Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் ஆண்டான்குளத்தை நேற்று படையினர் கைப்பற்றினர் என அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் ஆண்டான்குளத்தை நேற்று

படையினர் கைப்பற்றினர் என அறிவிப்பு

மன்னாரின் கிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆண்டான்குளம் பகுதியை நீண்ட பல வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் எனப் படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டது.

நேற்றுக்காலை 5.30 மணியளவில் படையினர் தாம் திடீரென நடத்திய தாக்குதல் நடவடிக்கைமூலம் புலிகளின் பலமான பாதுகாப்பு அரணுடன் கூடிய சுமார் அறுநூறு சதுர கிலோமீற்றர் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர் என்று அறிவிக்கப்பட்டது.

படை நகர்வை எதிர்த்த பத்துப் புலிகள் உயிரிழந்தனர். மேலும் ஆகக் குறைந்தது பத்துப் படையினர் படுகாயமடைந்தனர் என்றும்

புலிகளின் இரு சடலங்களையும் ரி 56 ரக ஆயுதங்கள் மூன்றையும் படையினர் மீட்டனர் என்றும்

இம் மோதல்களில் ஒரு சிப்பாய் உயிரிழக்க, நான்கு சிப்பாய்கள் காயமடைந்தனர் என்றும் மேலும் கூறப்பட்டது.

படையினர் தமது நிலைகளை மேலும் பலப்படுத்தி வருகின்றனர் என்றும் அரசுத் தரப்பின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது.(உ 10)

http://www.sudaroli.com/pages/news/today/03.htm

Edited by கறுப்பி

இது உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

அறுநூறு சதுர கிலோமற்றரெண்டால் அது முப்பது கிலோமீற்றர் நீளமும் இருபது கிலோமீற்றர் அகலமும் கொண்ட பிரதேசம். அவ்வளவு பெரிய பிரதேசத்தை இவ்வளவு கெதியாக் கைப்பற்றியிருக்க ஏலாது. அறுபது சதுர கிலோமீற்றர் எண்டால்கூட நம்ப ஏலாது. உதுல ஏதோ பிசகிருக்குது. பழைய கணக்கையெல்லாம் சேர்த்து ஒண்டாக்கிச் சொல்லீனமோ தெரிய இல்லை.

Edited by karu

அடம்பன் பகுதியில் இடம் பெற்ற மோதலில் பலியான விடுதலை புலிகளின் சடலங்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைப்பு

மன்னார் அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை காலை 03 ஆண் விடுதலை புலி உறுப்பினர்களின் சடலங்களையும் , நேற்று இரவு 04 பெண் விடுதலை புலி உறுப்பினர்களின் சடலங்களையும் படையினர் மன்னார் வைத்திய சாலையில் ஒப்படைத்தனர்.

சடலங்களை இன்று காலை 10.45 மணியளவில் மன்னார் மாவட்ட நீதிவான் டி.ஜே. பிரபாகரன் வைத்திய சாலைக்குச் சென்று பார்வைட்டு பின் சடலப்பரிசோதனையின் பின் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

இதனைக் தொடர்ந்து 03 ஆண் புலிகளின் சடலத்தையும் 01 பெண் புலியின் சடலத்தையும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் ஓமந்தை சோதணைச்சாவடியூடாக புலிகளின் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

ஏணைய 03 பெண் புலிகளின் சடலங்களும் மன்னார் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.net/

  • கருத்துக்கள உறவுகள்

அறுநூறு சதுர கிலோமற்றரெண்டால் அது முப்பது கிலோமீற்றர் நீளமும் இருபது கிலோமீற்றர் அகலமும் கொண்ட பிரதேசம்.

600 சதுர மீற்றர்கள் என்பதை எங்கட புலம்பெயர் (தென்னிலங்கைக்கு) தமிழ் ஊடகம் 600 சதுர கிலோமீற்றர்கள் என்று மொழிபெயர்த்திட்டுது. அதால வந்த குழப்பமே இது.

