோறும்...

மனம் மோதும்..

மந்திரம் இது..

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பிகு

எம்பி இல்லாவிட்டாலும் தமிழ் தேசிய அரசியலில் சவுண்டு பார்ட்டியாக இன்னமும் சுமன் உள்ளார் என்பதை இந்த திரியே காட்டுகிறது.

இறுதியில் கண் விழிக்கும் போது முன்னே நிற்கும் எருமை இருக்கிறதே? அது தான் cherry on the top! சான்சே இல்லை😂!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, vasee said:

ட்ரம்பிடம் காசு வாங்கிக்கொண்டு அமெரிக்காவுடன் சேர்ந்தால் (கிறீன்லாந்து பேரம்) நல்ல தனிமனித உரிமை, பொருளாதார சுதந்திரம் எல்லாம் இருக்கும் (இந்தியா என லோக்கலா சிந்திக்காமல் இன்ரனெசனாலா போகலாமே),

நல்ல வேளை லோக்கலா சிந்திப்பது என்று தமிழ்தேசியம் பேசும் சீமானுடன் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்று போகலாமே என்று ஆசைபாடாமல் விட்டீர்களே 😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல வேளை லோக்கலா சிந்திப்பது என்று தமிழ்தேசியம் பேசும் சீமானுடன் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்று போகலாமே என்று ஆசைபாடாமல் விட்டீர்களே 😃

தமிழ் தேசியம் தவிர்க்க முடியாத உண்மை, அந்த யதார்த்த புரிதல் எனக்கும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல வேளை லோக்கலா சிந்திப்பது என்று தமிழ்தேசியம் பேசும் சீமானுடன் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்று போகலாமே என்று ஆசைபாடாமல் விட்டீர்களே 😃

44 minutes ago, vasee said:

தமிழ் தேசியம் தவிர்க்க முடியாத உண்மை, அந்த யதார்த்த புரிதல் எனக்கும் உள்ளது.

On 30/1/2026 at 19:18, கிருபன் said:

1.  இலங்கையில் மிகப் பெரிய பிரச்சினைகளாகத் தொடரும் இனப்பிரச்சினை,  பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்குத் தீர்வைக் காண்பது எப்படி? இதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு ஆட்சியாளர்களால் முடியாதிருப்பது ஏன்?

எந்தவொரு பிரச்சனையும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், இந்தத் தீவில் சிங்கள பெளத்தர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் உலகிலும், ஏன் இந்தப்பிராந்தியத்திலும், அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்கள். எனவே அவர்களுக்கு இயல்பாகவே ஒரு பீதி – உளவியல் ரீதியான அச்சம் – இருக்கிறது. அரசியல் தீர்வு விடயத்தில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால்தான் அவர்கள் பௌத்தத்திற்கும் சிங்களத்திற்கும் முதலிடத்தைக் கொடுக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். பொருளாதார விடயங்களிலும் தங்களை மற்றவர்கள் விழுங்கி விடுவார்கள் என்ற பயம் உள்ளது, இது சுயாதீனமாக முடிவுகள் எடுப்பதைத் தடுக்கிறது. ஆட்சியாளர்கள், மக்களுக்கு அவர்களது பயம் நீங்கும்படியான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மாற்றமும் தீர்வும் முன்னேற்றமும் நிகழும். 

பெரும்பான்மை பெளத்த சிங்களவர்கள் கூட இந்த தமிழ்தேசியம் தொடர்பான பீதியினாலேயே தமிழ் மக்களின் மீதான இன அடக்குமுறையாக சுமந்திரன் கூற முற்படுகிறார், இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை, இலங்கையில் உள்ள அனைத்து சிறுபான்மை மக்களும் நேரடியான அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகின்றவர்களாகவே இருக்கின்றார்கள்.

அதிகார பரவலாக்கமோ அரசியல் சட்டமைப்பு சீர்திருத்தமோ நாட்டை பிரிக்கும் என நினைப்பது ஒரு முட்டாள்தனம் அதற்கான சூழலை இந்த அடக்குமுறைகளாலேயே உருவாக்குகிறார்கள்.

