Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எரியும் நினைவுகள் - ஆவணப்படம்

Featured Replies

எரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்!

dvd_bm_small.jpg

1981ம் ஆண்டில் சிறிலங்கா ஆட்சியாளர்களால் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண பொதுசன நூலகம் பற்றிய 'எரியும் நினைவுகள்" என்னும் 50நிமிட ஆவணப்படம் திரையிடலுக்கான தயார் நிலையில் உள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

நூலகம் எரியூட்டப்பட்டு 27வது ஆண்டினை எட்டிவிருக்கும் 31-05-2008ல், இப்படத்தினை உலகெங்கும் காண்பிக்கும் வகையிலான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழத்தமிழர்களின் பெருஞ்சொத்தாகவும், கல்விப்புலமையின் குறியீடாகவும் விளங்கிய இந்நூலகத்தின் கதை ஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தது.

1933ல் இருந்து இற்றைவரையான அந்நூலகத்தின் வலிமிகுந்த கதையை சொல்வதற்கு சினிமாமொழியின் பல்வேறு சாத்தியங்களையும் இயக்குநர் சோமீதரன் பயன்படுத்தி உள்ளார்.

சிதைவுற்ற நூலகத்தின் காட்சிகள், கோணங்கள், அங்கு பணியாற்றியோரின் வாக்குமூலங்கள், பத்திரிகை நறுக்குகள், உரைகள், கறுப்பு வெள்ளையிலான காணொளி நேர்காணல்கள், வரைபடங்கள், எடுத்துரைப்புகள், இசைக்கோர்ப்புகள் இப்படி பல்வேறு சாத்தியங்களுடனும் எரியும் நினைவுகள் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், பிரெஞ் மற்றும் யேர்மன் மொழிகளில் நூலகத்தின் கதையை எடுத்துரைக்கும் வகையில் இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2006ம் ஆண்டில் இருந்து இவ்வாவணத்தை தயாரிக்கத் தொடங்கிய 'நிகரி" தயாரிப்பு குழுவினரினர், பற்றாக்குறையான வளங்களுடன், பல்வேறு நெருக்கடிகளுக்கும், சிக்கல்களுக்கும் முகம்கொடுத்து தற்போது பணிகளை முடித்துள்ளனர்.

தங்கள் வரலாற்றை பேணிக்காப்பதில், ஆவணப்படுத்துவதில் அதிக அக்கறை இல்லாத ஈழத்தமிழ்ச் சமூகத்தில் இவ்வகையான முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.

எண்பதுகளில் வாழ்ந்த, உணர்ந்த ஒரு தலைமுறையின் எரியும் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கும் காவிச்செல்லும் பணியை இவ்வாவணப்படம் கொண்டுள்ளது.

----------

ஒளித்தட்டு அட்டையை தரவிறக்கம் செய்ய: dvd_bm_small.jpg

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஒரு புள்ளியாக அமையும் யாழ் நூலகம் ஆவணமாகிய தகவல் உற்சாகமளிக்கிறது. இது காணொளி ஆவணமாக தமிழ்- ஆங்கிலம்- பிரெஞ்சு- ஜேர்மன் மொழிகளூடாக வெளிவந்துள்ளதானது மிகவிரைவான கவனயீர்ப்பைப் பெறும்.

எமது அடுத்த தலைமுறையினருக்கும், நாம் வாழும் புலம்பெயர் நாட்டு மக்களுக்கும் இது இலகுவில் சென்றடையும்.

ஈழத்தில் தொடரும் இன்னல்களை மரணப்பதிவுகளாய் வெடியோசைககளாய் காண்மிக்கும் சூழலில் வரலாற்று ஆவணப்பதிவுகள் சொல்லும் செய்திகள் ஆழமானவை. உலகை உசுப்பவல்லவை.

இந்த வகையில் இதனைத் தயாரித்த நிகரி குழுவினரும் பின்புலமாக ஊக்கமளித்த ஆர்வலர்களும் நன்றிக்குரியவர்கள்.

இவ்வகையான பல்வேறு ஈழத்தமிழ் வரலாற்று உண்மை பேசும் ஆவணங்கள் உருவாக ஊக்கமளிக்கவேண்டியது நமது கடமையாகிறது. இதை இணைத்த இளைஞனுக்கு நன்றி.

சிறிலங்கா ஆட்சியாளர்களால் 1981 ஆம் ஆண்டில் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூலகம் பற்றி "எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இளைஞன் இணைப்புக்கு.

