Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் புதிய கண்டுபிடிப்பு

Featured Replies

வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது தீவிரவாதத்தின் உச்சகட்டம், என அரசுத் தலைவர் மஹிந்த சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கான ஆரம்ப வைபத்தின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். ஈரானிய ஜனாதிபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் :

இலங்கையில் தீவிரவாத நடவடிக்கைகள் முழுமையாக இல்லாதெலழிக்கப்பட வேண்டும். வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அங்கிருந்து 24 மணி நேரத்திற்குள் முற்றாக வெளியேற்றப்பட்டமை இந்த தீவிரவாத நடவடிக்கையின் உச்சகட்ட செயற்பாடுகளில் ஒன்று. ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட காலமாக உறவு பேணப்பட்டு வருகின்றது. மனிதாபிமான ரீதியில் ஈரான் எமக்கு உதவி நல்க முன்வந்துள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஈரான் தியாக சிந்தனையுடன் செயற்படுகிறது. என்றே கூறவேண்டும். அபிவிருத்திகளை இலங்கை அரசு மேற்கொள்வதற்கு ஈரான் நிச்சயமாகத் தமது உதவிகளை எமக்கு அளிக்குமென நான் முழுமையாக நம்புகின்றேன். என்றார்.

அட...நானும் என்னவோ மகிந்த மாமா புதுசா கண்டுபிடித்திட்டார் என்று வந்து பார்த்தா :lol: ..(இதையா கண்டு பிடித்தவர்)..முடியல என்னால... :lol:

அப்ப நான் வரட்டா!!

தலைப்பை வார்த்துட்டு நானும் ............................... :lol:

தலைப்பை வார்த்துட்டு நானும் ............................... :lol:

ம்ம்..தலைப்பை பார்திட்டு நீங்களும் வந்தனியளோ..(என்ன கொடுமை இது :lol: )...மகிந்த மாமா புதுசா எதையாச்சு கண்டு பிடித்தா கூட ஒருத்தருமே நம்ப மாட்டீனம் இது தெரியாத.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ம்ம்..தலைப்பை பார்திட்டு நீங்களும் வந்தனியளோ..(என்ன கொடுமை இது :lol: )...மகிந்த மாமா புதுசா எதையாச்சு கண்டு பிடித்தா கூட ஒருத்தருமே நம்ப மாட்டீனம் இது தெரியாத.. :lol:

அப்ப நான் வரட்டா!!

:lol::lol::lol: செய்திப்பக்கத்தில் இருவரும் சேர்ந்துட்டாங்க னு யாராச்சும் திட்டப்போகினம் தம்பி :lol:

:lol::lol::lol: செய்திப்பக்கத்தில் இருவரும் சேர்ந்துட்டாங்க னு யாராச்சும் திட்டப்போகினம் தம்பி :lol:

சா...சா பயப்பிடாதையுங்கோ... :lol: (இப்ப இணையவன் அண்ணா ஒளிந்து நின்று நம்மள லுக்கு விடுறார் :lol: )...கொஞ்சத்தால அதை எல்லாம் அவர் அரட்டை பகுதிக்கு கொண்டு போவார்... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

இதில இருந்து என்ன தெரியுது எங்க எப்ப குட்டையைக் குழப்பினா தான் பிழைக்கலாம் தன்ர சிங்கள இனம் பிழைக்கலாம் என்று மகிந்த சிந்திக்கிறானே தவிர.. தமிழ் மக்களைப் பற்றி.. முஸ்லீம் மக்களைப் பற்றி.. இன ஒருமைப்பாடு பற்றி எப்பவுமே சிந்திக்கல்ல. இரண்டு இனங்கள் நீண்ட பகை வளர்த்து மோதுப்பட்டால் தனக்கு என்ன இலாபம் என்று கணக்குப் போடுறவனட்ட.. சிலர் தமிழ் மக்களுக்கு நீதி கிட்டும் என்று நோர்வேயில் வைத்து சொன்னவை. எங்க அந்த ஆறுமுகம்..!