தமிழ் தேசியம் என்பது தவிர்க்க முடியாதது என்பது போலவே உணருகின்றேன், ரே டாலியோ இன் மாறுகின்ற உலக ஒழுங்கினை கையாள்வது எனும் புத்தகத்தில் கூறியுள்ள பண்புகளினடிப்படையில் தமிழ் தேசியத்தின் பண்புகள் பல இருக்கின்றது அதனால் எதிர்காலத்தில் அவ்வாறான ஒரு நிலை ஏற்படலாம்.

அது ஒரு வெறும் நிகழ்தகவு போன்ற விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2026 at 01:14, goshan_che said:

விடுதலைபுலிகள் அழிவதற்கு வெளிநாடுகளுக்கும், மேற்குக்கும், இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறுவேற்றி, அதன் மூலம் 13 பிளஸ் தமிழருக்கு கொடுக்கபடின், அவர்களின் அழிவை ஒரு நல்ல விடயம் என கருதலாம் என சம்பந்தர் மேலே கூறி உள்ளார்.

புலிகள் அழிந்தால் தீர்வு கிடைக்கும் என்று கூறியவர் எந்தத்தீர்வையும் பெற்றுத்தரவில்லை. தனக்கு மட்டும்ழும்பில் அரசசெலவழல் வீட்டைப்பெற்றுக்கொண்டார்.

On 1/2/2026 at 20:15, Justin said:
  1. அரசியல் சுதந்திரம்: 2014-ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில், 2009 மே மாதத்திற்குப் பிறகு (யுத்தம் முடிவுக்கு வந்த பின்) அரசும் சரி, எதிர்க்கட்சியினரும் சரி, நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி, இன்று சுதந்திரமாகச் செயல்பட முடிவதற்குக் காரணம் "விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று இல்லாததுதான்" என்று அவர் தெரிவித்தார்.

  2. கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை: தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) கூட விடுதலைப் புலிகளின் பிடியில் (clutches of the LTTE) இருந்து தற்போது சுதந்திரமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த நேர்காணலில் ஒப்புக்கொண்டார்.

இது புலிகளின் அழிவு சம்பந்தருக்கு கவலையைக் கொடுக்க்கவில்லை.

2009 உச்ச கட்டப் போரின் போது இந்தியாவில் இருந்த சம்பந்தருக்கு தொலைபேசி எடுத்த போது தொலைபேசியைத் தூக்கிவைத்து விட்டு சம்பந்தர் தூங்கியதாக அவரது கட்சியைச்சேர்ந்த முன்னாள் எம்பி சந்திரகாந்தன் சந்திரநேரு சொல்லியது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, புலவர் said:

2009 உச்ச கட்டப் போரின் போது இந்தியாவில் இருந்த சம்பந்தருக்கு தொலைபேசி எடுத்த போது தொலைபேசியைத் தூக்கிவைத்து விட்டு சம்பந்தர் தூங்கியதாக அவரது கட்சியைச்சேர்ந்த முன்னாள் எம்பி சந்திரகாந்தன் சந்திரநேரு சொல்லியது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்

அது சரி புலவர் யுத்தம் உச்சக்கட்டதில இருக்கேக்க ஏன் சம்பந்தருக்கு தொலை பேசி எடுத்தாங்க? பேச்சுவார்ததை உச்சக்கட்டதில இருகேக்க சம்பந்தரை தொடர்பு கொள்ள முயற்சித்து அவர் வராமல் இருந்திருந்தா அவரை கோவிக்கறதில ஒரு லொஜிக் இருக்கு. பேச்சுவார்ததை வேண்டாம் என்று யுத்தத்துக்கு போட்டு யுத்தம் உச்சக்கட்டத்தில இருக்கேக்க அந்தாள் வந்து என்ன என்ன செய்ய. அவர் யுத்த பயிற்சி எடுகேல்லயே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

புலிகள் அழிந்தால் தீர்வு கிடைக்கும் என்று கூறியவர் எந்தத்தீர்வையும் பெற்றுத்தரவில்லை. தனக்கு மட்டும்ழும்பில் அரசசெலவழல் வீட்டைப்பெற்றுக்கொண்டார்.

நான் சம்பந்தர் சுயநலமி இல்லை என எங்கும் கூறவில்லையே புலவர்.

1 hour ago, புலவர் said:

இது புலிகளின் அழிவு சம்பந்தருக்கு கவலையைக் கொடுக்க்கவில்லை.

