Jump to content

முரளிதரன் 709 விக்கேற்றைப் பெற்றுவிட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் 709வது விக்கேற்றைப் பெற்றுவிட்டார். சிங்களவர்கள் மகிழ்ச்சியில் துள்ளல். சிங்களதேசத்தில் சிங்களவர்கள் வெடிகள் கொளுத்தி மகிழ்கிறார்கள். மகிந்தா விரைவில் வாழ்த்துச் செய்தியை சொல்ல இருக்கிறார். என்னால் முரளிதரன் தமிழராக இருந்தாலும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல மனம் விரும்பவில்லை. எமது மண்ணில் தினமும் கொல்லப்படும் சகோதர சகோதரிகளை நினைக்கவே மனம் செல்கிறது.

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

எனது ஆழ்ந்த அநுதாபங்களை இத்தருணத்தில் சொல்லி கொள்ள விரும்புகிறேன்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

_44274781_muraliafp203.jpg

710 விக்கெட்டுக்கள் எடுத்து முரளி அவுஸ்திரேலிய சேன் வோனின் சாதனையை முறியடித்தார். உலகில் சர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெற்றுக்கள் எடுத்த வீரன் என்ற பெருமையை தட்டிக் கொண்டார் முரளி.

வாழ்த்துக்கள் முரளி. எங்கிருப்பினும் திறமையால் வென்றவன் முரளி. சரியான கெளரவப்படுத்தல் கூட இன்றி தனது தனித்திறமையால் சாதித்த வீரர்களில் முரளியும் ஒருவன்.

சிங்களம் மகிழ்வதிலும் மனதுள் வேதனைப்படுவதையே அதிகம் காணலாம்..! முரளியும் அதை அறிவான். அதற்காக அவன் வாழா திருந்திருந்தால் இன்றைய சாதனைக்கு இடமே இருந்திருக்காது.

முரளிதரனின் சாதனைப் பட்டியல்

டெஸ்ட் போட்டிகள் - 116

மொத்த விக்கெட்டுகள் - 710

10 விக்கெட்டுகள் வீழ்த்தியது - 20

5 விக்கெட்டுகள் வீழ்த்தியது - 10

http://news.bbc.co.uk/sport1/hi/cricket/ot...nka/7123499.stm

Link to comment
Share on other sites

710 விக்கெட்டுகளை பெற்று முரளி உலக சாதனை!

_43998661_650_getty220.jpg

உலகின் சிறந்த பந்து வீச்சாளர் எனும் தகுதியை

முரளிதரன் 709வது விக்கேற்றைப் பெற்று

சேன் வோன் பெற்றிருந்த 708 விக்கெட் சாதனையை

இன்று (03.12.2007) தனது பிறப்பிடமான கண்டியில் உள்ள அஸ்கிரிய

விளையாட்டுத் திடலில் வைத்தே முறியடித்திருக்கிறார்.

இங்கிலாந்து துடுப்பாட்டக் காரரான போல் கொலிங்வூட்டின்

விக்கெட்டை உடைத்ததே முன்னைய சாதனையை முரளி முறியடித்தார்.

அதற்கு சிறிது நேரத்துக்கு பின்னர்

மற்றுமொரு விக்கெட்டை பெற்று 710 விக்கெட்டுகளை

உடைத்திருக்கிறார்.

1972 ஏப்ரல் 27ம் தேதி

கண்டி நகரில் பிறந்தார் முரளீதரன்

வாழ்த்துகள் முரளி

சோதனைகளும் வேதனைகளும் வெற்றிகளும்

மனிதனுக்கு மாறி மாறி வரும்.

காலா காலமாக

முரளியின் கனவுகள் நனவாகுவதை

அரசியல் காரணத்துக்காக

அவரை வாழ்த்தாமல் இருப்பது முறையல்ல என்றே கருதுகிறேன்.

அரசியல்வாதிகளின் வேலை

ஒரு விளையாட்டு வீரனுக்கு தேவையற்றது.

தாயகத்தில் மக்கள் இன்னல் படுகிறார்கள் என்று

நாம் விழாக்களை நிறுத்தியா வைத்திருக்கிறோம்?

அப்படி யாராவது செய்கிறோமா என்றால்??????

முரளிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக விளையாட்டு பதிவேட்டில் முத்தையா முரளீதரன் தன் தனித்திறனால் சாதனையாளனாக இடம்பெற்றிருக்கிறார். இது இவரது தனியாளுமையாலும், எதிர்ப்புகள் சவால்கள் மீறியதாக எடுத்தகாரியத்தில் கருமமே கண்ணாகி செயற்பட்டதாலும் அடையப்பெற்றிருக்கிறது. இவரது துறைசார் இச்சாதனைக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்!

இன்று உலக ஊடகங்களில் தமிழன் ஒருவரது பெயர் சாதனையாளராகப் பதியப்படுவதில் நானும் மகிழ்வுறுகிறேன்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் முரளி.பிறந்த மண்ணில் சாதனையை முறியடித்திருப்பது குறிப்பிடதக்கது.

திறமைக்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது என்பதற்கு முரளி ஒரு சான்று.

Link to comment
Share on other sites

நேற்று மதிய இடைவேளைக்கு முன் சேன் வார்ணேயின் சாதனையை முரளி சமன் செய்தார். பின்பு முறியடித்தும் விட்டார். இதில் மிகவும் பாராட்ட வேண்டிய விடயம் சேன் வார்ணே 145 டெஸ்ட் போட்டிகளில் செய்த சாதனையை முரளி 116வது டெஸ்ட்டிலேயே செய்திருப்பது.

:wub: மனமார்ந்த பராட்டுக்கள் முரளி. :wub:

ஒரு தமிழனாகப் பிறந்து இந்த சாதனையை அவர் செய்ய எவ்வளவு வேதனைகள் சோதனைகளைத் தாண்டியிருப்பார். அவரது சாதனையை எமது இனப்போராட்டத்துடன் போட்டுக் குளப்பாமல் மனதாரப் பாராட்டுவதே சிறப்பானது

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.

திறமைக்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது என்பதற்கு முரளி ஒரு சான்று.