போராளிகள் முன்னேறும் இராணுவத்தின் நிலைகளுக்குள் ஊடுருவி துணிகர தாக்குதல் நடத்தி இருப்பதனால் தான் வீழ்ந்த போராளிகளின் உடலங்களை மீட்கமுடியவில்லை போலும்.

இராணுவத்தின் சுடுதிறன் அதிகரித்திருப்பதால் உடலங்களை மீட்கச் சென்று இன்னும் போராளிகளை இழப்பது அதுவும் வெட்ட வெளிச்சமர்களில் ஒன்றும் உசிதமான காரியமல்ல..!

அமெரிக்கப் படைகள் கூட ஈராக்கில் தனக்கு சாதகமற்ற கள முனையில் தனது வீரர்களின் உடலை விட்டுவிட்ட சம்பவங்களும் உண்டு..!

தாயக மண்ணின் விடுதலைக்கு வித்தாகி வீழ்ந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Edited by nedukkalapoovan

இராணுவத்தின் சுடுதிறன் அதிகரிச்சிருக்கு எண்டு சொல்ல முடியாது. அப்பிடி எண்டா நாங்கள் என்ன வில்லு அம்புகளோடையே சண்டை பிடிக்கிறம். எங்களிட்டையும் புலி கணை புண்ணாக்கு கணை எண்டு எல்லாம் இருக்குங்கோ.

சிலவேளை இராணுவத்தின்ரை சுடுதிறனை சீன வெடிமாதிரி நூத்து புஸ் ஆக்கிற அளவுக்கு எதிர்பார்த்தது போல் மழை பெய்யாமல் விட்டிருக்கலாம். உதுகள் சகஜம்.

நம்பிக்கையோடு இருப்பம் எல்லாத்தையும் ஒரு புள்ளியில வைச்சு அடிக்கும் காலம் ஒரு நாள் வரும் எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

போராடும் மக்களிடையே காணப்படாத சலிப்பு இங்கேன் காணப்படுகிறது. நிலவரம் மனதினில் கலவரத்தைத் தூண்டுகிறதா?

மன்னாரில் தம்மால் கைப்பற்றப்பட்ட பரப்பாங்கண்டல் பகுதி மீது இன்று விடுதலைப் புலிகள் இரு முனைத் தாக்குதலை நடத்தியதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது.

அதிகாலை ஐந்துமணிவரை கடுமையான மோதல்கள் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ள படைத்தரப்பு தாம் புலிகளின் முயற்சியை முறியடித்துள்ளதாகவும் புலிகள் தரப்பில் பலர் கொல்லப்பட்டதாகவும், தமது தரப்பில் நால்வர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

தளபதிகள் சொர்ணம் மற்றும் லக்ஸ்மன் தலைமையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாக்குதலின்போது 122 மி.மீற்றர் எறிகணை வீச்சும் மேற்கொள்ளப்பட்டதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Edited by மின்னல்

குருக்கர் போட்ட கானோலிகளாளை பாத்துட்டு இந்தியா சீனா எல்லாம் வரப்போறாங்கள் புலிகளிட்ட ஆயுதம் வேண்ட.

நாங்கள் பிளேன் ஓட்டாடாலும் நல்லா பெயின்ராடிக்க பாழகீட்டம்..

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இணையம் - மன்னார்இ அடம்பன் பகதியில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் இன்று அதிகாலை முதல் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. படையினரின் இலக்குகளை நோக்கி விடுதலைப்புலிகள் கடும் தாக்குதலை நடத்தியதாகவும் படையினர் பதிலுக்கு தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலையடுத்து அடம்பன் பகுதி அதிர்ந்த வண்ணம் காணப்பட்டதாக பொது மக்கள் தெரிவித்தனர். அடம்பன் பகுதியில் இன்று இடம்பெற்ற மோதலில் விடுதலைப்புலிகளுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் படையினரின் தரப்பில் ஐவர் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

மோதல் குறித்து அவர் மேலும் தெரிவித்தாவதுஇ

மன்னாரில் கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போது மன்னார் உயிலங்குளம் மற்றும் ஆண்டான்குளம் பிரதேசத்திற்கு இடைப்பட்ட 600 மீற்றர் பரப்பளவிலான நிலப்பரப்பு படையினரால் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில் அப்பிரதேசத்துக்குள் ஊடுருவிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் படையினர் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலில் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் நடவடிக்கைக்கு புலித்தலைவர்களான சொர்ணம் மற்றும் லக்ஷ்மன் போன்றோர் தலைமை தாங்கியிருப்பதாக விடுதலைப் புலிகளின் தகவல் பரிமாற்றங்களின் போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு படையினர் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் மீது படையினர் பதில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதுடன் அதன் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது.

