Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிட்லருக்கு படுதோல்வியைக் கொடுத்த ஸ்டாலின் கிராட் சண்டைக்களமாக வன்னிப் போரரங்கு: "விடுதலைப் புலிகள்" ஏடு

Featured Replies

இரண்டாம் உலகப் போரில் கிட்லருக்கு படுதோல்வியைக் கொடுத்த ஸ்டாலின்கிராட் சண்டைக்களமாக வன்னிப் போரரங்கு உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இதை என்னால் நம்ப முடியவில்லை. குறுக்காலபோவானின் தகவல்களின் படி புலிகள் பலவீனமான நிலையில் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எடிபல, றணகோச, ஜெயசிக்குறு, தீச்சுவாலை போன்ற கடந்த கால சமர்கள் இதற்கு சான்று பகரும்.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்பிடியிருக்காலபோவான் என்ன வன்னிக்குப் போய் தேசியத்தலைவர் எப்பிடியிருக்கிறார், போராளியள் என்னநிலையில இருக்கினம் எண்டு பார்த்துப்போட்டோ வந்தவர் அவரும் ராணுவப் பேச்சாளர் மாதிரி ஒரு ஊகத்திலதான் சொல்லுறார்.

இதை என்னால் நம்ப முடியவில்லை. குறுக்காலபோவானின் தகவல்களின் படி புலிகள் பலவீனமான நிலையில் உள்ளார்கள்.

வணக்கம்

சூரியனுக்கு எப்ப உதிக்கனும் என்டு நாம சொல்லத்தேவையில்லை இப்ப வேணும் என்டா கருமேகம் மறைக்கலாம் ஆனால் அது நிரந்தரம் இல்லை. தமிழருக்கு தமிழீழம் பிறக்கும் காலம் வெகுதுரத்தில் இல்லை.

எங்கள் கைகளில்தான் எல்லாம் இருக்கு நண்பர்களே............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை என்னால் நம்ப முடியவில்லை. குறுக்காலபோவானின் தகவல்களின் படி புலிகள் பலவீனமான நிலையில் உள்ளார்கள்.

சிலவேளை குறுக்காலபோவானுக்கும் சிறீலங்காவின் அதிசிறந்த நகைச்சுவையாளர் ஜோக்கர் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்காரவுக்கும் தொடர்பு இருக்கோ தெரியாது.. அவருடைய கதையும் உதேபோன்று ஆதாரம் இல்லாததுதான்.. :D :D

Edited by Kishaan

அண்ணைமார் பிரிகேடியர் உதய நாணயகாரவின்ரை கடசி நகச்சுவை பாத்தனீங்களோ?

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24799

1995 யாழ்பாணத்தை கோட்டைவிட்டா பிறகு நடத்திய அதிசயத்தில 1 இல புகுந்து விளையாடுறாங்கள் மோட்டுச் சிங்களவங்கள். அட நாங்கள் மட்டக்களப்பில அம்பாறையில 1...2 வைச்சுப் போட்டு மகிந்த 1 வருசமாக கேக் வெட்டி கொண்டாடின மாதிரி கட்டுப்பாட்டில இல்லை எண்டு கொக்கரிக்கிற மாதிரித்தான் நாங்கள் 11 வருசத்துக்கு மேலாக காவடி ஆடினத்துக்கு அவங்கள் ஆப்பு வைக்கிறாங்கள்.

உதுகள் சகஜம் தானே என்ன? றன்டமா நடக்குதாக்கும் தப்பித் தவறி :D

Edited by kurukaalapoovan

நல்லாத்தான் குறுக்கானவர் சாமரம் வீசுறார். இது விடுதலைப்புலிகள் ஏட்டின் கருத்து. அதில் தற்போது நடக்கிற யதார்த்தம்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இழந்தவைகளைப்பற்றி பொய்யுரைக்கவில்லை. தற்போதைய களம் எதிரிக்கு தோல்வியைக் கொடுக்கும் என்ற கருத்தில் உறுதியாய் நிற்கிறது. தென்னிலங்கைச் சுருதிகள்தான் மாற்றங் காண்கின்றன.

ஒருதடவை தலையெடுக்க விடமாட்டோம் என்கிறார்கள். மறுபுறத்தால் மகிந்தவின் முட்டாள் தனமான போர் என்கிறார்கள். அடுத்து பேச்சுவார்த்தையில்தான் தீர்வு என்கிறார்கள். அடுத்து ஆயுதங்களைக் கீழே வைத்தால்தான் தீர்வு என்கிறார்கள்.

