Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று (July 11) உலக சனத்தொகை நாள்

சில சுவாரசியமான தகவல்கள் :

உலகின் மொத்த சனத்தொகை : 7.7 billion

முதலிடத்தில் : China - 1.4 billion (உலக சனத்தொகையில் 18.4 %)

2) India - 1.3 billion (உலக சனத்தொகையில் 17.7%)

சைனாவும் இந்தியாவும் சேர்ந்து உலக சனத்தொகையின் 36.15% - 2.79 billion

3) United States - 329 Million

4) Indonesia - 269 million

5) Brazil - 212 million

6) Pakistan - 204 million

7) Nigeria - 200 million

😎 Bangladesh - 168 million

9) Russia - 143 million

10) Mexico - 132 million

Sri Lanka - 21.44 million 
Canada - 37.06 million

உலகில் மூன்றில் ஒருவர் கிறிஸ்தவர் (31%)

நான்கில் ஒருவர் முஸ்லிம்கள் (24%)

இந்துக்கள் - 15%

பௌத்தர்கள் - 6.9%

Folk மதத்தவர் – 5.7%

யூதர்கள் – 0.2%

ஏனைய மதத்தவர் - 0.8%

எந்த மதத்தையும் சாராதவர்கள் - 16%

No photo description available.
  • Replies 516
  • Views 131.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஊரில் விவசாயம் செய்யும்/செய்ய விரும்பும் (பாலபத்ரஓணாண்டி)நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.....!  👍 பி.கு: தோட்டத்தில் நின்று சுவையான தேநீர் அருந்தும் போது ஒரு கணம் சுவியையும் நினைக்கவும்.....!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    259 X உங்கள் வயது X  39ஐ  பெருக்கி வரும் விடையை பாருங்கள் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள். வீட்டிலிலுள்ள மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் வயதையும் பெரிக்கிப் பாருங்கள்.

  • தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள் :  :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ::::::::::: வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத பெருமை நிறைய தஞ்சை கோவிலு

Posted Images

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, nunavilan said:

எந்த மதத்தையும் சாராதவர்கள் - 16%

எந்த மதத்தையும் சாராதவர்கள் எண்டால் கறுப்புச்சட்டை பெரியார் கொம்பனியும் இதற்குள்  அடங்குமா சார்?

 

  • கருத்துக்கள உறவுகள்

மதம் பிடிக்காதவர்கள் 16 %.....!  🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, suvy said:

மதம் பிடிக்காதவர்கள் 16 %.....!  🤣

போனமாதம் ஊரிலை என்ரை தூரத்து சொந்தத்துக்குள்ளை ஒரு கலியாண வீடு நடந்தது. மாப்பிளை முற்போக்குவாதியாம்.சமய சம்பிரதாயம் ஒண்டுமில்லாமல் தாலி கட்டினவராம்.பால் அறுகு வைச்சு கூட முழுகேல்லையாம்.கலியாணகாட் கூட வலு சிம்பிளாய் அடிக்க சொன்னவராம்.கலியாண வீட்டுக்கு வந்த ஆக்களுக்கு தென்னம்பிள்ளை,கொய்யாமரம்,பாக்குமரம் எண்டு பலகாரத்துக்கு பதிலாய் குடுத்தவராம்
(அதிலை வந்த சனம் ஆளுக்கு நாலைஞ்சு கண்டு எண்டு சிரிச்சுக்கொண்டே தூக்கிக்கொண்டு போனது வேறைவிசயம்)
இவ்வளவுத்துக்கும் அந்த முற்போக்குவாதி மாப்ஸ் வாங்கின சீதனம் ஒரு பெரிய கல்வீடு.30பரப்பு வயல்,50லட்சம் ரொக்கம் மற்றும் நகை நட்டுக்கள்......🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

எந்த மதத்தையும் சாராதவர்கள் எண்டால் கறுப்புச்சட்டை பெரியார் கொம்பனியும் இதற்குள்  அடங்குமா சார்?

