Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரளிதரன் 709 விக்கேற்றைப் பெற்றுவிட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் அந்த முத்தையா முரளிதரன்? :lol:

  • Replies 116
  • Views 14.4k
  • Created
  • Last Reply

அக்சுவலா யாழ்களம் மெம்பர்ஸ் ரொம்ப நல்லவங்களப்பா வடிவேல் சொல்லுற மாதிரி எவ்வளவு தான் அடித்தாலும் அதில ஒருத்தன் இவன் எவ்வளவு அடி வாங்கினாலும் ரொம்ப நல்லவன் என்று சொன்னவுடனே அடிவாங்கின மாதிரி தான் இருக்கு :D ........உலகமே வியப்பது என்றா அதுவும் தமிழன் ஒருவரை பார்த்து என்றால் அது தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களை மட்டுமே ஆகும் :lol: !!அன்று தலைவர் தனது சிறு பிராயத்தில் நானும் சிங்கள அரசுடன் சேர்ந்து ஒரு உயர் அதிகாரியா வந்து இருந்தால் உலகமே வியக்கும் வண்ணம் சிறந்த இராணுவதளபதியாக இலங்கைக்கு வந்திருக்கலாம் அல்லவா!! :D அப்ப இன்று இங்கே வாழ்த்துபவர்களின் நிலை எல்லாம் என்னவா இருந்திருக்கும் :) ........மலையகம் என்று தற்போது கூக்குரல் இடுபவர்கள் எல்லாம் என்ன செய்து இருந்திருப்பார்கள் கொஞ்சம் யோசிக்கலாம் அல்லவா :D !!என்னவோ தமிழன் செய்திட்டான் என்றவுடன் போய் வாழ்த்த வேண்டும் என்று இல்லை நாளை கருணா கிரிகேட் விளையாடி உலகளவில் சென்று விட்டார் என்றா அவர் ஒரு தமிழன் என்று வாழ்த்துவார்கள் போல ஆனா என்னால் முடியாது அந்த வரையறையில் தான் இந்த முரளிதரனும் உள்ளடக்கபடுவார்!! :D

தற்போது பார்தீர்கள் தானே சிங்கள அரசு முரளியை வைத்து இனவாத பிரசாரம் செய்வதிற்கு இங்கே மலையகம் என்று வந்த ஒரு கருத்தே சாட்சி பகிர்கிறது :D ....ஆகவே இலங்கை அரசு நன்றாக முரளியை வைத்து பிரசாரம் செய்கிறது அதோடு சேர்ந்த சிலரும் நன்றாக அதனை வழிநடத்தி செல்கின்றனர் இதனை எப்போது தான் எங்களின்ட சனம் விளங்க போகுதோ!!

அது சரி தலைவர் அடிப்பார் நாம இங்கே இருந்து கிரிகேட்டை பார்த்து கையை தட்டுவோம் பிறகு வந்து என்ன தலைவர் இப்ப விழுந்திட்டார் போல என்று சொல்லுற கோஷ்டி தானே நாங்கள் என்ன செய்ய ......... இங்கு வாழ்த்துவது மாவீரர்களிற்கு நாம் செய்யும் துரோகம் எம் மாவீரர்களின் முன் எத்தனை முரளி வந்தாலும் ஈடாக முடியாது அதே வேளை எம் தலைவர் மூலம் தான் உலகமே தமிழினத்தை வியந்து பார்கிறது! :) !

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"எரிச்சல் படும் அளவிற்கு முரளி ஒரு தமிழன் அல்ல"

தேசிய தலைவரின் சிந்தனை-

"ஜே.ஆர் உண்மையான பெளத்தனாக இருந்திருதால் நான் துப்பாக்கி தூக்கி இருக்க தேவையில்லை" :lol:

அக்சுவலா யாழ்களம் மெம்பர்ஸ் ரொம்ப நல்லவங்களப்பா வடிவேல் சொல்லுற மாதிரி எவ்வளவு தான் அடித்தாலும் அதில ஒருத்தன் இவன் எவ்வளவு அடி வாங்கினாலும் ரொம்ப நல்லவன் என்று சொன்னவுடனே அடிவாங்கின மாதிரி தான் இருக்கு ........உலகமே வியப்பது என்றா அதுவும் தமிழன் ஒருவரை பார்த்து என்றால் அது தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களை மட்டுமே ஆகும் !!அன்று தலைவர் தனது சிறு பிராயத்தில் நானும் சிங்கள அரசுடன் சேர்ந்து ஒரு உயர் அதிகாரியா வந்து இருந்தால் உலகமே வியக்கும் வண்ணம் சிறந்த இராணுவதளபதியாக இலங்கைக்கு வந்திருக்கலாம் அல்லவா!! அப்ப இன்று இங்கே வாழ்த்துபவர்களின் நிலை எல்லாம் என்னவா இருந்திருக்கும் ........மலையகம் என்று தற்போது கூக்குரல் இடுபவர்கள் எல்லாம் என்ன செய்து இருந்திருப்பார்கள் கொஞ்சம் யோசிக்கலாம் அல்லவா !!என்னவோ தமிழன் செய்திட்டான் என்றவுடன் போய் வாழ்த்த வேண்டும் என்று இல்லை நாளை கருணா கிரிகேட் விளையாடி உலகளவில் சென்று விட்டார் என்றா அவர் ஒரு தமிழன் என்று வாழ்த்துவார்கள் போல ஆனா என்னால் முடியாது அந்த வரையறையில் தான் இந்த முரளிதரனும் உள்ளடக்கபடுவார்!!