18 வருடங்களுக்கு முன்னால இரு சமூகங்களின் பாதுகாப்புக் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு மன்னிப்பும் கோரியதன் பின்னும்.. மகிந்த.. அதை சிங்கள இனத்தின் நலனுக்காக தூக்கிப் பிடிக்கிறான் என்றால்.. இவன் தான் உண்மையான சிங்களப் பேரினவாதி..!

மகிந்த ஒன்றை மறந்திட்டான் தமிழ் மக்களை 83 இலும் 2007 இலும் கொழும்பில இருந்து கலைச்சதுக்கு இன்னும்.. மன்னிப்புக் கேட்கல்ல எந்த ஒரு சிங்களவனும்..! ஆனால்... புலிகள்.. சமூகங்களின் பாதுகாப்புக் கருதி எடுத்த நடவடிக்கையை உலகம் தவறாக விமர்சிக்கப் போய் எழுந்த கசப்புணர்வு கருதி.. அதற்காக மன்னிப்புக் கோரியதை மகிந்த போன்ற பேரினவாதிகள்.. உதாரணமாக்கப் போவதில்லை..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்... புலிகள்.. சமூகங்களின் பாதுகாப்புக் கருதி எடுத்த நடவடிக்கையை உலகம் தவறாக விமர்சிக்கப் போய் எழுந்த கசப்புணர்வு கருதி.. அதற்காக மன்னிப்புக் கோரியதை மகிந்த போன்ற பேரினவாதிகள்.. உதாரணமாக்கப் போவதில்லை..! :D

Parliamentarian Rajeem Mohammed Imam recalled the open apology from the LTTE and said people like him have accepted that. - BBC

வடபகுதி முஸ்லிம் அகதிகளிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் கோரிய மன்னிப்பு (open apology ) உண்மையானதும் அந்தரங்க சுத்தியுள்ளதுமாகும். மேலும் இந்த மன்னிப்பு அத்தகைய ஒரு அநீதி எதிர்கால வரலாற்றில் எந்தத் தருணத்திலும் இனி இடம்பெறாது என்பதற்க்கான ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பான உறுதி மொழியாகும். புலம்பெயர் தமிழ் ஆதரவாளர்கள் ஒருசிலரின் “முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவே முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டார்கள்” எனத் தொனிக்கும் கருத்துக்களால் முஸ்லிம் சகோதரர்கள் அதிற்ச்சி அடைந்திருப்பதை அறிவேன். உங்கள் அச்சங்களைப் புரிந்துகொண்டவன் என்கிற முறையிலும் ஆரம்பதில் இருந்தே இரு தரப்புக்குமிடையில் உறுதியாகச் செயல் பட்ட ஆய்வாளன் என்கிற முறையிலும் இதுபற்றிய என்னுடைய கருத்தைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். வெளிப்புல ஆதரவுத் தளங்களில் வெளிவருகிற இத்தகைய அநீதியும் அபத்தமுமான கருத்துக்களுக்கும் விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். இவற்றை வாசித்துவிட்டு விடுதலைப் புலிகளின் தலைவரின் வார்த்தைகளில் சந்தேகப் பட எந்த முகாந்திரமும் இல்லை என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன். அவருடைய வார்தைகள் உண்மையானதும் நிபந்தனையற்றதும் (open apology) எதிர்காலத்துக்கான நிலையான உறுதி மொழியுமாகும்.

புலம் பெயர்ந்த ஆதரவாளர்கள் சிலரது இத்தகைய ஆர்வக் கோளாறுகள் விடுதலைக்குப் பாதகமானதாகும். தலைவரின் மன்னிப்புத் தொடர்பாக தவறானதும் விடுதலைக்கு எதிரானதுமான மேல் விமர்சனங்களை வைக்கும் புலம் பெயர்ந்த ஆதரவாளர்கள் வன்னியுடன் தொடர்புகொண்டு தங்கள் தவற்றைப் பரிசீலித்துத் திருத்திக் கொள்ள வேண்டுமென்று கோருகிறேன். அததிற்ச்சி அடையுந்துள்ள வடபகுதி முஸ்லிம் மக்கள் எனது பணிவான விளக்கத்தை எற்றுக்கொணள்ளவேண்டுமென விண்ணப்பிக்கிறேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் ஆதரவாளர்கள் ஒருசிலரின் "முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவே முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டார்கள்" எனத் தொனிக்கும் கருத்துக்களால் முஸ்லிம் சகோதரர்கள் அதிற்ச்சி அடைந்திருப்பதை அறிவேன்.