இளைஞன் உங்களுக்கும் இதன் உருவாக்கத்தில பங்களிப்பு இருக்கிதோ? நீங்கள் யாழில இதுபற்றி செய்தி இணைச்சாப்பிறகு தான் புதினத்தில வந்து இருக்கிது அதான் கேட்கிறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆவணப்படத்தை உருவாக்கிய இயக்குனர் சோமிதரன் எனது புளொக்கிற்கு அளித்த விசேட செவ்வியை அங்கே வந்து கேட்கலாம். :rolleyes:

சோமியின் வேறு ஆர்வங்கள் குறித்தும் அங்கு அவரது ஒலிப்பதிவுகள் உண்டு.

சோமிதரன் ஒரு வலைப்பதிவரும் ஆவார். :wub:

http://blog.sajeek.com/?p=302

பேட்டி நல்லா இருக்கிது. ஒருத்தன சாக்காட்டிப் போட்டு பிறகு சமாதிக்கு திறப்புவிழா வைக்கிறதுக்கு ஆனந்தசங்கரி அவர்கள் முயற்சித்து இருந்தார் எண்டு சொன்னது நிறைய விசயங்களை நினைவுபடுத்திச்சிது. நன்றி! கிறீஸ்தவர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையில ஒரு கோல்ட் வோர் (பனிப்போர்/ குளிர்கால போர்) நடந்து இருக்கிது எண்டுறது புதிய தகவலா இருக்கிது. தமிழ்த்தாய் எப்படி சரஸ்வதியா மாறினா எண்டு தெரிய இல்ல. ஆனா கிறீஸ்தவ பாதிரியார் தானே நூலகம் துவங்க காரணமா இருந்து இருக்கிறார். மதங்களுக்கு இடையில இருந்த புரிந்துணர்வின்மை காரணமாகத் தான் கடவுளே நூலகத்த எரிச்சுப் போட்டார் போல.

Edited by முரளி

  • தொடங்கியவர்

இளைஞன் உங்களுக்கும் இதன் உருவாக்கத்தில பங்களிப்பு இருக்கிதோ? நீங்கள் யாழில இதுபற்றி செய்தி இணைச்சாப்பிறகு தான் புதினத்தில வந்து இருக்கிது அதான் கேட்கிறன்

எனது பங்களிப்பு எதுவும் இல்லை முரளி :D ஊடகங்களுக்காக தயாரிக்கப்பட்டு

அனுப்பப்பட்ட தகவலே மேலே உள்ள செய்தி.

சோமிதரன் போன்ற இளைஞர்களின் முயற்சி இந்த ஆவணப்பட உருவாக்கம்.

இதற்காக அவர்கள் கடும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆவணப் படங்களின் தேவை ஈழத் தமிழ்ப் பரப்பில் அதிகம் உள்ளது. அந்தத்

தேவையை அல்லது அந்த வெற்றிடத்தை நிரப்ப இதுபோன் முயற்சிகள்

அவசியம். இப்படியான முயற்சிகள் செய்வோருக்கு பொருளாதாரப் பலத்தை

அளிக்கவேண்டிய தேவையும் உள்ளது.

எதிர்வரும் 31ம் நாள் அன்று யேர்மனியிலும், பிரான்சிலும் இவ் ஆவணப்படம்

திரையிடப்பட இருப்பதாக அறிகிறேன். கனடாவில் வரும் 15ம் நாள் அன்று

திரையிடப்பட இருக்கிறது என்று நினைக்கிறேன். உறுதிப்படுத்தப்பட்ட

தகவல் கிடைத்ததும் அறியத் தருகிறேன்.

Edited by இளைஞன்

ஆவணப்படம் எண்டால் Documentary? தானே? வெளியீட்டை தியேட்டரிலையா செய்யுறீனம்?

யாராவது வெளியீடு செய்யப்பட்டதும் அதை யூரியூப்பில் தரவேற்றி இணைப்பு தந்தால் (காப்புரிமை பிரச்சனை இல்லை / இதன் மூலம் ஏதாவது வருமானம் எதிர்பார்க்கப்படவில்லை எண்டால்..) எல்லாரும் பார்க்கலாம்.

அல்லது படத்தில வருகின்ற குறிப்பிட்ட சில காட்சிகள மட்டும் யூரியூப்பில போட்டு விடலாம்.