தற்போது பார்தீர்கள் தானே சிங்கள அரசு முரளியை வைத்து இனவாத பிரசாரம் செய்வதிற்கு இங்கே மலையகம் என்று வந்த ஒரு கருத்தே சாட்சி பகிர்கிறது ....ஆகவே இலங்கை அரசு நன்றாக முரளியை வைத்து பிரசாரம் செய்கிறது அதோடு சேர்ந்த சிலரும் நன்றாக அதனை வழிநடத்தி செல்கின்றனர் இதனை எப்போது தான் எங்களின்ட சனம் விளங்க போகுதோ!!

அது சரி தலைவர் அடிப்பார் நாம இங்கே இருந்து கிரிகேட்டை பார்த்து கையை தட்டுவோம் பிறகு வந்து என்ன தலைவர் இப்ப விழுந்திட்டார் போல என்று சொல்லுற கோஷ்டி தானே நாங்கள் என்ன செய்ய ......... இங்கு வாழ்த்துவது மாவீரர்களிற்கு நாம் செய்யும் துரோகம் எம் மாவீரர்களின் முன் எத்தனை முரளி வந்தாலும் ஈடாக முடியாது அதே வேளை எம் தலைவர் மூலம் தான் உலகமே தமிழினத்தை வியந்து பார்கிறது! !

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"எரிச்சல் படும் அளவிற்கு முரளி ஒரு தமிழன் அல்ல"

அட ஜம்முக் கண்ணா

இவ்வளவு பந்தி பந்தியாக எழுதிவிட்டு எரிச்சலில்லை என்று சொன்னால் உண்மைதானுங்க. நீங்கள் பந்தி பந்தியாகவில்லை பக்கம் பக்கமாக எழுதினாலும் உலகமே போற்றும் முரளியின் சாதனையை துளியும் பாதிக்காது. என்ன அடிவாங்கிய :lol: வடிவேலுவைப் போல் உங்களைப் பார்க்கத்தான் பரிதாபமாகிருக்கின்றது :) . சரி சரி என்ன செய்வது தொடர்ந்து புலம்புங்க. :lol:

அட ஜம்முக் கண்ணா

இவ்வளவு பந்தி பந்தியாக எழுதிவிட்டு எரிச்சலில்லை என்று சொன்னால் உண்மைதானுங்க. நீங்கள் பந்தி பந்தியாகவில்லை பக்கம் பக்கமாக எழுதினாலும் உலகமே போற்றும் முரளியின் சாதனையை துளியும் பாதிக்காது. என்ன அடிவாங்கிய வடிவேலுவைப் போல் உங்களைப் பார்க்கத்தான் பரிதாபமாகிருக்கின்றது :D . சரி சரி என்ன செய்வது தொடர்ந்து புலம்புங்க.

வசபண்ணா வசபண்ணா!!

அது தானே சொல்லிட்டேன் இவரில எரிச்சல்பட என்ன இருக்கு வேண்டும் :lol: என்றா வசபண்ணா மேல எரிச்சல் படலாம் பிகோஸ் எவ்வளவு நல்ல கருத்துகளை சொல்லுறார் என்று :) ஆனா முரளியை போய் எரிச்சல்படுறது என்றா சிரிப்பா இருக்கு வசபண்ணா!!என்ன செய்ய பந்தி பந்தியா எழுதுறேன் ஏனேன்றா எங்களுக்காக எத்தனைபேர் கல்லறையில் உறங்கி கொண்டிருகிறார்கள் ஆனா இங்கே இவருக்கு வாழ்த்து சொல்லி கொண்டிருந்தா அந்த வேதனையில பந்தி பந்தியா எழுதிபோட்டேன்.... :D வெறி சாறி வசபண்ணா உலகமே போற்றும் சாதனை என்பது முற்று முழுவதும் பிழை ஏனேனின் கிரிகேட் விளையாடுறது எத்தனை நாடு அண்ணா :lol: .........மற்றவையிட்ட போய் முரளியை பற்றி கேட்டா சீரோ தான் சரியா :D !!அத்தோட உலகமே இவரின் சாதானையில் விரல் வைக்கவில்லை ஏனேனின் நாளை இதை ஒருத்தர் கண்டிப்பாக உடைக்க போறார் என்பது திண்ணம் :D !!ஆனால் உலகமே வாயடைத்து போய் இருகிறது எம் தேசியதலைவரின் வழிநடத்தலை பார்த்து அண்ணா!!என்ன செய்ய வசபண்ணா ஜெயிலிற்குள்ள இருந்து பார்த்தா வெளியால இருகிறவனும் ஜெயிலிற்குள்ள இருகிற மாதிரி தான் என்னை பார்த்தா உங்களுக்கு வடிவேல் மாதிரி இருக்கும் பட் உண்மையாக யாரேன்று என்ட வாயால அதை எப்படி சொல்லுறது வசபண்ணா :) .......என்னை தான் புலம்பினாலும் அதனை பார்த்து கருத்து எழுதி இருகிறீங்க ரொம்ப நன்றி இப்படி சில பேர் பார்த்து திருந்தினாலும் என்று தான் சரி அண்ணா நான் என்டபாட்டில புலம்புறேன் நீங்க உங்கபாட்டில தொடங்குங்கோ!! :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

"எரிச்சல் படும் அளவிற்கு முரளி ஒரு தமிழன் அல்ல"

அப்ப என்னப்பு முரளி என்ன ரஸ்யனாக்கும் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் ஜஸ்டின்

இப்படி எழுதுவதற்கு..............

நம் ஊரில் உள்ள உறவுகளுக்கு

டொலராய் அனுப்பினாலும் பிராங்காய் அனுப்பினாலும்

இலங்கையிலுள்ள ரூபாயாக மாற்றித்தான் செலவழிக்கிறார்கள்.

எனக்கு அமெரிக்காவை பிடிக்காது.

இருந்தாலும் என்னால் டொலராக அல்லது பிராங்காகத்தான் பணம் அனுப்ப முடிகிறது!