பொயட்.. நீங்கள் நீதியின் முன் கருத்து வைக்க முன்வந்தால்.. என்னாலும் நீதியைச் சொல்ல முடியும். முஸ்லீம்கள் தமிழ்மக்கள் என்ற நிலையில் கருத்து வைக்க நினைத்தால்.. அது இனப்பாகுபாடு என்ற பிளவுத்தளத்தை ஆழப்படுத்தும் நோக்கில் சென்றுவிடும்.

1990களில் தென் தமிழீழத்தில் மூதூரில் இருந்து முஸ்லீம் ஜிகாத் கும்பலால் இரவோடு இரவாக அடித்து விரட்டப்பட்ட தமிழ் மக்களுக்காக.. முஸ்லீம் தலைவர்கள் எவராவது பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டனரா..???!

அம்பாறையில்.. மட்டக்களப்பில்... தமிழ் மக்களின் காணிகளை வன்பறிப்புச் செய்வதற்கு ஜிகாத் மற்றும் குழுக்களின் செயற்பாடுகள் திட்டமிட்டு செயலுருப்படுத்தப்பட்டு வந்தமையை.. நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா..??!

மட்டக்களப்பில்.. முஸ்லீம் காடைக் கும்பலாலும் சிறீலங்கா இராணுவத்தில் இருந்த முஸ்லீம் அதிகாரிகளின் துணையோடும்.. எடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலையை நீதியின் பால் நின்று ஏற்றுக் கொள்ள முன் வருவீர்களா..???!

மன்னாரில் ஜிகாத் கும்பல் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்வீர்களா..??!

யாழ்ப்பாணத்திலும் சாவகச்சேரியிலும்.. பள்ளிவாசல்களிலும் வியாபார ஸ்தாபனங்களிலும்.. வீடுகள் சிலவற்றிலும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததன் மர்மம் என்ன..??! அதற்கான தேவை என்ன விளக்குவீர்களா..??!

வெறுமனவே ஒரு சில சம்பவங்களையும் அவற்றுக்கு விடுதலைப் புலிகளையும் காரணம் காட்டி.. தமிழ் மக்கள் மீதான வெறுப்புணர்வை வளர்த்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஏன் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான பின் புலக்காரணங்கள்.. செயற்பாடுகள்.. என்ன..??! யார் அதன் பின்னணியில் இருந்தனர் என்பதை இட்டு நீதியோடு பகிரங்கப்படுத்த முடியுமா..??!

ஜிகாத்தைக் கொண்டு அக்கும்பலை ஆயுதக் குழுக்களாக்கி தமிழ் மக்களை அடக்க நினைத்த அஸ்ரப் போன்றவர்களின் செயற்பாடுகளை பகிரங்கப்படுத்த முடியுமா..??!

முஸ்லிம் கும்பல்களால் தமிழ் மக்கள் அனுபவித்த படுகொலைகள்.. வேதனைகள்.. இடம்பெயர்வுகள்.. சொத்திழப்புக்கள்... நில வன்பறிப்புக்கள் இவற்றுக்கு எவரும் இன்று வரை பகிரங்க மன்னிப்புக் கோரியதில்லை.

விடுதலைப்புலிகள் முஸ்லீம் கும்பல்களின் செயற்பாடுகளால் ஏற்பட்டு வந்த சமூகப்பிளவை தடுக்க எடுத்த சில நடவடிக்கைகளுக்கு தவறான அர்த்தம் கற்பிக்க விளைந்ததையும் அதை அரசியலாக்கி புலிகளைக் காட்டிக் கொடுத்ததையும்.. தமிழ் மக்களின் இரத்தத்தால் எழுதப்பட்ட வீரவரலாறுகளை கொச்சைப்படுத்தியதையும்.. யாரும் இலகுவில் மறந்திட முடியாது. இருந்தாலும் தமிழ் மக்கள் இன்றுவரை முஸ்லீம்களை தங்கள் சகோதரர்களாகவே எண்ணிச் செயற்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தான் புலிகள் தாம் எடுத்த ஒரு நடவடிக்கைக்காக பகிரங்க மன்னிப்புக் கோரினர்.

