Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யா-எலவில் குண்டு வெடிப்பு - அமைச்சர் டி.எம்.தசநாயக்க பலி

Featured Replies

கம்பகா மாவட்டத்தில் உள்ள யா-எலப் பகுதியில் இன்று காலை 10.45 மணியளவில் சிறிலங்காவின் அமைச்சர் டி.எம் தசநாயக்கவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி.எம் தசநாயக்க தனது தொடரணியில் சென்றவேளை இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன்போது அமைச்சருக்கும் சிறிய காயமேற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்த நிலையில் ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

செய்தி ஆதாரம்: சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணையம்

Edited by மோகன்

எதிலையும் கானோமெ? இது உண்மையா?

  • தொடங்கியவர்

COLOMBO, Jan 8 (Reuters) - A roadside bomb targeting a minister's convoy exploded between the Sri Lankan capital and the island's only international airport on Tuesday, the military said, but there were no immediate details of any casualties.

The blast in the town of Ja-Ela, 12 miles (19 km) north of Colombo, was aimed at the car of Nation Building Minister D.M. Dassanayake, the military said

5 civilians and government minister D.M Dassanayake injured and admitted to NCTH (ragama) hospital..

  • தொடங்கியவர்

அமைச்சர் டி.எம் தஸாநாயக்கவின் வாகனத்தை இலக்கு வைத்து கிளேமோர் தாக்குதல் Advertisements

1/8/2008 12:06:53 PM

வீரகேசரி இணையம் - ஜா-எவவில் இன்று செவ்வாக்கிழமை காலை கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இன்று காலை 10.35 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.எம் தஸாநாயக்க பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து இக்கிளேமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.ஜா-எவ ருக்மணி சிலை சந்தியருகே இன்று காலை இடம்பெற்ற இக்கிளேமோர் தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களுள் அமைச்சரும் பாராலும்ன்ற உறுப்பினருமான டி.எம்.தஸாநாயக்கவும் அடங்குவதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

காயமடந்தவர்கள் ராகம் வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதக இராணுவ பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்

VEERAKESARI.LK

  • தொடங்கியவர்

Colombo blast wounds Sri Lankan Minister

[TamilNet, Tuesday, 08 January 2008, 05:52 GMT]

Sri Lankan Minister of Nation Building, D. M. Dassanayake and four others were wounded in a Claymore blast near Ja-Ela junction, 18 km northeast of Colombo city, Tuesday around 11:00 a.m., Police said. Mr. Dassayanake was on his way to the Sri Lankan parliament to take part in the first day of parliament sessions.

The blast has taken place 6 km away from the Katunayake International Air Port, near Rukmani Devi statue.

Dassanayake has sustained minor wounds, according to Sri Lankan military spokesman.

TAMIL NET

தற்போது கிடைக்கப்பட்ட செய்திகளின் படி கிளைமோர் தாக்குதல் காரணமாக காயமுற்ற அமைச்சர் டி.எம். தசநாயக்கா மரணமடைந்ததாக ராகம வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜானா

Edited by Janarthanan

cabinet minister of Nation Building D.M. Dassanayake dies.

  • கருத்துக்கள உறவுகள்

காயமடைந்த அமைச்சர் இறந்து விட்டார்.

Sri Lanka minister dies after roadside bomb attack

COLOMBO (Reuters) - A Sri Lankan government minister died on the operating table on Tuesday after his vehicle was targeted by a suspected Tamil Tiger roadside bomb north of the capital, a senior hospital official said.

Nation Building Minister D.M. Dassanayake's vehicle was hit by the blast on Tuesday morning, in the town of Ja-Ela, 12 miles north of Colombo, on the main road that leads to the island's only international airport.

"He died a short while ago," said Lalini Gurusinghe, deputy director of the government teaching hospital in the nearby town of Ragama, where the minister and 10 others wounded in the blast were admitted.

(Reporting by Ranga Sirilal; Writing by Simon Gardner; Editing by Alex Richardson)

http://www.reuters.com/article/worldNews/i...L10792020080108

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் டி.எம் தஸாநாயக்கவின் வாகனத்தை இலக்கு வைத்து கிளேமோர் தாக்குதல் - அமைச்சர் பலி

[Tuesday January 08 2008 07:08:19 AM GMT] [saravanan]

இன்று காலை 10.35 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.எம் தஸாநாயக்க பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து இக்கிளேமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜா-எவ ருக்மணி சிலை சந்தியருகே இன்று காலை இடம்பெற்ற இக்கிளேமோர் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட அமைச்சர் உயிரிளந்துள்ளார் என்று ராஹம வைத்தியசாலையில் பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவல்ர்களான படையினர் இருவர் உட்பட மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

இதேவேளை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ராகம வைத்தியசாலை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

புத்தளத்தில் இருந்து இன்றுகாலை கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்தபோதே அவரது வானத்தை இலக்குவைத்து கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதக இராணுவ பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடிக்கண்காணிப்பின் கீழ் இருக்கும் அமைச்சே தேசத்தைக்கட்டியெழுப்பும் அமைச்சாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைச்சின் கீழ் பல்வேறு அமைச்சர்கள் பணியாற்றுகின்றனர்.

http://www.tamilwin.net/article.php?artiId...;token=dispNews

இவா பயங்கரவாத அரசில் தேசத்தைக் கட்டி எழுப்பும்? தேச நிர்மான அமைச்சராக இருந்தவர்.

