Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாலியறுக்க சில ஆலோசனைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பர் தப்பித்தவறி ஊருக்குப் போன லக்கேஜில யாழ்ப்பாணம் போச்சுதாம்..

அதை நல்லூர் திருவிழாவுக்க நகை உருவுற ஒருத்தர் பார்த்திட்டு...

ஒரே உருவலாம்... பெண்கள் பலர் தாலியையும் கொடியையும் காணேல்ல என்று ஒப்பாரியாம்.

உடன.. உருவின வரை.. ஒரு இளைஞர் குழாம் மடக்கிப் பிடிச்சு.. இரண்டு தட்டுத்தட்டி.. விசாரிச்ச இடத்தில அவர் சொன்னாராம்..

யோவ் கன்றி பூட்ஸ்.. வெஸ்ரேன் போன எங்கட ஜனங்கள் சொல்லித் தான் தாலியை கொடியை எவ்வளவோ கஸ்டத்துக்கும் மத்தியில தெரிஞ்சு அறுக்கிறன்... கோயில் குளமாப் பாத்து.. பொண்டு பிள்ளைகளுக்கு மன உழைச்சல் வராம ஒரு சமூகப் புரட்சிப் பணி ஆற்றுறன்.. நீங்க என்னடான்னா.. என்னை பிடிச்சு மொத்து மொத்தென்று மொத்திறீங்க.. விடுங்கடா என்று கையை உதறிப்போட்டு.. இடுப்பில செருகி இருந்த ஒரு பேப்பரை தூக்கிப் போட்டாராம் இளைஞர்கள் முன்னாடி.

அதைப் பார்த்த இளைஞர் குழாம் வாயடைச்சுப் போச்சுதாம்..!

இளைஞர் குழாம் பார்த்தது வேற ஒன்றுமில்லயாம்... ஒரு பேப்பரில முக்கால் வாசிப் பக்கமும் நிரப்பியுள்ள தாலியும் அறுப்பும் இந்துமத(மு)வும் சாயும் கோவில் கோபுரங்களும் தானாம். அட என்ன ஒரு .. அலசல்... சா அலட்டல் என்று நினைச்சிட்டு இளைஞர் குழாம் நீ நல்லா உருவப்பா.. வெளிநாட்டில இருந்து உப்படி எழுதிறவையே இஞ்ச தாலியும் செய்யக் காசு அனுப்பினம் கோவில் கட்ட, திருவிழாவுக்கு கொட்டியும் கொடுக்கினம் என்று பிடிச்சவரை கொண்டு போய் அடியார்கள் கூட்டத்துக்க பத்திரமா கரை சேர்த்தனராம்...! :wub::D

( எல்லாரும் அளக்கிறாங்க நாங்களும் அளந்து நம்ம விலாசத்தைக் காட்டுவம் என்று முயற்சிக்கிறம்..! கோவிக்காம படிங்க அடிக்காதீங்க... திட்டாதீங்க. எல்லாம் ஒரு இமேஜுக்குத்தானே....!) :D

தாலியறுப்பு என்பதற்கு மாற்றீடாக முன்மொழியப் பட்ட சொற்பதம் "தாலி வன்பறிப்பு": இரண்டுக்கும் உள்ளார்த்த ரீதியாக என்ன வேறுபாடு என்பது முன்மொழிந்த மொழிவல்லாருக்கு மட்டுமே வெளிச்சம்.

யஸ்ரின் ஐயா அவர்களே.. உங்கள் போன்றவர்களுக்கு, சமூகத்தில் தாலியறுப்பு என்னென்ன பரிமானங்களுடன் உள்ளது என்றதைக் காட்டத்தான் இதையே வெளிச்சத்தில போட்டன். இருட்டுக்க தொலைச்சிட்டு... தெருவிளக்குக்கு கீழ தேடுறது போல.. தேடினா.. தேடிறது கிடைக்காது..! :lol::D

Edited by nedukkalapoovan

  • Replies 69
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யஸ்ரின் நாங்கள் கருத்தாடுவோம். நாங்கள் நநிலையாளர்கள் என்று மற்றவர்கள் மீது வெற்றுக்குற்றச்சாட்டுகளையு

  • கருத்துக்கள உறவுகள்

யஸ்ரின் நாங்கள் கருத்தாடுவோம். நாங்கள் நநிலையாளர்கள் என்று மற்றவர்கள் மீது வெற்றுக்குற்றச்சாட்டுகளை நேரில் காணாத விடயத்தை அவர் ஆதாரம் தந்தார் இவர் அரிதாரம் பூசினார் என்ற பம்மாத்துகளை விட்டுவிட்டு தாலிபற்றி ஏற்கனவே சர்ச்சையை உண்டாக்கிய விவாதக்களத்தில் வந்து கருத்துப் பகிர்வைச் செய்யுங்கள். திரும்பத்திரும்ப ஒன்றையே சொல்லி நான் தான் மானிடநேயன் நடுநிலையாளன் என்று வாதாடும் குணம் உங்களிடம் இல்லாது இருக்கிறது அல்லவா. ஆகவே கருத்தை கருத்தால் வெல்லுவோம்.

மானிடம் கருத்துச் சுதந்திரம் என்றெல்லாம் கதையழப்போம் ஆனால் முகத்தை மட்டும் மறைத்து முதுகில்.....!!!!!!!!!!!!!!!!!

அக்காச்சி.. கருத்துக்களூடு ஒரு விடயத்தில் நியாயத்தைத் தேட வேணுமே தவிர.. ஆக்களுக்கு ஆதரவளிக்க வேணும் என்று எதிர்பார்க்கப்படாது..!

