Jump to content

சுது மாத்தையாவும் சுடுபாணும்.


Recommended Posts

பதியப்பட்டது

சுது மாத்தையாவும் சுடுபாணும்.

பாண் எண்டதும் பலரின் நினைவுகள் கட்டாயம் ஊருக்கு ஒருக்கால் போய்வரும்.வெளிநாட்டில் விதம் விதமாய் வகை வகையாய் பாணை சாப்பிட்டாலும். ஊரில் முன்னர் இருந்த ஒரு இறாத்தல் அச்சுப்பாண் றோஸ் பாண் அடுத்ததாய் வித்தியாசமாய் சங்கிலிப்பாண் சீனிப்பாண் மாலுப்பாண் எண்டும் இருந்தது . ஊரில் சாப்பிட்ட பாண் என்பது பலருக்கும் பல சம்பவங்களுடனும் ஒரு தொர்பை கொண்டருக்கும் எனவே பல நினைவுகளை கட்டாயம் ஒரு முறை கொண்டுவரும்.இலங்கை அரசியலையே மாற்றக்கூடிய வல்லமை இந்தப் பாணுக்கு இருக்கு அதாலைதான் ஒவ்வொரு தேர்தல்களிலையும் வேட்டபாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணின்விலையை குறைப்போம் எண்டு தேர்தல் வாக்குறுதி குடுக்கிறவை ஆனால் பிறகு அவை ஆட்சிக்கு வந்ததும் பாண் இருக்கிற விலையை விட இரண்டு மடங்கு கூடுறது வழைமையான விசயம். சிறீமாவின்ரை ஆட்சிக்காலத்திலை அவாவின்ரை பொருளாதாரக் கொள்கையாலை ஏற்பட்ட பட்டினி யாலை சனங்கள் பாணுக்கு நீண்ட வரிசையிலை காவல் நிண்டதை பலர் கதை கதையாய் சொல்லுவினம்.அது மட்டுமல்ல இந்த பாணிற்கு 83 கலவரத்தின்பின்னாலும் சாதக பாதகதான பல விசயங்கள் இருக்கவே செய்தது. எண்பதுகளிற்கு முன்னர் யாழ் குடாவில் பெரும்பாலும் ஏன் அனைத்து பேக்றிகளும் சிங்களவர்களவரே நடத்தினவை.

யாராவது ஒண்டிரண்டு பேக்கறி தமிழருக்கு சொந்தமாய் இருந்தாலும் அதில் பாண் போடுகிறவர் சிங்களவராகவே இருப்பார்.பாண் போடுகிறவரை பழைய படங்களில் வில்லனை பாஸ் எண்டு கூப்பிடுறதை போல இவரையும் (பாண்) பாஸ் எண்டுதான் சொல்லுறனாங்கள். இப்பிடி பாண் போடுகிற விசயம் சிங்களவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக அல்லது பாண் எண்டால் சிங்களவனுக்கு மட்டும்தான் போடத்தெரியும் எண்டிற ஒரு நினைப்பு எங்களிட்டை இருந்தது. ஆனால் 83 ம் ஆண்டு கலவரத்தோடை இந்த நிலைமையும் தலைகீழாய் மாறிப்போச்சுது. தமிழர் கொழும்பிலை இருந்து அடிவாங்கிக் கொண்டு யாழ்ப்பாணம் வந்து கொண்டிருக்க் யாழ்ப்பாணத்திலை இருந்த சிங்களவர் பேக்கறி நடத்தினவை கனபேர் தாங்களாகவே தங்கடை ஊருகளுக்கு போகத்தொங்கிச்சினம்.