முரளி மேலும் மேலும் சாதனைகள் செய்து பெருமை பெறவேண்டும்.

Link to comment
Share on other sites

முரளி ஒரு தமிழனாக இந்த சாதனையை செய்ததில் மகிழ்ச்சி தான். ஆனால் அவருடைய சாதனை கூட தமிழர்களுக்கு எதிரான பிரசாரத்திற்கு உபயோகிக்கப்படுத்தப்படுவது வருத்ததிற்குரிய விடயம். அரசியலும் விளையாட்டையும் கலக்க கூடாது என்பது உண்மை, ஆனால் இன்றைய உலகில் அசியல் நலன்களை தான் முதன்மைபடுத்தப்படுகின்றது. அதனால் துரதிஷ்டவசமாக நாமும் அதையே செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

முரளியின் சாதனை எப்படி அரசியல் படுத்தப்படுகின்றது என்பதை இந்த செய்தியில் பாருங்கள் (நன்றி டெய்லி மிரர்)

wxl1rc552utoafqkwljqy045_Somawansa.jpg

The biggest wicket taker in test cricket Muttiah Muralitharan congratulated by JVP leader Somawansa Amarasinghe at the special stamp issuing ceremony held today to mark his world record. Posts and Telecommunication Minister Rauff Hakeem is also in the picture.Pic by Dinuka Liyanawatte

Thousands of Muralitharan’s under LTTE detention - Wimal

There are thousands of talented young “Muralitharans” being held at LTTE detention centres in the Wanni, JVP Parliament group leader Wimal Weerawansa told the media today. “Tamil political parties who protest the detention of Tamil youth in Colombo should also raise similar opposition to arrests by the LTTE” he said.

Link to comment
Share on other sites

மதன்

நாம் பாராட்டினால் என்ன பாராட்டாமல் விட்டால் என்ன சிங்கள அரசியல்வாதிகள் இவ்விடயத்தை தமக்குச் சாதகமாகவே பயன்படுத்தப் பார்ப்பார்கள். அதற்காக ஒரு சிறந்த தமிழ்வீரனின் தனிப்பட்ட திறைமையை தமிழர்களாகிய நாமும் அரசியல் காரணங்களுக்காக பாராட்டாமல் விட்டால் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3000 பேர் கைது செய்யப்பட்டு அதில் பலர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உவருக்கு பாராட்டு தெரிவிப்பது ரொம்ப அவசியம் தான் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரனுக்கு இருக்கும் பிரச்சினைகள் முற்றிலும் வட கிழக்குத் தமிழர்களினதை விட வேறானவை என்று தானே அவர் சமூகம் சார்ந்த தலைவர்கள் சொல்லுகினம் (ஒரு நூறு மலையகத் தமிழர்களை அள்ளிக் கொண்டு போன பிறகும்)? எனவே முரளி எங்கள் துன்பங்களால் பாதிக்கப் பட வேண்டும் என நினைப்பதெல்லாம் மூடத் தனம் தான். மேலும் தமிழ் சிங்கள ஒற்றுமை, சிறிலங்காவில் தமிழர்களுக்குள்ள சம வாய்ப்புகள் இவையெல்லாவற்றுக்கும் சிறிலங்கா தூக்கிப் பிடிக்கும் உதாரணமாக த் தான் முரளி இருக்கிறார். எனவே அரசியல் தலைவர் இல்லாவிட்டாலும், வேறு வழிகளில் கதிர்காமர், டக்ளஸ் போன்றோரோடு ஒரே வரிசையிலிருப்பவர் தான் முரளிதரன். எங்கட ஆட்கள் மட்டும் தான் விளையாட்டு வேற இனப் பிரச்சினை வேற எண்டு அநியாயத்துக்கு நல்லவையா இருக்கினம். சிங்களவனுக்குப் பிறந்த குழந்தையிலிருந்து இறந்த பிணம் வரைக்கும் இன வெறி தான் முன்னுக்கு நிற்கிறது.

Link to comment
Share on other sites

முரளிதரன் நிகழ்த்தியிருக்கும் சாதனை சாதாரண சாதனையில்லை. அவரை எம்மவர் சிலர் பாராட்டாமல் விடுவதால் அவரது சாதனையொன்றும் குறைந்து போய்விடப்போவதில்லை.

தற்போது கொழும்பில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்காக போராட்டம் நடாத்துவதிலும் மலையக பாராளுமன்ற உறுப்பினர்களே முன்னின்று உழைக்கின்றார்கள். தமிழர்கள் கைதாவதால் இங்குள்ளவர்கள் ஏதோ 1, 2 வேளை உணவை ஒதுக்கியோ அல்லது விழாக்களைப் புறக்கணித்தோ வாழவில்லை. வெறும் வாய்ப்பேச்சிற்கு மட்டும் குறைவில்லை. சும்மா போங்கப்பா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு, உழைக்கிறவர்கள் தான் அவசரகாலச் சட்டத்திற்கும் கையுயர்த்துகிறார்கள் அல்லது கழிப்பறையில் ஒளிந்து கொள்கிறார்கள். இப்போது உழைப்பதும் ஒரு குறிப்பிட்ட பிரிவுத் தமிழ் மக்களுக்காகவே என்று பிந்திய செய்தி (வீர கேசரி-கறுப்பி இணைத்தது) சுட்டிக் காட்டுகிறது. நீங்கள் அநியாயத்துக்கு நல்லவராகவும் அதே வேளை ஒன்றும் தெரியாத அப்பாவியாகவுமெல்லோ இருக்கிறியள்? :)

Link to comment
Share on other sites

மலையக தமிழர்கள்

அடிமைகளாக வாழ்ந்த போது

நம்மவர்கள் கொடி கட்டிப் பறந்தார்கள்.

அவர்களது வாக்குகள் பறிக்கப்பட நம்மவரே காரணமாக இருந்தார்கள்.

இன்றும்

மலையக தமிழர் படும் இன்னல்கள் சொல்லால் வடிக்க முடியாத துன்பம்.

அது பலருக்கு தெரியாது.

இன்றும் அவர்களால்

தம் லயன் வீடுகளை விட்டு

வேறு வீடுகளில் வசிப்பதற்கு இடமில்லை.

