Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொசோவோ சுதந்திரம் காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Why Kosovo is free and Tamileelam is not?

அற்புதம். !!

இறுதியில் வரும் slides, starting from "YOU !!", சிறிது வேகம் அதிகமோ என தோன்றுகிறது. மக்கள் மனங்களில் தைப்பதற்கு "சிறிது நேர அவகாசம்" கொடுத்தல் பயந்தரும் என்பது எனது கருத்து.

ஆக்கம் மிகவும் அருமை.

ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியது. ஒப்பீட்டளவில் வாய்ப்புகளிருந்தும் இன்னுமேன்?

நம்பிக் கொண்டிருக்கிறமாதிரி மழையில நனைஞ்சு சீனவெடியள் ஒண்டும் புஸ் ஆகேல்லையாக்கும்.

ஈழதேசத்திற்கு விடிவு வேண்டும். அது அதன் சொந்தக்காலிலிருந்து பெறப்பட வேண்டும். சர்வதேசத் தேவைகள் எமக்கான விடிவைக் கொண்டு வரும், என்ற எதிர்பார்ப்புக்களுடன் ஈழப் போராட்டம் தொடங்கப்படவில்லை. எமது தேவைகளும் சர்வதேசத் தேவைகளும் இந்தியத் தேவைகளும் வேறுபட்டவை. இத் தேவைகள் சந்திக்கும் புள்ளியில் ஒருநாள் வெளிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு இணைப்பு வாழ்த்துக்கள் பண்டிதர்.

பண்டிதர்... நல்லதொரு முயற்சி. காலத்துக்கேற்றது. youtube நிலவரத்தின் படி:

#89 - Most Discussed (Today) - News & Politics - Canada

#18 - Most Viewed (Today) - News & Politics - Canada

#10 - Top Favorites (Today) - News & Politics - Canada

#14 - Top Rated (Today) - News & Politics - Canada

எனவே youtube கணக்கு வைத்திருக்கும் கருத்துக்கள உறுப்பினர்கள் உங்களின் favorite இல் இணைக்கவும். அதேபோல் Rating குடுக்கவும். உங்கள் நண்பர்களுக்கும் இணைப்பை அனுப்பி பார்க்கச் சொல்லவும். முழுமையாகப் பார்க்காவிட்டாலும் ஒருமுறை திறந்து மூடச் சொல்லுங்கள். அப்போது தான் youtube ன் முகப்பை அடைந்து பலரது பார்வையில் படும்.

பொருத்தமான நாளில் நல்லதொரு கருத்தை காட்சியக சொல்லியுள்ளீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

எமது தலைவர் கோசோவோ நாட்டிற்கு வாழ்த்து செய்தி அனுப்புவதன் மூலமும் சிறிலன்கா கோசோவோ விடுதலையை எதிர்ப்பதை சுட்டி காட்டுவதன் முலமும் கோசோவோ எதிர்காலத்தில் தமிழீழத்தை அங்கீகரிக்க கோரலாம்

ஐரோப்பாவில் புதிய தேசம்: கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம்

கொசோவோ நாடாளுமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்டு கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய நேரம் மாலை 5:00 மணிக்கு கொசோவோ நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் ஹசிம் தாச்சி தனிநாட்டுப் பிரகடனத்தை மொழிந்தார்.

சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று கொசோவோ தனிநாட்டினைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் ஐரோப்பாவில் புதிய தேசம் ஒன்று பிறந்துள்ளது.

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கொசோவோவின் அல்பேனிய மக்கள் தனிநாட்டுப் பிரகடனத்தினை உணர்வெழுச்சியுடன் வரவேற்று கொண்டாடுகின்றனர்.