2009 உச்ச கட்டப் போரின் போது இந்தியாவில் இருந்த சம்பந்தருக்கு தொலைபேசி எடுத்த போது தொலைபேசியைத் தூக்கிவைத்து விட்டு சம்பந்தர் தூங்கியதாக அவரது கட்சியைச்சேர்ந்த முன்னாள் எம்பி சந்திரகாந்தன் சந்திரநேரு சொல்லியது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்

இதையும் யாரும் மறுக்கவில்லையே புலவர்.

ஆனந்த சங்கரி போல் புலிகள் மீது ஒவ்வாமை உடைய ஒருவர்தான் சம்பந்தர், புலிகள் பலமாக இருந்த போது பல்லை கடித்து கொண்டு அவர்களுக்கு கட்டுப்பட்டார். நாங்கள் அரசியலை பார்க்கிறோம், நீங்கள் நாம் சொல்வதை மட்டும் செய்யுங்கள் என அவமானப்படுத்தியதையும் பொறுத்து கொண்டார்.

  1. இன ஒற்றுமையை பேணல்

  2. பதவியை தக்க வைத்தல்

  3. உயிரை தக்கவைத்தால் (ஹிண்ட், ஹிண்ட் - அமிர், யோகேஸ், நீலன், சரோஜினி…..)

இதில் ஒன்றோ பலதோ அவர் அப்போ அப்படி நடக்க காரணமாகியது.

ஆனால் நாம் விவாதிப்பது சம்பந்தர்-புலிகள் இடையான உறவின் தன்மையை பற்றி அல்ல.

நாம் விவாதிப்பது

  1. புலிகளை அழித்தமைக்கு சம்பந்தர் மகிந்தவுக்கு நன்றி கூறினார்.

  2. மேற்குநாடுகள் தன்னிடம் புலிகளை அழித்த பின் தீர்வு தருவோம் என உறுதி கூறினர், என சம்பந்தன் கூறினார்.

ஆதாரம் இருந்தால் போட்டு விடுங்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che இப்படி ஆதாரம் கேட்டு ரோதனை பண்ணக் கூடாது. நான் பாடினால் அது கவிதை. நான் வரைந்தால் அது ஓவியம். அப்படி ஏற்று கொள்ளப் பழகவேணும். அதுவே நல்ல பிள்ளைக்கு அழகு. நாங்களும் அப்படி தான் வளர்ந்தனாங்கள். அது தான் எங்க மரபு, பாரம்பரியம், கலாசாரம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

புலிகள் அழிந்தால் தீர்வு கிடைக்கும் என்று கூறியவர் எந்தத்தீர்வையும் பெற்றுத்தரவில்லை

இன்னொரு விடயம்.

மேலே எழுதபட்டுள்ளது மிக தந்திரமாக தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏதுவாக வரலாற்றை திரிக்கும் முயற்சி.

புலிகள் அழிய முன்னோ, அழிந்து கொண்டிருக்கும் போதோ…புலிகள் அழிந்தால் தீர்வு கிடைக்கும் என சம்பந்தர் கூறியதில்லை.

சங்கரி, டக்லஸ், கருணாதான் அப்படி கூறியவர்கள்.

சம்பந்தர் சொன்னது…

புலிகள் அழிந்த பின்,

அவர்களின் அழிவுக்கு பின் தீர்வை தருவோம் என சொன்னோர்…

சொன்னபடி தந்தால்…புலிகளின் அழிவை ஒரு நல்ல விடயமாக கருதலாம் என்பதே.

இரெண்டுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு.

இந்தியாவில் போய் போனை ஆப் பண்ணி போட்டு குப்புற படுத்தது - இதை அத்தனை எம்பிகளும் செய்தார்கள். சிலர் இந்தியாவில், சிலர் இலண்டனில், ஈழவேந்தன் கனடாவில், சிலர் கொழும்பில்….

குப்புறபடுத்தார்கள்…எங்கே என்பதுதான் வித்தியாசம்.

பொன்னரும், சந்திரநேருவும், குதிரை கஜனும்…போரை நிறுத்த சொல்லி ஜெனிவாவில் தீக்குளிக்கவும் இல்லை, இலண்டனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் இல்லை.

இவ்வளவு ஏன், முடிவு நெருங்கியதை அறிந்த பின், புலிகளின் தளபதிகள் கூட குடும்பங்களை ஆமி, நேவியிடம் அனுப்பி வைத்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புலவர் said:

புலிகள் அழிந்தால் தீர்வு கிடைக்கும் என்று கூறியவர் எந்தத்தீர்வையும் பெற்றுத்தரவில்லை. தனக்கு மட்டும்ழும்பில் அரசசெலவழல் வீட்டைப்பெற்றுக்கொண்டார்.