இம்மோதலானது சுமார் 4 மணித்தியாலங்கள் வரையில் நீடித்துள்ளதுடன் புலிகள் தரப்புக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இம்மோதலின் போது காயமடைந்த இராணுவத்தினர் அநுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி:-வீரகேசரி இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மாந்தை மேற்கு முன்னரங்க பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மோதல்

[Wednesday February 20 2008 10:01:48 AM GMT] [யாழ் வாணன்]

மன்னார் மாந்தை மேற்கு முன்னரங்க பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் இடம் பெற்றுள்ளது .

மாந்தை மேற்கு முன்னரன்ப்குப் பகுதிகளில் உள்ள புலிகளின் இலக்குகள் மீது படையினர் செல் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் மன்னார் செளத்பார் படைமுகாம் தள்ளாடி படை முகாம் வங்காலை தோமஸ்புரி படைமுகாம் , உயிலங்குளம் படைமுகாம் ஆகிய படை முகாம்களில் இருந்து படையினர் பாரிய செல் தாக்குதலினை மாந்தை மேற்கு பகுதியை நோக்கி மேற்கொண்டு வருகின்றனர்.

இரு தரப்புகளும் இடையில் பரஸ்பர மோதல்கள் இடம் பெற்று வருகின்ற போதிலும் சேத விபரங்கள் வெளியாக வில்லை

tamilwin.com

நாங்கள் பிளேன் ஓட்டாடாலும் நல்லா பெயின்ராடிக்க பாழகீட்டம்..

அதுதானே குறுக்கற்ரை கவலை. கற்பனையில் மிதக்கிறீர்கள் எண்டதுதானே அவற்ரை ஆதங்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் அடம்பன் பகுதியில் கடும் மோதல்கள்: 5 படையினர் காயம்

மன்னார் அடம்பன் களமுனையில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெறுவதாக குடிசார் தவவல்கள் தெரிவித்துள்ளன.

இன்று காலை முதல் அடம்பன் பகுதியில் 4 மணி நேரத்திற்கு மேலாக படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடைபெற்று வருகின்றன.

இந்த மோதலின் போது படையினர் தரப்பில் 5 படையினர் காயங்களுக்கு உள்ளாகியதாக சிறீலங்காப் படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த படையினர் அநுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் களமுனைகளில் தளபதிகளான சொர்ணம், லக்ஷ்மன் ஆகியோர் வழிநடத்துவதாகவும் படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

மின்னல் அண்ணை என்ன பிளேட்டை மாத்திப் போடுறியள். அப்துல் கலாமே கனவு காணச் சொன்னவர். நாங்கள் காணிற கனவு காணது எண்டு எல்லோ யோசிக்கிறன். உவர் இறைவன் வந்து எடுத்துவிடுவர் எப்பிடி நம்பிக்கையோடு இருக்கிறது எண்டு. உவற்றை பூவிறிசுகளை வாசிச்சா பிறகு வீரகேசரியை நினைச்சா பாவமா கிடக்கு.

மின்னல் அண்ணை என்ன பிளேட்டை மாத்திப் போடுறியள். அப்துல் கலாமே கனவு காணச் சொன்னவர். நாங்கள் காணிற கனவு காணது எண்டு எல்லோ யோசிக்கிறன். உவர் இறைவன் வந்து எடுத்துவிடுவர் எப்பிடி நம்பிக்கையோடு இருக்கிறது எண்டு. உவற்றை பூவிறிசுகளை வாசிச்சா பிறகு வீரகேசரியை நினைச்சா பாவமா கிடக்கு.

