Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மீது தாக்குதல் தீவிரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வார நிகழ்வுகளுக்கு போராளிகளும் பொதுமக்களும் கலந்து கொள்ளச் செல்வர் என்பதை அறிந்து அவர்களை இலக்கு வைத்து சிறீலங்கா வான் படையும் ஆள ஊடுருவும் அணியும் வன்னியின் பல பகுதிகளிலும் தொடர் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.

சமீபகாலமாக இராட்ச குண்டுகளையும் அதிநவீன குண்டுகளையும் விண்ணில் இருந்து கொட்டி வரும் சிறீலங்கா விமானப்படையின் அட்டூழியம் குறைய முதல் இன்று முழங்காவில் மற்றும் ஒட்டிசுட்டானில் நடத்தப்பட்ட சிறீலங்கா இராணுவத்தின் ஆள ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் ஒரு மாணவன் உட்பட இருவர் கொல்லப்பட்டு ஒருவர் காயமடைந்துள்ளார். நோயாளர் காவு வண்டி ஒன்றும் சேதமாகியுள்ளது.

இதற்கிடையே இன்று சிறீலங்கா விமானப்படை வன்னியில் நடத்திய தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டு 7 பேர் காயமடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinam.com/

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளைக் குழப்ப வேண்டும் என்ற சிந்தனையோடும், மக்கள் கூடும் இடங்களாகப் பார்த்து இலக்கு வைத்து மக்களை கொல்லும் எண்ணத்தோடும் சிறிலங்கா வான்படைகள் குண்டு வீசுகின்றன.

எச் சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்புக் குறித்து மக்கள், போராளிகள் அவதானம் தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இன்னும் அதிகமாகலாம். இந்திய வான்படை அதிகாரிகள் பலாலியில் தங்கியிருப்பதாக செய்திகள் கசியத் தொடங்கி இருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நேரடி ஒலி மற்றும் ஒளி பரப்புக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது

தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்துள்ளது. அதை சீறிலங்காவுக்கு வாரி வழங்க இந்தியா இருக்கின்றது.

தமிழ் லினக்ஸ் ஆப்பானிஸ்தான் தலிபான்களின் ;பிடியிலிருந்த போது அவர்களிற்கு எதிரான குழு ஒன்றின் தலைவர் தொலைக்காட்சி நேரடி ஒளிப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது தற்கொலை தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருந்தார்.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் நேரடி ஒலி-ஒளிபரப்புக்கள் எதிலும் பங்கு பற்றுவதில்லை. தேசியத் தலைவர் அவர்கள் 2002ம் ஆண்டு கிளிநொச்சியில் நடத்திய ஊடகர் மாநாட்டில் நேரடி ஒலி ஒளிபரப்புக்களிற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நாங்கள் சொல்லி அறிந்து கொள்ளுமளவிற்கு புலிகள் தொழில் நுட்பத்தையோ உலக நடப்பையோ அறிந்து கொள்ளாமல் இருப்பதில்லை.

நாங்கள் சொல்லி அறிந்து கொள்ளுமளவிற்கு புலிகள் தொழில் நுட்பத்தையோ உலக நடப்பையோ அறிந்து கொள்ளாமல் இருப்பதில்லை.

நிச்சயமாக!!! சிறப்பான புலனாய்வும், நெறியாள்கையும் இல்லையென்றால் புலிகள் இத்தனை தடைகளை கடந்து எங்கள் விடுதலை போராட்டத்தை முன்னகர்த்தி இருக்க முடியாது.

தமிழ் லினக்ஸ் ஆப்பானிஸ்தான் தலிபான்களின் ;பிடியிலிருந்த போது அவர்களிற்கு எதிரான குழு ஒன்றின் தலைவர் தொலைக்காட்சி நேரடி ஒளிப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது தற்கொலை தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருந்தார்.

அது செச்சின்னியாவில் எண்று நினைக்கிறேன்....!

நேரடியாக வன்னிப் பிரதேசத்தில் நுழைந்து தமது திறமைகளை வெளிப்படுத்த முடியாத இராணுவத்தினர், இலக்கற்ற இன்னுமொரு இலக்கைத் தேடியலைகின்றனர். வன்னி மீதான வான் தாக்தல்கள் நிறுத்தப்படுவதற்கு விடுதலைப்புலிகளின் வான்காப்புப் பிரிவினர் துரிதமாகச் செயற்பட வேண்டும். குண்டு வீச்சு விமானங்கள் ஒன்றாவது சுட்டு வீழ்த்தப்படும் வரை இவ்வாறான தைரியவான்கள் குண்டுகளை வீசிக்கொண்டேயிருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டையடம்பனில் நடந்த மோதலில் சிறீலங்கா இராணுவத்தின் ஆள ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டு அவரின் உடலமும் கைப்பெற்றப்பட்டுள்ளது.

DPU intruder killed, weapons seized - LTTE

[TamilNet, Sunday, 25 November 2007, 19:07 GMT]

A Sri Lanka Army (SLA) soldier was killed and the Liberation Tigers of Tamileelam (LTTE) have recovered his dead body after confronting an SLA Deep Penetration Unit (DPU) that infiltrated into LTTE territory in Kaddaiyadampan in Mannar, LTTE military officials in Mannaar told media. Two T-56 assault rifles were also seized by the Tigers.

There was no LTTE casualties in the encounter, according to the LTTE military officials.