இத உலகத்தில இருக்கிற முக்கிய நூலகங்களுக்கு அனுப்பியும் வைக்கலாம்..

சிங்களப் பேரினவாதிகளினால் 1981 ஆம் ஆண்டில் எரியூட்டப்பட்ட யாழ். பொது நூலகம் பற்றிய "எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படத்தின் குறுவட்டு (DVD) நேற்று முன்நாள் வியாழக்கிழமை கனடாவில் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு படியாக எரியும் நினைவுகள் குறும் தட்டு ஒன்று என் கைவசம் வந்தது, யாழ் நூலகம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதவன் என்றமுறையிலும் யாழ்பாணம் பற்றி அதிகம் அறியாதவன் என்றமுறையிலும் பெரிய எதிர் பார்புக்கள் எதுவுமே இல்லாமல் தனி தமிழீழ உணர்வின் அடிபடையிலே இந்த கொள்வனவு அமைந்தது.

இங்கு இக் குறு வெட்டின் எனது விமர்சனதை கூற விரும்புகிறேன்

இது ஒரு மென் பச்சை நிற பிளாதிக் பெட்டியில் பேர்னிங் மேமொரீச் என்று ஆங்கிலத்தில் தலைப்பிடபட்டு ஒரு வீடியோ ஆவணமாக சோமீதரனால் உருவாகப்பட்டிருகிறது. இது ஆங்கிலம் தமிழ் பிரஞ்சு மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரே குறும் தட்டில் கிடைக்கிறது.

பின்புறத்தே 25 வருட சிரி லங்காவின் உள்நாட்டு போரின் மிக பயங்கரமான நிகழ்வுகளின் ஆவணம், இது தமிழரின் மிக முக்கிய நூலகதின் எரிப்பும் அதனை சூழ்ந்துள்ள் சமூக அரசியல் வன்முறை பற்றியது என பின்குறிப்பிடப்படுள்ளது.

இவ் ஆவணபடத்தில் யாழ் நூலகதின் ஆக்கம் மற்றும் அதன் 1981 இல் முதல் எரிப்பும் பின்னர் அதன் இரண்டாவது குன்டுவைப்பும், பின்னர் சந்திரிகா அரசின் வெள்ளை அடிப்பின் மூலம் வரலாற்றின் மூடி மறைப்பும் கண்பிக்கபடுகின்றது.

ஆயினினும் இவ்வாக்கம் யாழ்பணத்தவரை தவிர வெளியார்க்கு உப்பு சப்பற்ற ஒரு படைப்பாகவே அமையும். காரணம் இது ஈழத்தவருக்கு இழைக்கப்பட்ட அநீதியையோ அதனை எப்படி காவல்துறை நீதிதுறை மற்றும் ஒரு சனநாயக அரசு போன்ற குடிமக்களை பாதுகாக்கும் அமைப்புக்கள் தமிழருக்கு எதிராக திரும்பின என்பதனையோ கோடிட்டு காட்ட தவறியுள்ளது. மேலும் நடு நிலை காக்க முயர்சித்து மங்கள சமரவீர போன்றோரின் பேட்டிகள் மூலமாக சிங்கள வரலாற்று மூடி மறைப்புக்களுக்கு சிங்கள மனிதாபிமானம் என்ற சாயத்தையும் பூச வழிவகுத்துள்ளது.

இவ் ஆவணம் ஒரு சிலரின் கருத்து தொகுப்பாக இல்லாது ஒரு கேள்வி பதில் முறையில் அமைந்திருப்பின் சிறப்பாக இருக்கும். ஈழத்தமிழ் உணர்வாளர்கு இவ் ஆவணத்தின் மென் போக்கு எரிச்சல் ஊடுவதாயும், யாழ்ப்பாணத்து பழசுகளுக்கு வாய்சப்ப நல்ல தீனி, உங்கள் வீட்டு பழைய பஞ்சாங்களுக்கு நல்ல நினைவுப்பரிசு.

எம்மவர் முயர்ச்சிகளுக்கு ஆதரவளியுங்கள்

someetharan

web www.somi.wordpress.com

email someeth13@gmail.com

உண்மையில் அந்த காலகட்டம் என்பது எப்படி எப்படி எல்லாம் திட்டம் போட்டு எங்கள் இனத்தை அழித்தார்கள் இவற்றையெல்லாம்

இது போல இன்னும் இன்னும் நிறைய மாற்று மொழிகளிலும் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துங்கள்

இம் முயற்சிக்கு எமது பூரண ஆதரவு அதோடு இன்னும் வளர வாழ்த்துகிறோம்........

