Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2026 at 18:46, vasee said:

10% குறைவாக வரும் என நினைத்தேன் இந்த பிரச்சினை இன்னும் 2% வீதத்தினை குறைத்து ஒரு 7% வாக்குகள் வரும் என நினைக்கிறேன், இது ஒரு நிசே போன்ற குறிப்பிட்ட பிரிவு பெரும்பாலும் அதிக மாற்றம் இருக்காது, நிழலி கூறும் 8% வரும் என்பதாகவே நானும் கருதுகிறேன்.

நாம் தமிழர், விஜய் கட்சிகள் பெரிய அளவில் வாக்குகளை எடுக்காது அதே நேரம் பெருமளவில் வாக்குகளை இழக்காது, அவர்களுக்கென ஒரு கூட்டம் இருக்குமென நினைக்கிறேன்.

அதிமுக பாஜகா கூட்டணி உறுதி, திமுக கொங்கிரஸ் கூட்டணி உறுதி என கூறி திரிசா விஜய் கூட்டணி உறுதி (ரிவிகே இனை திரிசா + விஜய் + கூட்டணி) என நகைசுவைக்காக கூறுகிறார்கள், ஆனால் விஜய் கூட்டணி பற்றி தெரியவில்லை.

இன்றைய லயலா காலேஜ் கருத்து கணிப்பு பார்தீர்களா?

தவெக 17%. 50 சீட். 2ம் பெரிய கட்சி என சொல்லி உள்ளனர்.

@நிழலி @ஏராளன் @விளங்க நினைப்பவன் @கந்தப்பு @ரஞ்சித்

  • Replies 174
  • Views 10.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    என்னை கூப்பிட்டீர்களா சார்?

  • குமாரசாமி
    குமாரசாமி

    அப்பு விஜய்! உனக்கேன் தேவையில்லாத அரசியல் வேலை? என்ன திறமை இருக்கிறது உன்னிடம்? நடிகன் என்று பார்த்தால் எந்த நடிப்புமே பெரிதாக எடுபடவில்லை.மூன்று பாடல் மூன்று சண்டை என பொழுது போக்கு படங்களில் நடித்தவன

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய்யை அண்ணா என்று பின்பற்றும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் எது நடந்தாலும் என்றும் விஜய்யின் ரசிகர்களே. விஜய்யை ஒரு மாற்று சக்தியாக நினைக்காதவர்களுக்கும் இது ஒரு விடயம் அல்ல. ச

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2026 at 01:08, vasee said:

இந்த விவகாரம் (விஜயின் குடும்ப விவகாரம்) த வெ க இனை தேர்தலில் பாதிக்கும் ஒரு விடயமாக உருவெடுத்துள்ளதா? உங்கள் கருத்து என்ன?

ஆம். கண்டிப்பாக். பாதிக்கும். விஐய். முதல்வர். கதிரையில். அமர. முடியாது. என்னு. உறுதியாக. கூறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இன்றைய லயலா காலேஜ் கருத்து கணிப்பு பார்தீர்களா?

விஜய்யின் மனைவியாக நாங்கள் இருப்போமே என்கின்ற வெறித்தனமான இரசிகர்கள் கூட்டம் மாறாது

  • கருத்துக்கள உறவுகள்
On 9/3/2026 at 13:16, goshan_che said:

ஓம்…

இன்னும் திமுக கூட்டணியில் எந்த கட்சி என்ன தொகுதி என்பதும், அதிமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்டுகள் என்பதே முடிவாகவில்லை. Long way to go.

நாடாளுமன்ற தேர்தல் கேள்விகள் போல இவையும் ஒருவரின் தமிழக அரசியல் அறிவை நுணுக்கமாக சோதிக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்.

ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். - விகடன்

  • கருத்துக்கள உறவுகள்
On 15/3/2026 at 01:19, goshan_che said:

இன்றைய லயலா காலேஜ் கருத்து கணிப்பு பார்தீர்களா?

தவெக 17%. 50 சீட். 2ம் பெரிய கட்சி என சொல்லி உள்ளனர்.

@நிழலி @ஏராளன் @விளங்க நினைப்பவன் @கந்தப்பு @ரஞ்சித்

சென்ற நத்தார் விடுமுறைக்கு இந்தியா சென்று வந்தவர்களின் கருத்துக்கள் படி வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் விஜய்க்கு வாக்களிக்கவுள்ளதாக சொன்னதாக சொல்லியிருந்தார்கள். இளைஞர்கள் பலர் அவருக்கு ஆதரவு இருப்பதாகவும், திமுகவின் குடும்ப ஆட்சிக்கு மாற்று விஜய் என்றும் சொன்னதாக சொன்னார்கள். 50 வயதுக்கு மேற்ப்பட்ட பலர் திமுகவுக்கே ஆதரவாகவும் திமுகதான் பிஜேபியை தமிழகத்தில் ஊடுருவாகாமல் தடுக்கும் என்றும் சொன்னதாக சொன்னார்கள்.