நான் கேட்கிறேன்.. மூதூரில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் சொந்தங்களின் உறவினன் என்ற வகையில் கேட்கிறேன்.. மூதூரில் இருந்து 1990 ( யாழ்ப்பாண முஸ்லீம்களின் இடம்பெயர்வுக்கு முன்னர்) ஜிகாத் மற்றும் முஸ்லீம் ஊர்காவல்படை கும்பலால்.. இரவோடு இரவாக அடித்து விரட்டப்பட்டு அகதியாக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக முஸ்லீம் கட்சிகள் பகிரங்க மன்னிப்புக் கோருமா. தமிழ் மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட சூறையாடல்களுக்கு நஸ்ட ஈடு கொடுக்கப்படுமா..??!

இது ஒரு சின்ன உதாரணம்.. ஆனால்.. இதன்.. தொடர்சிகள்.. தென் தமிழீழத்தில் நீண்டது.

தமிழ் மக்கள் எப்போதுமே முஸ்லீம்களின் செயற்பாடுகளை மன்னித்தே வந்துள்ளனர் என்பதை நீதியின் பால் நிற்கும் எந்த தமிழ் பேசும் முஸ்லீமும் நிராகரிக்க மாட்டான்..! இந்தியப்படைகளின் தொந்தரவால் இடம்பெயர்ந்த முஸ்லீம்களுக்கும் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தது.. இதே யாழ் மண்ணும்.. தெந்தமிழீழ மண்ணும் என்பதை மறந்தீர்களே. அதற்கு நன்றிக் கடனாகவா.. பிரேமதாச அரசுக்கு விலை போய்.. காட்டிக்கொடுப்புகளும்... தமிழ் மக்களை தாக்கவும்.. துரத்தவும் தீர்மானித்தீர்கள்..???! :D

(முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டி அடிக்கப்படவில்லை. பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு நகரக் கோரப்பட்டனர் என்பதை நான் அவ்வேளையில் அங்கு வாழ்ந்தவன் என்ற வகையில் நங்கு அறிவேன்..! அதற்கான ஒலி பெருக்கி அறிவிப்பு இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. விட்டுச் செல்லும் சொத்துக்கள் தொடர்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டதையும் நினைவு கூருகின்றேன்..!)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பொயட்.. நீங்கள் நீதியின் முன் கருத்து வைக்க முன்வந்தால்.. என்னாலும் நீதியைச் சொல்ல முடியும். முஸ்லீம்கள் தமிழ்மக்கள் என்ற நிலையில் கருத்து வைக்க நினைத்தால்.. அது இனப்பாகுபாடு என்ற பிளவுத்தளத்தை ஆழப்படுத்தும் நோக்கில் சென்றுவிடும்.