தலைவர்கள் சொல்படி நடக்கும் கங்காணிகள்

கங்காணிகள் சொல்படி நடக்கும் தோட்டத் தொழிலாளர்கள்

இதுவே மலையக மக்கள் வாழ்வு.

இவர்கள் சொல்லும் தலைவருக்கு வாக்களிக்காவிடில்

வீட்டில் அடுப்பு எரியாது.

இதைவிட முக்கியமானதும் கொடுமையானதும் இன்னொன்று...........

இவர்களில் பலருக்கு அடையாள அட்டைகள் இல்லை.

தங்களது இருப்பிடங்களை விட்டு

கொழும்பு போன்ற இடங்களுக்கு வேலைக்கு சென்றால்

கிராம சேவகர் வந்து பார்க்கும் போது

அவர் வீட்டில் இல்லை என்று தெரிந்ததும்

அரச கணக்கெடுப்பு லிஸ்டில் இருந்து

அந்த நபர் பெயரை வெட்டி விடுவார்களாம்.

அதைக் கூட புதுப்பிக்கத் தெரியாத மக்கள்.

இவை அரச அதிபர் காரியால விளம்பர பலகைகளில்

சில காலம் இரு பிரிவுகளாக ஒட்டப்பட்டு இருக்குமாம்.

ஒன்று இருப்போர் பெயர்.

அடுத்து இருந்தும் வீட்டில் இல்லாதோர் பெயர்.

குறிப்பிட்ட காலத்துக்குள்

தாங்கள் திரும்பி வநது விட்டதாக அறியத் தராவிட்டால்

அவ்வளவுதான்.........

அவர் பெயர் அகற்றப்படும்.

அதன் பின்

அந்த நபர் கொழும்பில் அல்லது வேறொரு இடத்தில் கைதாகி

அவர் வசிக்கும் இடத்தை கூறினால்

அதை ஆராயும் போலீசாருக்கு வரும் தகவல்

அப்படியான ஒருவர் அங்கு இல்லை என்பதே.

காரணம் அவர் பெயர்

லிஸ்டில் இருக்காது.

அவர் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டு

விபரமே தெரியாமல் போவது அநேகம்.

இதை அங்கே இருந்து வந்த ஒரு அரச அதிகாரி சொன்ன போது

மிக வேதனையாக இருந்தது.

அரசியல்வாதிகள் கூட இந்தியாவின் கொத்தடிமைகள் போலத்தான்

அந்த மலையக இந்திய வம்சா வழியினரை நடத்துகின்றனர்.

படிப்பறிவே இல்லாத மக்கள் அதிகம்.

இவர்களது குழந்தைகள் படித்தால்

வேலைக்கு ஆள் இல்லாமல் போய்விடும்.

இவர்களது கல்விக்கு உறுதுணையாக இருந்த பலர்

யாழ்பாணத்தையும் மட்டக்களப்பையும் சேர்ந்த

மனித நேயம் கொண்ட ஆசிரியர்கள்தான் என்ற தகவலை

அவர் மேலதிகமாக சொன்னார்.

மலையக அரசிய்வாதிகளை விட

இவர்களே பல மாணவர்களை உருவாக்க காரணம்

என்ற தகவல் அப்போதுதான் தெரிந்தது.

பள்ளியில் ஓரளவுக்கு மேல் படிப்பதைக் கூட

லயன் பராமரிப்பாளர்கள் விடுவதில்லை

என்ற கொடுமையை சொன்ன போது கலக்கமாக இருந்தது.

உடல் நலம் குன்றி வேலைக்கு போகாமல் விட்டாலோ

ஒரு அரை மணி நேரம் தாமதித்து வேலைக்கு போனாலோ

சம்பளத்தை வெட்டி விடுவார்கள்!

அன்று வீட்டில் அடுப்பு எரியாது.

இப்படி அநேக கொடுமைகள்.

இப்படியான ஒரு நிலையில் இருந்து

வந்த ஒருவர்தான் முரளிதரன்.

இன்று அவரது திறமை கண்டு எரிச்சல் அடைகிறோம்.

அல்லது

புரியாமல் பேசுகிறோம்.

இதுவே உண்மை.

நாமெல்லாம்

இங்கு எவ்வளவு சுக போகமாக வாழ்கிறோம்.

வாய் கிழிய பேசுகிறோம்.

எமது ஒரு நாள் அநியாய செலவை குறைத்து

அதை ஒரு ஏழை குடும்பத்தின் ஒரு குழந்தையை பராமரிக்க

அல்லது

ஒரு வறிய குடும்பத்துக்கு கொடுப்போமா என்றால்?

நம்மால் பேச முடியாது.

நீங்கள் இருக்கும் அறையை சற்று உற்றுப் பாருங்கள்.

அங்கே ஒரு முறை சென்று பாருங்கள்

நிமிர்ந்து நடக்க முடியாத குடிசை லயன் வீடு.

ஒரு திருத்தம் கூட செய்ய நிர்வாகம் அனுமதிக்காது.

அவர்கள் தன் நிலையை விட்டு எழக் கூடாது எனும் கரிசனை!

இப்படி அநேகம்.................

ஒருவன் நன்றாக இருந்தால் எல்லோரும் வரத்தான் செய்வார்கள்.

இல்லாவிட்டால் யாரும் உறவு என்று கூட சொல்ல மாட்டார்கள்.

ஒவ்வொரு மனிதனின்

வெற்றிக்கு எத்தனையோ மன உழைச்சல்களுக்கு ஆளாகி இருப்பான்.

அத்தனையையும் வென்றே பலர் ஜெயித்தும்

உலக சாதனை படைத்தும் இருக்கிறார்கள்.

அங்கே சாகும் மனிதர்கள் பற்றி பேசிக் கொண்டே

பிறந்த தின விழாக்கள்

திருமணம்

தேவையற்ற விழா செலவுகள்

கூட்டம் கூட்டுவது என விரயமாக்குகிறோமே?

இவை தேவையா என யாராவது நினைக்கிறோமா?