ஜானா

சிறிலங்கா தலைநகர் கொழும்பு யா-எலப் பகுதியில் இன்று இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சர் டி.எம்.தசநாயக்க (வயது 54) கொல்லப்பட்டுள்ளார். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது அமரர் மகேஸ்வரனின் கொலையை மறைக்க எடுத்த நடவடிக்கைபோல் தெரிகின்றது, சரியாக ஒரு கிழமையின் பின்னர் இந்தச் சம்பவம் நடைபெற்றது சந்தேகத்தை இன்னமும் வலுவடையவைக்கின்றது,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankan minister dies in blast

A Sri Lankan minister, DM Dassanayake, has died in hospital after his convoy was hit by a powerful roadside blast near the capital, doctors said.

The minister for nation-building was in a convoy between Colombo and the international airport when the bomb went off. Seven others were wounded.

The blast, in Ja-Ela town, 12 miles (19kms) north of Colombo, has been blamed on the Tamil Tiger rebels.

In recent months, fighting between troops and rebels has worsened.

"He died a short while ago," news agency Reuters quoted Lalini Gurusinghe as saying. Mr Guruginhe is deputy director of the hospital in the town of Ragama, where the minister and other injured were admitted.

According to reports, the minister suffered severe head injuries in the attack and died while undergoing surgery.

BBC.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கொல்லப்படுவதற்கு சரியான காரணம் இருக்கலாம். இவரது திருவிளையாடல்கள் தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன் !!!

இவர் கொல்லப்படுவதற்கு சரியான காரணம் இருக்கலாம். இவரது திருவிளையாடல்கள் தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன் !!!

இவர் ஒரு துவேஷி எண்டு கேள்விப்பட்டிருக்கிறேன்....

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோதும்..அவர் அமரராவதற்கு....ஆனாலும் இதைவிடவும் பலமான காரணம் இருக்கலாம்.

இவர் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர். றவுடி என்ற சொல்லுக்கு உதாரணம் காட்டக் கூடியவர். இவரது தொகுதியான ஆனமடுவ பகுதியில் வேறு எவரும் வாக்குக் கேட்டுப் போக முடியாது. இவரது அராஜகங்கள் காரணமாக அப்போதைய ஐ.தே..க வின் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அசோக வடிவமங்காவ தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தே ஒதுங்கிக் கொண்டார். பின்னர் ஐ.தே.க இன்னொரு றவுயொன ரங்கே பண்டாராவைக் (பொலீஸ் அதிகாரி) கொண்டு வந்து அரசியல் செய்ய வேண்டியிருந்தது. பல கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர். ஏனைய அரசியல் வாதிகளை; போல அடியாட்களை ஏவி விட்டு தான் மாளிகையில் இருப்பவர் அல்ல. தானே நேரடியாக களத்தில் இறங்குபவர். சினிமாவில் காட்டுவார்களே அரசியல்வாதி. அது போலவே வாழ்ந்தவர். புத்தளம் மாவட்டத்திலிருந்த தேக்கு மரங்களை சட்டவிரோதமாக வெட்டி விற்று பெரும் பணம் சம்பாதித்தவர். பல அரச காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புச்செய்தவர்.

இப்படி நிறைய விடயங்களைச் சொல்லலாம். ஆனால் இனவாதம் இல்லாதவர் (ஒப்பீட்டளவில்)

இவருக்கு நிறைய எதிரிகள். பலரும் இவரைக் குறிவைத்திருக்கலாம். ஆனால் தமிழர் தரப்பு இந்தச் செயலைச் சய்திரு;நதாலும். அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது பெரும்பாலான சிங்கள மக்கள் மஹிந்தவின் யுத்தத்தை ஆதரிக்கின்றனர். அவரது வெற்றிக் கோசங்களைக் கேட்டு மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். யுத்தத்தின் வலி அவர்களுக்கும் தெரியவேண்டும். அவர்களும் மரண பயத்துடன் வாழ வேண்டும். அப்பொழுதுதான் அந்த உணர்வு யுத்த எதிர்ப்புணர்வாக மாறும். சாதாரண மக்கள் அது யாராக இருந்தாலும்: அநியாயமாகக் பாதிக்கப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் சிங்கள அரசிற்குத் தெரிந்த புரிகின்ற ஒரே பாசை வன்முறையாகத் தான் இருக்கிறது.