நான் அனுப்பும் டொலரை சாப்பிட அவர்களால் முடியாது :lol:

அனுப்பாமல் இருந்தால்

நீ நல்லா வாழ்கிறாய்

நாங்கள் பசியோடு செத்து மடிகிறோம் என்கிறார்களே?

தற்போதைக்கு இதை விட வழி தெரியவில்லை.

நிச்சயம் உங்களிடம் நல்ல ஆலோசனை பெறலாம்?

இதற்கு வேறு ஏதாவது வழி முறை உண்டா?

தவிர இந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்!

1.தற்போது நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள்?

2.என்னமாய் வாழ்கிறீர்கள்?

3.எந்த நாட்டு குடியுரிமையோடு வாழ்கிறீர்கள்?

எழுதுங்கள்.

தெரிந்து கொள்ள அவா! :lol:

தவிர

USA யில் வசிப்பதாக எழுதியிருக்கிறீர்கள்.

அமெரிக்கா

நமக்கு எதிராக புனர்வாழ்வு கழகத்தை தடை செய்த பின்னரும்

பலரை கைது செய்த பின்னரும்

நம் மக்களை கொல்ல ஆயுத உதவி செய்து வரும் நிலையில்

அங்கு இருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

அஜீவன் என்ன எழுத வந்தாரென்று விளங்கேல்ல, ஆனல் நான் எழுதினது அவருக்கு விளங்கவில்லை என்று மட்டும் தெரியுது. நான் அமெரிக்காவில தான் இருக்கிறன். ஆனால் அமெரிக்க டொலரை அப்படியே சாப்பிடுவதில்ல. அதைக் கொண்டு கடையில உணவு வாங்கித்தான் சாப்பிடுறது. அப்படி சாப்பாடோ அல்லது வேறென்னவாவதோ வாங்கும் போது மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் வரியும் கட்டுறன்.இது வருமான வரியை விட நான் மேலதிகமாக அமெரிக்க அரசுக்குக் குடுக்கும் வருமானம். டொலரை நான் வீட்டுக்கு அனுப்புவதும் உண்டு, அங்கே அவர்கள் அதைக் கடையில் அப்படியே கொடுக்கவோ அல்லது அப்படியே சாப்பிடுவதோ கிடையாது. அதை இலங்கை சட்டத்திற்கேற்ற மாதிரி இலங்கை ரூபாயாக மாற்றிக் கடையில் குடுத்து உணவோ என்னவோ வாங்கும் போது சிறிலங்காவுக்கு வரி அந்தப் பணத்திலிருந்து தான் போகுது. இது சிம்பிள் கேஸ். இப்போதைய சிறிலங்காவின் நிலையில் இன்னொரு அனுகூலமும் வெளிநாட்டுப் பணத்தால உண்டு. இப்போதைய விலைவாசியில், சனத்தின்ர கொள்வனவு செய்யும் சக்தியைக் (purchasing power) குறையாமல் வைச்சிருக்கிறது வெளிநாட்டு டொலரும் யூரோவும் தான்.கொள்வனவு செய்யும் சக்தி குறைஞ்சால் விளைவு பொருளாதார மந்தநிலை (recession).பிசினஸ் படுக்கிறது எண்டு லோக்கல் மொழியில சொல்வார்கள். காசு அனுப்புறது எங்கட ஆட்கள் சாப்பிட மட்டும் எண்டு அஜீவன் நினைச்சுக் கொண்டிருக்கிற மாதிரி விளங்குது. தவறென்றா மன்னியுங்கோ. (நான் இன்னும் சிறிலங்கன் கடவுச் சீட்டுத்தான், இந்த நாட்டுச் சட்டத்த மீறாதிருக்க வேண்டுமென்டா ஒரு பாஸ்போட் தேவை. மற்றபடி சிறிலங்காப் பாஸ்போட்ட நான் பெருமையாத் தூக்கிக் கொண்டு திரிய இல்ல.)

ஜஸ்டின்

நீங்கள் முரளியை எதிர்க்கச் சொன்ன காரணங்களுக்கும் அமெரிக்காவில் வாழ்வதற்கு சொல்லும் காரணங்களுக்கும் எவ்வளவு முரண்பாடுகள். ஆக உங்கள் கொள்கைக்கும் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லையென்பதை நீங்களே ஒத்துக் கொள்கின்றீர்கள். உங்களைப் பொறுத்தவரை வசதியானவற்றை புறக்கணிக்கலாம் புறக்கணிக்க முடியாதவற்றை வச்சுக்கலாம்.

தயவுசெய்து இதனை நாட்டுப்பற்றென்றோ தமிழ்ப்பற்றென்றோ சொல்லி அவற்றை கேவலப்படுத்த வேண்டாம்.

Edited by Vasampu

வசம்பு, அபிப்பிராயத்தில் மட்டுமன்றி விளங்கிக் கொள்ளும் திறனிலும் அஜீவனுக்கும் உங்களுக்கும் ஒற்றுமை உண்டு. :) நான் ஏதோ சொன்னால் நீங்கள் ஏதோ அமெரிக்காவில் வசிக்கும் காரணத்தை நான் சொன்னது மாதிரிப் பதில் பதிந்திருக்கிறீர்கள்.முரளிய

  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ள இரு விடயங்களும் எப்படி ஒன்றுக்கொன்று முரன்படுகின்றது என்பது கூட எழுதிய புத்தனுக்கு புரிகின்றதா தெரியவில்லை. சேன் வார்ணேயின் சாதனை முரளியால் முறியடிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்கும் புத்தன், சேன் வார்ணே நமது போராட்டத்திற்கு என்ன செய்தார் நீங்கள் கவலைப்படுமளவிற்கு.