:D

தோழரே நீங்கள் முன்வைக்கிற குற்றச்சாட்டுக்களை நான் மறுத்ததில்லை. கிழக்கில் 1985ல் இருந்தே தமிழரும் முஸ்லிம்களும் மோதி வருகிறார்கள். கிழக்கில் தமிழரும் முஸ்லிம்களும் மோதியதையும் இராணுவம் ஒருபக்கமும் இயக்கங்கள் மறுபக்கமுமாக இரண்டு தரப்பிலும் அப்பவிகள் இரத்தம் சிந்தியுள்ளதையும் கிழக்கில் பணியாற்றிய நீங்கள் நன்கு அறிவீர்கள். வீரமுனைத் தமிழன் சிந்திய கண்ணிருக்காக அம்பாறையிலும் உறுகாமத்தில் முஸ்லிம்கள் சிந்திய கண்ணீருக்காக மட்டக் களப்பிலும் உயிருக்கு அஞ்சாது நீதி கேட்டவன் நான் என்பதையும் அறிந்திருப்பீர்கள்.எனது தோழன் அஸ்ரப் 1985 ஆண்டுகத் தமிழ் முஸ்லிம் கலவரத்துக்காக வெட்கித் தலைகுனிகிறேன் என்ற துண்டுப் பிரசுரத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார். 1987 - 1990 ஐபிகேஎப் காலப் பகுதியில் முஸ்லிம்கள் போராளிகளுக்கு அடைக்கலமானதையும் நாம் இத்தருணத்தில் மறந்துவிடக் கூடாது அல்லவா. பின்னர் 1990ல் அம்பாறையில் பிரேமதாசா அரசு முன்னெடுத்த ”கழளுக் கொட்டிய” நடவடிக்கைகளைத் தொடர்ந்து எனது மதிப்புக்குரிய விடுதலைப் போராளிகள் முஸ்லிம் தோழர்களும் சம்பந்தப் பட்ட தவறுகள் நடந்துவிட்டது. எந்தவகையிலும் வடபகுதி முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நியாயப் படுத்தும் வகையில் ஏனைய இருதரப்புத் தறுகளை சமப் படுத்த முடியாது.

வடபகுதியில் இனமோதல் இருக்கவில்லை. தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் சட்ட ஒழுங்குச் சிக்கல்கள் இருப்பது வேறு இனமோதல் வேறு. வடபகுதி முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் தவறு தமிழ் மக்கள் சார்பாகத் தலைமை மன்னிப்புக் கோரியதை நிபந்தனையின்றி வரவேற்க்கிறேன். தமிழர் சார்பில் தலைவர் பிரபாகரன் வடபகுதி முஸ்லிம் அகதிகளிடம் கோரிய திறந்த மன்னிப்பை விமர்சனமின்றி ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். அதே அந்தரங்க சுத்தியோடு மீழ் குடியேற்றத்தை முன்னுரிமைப் படுத்தவும் வேண்டு,. கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் சிக்கல் வேறு வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை வேறு. விடுதலைக்காக அயராது உழைக்கும் புலம் பெயர் ஆதரவாளர்கள் இந்தப் பின்னணியில் வன்னியின் நிலைபாட்டை புரிந்துகொள்ளவேண்டுமென பணிவன்புடன் விண்ணப்பிக்கின்றேன்.

Edited by poet

சம்பூரிலை இருந்தும், கொழும்பிலை இருந்தும் தமிழர்களை வெளியேத்தினது மட்டும் இறைமையோ...??

அட நாங்கள் சாக

அவசர கால சட்டத்துக்கு சிங்களவங்களை முந்திகொண்டு கைதூகேல்லையே?

தூக்கினது மட்டுமில்லை சிங்களவங்களை விட கேவலமா கொச்சை படுத்தேல்லையா?

எல்லாம் கால தராசில நிறுத்தி பாருங்கோ...

அய்யா பொயட்டு... ஆராவது மிதவாதி களுக்கு சொல்லி பாருங்கோ... எங்களுக்கு பட்டறிவும் தளும்பும் மாறேல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலிருந்து முச்லீம்கள் வெளியேற்றப்பட்டது சரியா பிழையா என்று இப்போது வாதாடுவது பிரயோசனமில்லை. அச்செயலுக்குத் தேசியத் தலைவரால் மன்னிப்பும் கேட்கப்பட்டபின்.

ஆனால் எல்லாரிடமும் ஒரு கேள்வி, இன்றுவரை தமிழ் முச்லீம் உறை மீண்டும் வலுப்படுத்த தமிழர் தரப்பால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாம் எல்லோரும் அறிவோம், அப்படி முச்லீம் தரப்பால் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றைச் சொல்ல முடியுமா ?

காசுக்கு விலை போய், தன் இனத்தையே காட்டிக்கொடுக்கும் தமிழ்த் துரோகிகளை விட்டு விடுங்கள். 1990 இலிருந்து அது அஷ்ரப்போ, கிச்புல்லாவோ, பேரியல் அஷ்ரப்போ, கக்கீமோ அல்லது எந்த முச்லீம் தலைவராவது தமிழ் முச்லீம் உறவை வலுப்படுத்துவது பற்றிக் கதைத்திருப்பார்களா ?