அபி தனது மடலுக்கு தந்த விளக்கங்கள் அவரின் செயலை நியாயப்படுத்தப் போதுமான தாக இருக்கிறது. அவர் சொன்னது இதுதான் குறித்த பெண்ணுக்கு இக்களத்தில் எழுதும் வகை தெரியாது என்பதால் தான் தான் அவரின் கருத்தை காவி வருவதாக.. அது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றே.

அதுமட்டுமன்றி அபி நேற்றுத் தந்த தகவல் ஒன்றின் படி.. குறித்த பெண்மணி அபிக்கு எழுதிய ஒரு பேப்பருக்கான கடிதத்தின் மூலப் பிரதி ஸ்கான் செய்யப்பட்டு உங்களுக்கும் பிறருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று. அதில் இருந்து நீங்கள் உண்மையை உணர்ந்திருக்கலாம். அபி சொல்வது பொய்யென்றால் அதை இங்கு நேரடியாக ஆதாரப்படுத்தலாம்.

அவரின் கருத்தை நீங்கள் நிராகரிக்கிறீங்களே தவிர அந்தப் பெண்மணி நிராகரித்ததாக நீங்கள் எந்த ஆதாரத்தையும் தரவில்லை.

மாறாக அப்பெண்மணி அச்சுறுத்திப் பணிய வைக்கப்பட்டார் என்று டக்கிளஸ் தேவானந்தா மகேஸ்வரன் கொலையில் பதில் சொன்ன பாணியில் பதில் சொல்லுறீங்க. மன்னிக்க வேண்டும்.. உங்களின் நேர்மைத் தன்மையை நீங்கள் இன்னும் நிரூபிக்கவில்லை இது விடயத்தில். அதனால் இப்படி எழுத வேண்டி ஏற்பட்டுவிட்டுள்ளது ஒப்பீட்டுக்காக..!

அபி தந்த தகவல் தவறென்றால்.. குறித்த பெண்ணின் வாழிடம் உட்பட அனைத்தையும் அறிந்த தாங்கள் அப்பெண்ணிடம் தொடர்பு கொண்டு... அபிக்கும் தமக்கும் இவ்வறிக்கைகளுக்கும் தொடர்பில்லை.. அபி தந்த தரவுகள் அவரால் புனையப்பட்டவை.. அபி சொல்வது தவறு. சாந்தி ரமேஷ் வவுனியன் ஒரு பேப்பருக்கு எழுதியவை அனைத்தும் உண்மை என்று அவர் கைப்பட ஒரு கடிதத்தை எழுதி அவரின் கையெழுத்துடன் இங்கு ஸ்கான் செய்து இணையுங்கள். நாம் என்ன ஒரு பேப்பர் வாசகர்கள் அனைவரும் உங்கள் பக்க நியாயத்தை அறிந்து அபியின் பொய்த்தோற்றத்தை இனங்காண்பர்.

(அவரின் கையெழுத்தை உறுதிப்படுத்த அவர் பற்றிய அடையாள அட்டைகளில் (அல்லது பாஸ்போட் அல்லது ரைவிங் லைசென்ஸ்..) உள்ள கையெழுத்தையும் அவரின் விபரங்கள் அடங்கிய பக்கத்தையும் ஸ்கான் செய்து இணையுங்கள்..!)

(குறித்த பெண்ணிடம் பெற்ற எழுத்து மூல அனுமதி மூலம் இவை செய்யப்பட வேண்டும். நீங்களா வற்புறுத்தி செய்திட்டு இங்கு இணைக்கக் கூடாது. அது அவரின் பிறைவேசியை மீறும் செயல். அவரின் சுயம் சார்ந்த தகவல்களை அவர் விரும்பும் வடிவில் தான் பிரசுரிக்க வேண்டும்.. அவரின் அனுமதியோடு.)

அதைவிடுத்து.. அபி சொல்வதை நம்பாதீங்க.. நான் சொல்லுறதை நம்புங்க என்றால்.. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நீங்கள் சொல்லுறதை நம்பச் சொல்லுறீங்க.

நீங்கள் உங்கள் நிலைப்பாட்டுக்கு ஏற்ப படத்தைப் போடுவீங்க. கருத்தை எழுதுவீங்க.

உதாரணத்துக்கு தமிழ்செல்வன் அண்ணாவின் இறுதி வீரவணக்க நிகழ்வில் கூட அவரின் மனைவி தாலியைக் கழற்றி வைக்கும் போது போராளி ஒருவர் அருகில் அவரைத் தாங்கி நிற்கிறார்.. அண்மையில் சார்ள்ஸ் அண்ணாவின் துணைவியார் கூட கணவருக்கு அஞ்சலி செய்யும் போது கூட ஒரு போராளி அவரைத் தாங்கி நிற்கிறார். அப்படங்களைக் காட்டி அவர்கள் வன்முறை ரீதியில் அஞ்சலி செய்ய தாலியைக் கழற்றி வைக்கச் செய்யப்பட்டனர் என்று ஆக்கம் எழுதி ஒரு பேப்பருக்கு அனுப்பினா போடுவினமோ..???! இல்லைத்தானே. அது உண்மையல்லத் தானே.

அப்படித்தான்.. நியாயத்தை கருத்தில் இருந்து எடுக்கக் கூடிய தன்மையோடு கருத்தை முன்வைத்துவிட்டு.. உங்கள் ஆதங்கத்தை கருத்தாளர் மீது வையுங்கள் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வேன். நீதி நியாயத்துக்கு தலை வணங்குவேனே தவிர.. சப்போட்டிவ் என்று எதிர்பார்த்தா அது என்னிடம் கிடைக்காது..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனம் சபேசன் அவர்கட்கு!

ஆரம்பத்தில் "தனிப்பட்ட பிரச்சனை" என்று சொல்லி தட்டிக் கழிக்க முனைந்தீர்கள்.