***

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

ரொம்ப நாளைக்கு பிறகு வசம்பரே எனது கருத்திற்கு கருத்து வைத்தமைக்கு ரொம்ப நன்றி வசம்பரே சேன்வார்ன் இருகிற நாட்டில நானும் ஒரு பிரஜை அந்த பிரஜையாக இருந்து கொண்டு மாவீரர் தினம் கொண்டாடும் அளவிற்கு சுகந்திரமாக இருகிறோம் இதை விட வேறேது வேண்டும் முரளி சாதனை எத்தனை வீர மலையக மக்களிற்கு புரிந்து இருக்கும் 80% மலையக மக்கள் இன்னும் வறுமை கோட்டின் கீழ் தான் இருகிறார்கள் மலையக மக்களின் 20% மக்களின் பிரதிநிதி தான் முரளி இந்த 20% மானவர்களும் பிரித்தானிய ஆட்சியில் தங்களின் சொத்துகளை வளர்த்தவர்கள் தான் அவர்கள் தான் இப்பொழுது முரளியை தூக்கி பிடித்து கொண்டு திரிகிறார்கள் புலத்தில் வாழும் தமிழர்களில் 80% உந்த முரளியை தான் தூக்கி பிடித்து கொண்டு திரிகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாய் இருந்தா பேசலாம்

யதார்த்தம் என்று ஒன்று இருக்கு!

பேச்சு வார்த்தைக்கு வந்தவங்க கூட

எதை எடுத்துக் கொண்டு வந்தவங்க? :lol:

நாம பேசுறதை நினைச்சா

நமக்கே சிரிப்பு வருது

எதிரி எப்படி சிரிப்பான் தெரியுமா? :D

உங்கள் பார்வையில் ஜதார்தம் சிறிலங்கா ஆதரவு என் பார்வையில் ஜதார்தம் தமீழீழ ஆதரவு இரண்டு கருத்தும் முரண்படுகின்றது அல்லவா??தமீழீழ ஆதரவாளர்களாள் நீங்கள் பாதிக்கபட்டிருக்கலாம் ஆதலாம் சிறிலங்கா யதார்தம் பார்கிறீர்கள் சிங்கள அரசால் நாங்கள் பாதிக்கபட்டிருக்கலாம் ஆதலால் நாங்கள் தமீழத்திற்கு ஆதரவளிக்கிறோம் ஆகவே எமக்கு இது ஜதார்தமாக தெரிகிறது.என்ன நான் அலட்டினது புரிகிறதோ.

பேச்சுவார்த்தை மேடையை பற்றி கூறி இருந்தீர்கள் நாங்கள் என்னும் போராடி கொண்டு இருக்கிறோம் என்பது என்னும் தங்களிற்கு புரியவில்லையா.மலையக மக்கள் வடகிழக்கு மக்களாள் பாதிக்கபட்டார்கள்,யாழ்பாணத்

ஒரு சந்தேகம்!

ஒரு தமிழராக இருந்து கொண்டு, கதிர்காமர் வெளிநாட்டு அமைச்சராக உயர்ந்து, வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரை தன்பக்கம் ஈர்த்து, தன்னுடைய நாட்டுக்காக திறம்பட பணியாற்றியதை இட்டும் யாராவது மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறீர்களா?

ஓமோம் சிங்கள அரசின் காலணி துடைச்சால்.. நீங்களும் பெரியாளா வரலாம்.... பரிசும் பாராட்டும் கூட ஒரு நாள் கிடைக்கும்.. :lol:

யுனெஸ்கோவின் சகிப்புத் தன்மைக்கான விருதைப் பெற்ற முதலாவது தமிழர் ஆனந்தசங்கரி அவர்களை இட்டும் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் :lol:

ரொம்ப நாளைக்கு பிறகு வசம்பரே எனது கருத்திற்கு கருத்து வைத்தமைக்கு ரொம்ப நன்றி வசம்பரே சேன்வார்ன் இருகிற நாட்டில நானும் ஒரு பிரஜை அந்த பிரஜையாக இருந்து கொண்டு மாவீரர் தினம் கொண்டாடும் அளவிற்கு சுகந்திரமாக இருகிறோம் இதை விட வேறேது வேண்டும் முரளி சாதனை எத்தனை வீர மலையக மக்களிற்கு புரிந்து இருக்கும் 80% மலையக மக்கள் இன்னும் வறுமை கோட்டின் கீழ் தான் இருகிறார்கள் மலையக மக்களின் 20% மக்களின் பிரதிநிதி தான் முரளி இந்த 20% மானவர்களும் பிரித்தானிய ஆட்சியில் தங்களின் சொத்துகளை வளர்த்தவர்கள் தான் அவர்கள் தான் இப்பொழுது முரளியை தூக்கி பிடித்து கொண்டு திரிகிறார்கள் புலத்தில் வாழும் தமிழர்களில் 80% உந்த முரளியை தான் தூக்கி பிடித்து கொண்டு திரிகிறார்கள்.

முதலில் புத்தர் பண்டைய தமிழர்களுக்கெதிராக சிங்கள மக்களுக்காதரவாகவும் பல சித்து வேலைகள் செய்து தமிழர்களை விரட்டியடித்தாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட புத்தரின் பெயரைப் புனைப்பெயராக வைத்துத் தமிழ்த் தேசியம் பேசும் தங்களுக்கு பேஷ் பேஷ். அதானுங்க பாராட்டுக்கள்.

