Jump to content

தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு


Vasampu

Recommended Posts

முதல்வர் கருணாநிதி அறிவிப்பு தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு

அரசாணை விரைவில் வெளியாகும்

சென்னை, ஜன.11: "தமிழ்ப் புத்தாண்டு தை முதல்நாள்தான் பிறக்கிறது என்று 500 புலவர்கள் கூடி கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்கள். அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நாள் விரைவில் வரும்" என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தமிழ் மையம், சுற்றுலா வளர்ச்சி பண்பாட்டுத் துறை சார்பில் நடக்கும் சென்னை சங்கமம் கலைவிழாவை ஐஐடி திறந்தவெளி அரங்கில் முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:

பொங்கல் திருநாளையட்டி நடக்கும் இந்த விழா, கடந்த ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு தொடர காரணமான கனிமொழி, கஸ்பர் மற்றும் நண்பர்களுக்கு பாராட்டுகள். எனக்கு ஒரு குறை.

கடந்த ஆண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை காணும் வாய்ப்புகளை நாம் பெற்றோம். இந்த ஆண்டு ஒரே நிகழ்ச்சியை பல வகையில் வகைப்படுத்தி நடத்தியிருக்கிறார்கள். ஒரே நிகழ்ச்சியில் அவ்வளவு பாராட்டையும் பெற்றிருக்கிறார்கள்.

இந்த ஆட்டத்தை தப்பாட்டம் என்று சொல்வதுண்டு. தமுக்கு என்ற கருவி, தப்பு என்று மருவி ஒலிப்பதால் தப்பாட்டம் என்று கூறுவார்கள்.

நம் பண்பாடு, கலை, கலாசாரம், இலக்கியம், வரலாறு, இன எழுச்சி இவை எல்லாம் இந்த விழா மூலம் எடுத்துக்காட்டப்படுகிறது. "ஞாயிறு போற்றுதும்"என்ற வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. சிலப்பதிகாரத்தில், "ஞாயிறு போற்றுதும், திங்கள் போற்றுதும், மாமழை போற்றுதும்" என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவார்.

பள்ளிச் சிறுவர்கள் சனிக்கிழமை முடிந்து ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்று எதிர்பார்த்து அன்று விடுமுறை என்பதால் ஞாயிறைப் போற்றுவார்கள். இன்று நாம் பார்த்த ஞாயிறு போற்றுதும் பாடல், சூரியனைப் போற்றும் பாடல்.

நான் தினமும் விடியற்காலையில் யோகா பயிற்சி செய்வேன். எனக்கு பயிற்சி அளிப்பவர் பெரிய ஆசிரியர். அவர் பெயர் தேசிகாச்சாரி. பயிற்சி அளிக்கும்போது முதலில், "நாராயண நமஹ" என்றார்.

நான் அவரது ஆன்மிக உணர்வை புண்படுத்தக் கூடாது என்பதால் நாராயண நமஹ என்று சொல்வதில் எனக்கு வருத்தமோ, வெறுப்போ இல்லை. அதை நல்ல தமிழில் சொல்லக்கூடாதா? என்றேன். "இந்த அளவு சொல்தான் இருக்க வேண்டும்" என்றார் அவர். நாராயண என்றால் யாரை குறிக்கிறது? என்றேன். "சூரியன்" என்றார். அப்படியானால், "சூரியனே நமஹ"என்றால் என்ன என்றேன். அப்படியே வைத்துக்கொள்ளலாம் என்றார்.

பிறகு அதுபற்றி நான் சிந்தித்து, ஞாயிறு என்றால் சூரியன், எனவே "ஞாயிறு போற்றுதும்"என்ற சொற்றடரை பயன்படுத்தலாமா? என்றேன். அதை அவர் முணுமுணுத்து பார்த்து விட்டு நன்றாக இருக்கிறது என்றார். யோகா வகுப்பில் அவர் சொல்லி நான் திரும்பச் சொல்வது ஞாயிறு போற்றுதும் என்ற சொற்றொடர்தான்.

எனவே இந்த சொற்றொடர் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த யோகா ஆசிரியர் வேறு நண்பருக்கு பயிற்சி தந்தபோதும் ஞாயிறு போற்றுதும் என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். சிலப்பதிகாரம் பிற இடங்களுக்கும் பரவத் தொடங்கியிருக்கிறது என்று மகிழ்ந்தேன்.

சங்கமம் போற்றுதும் என்று போற்றிப் பாடி இது ஆண்டுதோறும் நடக்க வேண்டும், பொங்கல் திருநாளை நினைவூட்டும் வகையில் தொடர்ந்து நடக்க வேண்டும்.

தமிழரின் புத்தாண்டு தை முதல்நாள் என்று 500 புலவர்கள் கூடி கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்கள். அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நாள் விரைவில் வரும்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், கனிமொழி எம்.பி., கஸ்பர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். "ஞாயிறு போற்றுதும்" என்ற தலைப்பில் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

நன்றி தினகரன் நாளிதழ்

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply

தை, மாசி, பங்குனி போன்றவைகள் தமிழ் மாதங்களா? அல்லது தமிழ் சொற்களா? இதை 500 புலவர் பெருந்தகைகளும் முதல்வரிடம் கண்டுபிடித்து சொல்லவில்லையா? :lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரையில் இருந்து தை மாதம் வரைக்கும் புத்தாண்டை நகர்த்தியாகி விட்டது. பிறகு அந்த நாளில் கொண்டாடுவதை விட, ஐனவரி 1ம் திகதி தான் கொண்டாடுவது சரி எனப் பல்லைக் காட்டிக் கொண்டு மாத்தி விட வேண்டியது தான்.

பனி விழுங்கின்ற மேற்குநாடுகளில் லீவும் கிடைக்காது. குளிருக்குள் நின்று வெளியால் பொங்கவும் முடியாது. சித்திரை என்றாலவது பரவாயில்லை. மெலிய குளிரில் சமாளிக்கலாம். அதுவும் இல்லாமல்.... இப்படியே தமிழனம் *** அழியப் போகின்றது.

தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Link to comment
Share on other sites

பனி விழுங்கின்ற மேற்குநாடுகளில் லீவும் கிடைக்காது. குளிருக்குள் நின்று வெளியால் பொங்கவும் முடியாது. சித்திரை என்றாலவது பரவாயில்லை. மெலிய குளிரில் சமாளிக்கலாம்.

சித்திரை எண்டா மெல்லிய குளிர். ஏன் ஆனி, ஆடி, புரட்டாதியில் ஒருநாளில் பொங்கலை வைத்தால் குளிரே இல்லாமல் பொங்கலாமெல்லே. :lol:

ஐனவரி 1ம் திகதி தான் கொண்டாடுவது சரி எனப் பல்லைக் காட்டிக் கொண்டு மாத்தி விட வேண்டியது தான்.