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிச்தானில் கொல்லப்பட்டவர் அகமட் ஷா மசூத் எனும் ஒரு அமெரிக்கச் சார்பு முஜாகிடீன் போராளிக் குழுவான ஜமாயித் இச்லாமியின் தலைவர். அவர் தலிபான்களின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். செச்னியாவில் கொல்லப்பட்டவர் முன்னாள் சோவியெத் படைகளின் பிரிவுத் தளபதியும் பின்னாள் செச்னிய போராளித் தலைவருமாவார். இவரே செய்மதி தொழிநுட்ப உதவியினால் கொல்லபட்டவர்.

ஆக இவ்வாறான வசதிகளுடன் இலங்கையும் அதன் நேச நாடான இந்தியாவும் தருணம் பார்த்துக் கொண்டு இருக்கும் என்பதில் ஐய்யமில்லை. புலிகளுக்கும் இது தெரியாதது அல்ல. ஆகவே அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்....இருப்பார்கள்!

ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை தான் அதிசயமான தலைவர்கள் தோன்றுவார்கள். நாங்கள் அந்த தலைவரை அடைந்திருக்கிறோம். அவரை இழப்பதென்பது எம்மைப் பொறுத்தவரை எண்ணிப் பார்க்கமுடியாதது.

இது இன்னும் அதிகமாகலாம். இந்திய வான்படை அதிகாரிகள் பலாலியில் தங்கியிருப்பதாக செய்திகள் கசியத் தொடங்கி இருக்கின்றன.

தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்துள்ளது. அதை சீறிலங்காவுக்கு வாரி வழங்க இந்தியா இருக்கின்றது.

இந்தியாவுக்கு வேற வேலை இல்லையா தங்கள் நாட்டை பாதுகாக்க தெரியாது ஏன் வீரப்பனை பிடிக்க முடியாமல் இருந்தவை அப்போது இந்த தொழிநுட்ப்பம் எங்கே சென்றது. அடுத்தது அமெரிக்கா பிங்லாடனை கண்டு பிடிகிரன் எண்டு அப்பாவி மக்கள கொன்றது போல் எல்லாரயும் செய்ய சொல்லி அப்பாயா ஆயுதங்களை அள்ளி எறியினம்.

நானும் ஒன்றைச்சொல்லலாமா? வீரப்பனும் ஒசாமாவும் விடப்பட்டது அரசியல் காரணங்களுக்காக. அதேனேரம் இன்றுள்ள தொளிணுட்ப்பம் சட்றுவேறாணது இது பற்றி வன்னிக்குத்தெரியும். சிங்களவனுக்கு உதவ என்ர்றெ அண்டை நாட்டில் ஒரு குளு அமச்சு வச்சிரிக்கினாம் என்று தகவல் அறி ந்தவட்டாரங்கள் சொல்லீன்ம்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் குழு வேறு யாருமில்லை சூராவளி, எமது பாசத்திற்கும் நேசத்திற்குமுறிய ரோ தான்! இது இன்று நேற்றல்ல நீண்ட நெடுங்காலமாக எமக்கு ஆப்பு வைக்கத் திரிகிறது.

சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வன்னியில் இன்று இரண்டாவது நாளாகவும் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து கடும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியதில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார். 4 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 14 வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தாக்குதல் குறித்து பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தியில் கூட மக்கள் குடியிருப்புக்கள் தாக்கப்பட்டமை என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர். வழமையாக இராணுவப் பேச்சாளரின் அறிக்கைக்கு முக்கியம் கொடுக்கும் பிபிசி தமிழ் கூட சிறிது மனிதாபிமானம் காட்டி இருக்கிறது. ஆனால் சிங்களவர்கள் மாவீரர்களை நினைவு கூறக் கூட மக்களை அனுமதிக்கிறார்கள் இல்லை..!

--------------

கிளிநொச்சி தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை விமானப்படையினர் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலிலும் வேறு இரண்டு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களிலும் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றர்கள் என்றும் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளார்கள் என்றும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை கிளிநொச்சி தர்மபுரம் 8 ஆம் வட்டாரத்தில் மக்கள் குடியிருப்புக்கள் மீது நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். மேலும் 5 பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவர்களில் இருவரின் நிலை மோசமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குண்டு வீச்சு விமானம் வரும் சத்தம் கேட்டு பாதுகாப்புக்காக ஓடிச்சென்றவர்களே கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலில் 2 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாகவும், 7 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசுக்குச் சொந்தமான வேவு விமானம் ஒன்று சுற்றிப்பறந்த சிறிது நேரத்தில் குண்டு வீச்சு விமானங்கள் வந்து 8 குண்டுகளைப் போட்டுச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள் தமது மாவீரர் தின வைபபவங்கள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதனைக் குழப்பும் நோக்கத்துடன் விமானப்படையினர் வான்வழி தாக்குதல் மற்றும் கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்கள் என்பவற்றை நடத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்கிடையே,ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிய விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உரையுடன் முடிவடையும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பான மேலதிகச் செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

பிபிசி தமிழ்.

Edited by nedukkalapoovan

வன்னியில் இன்றும் அகோர வான்குண்டு வீச்சு: சிறுவன் படுகாயம்- 18 வீடுகள் சேதம்

சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வன்னியில் இன்று இரண்டாவது நாளாகவும் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து கடும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியதில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார். 4 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 14 வீடுகள் கடுமையாக சேதமடைந்தன

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.