இது புலிகளின் அழிவு சம்பந்தருக்கு கவலையைக் கொடுக்க்கவில்லை.

2009 உச்ச கட்டப் போரின் போது இந்தியாவில் இருந்த சம்பந்தருக்கு தொலைபேசி எடுத்த போது தொலைபேசியைத் தூக்கிவைத்து விட்டு சம்பந்தர் தூங்கியதாக அவரது கட்சியைச்சேர்ந்த முன்னாள் எம்பி சந்திரகாந்தன் சந்திரநேரு சொல்லியது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்

புலிகள் இல்லாமல் போனது சம்பந்தருக்கு ஏன் கவலையைக் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? சம்பந்தர் போன்ற ஆயுத வழியை எட்ட நின்று பார்த்த அரசியல் வாதிகளும், சில சமயங்களில் எட்டி நின்றாலும் சுடப் பட்ட சிவ சிதம்பரம் போன்றவர்களும் புலிகள் இல்லாமல் போனால் ஒப்பீட்டளவில் நல்லதென நினைத்திருப்பர் தான். இந்த நினைப்பின் தோற்றுவாய் சம்பந்தரிடம் இல்லை, அமிர், யோகேஸ்வரன் சுடப் பட்ட காலத்தில் இருக்கிறது.

இதன் பிறகு எதை எதிர்பார்த்து, யார் சம்பந்தருக்கு தொலை பேசி எடுத்தார்களாம்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஈழவேந்தன் கனடாவில்

22 ஆசனங்கள் கூட்டமைப்பிற்குக் கிடைத்த போது "பின் கதவால்" (தேசியப் பட்டியலின் இன்னொரு பெயர்!) புலிகளால் உள்ளே கொண்டு வரப் பட்டவர் தற்போது அமரராகி விட்ட ஈழவேந்தன்.

சம்பந்தர் நாட்டிலேயே இருந்து செய்யக் கூடிய விடயங்களைச் செய்து கொண்டிருந்தார், இதற்குப் பயன் இருந்ததா இல்லையா என்பது வேறான ஒரு விவாதம்.

அமரர் ஈழவேந்தன், பா. உக்களுக்கான விசேட சலுகைகளைப் பாவித்து உலகம் சுற்றினார். "உலகம் சுற்றும், விடு முறையில் நிற்கும் பா.உவுக்கு விடுதி எதற்கு?" என்று சிங்கள அரசு பறித்துக் கொள்ள முயன்ற போது விடுதிக்காகவும் போராடினார். பின்னர் "அளவுக்கதிகமாக விடுமுறை எடுத்துக் கொண்டார்" என்று பதவியைப் பறித்த போது ஈழவேந்தன் கனடாவில் செற்றிலாகி விட்டிருந்தார்.

சம்பந்தன் காலமாகிய திகதிக்கு அண்மையாக இவரும் காலமானார்.

"சம்பந்தர் இறந்தது நல்லது" எனக் கொண்டாடிய புலம் வாழ் தேசிய வீரர்கள் பலர் ஈழவேந்தன் கனடாவில் பரத நாட்டிய அரங்கேற்றங்களில் ஆற்றிய வீராவேச உரைகள் காரணமாக அவரைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எங்கள் ஆட்களுக்கு, பேச்சுத் தான் முக்கியம்! வாய் மட்டும் இருந்தால் எங்கள் புலத் தமிழர்கள் பலரைப் பேய்க்காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த சம்பந்தர் ஈழவேந்தன் ஒப்பீடு!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

மேற்குநாடுகள் தன்னிடம் புலிகளை அழித்த பின் தீர்வு தருவோம் என உறுதி கூறினர், என சம்பந்தன் கூறினார்.