மாதாமாதம் தமிழனை அடக்கி ஒடுக்க அரசு கொண்டுவரும் அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தம்மால் முடியுமானவரை வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகத்தைத் துண்டாட அன்றுதொட்டு இன்றுவரை பேரினவாத அரசுக்கு முண்டு கொடுத்து வரும் இவர்களில் எவராவது இதுவரை காலமும் தாம் தமிழினத்துக்குச் செய்த அநீதிக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறார்களா ?

இன்றும் கூட ஈழக் கனவை உடைப்பது எப்படி என்றல்லவா கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

அட நாங்கள் சாக

அவசர கால சட்டத்துக்கு சிங்களவங்களை முந்திகொண்டு கைதூகேல்லையே?

தூக்கினது மட்டுமில்லை சிங்களவங்களை விட கேவலமா கொச்சை படுத்தேல்லையா?

எல்லாம் கால தராசில நிறுத்தி பாருங்கோ...

அய்யா பொயட்டு... ஆராவது மிதவாதி களுக்கு சொல்லி பாருங்கோ... எங்களுக்கு பட்டறிவும் தளும்பும் மாறேல்ல...

நான் இருதரப்பு அரசியல் வாதிகள்பற்றி பேசவரவில்லை. தமிழர்களினதும் முஸ்லிம்களதும் இணைந்த தாயகமான ஈழத்தைப் பற்றியே பேசுகிறேன். ஈழத்து தமிழ் முஸ்லிம் மக்களது இணைந்த இறைமை பற்றியே பேசுகிறேன். இதற்காக நான் நிறைய விலைகொடுத்திருக்கிறேன் என்பதை தமிழ்ப் போராளிகளும் முஸ்லிம் தீவிரவாதிகளும் அறிவார்கள். ஒருமுறை கிழக்கில் முஸ்லிம் மக்களது நியாயத்தைக் கேட்டதற்க்காக கருணா அம்மானின் ஆட்களால் கிரான் சுடலைக்கு மண்வெட்டும் சவள் சகிதம் எடுத்துச் செல்லப் பட்டிருக்கிறேன். கடைசி வினாடியில் வடக்கில் இருந்து வந்த அழைப்பினால் காப்பாற்றப் பட்டிருக்கிறேன். இதுபோலவே தமிழ் மக்களின் நியாயம் பற்றிய கருத்துக்களுக்காக கிழக்கில் முஸ்லிம் தீவிர வாதிகளது எதிர்ப்புக்கும் முகம் கொடுத்திருக்கிறேன். ஒருமுறை மூதூரில் என்னுடைய பாதுகாப்புப்பற்றி அச்சம் ஏற்ப்பட்டபோது, முஸ்லிம் தீவிரவாதிகள் தொடர்பாக அச்சமடைந்த எனது மூதூர் முஸ்லிம் தோழர்கள் இரவிரவாக மூதூர் சேர்சில் வணபித ஜஸ்டினிடம் என்னை ஒப்படைத்திருக்கிறார்கள். இது பல சம்பவங்களுள் இரண்டு உதாரணங்கள்தான். இரண்டுதரப்பும் பின்னர் கவலைப் பட்டது வேறு விடயம். ஈழத்து தமிழ் முஸ்லிம் மக்களின் இணைந்த இறைமைக்காக கடைசி மூச்சிருக்கிறவரைக்கும் ஆபத்துக்களை எதிர்நோக்கத் தயாராகவே உள்ளேன். போராட்டத்துக்கு வந்தபோது 1. ஈழ விடுதலை, 2. தமிழ் முஸ்லிம் மக்களின் இணைப்பாட்ச்சி, 3. சிறுபாண்மையினரான சிங்களவர் மற்றும் கலாச்சார சிறுபாண்மையினரான வேடர்கள் பறங்கியர் போன்றோரின் சமத்துவமும் பாதுகாப்பும் எமன்பவற்றையே கனவு கண்டேன். இன்றுவரைக்கும் அந்தக் கனவுகள் உயிர்ப்புடனேயே இருக்கிறது.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

பொயெட்,

நீங்கள் பாடுபடுவது நல்ல விஷயம்தான். ஆனால் வடக்கும், கிழக்கும் இணைந்த தமிழர் தாயகத்துக்குள் தாமும் சேர்ந்து வாழ அவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்று உங்களுக்குத் தெரியுமா ? 77, 83 இனக்கலவரங்களின் போது எத்தனையோ தமிழ்க் குடும்பங்கள் அயல் வீட்டுச் சிங்கள நண்பர்களால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

பொயெட்,.