மே 4 ஆம் திகதி உண்மையான முடிவு தெரிந்துவிடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கந்தப்பு said:

ஆம்… நான் கதைத்த பலரும் இப்படித்தான் சொன்னார்கள்.

டெல்லி விசாரணையின் பின் எவரையும் சந்திக்காமல் இரவே சென்னை திரும்பியுள்ளார் விஜை.

எனவே பிஜேபி கூட்டணி என திமுகதான் புரளி கிளப்பி உள்ளது போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று IANS நடத்திய கருத்து கணிப்பில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 40 % வரை பெற்று வெற்றி பெறும் என்றும் திமுக 38 % விஜய் கட்சி 15 % வரை என்றும் தெரிவித்துள்ளது.

https://www.oneindia.com/chennai/tamil-nadu-election-poll-pre-poll-survey-who-will-win-the-elections-matrize-predictions-out-8028131.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு விஜய்!

உனக்கேன் தேவையில்லாத அரசியல் வேலை?

என்ன திறமை இருக்கிறது உன்னிடம்?

நடிகன் என்று பார்த்தால் எந்த நடிப்புமே பெரிதாக எடுபடவில்லை.மூன்று பாடல் மூன்று சண்டை என பொழுது போக்கு படங்களில் நடித்தவன் நீ.சமூகத்திற்கு நல்லதை சொன்ன கதைப்படங்களும் இல்லை. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை என்ற படங்கள் பாடல்களுக்காவே ஓடியவை.கில்லி திரைப்படம் கூட பிரகாஜ்ராஜின் நடிப்பிற்க்காகவும் அவரின் வசனங்களுக்காகவும் திரிஷா கவர்ச்சிக்காகவும் பாடல்களுக்காவும் ஓடியவை என சொல்கிறார்கள்.

உங்களது சமகால நடிகரான அஜித்.👈

அவர் ஒவ்வொரு படங்களுக்கும் எடுக்கும் முயற்சிகளை பார்.கமலகாசனைப்போல் அவரும் நடிப்பு அரக்கன்.அஜித்திற்கு ரசிகர் மன்றம் இல்லையாகினும் தன்னை சந்திக்க வரும் ரசிகளிர்களிடம் பண்பாகவும் அன்பாகவும் கட்டுப்பாடாகவுமே நடந்து கொள்கிறார்.ஒரு சம்பவத்தில் அவரது ரசிகர் விசில் அடித்ததிற்கே கண்டிப்பான பார்வையை காட்டியவர்.அவர் நடிகர் என்ற வட்டத்தை விட்டு வெளி வந்து உலகளாவிய ரீதியிலும் கார் பந்தய போட்டியில் முன்னணி வகிக்கின்றார்.குடும்பம் பிள்ளைகள் என மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார்.அந்த மன நிலையும் நடிகர் விஜய் ஆகிய உங்களுக்கு அறவே இல்லை.

பிள்ளைகள் தனி வழி. மனைவி தனியே.சொந்த பிள்ளையின் பட்டமளிப்பு விழாவிற்கூட போகவில்லை. அப்படி இருக்கிறது உங்கள் குடும்ப பாசம்.ஒருவேளை நீங்கள் நடித்த அந்த கலியாண எக்ரிமென்ட் படம் போல் வாழ்க்கையாய் இருக்குமோ?😋சினிமா வசனங்களை உங்கள் அரசியலுக்காக எழுதி வைத்து அரசியல் மேடைகளில் படிக்கின்றீர்கள்..இது உங்களிடம் சொந்தமாக எதுவுமே இல்லை என்பதை காட்டுகின்றது.சினிமாவில் வரும் முதல்வன் போல் நிஜத்திலும் அவசரப்பட்டு முதல்வராக வர நினைக்கின்றீர்கள்.😂

நீங்கள் நடிகன் என்ற முறையில் அஜித்தை பார்த்தாவது குடும்பவாழ்க்கை என்னவென்பதை பார்த்து திருந்தியிருக்கலாம்.பெற்ற பிள்ளை தனியே பட்டமளிப்பு விழாவில்....தந்தையோ ரகசிய காதலியுடன் ஒரே வர்ண உடையுடன் உல்லாச கண்கவர் காட்சியளிப்புகள். இந்த சித்திரத்தில் நாட்டுக்கு தலைவன் ஆக ஆசை.😛