அது மட்டுமில்லை ஊர் பெடியளும் பெரும்பாலும் புளொட் இயக்கம் எல்லா பேக்கறியளையும் கொளுத்த தொடங்கிட்டினம்.பேக்கறி எரிஞ்சதுக்கு அது மட்டும் காணரமில்லை சில தமிழ் பேக்கறிக்காரரும் தங்கடை வியாபாரம் நல்லா நடக்கவேணுமெண்டு பெடியளை உருப்பேத்திவிட்டும் சிங்களவரின்ரை பேக்கறிகயள் எரிஞ்சது.அந்த நேரம் புளொட் எண்டொரு இயக்கம் இருந்தது கனபேருக்கு ஞாபகம் இருக்கும். அவையள் சிங்களவர் விட்டிட்டு போன கன பேக்கறியளை எடுத்து தாங்கள் நடத்திச்சினம்.அதாலை அந்த இயக்கம் என்ன நோக்கத்திற்காக தங்கடை இயக்கத்தை தொடங்கிச்சினமோ அந்த நோக்கத்தின்ரை ஒரு பகுதிநிறைவேறிச்சிது.,இதிலை ஒரு விசயத்தை கட்டாயம் சொல்லவேணும். புளொட் எண்ட மாபெரும் இயக்கம் தொடங்கினதுக்கு எனக்கு தெரிஞ்சு மூண்டு நல்ல காரியம் செய்தவை ஒண்டு கோட்டை ஆமி இருக்கேக்கை அவங்கள் அடிக்கிற செல்லிலை இருந்து சனம் பாதுகாப்பாய் பதுங்க யாழ்ப்பாணம் வைத்திய சலைக்கு முன்னாலை மண்மூட்டை அடுக்கினது.

இரண்டாவது முனிசிபாலிட்டிக்கை (நகரசபை)இருந்த தாரை எடுத்து உருக்கி ஊரிலை கிடங்கு பள்ளமாயிருந்த றோட்டை திருத்தினது.மூண்டாவது சிங்களவன் எல்லாரையும் கலைச்சுப்போட்டு பேக்கறி நடத்தினது.இதுகளோடை அவையின்ரை போராட்டத்துக்கான தேவை முடிஞ்சுபோதச்சுது.சரி இனி திரும்ப கதைக்கு வாறன். அந்த நேரம் 83 பிரச்னைக்குப்பிறகும் தொடந்து சில சிங்களவர் யாழிலை இருந்தவை . இவையள் தமிழரோடை நல்லவிதமாய் பழகியதாலையும் எண்பது வீதம் தமிழராகவே மாறிவிட்டிருந்தனர் எண்டும் சொல்லலாம்.அப்பிடி இருந்தவையிலை எனக்குதெரிந்த சிலபேர் ஒருத்தர் எங்டை ஊரிலை பேக்கறி வைச்சிருந்த சுது மாத்தையாவும் ஜஸ்பழம் வித்த லொக்கு பண்டாவும் .இவையளின்ரை உண்மையான பெயர் எனக்கு மட்டுமில்லை ஊரிலை ஒருதருக்குமே தெரியாது எல்லாருமே அப்பிடி கூப்பிடுறதாலை அதுதான் அவையின்ரை பெயர். அடுத்ததாய் ஏழாலையிலை பேக்கறி வைச்சிருந்த கொத்தளாவளை .இவரை ஏழாலை குப்பிளான் புன்னாலைக் கட்டுவன் வசாவிளான் ஆக்களுக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும் .மானிப்பாய் சாத்திரிக்கும் ஏழாலை கொத்தளாவளைக்கும் என்ன சம்பந்தம் எண்டு யோசிக்காதையுங்கோ அது அய்யருக்கும் அமாவாசைக்கும் உள்ள சம்பந்தம் தான்.. சுது மாத்தையா நல்ல உழைப்பாளி அவரேதான் பாண் போடுவார் அவரேதான் காலையிலை சைக்கிளின் பின்னால் பாண் அடுக்கிய ஒரு பெரிய தேயிலைப் பெட்டியை கட்டி கடையள் வீடுகளுக்கும் பாண் கொண்டு போய் குடுப்பார். அவர்தான் எங்கடை வீட்டுக்கும் பாண் போடுறவர்.