அங்கே நடக்கும் கைதுகளை நிறுத்துங்கள் என்று

நம்மில் எவராவது

இங்கு போராட்டம் நடத்தலாமே?

ஏன் செய்யவில்லை?

தலைவிதி!

மேலதிகமாக சில தகவல்கள்

http://puthiyaboomi.com/Boomi/boomi_105/boom105_sl.hills.htm

Link to comment
Share on other sites

மலையக தமிழர்கள்

அடிமைகளாக வாழ்ந்த போது

நம்மவர்கள் கொடி கட்டிப் பறந்தார்கள்.

அவர்களது வாக்குகள் பறிக்கப்பட நம்மவரே காரணமாக இருந்தார்கள்.

நன்றி அஜீவன்.நாங்கள் எந்த முகத்தோடு மலைநாட்டு மக்களை எமது போராட்டத்துடன் இணைவார்கள்.இல்லை அதற்கான வேலைத்திட்டமாவது யாராலும் எடுக்க பட்டதா என்றால் இல்லை.ஆக எமக்கு தேவையான போது மட்டும் மலையகமக்கள் உதவவேண்டும் என்பது சுயநலவாதிகளாக தான் எம்மை நாம் காட்டி நிற்கிறோம்.

Link to comment
Share on other sites

அவர்களின் நிலை

விளங்க வேண்டியவர்களுக்கு தெரியும்.

பல விடயங்களை இங்கே எழுதுவது சரியல்ல.

எனவே விட்டு விடுகிறேன்.

அவர்கள் வாழும் சூழலில்

அவர்களால் எதுவும் செய்ய முடியாது.

முரளி ஒரு விளையாட்டு வீரன்.

அவர் அரசியல்வாதியல்ல.

அவரும் அரசியலில் இறங்கினால்

ஏதாவது ஒரு கட்சிக்கு வால் பிடிக்க வேண்டி வரும்.

அதை விட இதுவே மேல்.

அரசியல்வாதிகள் வாக்குகளை பெறுகிறார்கள்.

பாராளுமன்றம் போகிறார்கள்.

அவர்கள் என்ன செய்கிறார்கள்.

தமிழர் மட்டும் கைது செய்யப்படவில்லை.

தமிழ் - சிங்கள - முஸ்லீம்கள் என கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள்

இதற்காக குரல் எழுப்பலாம்?

யாரும் ஒன்றும் செய்யவில்லை.

மனோ கணேசன் மலையக தமிழர்தான்.

அவர் குரல் கொடுக்கிறார்.

அவரை புலிகளின் பினாமி என்று எழுதுகிறார்கள்.

மனோ கணேசனுக்கு இருக்கும் தில்

அங்கே பலருக்கு இல்லை.

"எல்லா தமிழரையும் அடைத்த பிறகும்

குண்டு வெடித்தால் அரசு என்ன செய்யும்?"

பாராளுமன்றத்தில் கேட்டவர் மனோ கணேசன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் முரளீதரனினன் சாதனையைப் பாராட்டுவோம். பின்பு அலசலை மேற்கொள்ளலாம்.

1. முரளீதரன் உலக அளவில் சாதனை புரிந்த நிலையில் சிறிலங்கா கிரிக்கட் குழுவுக்குத் தலைமை வகிக்க அழைக்கப்படாததேன்?

2. இந்தியாவில் திருமணம் செய்து கொண்டதால் மட்டும் இந்தியக் கிரிகட் பாரம்பரியம் இவரையும் இவரது திறமையையும் கொஞ்சமாவது பேசுகிறது. இவரது பந்துவீச்சு பற்றி இந்திய முன்னாள் வவிளையாட்டுவீரர்கள் சொன்ன கருத்துகள் இனிப்பானவை அல்ல.

3. வெள்ளையர்களின் (ஆங்ககிலேயர்களின்) திமிர் பிடித்த ஆட்டமாகக் கருதப்படும் கிரிக்கட் விளையாட்டில் அடிமையாகிய நாடுகளின் திறமையாளர்கள் வெளிக்கிளம்பும் போது வெள்ளை இனவாதம் அப்படியே கொப்பளிக்கும். இது அவுஸ்திரேலியாவில் நிறையவே நடந்திருக்கிறது.

ஆக முரளீதரன் உள்ளுர் இனவாதம் முதல் பிராந்திய இளக்காரம், உலகளாவிய கறுப்பு-வெள்ளை இனவாத ஒடுக்கு முறைகளுக்கெல்லாம் முகம் கொடுத்து சகல தடைகளையும் தகர்த்தவாறே இச்சாதனையைப் புரிந்திருக்கிறார்.

ஆனால் அதிகமாக அலட்டிக் கொள்ளாது தனது சாதனையில் குறியாக இருப்பதை நாம் பாராட்டுவதில் என்ன தவறு இருக்கிறது?

இவருக்குக் கடும் போட்டியாக இருந்த வார்ண் கூட வாழ்த்திவிட்டாரே!

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளிக்கு போஜே நிறுவனம் கண்டியில் வைத்து நேற்று வழங்கவிருந்த போஜே காரை கொழும்புக்குத் திருப்பி அழைத்து தான் வழங்கியதாக பிரச்சாரம் செய்யப்போகின்றார் மஹிந்தா. வழித் தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடிக்கிறார் மஹிந்தா.