அரசியல் என்று பார்த்தால்...அங்கேயும் பூச்சியம் தான். இரண்டரை மணி நேர திரைப்படத்தில் வரும் காட்சி கானங்கள் வரலாறுகள் போல் நிஜ அரசியலிலும் நிஜ வாழ்க்கையிலும் காட்சிப்படுத்த முனைகின்றீர்கள்.மீண்டும் சொல்கிறேன் சினிமாவில் வரும் முதல்வன் போல் நிஜத்திலும் அவசரப்பட்டு முதல்வராக வர நினைக்கின்றீர்கள்.😎

நீங்கள் அரசியலுக்கு வந்து எவ்வளவு காலம்? உங்கள் அரசியல் அனுபவங்கள் என்னென்ன? அரசியலுக்காக பொது மக்களை சந்தித்து பேசியிருக்கின்றீர்களா? பத்திரிக்கையாளர் சந்திப்புகளையாவது நடத்தியிருக்கின்றீர்களா? பனையூரில் இருந்து கொண்டு பத்து பனங்கொட்டையாவது தானம் செய்திருக்கின்றீர்களா? அல்லது தாட்டிருக்கின்றீர்களா? உங்கள் அரசியல் பிரச்சாரத்தை காணவந்த மக்கள், ரசிகர்கள் பலியாகி இருக்கின்றார்களே. உங்களுக்காக வந்தவர்களை ஒரு தடவையாவது போய் சந்தித்திருக்கின்றீகளா? நீங்கள் அந்த மரண பழியை வேறு யார் மேலேயும் சுமத்தினாலும் உங்களை பார்க்க வந்தவர்கள் தானே பலியாகியிருக்கின்றார்கள்.உலக சம்பிரதாயத்திற்காகவது போய் நலம்/துக்கம் விசாரித்திருக்க வேண்டும். அதை செய்யாமல் நாட்டுக்கு தலைவன் எனும் சிந்தனை கோமாளித்தனத்தை விட மோசமானது.

உங்களை சுற்றி வரும் ரசிகர்கூட்டங்களை வைத்து கணக்கு பண்ணும் விஜய் அவர்களே! நீங்கள் எப்படியோ அதே போல் தான் உங்கள் ரசிகர் பட்டாளமும் வாக்காள பெருமக்களும் என்பதை அவர்களது பகிரங்க பேட்டிகள் சொல்லி நிற்கின்றன. பார்க்கவே கேவலமாக இருக்கின்றது.பொது வெளியில் மனைவி படுக்கை என போட்டி போட்டுக்கொண்டு பேட்டி கொடுக்கின்றார்கள்.

இதுதான் உங்கள் முதல்வர் கனவுக்கான சித்திரங்கள்....!

சிபிஐ க்கு விசாரணைக்கு சென்றுவிட்டு வெளியே வரும்போது ஏதோ விண்வெளியில் ஆராய்ச்சி செய்து விட்டு வந்தவர் போல் கொடுக்கும் பூமழை பிலிங்.....அது விஜய் அண்ணாவால் மட்டுமே முடியும்.அத பார்த்து ஒட்டோ ஓட்டுனர்களும் டாக்ஸி றைவர்களும் பூரித்து பொங்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

இன்னும் வரும்

  • கருத்துக்கள உறவுகள்
On 14/3/2026 at 22:19, goshan_che said:

இன்றைய லயலா காலேஜ் கருத்து கணிப்பு பார்தீர்களா?

தவெக 17%. 50 சீட். 2ம் பெரிய கட்சி என சொல்லி உள்ளனர்.

அது உண்மையான லாயெலா கருத்துக்கணிப்பில்லையாமே ...?

அந்த கருத்துக்கணிப்பை விட்ட ஆள் கடும் திருவன் ...இவர் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வார் இல்லையென்றால் நான் என் நிறுவனத்தை மூடிவிட்டு போவேன் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்று அடிச்சுவிட்டு இன்றுவரை கடையை சாத்தாமல் போணி பண்ணுகிறார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அது உண்மையான லாயெலா கருத்துக்கணிப்பில்லையாமே ...?

அந்த கருத்துக்கணிப்பை விட்ட ஆள் கடும் திருவன் ...இவர் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வார் இல்லையென்றால் நான் என் நிறுவனத்தை மூடிவிட்டு போவேன் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்று அடிச்சுவிட்டு இன்றுவரை கடையை சாத்தாமல் போணி பண்ணுகிறார்

ஓம். முன்பும் இந்த அமைப்பு தமது இல்லை என கல்லூரி சொன்ன நியாபகம்.