இப்பொழுது "தருணம் இது அல்ல" என்று சொல்கிறீர்கள்

ஆம் ஏனெனில் ஏற்கனவே கணவனை இழந்த சோகத்தில் ஒரு பெண் இருக்கும் போது அந்தப்பிரச்சனையை வைத்து எல்லோரும் தங்கள் (நிச்சயாமாக நீங்கள் அல்ல)தங்கள் பொழுது போக்கிற்காக அலசி ஆராய்ந்து விவாதிப்பது சரியல்ல என நினைத்தேன்.

உங்களுடைய உண்மையான நோக்கம் எமக்குப் புரிகிறது.

தயவு செய்து எனக்குச்சொல்லுங்கள் :D

இது தருணம் இல்லை என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

மண்ணுக்காக ஏதாவது செய்வது என்பது உங்களுடைய பார்வையில் எவை எவை?

எமது(பட்டிக்காட்டு) நடைமுறை கலாச்சாரத்தை சீர்தூக்கிபார்ப்பதற்கு முன் இங்கு புலம் பெயர் நாடுகளில் மாற்றானின் அரைகுறை கேவலங்கெட்ட கலாச்சாரங்களை நாடிச்செல்லும் எம்மவர்களை எம் வருங்கால சந்ததியினரை திருத்த முயற்சியுங்கள்

மாற்றத்திற்கு உரிய சந்தர்ப்பங்கள் எப்பொழுது வரும்?

இங்கு அல்ல எம்மண்ணில்!உங்களைப்போன்றவர்களுக்கு? இன்னும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக ஈழத்திற்கு செல்லுங்கள்.அங்கே தினசரி நடக்கும் மரணச்சடங்குகளில் உங்கள் சமுதாய சீர்திருத்தங்களை எடுத்துவிடுங்கள் அல்லது பந்தம் பிடியுங்கள்

எந்தவொரு மரணச்சடங்கிலும் எவரும் எல்லோரும் உணர்ச்சி வேகத்தில் கத்துவார்கள்,புலம்புவார்கள்,

அழுவார்கள் அல்லது பூதவுடல் தூக்கும் போது என்னென்னமோ எல்லாம் நடக்கும்.இவற்றுக்கெல்லாம் கருத்துக்களம் தேவையா?

ஒரு பெண்ணுக்கு தாலி அவசியம் தேவையா என விவாதியுங்கள்(தாலி இருந்தால்த்தானே பிரச்சனை)தாலி கட்டுவதற்கு அதாவது திருமணச்சடங்கு ஆடம்பரமாக செய்ய வேண்டுமா?(தாலிகட்ட மட்டும் பெரியோர் முன்னிலையில் என்ற வசனம் வரும்)ஆனால்?என்னமோ..........

கு.சா

முறையான கருத்து உங்களினது. அதனை மனப்பூர்வமாக ஆதரிக்கின்றேன். தற்போதைய நிலையில் சம்மந்தப்பட்ட பெண்ணின் நிலையை நினைக்காமல் ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட மேதாவித் தனத்தைத்தான் காட்ட முயல்கின்றார்கள். இதனால் பாதிக்கப்படுவது அப்பெண் என்ற நினைப்பையே மறந்து விட்டனர்.

உண்மையில் எமது மத அனுஷ்டானங்களில் உள்ள குறைகளை எவரையும் குறிப்பிடாது பொதுவாக விவாதித்து தீர்வு காணலாம். ஆனால் இங்கு எவருக்கும் அந்த எண்ணம் இல்லை.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா

முறையான கருத்து உங்களினது. அதனை மனப்பூர்வமாக ஆதரிக்கின்றேன். தற்போதைய நிலையில் சம்மந்தப்பட்ட பெண்ணின் நிலையை நினைக்காமல் ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட மேதாவித் தனத்தைத்தான் காட்ட முயல்கின்றார்கள். இதனால் பாதிக்கப்படுவது அப்பெண் என்ற நினைப்பையே மறந்து விட்டனர்.

உண்மையில் எமது மத அனுஷ்டானங்களில் உள்ள குறைகளை எவரையும் குறிப்பிடாது பொதுவாக விவாதித்து தீர்வு காணலாம். ஆனால் இங்கு எவருக்கும் அந்த எண்ணம் இல்லை.

எனது உணர்வை புரிந்து கருத்து எழுதிய வசம்புவுக்கு நன்றி.அத்துடன் உங்கள் கருத்து மேன்மேலும் என் கருத்துக்கு வலுவூட்டுகின்றது.

தமிழர்கள் தற்பொழுது பின்பற்றுகின்ற கலாச்சாரம்தான் எனக்கு கேவலம் கெட்டதாக தெரிகின்றது.

ஐரோப்பிய மக்களின் கலாச்சாரத்தில் ஒரு கேவலமும் இல்லை.

(விருப்பம் இருந்தால் இதை தனித் தலைப்பாக விவாதிப்போம்)

புலம்பெயர்ந்த வாழுகின்ற நான் புலம்பெயர் மண்ணில் நடப்பவை பற்றி அக்கறை காட்டுவது இயல்பானது. தாயகத்தில் சீர்திருத்தங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இந்த விவாதம் சம்பந்தப்பட்ட பெண்ணின் மனதையும் சில உறவுகளையும் பாதிக்கக்கூடும் என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

ஆனால் இந்தப் பெண்ணுக்கு நடந்த சம்பவத்தை நான் ஒரு உதாரணமாக மட்டும்தான் பார்க்கின்றேன்.

இக் கதையை கேள்விப்பட்ட என்னுடைய நகரத்தில் வசிக்கும் ஆசிரியை தன்னுடைய அம்மம்மாவிற்கு நடந்த கதையை சொன்னார்.