மழைக்காலம் எண்டால் அனேகமான வீடுகளிலை ஈரவிறகை வைச்சு ஊதாமல் பாண்தான் காலைமைச் சாப்பாடு எங்கடை வீட்டிலையும் பாணை வாங்கி சின்னதுண்டாய் வெட்டி சிரமப்படாமல். அம்மா ஒரு பாணை பாதியாய் பிச்சு ஆளுக்கு அரைறாத்தல் பாணும் அரைச்ச சம்பலும் தருவார்.பாணை நடுவிலை கோதி அதுக்குள்ளை சம்பலை அடைஞ்சுபோட்டு சுத்திவர பாணை பிச்சு அதை சம்பலிலை தொட்டு சாப்பிற சுகமே தனியானது.சிலநேரம் அரை றாத்தல் பாண்சாப்பிட்டாலும் எங்களுக்கு பசி அடங்காமல் நாங்கள் அடிபடுறதை பாத்து அம்மா கையிலை காசை தந்து பள்ளிக்கூடம் போற வழியிலை எதையாவது வாங்கி சாப்பிடுங்கோ எண்டுசொல்லி கலைச்சு விடுவா.நானும் போற வழியிலை எனக்குப்பிடிச்ச றோஸ் பாண் ஒண்டை வாங்கிஅதை இரண்டாய் பிச்சு ஒரு வாழைப்பழத்தை வாங்கி உரிச்சு அதை நடுவிலை வைச்சு அமத்தி கடுதாசியாலை சுத்தி கடிச்சபடி பள்ளிக்கூடம்போவன்: அதுக்குப்பேர்தான் சாண்விச் எண்டு எனக்கு இப்ப வெளிநாடு வந்தாப்பிறகுதான் தெரியும். ஊரிலையே சாண்விச் சாப்பிட்ட ஆள் நான்தான் எண்டு பெருமைப்பட்டுக்கொள்ளலாம்

.இறாத்தல் அழைவை போய் கிலோகிறாம் அளவை வந்தபின்னர் எல்லாப்பொருட்களையுமே நாங்கள் கிலோவிலை அழைக்கத்தொடங்கிய பின்னரும். பாணை மட்டும் இன்னமும் பேச்சுவழக்கில் இன்றுவரை இறாத்தல் எண்டுதான் சொல்லுறம். பாண் சாப்பிடுற விசயத்திலை நாங்கள் ஓரளவுபரவாயில்லை ஆனால் பாணும் பருப்புக்கறியும் இல்லையெண்டால் சிங்களவர் உயிரை விட்டிடுவாங்கள்.

Posted

நானும் போற வழியிலை எனக்குப்பிடிச்ச றோஸ் பாண் ஒண்டை வாங்கிஅதை இரண்டாய் பிச்சு ஒரு வாழைப்பழத்தை வாங்கி உரிச்சு அதை நடுவிலை வைச்சு அமத்தி கடுதாசியாலை சுத்தி கடிச்சபடி பள்ளிக்கூடம்போவன்: அதுக்குப்பேர்தான் சாண்விச் எண்டு எனக்கு இப்ப வெளிநாடு வந்தாப்பிறகுதான் தெரியும். ஊரிலையே சாண்விச் சாப்பிட்ட ஆள் நான்தான் எண்டு பெருமைப்பட்டுக்கொள்ளலாம்

எப்படி அப்படி ஒரு ஐடியா வந்திச்சு உங்களுக்கு :(

Posted

நன்றி சாத்திரி அண்ணா பழைய நினவுகளை மீட்டியதற்கு. பின்னேரம் பந்தடிச்சுபோட்டு நானும் கொஞ்ச நண்பர்களும் ஊரெலாம் மேய்ந்து விட்டு பேக்கரியடியால் சைக்கிளை விடுவம்.பேக்கரியடியிலை போய் தானாக எங்கடை சைக்கிள் நிற்கும். அப்போ பேக்கரி காரன் தம்பியவை புதிசா ஒரு பணிஸ் போட்டிருக்கிறம்."கொம்பு பணிஸ்" என்று சொல்லுறது என்பார்.(கொம்பு போல் உருவம் இருப்பதால் போலும்). நல்லா தான் இருக்கும்.இனிப்பு தான்.நல்ல சுவையாக இருக்கும். :(

Posted

ஆனால் பாணும் பருப்புக்கறியும் இல்லையெண்டால் சிங்களவர் உயிரை விட்டிடுவாங்கள்

ஹீஹீ இப்ப ஒரு இறாத்தல் பாண் 48/=. பாண் இல்லாட்டால் உயிரையே விட்டிடுவாங்கள் என்பதால் தானோ சனம் பாணுக்கு என்ன விலை எண்டாலும் வாங்குவம் னு வாங்குதுகள் போல.