நம்மால் பயன்படுத்தப்படும் நாட்காட்டிப்படி நடைமுறை ஆண்டின் முதல் நாளை அதாவது சனவரி 01ம் நாளை புத்தாண்டு என்று, நாங்கள் கொண்டாடுறது சித்திரையில் கொண்டாடப் படுற புத்தாண்டைவிட சிறப்பானது.

இப்படியே தமிழனம் *** அழியப் போகின்றது.

இப்ப என்னவோ தமிழினம் வளமாக வாழ்ந்து கிழிக்குதாக்கும்.

மேற்கோள் காட்டப்பட்ட கருத்து திருத்தப்பட்டுள்ளது. - இணையவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் பொங்கல் உழவர் பண்டிகை. தமிழர்கள் விவசாயிகளாக இருந்த காரணத்தால் உழவர் பண்டிகையான பொங்கலை... சூரிய வழிபாட்டுடன் தொடர்புடைய பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

பொங்கலை தை மாதத்தில் கொண்டாடக் காரணம்.. வயல் நிலங்களில் விளைச்சல் அந்த மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது என்பதால், அந்த மாதத்தில் மக்கள் தங்கள் உழைப்புக்கு ஓய்வுகொடுத்து.. உழைப்புக்கு பலன் தந்த சூரியனை வழிபடுகிறார்கள்.

சூரியன் தான் உலகின் சக்தியின் முதல். அதில் இருந்து வரும் ஒளிச் சக்திதான் வயல்களில் உள்ள தாவரங்களால் உணவு வடிவில் இரசாயன சக்தியாக சேமிக்கப்படுகிறது. அதுதான் பின்னர் எமது உடலை இயக்கும் சக்தியாக உணவை உட்கொள்ளும் போது மாற்றப்படுகிறது. இதுதான் இதன் பின்னால் உள்ள அறிவியல்.

ஆகவேதான் தமிழர்கள் சூரியனுக்கு நன்றி செய்ய தை அறுவடை முடிந்த கையோடு.. அந்த மகிழ்வான ஓய்வான நேரத்தில் பொங்கலிட்டு.. கூடிக் குலாவி மகிழ்கின்றனர். அவர்கள் இதை புத்தாண்டை வரவேற்க என்று கொண்டாடவில்லை.

சித்திரைப் புத்தாண்டு என்பது ஆண்டு கால காலநிலை மாற்றத்தோடு அமைத்துக் கொண்டாடப்படுகிறது.

மாதங்கள்.. கிழமைகள் எல்லாம் மிகப் பிற்காலத்தில் மனிதன் உருவாக்கியவை. ஆனால் முன்னோர் காலநிலை மாற்றங்களை இயற்கையில் நிகழும் மாற்றங்களின் அடிப்படையில் அவதானித்து அதன் முறையில் தீர்மானித்ததுதான்.. சித்திரையில் புத்தாண்டு என்று கொண்டாட ஆரம்பித்தனர்.

மேற்கிலும் (இடைவெப்ப வலய நாடுகளில்.. நனி குளிர் நாடுகளில்) இலை தளிர் காலம்.. அதாவது அடுத்த சுற்றுக்கு தமது வாழ்க்கை தயார் செய்தல் அக்காலத்தில் (சித்திரையை ஒட்டி) தான் கிட்டத்தட்ட ஆரம்பமாகிறது..!

ஆனால் தமிழகத்தில் சித்திரைப் புத்தாண்டு அவ்வளவு சிறப்புப் பெறுவதில்லை. அந்த வகையில் அவர்கள் ஆங்கிலேயர் புகுத்திய ஜனவரி 1 என்ற புத்தாண்டை ஒட்டி.. தமிழர் புத்தாண்டையும் நகர்த்த எண்ணியுள்ளனரே தவிர.. பொங்கல் கொண்டாடப்படுவதற்கு காரணம்.. புத்தாண்டை வரவேற்பதல்ல.

அது சூரியனுக்கு நன்றி செய்யும் சூரிய வழிபாட்டின் தொன்மையோடமைந்த உழவர் பெருநாள். தமிழர்கள் உழவுத் தொழிலை பிரதானமாகச் செய்து வந்ததால் அது தமிழர் பெருநாளாகியும் நிற்கிறது.

சூரிய வழிபாடு இந்து மதத்தின் ஓர் அம்சமாகியுள்ளமை சிலருக்கு கசந்தாலும் அதுவும் உண்மை..! :lol:

Link to comment
Share on other sites

இந்து மதம் என்று நினைத்துக் கொண்டு பழங்காலத்து கிரேக்க மக்களின் மக்களின் மதத்தை பின்பற்றும் மக்கள் வணங்கும் சூரியனுக்கும் தமிழர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

கிரேக்க-இந்து மதக் கடவுளான சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பூமியை வலம் வந்து கொண்டிருக்கிறானாம்.

இதை வணங்குகின்ற அளவிற்கு தமிழர்கள் முட்டாள்கள் அல்ல. இந்தச் சூரியனுக்கும் தமிழர்களுடைய பொங்கலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்துக்கள் வணங்குகின்ற சூரியனுக்கும் ஐரோப்பியர்கள் வணங்கிய சூரியனுக்கும்தான் சம்பந்தம் இருக்கிறது.

இந்துக்கள் அறிவில்லாமல் ஐரோப்பியர்கள் முன்பு வணங்கிய கடவுள்களை இப்பொழுதும் வணங்கிக் கொண்டு, மதம் மாறுவதைப் பற்றி கதை பேசுவார்கள்.

இந்த உண்மை கசக்கத்தான் செய்யும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதம் என்று நினைத்துக் கொண்டு பழங்காலத்து கிரேக்க மக்களின் மக்களின் மதத்தை பின்பற்றும் மக்கள் வணங்கும் சூரியனுக்கும் தமிழர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

கிரேக்க-இந்து மதக் கடவுளான சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பூமியை வலம் வந்து கொண்டிருக்கிறானாம்.

இதை வணங்குகின்ற அளவிற்கு தமிழர்கள் முட்டாள்கள் அல்ல. இந்தச் சூரியனுக்கும் தமிழர்களுடைய பொங்கலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்துக்கள் வணங்குகின்ற சூரியனுக்கும் ஐரோப்பியர்கள் வணங்கிய சூரியனுக்கும்தான் சம்பந்தம் இருக்கிறது.

இந்துக்கள் அறிவில்லாமல் ஐரோப்பியர்கள் முன்பு வணங்கிய கடவுள்களை இப்பொழுதும் வணங்கிக் கொண்டு, மதம் மாறுவதைப் பற்றி கதை பேசுவார்கள்.