அண்ணாமலை விடயம் மட்டும் அல்ல, அதற்கு முன்பும் பலது பிழைத்துள்ளது.

எல்லாருமே கருத்து திணிப்புத்தான்.

தவிர மக்கள் நல்லா பொய் சொல்லுவார்கள் பூத்துக்குள் போய் தமது கைவரிசையை காட்டுவார்கள்😂

3 hours ago, குமாரசாமி said:

அப்பு விஜய்!

உனக்கேன் தேவையில்லாத அரசியல் வேலை?

என்ன திறமை இருக்கிறது உன்னிடம்?

நடிகன் என்று பார்த்தால் எந்த நடிப்புமே பெரிதாக எடுபடவில்லை.மூன்று பாடல் மூன்று சண்டை என பொழுது போக்கு படங்களில் நடித்தவன் நீ.சமூகத்திற்கு நல்லதை சொன்ன கதைப்படங்களும் இல்லை. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை என்ற படங்கள் பாடல்களுக்காவே ஓடியவை.கில்லி திரைப்படம் கூட பிரகாஜ்ராஜின் நடிப்பிற்க்காகவும் அவரின் வசனங்களுக்காகவும் திரிஷா கவர்ச்சிக்காகவும் பாடல்களுக்காவும் ஓடியவை என சொல்கிறார்கள்.

உங்களது சமகால நடிகரான அஜித்.👈

அவர் ஒவ்வொரு படங்களுக்கும் எடுக்கும் முயற்சிகளை பார்.கமலகாசனைப்போல் அவரும் நடிப்பு அரக்கன்.அஜித்திற்கு ரசிகர் மன்றம் இல்லையாகினும் தன்னை சந்திக்க வரும் ரசிகளிர்களிடம் பண்பாகவும் அன்பாகவும் கட்டுப்பாடாகவுமே நடந்து கொள்கிறார்.ஒரு சம்பவத்தில் அவரது ரசிகர் விசில் அடித்ததிற்கே கண்டிப்பான பார்வையை காட்டியவர்.அவர் நடிகர் என்ற வட்டத்தை விட்டு வெளி வந்து உலகளாவிய ரீதியிலும் கார் பந்தய போட்டியில் முன்னணி வகிக்கின்றார்.குடும்பம் பிள்ளைகள் என மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார்.அந்த மன நிலையும் நடிகர் விஜய் ஆகிய உங்களுக்கு அறவே இல்லை.

பிள்ளைகள் தனி வழி. மனைவி தனியே.சொந்த பிள்ளையின் பட்டமளிப்பு விழாவிற்கூட போகவில்லை. அப்படி இருக்கிறது உங்கள் குடும்ப பாசம்.ஒருவேளை நீங்கள் நடித்த அந்த கலியாண எக்ரிமென்ட் படம் போல் வாழ்க்கையாய் இருக்குமோ?😋சினிமா வசனங்களை உங்கள் அரசியலுக்காக எழுதி வைத்து அரசியல் மேடைகளில் படிக்கின்றீர்கள்..இது உங்களிடம் சொந்தமாக எதுவுமே இல்லை என்பதை காட்டுகின்றது.சினிமாவில் வரும் முதல்வன் போல் நிஜத்திலும் அவசரப்பட்டு முதல்வராக வர நினைக்கின்றீர்கள்.😂

நீங்கள் நடிகன் என்ற முறையில் அஜித்தை பார்த்தாவது குடும்பவாழ்க்கை என்னவென்பதை பார்த்து திருந்தியிருக்கலாம்.பெற்ற பிள்ளை தனியே பட்டமளிப்பு விழாவில்....தந்தையோ ரகசிய காதலியுடன் ஒரே வர்ண உடையுடன் உல்லாச கண்கவர் காட்சியளிப்புகள். இந்த சித்திரத்தில் நாட்டுக்கு தலைவன் ஆக ஆசை.😛

அரசியல் என்று பார்த்தால்...அங்கேயும் பூச்சியம் தான். இரண்டரை மணி நேர திரைப்படத்தில் வரும் காட்சி கானங்கள் வரலாறுகள் போல் நிஜ அரசியலிலும் நிஜ வாழ்க்கையிலும் காட்சிப்படுத்த முனைகின்றீர்கள்.மீண்டும் சொல்கிறேன் சினிமாவில் வரும் முதல்வன் போல் நிஜத்திலும் அவசரப்பட்டு முதல்வராக வர நினைக்கின்றீர்கள்.😎