"சுதந்திர கொசோவோ" அமைதிக்காகவும் பிரதேசத்தின் உறுதித்தன்மைக்காகவும் உழைக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர கொசோவோ ஒரு ஜனநாயக, பல்லினக் கலாச்சார சமூகமாக விளங்கும் என்பதோடு கலாச்சார மற்றும் மத உரிமைகளுக்கு உத்தரவாதமும் அளிக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பின்லாந்தின் முன்நாள் அரச தலைவர் மாத்தி ஆத்திசாரி தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைபின் அடிப்படையில், கொசோவோ தேசம் கட்டியெழுப்பப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொசோவோவிற்குரிய தனியான காவல்துறை மற்றும் படைக் கட்டுமானங்கள் நிறுவப்படும் எனவும் பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிக்கவுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள, அதன் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்டச் சந்திப்பினைத் தொடர்ந்து கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினைத் தொடர்ந்து, பெரும்பாலான உலக நாடுகளும் கொசோவோவை அங்கிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 100 வரையான உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கொசோவோ தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட கொசோவோவில் 92 விழுக்காடு அல்பேனியர்களும் 8 விழுக்காடு சேர்பியர்களும் வசிக்கின்றனர்.

சேர்பியாவிலிருந்து கொசோவோ தனிநாடாகப் பிரிவதனை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த சேர்பியா மற்றும் ரஸ்யா ஆகியன தனிநாட்டுப் பிரகடனத்தினை கண்டித்துள்ளன.

கொசோவோவை ஆக்கிரமித்து கொசோவோ மக்கள் மீது இன அழிப்புப் போரினை கட்டவிழ்த்து விட்ட ஸ்லோவடோன் மிலோசவிச்சின் சேர்பியப் படைகள், 1999 ஆம் ஆண்டு. நேட்டோப் படைகளால் வெளியேற்றப்பட்டன. 1999 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நாவினால் கொசோவோ நிர்வகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 16,000 நேட்டோப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்தன.

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம், ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசினை அமைப்பதற்கு உரித்துடையவர்கள் என்ற உலகளாவிய பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தினை வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து

விடுதலைப் போராட்டத்தை நடத்தி அதன் பாலான நகர்வுகளின் பின் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

உயிர்களை உவப்பீகை செய்து சுதந்திரம் இறைமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஒரு விடுதலைப் போராட்டத்தை ஏற்று அந்த மக்களுக்கு இறைமை உண்டு, தன்னாட்சி உரிமை உண்டு என்று அதனை அங்கீகரித்து, அதன் தனிநாட்டுப் பிரடனத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைத்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கும் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றிற்கான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, இறைமை என்பவற்றை கொசோவோவில் உலகப்பெரும் நாடுகள் அங்கீகரித்து தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஒத்துழைக்கின்றமை தமிழினத்துக்கும் அனைத்துலகத்தின் பால் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் இது உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

படங்கள்: ஏபி, ஏ.எஃப்.பி., ரொய்ட்டர்ஸ்

http://www.puthinam.com/

மிகவும் அவசியமான படைப்பொன்றைத் தந்திருக்கிறீர்கள். இப்படியான பல படைப்புக்கள் நெட்டில் மேலும் வரவேண்டும்.

நன்றி பண்டிதர்!

  • கருத்துக்கள உறவுகள்

பண்டிதர் மிகவும் பொருத்தமான படைப்பு.நன்றிகள் உங்களுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வரை 1500 பேர் பார்த்திருக்கிறார்கள். யாழிலிருந்து கிட்டத்தட்ட 500 கிளிக்குகள். எனவே வெளி ஆட்களும் நிச்சயம் பார்த்திருக்கிறார்கள்.

youtube canada இல் news and politics பிரிவில் 3ம் இடத்தில் நிற்கிறது. வெளி ஆள் ஒருவர் கருத்து வைத்திருக்கின்றார். இப்படியே புதுப்புது காணொளிகள் மூலம் முதலாம் இடத்தை பிடித்து தொடர்ந்து தக்க வைப்பதன் மூலம் எமது குரலை வெளிஉலகுக்கு கொண்டுவரலாம்.

அங்கு கருத்துக்களை எழுதுபவர்களுக்கு பதிலை வைப்பதன் மூலமும் நீங்களாகவே உங்கள் கருத்துக்களை வைப்பதன் மூலமும் இந்த அலைவரிசையை உயிர்ப்புடன் வைத்திருப்பது உங்கள் கையில் :rolleyes:

http://www.youtube.com/boycottsrilanka

கருத்துப்பட பிரேரணைபோல காணொளிப் பிரேரனைகளையும் செய்திக்குழுமத்திற்கு அனுப்புங்கள்.