முரளியைப் பொறுத்தவரை ஒரு அணியில் விளையாடியே ஒரு சாதனையைச் செய்ய முடியும். இலங்கையைப் பொறுத்தவரை உள்ள ஒரு அணியில் அவர் விளையாடி தனது தனிப்பட்ட சாதனையை அவர் செய்துள்ளார். நாளை சரித்திரத்தில் முரளியின் பெயர் பொறிக்கப்படுமேயன்றி சிங்கள அரசின் பெயரல்ல. முரளி கண்டி மைதானத்தில் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து பல ஊடகங்கள் உங்களால் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் என்று சொல்லப்பட்ட ஏழை எளிய இந்திய வம்சாவளி மக்களிடம் செவ்வி கண்டார்கள். அவர்கள் எல்லோரும் பூரித்த முகத்துடன் முரளியின் வெற்றியை தங்கள் வெற்றியாகவே போற்றிப் புகழ்ந்தார்கள். காரணம் சாதனை படைத்தவர் தங்களிளொருவர் என்பதை புரிந்து கொண்டதால்.

புலம்பெயர் மக்களில் நீங்கள் குறிப்பிட்டது போல் 80 வீதமல்ல 95 வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் முரளியின் வெற்றியை பாராட்டி மகிழ்கின்றார்கள். அவர்கள் போற்றுவது முரளியென்ற தனிமனிதனின் வெற்றியை மட்டும் தான். அவர் சார்ந்த அணியையோ அல்லது அந்த அணி சார்ந்த அரசையோ அல்ல. ஆனால் உங்களைப் போன்ற 5 வீத்திற்கு குறைவானவர்களே எதையும் அரசியலாக்கி ஆதாயம் தேடப் பார்ப்பவர்கள்.

உங்கள் பார்வையில் ஜதார்தம் சிறிலங்கா ஆதரவு என் பார்வையில் ஜதார்தம் தமீழீழ ஆதரவு இரண்டு கருத்தும் முரண்படுகின்றது அல்லவா??தமீழீழ ஆதரவாளர்களாள் நீங்கள் பாதிக்கபட்டிருக்கலாம் ஆதலாம் சிறிலங்கா யதார்தம் பார்கிறீர்கள் சிங்கள அரசால் நாங்கள் பாதிக்கபட்டிருக்கலாம் ஆதலால் நாங்கள் தமீழத்திற்கு ஆதரவளிக்கிறோம் ஆகவே எமக்கு இது ஜதார்தமாக தெரிகிறது.என்ன நான் அலட்டினது புரிகிறதோ.

பேச்சுவார்த்தை மேடையை பற்றி கூறி இருந்தீர்கள் நாங்கள் என்னும் போராடி கொண்டு இருக்கிறோம் என்பது என்னும் தங்களிற்கு புரியவில்லையா.மலையக மக்கள் வடகிழக்கு மக்களாள் பாதிக்கபட்டார்கள்,யாழ்பாணத்

Edited by Vasampu

ஒரு சந்தேகம்!

ஒரு தமிழராக இருந்து கொண்டு, கதிர்காமர் வெளிநாட்டு அமைச்சராக உயர்ந்து, வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரை தன்பக்கம் ஈர்த்து, தன்னுடைய நாட்டுக்காக திறம்பட பணியாற்றியதை இட்டும் யாராவது மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறீர்களா?

உங்களது முட்டாள்த் தனமான ஒப்பீடுகளை என்னென்று சொல்வது. கதிர்காமர் அரசியல் சதுரங்கத்திற்காக அரசால் நியமிக்கப் பட்டவர். ஆனால் முரளியோ தனது தனிப்பட்ட சாதனைகளால் உலக அரங்கில் உயர்ந்து நிற்பவர். அவரையும் கதிர்காமரையும் உங்களால் எப்படி ஒப்பிட முடிகின்றது. ஓஓஓஓஓஓ நீங்கள் ஆய்வாளரல்லோ பேஷ் பேஷ். மொட்டந்தலைக்கும் முழந்தாலுக்கும் முடிச்சுப் போடுவதில் நீங்கள் வல்லவரென்பதை நான் மறந்தே விட்டேன். மன்னிச்சுக்குங்க!!!!!!!

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் போராடும் ஏழை எழிய வெளிநாடு வர வசதியற்ற போரளிகளின் போராட்டங்களை வைத்து..

வசம்பு எமது போராளிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அசைலம் அடிக்கிற, அடித்த தமிழர்களும் பின்னர் அவ்வாறு அசைலம் அடித்தவர்களில் தங்கி இருந்து கொண்டு வெளிநாடு வந்த அவர்களின் பிள்ளைகள் மனைவிகள் உறவுகள் என்று பலர் தற்போது புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர். அதற்கு பரிக்காரமா பலரிடம் தமிழ் தேசிய விசுவாசமும் நிதிப் பங்களிப்பும் ஈழப்போராட்ட ஆதரவும் என்ற வரவேற்கத்தக்க நிலை இருக்கிறது. ஆனாலும் இப்படி வந்தோரில் இன்னொரு பிரிவினர் தமது கடமை மறந்து மனச்சாட்சி இன்றி சுயநலத்தோடு மட்டும் வாழ்கின்றனர்.

ஆனால் எமது போராளிகளின் போராட்டத்தை வைத்து வாழ்க்கை ஓட்டுபவர்களில் இன்னொரு முக்கிய பிரிவினர் உள்ளனர். அவர்கள் அன்றில் இருந்து இன்று வரை உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் போராளிகளையும் போராட்டத்தையும் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்துபவர்கள். இவர்களே மிக மோசமான இனத்துரோகிகள்..!

நீங்கள் குறிப்பிட்டது போல போராளிகள் அனைவரும் வறுமைக் கோட்டில் வாழும் இளையவர்கள் அல்ல. படித்த பட்டம் பெற்ற, வசதிபடைத்த குடும்பங்களில் இருந்தும் தமிழீழத் தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தோட போராடப் போனவர்களும் இருக்கிறார்கள். எமது போராளிகள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை எதிரி மட்டுமன்றி தமிழனா இருந்தும் துரோகிகள் போல.. தவறியும் நீங்கள் செய்யக் கூடாது. தாயக விடுதலைக்காக தன்னை அர்பணித்துப் பணியாற்றும் ஒரு போராளியை ஏழை சாதி மதம் என்ற மனித சுதந்திரத்தின் அடிப்படைகளுக்கு அப்பாலான கூறுகள் கொண்டு பாகுபடுத்தி நோக்குவதை தயவுசெய்து நிறுத்துங்கள்.