 

பெரியாரின் தொண்ட‌ர்க‌ளிட‌ம் பெரிசா க‌ட‌வுள் ந‌ம்பிக்கை இருப்ப‌தாக‌ தெரிய‌ வில்லை தாத்தா /

என‌க்கு சிறு வ‌ய‌தில் இருந்து க‌ட‌வுள் ந‌ம்பிக்கை இருக்கு / 

( சிம‌பெருமான் 🙏🙏🙏)  மை கீரோ 💕

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, பையன்26 said:

பெரியாரின் தொண்ட‌ர்க‌ளிட‌ம் பெரிசா க‌ட‌வுள் ந‌ம்பிக்கை இருப்ப‌தாக‌ தெரிய‌ வில்லை தாத்தா /

என‌க்கு சிறு வ‌ய‌தில் இருந்து க‌ட‌வுள் ந‌ம்பிக்கை இருக்கு / 

( சிம‌பெருமான் 🙏🙏🙏)  மை கீரோ 💕

இதெல்லாம் என்ன ராசா????? 😀

Bildergebnis für m k stalin thurka 

Bildergebnis für thurka stalin pray

Bildergebnis für thurka stalin pray

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

இதெல்லாம் என்ன ராசா????? 😀

Bildergebnis für m k stalin thurka 

Bildergebnis für thurka stalin pray

Bildergebnis für thurka stalin pray

இது தாத்தா ம‌க்க‌ளின் ஓட்டை அள்ள‌ தாங்க‌ளும் தெய்வ‌ ப‌க்த‌ர்க‌ள் என்ர போலி வேச‌ம் 😁😉 /

எல்லா திராவிட‌ர்க‌ளும் க‌ட‌வுள் ம‌றுப்பு கொள்கை உடைய‌வ‌ர்க‌ள் இல்லை /  பெரியாரின் கொள்கையை தீவிர‌மாக‌ பின் ப‌ற்றுவ‌ர்க‌ளிட‌ம் தான் க‌ட‌வுள் ம‌றுப்பு கொள்கை இருக்கு 😁😉/

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

போனமாதம் ஊரிலை என்ரை தூரத்து சொந்தத்துக்குள்ளை ஒரு கலியாண வீடு நடந்தது. மாப்பிளை முற்போக்குவாதியாம்.சமய சம்பிரதாயம் ஒண்டுமில்லாமல் தாலி கட்டினவராம்.பால் அறுகு வைச்சு கூட முழுகேல்லையாம்.கலியாணகாட் கூட வலு சிம்பிளாய் அடிக்க சொன்னவராம்.கலியாண வீட்டுக்கு வந்த ஆக்களுக்கு தென்னம்பிள்ளை,கொய்யாமரம்,பாக்குமரம் எண்டு பலகாரத்துக்கு பதிலாய் குடுத்தவராம்
(அதிலை வந்த சனம் ஆளுக்கு நாலைஞ்சு கண்டு எண்டு சிரிச்சுக்கொண்டே தூக்கிக்கொண்டு போனது வேறைவிசயம்)
இவ்வளவுத்துக்கும் அந்த முற்போக்குவாதி மாப்ஸ் வாங்கின சீதனம் ஒரு பெரிய கல்வீடு.30பரப்பு வயல்,50லட்சம் ரொக்கம் மற்றும் நகை நட்டுக்கள்......🤣🤣🤣


தண்ணீர் சேமிப்பு என்றால் வெறும் வாய்க்கால் வெட்டினால் போதாது 
வீணாக கடலில் சேரும் தண்ணீரையும் இழுத்து குளம் அணை கட்டி 
சேமிக்கவும் வேண்டும்

அங்கு இருந்தால் வீணான செலவு கோவில் கட்டுவது 
கூத்ததடிப்பது என்று கடலில் சேர்ப்பார்கள் என்று தெரிந்து இருந்தால் 
அதை வாங்கி சமூகத்திடம் சேர்ப்பது நல்ல விடயம்தானே? 

அப்படியான இடங்களில் இருந்து கிளப்புவது என்றால் 
இப்படி பெண் எடுக்கும் நேரத்தில் மட்டுமே கை கூடும் 
இல்லையென்றால் பாடை கட்டுமட்டும் வைத்து இழுத்துக்கொண்டே இருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின், வழித் தடத்தை மறித்தால்.... மனித குலத்துக்கு நாசம்.
 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

"ஐந்து பெற்றால்... அரசனும் ஆண்டி ஆவான்" என்பதன் உண்மை என்ன? 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

"ஐந்து பெற்றால்... அரசனும் ஆண்டி ஆவான்" என்பதன் உண்மை என்ன? 

இது அரசியல்வாதிகளுக்கு ஒத்துவராது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

67889441_367690217232512_604263586150429

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

மாரடைப்பு... அறிகுறிகள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைகீழாக விழும் கோபுர நிழல்! பதில் தெரியாத மர்மம்!!

 
lanka-73-696x355.jpg

கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனுமிடத்தில் விருபாட்சர் கோயில் அமைந்துள்ளது.

விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில், பெங்களூரிலிருந்து 350 கி.மீ., தொலைவில் உள்ள இக்கோயில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது.