தமிழ் பேசத் தெரியாத முரளிக்கு இக்களத்தில் மரியாதை கொடுப்பவர்களை நினைத்தால் சிரிப்பாகத் தான் வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் மலையகத் தமிழரின் துன்பம் பற்றி நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை. இவற்றை நானே நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் முரளி அப்படிப் பட்ட பின்னணியில் வளர்ந்தவர் அல்ல. அவரது தந்தையார் முத்தையாவின் சொந்த நிறுவனம் தான் லக்கி இன்டஸ்ட்றீஸ் எனும் பிஸ்கட் நிறுவனம். கண்டி குண்டசாலையில் இருக்கிறது.மேலும், மூவினத்தவரும் தான் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்லியிருப்பது நாம் கேள்விப்பட்டதற்கும் செய்திகளில் வந்ததற்கும் மாறான செய்தியாக உள்ளது. இன வாத நோக்கமே இல்லாத தேசிய பாதுகாப்பு நடவடிக்கை இது என்று நீங்களும் நினைக்கிறீர்களா? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மத்திய கல்லூரியைச் சேர்ந்தவர் எதிர் வீரசிங்கம். அவர் ஆசிய ஒட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்ததற்கு சிங்களப்பத்திரிகைகளில் அச்சமயத்தில் எதிர்வீரசிங்க என்று செய்திகள் வெளியிட்டு வந்தன. எதிர்வீரசிங்கம் அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சில் வேலை கேட்டு சென்ற போது தமிழர் என்ற காரணத்தினால் வேலை நிராகரிக்கப்பட்டது. அதாவது அவர் விளையாடும் போது இலங்கை அரசு இலங்கையராகவும், விளையாடி முடிந்ததும் அவர் தமிழர், தமிழர்கள் இரண்டாம் பிரஜை என்றே ஒதுக்கப்பட்டார்.

அவுஸ்திரெலியா அணி இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி கண்டியில் 80களில் விளையாடியது. அக்காலத்தில் சிறந்த வீரரான வினோதன் ஜோன் அவர்கள் தமிழர் என்பதினால் புனித கண்டியில் விளையாடக்கூடாது என்று பெளத்தபீடதிபதி ஒருவர் சொன்னதினால் அப்போட்டியில் விளையாட அனுமதி வழங்கப்படவில்லை.

டில்சன் என்ற மூஸ்லீம் மதத்தைச் சேர்ந்த துவான் முகம்மது டில்சன் மூஸ்லீமாக இருப்பதினால் இலங்கை அணியில் இடம் கிடைக்க அனுமதிகிடைக்காமையினால் திலகரத்தினே டில்சன் என்று பெளத்த மதத்துக்கு மதம் மாறி அணியில் இடம் பெற்றார்.

வந்தியத்தேவன் சொல்வது போல முரளிதரன் தமிழ் தெரியாதவரல்ல. எனென்றால் நான் முரளியின் பேட்டியினை சக்தி தொலைக்காட்சியில் வந்த மின்னல் என்ற நிகழ்ச்சியில் தமிழில் பேசியதினைக் கேட்டிருக்கிறேன். என்றாலும் இலங்கை அணியில் தமிழர்கள், வேறு மதத்தினர் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டாலும் ஆகத்திறமை இருந்தால் மட்டுமே தமிழர்கள், முஸ்லீம்களை அணியில் சேர்க்கிறார்கள் அல்லது அரசியல் செல்வாக்கு இருந்தால் சேர்க்கப்படுகிறது. முரளிதரன் முதல் முதலாக 92ல் அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக விளையாடினார். அவர் திறமையாக விளையாடியும் அதற்கு பிறகு வந்த தொடர்களின் ஒன்றான இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் முதலாவது டெஸ்டில் சேர்க்கப்படவில்லை. அப்போட்டியில் ஒதுக்கப்பட்டார். அதில் இந்தியா வென்றது. ஆனால் அப்போட்டியில் தோற்றதற்கு ஒரு காரணம் முரளிதரன் சேர்க்கப்படவில்லை என்பதை கொழும்பு ஊடகங்களில் சில வெளியிட்டன. வேறு வழியில்லாமல் அடுத்த போட்டியில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு முரளி இலங்கை அணியில் ஒரு முக்கிய பாத்திரமாக இருக்கிறார்.

முரளியை தமிழர் என்று பாராட்ட நினைத்தாலும், அவர் விளையாடும் அணி வாளை ஏந்தும் சிங்கத்தினைக் கொண்ட அணி. தமிழர்களைக் கொல்வதற்காக வாளை ஏந்தும் சிங்களவனின் அணி. அதனால் என்னால் பாராட்ட முடியாமல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளியைப் பாராட்டாமல் விடுவது அவர் மேலுள்ள எரிச்சலால் என்றும் அவர் சார்ந்த சமூகத்தினர் மீதான பார்வையினால் என்றும் சிலர் நினைப்பது போல் தெரிகிறது. கந்தப்பு சொன்னது போல முரளி சிறிலங்காவுக்குத் தான் வெற்றி தேடிக் கொடுத்தார். அவர் சிறிலங்கா அல்லாத இன்னொரு தேசத்திற்கு வெற்றி தேடிக் கொடுத்திருந்தால் தமிழன் என்று கொண்டாடலாம். மேலும், கிரிக்கட் என்பது பல சமயங்களில் இலங்கையின் உண்மை நிலையை வெளியுலகிடமிருந்து மறைக்க உதவும் மாயத்திரையாக இருந்திருக்கிறது. இப்படிப் பட்ட சூழலில் நாமும் கைதட்டி கிரிக்கட் எம்மை ஒன்று சேர்த்தது என்று வெளிநாட்டு ஊடகங்கள் எழுதும் படி வைக்கக் கூடாது என்று தான் நாம் கவலை கொள்கிறோம். பிந்திய தகவல்களின் படி மலையகத் தமிழர்கள் நூற்றுக் கணக்கானோர் விடுதலை செய்யப் பட்டுக் கொண்டிருப்பதாக அறிகிறோம். இனி ஆறுமுகன் சந்திரசேகரன் போன்ற *** நாளைக்கு மகிந்தவுக்கு அருகில் பல்லிளித்தவாறு நின்று முரளிக்குப் பாராட்டுத் தெரிவிக்க எஞ்சிய தமிழரின் அவலச் செய்தி பத்திரிகைகளின் மூன்றாம் பக்கத்திற்குப் போகும்.பாருங்கள், மீண்டும் ஒரு முறை கிரிக்கட் நம் பிரச்சினைக்குப் போர்வையிட்டு விட்டது.

*** பண்பற்ற சொற்கள் நீக்கபப்ட்டுள்லன. - இணையவன்

Link to comment
Share on other sites

வந்தியத்தேவனின் அறியாமைக்காக முரளிக்கு தமிழ் தெரியாதென்று ஆகிவிடுமா?? ஏதோ எழுத வேண்டுமென்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதுவதா??