இனத்தின் விடுதலைக்காக மட்டுமன்றி குறித்த இனத்தில் அங்கம் வகிக்கும் மனிதர்களின் அடிப்படை சுதந்திர வாழ்வுக்கான வாழ்வுரிமை வேண்டிப் போராடுபவர்கள் எல்லோரும் தியாகிகளே..! அங்கு வேறெந்தப் பாகுபாட்டுக்கும் இடமிருக்கக் கூடாது.

முரளிதரன் ஒரு போராளியல்ல. அவர் திறமைமிக்க ஒரு விளையாட்டு வீரன். அவரை துடுப்பாட்ட மைத்தானத்தோடு வைத்திருக்க வேண்டுமே தவிர அரசியல் இன விவகாரங்களுக்குள் இழுத்து வருவது தவறானது..! :lol:

Edited by nedukkalapoovan

வசம்பு எமது போராளிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அசைலம் அடிக்கிற, அடித்த தமிழர்களும் பின்னர் அவ்வாறு அசைலம் அடித்தவர்களில் தங்கி இருந்து கொண்டு வெளிநாடு வந்த அவர்களின் பிள்ளைகள் மனைவிகள் உறவுகள் என்று பலர் தற்போது புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர். அதற்கு பரிக்காரமா பலரிடம் தமிழ் தேசிய விசுவாசமும் நிதிப் பங்களிப்பும் ஈழப்போராட்ட ஆதரவும் என்ற வரவேற்கத்தக்க நிலை இருக்கிறது. ஆனாலும் இப்படி வந்தோரில் இன்னொரு பிரிவினர் தமது கடமை மறந்து மனச்சாட்சி இன்றி சுயநலத்தோடு மட்டும் வாழ்கின்றனர்.

ஆனால் எமது போராளிகளின் போராட்டத்தை வைத்து வாழ்க்கை ஓட்டுபவர்களில் இன்னொரு முக்கிய பிரிவினர் உள்ளனர். அவர்கள் அன்றில் இருந்து இன்று வரை உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் போராளிகளையும் போராட்டத்தையும் காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்துபவர்கள். இவர்களே மிக மோசமான இனத்துரோகிகள்..!

நீங்கள் குறிப்பிட்டது போல போராளிகள் அனைவரும் வறுமைக் கோட்டில் வாழும் இளையவர்கள் அல்ல. படித்த பட்டம் பெற்ற, வசதிபடைத்த குடும்பங்களில் இருந்தும் தமிழீழத் தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தோட போராடப் போனவர்களும் இருக்கிறார்கள். எமது போராளிகள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை எதிரி மட்டுமன்றி தமிழனா இருந்தும் துரோகிகள் போல.. தவறியும் நீங்கள் செய்யக் கூடாது. தாயக விடுதலைக்கான தன்னை அர்பணித்துப் பணியாற்றும் ஒரு போராளியை ஏழை சாதி மதம் என்ற மனித சுதந்திரத்தின் அடிப்படைகளுக்கு அப்பாலான கூறுகள் கொண்டு நோக்குவதை தயவுசெய்து நிறுத்துங்கள்.

இனத்தின் விடுதலைக்காக மட்டுமன்றி குறித்த இனத்தில் அங்கம் வகிக்கும் மனிதர்களின் அடிப்படை சுதந்திர வாழ்வுக்கான வாழ்வுரிமை வேண்டிப் போராடுபவர்கள் எல்லோரும் தியாகிகளே..! அங்கு வேறெந்தப் பாகுபாட்டுக்கும் இடமிருக்கக் கூடாது.

முரளிதரன் ஒரு போராளியல்ல. அவர் திறமைமிக்க ஒரு விளையாட்டு வீரன். அவரை துடுப்பாட்ட மைத்தானத்தோடு வைத்திருக்க வேண்டுமே தவிர அரசியல் இன விவகாரங்களுக்குள் இழுத்து வருவது தவறானது..! :lol:

நன்றி நெடுக் உங்கள் பதிவிற்கு

நான் பெரும்பான்மையான போராளிகளின் பொருளாததார நிலையையே குறிப்பிட்டேன். அதைவிட அப்போராளிகளின் தியாகத்தை என்றுமே நான் கொச்சைப் படுத்த முயன்றவனுமல்ல. அவர்களை வைத்து வெளிநாடுகளில் தம்மை வளர்க்க முயல்பவர்களையே நான் சாடியுள்ளேன்.

முரளிதரனை ஒரு திறைமை மிக்க வீரராகவே நாம் பார்க்கின்றோம். அவரை அரசியலோடு ஒப்பிட்டு போராட்டத்தைக் கேவலப்படுத்துபவர்கள் யார் என்பது புரிந்தும் இது தேவை தானா??

நன்றி உங்கள் புரிந்துணர்வுள்ள பதிலுக்கு.

முரளிதரன் குறித்த விடயம் நான் உங்களைக் குறித்துக் குறிப்பிடவில்லை. நீங்களே அதை இனங்கண்டிருப்பீர்கள். தனிக்கருத்தில் எழுதாமல் உங்கள் கருத்துக்கு எழுதிய கருதோடு தனித்து எழுதி இருந்தேன். அது தவறான விளக்கம் பெறலுக்கு வழிசெய்துவிட்டது என்று நினைக்கிறேன். அது உங்களுக்கான கருத்தல்ல..! இங்குள்ள சில கருத்தாளர்களின் நிலை குறித்த கருத்து மட்டுமே..! :lol:

ஆனந்தசங்கரியை இதில் விட்டுவிடுவோம். ஆனந்த சங்கரி துரோகி. முரளியை துரோகி என்று நான் பாக்கவில்லை.