ஹ்ஹீஹீ சாத்ரி மாமா நீங்கள் அந்தக்காலத்திலேயே சாண்ட்விச் சாப்பிட்ட பெருமையை நினைச்சால் எனக்கு பசிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எப்படி அப்படி ஒரு ஐடியா வந்திச்சு உங்களுக்கு :(

நான் இப்பவும் பாணை இப்படி செய்து சாப்பிடுவேன். ஒரு முட்டை ஒம்லடையும் நடுவில வையுங்க.. வாழைப்பழத்தை பிச்சும் வைக்கலாம்... கத்தியால வட்டம் வட்டமா வெட்டியும் வையுங்க.. இரண்டு பாணையும் அமுக்குங்க.. சாப்பிடுங்க.

சாட்விச் சாப்பிடேக்க கரையில சாட்விச் கிறீம் சில நேரம் இருக்காது. வெறும் பாண் இருக்கும். வாழைப்பழம் போட்டிங்கன்னா சின்ன பூசும் பெரிய இனிப்பு. அதால அமுக்கேக்க சிதைஞ்சு வாற சின்ன துண்டு பிரண்டிருந்தாலே எல்லா இடமும் இனிக்கும்..!

முட்டை சத்துக்கு..!

சாத்திரியார் தான் தான் இதை முதலில செய்ததா சொல்லுறது...??! பட் அவர் எனக்கு பெரிய அண்ணாச்சி... போலத்தான் இருக்கு கதையில..! :D

------------

சுது மாத்தையாவும் சுடு பாணும்..

இது இப்பவும் இனிக்குது.. சா சுவைக்குது.

ஆனா அதில பருப்புக்கறியும் என்றும் வந்திருக்கனும்..! :o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரி:

பாணை நடுவிலை கோதி அதுக்குள்ளை சம்பலை அடைஞ்சுபோட்டு சுத்திவர பாணை பிச்சு அதை சம்பலிலை தொட்டு சாப்பிற சுகமே தனியானது.

சரியாகச்சொன்னீர்கள் சாத்திரியார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹீஹீ இப்ப ஒரு இறாத்தல் பாண் 48/=. பாண் இல்லாட்டால் உயிரையே விட்டிடுவாங்கள் என்பதால் தானோ சனம் பாணுக்கு என்ன விலை எண்டாலும் வாங்குவம் னு வாங்குதுகள் போல.

ஹ்ஹீஹீ சாத்ரி மாமா நீங்கள் அந்தக்காலத்திலேயே சாண்ட்விச் சாப்பிட்ட பெருமையை நினைச்சால் எனக்கு பசிக்குது.

நானும் அறிந்தேன். நான் கொழும்பை விட்டு புறப்படும் போது வெறும் 12 தொடக்கம் 20 தான்.. (தரத்தை அளவைப் பொறுத்து). பாவம் ஏழை மக்களின் வாழ்வு திண்டாட்டம் தான். :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி சாத்திரி அண்ணா பழைய நினவுகளை மீட்டியதற்கு. பின்னேரம் பந்தடிச்சுபோட்டு நானும் கொஞ்ச நண்பர்களும் ஊரெலாம் மேய்ந்து விட்டு பேக்கரியடியால் சைக்கிளை விடுவம்.பேக்கரியடியிலை போய் தானாக எங்கடை சைக்கிள் நிற்கும். அப்போ பேக்கரி காரன் தம்பியவை புதிசா ஒரு பணிஸ் போட்டிருக்கிறம்."கொம்பு பணிஸ்" என்று சொல்லுறது என்பார்.(கொம்பு போல் உருவம் இருப்பதால் போலும்). நல்லா தான் இருக்கும்.இனிப்பு தான்.நல்ல சுவையாக இருக்கும். :(

கொம்பு பணிஸ் இன்ர ஒரு வாரிசுதான் French croissants. ஆனா கொம்பு பணிஸ் நல்ல இனிப்பு. ஏன்னா மேல சீனி தூவி இருப்பாங்க. :o

Croissant.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாண் சாப்பிட்ட மாதிரி ஒரு பதிவு

Posted

எப்படி அப்படி ஒரு ஐடியா வந்திச்சு உங்களுக்கு :wub:

எது சாப்பிடுற ஜடியாவா வசி அது தானா வரும் :lol::)