இந்த உண்மை கசக்கத்தான் செய்யும்

யாழின் பனரே சொல்லுது.. உழவர் பண்டிகையான பொங்கல் சூரியனுக்கு நன்றி செலுத்த உழவர்களால் கொண்டாடப்படுகிறது என்பதை. சூரியனுக்கு நன்றி செலுத்தத்தான் சூரிய வழிபாடே...! இதையெல்லாம்.. புரியாமல் தானா....???! :(:lol:

Link to comment
Share on other sites

நான் சொன்னது உங்களுக்கு விளங்கவில்லை என்பது போன்று நடிக்க வேண்டாம்.

இந்துக்கள் வணங்கும் சூரியன் வேறு. தமிழர்கள் பொங்கல் திருநாளில் நன்றி செலுத்தும் இயற்கையோடு அமைந்த சூரியன் வேறு.

இந்துக்கள் வணங்குகின்ற சூரியனுக்கு கோயில்கள் இருக்கின்றன. அதற்கு புராணங்கள் இருக்கின்றது. பொண்டாட்டி, பிள்ளை குட்டி எல்லாமே இருக்கின்றது.

ஆனால் இதை பொங்கல் திருநாளில் தமிழர்கள் வணங்குவது இல்லை.

தமிழர்கள் வீட்டு வாசலில் பொங்கல் வைத்து வானத்தில் தெரியும் உண்மையான சூரியனை வணங்குவார்கள்.

இதுவும் உங்களுடைய கிரேக்க இந்து மத சூரியனும் ஒன்று என்று சொல்வது அறியாமை.

heliosfc7.gif

surya2mg1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னது உங்களுக்கு விளங்கவில்லை என்பது போன்று நடிக்க வேண்டாம்.

இந்துக்கள் வணங்கும் சூரியன் வேறு. தமிழர்கள் பொங்கல் திருநாளில் நன்றி செலுத்தும் இயற்கையோடு அமைந்த சூரியன் வேறு.

இந்துக்கள் வணங்குகின்ற சூரியனுக்கு கோயில்கள் இருக்கின்றன. அதற்கு புராணங்கள் இருக்கின்றது. பொண்டாட்டி, பிள்ளை குட்டி எல்லாமே இருக்கின்றது.

ஆனால் இதை பொங்கல் திருநாளில் தமிழர்கள் வணங்குவது இல்லை.

தமிழர்கள் வீட்டு வாசலில் பொங்கல் வைத்து வானத்தில் தெரியும் உண்மையான சூரியனை வணங்குவார்கள்.

இதுவும் உங்களுடைய கிரேக்க இந்து மத சூரியனும் ஒன்று என்று சொல்வது அறியாமை.

heliosfc7.gif

surya2mg1.jpg

ஆகா கேட்கிறவன் கேணயன் என்றால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்..! :(:lol:

படம் பார் பாடம் படி என்று விட வேண்டியான்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக ஆதாரம் கேட்கும் சபேசனிடம் இதற்கான ஆதரங்களைக் கேட்டு நிற்கின்றோம். தமிழர் வணங்கும் சூரியனுக்கும், கிரேக்கர்களின் சூரியனுக்கும் என்ன வித்தியாசம் என்று.

தமிழரின் பண்டிகைகளில் ஒன்றான ஆடிப்பிறப்பை ஏன் நீங்கள் தமிழரின் புத்தாண்டாக எடுக்க் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை எண்டா மெல்லிய குளிர். ஏன் ஆனி, ஆடி, புரட்டாதியில் ஒருநாளில் பொங்கலை வைத்தால் குளிரே இல்லாமல் பொங்கலாமெல்லே. :lol:

அதைத் தான் நான் சொல்ல வாறன். ஆடிப்பிறப்புத் தமிழரின் தனித்துவமான கொண்டாட்டம். தைப்பொங்கலில் வடக்கில் மகரந்தி கொண்டாடுகின்றார்கள். அது பிறகு ஆரிய வாதமாகப் போய்விடும். அதனால் ஆடிப்பிறப்புத் தான் தமிழரின் புதுவருடாகமாக் கொண்டாடுங்கள்.

இல்லை தைப் பொங்கல் தான் கொண்டாடுவீர்கள் என்றால் கனடாவில் உந்தப் பனிக்குள்ள எப்படி வீட்டு முற்றத்தில் அடுப்பு, வைச்சுப் பொங்கித் தமிழனத்தின் பெருமையைக் காப்பாற்றப் போறிங்கள் என்று பார்க்கத் தானே போகின்றேன்.

நம்மால் பயன்படுத்தப்படும் நாட்காட்டிப்படி நடைமுறை ஆண்டின் முதல் நாளை அதாவது சனவரி 01ம் நாளை புத்தாண்டு என்று, நாங்கள் கொண்டாடுறது சித்திரையில் கொண்டாடப் படுற புத்தாண்டைவிட சிறப்பானது.

அதற்குத் தானே தைப்பொங்கலைக் கொண்டு வந்தனீர்கள் என்று சொல்லியிருக்கின்றேன். சனவரி 1ம் திகதியைக் கொண்டாடுவதற்கு இத்தனை நடிப்புத் தேவையில்லை.

இப்ப என்னவோ தமிழினம் வளமாக வாழ்ந்து கிழிக்குதாக்கும்.

திராவிடக் கொள்கையால் தமிழனம் வளர்ந்தது, ஏதோ கிழ்த்தது என்று பெருமை பாடுபவர்களுக்கு நல்ல பதிலடி கொடுத்திருக்கின்றீர்கள். அதற்கு வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

எப்போதிலிருந்து தமிழர் சித்திரைப் புத்தாண்டைக்கொண்டாடத்தொடங்

Link to comment
Share on other sites

தமிழர்கள் பொங்கலின் போது வானத்தில் தெரிகின்ற கோள வடிவத்தில் உள்ள நட்சத்திரமாகிய சூரியனை நோக்கி வழிபடுவார்கள். அவ்வளவுதான்.

நீங்கள் ஈழத்தில் கொண்டாடிய பொங்கலை நினைவுபடுத்திப் பாருங்கள்.

குதிரைகள் பூட்டிய சூரியதேவனுடைய சிலைக்கு நீங்கள் விசேட வழிபாடுகள் செய்திருக்கிறீர்களா?

நவக் கிரக சிலைகளோடு இருக்கும் சூரியனுக்கு விசேட வழிபாடு செய்திருக்கிறீர்களா?

இல்லையே!