கந்தப்பு நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பது உங்களுக்கே தெளிவில்லை. தமிழனாக பிறந்ததினால் சிங்களஇனம் பலரை ஒதுக்கியது போல் முரளியையும் ஒதுக்கியதாக நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் முரளியின் தனிப்பட்ட திறைமை தான் அவரை அணியில் மீளச் சேர்க்க வைத்ததையும் ஒத்துக் கொளன்கின்றீர்கள். அப்டியிருக்க முரளியை தமிழர்களாகிய நாமும் ஒதுக்க நினைப்பதற்கு உங்கள் வலுவான காரணம் ஒன்றுமில்லை.

இங்கே நாம் பாராட்டுவது முரளியென்ற தமிழனின் தனிப்பெரும் சாதனையைத் தான். அவர் யாருக்காக விளையாடுகின்றார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.

இப்படியே எங்களுக்குள்ளேயே பாகுபாடுகளை வளர்த்து பிரிந்தபட்டு வாழ்வதனால்த்தான், உலகமும் எம்மை ஒதுக்கும் உண்மைகளை என்று உணரப் போகின்றீர்களோ??

Link to comment
Share on other sites

முரளி சிங்கள அணிக்கு விளையாடினாலும்.. அவர் எவ்வளவு சிரமங்கள்.. சோதனைகள் தாண்டி சாதனை செய்திருக்கிறார்..

அதை பராட்ட நாம் பின் நிற்க கூடாது..

அவர் அணியில் இருந்தால்தான் சாதனை செய்யமுடியும்..