விருபாட்சருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். ஆனால், கர்ப்பக்கிரகத்தில் உள்ள சிவன் சிலையோ 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அதனால், இந்தக் கோயில் கட்டி எழுப்பிய பிறகு ஆண்ட மன்னர்கள் கோயிலை இன்னும் பிரம்மாண்டப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டில் இருந்தே ஹம்பி நகரத்தில் பல படையெடுப்புகள் நடத்தப்பட்டதால் பல வரலாற்றுப் பொக்கிஷங்கள் காணாமல் போய்விட்டதாம். இந்தக் கோயில் பல ஆண்டுகளாக விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்டதாம். இந்தியாவின் பழமையான கோயிலும் இதுதான்.

கோயிலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கோபுரம் ரங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இது 160 அடி உயரத்தைக் கொண்டது.

1565 இல் இந்த நகரம் முழுவதும் அழிந்தபோது கூட, இந்தக் கோயில் அழியாமல் இருந்ததோடு, கோவிலில் நடைபெறும் வழிபாடுகளும், ஆராதனைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

ரங்க மண்டபத்தைச் சுற்றி சிறு சிறு கோயில்கள், தூண் மண்டபங்கள் என அனைத்து அம்சங்களும் அழகாக எழுப்பப்பட்டுள்ளது.

கோயிலின் மத்தியில் இருக்கும் ரங்க மண்டபத்தின் கோபுர நிழலான ஒரு அறையில் தலைகீழாக தெரிகிறது. இதுதான் இந்தக் கோயிலின் உச்சக்கட்ட சிறப்பு ஆகும்.

இதற்கான அறிவியல் ஆராய்ச்சிகள் பலகாலமாக நடப்பட்டு ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டது.

கோயிலின் கோபுரத்திற்கும் நிழல் விழும் தூண் மண்டப அறைக்கும் இடையே ஒரு துவாரம் இருப்பதால் அந்தத் துவாரம் வழியாக வரும் பிம்பம் தலைகீழான பிரதிபலிப்பை தருகிறது.

இப்படியொரு விளக்கம் ஒரு சில அறிஞர்களால் கொடுக்கப்பட்டாலும், அந்தத் துவாரம் கோபுரத்தின் பிம்பம் செல்லும் வழியில் இல்லை என்று வேறுசில அறிஞர்களால் சொல்லப்பட்டது.

அதனால், கோபுரத்தின் நிழலானது தலைகீழாக விழுவதற்கான காரணம்  என்ன என்பது விடை தெரியாத மர்மமாகத்தான் உள்ளது.

இந்தியாவின் மர்மமான கோயிகளில் ஒன்றான இந்த விருபாட்சர் கோயிலின் கோபுர நிழல் தலைகீழாக விழுவதைப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தக் கோயிலில் குவிந்து வருகின்றனர்.

அதோடு, கோயிலின் வடிவமைப்பு ராமாயணம், மகாபாரதத்தைச் சித்தரிக்கும் சிற்பங்கள் கல்வெட்டுக்கள் கோயிலின் கலைநயத்தை பார்த்து வியப்புடன் செல்கின்றனர்.

இந்தக் கோயில் இந்திய கலாசார பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டு என யுனெஸ்கோவால் புகழாரம் சூட்டப்பட்டது.

பல இடிபாடுகளுக்குக்கிடையே சிக்கி தற்போது அழகாகக் காட்சியளித்து வரும் இந்த விருபாட்சர் கோயிலில் டிசம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், வருடாந்த ரத திருவிழா பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக நடத்தப்படுகிறது.

http://lankapuri.com/2019/09/07/தலைகீழாக-விழும்-கோபுர-நி/

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

72452413_2679580348760177_40988094351477

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

3000 ஆண்டுகள் பழமையான தேன், எகிப்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

இந்தியாவின் மிக நீண்ட தூரம், பயணிக்கும் ரயில்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சே குவேரா தன் குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்...

 
1965,

என் குழந்தைகளுக்கு,

அன்புள்ள ஹில்டிட்டா, அலைடிட்டா, கியாமிலோ, ஏனெஸ்டோ, என்றாவது ஒரு நாள் நீங்கள் இக்கடிதத்தைப் படிக்க வேண்டி வந்தால் அதனுடைய பொருள் நான் உங்களை விட்டுப் பிரிந்துவிட்டேன் என்பதுதான்.

உங்களி்ல் யாருக்கும் என்னைப் பற்றி அவ்வளவு பெரிதாக ஒரு நினைவு இருக்காது. மிகவும் இளையவர்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்தே இருக்காது.