அவருடைய தாத்தா இறந்த பொழுது அம்மம்மாவின் கழுத்தில் இருந்த தாலியை இதே போன்று பலவந்தமாக கழற்றி விட்டார்களாம். அதனால் புத்தி பேதலித்துப் போன அவர் காண்கின்ற பெண்களின் தாலிகளை எல்லாம் பறிக்க தொடங்கி விட்டார். அவரை சங்கிலியில் கட்டி வைக்க வேண்டிய அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. கடைசியில் இரண்டு கிழமையில் அவர் இறந்து போனார்.

அவருடைய அம்மம்மாவின் காலத்தில் மக்கள் முட்டாள்களாக இருந்தது புரிகின்றது. இப்பொழுதுமா?

இதை ஒரு தனிப்பட்ட விடயம் என்று அலட்சிப்படுத்துவது தவறு.

சாவு வீட்டில் கத்திக் குளறுவது இயல்பு. ஆனால் இழப்பைக் கொடுத்துவிட்டு நிற்கும் பெண்ணிடம், "தாலியை அணிந்து கொண்டு வா, பின்பு அதைக் கழற்றிப் போடு" என்றெல்லாம் கட்டாயப்படுத்துவது ஏற்க முடியாதது.

கணவனை இழந்த பெண்களை சம்பிரதாயத்தின் பெயரில் கொடுமைப்படுத்துவதை எமது சமூகம் நிறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

திரு. சபேசன் அவர்களே

என்னுமொரு கருத்தில் தமிழன் காட்டுமிராண்டித்தனமானவன் என்று *** சொன்னீர்கள்.

மூடநம்பிக்கைகள் தவறான நடவடிக்கைகள் திருத்தப்பட வேண்டியவையே. ஆனால் அதற்குள் எல்லாவற்றையும் தூக்கிப் போடு என்று சொல்லுகின்ற தேவையில்லை.

உங்களுக்கு தமிழனம் பிடிக்கவில்லை என்றால் விலத்திச் சொல்லலாம்.

தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் அவர்கட்கு!

தமிழர்கள் தற்பொழுது பின்பற்றுகின்ற கலாச்சாரம்தான் எனக்கு கேவலம் கெட்டதாக தெரிகின்றது.

தமிழர்கள் எந்த கலாச்சாரத்தை தற்போது பின்பற்றுகின்றார்கள்?விளக்கமாக தர முடியுமா?

ஐரோப்பிய மக்களின் கலாச்சாரத்தில் ஒரு கேவலமும் இல்லை.

அப்படியாயின் அவர்களின் கலாச்சாரத்தில் உங்களுக்கு பிடித்தவிடயம்?(நான் முதலில் உங்களுக்கு கூறியது அவர்களின் அரைகுறை கலாச்சாரத்தை)

இந்த விவாதம் சம்பந்தப்பட்ட பெண்ணின் மனதையும் சில உறவுகளையும் பாதிக்கக்கூடும் என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

இந்த கோதாரிக்குத்தானே நான் முதலில் சொன்னேன்

எமது சமூகம் கணவனை இழந்த பெண்களை சம்பிரதாயத்தின் பெயரில் கொடுமைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய விடயம்.அதை நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய நாடுகள் இலங்கை இந்தியா போன்றவை.நீங்கள் கூறும் கணவணை இழந்த பெண்கள் இங்கு கொடுமைப்படுத்தப்படுவதாக நான் அறியவில்லை

கணவனின் இறுதி நிகழ்வில் தாலியைக் கழற்றக் கட்டாயப்படுத்துபவர்களும், அதை ஆதரிப்பவர்களும் காட்டுமிராண்டிகள் என்பதில் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

மூட நம்பிக்கைகளைத்தான் நான் விடச் சொல்கிறேன். உங்களுடைய கிந்து மதத்தில் மூடநம்பிக்கைகளைத் தவிர வேறு ஒன்றும் இல்லையென்பதால், உங்களுக்கு நான் எல்லாவற்றையும் தூக்கிப் போடச் சொல்வது போன்று தோன்றுகின்றது. அது என்னுடைய தவறு அல்ல.

"மூட நம்பிக்கைகளை விடலாம், ஆனால் இந்து மதச் சம்பிரதாயங்களை விட முடியாது" என்று சொல்வதுதான் நரித்தனமானது. மதச் சம்பிரதாயங்கள் மூடத்தனமாக இருக்கின்ற போது அவைகளை கைவிடுவதற்கு தயங்கக்கூடாது. அதுதான் ஒரு மதத்தை உண்மையில் வளர்க்கும்.

எனக்கு இன உணர்வு உண்டு. ஆனால் அதற்காக அன்றைய தமிழர்கள் பின்பற்றிய அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்று அடம்பிடிப்பது இல்லை. அன்றைய தமிழர்களின் பண்பாட்டை இன்றைக்கும் பின்பற்ற வேண்டும் என்று சொல்வது முட்டாள்தனம்.

அதே போன்று உங்களுக்கும் மத உணர்வு இருக்கட்டும். ஆனால் என்றைக்கோ யாரோ அறிவு கெட்டத்தனமாக உருவாக்கிய மத சம்பிரதாயங்களை இன்றைக்கும் பின்பற்றுவோம் என்று பிடிவாதம் பிடிப்பது அறிவான செயல் அல்ல.

இந்தச் சம்பிரதாயங்களை கைவிட்டால், உங்களுடைய மதம் அழிந்து விடும் என்று நீங்கள் நினைத்தால், அது "கிந்து மதத்தில் எதுவுமே இல்லை" என்று நான் சொன்ன கருத்தை வலுப்படுத்துவதாகவே இருக்கும்.

உங்களுடைய மதத்தில் நிறைய நல்ல விடயங்கள் இருப்பதாக நீங்கள் நம்பினால், இது போன்று மூடத்தனமான சம்பிரதாயங்களுக்கு எதிராக குரல் கொடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் போன்றவர்களின் அடிப்படை நோக்கம் குறித்த பெண்ணுக்கு மனிதாபிமான ஆதரவளிப்பதல்ல..!