முரளியை நம்பித்தான்..இலங்கை அணி இருக்கிறது என்று கிரிக்கெட் விமர்சகர்களே.. சொல்லுகிறபோது.. பெருமை கொள்ளுங்கள்.... முரளி தமிழருக்காக முகம் காட்டாமல் விட்டாலும்.. அவர் தன் தமிழப்பெயரை மாற்றாமல் அணியில் தரித்து வென்றுகொண்டிருப்பதற்யாகவே பராட்டலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்களிடம் சில கேள்விகள் - நிலாந்தன் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழரசியலில் ஒரு உத்வேகத்தை-momentum-தோற்றுவித்திருக்கிறது என்று கொழும்புமைய ஊடகம் ஒன்றில் ஆசிரியராக இருந்த ஒரு மூத்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். அதனால்தான் பொது வேட்பாளருக்கு எதிராக கருத்துக்களைத் திரட்டுபவர்கள் அதிகம் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் காணப்படுகிறார்கள். அதில் பல கருத்துக்கள் தர்க்கபூர்வமானவை அல்ல. தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு அதை எதிர்ப்பவர்களை எந்த அளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தூண்டியிருக்கிறது என்பதற்கு கடந்த வாரம் வெளிவந்த ஒரு செய்தி நல்ல எடுத்துக்காட்டு. அச்செய்தியில் சம்பந்தர் ஒஸ்லோ பிரகடனம் என்று அழைக்கப்படும் ஆவணத்தை முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கிறார். 13 சக, எக்கிய ராஜ்ய என்றெல்லாம் உரையாடப்பட்ட ஓர் அரசியல் பரப்பில், இப்பொழுது ஓஸ்லோ ஆவணத்தை முன்னிறுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை பொது வேட்பாளர் என்ற தெரிவு ஏற்படுத்தியிருக்கின்றதா? கடந்த 15 ஆண்டுகளாக ஏன் அந்த ஆவணத்தை முன்வைத்து உரையாடப்படவில்லை?அதைவிட முக்கியமாக அந்த ஆவணத்தை அடிப்படையாக வைத்துத்தான் 2015-2018 வரையிலும் ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபு தயாரிக்கப்பட்டதா ? முதலில் அந்த ஒஸ்லோ ஆவணத்தைப் பார்க்கலாம். அது ஒரு பிரகடனம் அல்ல. ஆங்கிலத்தில் Oslo communique என்றுதான் காணப்படுகின்றது. தமிழில் அதனை நிலைப்பாட்டு ஆவணம் என்று கூறலாம். அதில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்திருந்தன. அந்த நிலைப்பாடு பின்வருமாறு…”உள்ளக சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களுக்கு, தமது வரலாற்று ரீதியிலான, பாரம்பரிய வாழ்விடத்தில், ஐக்கிய இலங்கைக்குள், சமஸ்ரி அடிப்படையிலான தீர்வு தொடர்பாக இரு  ஆராய இரு தரப்பும் உடன்படுகின்றன.” அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்ரி அடிப்படையிலான ஒரு தீர்வை ஆழமாக ஆராய்வது என்றுதான் அங்கு கூறப்பட்டிருக்கிறது. அதே சமயம் அந்த உடன்பாடு எத்தகைய ஓர் அரசியல் சூழலில் எட்டப்பட்டது? அது நோர்வையின் அனுசரணையோடு இணைத்தலைமை நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சமாதான முயற்சி. அதாவது மூன்றாவது தரப்பு ஒன்றின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட ஒரு சமாதான முயற்சி. இது மிக முக்கியமானது. இலங்கையின் இனப்பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை அல்ல. அது ஓர் அனைத்துலகப் பிரச்சினை. உலகில் உள்ள எல்லாத் தேசிய இனப்பிரச்சனைகளும் சாராம்சத்தில்,அனைத்துலகப் பிரச்சனைகள்தான். உள்நாட்டு பிரச்சினை ஒன்றில் வெளிநாடுகள் தலையிடும் போதுதான் தேசிய இனப்பிரச்சினைகள் உலகின் கவனத்தை ஈர்க்கும் வளர்ச்சிகளைப் பெறுகின்றன. எனவே தேசிய இனப்பிரச்சனைகள் சாராம்சத்தில் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். அவற்றுக்கு அனைத்துலகத் தீர்வுகள்தான் உண்டு. உள்நாட்டுத் தீர்வுகள் கிடையாது. திம்புவில் தொடங்கி ஒஸ்லோ வரையிலும் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 15ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் அதைத்தான் நிரூபிக்கின்றன. இலங்கை இனப்பிரச்சனைக்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. மூன்றாவது தரப்பு ஒன்றின் தலையீட்டோடு அந்த தீர்வு உருவாக்கப்பட வேண்டும். எனவே ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை அதன் அனைத்துலகப் பரிமாணத்துக்குள் வைத்து முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தரப்பின் கண்காணிப்பின் கீழ் ஓர் உடன்படிக்கைக்கு வர எந்த  ஜனாதிபதி வேட்பாளர் தயார்?அவ்வாறு எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளராவது தயாராக இருந்தால், ஒரு பொது வேட்பாளருக்கான தேவை இருக்குமா? எனவே பொது வேட்பாளர் என்ற தெரிவுக்கு எதிராக ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை முன்வைப்பவர்கள் அந்த விடயத்தில் தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான வேட்பாளர்களில் யார் ஒரு மூன்றாவது தரப்பின் மேற்பார்வையில் தமிழ் மக்களோடு உடன்பாட்டுக்கு வரத் தயார்? என்பதனை வெளிப்படுத்த வேண்டும். கடந்த மே தினத்தில் கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உரையாற்றியதுபோல, தமிழ் மக்களோடு அப்படி ஓர் உடன்படிக்கைக்கு வரக்கூடிய தென்னிலங்கை வேட்பாளர் தமிழ்மக்கள் மத்தியில் 100வாக்குகளை பெறலாம். ஆனால் தென்னிலங்கையில் அவர் ஆயிரம் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதுதான் இலங்கைத் தீவின் இன யதார்த்தம். 15ஆண்டுகளின் பின்னரும் அதுதான் இலங்கைத்தீவின் இன யதார்த்தமாக உள்ளது என்பது எத்துணை குரூரமானது? தமிழ் மக்களோடு மிகச்சாதாரண அடிப்படைகளில் ஓர் உடன்படிக்கைக்கு வரக் கூட எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் தயாராக இல்லை. இப்போதுள்ள ஜனாதிபதிதான் ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணம் உருவாக்கப்படுகையில் பிரதமராக இருந்தவர். அவர் இப்பொழுது என்ன கூறுகிறார்? இனப்பிரச்சினையை வடக்கின் பிரச்சினையாகத் தந்திரமாகக் குறுக்குகிறார். இப்பொழுது பொருளாதார நெருக்கடிக்குத்தான் தீர்வு தேவை என்று சூசகமாகக் கூறுகிறார். எல்லாவற்றையும் விட முக்கியமாக போலீஸ் அதிகாரம் இல்லாத ஒரு 13ஐத்தரலாம் என்று கூறுகிறார். அதாவது 13மைனஸ். மற்றவர் சஜித் பிரேமதாச. அவர் 13பிளஸ் என்று கூறுகிறார். ஒரு தீர்வை முன்வைத்து மூன்றாவது தரப்பு ஒன்றின் மேற்பார்வையின் கீழ் ஒரு பன்னாட்டு உடன்படிக்கைக்கு வர அவர் தயாரா? மூன்றாவது அனுரகுமார. அவர் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு என்பதை இதுவரை துலக்கமான வார்த்தைகளில் தெரிவிக்கவில்லை. எனவே மேற்சொன்ன மூன்று வேட்பாளர்களில் யாருமே தமிழ்மக்களோடு மூன்றாவது தரப்பு ஒன்றின் மேற்பார்வையின் கீழ் உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கப்போவதில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவரோடு ஏதோ ஒரு உடன்பாட்டுக்கு வரலாம் என்று கருதும் தரப்புக்கள் தமிழ்மக்களுக்குப் பின்வரும் விடையங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு பிரதான வேட்பாளராவது தமிழ் மக்களோடு மூன்றாவது தரப்பு ஒன்றின் கண்காணிப்பின் கீழ் உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கிறாரா? அது ஓஸ்லோ ஆவணத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்குமா?அல்லது 2015-2018 வரையிலும் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு இணைந்து உருவாக்கிய ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபில் காணப்படும்”எக்கிய ராஜ்ஜிய”என்ற தீர்வா? இவற்றுடன் மேலும் ஒரு கேள்வியை கேட்கலாம். கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ்த் தரப்பின் ஆதரவைப் பெற்ற ஒரே ஒரு வேட்பாளர்-மைத்திரிபால சிறிசேனதான்-வெற்றி பெற்றார். அவர் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின்படி, நிலைமாறு கால நீதியை நிலைநாட்ட, அதாவது பொறுப்புக் கூறலுக்கு ஒப்புக்கொண்டது. அதன்படி ஒரு புதிய யாப்பை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டது. 