ஆனால் கதிர்காமரையும், முரளியையும் ஒப்பிடலாம்

சிறிலங்காவின் அரசியற்துறையில் சிறிலங்காவிற்காக சிறப்பாக விளையாடிய தமிழர் கதிர்காமர்.

சிறிலங்காவின் விளையாட்டுத் துறையில் சிறிலங்காவிற்காக சிறப்பாக விளையாடுகின்ற தமிழர் முரளிதரன்

இதிலே கதிர்காமரோ, முரளிதரனோ தம்மை தமிழர்கள் என்று தம்மை உணர்பவர்கள் அல்ல. அவர்கள் தம்மை சிறிலங்கன்களாகவே உணர்கிறார்கள். தமது தாய்நாட்டிற்காக விளையாடுகிறார்கள்.

இருவருடை உழைப்பும் பயன்படுவது சிறிலங்காவிற்குத்தான். அது மட்டும் அல்ல. இருவருமே எமக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்பட்டார்கள், பயன்படுகிறார்கள்.

ராஜதந்திரம் என்று வருகின்ற போது நாங்கள் கதிர்காமரிலிருந்தும் சில விடயங்களை கற்றுக்கொள்ளலாம். கிறிக்கட் என்று வருகின்ற போது முரளிதரனிடம் இருந்தும் இருந்தும் சில விடயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

ஆனால் இவர்களுடைய வெற்றி குறித்து நாம் மகிழ்ச்சி அடைவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை.

முரளியின் சாதனையை தனக்குச் சாதகமாக பயன்படுத்த முயலும் சிங்கள அரசின் பிரசாரத்தை ஏற்கனவே நெடுக் குறிப்பிட்டது போல் பல கேள்விகளை வைத்து பிரசாரமாக்கி நாமும் முறியடிக்கலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதமென்பார்கள். ஆனால் இங்கு சிலர் இயலாமையை வைத்துக் கொண்டு சொல்லுத் தான் தமக்கு ஆயுதம் என்று அடம்பிடித்தால் என்ன செய்ய முடியும்.

நன்றி உங்கள் புரிந்துணர்வுள்ள பதிலுக்கு.

முரளிதரன் குறித்த விடயம் நான் உங்களைக் குறித்துக் குறிப்பிடவில்லை. நீங்களே அதை இனங்கண்டிருப்பீர்கள். தனிக்கருத்தில் எழுதாமல் உங்கள் கருத்துக்கு எழுதிய கருதோடு தனித்து எழுதி இருந்தேன். அது தவறான விளக்கம் பெறலுக்கு வழிசெய்துவிட்டது என்று நினைக்கிறேன். அது உங்களுக்கான கருத்தல்ல..! இங்குள்ள சில கருத்தாளர்களின் நிலை குறித்த கருத்து மட்டுமே..! :lol:

நன்றி நெடுக்

நான் ஏற்கனவே புரிந்திருந்தும் ஒரு சந்தேகத்தில்த் தான் கேள்வியாக்கினேன். இப்போது எனது சந்தேகமும் தீர்ந்து விட்டது. மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு சொல்வது போல முரளிக்கும் கதிர்காமருக்கும் பல வேறு பாடுகள் உண்டு. ஆனால் பல ஒற்றுமைகளும் உண்டு. கதிர்காமர் ராஜதந்திரத் துறையில் திறமையாளராக இருந்தார். முரளி ஒரு உலக அபிமானம் பெற்ற விளையாட்டில் திறமையாளர். கதிர்காமர் வாழ்ந்த காலத்தில் அவரது துறையில் அவரை விஞ்சக் கூடியளவு எவரும் சிறிலங்காவில் இருக்கவில்லை. அந்தத் திறமையும் சிங்கள அடிவருடிப் போக்கும் சேர்ந்த போது அவர் தமிழர் போராட்டத்திற்கெதிரான நல்லதொரு ஆயுதமானார்.சிறிலங்காவில் தகுதியறிந்து நியமிக்கப் படும் ஒரே அமைச்சு வெளிநாட்டமைச்சு மட்டுமே, ஒரு தகுதியான தமிழர் தமிழர் விரோதப் போக்குடன் அப்பதவிக்கு வாராது வந்த மாமணியாய் வாய்த்தார்.முரளி தெரிந்து தமிழர் விரோதமாக எதுவும் செய்யவில்லை.செய்வதற்கு அவர் அரசியலிலும் இருக்கவில்லை. ஆனால் அவர் சார்ந்த கிரிக்கட் விளையாட்டு எப்போதுமே இலங்கைக்கு ஒரு சர்வதேச முகமூடியாக இருந்தது.இந்த வெற்றியும் அப்படித் தான் பயன்படுகிறது. எனவே சிங்களப் பிரச்சாரத்திற்குத் தான் முரளி பெரிதும் பயன் படுகிறார். இந்த வகையில் தான் அவரைக் கதிரோடு சேர்த்து வைக்க முடியும்.தமிழர்கள் புறக்கணிப்பதால் முரளியின் சாதனை வரலாற்றில் இல்லாமல் போய் விடுமா எனக் கேட்கிறார்கள். அப்படி ஆகாது, அது எங்கள் நோக்கமும் அல்ல. ஆனால், சிறிலங்கா சார்பில் தமிழரொருவர் செய்யும் சாதனையையும் தமிழர்கள் கொண்டாடக் கூடிய நிலையில் இல்லை என்பதும் வரலாற்றில் பதியப் பட்டிருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

Edited by Justin

முரளிதரனை ஒரு விளையாட்டு வீரராகப் பார்த்து அவருக்கு ஒரு ரசிகராக இருப்பதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.