நீங்கள் அரசியலுக்கு வந்து எவ்வளவு காலம்? உங்கள் அரசியல் அனுபவங்கள் என்னென்ன? அரசியலுக்காக பொது மக்களை சந்தித்து பேசியிருக்கின்றீர்களா? பத்திரிக்கையாளர் சந்திப்புகளையாவது நடத்தியிருக்கின்றீர்களா? பனையூரில் இருந்து கொண்டு பத்து பனங்கொட்டையாவது தானம் செய்திருக்கின்றீர்களா? அல்லது தாட்டிருக்கின்றீர்களா? உங்கள் அரசியல் பிரச்சாரத்தை காணவந்த மக்கள், ரசிகர்கள் பலியாகி இருக்கின்றார்களே. உங்களுக்காக வந்தவர்களை ஒரு தடவையாவது போய் சந்தித்திருக்கின்றீகளா? நீங்கள் அந்த மரண பழியை வேறு யார் மேலேயும் சுமத்தினாலும் உங்களை பார்க்க வந்தவர்கள் தானே பலியாகியிருக்கின்றார்கள்.உலக சம்பிரதாயத்திற்காகவது போய் நலம்/துக்கம் விசாரித்திருக்க வேண்டும். அதை செய்யாமல் நாட்டுக்கு தலைவன் எனும் சிந்தனை கோமாளித்தனத்தை விட மோசமானது.

உங்களை சுற்றி வரும் ரசிகர்கூட்டங்களை வைத்து கணக்கு பண்ணும் விஜய் அவர்களே! நீங்கள் எப்படியோ அதே போல் தான் உங்கள் ரசிகர் பட்டாளமும் வாக்காள பெருமக்களும் என்பதை அவர்களது பகிரங்க பேட்டிகள் சொல்லி நிற்கின்றன. பார்க்கவே கேவலமாக இருக்கின்றது.பொது வெளியில் மனைவி படுக்கை என போட்டி போட்டுக்கொண்டு பேட்டி கொடுக்கின்றார்கள்.

இதுதான் உங்கள் முதல்வர் கனவுக்கான சித்திரங்கள்....!

சிபிஐ க்கு விசாரணைக்கு சென்றுவிட்டு வெளியே வரும்போது ஏதோ விண்வெளியில் ஆராய்ச்சி செய்து விட்டு வந்தவர் போல் கொடுக்கும் பூமழை பிலிங்.....அது விஜய் அண்ணாவால் மட்டுமே முடியும்.அத பார்த்து ஒட்டோ ஓட்டுனர்களும் டாக்ஸி றைவர்களும் பூரித்து பொங்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

இன்னும் வரும்

விஜை நடித்த படங்களில் பலதும் மொக்கைதான் அதிலும் அதி மொக்கையான படம் என்றால் பத்திரிதான். வசீகரா நல்ல நகைச்சுவை.

ஓம் சக்தி பராசக்தி

திமுக ஒரு தீய சக்தி

ஓம் சக்தி பரா சக்தி

சஞ்சைக்கு திரிஷா சித்தி

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் விஜயின் கட்சிக்கு 10% இற்கும் குறைவான வாக்குகளே வரலாம் என நினைத்தேன், விஜையின் கட்சி கொள்கை எதுவும் இருப்பது போல எனக்கு தெரியவில்லை (கட்சிக்கென ஏதாவது கொள்கை உண்டா என தெரிந்தவர்கள் கூறவும்), அதனால் மக்கள் கண்டு கொள்ளமாட்டார்கள் என நினைத்தேன், ஒரு காணொளியில் விஜையின் பெயரை கூறியது அரங்கிலிருந்த மக்கள் ஆர்ப்பரிப்பதனை பார்க்கும் போது விஜையிற்கு வாக்குகள் கணிசமாக கிடைக்கும் போல உள்ளது.

ஆனால் அந்த கூட்டம் ஒரு இளையவர்கள் அதிகமாக உள்ள கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

ஆரம்பத்தில் விஜயின் கட்சிக்கு 10% இற்கும் குறைவான வாக்குகளே வரலாம் என நினைத்தேன், விஜையின் கட்சி கொள்கை எதுவும் இருப்பது போல எனக்கு தெரியவில்லை (கட்சிக்கென ஏதாவது கொள்கை உண்டா என தெரிந்தவர்கள் கூறவும்),

😂

நீங்கள் நினைத்தது சரி

விஜய் இரசிகையின் பேட்டி ஒன்று பார்த்தேன் ஏன் அவர் தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவாவின் பதில் விஜய் அண்ணாவின் X படம் (எனக்கு பெயர் நினைவில்லை) பார்த்தேன் அதில் இருந்து அவர் முதலமைச்சரா வந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வார் என்று முடிவு எடுத்தேன்.