அவர்களின் நோக்கம்..

இந்த விடயத்தை.. இந்துக்களுக்கு எதிரான பிரச்சாரப் பொருளாக்குவது.

***

அது போக.. சாந்தி ரமேஸ் வவுனியனின் நோக்கம் அப்பெண்ணுக்கு நியாயம் கிடைக்கச் செய்வதிலும். தனது பெண்ணிலைவாத கருத்துருவாக்கத்தை இதற்குள் திணிப்பது தான் முதன்மை பெற்றிருக்கிறது.

காரணம்.. இவர்கள் பிரச்சனையின் மூலம் எங்கேயோ இருக்க இந்து மதத்தையும்.. தாலியையும் முதன்மைப்படுத்தி... ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் குறை பிடிப்பதும் காட்டுமிராண்டித் தனம் என்பதும் இதை தெட்டத்தெளிவாக்கி இருக்கிறது.

உண்மையில் அப்பெண் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டிருப்பின் அவருக்கு சமூக நல ஆலோசனைகளை உளவியல் ஆலோசனை வழங்கி அவர் மீண்டும் தான் வாழும் சமூகத்தில் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப உதவி செய்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து இவ்விடயத்தை அப்பெண்ணினதும் அவர் சார்ந்தோரின் பிறைவேசியைக் கூடக் கருத்தில் எடுக்காமல் ஓசிப் பேப்பர்களுக்கு விளம்பரம் தேட செய்தியாக்கி மகிழ்ந்திருக்கின்றனர்.

சபேசன் வாழும் மேற்குலக நாடுகளில் நடக்கும் கொடுமைகளை விட இது ஒன்றும் பெரிய பிரச்சனையே அல்ல. எத்தனையோ மேற்குலகப் பெண்கள், ஆண்கள் சமூக துர்நடத்தைகளால் உளவியல் பாதிப்புக்கு ஆளாகி தற்கொலை கூடச் செய்கின்றனர். இவை மேற்குலகிலும் நடந்து கொண்டுதான் உள்ளது.

இவர்களுக்கு வழிகாட்ட பத்திரிகைகளில் அவர்களின் படங்களைப் போட்டு அவர்களையும் அவர்கள் சார்ந்தவரையும் காட்டுமிராண்டிகள் என்று சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்பதில்லை நடைமுறை. மாறாக அவர்களின் பாதிப்புக்கள் என்ன அவற்றுக்கான தீர்வுகள் என்ன அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன என்பதைச் சொல்ல வேண்டியதுதான் ஒரூ அறிவார்த்தமான சமூகத்தின் முடிவாக இருக்க முடியும். அதுதான் செய்யப்படுகிறது.

சிந்திப்பார்களா இவர்கள்..???! தங்களை தாங்களே பகுத்தறிவுவாதிகள்.. பெண்ணிலைவாதிகள் என்று சொல்லச் செய்யும் சுய விளம்பரத்தைக் கைவிடுவார்களா..??! உண்மையான சமூக நோக்கம் இவர்களிடம் எழுமா..??! :D

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

எனக்கு குறித்த பெண்ணை யார் என்று தெரியாது.

உண்மையை சொல்வது என்றால் எனக்கு அந்தப் பெண்ணின் மீது பெரிதாக இரக்கம் ஒன்றும் வரவில்லை.

தாலிக்கு அவர் இவ்வளவு பெரிய மரியாதை கொடுப்பது என்னுடைய பார்வையில் முட்டாள்தனமே.

என்னுடைய கோபம் என்பது இந்த சமூகத்தின் மீதுதான்.

ஒரு பெண்ணை தாலிக்கு பெரும் மரியாதை கொடுக்கச் செய்ததும் சமூகம்தான். இன்றைக்கு அந்தப் பெண்ணிடம் இருந்து தாலியைப் பறித்ததும் அதே சமூகம்தான்.

இந்தக் கொடுமைக்கு மதத்தை துணைக்கு அழைக்கின்றார்கள்.

தாலியைப் பலவந்தமாக கழற்றியவர்களும், அதற்கு துணை போனவர்களும் சொல்கின்ற காரணம் இது "இந்துச் சம்பிரதாயம்". (அபி என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரில் இணைத்த கடிதத்தை ஒரு முறை படித்துப் பாருங்கள்)

இதனால்தான் நான் இங்கு கிந்து மதம் பற்றி பேச வேண்டி வருகின்றது. கிந்து மதத்தின் பெயரால் எத்தனை கொடுமைகள் நடந்தாலும், அதை ஏற்கின்ற அளவிற்கு மதவெறி உங்களுடைய கண்களை மறைப்பது வேதனையாக இருக்கின்றது.

மனிதனாக வாழப் பழகுங்கள்!

அத்துடன் நான் புதிதாக ஒன்றையும் இட்டுக்கட்டி எழுதவில்லை. அப்படி எழுதியிருந்தால் சுட்டிக் காட்டலாம். தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.