இந்து மதம் சுட்டிக்காட்டுகின்ற சூரியனை பொங்கலின் போது வழிபடுவதில்லை. பொங்கலை கொண்டாடுகின்ற தமிழர்களின் மண்ணில் சூரியனுக்கு என்று பெரிதாக ஒரு கோயிலும் இல்லை. சிலவேளை ஓரிரு கோயில்கள் இருக்கக்கூடும்.

ஒரு விழாவையே கொண்டாடுகின்று ஒரு கடவுளுக்கு ஏன் கோயில்கள் பெரியளவில் இல்லை? வீட்டிலே படம் வைத்துக் கூட யாரும் வழிபடுவது இல்லையே!

இந்து மதம் காட்டும் இல்லாத மோசடியான சூரியக் கடவுளுக்கும், தமிழர் பொங்கலில் இடம் பெறும் உண்மையான சூரியனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்து மத சூரியனுக்கும் கிரேக்க மத சூரியனுக்கும்தான் சம்பந்தம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கேள்வி கேட்டிருக்கின்றீர்கள்

எங்களின் தாத்தாவின் தாத்தாவிற்கே என்ன பெயர் என்று தெரியாது. அதுக்குள்ள புத்தாண்டு எப்போது வந்தது என்பதைப் பற்றிக் கண்டு பிடிக்கின்றதாவது.

தமிழ் புத்தாண்டில் சமஸ்கிருதப் பெயர் இருந்தால் அது, ஆரியர் திணித்தது என்று கண்டு பிடித்த எம் ஆய்வாளர்கள், சபேசன், ராமசாமி, சஞ்சீவ், கருணாநிதி போன்ற சொற்களும், சமஸ்கிருதப் பெயரில் இருப்பதால் அவர்களையும் ஆரியத் திணிப்பாக எடுத்துக் கொள்வார்களோ என்னமோ?

ஆனால் ஒன்று ஈஸ், சித்திரைப் புத்தாண்டுப்படி கணிக்கப்படுகின்ற தைப்பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கண்டு பிடித்தவர்கள், அதற்கு மூலமாக உள்ள சித்திரைப் புத்தாண்டைத் தவிர்க்க விரும்புவது என்னத்திற்கு என்று தான் புரியவில்லை. சிலவேளை புதுமை செய்கின்றோம் என நினைத்துக் கொள்ளுகினமோ? :lol: என்னமோ!

ஆமாம் சபேசன்.

என்னுமொரு ஒற்றுமையையும் கண்டு பிடித்தேன். இப்போது வருகின்ற சந்தேகம் என்னவென்றால் தமிழர்கள் எல்லோரும் ஆரியரா என்ற மனக்கிலசம் ஏற்படுகின்றது.

தமிழர்களும் வாயால் தான் சாப்பிடுகின்றார்கள். அவர்களும் வாயால் சாப்பிடுகின்றார்கள். மூக்கால் சுவாசிக்கின்றபோது, அவர்களும் மூக்கால் தான் சுவாசிக்கின்றார்கள்.

இவ்வாறு எல்லாச் செயற்பாடும் ஒன்றாகவே இருக்கின்றது. ஏன் குதம் கழிப்பது கூட இரண்டு பேரும் ஒன்றாக இருக்கின்றதைப் பார்க்கின்றபோது, தமிழனும் ஆரியரில் இருந்து பிரிதியெடுக்கப்பட்ட ஆள் மாதிரி ஆராட்சி சொல்லுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சபேசன் அவர்களே!

உங்களுக்கு இந்துமத கொள்கைகள் பிடிக்காவிட்டால் கொஞ்சம் ஒதுங்கி நிற்க வேண்டியது தானே?மேலைத்தேய நாட்டவர்களே நாஷா கூட இரகசியமாக இந்துகலாச்சாரங்கள் அவற்றுடன் ஒட்டியிருக்கும் அண்டவெளி அதிசயங்கள் சாத்திர கணிப்புகளையெல்லாம் ஆராய்கின்றார்கள்.இப்போதைய விஞ்ஞானத்தையெல்லாம் எம் முன்னோர்கள் அன்றே அஞ்ஞான முறையிலே அறிந்து வைத்திருக்கின்றார்கள்.இது உங்களுக்கு நன்றாகத்தெரியும்.

ஏனைய மதத்தவர்கள் தங்கள் மதங்களை கலாச்சாரங்களை எவ்வளவுக்கு பேணிபாதுகாக்கமுடியுமோ அவ்வளவுக்கு பேணிபாதுகாக்கின்றனர். எம்மவர்கள் என்னவென்றால் பண்பாடுகலாச்சாரத்தை எவ்வளவுக்கு சீரழிக்க முடியுமோ அவ்வளவுக்கு சீரழிக்கின்றார்கள்.ஒரு சிலர் செய்யும் தப்புக்களை வைத்து (அரசியல்வாதிகள் உட்பட)ஒட்டுமொத்த இன,மத.கலாச்சாரங்களை தப்புக்கணக்கு போடுவது முட்டாள்தனம்.

ஊரில் இருக்கும் வரையும் உள்ள கோவில்கள் அனைத்துக்கும் நேர்த்திக்கடன் வைத்து பால்காவடியும், பால்செம்பும் எடுத்துவிட்டு வெளிநாடுகளுக்கு வந்தவுடன் வகைவகையான சொர்க்கங்களை சந்தித்தவுடன் கடவுளாவது கத்தரிக்காயாவது.

Link to comment
Share on other sites

நானும் ஆரியரும் வாய் வழியாக சாப்பிடுகின்றோம். மூக்கு வழியாக சுவாசிக்கின்றோம். இன்ன பிற விடயங்களை ஒரே மாதிரி செய்கின்றோம்.

காரணம் நாம் இருவரும் மனித இனம்.

கிரேக்க கடவுள்களும் இந்துக் கடவுள்களும் ஒரே மாதிரி இருப்பதன் காரணம்

இரண்டும் ஒரே ஆரிய இனத்தால் உருவாக்கப்பட்டவை. அறிவு வளராத காலத்தில் உருவாக்கப்பட்ட கடவுள்கள் இவைகள். அதனால் ஒரே மாதிரி இருக்கின்றன.

கிரேக்கர்கள் அறிவு வளர்ந்து இந்தக் கடவுள்களையும் புராணங்களையும் தூக்கி எறிந்து விட்டு முன்னேறி விட்டார்கள்.

இந்துக்கள் இவைகளை கைவிடவும் இல்லை. முன்னேறவும் இல்லை. காட்டுமிராண்டிகள் போன்று தாலி அறுத்துக் கொண்டு திரிகன்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சபேசன் அவர்களே!