மேலும் கருணா செய்த வேலைகளை எமது பெயரால் கோருவது சரியில்லை. அக்கரைப்பற்றிலும், ஓட்டமாவடியிலும் முச்லீம்கள் பள்ளிவாசல்களில் கொல்லப்பட்டதற்கு ராணுவமும், கருணாவும்தான் பொறுப்பு. அதற்காக தமிழர் தரப்பைக் காரணம் காட்டுவது சரியில்லை. தனது இருப்பைத் தக்கவைக்க அன்று கருணா ஆடிய ஆட்டம் கிழக்கு மாகண மக்களுக்குத் தெரியும்.

தோழமைக்குரிய ரகுநாதன் இயக்கம் கட்டுக்கோபிற்க்கும் பொறுப்பு எடுப்பதற்கும் உலக மட்டத்தில் புகழ்பெற்ற அமைப்பு. பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் இதனைப் பாராட்டி இருக்கிறார்கள். உலகின் வேறு எந்த விடுதலை அமைப்புகளின் நிர்வாகத்திலலும் இத்தனை குறைந்த மட்டக் குற்றச் செயல்களோ, உயர்ந்த மட்ட நிர்வாகமோ இடம் பெறுவதற்க்குப் பொறுப்பெடுக்க பதில் சொல்லா ஆட்களோ இல்லையென்று சநர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ராஜதந்திரிகளும் சொல்வதை பலதடவை நேரிலேயே கேட்டிருக்கிறேன். கருணாவின் காலத்தில் நடந்தவற்றுக்குப் பொறுப்பில்லையென்பதல்ல இனி அத்தகைய சம்பவங்கள் இடம்பெறாது என்பதுதான் நான் அறிந்தவரைக்கும் இயக்கத்தின் நிலையாக உள்ளது. இந்த பொறுப்புணர்வுதான் இயக்கத்தின் பலம்மென்று நினைக்கிறேன். தயவுசெய்து இதுபற்றி இன்னும் விரிவாக ஆராயும் வண்ணம் கோருகிறேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
:D நிச்சயமாக !
  • கருத்துக்கள உறவுகள்

:D நிச்சயமாக !

நன்றி ரகுநாதன். எங்கள் போராட்டம் வெற்றிபெறும் என்கிற நம்பிகை அதிகரிக்கிறது. வெல்க நமது போராளிகள். அவர்களது வெற்றியை ஈழத்தின் அனைத்து தமிழ் முஸ்லிம் மக்களினதும் சிங்களவர் வேடர் பறங்கியர்போன்ற சிறுபாண்மையினரதும் வெற்றியாக்கும்பணிக்கு இத்தகைய விவாதங்கலள் வழிவகுக்கும்.

அய்யா பொயட்

எமது போராட்டம் வெல்லலாம் தோக்கலாம்... ஆனாலும் முஸ்லீம் மக்களும் தமிழரும் இணைந்து வாழ்வதற்கான காலம் இனி முஸ்லீம்களால் தான் முன்னெடுக்க படவேண்டும்.. தமிழ் மக்கள் எந்த உள்நோகத்துடனும் அவர்களுடன் பழகவில்லை...

சிங்களவரால் பட்ட கஸ்டம் 100% எண்டா... முஸ்லீம்களால் பட்ட கஸ்டம்.. குறந்தது 50% இருக்கும்...