சரியென்று தோன்றுவதைச் செய்யவும் சொந்தக் கருத்துகளில் இருந்து எப்பொழுதும் மாறாமல் வாழ்ந்து வந்த ஒருவராயிருந்தார் உங்களுடைய அப்பா. நீங்கள் நல்ல புரட்சிக்காரர்களாக வளர வேண்டும் என்பதுதான் இந்த அப்பாவின் விருப்பம். கருத்தூன்றிக் கற்கவும் கலையில் திறமை பெறவும் வேண்டும். புரட்சிதான் அனைத்திற்கும் மேலானது என்றும் எந்தத் தனிமனிதருக்கும் எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனிலும் முக்கியமானது அநீதியை எங்கு கண்டாலும் எதிர்க்க வேண்டும் என்பதுதான். ஒரு புரட்சிக்காரனுடைய மிகவும் முக்கியமான குணம் அதுதான்.

குழந்தைகளே, இந்த அப்பாவைப் போக அனுமதியுங்கள் . என்றாவது ஒரு நாள் சந்திக்க முடியும் என்று நம்பலாம்.

அப்பாவினுடைய முத்தங்களையும் அரவணைப்பையும் இத்துடன் அனுப்புகிறேன்.

என்றும்,

உங்கள் அப்பா.
( நன்றி- மு.ந.புகழேந்தி மொழிபெயர்த்த சே குவேரா எழுதிய கடிதங்கள் நூலிலிருந்து...)
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அட்சயப்பாத்திரா' - 17.5 லட்சம் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் உலகின் மிகப் பெரிய சமையலறை 🥗 🍅 🍲
 
  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நான் உருப்பட்டேனா, இல்லையா.. கண்ணதாசன்
IMG-20180326-WA0002.jpg
கேட்ட கேள்வி.*

சென்னை: வாழ்வில் எவ்வளவு உயர்ந்தாலும் தங்கள் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் என்றுமே மரியாதை அளிக்கத் தவறுவதில்லை என்பதற்கு உதாரணம் தான் இந்த செய்தி.

அதுவும் இது கவிஞர் கண்ணதாசனைப் பற்றியது. இந்த சம்பவத்தினை கண்ணதாசன் குடும்பத்தினரே சொல்லும் போது இன்னும் பெருமையாகவே உள்ளது!

காரில் புறப்பட்டார்
ஓஹோவென்ற உயரத்தில் கண்ணதாசனின் புகழ் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலித்த சமயம் அது! அப்போது செட்டிநாட்டு கிராமம் ஒன்றில் ஒரு விழாவிற்கு பேச்சாளராக கண்ணதாசனை அழைத்திருந்தார்கள். அந்த விழாவில் கலந்து கொள்ளவும் கண்ணதாசன் ஒப்புக் கொண்டு காரில் ஏறிப் புறப்பட்டார்.

காந்தி வந்த குருகுலம்
இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால், அமராவதிபுதூர் என்ற கிராமத்தைத் தாண்டி தான் செல்ல வேண்டும். இந்த கிராமத்தில் உள்ள குருகுலம் ஒன்றில் தான் கண்ணதாசன் படித்தார். மகாத்மா காந்தியே ஆசீர்வாதம் செய்யப்பட்ட குருகுலம் அது. அவ்வளவு ஃபேமஸ்!

பள்ளி வாசலில்..
இந்த கிராமத்திற்குள் கண்ணதாசன் கார் நுழைந்தது. அப்போது தான் படித்த பள்ளியை அங்கு பார்த்தார். உடனே காரை நிறுத்தச் சொல்லி விட்டார். காரை விட்டு கீழே இறங்கி அந்த பள்ளியின் வாசலில் நடுரோட்டில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டார்.

நான் உருப்பட்டேனா?
அங்கிருந்தவர்களுக்கெல்லாம் ஒன்றுமே புரியவில்லை. பள்ளியில் இருந்தவர்கள், தெருவில் போனவர்கள் எல்லாம் கண்ணதாசனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றனர். விழாவுக்கோ நேரம் ஆகி கொண்டே இருந்தது. உடன் வந்தவர்கள் கேட்டார்கள், "என்னாச்சு.. ஏன் இப்படி உட்கார்ந்துட்டீங்க?" என்றனர். அதற்கு கண்ணதாசன், "இல்லை.. நான் இங்க படிக்கும் போது என் வாத்தியார், நீ உருப்பட மாட்டே... உருப்பட மாட்டே...ன்னு எப்பப் பார்த்தாலும் சொல்லிட்டே இருந்தார்... இப்போ நான் உருப்பட்டேனா, இல்லையா? எனக்குத் தெரியலையே..." என்றார்.