6 hours ago, goshan_che said:

எல்லாருமே கருத்து திணிப்புத்தான்.

தவிர மக்கள் நல்லா பொய் சொல்லுவார்கள் பூத்துக்குள் போய் தமது கைவரிசையை காட்டுவார்கள்😂

உண்மை

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

ஓம். முன்பும் இந்த அமைப்பு தமது இல்லை என கல்லூரி சொன்ன நியாபகம்.

அண்ணாமலை விடயம் மட்டும் அல்ல, அதற்கு முன்பும் பலது பிழைத்துள்ளது.

எல்லாருமே கருத்து திணிப்புத்தான்.

தவிர மக்கள் நல்லா பொய் சொல்லுவார்கள் பூத்துக்குள் போய் தமது கைவரிசையை காட்டுவார்கள்😂

விஜை நடித்த படங்களில் பலதும் மொக்கைதான் அதிலும் அதி மொக்கையான படம் என்றால் பத்திரிதான். வசீகரா நல்ல நகைச்சுவை.

ஓம் சக்தி பராசக்தி

திமுக ஒரு தீய சக்தி

ஓம் சக்தி பரா சக்தி

சஞ்சைக்கு திரிஷா சித்தி

சங்கீதா. தேர்தலில். விசய். எதிர்த்து. போட்டி. இட்டால். ? யார். வெல்லுவார்கள். ? விசாய். விவாரத்துக்கு. மறுத்தால். முடிவு. என்ன. மாதிரி. ?

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2026 at 00:56, குமாரசாமி said:

இன்னும் வரும்

காணவில்லை. வளருமா.? வருமா. ? தமிழ்நாட்டில். எவன். முதல்வரால். தான். என்ன. ? நல்ல. ஆட்சி. சட்டத்தின். ஆட்சி. அமையாது. ஊழலை. அளிப்பது. ரொம்ப. கடினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kandiah57 said:

சங்கீதா. தேர்தலில். விசய். எதிர்த்து. போட்டி. இட்டால். ? யார். வெல்லுவார்கள். ? விசாய். விவாரத்துக்கு. மறுத்தால். முடிவு. என்ன. மாதிரி. ?

சங்கீதா இந்திய தேர்தலில் போட்டியிட முடியாது. மாட்டார்.

விஜை சங்கிதா சொத்து பிரிப்பில்தானாம் தகராறு, இருவரும் பிரிய ஓக்கேயாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Kandiah57 said:

காணவில்லை. வளருமா.? வருமா. ? தமிழ்நாட்டில். எவன். முதல்வரால். தான். என்ன. ? நல்ல. ஆட்சி. சட்டத்தின். ஆட்சி. அமையாது. ஊழலை. அளிப்பது. ரொம்ப. கடினம்.

தமிழ் நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ ஊழலையும் சாதிகளையும் அறவே அழிக்க முடியாது. இருந்தாலும் சீமான் தமிழ்நாட்டின் ஆட்சிக்கு வந்தால் சாதியையும் ஊழலையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சீமான் தமிழ்நாட்டின் ஆட்சிக்கு வந்தால் சாதியையும் ஊழலையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என நினைக்கின்றேன்

அதுதான் இந்த தேர்தலில் சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தினாரா😂.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

அதுதான் இந்த தேர்தலில் சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தினாரா😂.

எந்தக்கட்சி. யாரை. வேட்ப்பளாராக. நியமித்தாலும். ஏதோ. ஒரு. சாதியைச்சேர்ந்தவர்களாகத் தான். இருப்பார்கள். சாதியற்ற. வேட்ப்பாளரை. பெயரிடுங்கள். பார்ப்போம். முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

அதுதான் இந்த தேர்தலில் சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தினாரா😂.