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் புதிய யாப்பு ஒன்றுக்கான இடைக்கால வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த இடைக்கால வரைபின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதனைக் காட்டிக்கொடுத்தார். ஒரு யாப்புச் சதி முயற்சி மூலம் அவர் நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சித்தார். இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அவருக்கு வழங்கிய மிக அரிதான ஒரு மக்கள் ஆணைக்குத் துரோகம் செய்தார். அதாவது தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றதால் ஜனாதிபதியாக வந்த ஒருவர் தமிழ் மக்கள் தனக்கு வழங்கிய மக்கள் ஆணைக்குத் துரோகம் இழைத்தார். நல்லாட்சிக் காலத்தில் காணிகள் விடுவிக்கப்பட்டன, கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான சுமார் 10 ஆண்டுகால வளர்ச்சியில் அவை இயல்பாக ஏற்பட வேண்டிய மாற்றங்கள்தான். ஆனால்,மைத்திரியுடனான சமாதானத்தின் இதயம் என்று கூறத்தக்கது, ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிதான். ஆனால் அதைத் தோற்கடித்ததே அவர்தான். இவ்வாறான ஏமாற்றுகரமான 15 ஆண்டுகளின் பின்னணியில், தமிழ்த்தரப்பின் ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாக வந்த ஒருவர் மைத்திரியைப்போல மஹிந்தவின் வீட்டில் அப்பம் சாப்பிட்டு விட்டு தலைகீழாக நிற்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மேற்படி கேள்விகளுக்கு பொது வேட்பாளரை எதிர்க்கும் தரப்புகள் தெளிவான விடைகளை வழங்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளிலும் நடந்த எந்த ஒரு பேச்சுவார்த்தை மேசையிலும் தொட்டுக்கூடப் பார்க்கப்படாத ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை இப்பொழுது மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய தேவை என்ன? அதைக் குறித்து உரையாட வேண்டிய ஒரு காலகட்டத்தில் அதுபற்றி உரையாடப்படவில்லை. தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் இனப் பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கத்தோடு அதிகளவு முன்மொழிவுகள் மேசையில் வைக்கப்பட்ட ஒரு காலகட்டமாக 2018-2021வரையிலுமான காலகட்டத்தை குறிப்பிடலாம். 2015-2018 வரையிலும் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்றன. இதன்போது தமிழ்க்கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் அமைப்புகளும் வெவ்வேறு தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைத்தன. தவிர,தமிழ் மக்களிடமும் அது தொடர்பாகக் கருத்து அறியப்பட்டது. அந்த யாப்புருவாக்க முயற்சியைத்தான் மைத்திரி குழப்பினார். அதன் பின் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். தமிழ்த் தரப்பு அங்கேயும் யோசனைகளை முன் வைத்தது. இவ்வாறாக நவீன தமிழ் வரலாற்றில் தமிழ் மக்கள் அதிகளவு தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்த அக்காலகட்டத்தில் ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தைக் குறித்து யாரும் உரையாடவில்லை. இப்பொழுது மட்டும் ஒரு பொது வேட்பாளருக்கு எதிராக ஏன் அந்த ஆவணம் தூசு தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது? விடுதலைப் புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்ட ஒரு நிலைப்பாட்டு ஆவணத்தை முன்னிறுத்தினால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவைப் பலவீனப்படுத்தலாம் என்று சிந்திக்கப்படுகின்றதா? ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவை முன்வைக்கும் சிவில் சமூகங்கள், தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் தாம் நம்பவில்லை என்றுதான் கூறுகின்றன. ஜனாதிபதித் தேர்தலை  ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் என்ற அடிப்படையில் அவை நிராகரிக்கின்றன. இது ஏறக்குறைய தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு சமாந்தரமானது. சிவில் சமூகங்களைப் பொறுத்தவரை,தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு தமிழ்த் தேசிய ஐக்கியத்தின் குறியீடு. தமிழ் மக்களை ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைப்பதற்கான ஆகப்பிந்திய முயற்சி. அவ்வாறு தமிழ் அரசியல் சக்தியை,தமிழ் வளத்தை,தமிழ்ப் பலத்தை,ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைப்பது ஏன் தவறானது என்பதற்கு அதை எதிர்ப்பவர்கள் விளக்கம் கூறுவார்கள்?   https://www.nillanthan.com/6770/
    • சிறிலங்கன் விமான சேவையை வாங்கப் போவது யார்? இறுதிச் சுற்றில் மூன்று நிறுவனங்கள் May 26, 2024   சிறிலங்கன் ஏர்லைன்சை வாங்கப் போகும் மூன்று நிறுவனங்களை அந்நாட்டு அரசு இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்துள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்த ஆறு நிறுவனங்களில் மூன்று, அமைச்சரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், Sheriza- Supreme group மற்றும் Hayleys கொம்பனி ஆகிய இரண்டு உள்ளூர் நிறுவனங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சிறிலங்கன் ஏர்லைன்சை கொள்வனவு செய்யும் மூன்று இறுதிப் போட்டியாளர்களில் ஆசியாவில் குறைந்த கட்டண விமான சேவையான Air asia-வும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதியமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட பொது நிறுவனங்களின் மறுசீரமைப்புப் பிரிவானது சிறிலங்கன் ஏர்லைன்சை தனியார் துறைக்கு எடுத்துச் செல்வதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து ஏலங்களை அண்மையில் கோரியதுடன், ஆறு நிறுவனங்கள் இதற்காக முன்வந்தன. AirAsia, Fitz Air, Darshan Elites Investment Holdings, Fitz Aviation, Sheriza Technologies Subsidiary Supreme Company, Treasure Republic Guardian Company மேலும் Hayleys இவ்வாறு சிறிலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான தகுதிகளை அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சரவை உபகுழுவினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளை மதிப்பிட்டு சிறிலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு மூன்று நிறுவனங்கள் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதில் இரண்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்கள் மற்றும் Hayleys இலங்கையைச் சேர்ந்தது. இது ஒரு முன்னணி பொது நிறுவனம் ஆகும். மேலும், சுப்ரீம் குளோபல் நிறுவனம் இலங்கையில் பல முதலீடுகளில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் ஆகும். மேலும், அந்த நிறுவனம் தனது லட்சிய முன்மொழிவை ஷெரிசா டெக்னாலஜிடம் முன்வைத்துள்ளது. இது கட்டார் நாட்டின் ஷேக்கான நயீப் பின் ஈத் அல் தானியின் முதலீடாகும். அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இயங்கி வரும் இலங்கையின் தேசிய விமான சேவையானது தனது முன்னேற்றத்தையும், வேலை பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், இனி விமான சேவையை பராமரிக்க முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://www.ilakku.org/சிறிலங்கன்-விமான-சேவையை/
    • அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்! adminMay 25, 2024 அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அத்துடன், இலங்கைப் பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உட்பட எந்தவொரு நிதி நிறுவனத்தினாலும் பராமரிக்கப்படும் அனைத்து நடப்புக் கணக்குகளின் விவரங்கள் மற்றும் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பற்றிய தகவல்களும் வழங்கப்பட வேண்டும். மேலும் இந்த தகலுக்கு அமைய ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு நபரோ அல்லது அரச நிறுவனமோ எந்தவொரு தகவலையும் பராமரிக்கவில்லை என்றால், அந்த தகவலை இந்த ஆண்டு ஜூலை 1 முதல் பராமரிக்கத் தொடங்க வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/203417/  
    • சித்தார்த்துவுக்கும்  அரை அமைச்சுப்பதவி ரெடியோ....
    • இரண்டாம் வாக்கை எனக்குத்தான் போடுவினமோ என்று..கன்பார்ம் பண்ணப்போயிருப்பார்..
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.