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

"எரியும் நினைவுகள்" தொடர்பான இணையப்பக்கம்:

http://burningmemories.org

'எரியும் நினைவுகள்' ஆவணப்பட இறுவெட்டு தேவையானவர்கள், எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யேர்மனி ஹம் அம்பாளள் தேர்த்திருவிழாவிற்கு வருவதாக இருந்தால், அங்கே 7 யூரோ செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

அது சரி.. சோழியானை அந்தக் கூட்டத்துக்குள்ளை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பீர்கள்? எதற்கும் தனிச்செய்திமூலம் தொடர்பு கொள்ளுங்க.. விபரம் தாறேன்.. :)

Jaffna-eriyumninaivukal.jpg

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தமுறையும் தேருக்கு வருவமெண்டு பாக்கிறன்.மூனா லீவு தர பஞ்சிப்படுறான்.வர ஏலுமெண்டால் எதுக்கும் உங்களுக்கு சொல்லுறனே.

முதலில் விடயத்தை இணைத்த இளைஞனுக்கு, சோமிதரனின் செவ்வியை இணைத்த சயந்தனுக்கும் நன்றிகள்.

யாழ் நூலகத்தோடு சிறுவயதிலேயே வாசகனாக இணைந்து கிட்டத்தட்ட 12 வருடங்களாக அதனோடு ஒன்றி இருந்தவன். அக்கற்பகதரு பற்றிய ஒரு இறுவட்டு வருவதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அதை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எழுந்தது.

ஆனால் சயந்தன் இணைத்த சோமிதரனின் செவ்வி அத்தனையையும் பொடிப்பொடியாக நொறுக்கிவிட்டது. சோமிதரன் உண்மைக்குப் புறம்பான பல தகவல்களையே திணிக்கின்றார். அவர் செவ்வியிலிருந்து அவருக்கு யாழ் நூலகம் பற்றிய நேரடி அனுபவம் ஒன்றும் இல்லை வெறும் செவி வழிச் செய்தியையே ஆவணமாக்க முற்பட்டுள்ளார் என்பது நன்றாக புரிகின்றது. யாழ் நூலகத்தை அறிந்தவர்கள் எவரும் இந்த இறுவெட்டை ஆவணமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நூலகத்தின் நம்பகமான வரலாறை அறிய விரும்புவோர் கீழே நான் இணைத்துள்ள இணைப்பில் பாருங்கள். தெளிவு பெறுவீர்கள்.

http://yarlphoenix.blogspot.com/2008/06/blog-post.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பர் இணைத்த கட்டுரையில் சிங்களக் காடையர்கள் பற்றிச் சொல்வதில் இருந்து எழுதியவர் தவிர்க்க முயன்றிருக்கின்றார். அதை விடக் கடற்படை உதவ வந்ததாகச் சிங்களத்துக்கு ஆதரவான போக்கைக் காட்டுகின்றார். இதி; இருந்து அதன் உண்மைத் தன்மை தெரியும்.

அச்சுவேலியில் இருந்து யாழ்ப்பாண நூலகத்திற்கு எவ்வளவு தூரம்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த 65 வருட கால சினிமா வாழ்க்கையில் என் மக்களுக்காக நான் என்ன செய்தேன் என சிந்தித்து பார்க்கின்றேன். இந்த நூலகத்தைப் பயன்படுத்தியவன் அதனை அனுபவித்தவன் என்ற காரணங்களிருப்பினும் அது குறித்து நான் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனால் நூலகம் எரிக்கப்பட்டபோது பிறந்த குழந்தை அது தொடர்பான ஆவணப் படத்தை எடுத்து என் கைகளில் தரும் போது என் இயலாமையை உணர்கிறேன்.

--இயக்குனர் பாலு மகேந்திரா -- சென்னையில் நடந்த திரையிடும் நிகழ்வில்

யாழ் நூலகம் -ஒரு பண்பாட்டுப் படுகொலை

ஒருபேப்பரில் வெளியான சோமியின் செவ்வி

யாழ்ப்பாண நூலகம் தொடர்பாக ஆணவப் படம் செய்ய வேண்டுமென ஆர்வம் எப்படி உருவானது ?