பொங்கலுக்கு தீர்வு வரும். தீபாவளிக்கு தீர்வு வரும் என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் தீர்வு வரும் என்று தமிழ்மக்களைப் பேய்க்காட்டினார்.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்பதவி சம்பந்தருக்கு புலிகளின் ஆதரவோடு கொடுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தர் புலிகளுக்கோ தனக்கு வாக்களித்த மக்களுக்கோநன்றி கெட்டதனமாக நடந்து கொண்டார். அதன் விளைவு அவர் இறந்த பிறகு அவருக்கு தமிழ்மக்கள் கொடுத்த ?மரியாதையில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

புலிகள் இல்லாமல் போனது சம்பந்தருக்கு ஏன் கவலையைக் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? சம்பந்தர் போன்ற ஆயுத வழியை எட்ட நின்று பார்த்த அரசியல் வாதிகளும், சில சமயங்களில் எட்டி நின்றாலும் சுடப் பட்ட சிவ சிதம்பரம் போன்றவர்களும் புலிகள் இல்லாமல் போனால் ஒப்பீட்டளவில் நல்லதென நினைத்திருப்பர் தான். இந்த நினைப்பின் தோற்றுவாய் சம்பந்தரிடம் இல்லை, அமிர், யோகேஸ்வரன் சுடப் பட்ட காலத்தில் இருக்கிறது.

இதன் பிறகு எதை எதிர்பார்த்து, யார் சம்பந்தருக்கு தொலை பேசி எடுத்தார்களாம்?

இதைத் தானே இங்கே எழுதுபவர்கள் சொல்கிறார்கள். சம்பந்தர் தமிழர் நலன் சார்ந்தன்று புலிகள் அழிக்கப்படவேண்டும் என்று பழிவாங்கும் விதமாக மட்டுமே நடந்து கொண்டார் என்று. இவ்வாறு சம்பந்தர் பழி வாங்கும் மனநிலையில் இருக்கிறார் என்பதையும் புலிகள் அறிந்திருந்து அவரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இருக்கவும் முடியுமல்லவா??

எப்ப பார் புலி வாந்தி....

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தமிழர் நலன் தவிர்த்து புலிகளைப் பழி வாங்கும் படி நடந்து கொண்டோர் டக்கி, கருணா, ஆனந்த சங்கரி ஆகியோர் இருக்கிறார்கள். சம்பந்தர் அப்படியான வகை அல்ல! ஆனால் "தமிழர் நலன் என்பதே புலிகளை அப்படியே சிரம் மேல் காவுவது மட்டும் தான்!"😎 என்ற புரிதலுடையோருக்கு, சம்பந்தர், சுமந்திரன், சாணக்கியன், நீலன் என எல்லோருமே தமிழர் விரோதிகள் தான்!

1 hour ago, புலவர் said:

பொங்கலுக்கு தீர்வு வரும். தீபாவளிக்கு தீர்வு வரும் என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் தீர்வு வரும் என்று தமிழ்மக்களைப் பேய்க்காட்டினார்.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்பதவி சம்பந்தருக்கு புலிகளின் ஆதரவோடு கொடுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தர் புலிகளுக்கோ தனக்கு வாக்களித்த மக்களுக்கோநன்றி கெட்டதனமாக நடந்து கொண்டார். அதன் விளைவு அவர் இறந்த பிறகு அவருக்கு தமிழ்மக்கள் கொடுத்த ?மரியாதையில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

ஒரு துரும்பையும் நகர்த்தாமல், ஏனைய கட்சிக் காரர்களை "கொள்கை எதிரிகள்" என்று மட்டும் திட்டிக் கொண்டு ஒற்றை சீற்றைப் பேணி வரும் கஜேந்திரகுமார் எவருக்கும் துரோகம் செய்யாமல் அப்படியே பா.உ வாக நிலைத்து ஓய்வு பெறுவார்😇!

  • கருத்துக்கள உறவுகள்

How India diplomatically handled TNA during the war (2006–2009)

1. India’s core strategic position

By 2006, India had three fixed positions:

  1. LTTE must be eliminated
    (after Rajiv Gandhi assassination – 1991)

  2. Sri Lanka must remain territorially united
    (no separatism precedent in South Asia)

  3. Tamil political rights only after the war

So India’s policy was essentially:

“No politics during war. War first, politics later.”

2. How India dealt with TNA leadership

India maintained formal contact with TNA, but:

  • Discouraged protests

  • Discouraged international lobbying

  • Discouraged war-time political agitation

  • Advised patience and restraint

Indian diplomats consistently told TNA leaders:

Any political agitation would complicate the military objective
and help the LTTE narrative.

So:

  • TNA was allowed to exist

  • But not allowed to mobilize politically

This created a controlled silence.