ஒன்றை மட்டும் புரிந்து கொளுங்கள் .. தமிழ் ஏழம் ஒன்று மலருமாக இருந்தால்... அது தமிழருக்கு உரித்தானதே ஒழிய.. முஸ்லீம்கள் என்றோ இந்துக்கள் என்றோ இருக்காது... தமிழர் என்று கருதும் பட்ச்த்தில் முஸ்லீம்களும் தமிழரே... அவர்களின் மதம் அவர்களுக்கு மட்டுமே...

தமிழர் இல்லாமல் முஸ்லீமாக வாழ வேண்டுமெண்டா... கெல உறுமைய சொன்னமாதிரி அராபியாதான்

தமிழ் ஈழத்தில் மதம் ஒருநாளும் முதன்மை பெறாது....

தமிழ் ஈழத்தில் மதம் ஒருநாளும் முதன்மை பெறாது....

மிகச்சரியான கருத்து. தமிழீழத்தில் மதம் அரசியலை விட்டு ஒதுங்கியே இருக்கும்! இருக்க வேண்டும்!!

உன் மதம் உனக்கு! என் மதம் எனக்கு! நாடும் மொழியும் நமக்கு என்றிருக்க வேண்டும்! அதுவே ஆரோக்கியமான ஆட்சிமுறையாக இருக்கும்!

வெல்க தமிழீழம்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு விடயத்தை இங்கே கவனிக்கவேண்டும். அன்று வடக்கிலிருந்து முஸ்லிம்களை அனுப்பாவிட்டால் இன்று யாழ்ப்பாணமும் அம்பாறையாக மாறியிருக்கும். ஹிஸ்புல்லாவும் ஹக்கிமூம் அங்கேயும் போட்டிபோடுவார்கள்.

நீங்கள் சொன்னது எவ்வளவு தூரம் உண்மையா இருக்கும் எண்டு தெரியாது...

ஆனா துரத்தாத மட்டகிளப்பில முஸ்லீம்கள் இப்ப ராணுவத்தால படுற பாட்டை பாருங்கோ.. யாருக்கு யார் நன்பன் யார் பகைவன்?

சரியாசொன்னீங்க சூராவளி. இதை முந்தியே முஸ்லீம் மக்கள் உணர்ந்து செயல்பட்டு இருந்தாள் இன்ரைக்கு கிழக்கில் இந்த நிலை வந்து இருக்காது. இனியாவது திருந்துவாங்களா என்று பாப்போம்.

Edited by thanga

முஸ்லீம்களை வெளியேற்றினது மிகப்பெரிய தவறு!

...அவங்களை அங்கேயே இருக்க விட்டிருந்தா இருந்த இடம் தெரியாமல் காணமல் போயிருப்பாங்கள்!

இப்ப ஒன்றும் கெட்டுப் போகேலை புத்தளத்தில இருந்து நிவாரணம் வாங்கிக் கொண்டு நீலிக் கண்ணீர் வடிக்காம யாழ்ப்பாணத்திற்கு போய் 6 நேரமும் தொழுகையை தொடங்கலாமே? யார் தடுத்தா? உங்கடை அரசாங்த்தின்டை கட்டுப்பாட்டில தானே யாழ்ப்பாணம் இப்ப இருக்கு?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களை வெளியேற்றினது மிகப்பெரிய தவறு!

...அவங்களை அங்கேயே இருக்க விட்டிருந்தா இருந்த இடம் தெரியாமல் காணமல் போயிருப்பாங்கள்!

இப்ப ஒன்றும் கெட்டுப் போகேலை புத்தளத்தில இருந்து நிவாரணம் வாங்கிக் கொண்டு நீலிக் கண்ணீர் வடிக்காம யாழ்ப்பாணத்திற்கு போய் 6 நேரமும் தொழுகையை தொடங்கலாமே? யார் தடுத்தா? உங்கடை அரசாங்த்தின்டை கட்டுப்பாட்டில தானே யாழ்ப்பாணம் இப்ப இருக்கு?

இந்தக்கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு

ஏனெனில் நான் அவர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டவன்

ஆனால் அவர்களும் தமிழர்களே

எனவே போராட்ட காலத்தில் இதுபோன்ற கரத்துக்களைத்தவிர்ப்பது இன்றியமையாதது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.