கிரிக்கட் என்று வருகின்ற போது ஒருவர் ஜெயசூர்யாவிற்கும் ரசிகராக இருக்கலாம்.

அவர்களுடைய திறைமைகளை வியக்கலாம். அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம்.

ஆனால் "முரளி ஒரு தமிழன், அதனால் அவருடைய வெற்றி எனக்கு பெருமையை தருகிறது" என்று ஒருவர் சொல்கின்ற போதே அதற்குள் அரசியல் வந்து விடுகின்றது.

கிரிக்கட்டை கிரிக்கட்டாக மட்டும் பார்க்காது, அதில் விளையாடுபவர்களின் இன அடையாளங்களை தேடுவதுதான் அரசியல்.

ஆகவே முரளியை தமிழன் என்ற வகையில் பாராட்டுபவர்கள்தான் ஒரு தவறான அரசியலை இதற்குள் கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் அவர்களே "விளையாட்டு வேறு, அரசியல் வேறு" என்று பேசுகின்ற வேடிக்கையும் நடக்கின்றது.

சிறிலங்காவின் தேசிய அணிக்காக விளையாடுகின்ற, சிறிலங்கா அரசின் அரசியற் பிரச்சாரங்களுக்கு பயன்படுகின்ற ஒருவருடைய வெற்றி குறித்து சில தமிழர்கள் பெருமையடைவதும், அதற்கு இனரீதியான காரணங்களை முன்வைப்பதும், இவர்களுக்கு தமிழர்களின் போராட்டம் குறித்த தெளிவு இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

இவ்விடயத்தை களத்தில் இணைத்தவர் தன் சுயதம்பட்டத்திற்காக தமிழன் என்பதற்காகத் தான் வாழ்த்த விரும்பவில்லை என அரசியலாக்கினார். அதன் பின் வாழ்த்த வந்தவர்கள் தனிப்பட்ட முரளியின் திறைமைகளைத் தான் வாழ்த்திச் சென்றார்கள். ஆனால் பின்பு வந்த சிலரே இதனை அரசியலாக்கி ஆதாயம் தேட முனைந்தார்கள்.

சிலருக்கு கருத்துக்கள் எழுதுவதிலும் தன் தவறான கருத்துக்களை நியாயப்படுத்தவதிலும் தான் குறைபாடுகள் உள்ளதென்றால் :D கண் பார்வையிலுமா?? :(

:lol: !!!!!!!!ஆண்டவா நீதான் களத்தை காப்பாற்றவேண்டும்!!!!!! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்தேகம்!

ஒரு தமிழராக இருந்து கொண்டு, கதிர்காமர் வெளிநாட்டு அமைச்சராக உயர்ந்து, வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரை தன்பக்கம் ஈர்த்து, தன்னுடைய நாட்டுக்காக திறம்பட பணியாற்றியதை இட்டும் யாராவது மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறீர்களா?

இல்லையே.ஏனெனில் கதிர்காமர் குலத்தை கெடுத்த கோடரிகாம்பு.தமிழினத்தை காட்டி கொடுத்த துரோகி.முரளி யாரை காட்டி கொடுத்தார்? தனது திறமையை காட்டி எவ்வளவோ தடைகளை தாண்டி தான் இந்த சாதனையை சாதிக்க அவரால் முடிந்தது.நினத்து பாருங்கள் அவுஸ்த்ரேலிய இனவாதிகள் ஒரு பக்கம்,சிங்கள இனவாதிகள் மறு பக்கம்.இவ்வளவையும் தாண்டி ஒரு தமிழ் வீரன் சாதனை படைக்கும் போது அவரை பாராட்டாமல் இருப்பது கவலைக்கிடமானது.எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாமல் முரளியை பாராட்டாமல் விடுபவர்கள் இருந்தென்ன விட்டென்ன?

கதிர்காமர் ஒரு போதும் தன்னை தமிழனாகக் கருதியது இல்லை. அவர் தமிழ் மொழியைப் பேசுவாரா என்று கூட யாருக்கும் தெரியாது. அவர் ஒரு சிறிலங்கன்.

ஆனால் கதிர்காமரும் நிறைய தடைகளை சந்தித்தார். அவருடைய பெயர் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டும், கடைசியில் அவரால் பிரதமராக முடியவில்லை. காரணம் அவரை தமிழராக சிங்களவர்கள் பார்த்ததுதான். ஒரு தமிழர் பிரதமராகக் கூடாது என்று தடுத்து விட்டார்கள்.

அதே போன்று முரளியாலும் அணித் தலைவராக முடியவில்லை. அதற்கு காரணமும் அவரை தமிழராக சிங்களவர்கள் பார்ப்பதுதான்.

ஆகவே இருவருமே பல தடைகளை தாண்டியிருக்கிறார்கள். இருவருக்கும் தகுதி இருந்தும் ஒரு கட்டத்திற்கு மேல் சிங்கள இனவாதம் அவர்களை உயர விடவில்லை.

கதிர்காமரும் சிறிலங்கா அரசின் பரப்புரைக்குத்தான் பயன்பட்டார். முரளிதரனும் சிறிலங்கா அரசின் பரப்புரைக்குத்தான் பயன்படுகின்றார்.

உண்மையை சொன்னால், நான் இருவருக்கும் ரசிகன்தான். கதிர்காமரின் ராஜதந்திரமும், முரளியின் பந்துவீச்சும் எனக்குப் பிடிக்கும்.

ஆனால் அவர்களுடைய வெற்றி குறித்து நான் பெருமிதமோ மகிழ்ச்சியோ கொள்ள மாட்டேன்.

அவர்களுடைய வெற்றி, எங்களுடைய பரப்புரைப் போரில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தெளிவான பார்வை எனக்கு இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.