உங்களுக்கு இந்துமத கொள்கைகள் பிடிக்காவிட்டால் கொஞ்சம் ஒதுங்கி நிற்க வேண்டியது தானே?மேலைத்தேய நாட்டவர்களே நாஷா கூட இரகசியமாக இந்துகலாச்சாரங்கள் அவற்றுடன் ஒட்டியிருக்கும் அண்டவெளி அதிசயங்கள் சாத்திர கணிப்புகளையெல்லாம் ஆராய்கின்றார்கள்.இப்போதைய விஞ்ஞானத்தையெல்லாம் எம் முன்னோர்கள் அன்றே அஞ்ஞான முறையிலே அறிந்து வைத்திருக்கின்றார்கள்.இது உங்களுக்கு நன்றாகத்தெரியும்.

உண்மை தான் இதைப்பற்றி அவர்கள் தயாரித்த குறும் படத்தில் சொல்லப்பட்டுள்ளது. சனி கிரகத்திற்கு அருகாமையில் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவில் ஏதோ பேசுவது போல் உள்ளது. இந்து சமயத்தில் சொல்லப்படுபவை அத்தனையும் ஏதோ காரணத்தோடு தான் சொல்லப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவு வளராத காலத்தில் உருவாக்கப்பட்ட கடவுள்கள் இவைகள். அதனால் ஒரே மாதிரி இருக்கின்றன.

கிரேக்கர்கள் அறிவு வளர்ந்து இந்தக் கடவுள்களையும் புராணங்களையும் தூக்கி எறிந்து விட்டு முன்னேறி விட்டார்கள்.

இந்துக்கள் இவைகளை கைவிடவும் இல்லை. முன்னேறவும் இல்லை. காட்டுமிராண்டிகள் போன்று தாலி அறுத்துக் கொண்டு திரிகன்றார்கள்.

அப்படியாயின் இப்போ அவை எப்படி விஞ்ஞானரீதியாக நிருபிக்கப்படுகின்றன? அறிவு வளரா காலம் என்பது எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்

உங்களுடைய ஒற்றுமை கண்டு பிடித்தல் என்பது இப்படியானதொரு நிலமையில் தான் இருக்கின்றது என்பதற்கே அதைச் சொன்னேன்.

தவிரவும் கிரேக்க நாகரீகங்கள் அழிந்தமைக்கு அங்கே மேலோங்கிய கிறிஸ்தவ ஊடுவல் தான் காரணமே தவிர, வேறு ஒன்றுமில்லை. கிறிஸ்தவ நாகரீக ஊடுருவலின் போது, அவர்கள் இன்னமும், தாழ்ந்த நிலைக்குத் தான் சென்றிருந்தார்கள். அப்போதைய அறிவியலாளர்கள் கிறிஸ்தவ ஆட்சிக்காலத்தில் கடுமையாகத் தண்டிக்கப்பட்டது ஞாபகமிருக்கலாம்.

எனவே வரலாறு தெரியாமல் எழுந்தமானமாகப் பேசாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரேக்கர்கள் அறிவு வளர்ந்து இந்தக் கடவுள்களையும் புராணங்களையும் தூக்கி எறிந்து விட்டு முன்னேறி விட்டார்கள்.

இந்துக்கள் இவைகளை கைவிடவும் இல்லை. முன்னேறவும் இல்லை. காட்டுமிராண்டிகள் போன்று தாலி அறுத்துக் கொண்டு திரிகன்றார்கள்.

கிரேக்கர்கள் அறிவில் வளர்த்திருக்கின்றார்கள்!

தமிழர்கள் அறிவில் வளரவில்லை?

***

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Link to comment
Share on other sites

கிரேக்க மக்களின் மிகப் பழமையான மதத்தை ஆரிய மதம் அழித்தது. ஆரிய மதத்தை பின்பு வந்த கிறிஸ்தவ மதம் அழித்தது.

அதே போன்று தமிழர்களின் வழிபாட்டையும் நாகரீகத்தையும், ஆரிய இந்து மதம் அழித்தது.

இது உலகம் முழுவதும் நடந்த, நடக்கின்ற கதைதானே.

தமிழர்கள் வணங்கிய கடவுள்களை எல்லாம் அழித்துவிட்டு, ஆரியர்கள் தமிழர்களை இந்துக்களாக மதம் மாற்றினார்கள்.

உங்களின் வார்த்தையில் சொல்வது என்றால், உங்களுக்கு அப்பா, அம்மாவில் சந்தேகம் இருந்தபடியால், வெட்கமில்லாமல் இந்து மதத்திற்கு மாறினீர்கள்.

இப்பொழுது மிச்சம் இருப்பதையும் கொண்டு போவதற்கு இந்து வெறியர்கள் துடிக்கிறார்கள்.

அதனால்தான் பொங்கலின் போது தமிழர்கள் வணங்கும் இயற்கைக்குப் பதிலாக, குதிரை ரதத்தில் இருக்கின்ற ஒரு உருவத்தை கொண்டு வந்து திணிக்கப் பார்க்கிறார்கள்.

இதுதான் அன்றைக்கும் நடந்தது.

கொற்றவையின் மகன் முருகனை தமிழன் வணங்கினான். அந்த இடத்தில் ஸ்கந்தனைக் கொண்டு வந்த வைத்தார்கள்.

இன்றைக்கு...

பொங்கலின் போது வானத்தில் தெரியும் சூரியனை தமிழன் வழிபடுகின்றான். அந்த இடத்தில் இல்லாத ஒரு புராண சூரியனை திணிக்க சில ஆரிய அடிவருடிகள் முனைகின்றார்கள்.

உங்கள் வார்த்தையில் மீண்டும் சொல்வது என்றால், எனக்கு அப்பா அம்மாவில் உறுதியான நம்பிக்கை உண்டு. நான் தமிழை விட்டு ஆரியத்திற்கு மாற மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

கிரேக்க மக்கள்.. இந்து மக்கள் எல்லோரும் வழிபாடு செய்ததும்.. தமிழ் பேசும் இந்து மக்கள்.. உழவர் திருநாளாக தமது விளைச்சலுக்கு நன்றி செய்து வழிபடும் சூரியனும் ஆங்கிலத்தில் solar என்றே அழைக்கப்படுகின்றது.

http://en.wikipedia.org/wiki/Solar_deity

அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் பொங்கலை உழவர் பெருநாளாகக் கொண்டாடி சூரியனுக்கு நன்றி செலுத்துவது போல இந்தியாவின் பிற மாநில மக்களும் இதை வேறு வேறு நடைமுறைகளின் கீழ் கொண்டாடுகின்றனர்..!