***

*** தணிக்கை செய்யப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

அன்றாட வாழ்வில் தமது விடயங்களில் உறவினர் நண்பர்கள் அயலவர் பெரியவர் என்ற அடுத்தவர்களின் தலையீடுகளிற்கு இடம் கொடுக்கும் குடும்பங்களில் மட்டுமே இவ்வாறான அத்துமீறல்கள் நிகழமுடியும். செத்தவீடு, திருமண வீடு என்பன எப்போதாவது நிகழ்வன. இத்தகைய அரிதான நிகழ்வுகளில் புதிதாக எந்த "அடுத்தவரும்" எழுந்தமானத்திற்கு அதிகாரம் செலுத்தத் தொடங்குவதும் இல்லை அது சாத்தியமும் இல்லை. ஏற்கனவே அதிகாரம் செலுத்திப் பழக்கப்பட்டவர்கள் தான் இவ்வாறான விசேடங்களிலும் அதிகாரம் செலுத்தித் திரிவர். எங்கேனும் அரிதாகப் புதிதாக ஆரெனும் சந்தடி சாக்கில் அதிகாரம் செலுத்தத் தலைப்படினும் கூட, தாமாக தமது முடிவுகளை எடுத்து வாழ்ந்து வந்தவர்களிற்கு அவ்வாறான பிறர் தலையீடுகளிற்கு இலகுவில் தெளிவாக எந்தச் சந்தர்ப்பத்திலும் முற்றுப்புள்ளி வைக்கத் தெரிந்திருக்கும். அன்றாட வாழ்வில்;, அவர் பெரியவர், இவர் உறவினர், அவ விடயம் தெரிந்தவ, இவ நன்கு படித்தவ என்று தமது வாழ்வின் முடிவெடுத்தல்களில் பிறரின் உதவிகளை அல்லது தலையீடுகளைத் தேடிச் சென்று அமைத்துக் கொள்ளும் குடும்பங்களில் தான் சில நேரங்களில் வேண்டப்படாத தலையீடுகளும் பிறரால் இவ்வாறு ஏற்படுத்தப்பட்டு விடுகின்றன என்பது எனது தாழ்மையான கருத்து.

புலம் பெயர் நாடுகளில், பலர் அந்நாடுகளின் மொழி மற்றும் இயல்புகளைக் கற்றுக் கொள்ளாது, தமது பிரத்தியேக கடிதங்கள் ஆவணங்கள் முதலியன கூட புதிய நாட்டின் மொழியில் இருக்கும் பட்சத்தில் அதனை அறிந்து கொள்வதற்கு பிறரை நாடிச் செல்கின்றனர். அவ்வாறு இவர்கள் அணுகுகின்ற பிறர், மொழிபெயர்ப்பாளராய் மட்டும் நிற்காது இவர்களின் பிரத்தியேகங்களை அறிந்தவராகவும், அதனை பொழுதுபோக்குச் செய்தியாகக் காவுபவராகவும், அதே நேரம் பிரத்தியேகங்களை அறிந்தவர் என்ற நிலையில் ஆலோசனைகூறத் தலைபடுபவராகவும் மாறிவிடுகின்றார். எனவே பல பிரச்சினைகளின் அடிப்படைப் பிரச்சினை கல்வியறிவின்மை, மொழிஅறிவின்மை, பொது அறிவின்மை என்ற விடயங்களிலேயே புலம்பெயர் நாடுகளில் ஆரம்பிக்கின்றது என்பது எனது கருத்து.

தமது முடிவுகளைத் தாமாக எடுத்துவரும் குடும்பங்களில் மாமனோ மச்சானோ தாத்தாவோ பாட்டியோ சித்தப்பாவோ பெரியப்பாவோ அதிகம் தலையிடார். நெருங்கிய உறவுகளாயினும் தமக்குரிய வட்டங்கள் எவை என்பதனை இவ்வுறவுகள் புரிந்து கொள்வர் என்பது எனது அபிப்பிராயம். எனினும் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் என்னவெனில் அவ்வாறு வட்டங்களிற்குள் நிற்கும் உறவினர் உதவி என்று வரும் போதும் அவ்வாறு தான் நிற்பர். எனவே அனைத்திற்கும் அடிப்படையாய் முதலில் ஒருவர் தன்னை கல்வி, பொருளாதாரம் என்ற அடைப்படை முனைகளில் தன்னிறைவுடையவராய் வளர்த்துக் கொள்வதே சமூக வளர்ச்சிக்கான முதற்படி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா!?சபேசன் அவர்களே!

ஒன்றும் வேண்டாம்!சரி நீங்கள் சொல்லுங்கள்?

புலம் பெயர்நாடுகளில் ஈழத்தமிழர்கள் எப்படி வாழ வேண்டும்?

அவர்கள் எந்த முறையில்,எவ்வழியில் ஈழத்திற்கு உதவ முடியும்?

சரி உதவ வேண்டாம் உபத்திரவம் கொடுக்காமல் இருக்க என்ன வழி?

தாலி கட்டி திருமணம் நடப்பதைபற்றி உங்கள் கருத்து என்ன?

இந்து மதம் அல்லது மதங்கள் எவ் வகையில் ஈழப்போராட்டத்தை சீரழிக்கின்றது?

காலங்காலமாக பின்பற்றப்பட்டுவரும் தமிழர் பண்பாடு,கலாச்சாரத்தை பற்றிய உங்கள் கருத்து என்ன?

புலம் பெயர் நாடுகளில் எமது கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டுமா?அல்லது அது தேவையில்லையா?

மதம் என்பது மனிதனுக்கு தேவையில்லையா?அல்லது இந்து மதம் மட்டும் உதவாக்கரையா?

இவர்கள் தான் என் அப்பா,அம்மா என உங்களை வளர்த்தவர்களை நம்புகின்றீர்களா?(கேவலம் ஒரு பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை வைத்து அல்லவே)

மதத்தையும் பெற்றோரையும் ஒப்பிடும் உங்களுடைய அறியாமையை எண்ண வெட்கமாக இருக்கின்றது.