என் தலைமுறைக்கு - எனக்கு - யாழ் நூல் நிலையத்தை காணும் வாய்ப்பு ஆரம்பத்தில் கிடைத்த போதெல்லாம் அது நூலகம் என்ற புரிதல் அற்று அது ஒரு போராளிகளின் நிலையாகவே அறிமுகமாகியது. பின்னர் கோட்டை கைப்பற்றப் பட்ட பின்னரே அது குறித்தும் அதன் அரசியல் வரலாறு குறித்தும் அறிந்து கொள்ள முடிந்தது. எங்கள் தலைமுறை அந்த நூலகத்தின் சாம்பல்களில் தவழந்தது என்றும் சொல்லலாம். தமிழருக்கெதிரா மிகப் பெரும் வன்முறை நூலக எரிப்பு - அதன் சாம்பல்களில்தான் எம் தலைமுறை பிறந்தது.

நூலக எரிப்பென்பதை நான் ஒரு படுகொலையாகவே பார்க்கின்றேன். அதுவும் திட்டமிட்ட படுகொலை.

எனக்கு நூலகம் தொடர்பான நேரடிப் பரீச்சயம் இல்லை. அதனை பயன்படுத்தியதும் இல்லை. ஆனால் நான் இதனை எவ்வாறு உணர்கிறேன் என்றால் - யாழ் நூலகம் என்பது தமிழர்களின் ஒரு பண்பாட்டினதும் கல்விச் செறிவினதும் குறியீடாக இருந்தது. உண்மையில் யாழ் நூலகம் மட்டுமன்றி அனைத்து ஊர்களிலுமிருந்த நூல்நிலையங்கள் மற்றும் வாசிக சாலைகள் என்பவை யாழ்ப்பாணத்தின் குறியீடுகளாக இருந்தன. யாழ்ப்பாணத்தில் அவற்றிற்கு விசேட கவனம் இருந்தது. இவற்றின் மையப் புள்ளியாக பொது நூலகத்தைச் சொல்ல முடியும்.

உடனடிக் காரணம் எனச் சொல்ல வேண்டுமானால் நான் பிறந்த பத்தொன்பது நாட்களில் எரித்த நூலகம் தொடர்பாக நான் ஒரு ஆவணப் படத்தை எடுக்க வேண்டும் என ஏற்பட்ட ஆவல் தவிர பத்திரிகைச் சூழலுக்கு வந்தபின்னர் அறிந்து கொண்ட நூலகம் தொடர்பான செய்திகள் கல்வியாளர்களின் கருத்துக்கள் என்பவை ஏற்படுத்திய தாக்கம் இவற்றை சொல்ல முடியும்.

யாழ் நூலகத்தின் அரசியல் குறித்து சொல்லுங்கள் ?

நூலகம் எரிக்கப் பட்டதுதான் அரசியல் என பலர் நினைக்கிறார்கள். அது உண்மை. ஆனால் அதையும் தாண்டி நூலகமே ஒரு அரசியலாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இவ் ஆவணப்படத்திற்காக தேடலை அதிகரித்த போது எனக்கு அது குறித்த நிறைய விடயங்கள் தெரிய வந்தன. நூலகம் ஆரம்பிக்கப் பட்ட போதே அரசியல் தொடங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பாதிரியார் லோங் அவர்களின் முயற்சியால் நூலகம் கட்டப்பட்ட 1960 களில் அல்பிரட் துரையப்பா திறந்து வைக்கின்றார். உண்மையில் அதனை அல்பிரட் துரையப்பா தனது தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் மூலம் இரண்டாவது தடவையாகவும் அவர் மேயர் ஆகின்றார்.

இதன் பிறகு 81 இல் நூலகம் எரிக்கப்படுகிறது. உண்மையில் தமிழ்தேசியத்திற்கெதிரான சிங்கள அரசின் நடவடிக்கைகளில் - யாழ் நூலகம் தமிழ் தேசியத்தின் ஒரு வடிவமாக குறியீடாகப் பார்க்கப்பட்டது. இதன் மூலம் தேசிய அரசியலிலும் தமிழர்களின் பிரதிநிதியாக நூலகம் உருவெடுத்தது.

இந்த இடத்தில் - கோட்டை முற்றுகைச் சமரின் போது - யாழ் நூலகம் - போராளிகளின் காப்பரணாக ஒரு போராளியாக கோட்டைச் சமரின் ஒரு குறியீடாக விளங்கியதையும் குறிப்பிட வேண்டும்.