உதய நாணயக்காராவும் சரி, உடைஞ்சு போன மகிந்த பரிவாரங்களும் சரி, யாராவது வந்து தங்களை இந்த இக்கட்டிலிருந்து மீட்கமாட்டார்களா? என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு ஊக்கம் கொடுத்த இந்தியா, தனது எதிர்பார்ப்பு ஏதும் நடக்காததினால் சிறிலங்காவிற்கு எப்படி உதவுவது என்று புரியாது நிற்கின்றது. முடிந்தால் ஒரு அணு குண்டினைக் கொடுத்து இலகுவாகப் பிரச்சினையைத் தீர்க்கப்பார்க்கலாம்.

விடுதலைப்புலிகள் ஏட்டின் கருத்து நடக்கத்தான் போகிறது. நிலத்தைக் கைப்பற்றுதல் மட்டும் போராட்டமில்லை. எதிரியை அவன் உணராமலேயே தோற்கடிப்பதும் போராட்டத்தின் வெற்றிதான்.

புள்ளி தெரிகிற ஒரே மனிசருக்குத்தான், இதைமறுப்பதற்கு உதய நாணயகார தேவைப்படுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு ஒரு ஆனந்த சங்கரி கிடச்சது எங்கடை வரப்பிரசாதம். _by_darkmoon3636.gif

வன்னியில் உள்ள அப்பாவி மக்களை கொல்வது உதய நாணயக்காராவின் வீரமோ? மன்னாரில் 8 மாத காலமாக சண்டை பிடித்து ஒன்றையும் செய்யமுடியவில்லை. ஆகவே அப்பாவி மக்களை கொல்வதன் மூலம் அவ்ர்களின் மனோபலத்தை குறைக்கலாம் என கனவு காண்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கால போனவருக்கும் இந்தச் செய்திக்கும் சம்பந்தமில்லை. ஒருவேளை நீங்கள் அவரின் பெயரை இழுக்காது விட்டிருந்தால் அவரே இந்தக் கட்டுரையை சரியென்று சொல்லியிருப்பாரோ என்னவோ ? இப்போது அவருக்கு எதுவும் செய்யமுடியாத நிலை. அதுதான் எதிர்த்து எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.

மன்னாரில் என்ன நடக்கிறது என்பதை புலிகளைத் தவிர வேறு எவராலும் இவ்வளவு தெளிவாகச் சொல்ல இயலாது. அதில் தவறு இருப்பதாக கூறுவதென்றால் விதண்டாவாதம் என்றுதான் பொருள்.

குறுக்கால போனவருக்கும் இந்தச் செய்திக்கும் சம்பந்தமில்லை. ஒருவேளை நீங்கள் அவரின் பெயரை இழுக்காது விட்டிருந்தால் அவரே இந்தக் கட்டுரையை சரியென்று சொல்லியிருப்பாரோ என்னவோ ? இப்போது அவருக்கு எதுவும் செய்யமுடியாத நிலை. அதுதான் எதிர்த்து எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.

மன்னாரில் என்ன நடக்கிறது என்பதை புலிகளைத் தவிர வேறு எவராலும் இவ்வளவு தெளிவாகச் சொல்ல இயலாது. அதில் தவறு இருப்பதாக கூறுவதென்றால் விதண்டாவாதம் என்றுதான் பொருள்.

அதெப்படிச் சம்பந்தமில்லாமல் போகும். வெற்றிச் செய்திகளைச் சொல்லி மக்களை ஒரு மயக்க நிலைக்குள் வைத்திருக்கின்றார்கள் என்ற குறுக்காலபோவானின் குற்றச்சாட்டு இந்தச் செய்திக்கும் சரியாக பொருந்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

:D சுஜீந்தன்,

குறுக்காலபோனவர் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டும் அவரை இதற்குள் இழுத்துவிட்டோம் என்பதைத்தான் சொல்ல வந்தேன். அவர் எப்படி கதைப்பர் என்பது எங்களுக்குத் தெரியாதா என்ன ? அவருக்கே அவர் மீது நம்பிக்கை இல்லை, பிறகு போராட்டம் மேல் எப்படி நம்பிக்கை வரும் ?

வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களைத்தான் இவர் ராணுவத்தின் வெற்றிகளாகக் கருதுகிறார் என்று நினைக்கிறேன். புலிகளின் வெற்றிகளை நாம் தலையில் வைத்துக் கொண்டாடுவது தவறென்றால் சிங்களவனின் படைப்பலம் கண்டு பிரமிப்பில் மூச்சுப் பேச்சில்லாமல் இருக்கும் குறுக்கரும் தன் பங்கிற்கு சிங்களவனின் வீரப் பிரதாபங்களைக் காவடி எடுப்பதும் சகித்துக் கொள்ள முடியாதது.

கொண்ட கொள்கையில் உறுதியும் தலைவரின் மேல் நம்பிக்கையும் உள்ளவர்கள் இந்த வீண் விதண்டா வாதிகளுடன் மோதிக் கொண்டிருக்க மாட்டார்கள். எத்தனையோ கடமைகள் எம்மை நோக்கியிருக்கும் இந்த வேளையில் வீண் விதண்டா வாதிகளுடன் மோதி காணப் போவது ஒன்றுமி;ல்லை. இலட்சியத்தில் உறுதியுடன் இருப்போம். மற்றவற்றை புறங்கையால் ஒதுக்கி விட்டு வெற்றியை இலக்காய் கொண்டு செயல்படுவோம். நிச்சயம் தலைவன் காலத்தில் தமிழீழம் காண்போம்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

:D அப்படிப் போடுங்கள், ஜனா !

நன்றி !

நீங்கள் எல்லாரும் சும்மா அவரோடை முட்டி மோதி களைக்க போறியள்

அவர் சும்மா குறுக்க நெடுக்க திரியுறன் எண்டுதான் வெளிக்கிட்டு திரியுறார்...

எனக்கென்னமோ ஆடுற மாட்டை ஆடி கறக்கிறதும் பாடுற மாட்டை பாடி கறகிறதும் தான் நல்லதெண்டு படுது...

  • கருத்துக்கள உறவுகள்

2 ஆம் உலகப்போர் காலத்தில் ஜேர்மனியப் படையைச் சிதைத்து ஜேர்மனிக்கு படுதோல்விகளை பரிசளித்த ஸ்டாலின் கிராட் சண்டையை நினைவூட்டும் களமாக வன்னிப் போரரங்கம் காட்சிமாற்றம் கண்டு வருகின்றது.

கிட்லரின் ஜேர்மனியப் படைகள் சந்தித்த படுதோல்வியை மகிந்தரின் சிங்களப்படைகள் சந்திப்பது திண்ணம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காப்புப் போரின் மூலம் சிங்கள இராணுவம் உள்நுழைவதை முற்றாகத் தடுக்கமுடியாது.. இராணுவம் அங்குலம் அங்குலமாக முன்னேறிக் கொண்டுதான் வருகின்றது. சிலவேளை வலிந்த தாக்குதல் நடாத்தினால் சிங்கள இராணுவ முகாம்கள் சீட்டுக்கட்டு குலைந்தது போல சிதறும் என்று பழைய நினைவில் பலர் இருந்தாலும், அதன் மூலம் அடையப் போவது என்ன? இன்னுமொரு போர் நிறுத்தம்??, பேச்சுவார்த்தை?? மாகாணசபை?? மாநில சுயாட்சி??

சிங்களவனால் வெல்லமுடியாது என்று உணர்த்துவதே தமிழரின் போராட்டமாக உள்ளது. எனினும் சிங்கள அரசுகள் மீண்டும், மீண்டும் முயன்றுகொண்டுதான் இருக்கின்றன. சுவாரஸ்சியமான சில விடயங்களை கீழ்வரும் இணைப்பில் பார்த்துக்கொள்ளுங்கள்.. சிங்களவர் மோடர் என்று நம்பி எவ்வளவு பேர் முட்டாள்களாக இருக்கிறோம்!

http://www.uthr.org/SpecialReports/spreport29.htm

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் ஏட்டின் கருத்து நடக்கத்தான் போகிறது. நிலத்தைக் கைப்பற்றுதல் மட்டும் போராட்டமில்லை. எதிரியை அவன் உணராமலேயே தோற்கடிப்பதும் போராட்டத்தின் வெற்றிதான்.