என்னை எப்படி சொல்லலாம்?
கவிஞர் ஏதோ விளையாட ஆரம்பித்து விட்டார் என்று நினைத்தாலும் இதுக்கு என்ன பதில் சொல்வதென்றே யாருக்கும் தெரியவில்லை. திரும்பத் திரும்ப "நான் உருப்பட்டுட்டேனா.. இல்லையா"... என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அந்த நேரம் பார்த்து எதிர்புறம் இருந்த ஒரு டீக்கடையில் பாட்டு சத்தம் கேட்டது. அது கண்ணதாசன் எழுதிய பாட்டு தான். உடனே கண்ணதாசன், "பாத்தீங்களா... என் பாட்டு ரேடியோவில் எல்லாம் வருது... அப்போ நான் உருப்பட்டேனா, இல்லையா? என் வாத்தியார் எப்படி என்னை அப்படிச் சொல்லலாம்?" என்றார்.

விரைந்து வந்த வாத்தியார்
கவிஞர் இப்படி பிடிவாதம் பிடிப்பது ஊர் முழுக்கத் தெரிந்து விட்டது. சிலர் ஓடிப்போய் கண்ணதாசனுக்கு பாடம் நடத்திய ஆசிரியரிடமே தகவல் சொன்னார்கள். உடனே வாத்தியாரும் கண்ணதாசனை நோக்கி வந்தார். அவ்வளவு நேரம் ரோட்டில் உட்கார்ந்து சத்தமாக வாத்தியாரை பற்றி பேசிக் கொண்டிருந்த கவிஞர், தூரத்தில் அவர் வருவதைப் பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு எழுந்தார். வாத்தியார் கிட்ட வர வர... கண்ணதாசனுக்கு கை கால் எல்லாம் வெடவெடவென உதறியது.

ஒன்னுமில்லீங்க ஐயா
வாத்தியார் கிட்ட வந்து நின்றதும், கண்ணதாசன் தன் கைகளை பவ்யமாக கட்டிக் கொண்டார். இப்போது வாத்தியார் பேசினார், "என்னப்பா... முத்து.. ஏன் இப்படிக் கீழே உட்கார்ந்துட்டு இங்கே சின்ன பிள்ளை மாதிரி என்ன பண்ணிட்டு இருக்கே?" என்றார். கண்ணதாசனோ, "ஒன்னுமில்லீங்க ஐயா...." என்றார்.

அப்பா மாதிரி ஆசிரியர்
அதற்கு வாத்தியார், "இல்லையே... உன் சமாச்சாரம் வந்து சொன்னார்கள். நான் உன்னை சின்ன வயசுல உருப்பட மாட்டேன்னு சொன்னதைத் தானே கேட்டே? உன் ஆசிரியர் நான். உன் மேல் உரிமை எடுத்து என்னைத் தவிர வேறு யார் பேச முடியும்? ஆசிரியர் திட்டினாலும் பெற்றோர் திட்டினாலும் அது பலிக்காது. அது உங்கள் நல்லதுக்காகத் தானே தவிர வேறு எதுக்காகவும் இல்லை. உன்னை நினைச்சு தினம் தினம் நான் பெருமைப்பட்டுட்டு இருக்கேன். அங்க பார்... விழாவுக்கு நீ வரப்போறன்னு... உனக்காக ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டி இருக்காங்க. எத்தனை பேர் உன் பேச்சைக் கேட்க குவிஞ்சு கிடக்கிறாங்க... முதலில் விழாவுக்குப் போ... நானும் உன் பேச்சைக் கேட்க பின்னாலயே வர்றேன்" என்றார்.

வாயடைத்து நின்ற கண்ணதாசன்
ஆசிரியர் பேசப் பேச கவிஞருக்கோ புல்லரித்துப் போனது. விளையாட்டுக்காக கண்ணதாசன் அப்படி கேட்டிருந்தாலும், தன் ஆசிரியரை நேரில் பார்த்ததும், அவருக்கு உரிய மரியாதை அளித்த விதத்தை கண்டு எல்லோருமே திகைத்து நின்றார்கள்.

மளமளவென பேசிக் கொண்டிருந்தவர், தன் ஆசிரியரிடம் வாயடைத்து நின்றதையும் கவனித்து கொண்டு நின்றார்கள். கடைசியில் விழாவுக்கு கிளம்பிச் செல்லும் போது கண்ணதாசன் தன் ஆசிரியரின் கால்களைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிச் சென்றதையும் மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டு தான் நின்றார்கள்.

உண்மையிலேயே ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஒரு அப்பா, அம்மா போலத் தான்
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.