நன்றி சாத்திரி அண்ணா பழைய நினவுகளை மீட்டியதற்கு. பின்னேரம் பந்தடிச்சுபோட்டு நானும் கொஞ்ச நண்பர்களும் ஊரெலாம் மேய்ந்து விட்டு பேக்கரியடியால் சைக்கிளை விடுவம்.பேக்கரியடியிலை போய் தானாக எங்கடை சைக்கிள் நிற்கும். அப்போ பேக்கரி காரன் தம்பியவை புதிசா ஒரு பணிஸ் போட்டிருக்கிறம்."கொம்பு பணிஸ்" என்று சொல்லுறது என்பார்.(கொம்பு போல் உருவம் இருப்பதால் போலும்). நல்லா தான் இருக்கும்.இனிப்பு தான்.நல்ல சுவையாக இருக்கும். :D

கொம்பு பணிசா எனக்கு அது தெரியாது நுணாவிலான் ஆனால் சங்கிலிப்பாண் எண்டு ஒண்டு இருந்தது

Posted

நான் இப்பவும் பாணை இப்படி செய்து சாப்பிடுவேன். ஒரு முட்டை ஒம்லடையும் நடுவில வையுங்க.. வாழைப்பழத்தை பிச்சும் வைக்கலாம்... கத்தியால வட்டம் வட்டமா வெட்டியும் வையுங்க.. இரண்டு பாணையும் அமுக்குங்க.. சாப்பிடுங்க.

சாட்விச் சாப்பிடேக்க கரையில சாட்விச் கிறீம் சில நேரம் இருக்காது. வெறும் பாண் இருக்கும். வாழைப்பழம் போட்டிங்கன்னா சின்ன பூசும் பெரிய இனிப்பு. அதால அமுக்கேக்க சிதைஞ்சு வாற சின்ன துண்டு பிரண்டிருந்தாலே எல்லா இடமும் இனிக்கும்..!

முட்டை சத்துக்கு..!

இந்த செய்முறை எங்கையோ எப்பவோ படிச்ச ஞாபகமாய் இருக்கே :wub::lol:

சாத்திரியார் தான் தான் இதை முதலில செய்ததா சொல்லுறது...??! பட் அவர் எனக்கு பெரிய அண்ணாச்சி... போலத்தான் இருக்கு கதையில..! :D

---அப்பிடி எனக்குள்ளை ஒரு நினைப்பு ஆனால் என்னை மாதிரி எத்தினை பேர் இருந்திருப்பினம். :):) ---------

சுது மாத்தையாவும் சுடு பாணும்..

இது இப்பவும் இனிக்குது.. சா சுவைக்குது.

ஆனா அதில பருப்புக்கறியும் என்றும் வந்திருக்கனும்..! :)

அததான் கடைசியிலை சொல்லியிருக்கிறமில்லை :):D:D

Posted

சாத்திரி"யார்" உங்கள் கதையை வாசித்"தேன்" - நினைத்"தேன் - ரசித்"தேன்" - சுவைத்"தேன்". நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதான் சொல்லுவாங்களே வெளிநாட்டு பாண ஊர் நாயும் சாப்பிடாதுன்னு...

நல்ல பதிவு சாத்திரி

Posted

சாத்திரி அங்கிள் "சுதுமாத்தையாவும் சுடுபாணும்"....ரொம்ப நன்னா இருந்தது நான் சொன்னது பதிவை.. :) (பேஷ்...பேஷ்)...சாத்திரி அங்கிள் சொன்ன மாலுபாண் நேக்கு ரொம்ப நன்ன விருப்பம்... :D (சிட்னியில ஜனனி ரெஸ்சுரண்டில மாலுபாண் என்று போட்டு என்னத்தையோ செய்து தருவாங்க அதில டேஸ்டே இல்லை :( )...அடுத்தது "ரோஸ்ட்" பாண் ஆகா ஜம்மி...ஜம்மி...(நேக்கு ரொம்ப நல்லா விருப்பம் :lol: )...