அதுதானே இப்போ நடக்கிறது

பொறுத்தார் உலகாள்வார் என்பதை நாம் உணரவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழர் குலத்தில் தோன்றிய கரிகால சோழனின் வரலாறு உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்றே நினைக்கின்றேன். பண்டைய சோழ நாடு பல சிறு நில மன்னர்களை கொண்டது. அந்த குறுநில மன்னர்கள் சோழப் பேரரசில் இணைந்து மன்னரின் தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள், இவர்களுக்கு வேளிர்கள் என்று பெயர். கரிகால சோழனின் தந்தை இளஞ்சேட் சென்னியை சோழப் பேரரசின் கீழ் இருந்த பெரும்பான்மையான வேளிர்களின் ஆதரவுடன் சேரனும், பாண்டியனும் சேர்ந்து சூழ்ச்சி செய்து கொன்று, அவர்கள் தங்கியிருந்த மாளிகையை தீ வைத்து எரித்தனர். அந்த தீ விபத்தில் இருந்து தப்பிய போது காலில் தீயால் காயமடைந்ததால் தான் கரிகாலன் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது.

தன் தந்தையை வஞ்சகத்தால் கொன்று, தனது ஆட்சியை சேர, பாண்டியர்களின் உதவியுடன் கைப்பற்றிய கயவனை எதிர்த்து கரிகாலனின் படை போர் புரிய ஆயத்தமானது.

எதிர்யோ பெரும் படையுடன் போருக்கு ஆயத்தமானான், அவனுக்கு உதவ பாண்டியணும், சேரனும் வேறு வந்து இருந்தார்கள். கரிகாலனின் படையோ எண்ணிக்கையில் சிறியது. ஆனால் வெண்ணிப் பரந்தலை போர் என்று அழைக்கப்படும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போரில் எண்ணிக்கையில் மிக சிறிய கரிகாலனின் படைகள், வஞ்சக எதிரிகளின் பெரும்படையை அடித்து நொறுக்கி வெற்றி வாகை சூடி, சோழ ஆட்சியை நிலைநிறுத்தியது. இந்த போர் தஞ்சையில் இருந்து நாகப்பட்டிணம் செல்லும் சாலையில் கோவில் வெண்ணி என்ற கிராமத்திற்கு அருகில் நடந்ததால் வெண்ணிப் பரந்தலை போர் என்று அழைக்கப்பட்டது.

வன்னிப்போரரங்கு குறித்து வரும் செய்திகளை படிக்கும் போது, வெண்ணி போர் வெளி போல் வன்னி போர் வெளியும் விரைவில் எண்ணிக்கையில் பெரிய எதிரிகளின் படையை, மனப்பலமும், மதி நுட்பமும் வாய்ந்த புலிப்படை அடித்து நொறுக்கி வரலாறு படைக்கும் என்றுதான் எனக்கு தோன்றுகின்றது.

எதிரியை மீள முடியா பொறியில் சிக்க வைத்து, அவனை சிதறடித்த கரிகாலனின் படைகளை போன்று, இன்று புலிகள் சிங்கள படைகளை பொறியில் சிக்க வைத்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. விரைவில் வென்று வாழும் கரிகாலன் என்ற பெயரை அண்ணண் அடைவார்.

யார் குறுக்கால போனாலும், வெற்றி வீரனுக்குத்தான் கிட்டுமே ஒழிய, வஞ்சகர்களுக்கு ஒரு போதும் கிட்டாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்காப்புப் போரின் மூலம் சிங்கள இராணுவம் உள்நுழைவதை முற்றாகத் தடுக்கமுடியாது.. இராணுவம் அங்குலம் அங்குலமாக முன்னேறிக் கொண்டுதான் வருகின்றது. சிலவேளை வலிந்த தாக்குதல் நடாத்தினால் சிங்கள இராணுவ முகாம்கள் சீட்டுக்கட்டு குலைந்தது போல சிதறும் என்று பழைய நினைவில் பலர் இருந்தாலும், அதன் மூலம் அடையப் போவது என்ன? இன்னுமொரு போர் நிறுத்தம்??, பேச்சுவார்த்தை?? மாகாணசபை?? மாநில சுயாட்சி??