The astronomical significance of the festival is that it marks the beginning of Uttarayana, the sun's movement northward for a six-month period. Makara Sankranthi refers to the event of the sun entering the zodiac sign of Makara (Capricorn). While Pongal is predominantly a Tamil festival, similar festivals are also celebrated in several other Indian States under different names. In Andhra Pradesh, Kerala, and Karnataka, the harvest festival Sankranthi is celebrated. In northern India, it is called Makara Sankranti. In Maharashtra and Gujarat, it is celebrated on the date of the annual kite flying day, Uttarayan. It also coincides with the bonfire and harvest festival in Punjab and Haryana, known as Lohri. Similar harvest festivals in the same time frame are also celebrated by farmers in in Burma, Cambodia, and Korea.

http://en.wikipedia.org/wiki/Pongal

solar system.. அங்கு solar என்பது சூரியனை. அதாவது sun. சூரியனை வழிபடும் மக்கள் கடவுள்களுக்கு உருவம் வழங்கியது போல.. சூரியனுக்கும் வழங்கினர். அக்கினிக்கு அக்கினி பகவான் என்று.. கண்ணுக்குப் புலப்படாத வாயுவுக்குக் கூட வாயு பகவான் என்றும்.. மழைக்கு வருண பகவான் என்றும்.. உருக்கொடுத்து இந்துக்கள் இயற்கையின் கூறுகளை மதிக்க கற்றுக் கொண்டனர்.

இன்று.. வாயு மண்டலம் மாசாகிக் கிடக்கிறது.. அதன் மதிப்பு உணரப்படவில்லை இத்தனை மாசாகும் வரை. ஆனால் எம்முன்னோர்.. எவ்வளவு அழகாகச் சிந்தித்து வாயுவை வழிபாடு செய்யும் அளவுக்கு அதன் முக்கியத்துவத்தை உயர்த்தி வைத்துள்ளனர். அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளனர். உருவ வழிபாட்டின் அடிப்படையில்... வாயு பகவானுக்கும் ஓர் உருவம் கொடுத்து உருவ வழிபாடு செய்தனர். அப்படித்தான் சூரியனுக்கும் சூரிய பகவான் என்று உருக்கொடுத்து வழிபட்டனர்.

வாயு பகவானாக உள்ள உருவமுள்ள வாயு வேறு.. பூமிப் பந்தின் வழிமண்டத்தில் உள்ளது உருவமற்ற காற்று எனும் கூறு வேறு என்ற அறிவிலித்தனமான வாதங்களை யாழ் களம் சுமக்க வேண்டி வருவதற்குக் காரணம்..

இந்துத் துவேசிய சிந்தனை மட்டுமே.

தமிழர்களும் இந்து மதமும் இயற்கையை வெகுவாகவே வியந்து புரிந்து கொண்டுள்ளனர் என்பதற்கு.. உழவர் பண்டிகையில் தமது விவசாய விளைச்சலுக்கு சூரியனுக்கு நன்றி கூற வழிபடுவதும்.. ஐம்பூதங்கள் என்று இயற்கையின் முக்கிய பெளதீக அம்சங்களை உணர்ந்து போற்றி இருப்பதும் உண்மையில் வியத்தகு அம்சங்களே..! இதை துவேசியச் சிந்தனை கொண்டோரால் விளங்கிக் கொள்வது கடினம். :lol:

இந்துக்களின் பண்டிகையில் ஒன்றாக பண்டியலிடப்பட்டுள்ள பொங்கல்..

http://en.wikipedia.org/wiki/Hindu_festivals

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Link to comment
Share on other sites

இல்லை தைப் பொங்கல் தான் கொண்டாடுவீர்கள் என்றால் கனடாவில் உந்தப் பனிக்குள்ள எப்படி வீட்டு முற்றத்தில் அடுப்பு, வைச்சுப் பொங்கித் தமிழனத்தின் பெருமையைக் காப்பாற்றப் போறிங்கள் என்று பார்க்கத் தானே போகின்றேன்.

முற்றத்தில் பொங்கினால்தான் பொங்கல் இல்லை. ஸ்ரோவில் பொங்கினாலும் பொங்கல்தான். முற்றத்தில் பொங்கினால்தான் "தமிழனின் பெருமை" உயருமென்ற மூடநம்பிக்கையெல்லாம் என்னிடமில்லை.

அதற்குத் தானே தைப்பொங்கலைக் கொண்டு வந்தனீர்கள் என்று சொல்லியிருக்கின்றேன். சனவரி 1ம் திகதியைக் கொண்டாடுவதற்கு இத்தனை நடிப்புத் தேவையில்லை.

பார்ப்பனங்கள் புகுத்தியதை இவ்வளவு காலமும் புத்தாண்டென்று கொண்டாடின நாங்கள் இனி எமது பண்டிகைகயை ஒன்றை புத்தாண்டென்று கொண்டாடப் போறம். பார்ப்பனம் புகுத்தியதை விடுத்து எமது சொந்தத்திற்குள் போறம். அது சனவரி 1ற்கல்ல. அப்படியிருந்தாலும் சித்திரையில் கொண்டாடு கண்டவனின் புகுத்தல் புத்தாண்டை கொண்டாடுவதை விட நாமே நடைமுறையில் பயன்படுத்தும் நாட்காட்டியின் முதல் நாளான ஜனவரி ஒன்றை புத்தாண்டு என்று கொண்டாடுவது எவ்வளவோ மேலானது. இதற்கு நடிப்பு நளினமெல்லாம் தேவையில்லை.

திராவிடக் கொள்கையால் தமிழனம் வளர்ந்தது, ஏதோ கிழ்த்தது என்று பெருமை பாடுபவர்களுக்கு நல்ல பதிலடி கொடுத்திருக்கின்றீர்கள். அதற்கு வாழ்த்துகின்றேன்.

திராவிடக் கொள்கை ஒண்டு பார்க்காமல் பகுத்தறிவுக் கொள்கை எண்டு பாருங்கோ. எமது சமூகத்திலிருக்கும் ஏற்றத்தாழ்வுகள், மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கு பெரியார் போன்றவர்கள் முயற்சித்தனர். ஆனால் இன்றும் தமிழன் மூடநம்பிக்கைகளில் சிக்கி சீரளித்து போய் தான் உழைத்த பணத்தை கண்டவனின் வயிறு வளர கோயில் உண்டியல், அர்ச்சனை, அபிசேகமெண்டு வீணடிக்கிறான். இதனையே "தமிழன் வாழ்ந்து கிழிக்கிறான்" என்று சொன்னன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூடநம்பிக்கை என்று எதை வரையறை செய்கின்றீர்கள் எனப் புரியவில்லை. கோலம்போட்டு, மாவிலை கட்டுவது மூடநம்பிக்கையா?