ஆனாலும் சாத்திரி அங்கிள் பாணிற்குள்ள வாழைபழத்தை வைத்து :D ...(அந்த காலத்திலேயே சான்விச் சாப்பிட்டது உங்களுக்கே ஓவரா தெரியல்ல :wub: )...என்னால முடியல்ல.. :(

பாணும்,பருப்பும் மம்மியிட்ட கேட்டா ஜெயில்காரனின்ட சாப்பாடு என்று திட்டு விழும் நேக்கு சாத்திரி அங்கிள் ஜேயிலில அதோ கொடுக்கிறவை.. :wub: (அட நீங்க அந்த பக்கம் போயிருக்கமாட்டியள் பட் டவுட்டை கிளியர் பண்ண கேட்டனான் பாருங்கோ :lol: )...

அப்ப நான் வரட்டா!!

Posted

அதான் சொல்லுவாங்களே வெளிநாட்டு பாண ஊர் நாயும் சாப்பிடாதுன்னு...

நல்ல பதிவு சாத்திரி

அட இப்படி சொல்லி கொண்டே நல்லா வெட்டுறாங்க... :lol: (என்னால முடியல்ல :lol: )...அப்ப உங்க பாண் சாப்பிடுறவை எல்லாம் டோக்ஸ் என்று சொல்லுறியளே.. :wub: (இருங்கோ போட்டு கொடுக்கிறேன் :wub: )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொத்தளாவளையையும் ஊர்பாணையும் ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி சாத்திரி. கொத்தளாவளையினரை பேக்கறியில போறணையால பண் எடுத்த உடனை சுடசுட வாங்கி கொண்டுபோய் பச்சை மிளகாய் சம்பலோட சாப்பிடுறது தனிசுகம். எங்கள் வீட்டிலும் உதே விளையாட்டுதான், 1 றாத்தல் பாணை பாதியா பிய்ச்சு தர, அதை நடுவில தோண்டி பச்சைமிளகாய் சம்பலை போட்டு சாப்பிடுறதே தனிச்சுவை. நாங்கள் சீசனை பொறுத்து மாம்பழம் பிலாப்பழம் வாழைப்பழத்துடனும் பாண் சாப்பிடுவது வழக்கும். முழுப்பாணுடன் மாம்பழம் அல்லது பலாப்பழம் நல்லா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓய் சாத்து சண்டிலிப்பாயில இருக்கிற கமலா பேக்கரி பக்கம் வந்த சிலமன் :wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வந்திருப்பார்; பட் பாண் வாங்க இல்ல கமலாவ பாக்க...

Posted

வந்திருப்பார்; பட் பாண் வாங்க இல்ல கமலாவ பாக்க...

எப்படி கரக்டா சொல்லுறியள் சுண்டல் அண்ணா நீங்களும் அந்த பக்கம் போனனியளோ... :unsure::)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுண்டல சின்னப்பையன் அப்பல்லாம் பாண் வாங்க போய் இருக்குமா என்ன....

Posted

சுண்டல சின்னப்பையன் அப்பல்லாம் பாண் வாங்க போய் இருக்குமா என்ன....

யாருக்கு தெரியும் இந்த சுண்டல் சின்ன பையனா இருக்கும் போதும் போயிருந்தாலும் போயிருக்கும்... :unsure:

அப்ப நான் வரட்டா!!

Posted

ஓய் சாத்து சண்டிலிப்பாயில இருக்கிற கமலா பேக்கரி பக்கம் வந்த சிலமன் :unsure:

சண்டிலிப்பாய் சீரணி சந்தியாலை சங்கானை போகிற றோட்டிலை இருந்ததுதானே கமலா பேக்கறி அதுக்கு வந்திருக்கிறன். பாண்வாங்கவோ கமலாவை பாக்கிறதுக்கா கவோ இல்லை இன்னொரு ஆளை பாக்கிறதுக்கு கிகிகி :):(:wub:

Posted

ஓய் சாத்து சண்டிலிப்பாயில இருக்கிற கமலா பேக்கரி பக்கம் வந்த சிலமன் :unsure:

puththan நீங்கள் அந்த இடமா? முன்னால் ஒழுங்கைக்குள் எனது காணி இருந்தது.. ஒருகாலம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காணிக்குள்ள என்ன இருந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த செய்முறை எங்கையோ எப்பவோ படிச்ச ஞாபகமாய் இருக்கே...

அட என்னைப் போல வேற யாரோவும் செய்யுறாங்க...ம்ம்ம் :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.