:huh::wub:

மின்னல் அண்ணை என்ன பிளேட்டை மாத்திப் போடுறியள். அப்துல் கலாமே கனவு காணச் சொன்னவர். நாங்கள் காணிற கனவு காணது எண்டு எல்லோ யோசிக்கிறன். உவர் இறைவன் வந்து எடுத்துவிடுவர் எப்பிடி நம்பிக்கையோடு இருக்கிறது எண்டு. உவற்றை பூவிறிசுகளை வாசிச்சா பிறகு வீரகேசரியை நினைச்சா பாவமா கிடக்கு.

அண்ணை நான் பிளேட்டை மாற்றவில்லை. தமிழ் ஊடகங்களின் களநிலவரத்திற்கு மாறான நம்பிக்கை விதைப்பு மீதான உங்களின் விமர்சிப்பு முறை மற்றவர்களின் போராட்டம் மீதான நம்பிக்கையை குறைக்கும் வகையில் இருக்கிறது. அதனையே நான் விமர்சித்தேன்.

அண்ணை நான் பிளேட்டை மாற்றவில்லை. தமிழ் ஊடகங்களின் களநிலவரத்திற்கு மாறான நம்பிக்கை விதைப்பு மீதான உங்களின் விமர்சிப்பு முறை மற்றவர்களின் போராட்டம் மீதான நம்பிக்கையை குறைக்கும் வகையில் இருக்கிறது. அதனையே நான் விமர்சித்தேன்.

மின்னல் இதையெல்லாம் கற்பூர வாசனை அறியாததுகளிடம் சொல்லி பிரயோசனப் படலாமே. அந்தந்த வேலைகள அதுகளே செய்ய வேண்டும். நம்பிக்கையை அவரவர் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவநம்பிக்கைதான் ஜதார்த்தம் என்பவர்கள் தோல்வி என்றால் துள்ளியெழுகிறார்கள். ஈழத்தில் கிட்டுகின்ற வெற்றிகளை ஜீரணிக்க முடியாட்டால் தமிழருக்கு தோல்வி கிடைக்கும் போது மகிழ சந்தர்ப்பம் கிடைக்கட்டும். அது சரி இவரென்ன லங்காபுவத் பிரியரே?

மன்னார் அடம்பன் பகுதியில் கடும் மோதல்கள்: 5 படையினர் காயம்

மன்னார் அடம்பன் களமுனையில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெறுவதாக குடிசார் தவவல்கள் தெரிவித்துள்ளன.

இன்று காலை முதல் அடம்பன் பகுதியில் 4 மணி நேரத்திற்கு மேலாக படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடைபெற்று வருகின்றன.

இந்த மோதலின் போது படையினர் தரப்பில் 5 படையினர் காயங்களுக்கு உள்ளாகியதாக சிறீலங்காப் படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த படையினர் அநுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் களமுனைகளில் தளபதிகளான சொர்ணம், லக்ஷ்மன் ஆகியோர் வழிநடத்துவதாகவும் படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

Sri Lanka push into rebel north leaves many dead

14 hours ago

COLOMBO (AFP) —

"Three soldiers were killed in this LTTE attack," spokesman Udaya Nanayakkara said. "Troops retaliated, but we are yet to get details of casualties among the terrorists."

...................

...................

The defence ministry said troops went on the offensive to capture Adampan village from the Tigers in coastal Mannar district.

"Troops continued to surge into LTTE territory towards Adampan junction in a fresh offensive launched at 6:00 am," the defence ministry said.

http://afp.google.com/article/ALeqM5goUHdT...U4lHToVhz1OhFUg

...5 soldiers killed in violence, Sri Lanka's military says

AP - Thursday, February 21

COLOMBO, Sri Lanka - Government troops and Tamil Tiger rebels fought battles in Sri Lanka's restive north and suspected rebels ambushed an army post in the south...

Battles broke out Wednesday in the Parappankandal and Palaikkuli areas of northern Mannar district,...

Rebel attacks in government-held territory have increased in recent months....

http://malaysia.news.yahoo.com/ap/20080221...ar-d3b07b8.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.