ஒரு அணிவகுப்பு என்பதை ஏன் முக்கியமானவர் வரும்போது செய்கின்றார்கள். பேசாமல் உள்ளுக்குக் கூட்டிக் கொண்டு போகலாம் தானே?? அதையும் உங்களின் பாணியில் மூடநம்பிக்கை என்பீர்களா?

அது எப்படி சம்பிர்தாயம், அவசியம் எனக் கருதுகின்றோமோ, அவ்வாறே தைப்பொங்கலில் பொங்குவதும் சூரியனுக்குப் படைப்பதும் அவசியம். இல்லாவிட்டால் தைப் பொங்கல் இது தான் எனப் பிள்ளைகளுக்கு படத்தில் போட்டுக் காட்டிக் கொண்டாட வேண்டியது தான். எந்தச் செலவும் வராது.

***

குமரி மைந்தன் கந்த கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.

மார்வாரிகள் சமண சமயத்தினர். இந்து சமயத்துக்கு எதிராக சமண சமயத்தை உயர்த்திப் பேசுவது திராவிட இயக்கத்தவர் வழக்கம். இவ்வாறு தம் மறைமுக ஆதரவை மார்வாரிகளுக்குத் தந்தனர். பெரியாரின் செயற்பாடுளையும் திராவிட இயக்கத்தின் செயற்பாடுகளின் பின்னணியில் மார்வாரிகள் முழுமையாக வளர்ந்து தமிழகப் பொருளியலைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதையும் பார்க்கும் போது பெரியாருக்கும் மாரிவாரிகளுக்கும் இடையில் ஒரு மறைமுகத் தொடர்பு இருந்திருக்குமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவிலலை. அவர் தன் வாழ்நாளில் ஈட்டிய ரூபாய் 125 கோடிப் பணம் எடைக்கு எடை வெள்ளிப் பணம், பணத்தாள் மாலைகள், பெயர் வைக்கக் கட்டணம் போன்றவற்றால் மட்டும் சேர்ந்திருக்கும் என்று நம்ப முடியவில்லை

இந்நிலையில் இயக்கத்தினுள் முரண்பாடுகள் வலுத்துவந்தன. பெரியார் இயக்கத்தைத் தன் சொந்தச் சொத்து போலும் ஒரு பெருந்தொழில் நிறுவனம் போலும் நடத்தி வந்தார். இது அடுத்த நிலைத் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. தக்க காலம் கருதியிருந்தனர். அத்தகைய வாய்ப்பு ஒன்று உருவானது.

தொடக்கத்திலிருந்தே பெரியாரின் அரசியல் எதிரியும் தனிநிலை நண்பருமான ராசாசி எனப்படும் ஆச்சாரியாரின் அறிவுரையின் துணையுடனும் தனக்குப் பின் கழகத்தின் தலைமையையும் அதன் சொத்தையும் நடத்திச் செல்லும் ஒரு வழித்தோன்றல் வேண்டுமென்பதாலும் தனக்குத் தனிநிலை உதவியாளராயிருந்த மணியம்மை என்ற இளம்பெண்ணைப் பெரியார் தன் 61ஆம் அகவையில் மணமுடித்தார். இதனைக் காரணமாகக் காட்டி அண்ணாத்துரை கட்சியின் பெரும்பான்மையான இளந்தலைமுறைத் தலைவர்களையும் தொண்டர்களையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை 1949 - இல் தொடங்கினார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32781

நீக்கப்பட்டுள்ளது - இணையவன்

Link to comment
Share on other sites

சித்திரை எண்டா மெல்லிய குளிர். ஏன் ஆனி, ஆடி, புரட்டாதியில் ஒருநாளில் பொங்கலை வைத்தால் குளிரே இல்லாமல் பொங்கலாமெல்லே. :lol:

நம்மால் பயன்படுத்தப்படும் நாட்காட்டிப்படி நடைமுறை ஆண்டின் முதல் நாளை அதாவது சனவரி 01ம் நாளை புத்தாண்டு என்று, நாங்கள் கொண்டாடுறது சித்திரையில் கொண்டாடப் படுற புத்தாண்டைவிட சிறப்பானது.

தைப்பொங்கல் என்பது உழவர் திருநாள்... ஏதோ வயல் விதைத்தோம் அறுத்தோம் எண்டு இருக்காமம் அதுக்கு உதவிய சூரியனுக்கும், எருதுக்கும் நண்றி சொல்லும் காலம் அது...

முதலிலை காலங்களை கனக்கிலை கொள்ள்ளுங்கள்... மாரி முடிந்ததும் நெல் அறுவடை, அதே காலப்பகுதியை இலையுதிர் காலம் என்பார்கள்...

இலை உதிர் காலம் முடிந்தால் பின்னர் இலை துளிர் காலம், பின்னர் செடி கொடி எல்லாம் பூத்து காய்க்கும் இள்ளவேனில் காலம். அது சித்திரையில் தான் வருகிறது. ஆகவேதான் தமிழர்கள் இளவேனில் காலத்தில் தங்களின் புதிய வருட பிறப்பாக கொண்டாடினார்கள்..