மனித குலம் காலத்திற்கு காலம் வௌ;வேறு மதங்களில் இருந்து வந்திருக்கிறது. தமிழினமும் அதே போன்று பல்வேறு காலகட்டங்களில் பல மதங்களை பின்பற்றியிருக்கிறது. (ஒவ்வொரு முறை மதம் மாறும் போது அன்றைக்கும் சிலர் இந்த "அப்பா அம்மா" கதை பேசியிருக்கக்கூடும்)

மதம் என்பது ஒரு மனிதர்கள் உருவாக்கியுள்ள கடவுள் நம்பிக்கை சார்ந்த கட்டமைப்பு. இதில் எந்த ஒரு மனிதனும் அங்கம் வகிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

ஒரு மனிதன் ஒரு மதத்தில் இருந்தே தீர வேண்டும் என்ற சிந்தனை படு முட்டாள்தனமானது. மதம் என்பது மனிதனுக்கு தேவையானதோ கட்டாயமாதோ அல்ல.

மதத்தை பெற்றோரோடு ஒப்பிடுகின்ற அளவிற்கு மதம் உங்கள் மூளையை மழுங்கடித்திருப்பதில் இருந்தே மதம் எவ்வளவு தீங்கானது என்று புரிகின்றது.

ஈழத்திற்கு என்ன செய்யலாம் என்பதை தனியாக ஆராய்வோம்

தாலி விடயத்திற்கு வருகின்றேன். தமிழர்களுடைய பண்பாட்டில் தாலிக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதே வேளை தாலியை நான் எதிர்க்கவும் இல்லை. ஆனால் தாலிக்கு கொடுக்கப்படும் அதீதாமான மகத்துவமே எனக்கு முட்டாள்தனமாக தெரிகிறது.

இந்து மதம் ஈழப் போராட்டத்தை பல வழிகளில் சீரழிக்கின்றது. இந்து மதத்தில் உள்ள வர்ணாச்சிர சிந்தனை காரணமாக இந்தியாவில் உள்ள ஆதிக்க வர்க்கம் எங்களுடைய போராட்டத்தை எதிர்க்கின்றது. புலத்தில் ஈழத் தமிழர்களின் பெருந்தொகை நிதி மதத்தின் பெயரில் வீணாக்கப்படுகின்றது. ஜேர்மனியில் பிறேமன் நகரில் மூன்று இலட்சம் யூரோக்கள் செலவில் எமது ஈழத் தமிழர்கள் கோயில் கட்டுகிறார்களாம்.

இன உணர்வை மீறியதாக மத உணர்வு இருப்பது ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு எப்பொழுதுமே சீரழிவையே தரும்.

இன்னொரு புறம் "யொகோவா, யேசு அழைக்கிறார்" என்று எமது போராட்டத்தையே மறந்து போய் ஒரு கூட்டம் அலைகிறது.

தமிழர் கலாச்சாரம் என்பது பற்றி சொல்வது என்றால், இன்றைக்கு தமிழர்கள் பின்பற்றுவது தமிழர் பண்பாடு அல்ல. இந்து ஆரிய பார்ப்பனியப் பண்பாட்டையே தமிழர்கள் தமது பண்பாடு என்று நம்பி பின்பற்றி வருகின்றார்கள். ஆகவே எமது பண்பாடு குறித்த தேடல் அவசியம். இன்றைக்கு நாம் பின்பற்றுகின்ற பண்பாட்டின் பெரும் பகுதியை தூக்கி எறிய வேண்டும்.

இன்றைக்கு பின்பற்றுகின்ற பண்பாடு காலம் காலமாக பின்பற்றுகின்ற பண்பாடு அல்ல. இது இடையில் வந்த பண்பாடு. ஆகவே உங்களுடைய கேள்வியே தவறு.

நீங்கள் நிறையக் கேள்விகள் கேட்டுள்ளீர்கள். நான் சுருக்கமாகவே பதில் சொல்லியுள்ளேன். அத்தனை கேள்விகளுக்கும் விரிவாக பதில் சொல்வது என்றால் கருத்து மிகவும் நீண்டு விடும்.

உங்களுக்கு உள்ள சந்தேகங்களை நீங்கள் ஒவ்வொன்றாக கேளுங்கள். நானும் ஒவ்வொன்றாக விரிவாக விளக்கமாக பதில் தருகின்றேன்.

இனிய இரவுகள். நாளை சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் உள்ள ஆதிக்க வர்க்கம் எங்களுடைய போராட்டத்தை எதிர்க்கின்றது.

இதே வர்க்கம் தானாக்கும் ஈழப் போராட்டத்தை ஒரு கட்டத்தில ஆரம்பிச்சும் வைச்சது..! இந்தியா எமது போராட்டத்தை மத அடிப்படையில் வெறுக்கவில்லை. அதன் பிராந்திய நலன் நாடி எமக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டியது இராஜதந்திர நகர்வுகளாலேயே தவிர குஜராத் மோடியையும் ஜெயலலிதாவையும் இந்தியவையும் பார்ப்பர்னியள் உலகம் என்று திட்டிக் கொண்டிருப்பதால் அல்ல. எந்த ஒரு அறிவார்த்தமான சமூகம் இதைச் செய்யாது..! :(:lol:

Edited by nedukkalapoovan

தூயவன்!

நான் எவ்வளவு நிதி கொடுக்கின்றேன் என்று இங்கு களத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று உண்மையிலேயே எதிர்பார்க்கிறீர்களா? எனக்கு உங்களுடைய கேள்வி புரியவில்லை.

இந்திய ஆதிக்க வர்க்கம் அன்றைக்கு ஈழப் போராட்டத்தை ஆதரித்ததன் காரணத்தை, அதற்கு பின்னால் இருந்த சூழ்ச்சிகளையும் பாவரலேறு பெருஞ்சித்தனார் போன்றவர்கள் அம்பலப்படுத்தியுள்ளார்கள்.

பிராந்திய நலனின்படி தமிழீழமே இந்தியாவிற்கு நன்மை பயக்கும். ஆனால் அதைத் தடுப்பது இந்துப் பார்ப்பனிய சிந்தனைதான்.