சீமான் சாதி பார்த்து சீட்டு கொடுத்ததாக சொல்லவில்லை. செய்ததாகவும் தெரியவில்லை. அந்தந்த சாதியினர் அதிகம் வாழும் பகுதிகளை கணக்கெடுத்து வேட்பாளர்களை நிறுத்தியதாகவும் அறியமுடியவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடம் கொடுத்தது இவ்வாறு எதிராளிகளால் புனையப்படுகிறது. நிறுத்தப் பட்டிருக்கும் வேட்பாளர்கள் அனைவருக்கும் அனைத்து தமிழர்களும் சாதி மத வேறுபாடின்றி வாக்களிக்க வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் எதிர்பார்ப்பாக தான் பார்க்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இன்று திரள் நிதி கேட்டு ஒரு வீடியோ போட்டிருக்கின்றாராமே 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

எந்தக்கட்சி. யாரை. வேட்ப்பளாராக. நியமித்தாலும். ஏதோ. ஒரு. சாதியைச்சேர்ந்தவர்களாகத் தான். இருப்பார்கள். சாதியற்ற. வேட்ப்பாளரை. பெயரிடுங்கள். பார்ப்போம். முடியாது.

ஐயோ அண்ணை - சாதி பார்த்து வேட்பாளர் நிறுத்துவது என்பது இதை அல்ல.

ஒரு தொகுதியில் இன்ன சாதி அதிகம் என தெரிந்து அந்த சாதி ஆளை நிறுத்துவது.

1 hour ago, விசுகு said:

சீமான் சாதி பார்த்து சீட்டு கொடுத்ததாக சொல்லவில்லை. செய்ததாகவும் தெரியவில்லை. அந்தந்த சாதியினர் அதிகம் வாழும் பகுதிகளை கணக்கெடுத்து வேட்பாளர்களை நிறுத்தியதாகவும் அறியமுடியவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடம் கொடுத்தது இவ்வாறு எதிராளிகளால் புனையப்படுகிறது. நிறுத்தப் பட்டிருக்கும் வேட்பாளர்கள் அனைவருக்கும் அனைத்து தமிழர்களும் சாதி மத வேறுபாடின்றி வாக்களிக்க வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் எதிர்பார்ப்பாக தான் பார்க்கப்படுகிறது.

சாதிய கணக்கில் சிக்கிய சீமான்! - கட்சிக்குள் கலகலக்கும் அதிருப்தி குரல்கள்

Published:26th Oct, 2025 at 11:08 AM

சாதிய கணக்கில் சிக்கிய சீமான்! - கட்சிக்குள் கலகலக்கும் அதிருப்தி குரல்கள்

தமிழகம்

Updated:26th Oct, 2025 at 11:08 AM

தேர்தலுக்குத் தேர்தல் தைரியமாக முடிவெடுத்து தனித்துப் போட்டியிடும் சீமான், இம்முறை தனித்துப் போட்டியிட்டாலும் சாதிய கணக்குகளுக்குள் சிக்கிவிட்டதாக நாதக தம்பிகளே முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

234 தொகுதிகளில் சரிபாதி தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு, பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்துவது என மற்ற கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்படிப்பட்டவர், வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு புதிதாக வியூகம் வகுப்பதாகச் சொல்லி தனது வழக்கமான பாணியை மாற்றி மற்ற கட்சிகளைப் போல சாதிய கண்ணோட்டத்துடன் காரியமாற்றத் தொடங்கி இருப்பதாக நாதகவுக்குள் அதிருப்தி குரல்கள் எழுந்திருக்கின்றன.

இதுபற்றி நம்மிடம் பேசிய நாதக மூத்த நிர்வாகிகள் சிலர், “எந்தத் தொகுதியில் எந்தச் சாதியைச் சேர்ந்தவரை நிறுத்தினால் எளிதில் வெற்றிபெற முடியும் என்று கணக்குப் போட்டு அதற்கேற்ப வேட்பாளர்களை நிறுத்துவது மற்ற கட்சிகள் கடைபிடிக்கும் உத்தி. அதர பழசான இந்த ஃபார்முலாவை சீமானும் இப்போது கையில் எடுத்திருப்பது தான் வேதனையளிக்கிறது.

உதாரணமாக, திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோரை நிறுத்தினால் தான் ஜெயிக்க முடியும் என மற்ற கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாமிநாத ஐயர், கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த பாப்பா உமாநாத், அதிமுகவைச் சேர்ந்த ரத்தினவேல் ஆகியோர் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும் அவர்களையும் திருவெறும்பூர் மக்கள் ஜெயிக்க வைத்த வரலாறு இருக்கிறது.