சிங்களவனால் வெல்லமுடியாது என்று உணர்த்துவதே தமிழரின் போராட்டமாக உள்ளது. எனினும் சிங்கள அரசுகள் மீண்டும், மீண்டும் முயன்றுகொண்டுதான் இருக்கின்றன. சுவாரஸ்சியமான சில விடயங்களை கீழ்வரும் இணைப்பில் பார்த்துக்கொள்ளுங்கள்.. சிங்களவர் மோடர் என்று நம்பி எவ்வளவு பேர் முட்டாள்களாக இருக்கிறோம்!

http://www.uthr.org/SpecialReports/spreport29.htm

இவ்வமைப்பு ((University Teachers for Human Rights (Jaffna)) முற்றுமுழுதாக தமிழ் தேசியத்திற்கு எதிராக எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு. மனித உரிமை என்பதை பெயரிற்காக இணைத்து வைத்திருக்கிறார்கள். மற்றும்படி மனித உரிமைகளிற்கும் இந்த மண்ணாங்கட்டிகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இதில் இருக்கும் சில துரோகிகள் யாழ் பல்கலைகழகத்தின் முன்னாள் விரிவுரையாளர்கள் (எனக்குத் தெரிய 1990 இற்கு முதல்). மற்றும்படி யாழ் பல்கலைகழகத்திற்கும் இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதை யாழ் பல்கலைகழகமே பல தடவைகள் கூறியிருக்கின்றது.

மேலும் சிங்களவனின் புத்திசாலித்தனத்தைப் பற்றி புதிதாக இவ்வறிக்கை என்ன சொல்கிறது? காலம் காலமாக எல்லா ஆக்கிரமிப்பாளர்களும் செய்வதையே சிங்களமும் செய்கிறது. குள்ளநரித் தனமெல்லாம் புத்திசாலித் தனமாகாது. உதாரணம்: ஜே.ஆர். உண்மையில் சிங்களம் புத்திசாலியாக இருந்தால் தானும் வாழ்ந்து மற்றவனையும் வாழவிடும்.

Edited by காட்டாறு

அதுதானே உந்த கிருபா அண்ணெ எங்கெருந்து வாறார்?

ஜெயசுக்குருவை எடுத்தால் சிறீலங்கா இறுதிவரை தான் முன்னேறுகிறன் பிடிக்கிறன் அழிக்கிறன் என்று தான் கதைத்து பிரச்சாரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஓயாத அலைகள் - 3 தொடங்கிய போது அவர்களது பிரச்சாரங்கள் பேச்சுக்கள் எல்லாம் பாரிய ஏமாற்றமாக மாறியது. அதே நேரம் தமிழர் தரப்புக் கூட ஓயாத அலைகள் - 3 போன்று ஒன்று தொடங்கு என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கவில்லை. அதாவது 2 தரப்பின் இந்த முற்றிலும் முரண்பாடான மாறுபட்ட பிரச்சாரம் அல்லது வெளித் தோற்றப்பாடு ஓயாத அலைகள் - 3 இன் அதிர்ச்சிக்கு வெற்றிக்கு கணிசமாக பங்களித்தன.

இன்று நிலமை தலை கீழாக இருக்கிறது. சிங்களத் தரப்பு தாம் எதிர்பார்த்த வேகத்தில் வெற்றி கிட்டவில்லை என்றவுடனேயே தமது பிரச்சாரங்களை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். ஆனால் தமிழர் தரப்பு சிங்களவர் முந்திச் சொன்னது ஜெயசுக்குருவில சொன்னது என்று கொண்டு தான் தமது பிரச்சாரத்தை செய்கிறார்கள். முன்யை அரசுகள் போலில்லாது தற்போதைய அரசு வேகமாக தன்னைத் திருத்திக் கொள்கிறது புதிய தேவையான விடையங்கள் உள்வாங்கிக் கொள்கிறது.

இந்த 30 வருடகால போராட்டத்தில் இதுவரை தமிழர் நிறுவியது தமிழரை வெற்றி கொள்ள முடியாது என்று தான். ஓயாத அலைகள் - 4 ஓடு ஒரு சமச்சீரற்ற வலுச்சமநிலை ஏற்பட்டது. எல்லாப் படை வலுச்சமநிலைகளும் தற்காலிகமானது. அதைப் பழம்பெருமை பேசிப் போண முடியது தொடர்ச்சியாக போட்டி போட்டு முதலீடு செய்து தான் பேண முடியும்.

தமிழரை தோற்கடிக்க முடியாது என்பதற்கும் தமிழரை வெல்ல முடியாது என்பதற்கும் இடையில் நிறைய இடவெளி உண்டு. தமிழரை தோற்கடிக்க முடியாது என்ற நிலமை உருவானால் தான் நாம் எதிர்பார்க்கும் தாயகப் பிரதேசங்களின் எல்லைகளிற்கு சிங்களம் பேச்சுவார்த்தையில் உடன்படும். சர்வதேசமும் அந்தத் தீர்வை அங்கீகாரிக்க வேண்டிய தேவையை உணர்த்த உதவும்.