தமிழ்த் தேசிய இன விடுதலை என்பது, இந்திய உபகண்டத்தில் இருக்கும் தேசிய இனங்களின் அரசியற் போரட்டத்தை விரைவு படுத்தி, இந்திய உபகண்டத்தில் தேசிய இன அடிப்படையிலான மானில அரசுகளைப் பலமுள்ளதக்கும்.இதனால் இந்தியாவை மத்தியில் இருந்து ஆண்டு கொண்டிருக்கும் உயர் சாதிப் பார்ப்பனர்கள் தங்களது ஆட்சி அதிகாரத்தை இழக்க நேரிடும் என்னும் அச்சமே இந்திய அதிகார வர்க்கம் எமது போராட்டத்தை எதிர்க்க வேண்டிய அடிப்படைக் காரணம்.இந்தியா எமக்கு உதவி செய்ததாக வரலாற்றைத் திரிதுக் கூறும் மோசடிகளுக்கு பல ஆதரங்களை பலர் எழுதி விட்டனர்.அமைதிப்படை, இந்திய சிறிலங்கா ஒப்பந்தம் என பல வற்றையும் கண்டு விட்டோம். ரோவினால் எவ்வாறு விடுதலை அமைப்புக்கள் கட்டுப்படுத்தப்பட்டன,சிதைக்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவோ, அங்குள்ள இந்து வெறியர்களோ ஈழப்போராட்டத்தை ஆதரித்தது இந்திய நலன் கருதியே தவிர ஈழத்தமிழர்களின்பால் கொண்ட அனுதாபத்தினால் அல்ல. அவர்கள் இப்போது எதிர்ப்பதும் தமது பிராந்திய நலன் கருதியே தவிர மத நம்பிக்கையினால் அல்ல.

தனித்து மட்டுப்படுத்தப்பட்ட மொழிவழி சுயாட்சி முறையை கொண்டுள்ள இந்தியாவால்... ஈழத்தமிழர் வேண்டுகிற ஆகக் குறைந்த தீர்வான உள்ளக சுயநிர்ணய முறையிலான சமஸ்டி தீர்வைக்கூட ஆதரிக்க முடியாதுள்ளது.

ஆனால் இதனை வெளிப்படையாக குறிப்பிடாமல் .. ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறது. இதற்கான போலியான வியாக்கியானத்தை இந்து வெறியர்களே வெளியிடுகிறார்கள். அதற்கு மதமும் பிராமணிய - சூத்திரர் வேறுபாடும் பயன்படுகிறது.

கொலை வெறியன் நரேந்திர மோடியை ஆதரிக்கிற அளவுக்கு ஈழத்தமிழர்களில் சிலருக்கு மதவெறி பிடித்துள்ளது என்றால் இவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கிறதைத் தவிர வேறு வழியில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தின் மூலம் இந்தியாவை ஆள நினைக்கும் பார்ப்பனியக் கும்பலுக்கு சாவு மணியை , ஈழ விடுதலைப் போர் விரைவு படுத்தும்.பார்ப்பனியத்தின் ,இந்துவாவின் எல்லாச் சதிகளையும் முறையடித்து நாமும் வெல்வோம், இந்தியாவில் அடக்கப்படும் எல்லா தேசிய இனங்களும் வெல்லும் நேபாளம் முதல் தமிழ் நாடு வரை அது தான் நடக்கிறது, இனியும் தொடர்ந்து நடக்கும்..இங்கிருக்கும் இந்து மத வெறியர்களின் விருப்பத்துக்கு மாறாக நடக்கும்.

ஈழத்தமிழர்களின் விடுதலை என்பது இந்திய நலனை எந்த வகையிலும் அச்சுறுத்த அமையாது. அதற்கேற்பத்தான் நகர்வுகள் செய்யப்படுகின்றன. இந்திய ஆளும் வர்க்கம் தெரிந்து கொண்டே ஈழத்தமிழ் மக்களுக்கு இழைந்த துரோகத்துக்காகவும் தவறுகளுக்காகவும் தான் சில துன்பியல் நிகழ்வுகளைச் சந்தித்ததே தவிர.. மத அடிப்படையிலோ.. அல்லது இந்தியாவின் ஒருமைப்பாட்டை சகோதரத்துவத்தை சிதைக்கும் நோக்கோடோ.. ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் நகர்த்தப்படவில்லை.

இதை விடுதலைப்புலிகள் உட்பட அனைவருமே கூறிவந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயத்தை தலை கீழாக்கக் கூடிய கருத்துக்களை சிலர் பரப்ப முனைவது ஈழத்தில் மக்கள் தமது உரிமைக்காகப் போராடும் செயலை இந்தியாவின் நலங்களுக்கு எதிரானதாகக் காட்டி இந்தியாவின் பகைமையை சந்தேகத்தை மேலும் வளர்ப்பது போன்ற செயல் என்பதுடன் ஈழப்போராட்டத்தை சிதைக்கும் நோக்கில் அமைந்த உளவாளிகளின் செயலை ஒத்ததாகவும் அமைந்துள்ளது..!

இப்படியான தனிநபர்களின் நிலைப்பாடுகளை.. ஈழத்தமிழ் மக்களினதோ.. விடுதலைப்புலிகளினதோ நிலைப்பாடாக எவரும் எடுத்துக் கொள்ளக் கூடாது..! ஈழத்தமிழ் மக்கள் தாங்கள் தங்கள் பூர்வீக மண்ணில் இழந்துவிட்ட வாழ்வுரிமைக்காகப் போராடுகின்றனரே தவிர.. இந்தியாவில் இந்து மத அழிப்பை வேண்டியோ.. இந்திய ஒருமைப்பாட்டை வேண்டியோ.. இந்திய சமூக மாற்றங்களைக் கோரியோ போராட்டம் நடத்தவில்லை. இதைத் தெளிவாக இந்திய மக்களும் உலக தமிழ் மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.