வரும் கோடை காலத்தை எதிர் கொள்ள சேமித்தவைகளையும் தையில் வ்வெட்டி எடுத்த நெல்லை விற்று வாங்கிய பணத்தோடும் செழிப்பானா காலம் என்பது தமிழனுக்கு சித்திரைதான்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   04 JUN, 2024 | 01:46 AM தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2014-2024 காலப்பகுதியில் நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு 03 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  இந்தப் பாலங்கள் ஊடாக இணைக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பல பரிமாண வறுமையை 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு என்றும், கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் இவ்வாறான திட்டங்கள் அந்த இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியமானவை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டத்திற்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்நிறுவனம் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பொனி ஹோர்பாக்       ( Bonnie Horbach)  அவர்களுக்கு விசேட  நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கூறியதாவது: இலங்கையில் ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட 750 பாலங்களின் பணிகள் நிறைவடைந்ததை இன்று நாங்கள் ஒன்றிணைந்து கொண்டாடுகிறோம். இது அந்த நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றிய மாபெரும் பணி என்பதைக் கூற வேண்டும். இந்த கிராமப்புறப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்ட பிரதேசங்கள் பற்றி எனக்குத் தெரியும். அவை மிகவும் பின்தங்கிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாலங்களால் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், இந்த விரிவான வீதிக் கட்டமைப்பு, முக்கிய அதிவேகப்பதைகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கும், கொழும்பு அல்லது பிற முக்கிய நகரங்களுக்கு பொருட்களை அனுப்புவதற்கும் உதவுகிறது. எனவே, இத்திட்டம் மிகவும் முக்கியமான திட்டம் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் இதுபோன்ற 250 பாலங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளோம். நம் நாட்டில் 2019 ஆம் ஆண்டில் 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 25% ஆக அதிகரித்துள்ளது. 2032 ஆம் ஆண்டிற்குள் 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பதைக் கூற வேண்டும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களை மையமாகக் கொண்டு பல பரிமாண வறுமையை 10% வரைக் குறைப்பது எமது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். அந்த இலக்கை நோக்கிச் செல்ல இது போன்ற திட்டங்கள் நமக்கு உதவுகின்றன. எனவே இந்த திட்டங்களுக்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். வடமாகாணத்தில் மக்களின் சுகாதார சேவைகளை விரிவுபடுத்தும் வகையில் 04 புதிய வைத்தியசாலைகளை திறப்பதற்கு நெதர்லாந்து தூதுவர் அண்மையில் எம்முடன் இணைந்து கொண்டார். இந்த இரண்டு திட்டங்களும் இலங்கையின் கிராமப்புற சமூகத்தை பலப்படுத்தும். நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்த திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை முன்னெடுத்துச் செல்ல நான் நடவடிக்கை எடுத்தேன். இலங்கைக்குச்  சொந்தமான புராதன பீரங்கிகளை மீள இலங்கைக்கு வழங்கியமை தொடர்பில்   நெதர்லாந்து அரசுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மோசமான வானிலை காரணமாக வெள்ள நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த அனர்த்தத்தினால் முற்றாக அழிந்த வீடுகளை இராணுவத்தினரின் பங்களிப்புடன்  அரச செலவில் புனரமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகுதியளவில் சேதமடைந்த கட்டிடங்கள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்ற பின்னர், அது தொடர்பான முடிவுகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்நிலையில், இன்று பிற்பகல் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அவசர அமைச்சரவை பத்திரமொன்றை பிரதமர் சமர்ப்பிக்கிறார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதற்காக தற்போது உள்ள நிதியை விடுவிக்குமாறு பணித்துள்ளேன். மேலும், தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளுக்கும் உரிய மதிப்பீடுகளை விரைவாகத் தயாரிக்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது அன்றைய அரசாங்கம் 170 பில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, 13 மாவட்டங்களில் அனர்த்த நிலைமை ஏற்பட்டது. இம்முறை சில மாகாணங்களில் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், இந்த வருடமும் அடுத்த வருடமும் அனர்த்த சேதங்களை புனரமைக்கத் தேவையான அனைத்து நிதியையும் வழங்க எதிர்பார்த்துள்ளோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  நெதர்லாந்து நாட்டுத்  தூதுவர் பொனி ஹோர்பாக்( Bonnie Horbach),  கடந்த 10 வருடங்களில் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்த ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று ஜனாதிபதியுடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை நான் கௌரவமாக கருதுகின்றேன். ஜென்சன் பிரிஜிங் நிறுவனம் கடந்த 10 வருடங்களாக இலங்கை முழுவதும் பாலங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவை பெரும்பாலும் நமக்குத் தெரிந்த அலங்காரமான பாலங்கள் அல்ல. ஆனால், தேசிய வளர்ச்சித் திட்டங்களுடன் மக்களின் வாழ்க்கையை இணைப்பதோடு, கிராமப்புற மக்களுக்கு நேரடிப் பலன்களை வழங்கும் திட்டங்கள் என்பதைக் கூற வேண்டும். தலைமைத்துவம் என்பது மக்களின் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறப்பதாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அந்த சந்தர்ப்பத்தில் தலைமைத்துவப் பண்புகளை பிரதிபலித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.  இப்போது நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறார். அதன்போது, அனைத்து மக்களும் பயன்பெறும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முன்னேற்றத்தின் பலன் குறைந்த வருமானம் பெறும் மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நெதர்லாந்து பிரதித் தூதுக் குழுவின் தலைவர் இவன் ருஜென்ஸ் (Iwan Rutjens),, எக்சஸ் குழுமத்தின் தலைவர் சுமல் பெரேரா,  போர்சைட் இன்ஜினியரிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தியோ பெர்னாண்டோ, ஜென்சன் பிரிஜிங் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டிர்க்  பிரான்சென் (Dirk Fransen) உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185249
    • வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ஒரு லட்சம்  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை  தமிழ் நாடு  முன்னிலை  திமுக  கூட்டணி 39 பா ஜ க  1  
    • Published By: VISHNU 03 JUN, 2024 | 07:23 PM   களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும் முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்  அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 ஆம் திகதி திங்கட்கிழமை கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற  கலந்துரையாடலில்  ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள அம்பத்தளை, கல்வான புராண ரஜமஹா விகாரை, சேதவத்த வெஹெரகொட புராண ரஜமஹா விகாரை, கொலன்னாவ டெரன்ஸ் .எஸ். சில்வா வித்தியாலயம் மற்றும் வெல்லம்பிட்டி காமினி வித்தியாலய பாதுகாப்பு நிலையம் என்பவற்றுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்களின் நலன்களைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று இரவு முதல் உணவு வழங்குமாறு கொலன்னாவை  பிரதேச செயலாளருக்கு அறிவித்த ஜனாதிபதி, அந்த மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து நிரந்தர வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குழாய்களை பயன்படுத்தி வெள்ளம் வேகமாக வடிந்து செல்ல வழிசெய்து, மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம்  பிரதானியுமான சாகல ரத்நாயக்க அங்கு சுட்டிக்காட்டினார். கொலன்னாவ பிரதேச   செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அவர், பிரஜைகள் பொலிஸாரின் பங்களிப்புடன் நடமாடும் ரோந்து சேவைகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்கிய  சாகல ரத்நாயக்க, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார். மேலும்,  அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறு அறிவுறுத்திய அவர், வெள்ளம் குறைந்த பிறகு ஏற்படக் கூடிய டெங்கு, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.  அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர்  மேலும் தெரிவித்தார். பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி பிரேமநாத்.சி.தொலாவத்த, எஸ்.எம்.மரிக்கார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்  ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படை தளபதி  வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியுடனான மேற்பார்வை விஜயத்தில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185244
    • பின்புலம் தெரியாமல் கேட்கும்போது கொடுப்பதால் இப்படியானவர்கள் ஏமாற்றி வாழ்கின்றார்கள். 
    • அதுசரி சாமியார்.. நீங்கள் குளிருக்குப் போத்துப் படுக்க பெட்சீட் பாவிக்கறது இல்லையாம், பரிமளாக்காவின் சாறியைத்தான் பாவிக்கிறதா கேள்விப்பட்டன், உண்மையா??? அதுதான் சாறிஞாபகம் வந்ததோ????😁😂 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.