‘வரலாற்றைப் படியுங்கள்’ என்று மேடைக்கு மேடை முழங்கும் சீமான், இந்த வரலாறை எல்லாம் மறந்துவிட்டு தற்போது திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ராஜேஷ் என்பவரை வேட்பாளராக நிறுத்துகிறார். அவரை புரமோட் செய்யும் விதமாக திருவெறும்பூரில் மருது சகோதரர்களுக்கு விழா எடுக்கிறார். ஆக, ‘எங்களது நோக்கம் அரசியல் மாற்றம் அல்ல... அடிப்படை மாற்றம்’ என்று முழங்கி வரும் சீமான், இப்போது அதற்கு நேர் மாறாகச் செயல்படுகிறார் என்பதற்கு இது ஒன்றே சாட்சி” என்றனர்.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு ராஜேஷிடம் கேட்டதற்கு, ‘‘ சீமான் சாதி அரசியலுக்குள் நுழைகிறார் என்பதே தவறான வாதம். 2024 மக்களவைத் தேர்தலில் நாதக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில்தான் தற்போது வாய்ப்பளிக்கப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட நான் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றேன். அதை கவனத்தில் கொண்டே இம்முறை திருவெறும்பூரில் என்னை நிறுத்த முடிவெடுத்திருக்கிறார் சீமான்.

தமிழ் சமூகத்தில் இதுவரை பிரதானமாக வாய்ப்பளிக்கப்படாத குயவர், வண்ணார், அருந்ததியர், பிராமணர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் இம்முறை தேர்தலில் வாய்ப்பளிக்க சீமான் முடிவெடுத்துள்ளார்’’ என்றார்.

https://www.hindutamil.in/amp/story/story/news/tamilnadu/voters-cast-vote-by-presenting-any-of-12-documents-including-aadhaar

இனி என்ன?

இந்த பத்திரிகை திமுக விடம் காசு வாங்கி விட்டது - அதானே உங்கள் பதில்😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் இன்று திரள் நிதி கேட்டு ஒரு வீடியோ போட்டிருக்கின்றாராமே 😃

சாப்பிடணுமே😂

  • கருத்துக்கள உறவுகள்

16 hours ago, goshan_che said:

இனி என்ன?

இந்த பத்திரிகை திமுக விடம் காசு வாங்கி விட்டது - அதானே உங்கள் பதில்😂

சீ

இந்த உழைப்பு உழைக்கும் உங்களையே நான் ஒருபோதும் இப்படி சொன்னதில்லையே. அப்புறம் எப்படி???🤣

16 hours ago, goshan_che said:

.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு ராஜேஷிடம் கேட்டதற்கு, ‘‘ சீமான் சாதி அரசியலுக்குள் நுழைகிறார் என்பதே தவறான வாதம். 2024 மக்களவைத் தேர்தலில் நாதக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில்தான் தற்போது வாய்ப்பளிக்கப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட நான் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றேன். அதை கவனத்தில் கொண்டே இம்முறை திருவெறும்பூரில் என்னை நிறுத்த முடிவெடுத்திருக்கிறார் சீமான்.

தமிழ் சமூகத்தில் இதுவரை பிரதானமாக வாய்ப்பளிக்கப்படாத குயவர், வண்ணார், அருந்ததியர், பிராமணர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் இம்முறை தேர்தலில் வாய்ப்பளிக்க சீமான் முடிவெடுத்துள்ளார்’’ என்றார்.

இதை முழுமையாக வாசித்து தான் இணைத்தீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:
  20 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் இன்று திரள் நிதி கேட்டு ஒரு வீடியோ போட்டிருக்கின்றாராமே 😃

சாப்பிடணுமே😂

large.IMG_0061.jpeg.9dafa3e0a6347c05acd4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

சீ

இந்த உழைப்பு உழைக்கும் உங்களையே நான் ஒருபோதும் இப்படி சொன்னதில்லையே. அப்புறம் எப்படி???🤣

இதை முழுமையாக வாசித்து தான் இணைத்தீர்களா??

ஆம்…உங்களுக்கு பத்திரிகா தர்மம் என்றால் என்ன என்பது தெரியவில்லை என்பது உங்கள் கேள்வியில் தெரிகிறது.

ஒரு குற்றசாட்டை எழுதினால் அதற்கு சம்பந்த பட்டவரின் பதிலையும் கேட்டு வெளியிடுவார்கள். அதனால் குற்றசாட்டு இல்லை என்றாகாது.

உழைப்பு - நான் எப்போதும் என் சொந்த உழைப்பில்தான் சாப்பிடுவேன் அண்ணை.

மற்றையவரிடம் திரட்டி அல்ல.

18 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_0061.jpeg.9dafa3e0a6347c05acd4

அதான் விஜைய வெளுக்க எண்டு சபரீசனை தேர்தலுக்கு சிலமாதம் முன்பே சந்தித்து பெட்டி வாங்கியாச்சே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.