தென்பகுதி முழுவதையுமு; பதட்ட நிலையில் வைத்திருப்பதே யுத்த எதிர்ப்புணர்வு சிங்களப் பகுதியில் அதிகரிக்க ஒரே வழி என்கிற போது தமிழர் தரப்புக்கு மாற்று வழி இல்லை என்றே படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தசநாயக்காவை தசம் பேரோடு கிளைமர்திருப்பலிக்கு கொடுத்துள்ளதாமே மகிந்த கொம்பனி!

மிகமோசமான தமிழ்துவேசியே ஆனாலும் எதிரியின் மனித உரிமைக்காககூட தமிழர்கள் பாடுபடுபவர்கள் என்று எமது கவலைகளை வெளிப்படுத்துவதனூடு எமது கண்ணியத்தை உலகுக்கு காட்ட விரும்புகின்றோம்.

புலிகள் தமிழர்களுக்கு மட்டும் அல்ல சிங்களவர்களுக்கும் சேர்த்தே விடிவை மீட்டு தரவேண்டும் என்று பிராத்திக்கின்றோம்.

Minister D.M. Dassanayaka has died after a claymore attack at Ja-Ela

2080DamuAttack_J.jpg

Minister D.M. Dassanayaka has died after a claymore attack at Ja-Ela Rukmani Devi Junction in Colombo today. A claymore bomb blasted at Negombo main road targeting Minister D.M. Dassanayaka's Vehicle, at around 10.35 am this morning, says Media Centre for National Security.

Minister D.M. Dassanayaka and another 11 Civilians injured were admitted to the Ragama teaching hospital for medical attention. Minister died while a operation in ICU.

Edited by AJeevan

புலிகள் தமிழர்களுக்கு மட்டும் அல்ல சிங்களவர்களுக்கும் சேர்த்தே விடிவை மீட்டு தரவேண்டும் என்று பிராத்திக்கின்றோம்.

நம்ம குறுக்கு எங்கே?

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி

அமைச்சர் பெருமான் அவர்கள் மட்டும்

இறந்திருக்கன்றார்???

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.....

  • கருத்துக்கள உறவுகள்

கிளேமோர் குண்டுத்தாக்குதலில் இலங்கை அமைச்சர்இ மெய்பாதுகாப்பாளர் பலி

இலங்கையின் தலைநகர் புறநகர்ப்பகுதியான ஜா-எல பிரதேசத்தில் கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதல் ஒன்றில் இலங்கை அமைச்சரொருவரரும்இ அவரது மெய்பாதுகாப்பு அதிகாரியும் கொல்லப்பட்டதுடன் ஐந்து சிவிலியன்கள் உட்பட மேலும் பதினொருபேர் காயமடைந்திருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துவெளியிட்ட இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அமைச்சரவை அந்தஸ்தற்ற தேச நிர்மாண அமைச்சர்இ டி.எம். தசாநாயக்கவின் மோட்டார் வாகன தொடர் நீர்கொழும்பு பிரதான வீதியூடாக தலைநகர் கொழும்பை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது சுமார் 10.30 மணியளவில் அவர் பயணித்துக்கொண்டிருந்த லாண்ட் குரூசர் சொகுசு வாகனம் ஜா-எல சந்திக்கும்இ ருக்மணிதேவி சந்திக்கும் இடையில் கிளேமோர் குண்டுத்தாக்குதலிற்கு உள்ளானது.

இதன்போது அமைச்சர் டி.எம். தசநாயக்கஇ அவரது மெய்பாதுகாப்பாளர்கள் சிவிலியன்கள் உட்பட சுமார் பதினொருபேர் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாகவே அருகிலுள்ள இராகம தேசிய போதனா வைத்தியசாலைக்கு விரையப்பட்டனர். ஆனாலும் அங்கு இரண்டு மணிநேர அதிதீவிர சத்திர சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் அமைச்சர் உயிரிழந்தார்.

அதன் ஒருசில மணித்தியாலங்களின் கடுமையான காயங்களிற்குள்ளாகியிருந்த அவரது மெய்பாதுகாப்பாளர்களில் ஒருவரும் பின்னர் சிகிக்சைகள் பயணிக்காத நிலையில் உயிரிழந்ததாக ராகம வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பிற்கு வடக்கே சுமார் 12 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள சீதுவ ஜா-எல பகுதியில் இடம்பெற்ற இந்தக் குண்டுத் தாக்குதலை அடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டிருக்கின்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.