Edited by kurukaalapoovan

அருமையான கருத்து குறுக்ஸ் உண்மையும் கூட புலிகளை வெல்ல முடியாது அந்த செய்தி உண்மையாக இருக்காது என ஒரு நம்பிக்கை நம்மிடம் உண்டு போராடும் போராளிகள் மனிதர்கள் நம்மை ஒத்தவர்கள் என்பதை நாம் ஏனோ மறக்கின்றோம்

தந்திரம்,உளவுதிறன்,பயிற்சி,த

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்து குறுக்ஸ் உண்மையும் கூட.

புலிகள் வெல்லப்பட முடியாதவர்கள் என்பது ஏன் இந்திய அமைதிப்படை காலத்திலேயே தெரிஞ்சு போச்சுத்தானே..! அந்த எல்லை குறுகியதாக இருந்தது. அதன் பின்னர்... எத்தனை போர்... எத்தனை நவீன இராணுவ மயப்படுத்தல்கள்..??!

புலிகள் அல்ல எல்லைகள் இழக்கப்படக் காரணம். மக்களின் ஒத்துழைப்பின்மையே காரணம். சுயநலம் பிடிச்சதுகள் ஒன்றா நின்று போரிட்டிருந்தா.. ஈழம் எப்பவோ வந்திருக்கும்.

இங்க கூட பாருங்க.. ஒரு கருத்தை தெளிவாச் சொல்ல வக்கில்ல.. பன்னாடை பரதேசி என்றிட்டு.. அப்புறம்... ஞானதோயம்... உச்சரிக்கிறது.. இப்படி தங்கட தற்திறமைகளை.. வெளியிட்டு பீற்றிக்கிறத்துக்கு.. செலவழிக்கிற நேரம் தான் அதிகமே தவிர போராட்டத்திற்கு தற்போதைய தேவையென்ன.. வெற்றியினை, பிடிக்கப்பட்டும் எல்லைகளை தமிழர்கள் தமதாக்குவது எப்படி.. என்பதை வன்னிக்களம் தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்திய- பாகிஸ்தான் கார்கில் போரை விட பலமான சூட்டாதரவை வன்னியில் சிறீலங்காப் படைக்கு பாகிஸ்தானும் இந்தியாவும் இதர வல்லரசுகள் சேர்ந்து வழங்கியுள்ளன. இதற்குள் ஒருவர் சொல்லுறார்.. அங்குலம் அங்குலமா படை முன்னேறுது.. புலி தோற்குது என்று.

இன்னொருவர் சொல்கிறார் சிங்களவன் ஓர்மமா வாறான்.. புலி ஓடுது என்று. அப்புறம் சொல்லுறார்.. புலிகள் வெல்லப்பட முடியாது என்று நிரூபிக்க வேண்டுமாம்.

கனடாவிலும் லண்டனிலும் அவுஸ்திரேலியாவிலும் இருந்து கொண்டு புலி வெல்லப்பட முடியாது என்று களத்தில் நிரூபிக்க உள்ள வழிவகைகளைச் சொல்லுங்கோ சனம்.. கேட்டிச் செய்யும்.. அதுவும் செய்யுறியள் இல்ல.. களத்தில நிற்கிற போராளிகளுக்கு உதவுறியளும் இல்ல. சும்மா.. சருகு சரசரத்த கணக்கா.. புறுபுறுக்கிறியளே தவிர..! :lol::D

Edited by nedukkalapoovan

புலிகள் வெல்ல முடியாதவர்கள் அதை நான் ஒத்துகொள்கின்ரேன் நெடுக்ஸ் என் பதிவினை வடிவாக வாசியுங்கள் ஆனால் சில ஊடகங்களின் மிகைப்படுத்தல் செய்யும் தமிழர்களின் உளவியல் சோர்வையும் சற்று யோசியுங்கள் அதைத்தான் நான் சொல்லவந்தேன் வீணான மிகைப்படுத்திய ஊடகங்களின் அதீத கற்பனை கலந்த செய்திகள் ஆரோக்கியமானதல்ல.

அந்த காலத்தில இருந்து உதுதான் பிரச்சனை... அனாலும் ஆரும் திருந்தினமாதிரி தெரியேல்ல...

ஆர் என்ன சொன்னாலும் எதிரா கதைக்கவேணும்... இதை மாத்த வேணும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.