#12 - Most Discussed (Today) - News & Politics - Canada

#23 - Most Viewed (Today) - Canada

#1 - Most Viewed (Today) - News & Politics - Canada

#10 - Most Viewed (This Week) - News & Politics - Canada

#46 - Top Favorites (Today) - Canada

#3 - Top Favorites (Today) - News & Politics - Canada

#40 - Top Favorites (Today) - News & Politics

#54 - Top Rated (Today) - Canada

#3 - Top Rated (Today) - News & Politics - Canada

#90 - Top Rated (Today) - News & Politics

#23 - Top Rated (This Week) - News & Politics - Canada

செய்திகள்&அரசியல் கனடா என்கிற பிரிவில் முதலாவது இடத்தில் இருக்கிறது.

யாழ் கள உறுப்பினர்களுக்கு youtube இல் கணக்கு இல்லாவிட்டால் ஆளுக்கு குறைந்தது இரண்டு கணக்குகளைாவது உருவாக்குங்கள். ஈழம் சார்ந்த பயனுள்ள பிரச்சார வீடியோக்களுக்கு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். அவற்றின் இணைப்புகளை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி பார்க்கச் செய்யுங்கள். நீங்களும் பலதடவை (மீண்டும் மீண்டும்) சென்று பார்வையிடுங்கள். ஒரு சொல்லென்றாலும் பறவாயில்லை உங்கள் கருத்துக்களை அந்த வீடியோக்கு கீழ் எழுதுங்கள். உங்களின் விருப்ப வீடீயோவாகத் தெரிவுசெய்யுங்கள். சும்மா பார்த்துவிட்டு வராமல் Rating கொடுங்கள். இப்படி செய்வதன் மூலம் youtube இல் எமது வீடீயோக்களை பிரபலப்படுத்தலாம். அதன்மூலம் எமது பிரச்சனைகளைப் பலரும் பார்க்கச் செய்யலாம். எனவே இதுவரை youtube கணக்கு இல்லாதவர்கள் தயவுசெய்து குறைந்தது இரண்டு கணக்குகளையாவது உருவாக்கிக் கொள்ளவும். இந்த வீடீயோவை இன்னும் முன்னகர்த்திச் செல்ல முடியும். அனைவரும் ஒத்துழையுங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

பண்டிதரின் ஆக்கத்திற்கு பாராட்டுக்கள். செய்தி அலசல், கருத்துப்படம் போல பண்டிதரின் காணொளிகளை ஊர்ப்புதினத்தில் சில காலங்கள் இருந்தபின்பு நிகழ்வும் அகழ்வும் பகுதியில் அல்லது வேறு பகுதியில் ஒன்றாக இணைத்தால் நன்றாக இருக்கும். அத்துடன் முகப்பில் கருத்துப்படம், செய்தி அலசல் போன்றவற்றுக்கு நேரடியான இணைப்பு வழங்கப்பட்டது போல பண்டிதரின் காணொளிக்கும் வழங்கினால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பண்டிதர் அண்ணாஉங்கட வீடீயோ நல்லா இருக்கு:............................................. எங்கள மாதிரி கருத்துக்களத்தில குப்பையள கொட்டாமல் சும்மா விசுக்கோத்து கதையள் கதைக்காமல்....................... பிரியோசனமா ஏதோ ஒண்டு செய்யிற உங்கள நினைச்சா பொறாமையா இருக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாயிருந்தது.

ஒரு சில இடங்களில் எழுத்து பிழைகளை திருத்தியும் மற்றும் வசனங்களை தெளிவாக வாசிக்கக்கூடியதாக (பின்னணியில் உள்ள படங்களில் வராத) நிறங்களையும் தெரிவு செய்து பயன்படத்தியிருந்தால் இன்னும் அற்புதம். ஆனாலும் நல்ல முயற்சி. வசனங்கள் தெளிவாக தெரிவதற்கு வெள்ளை அல்லது வேறு ஏதாவது மாற்று நிறங்களில் எழுத்துக்களில் வெளிக்கோடு(outline) அல்லது நிழல்(shadow) மெருகூட்டல் செய்தால் இவ்வாறான ஆக்கங்கள் மேலும் சிறப்பாக பார்வையாளருக்கு தெரியும்.

வேறொரு தலைப்பில் எழுதப்பட்ட கருத்தாகையால் அத் தலைப்பு தொடர்பான வசனமொன்று நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.