3. Why India restrained TNA

(a) Avoid Tamil Nadu political explosion

If:

  • TNA protested loudly

  • Civilian casualties were highlighted internationally

Then:

  • Tamil Nadu politics would explode

  • Indian central government would face internal crisis

So:

Silencing Tamil political space in Sri Lanka = internal stability in India

(b) Prevent LTTE diplomatic revival

India feared:

If TNA becomes politically active →
LTTE gains international sympathy →
Pressure grows to stop war →
LTTE survives.

So:

No Tamil politics until LTTE eliminated

(c) Strategic military coordination

India provided:

  • Radar intelligence

  • Naval intelligence

  • Satellite data

  • Maritime tracking

For this:

India needed Sri Lankan government's full confidence.

Allowing Tamil political agitation would damage that trust.

How Tamil political space was deliberately frozen until 2009

This was not accidental. It was structured political freezing.

1. Elimination of Tamil civil political life

From 2006–2009:

  • No meaningful elections in North-East

  • No political mobilization allowed

  • No protests permitted

  • No international advocacy permitted

  • Civil society crushed

Result:

Tamil population politically paralysed

2. TNA forced into survival mode

TNA MPs:

  • Could not visit constituencies safely

  • Could not mobilize people

  • Could not speak openly

They were:

Reduced to symbolic representatives

Their role became:

“Wait until war ends”

3. India’s diplomatic messaging to TNA

India consistently communicated:

  • Don’t internationalize the issue

  • Don’t escalate civilian casualty claims

  • Don’t destabilize Colombo

  • Political process will come later

So:

TNA became politically dormant by design.

What happened after 2009?

Once LTTE was destroyed:

India expected:

  • 13th Amendment implementation

  • Provincial devolution

  • Power sharing

  • Political reconciliation

What Sri Lanka did:

  • Militarization of North-East

  • Land occupation

  • Delayed elections

  • No real devolution

  • Constitutional stalling

Result:

Tamil political space remained frozen even after war.

This led to:

  • Massive Tamil disillusionment

  • Loss of trust in India

  • Political vacuum

  • Radical diaspora activism

Strategic miscalculation by India

India believed:

Military victory → political reform

But Sri Lanka used:

Military victory → total political dominance

India then:

  • Lost leverage

  • Lost credibility among Tamils

  • Allowed China to gain strategic space

Summary (Plain truth)

India actively restrained Tamil political mobilisation
TNA was diplomatically silenced
Tamil political space was frozen deliberately
Promised political settlement never truly came

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

பொங்கலுக்கு தீர்வு வரும். தீபாவளிக்கு தீர்வு வரும் என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் தீர்வு வரும் என்று தமிழ்மக்களைப் பேய்க்காட்டினார்.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்பதவி சம்பந்தருக்கு புலிகளின் ஆதரவோடு கொடுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தர் புலிகளுக்கோ தனக்கு வாக்களித்த மக்களுக்கோநன்றி கெட்டதனமாக நடந்து கொண்டார். அதன் விளைவு அவர் இறந்த பிறகு அவருக்கு தமிழ்மக்கள் கொடுத்த ?மரியாதையில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

உலக சூழ்நிலை தனி ஈழத்துக்கு சாதகமாக இல்லை என்று நன்றாக தெரிந்து கொண்டும், உலக நாடுகள் எல்லாவற்றையும் பகைத்து தமிழீழம் அடையலாம் என்று மக்களை பேக்காட்டி, பல லட்சக்கணக்கான தமிழ் மக்களின உயிர்களை பலியிட்டதை விட சம்பந்தர் ஒன்றும் பெரிதாக மக்களை பேய்காட்டவில்லை புலவர்.

இன்று தாயகத்தில் வாழும் மக்களிடன் கேட்டால், யுத்தம் முடிந்தது தமக்கு மகிழ்சசி என்றே கூறுவர். இல்லையெனில், இப்போதும் தினமும் 10-15 எமது மக்கள் எந்த பிரயோசனமும் இன்றி இறந்து கொண்டே இருந்திருப்பர். நாமும் இனம் சிறுக சிறுக அழிவதைப் பற்றி கவலைப்படாமல் கிடைக்கும் சிறு சிறு வெற்றிகளை வைத்து, “ தூரம் அதிகம் இல்லை, இதோ தெரியுது எதிரி எல்லை என்று மக்களைப் பேக்காட்டி பாட்டுப்பாடி நினைவு தினங்களைக் அனுஷடித்துக்கொண்டிருந்திருப்போம். யுத்தம் முடிந்ததால் புதிய புதிய நினைவுதினங்கள் உருவாக்காமல் விட்டதென்பது நம் அனைவருக்கும் நிம்மதியே.

எதிரிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி இன்றைய நிலைக்கு காரணமான சூழ்நிலையை உருவாக்கிய பல தவறான அணைகுமுறைகளை எம்மவர்களே ஏற்படுத்தியதை மறைக்க இப்படி தனி நபர்களை மீது பழி சுமத்தி அரசியல் பிழைப்பு நடத்தலாமேயொழிய அதை விட தமிழ் மக்கள் விடயத்தில் எதுவுமே முன்னேற்றம் காணப்போவதில்லை.

துரோகிகளாக சிலரை முத்திரை குத்தி அவர்களை வில்லன்களாக கட்டமைத்து அரசியல் நடத்து. அது போதாதெனில் நம்மவர்களுக்குளேயே சிலரை துரோகியாக முத்திரை குத்து. இதுவே தமிழ் தேசிய அரசியல் தாரக மந்திரம். இதை விட மேலதிகமாக அறிவு பூர்வமாக சிந்திக்ககும் அளவுக்கு தமிழ் தேசியர்களுக்கு………

ஆனால் தமிழ் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்துவதில் தாயக புலம் பெயர் தேசியர் காட்டில் என்றும் மழை தான். அதை வெற்றிகரமாக செய்கிறார்கள். அதையாவது வெற்றிகரமாக செய்கிறார்களே என்று மகிழ்சசியடைய வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, island said:

இன்று தாயகத்தில் வாழும் மக்களிடன் கேட்டால், யுத்தம் முடிந்தது தமக்கு மகிழ்சசி என்றே கூறுவர். இல்லையெனில், இப்போதும் தினமும் 10-15 எமது மக்கள் எந்த பிரயோசனமும் இன்றி இறந்து கொண்டே இருந்திருப்பர்.

இலங்கைக்கு ஒவ்வொரு வருடம் சென்று வருகின்ற வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் மட்டும் என்னவாம் அவர்களுக்கும் மகிழ்ச்சி தான்.

அதில் ஒரு பகுதியினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படையாகவே காட்டி கொள்வார்கள். மற்ற பகுதியினர் அரசியல் கருதி மகிழ்ச்சியை வெளியில் காட்டி கொள்ளாமல் ஏதோ காணி வீடு உறவினரை பார்க்க போய் வருவதாக சொல்லி கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

தமிழர் நலன் தவிர்த்து புலிகளைப் பழி வாங்கும் படி நடந்து கொண்டோர் டக்கி, கருணா, ஆனந்த சங்கரி ஆகியோர் இருக்கிறார்கள். சம்பந்தர் அப்படியான வகை அல்ல! ஆனால் "தமிழர் நலன் என்பதே புலிகளை அப்படியே சிரம் மேல் காவுவது மட்டும் தான்!"😎 என்ற புரிதலுடையோருக்கு, சம்பந்தர், சுமந்திரன், சாணக்கியன், நீலன் என எல்லோருமே தமிழர் விரோதிகள் தான்!

ஒரு துரும்பையும் நகர்த்தாமல், ஏனைய கட்சிக் காரர்களை "கொள்கை எதிரிகள்" என்று மட்டும் திட்டிக் கொண்டு ஒற்றை சீற்றைப் பேணி வரும் கஜேந்திரகுமார் எவருக்கும் துரோகம் செய்யாமல் அப்படியே பா.உ வாக நிலைத்து ஓய்வு பெறுவார்😇!

சாகும்வரை தனது சுயநலம் ஒன்றையே கொள்கையாக கொண்டு வீட்டுவசதி உட்பட அனைத்து அரச சலுகைகளையும் செத்த பின்பும் திருப்பி தர மறுத்த சுயநல அரசியல்வாதியை புலிகளுடன் ஒப்பிட்டு எழுதிவிட்டு நிம்மதியாக நித்திரை செய்ய முடியும் என்றால் தம்மையும் தமது குடும்பங்களையும் கொண்ட கொள்கைக்காய் ஈய்ந்து உயிர் கொடுத்தவர்களை சாகும்வரை குரல் கொடுத்தே நான் சாவேன்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புலவர் said:

பொங்கலுக்கு தீர்வு வரும். தீபாவளிக்கு தீர்வு வரும் என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் தீர்வு வரும் என்று தமிழ்மக்களைப் பேய்க்காட்டினார்.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்பதவி சம்பந்தருக்கு புலிகளின் ஆதரவோடு கொடுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தர் புலிகளுக்கோ தனக்கு வாக்களித்த மக்களுக்கோநன்றி கெட்டதனமாக நடந்து கொண்டார். அதன் விளைவு அவர் இறந்த பிறகு அவருக்கு தமிழ்மக்கள் கொடுத்த ?மரியாதையில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

புலவர், என்ன ஐயா இது?

மாட்டை பற்றி எழுத சொன்னால், மரத்தை பற்றி கூட எழுதாமல், மரம் நிற்கும் வளவில் என்ன களைகள் வளர்கிறது என எழுதுகிறீர்கள்😂.

சம்பந்தர் எப்படி பட்ட நன்றிகெட்ட மனிதர் என்பதற்கு நான் ஆதாரம் கேட்கவில்லை.

நான் கேட்டது என்ன என்ற நினைவுபடுத்தல் மறுபடியும்.

நாம் விவாதிப்பது

  1. புலிகளை அழித்தமைக்கு சம்பந்தர் மகிந்தவுக்கு நன்றி கூறினார்.

  2. மேற்குநாடுகள் தன்னிடம் புலிகளை அழித்த பின் தீர்வு தருவோம் என உறுதி கூறினர், என சம்பந்தன் கூறினார்.

ஆதாரம் இருந்தால் போட்டு விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கைக்கு ஒவ்வொரு வருடம் சென்று வருகின்ற வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் மட்டும் என்னவாம் அவர்களுக்கும் மகிழ்ச்சி தான்.

அதில் ஒரு பகுதியினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படையாகவே காட்டி கொள்வார்கள். மற்ற பகுதியினர் அரசியல் கருதி மகிழ்ச்சியை வெளியில் காட்டி கொள்ளாமல் ஏதோ காணி வீடு உறவினரை பார்க்க போய் வருவதாக சொல்லி கொள்வார்கள்.

சாதாரண தமிழ் பொதுமக்கள் மட்டுமல்ல தேசிய தூண்களாக காட்டிக்கொண்ட பலரும் மகிழ்சசியாக வடகிழக்குகு மட்டுமல்ல தென்னிலங்கை சுற்றுலாவுக்கும் சென்று வந்ததை நானே பார்த்துள்ளேன் . ஏதோ சம்பந்தர் மட்டுமே மகிழ்சசியடைந்ததாக றீல் விடுகிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

@புலவர் பெருமானுக்கு உதவி செய்யலாமே எனும் நல்நோக்குடன் தமிழ்நெட்டில் தேடுதல் வேட்டை மேற்கொண்டேன். மறைந்த சம்மந்தர் அவர்கள் 2009 ஜனவரி தொடக்கம் சம்மந்தப்பட்ட பதிவுகளை பார்வையிட்டேன். போர் நிறைவடைந்து பத்து வருடங்களின் பின்னரும் மனுசன் பாவம் தமிழர்கள் சம்மந்தப்பட்ட விடயங்களில் நன்றாகவே குரல் கொடுத்துள்ளது. ஆக ஒரே ஒரு இடத்தில்தான் சறுக்கல் தெரிகின்றது. ரணில் கையுக்குள் இலங்கை தேசியகொடியை திணித்து உயர்த்திக்காட்டிய சம்பவம்தான் அது.

விடுதலை புலிகள் அமைப்பு போராளிகள் - மாவீரர்கள் தியாகங்களிற்கு ஈடு, இணை இல்லை. சாதாரண தமிழ் அரசியல்வாதிகளினால் அவர்களிற்கு இணையாக பணியாற்ற முடியாது அவர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பமுடியாது என்பதுதான் யதார்த்தம். இதற்கு சம்மந்தர், சுமந்திரரை குறைசொல்லி என்ன செய்வது?

முன்னைய வீச்சில் போராட்டம் நகரவேண்டும் என்றால் முன்னைய ஒழுக்கம், தியாகம், கட்டுக்கோப்பு, உயிர்க்கொடை எல்லாம் அவசியம். ஆனால், இப்போது அடிப்படை கட்டமைப்பே இதற்கு இல்லையே!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.