ஆவணப்படம் எது குறித்து பேசுகிறது ?

இந்த ஆவணப்படம் முழுவதுமே ஒரு வரையறைக்கு உட்படாத ஒட்டுமொத்த தமிழர்களுக்கான வரலாற்று அழிவினைப் பற்றி பேசுகிறது. அதே நேரத்தில் இது தமிழர்களையும் தாண்டி சிங்களவர்களுக்கான இழப்பு என்பதையும் பதிவு செய்திருக்கிறோம். நூலக வரலாறு அதன் எரிப்பு தொடர்பான விபரங்கள் நேரடிச் சாட்சிகளின் தகவல்கள் என எல்லாவற்றையும் சேர்த்திருக்கிறோம். அதை தொடர்நது 84 இல் நூலகம் திருத்தப்பட்டமையும் மீளவும் 85 இல் இடிக்கப்பட்டதென - நூலகம் எரிக்கப்பட்டதன் பின்னான 27 வருட கால போரில் மக்களுக்கும் நூலகத்திற்கும் போருக்குமிடையிலான ஊடாட்டம் என பதிவு விரிகிறது.

நூலக மீள் புனரமைப்பு குறித்தும் ஆவணப்படம் சொல்கிறதா ?

ஆம் - ஆவணப்படத்தில் நூலக மீள் புனரமைப்புக் குறித்தும் பேசுகிறோம். அதாவது நூலகம் எரிக்கப்பட்டது ஒரு அரசியல் எனப் பார்த்தோம். பின்னர் அது புனரமைக்கப்பட்டதும் ஒரு அரசியல்தான் என்பதைச் சொல்கிறோம். யாழ்ப்பாணத்தில் யுத்தத்தில் எல்லாமே அழிந்து போயின. சாவகச்சேரியை கிரோசிமா நாசகாகி போன்றவற்றுடன் ஒப்பிடக் கூடிய அளவில் அழிந்து போயிருந்தது. ஆனால் இந்தப் பிரதேசங்களை மீள் நிர்மாணம் செய்வது குறித்து யோசிக்காத சந்திரிகா உடனடியாக யாழ் நூல் நிலையத்தை புனரமைக்க திட்டமிடுகிறார். மிகப் பெரிய விளம்பரங்களோடு செங்கல்லும் புத்தகங்களும் என்ற திட்டத்தை அவர் ஆரம்பிக்கிறார். இத் திட்டத்தில அப்போது கல்வி அமைச்சராயிருந்த ரிச்சட் பத்திரணவும் ஒரு உறுப்பினராக இருந்தார். இந்த திட்டத்தில சேர்த்த புத்தகங்களும் செங்கல்லுகளும் காலியிலும் ஒரு நூலகமாக உருவெடுத்தது வேறு கதை.

சிங்கள தேசியம் ஒரு காலத்தில் செய்த கோரப் படுகொலையின் அடையாளத்தை இல்லாதொழிப்பது சந்திரிகாவிற்கு அவசியமாயிருந்தது.

ஆனால் துரதிஸ்டவசமாக அப்போதைய தமிழ்க்கட்சிகள் இது குறித்து அலட்டிக்கொள்ளாத காரணத்தினாலும் இது குறித்து யாழ்ப்பாண மக்கள் தமது கருத்தை வெளிப்படையாக உணர்த்துவதற்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்ததாலும் நூலகம் புனரமைக்கப்பட்டது.

மீள் புனரமைப்பில் அது மீளவும் திறக்கப் படக் கூடாதென்பதற்காக சாதி ஒரு காரணமாக இருந்தது என கூறப் படுகிறதே..

அதன் திறப்பு விழாவை கூட ஆனந்த சங்கரி அவர்கள் தன் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். அதில் செல்லன் கந்தையன் என்பவரை அவர் பகடை காயாக்கிக் கொண்டார். வெளிநாடுகளில் இப்போது இருக்கின்ற நமது முன்னாள்கள் அதற்கு சாதிய அடையாளம் பூசி தமது நிறுவல்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக செல்லன் கந்தைரை திறக்க விடவில்லை. காரணம் சாதி என சொன்னாலும் - உண்மையில் - யாழ் நூலகத்தை திறக்க இருந்தவர் இன்னமும் யாழ்ப்பாண உட்ச பட்ச சாதியத்தின் மிச்ச சொச்சமாக இருக்கின்ற ஆனந்த சங்கரி ஐயா தான். (இந்த இடத்தில் யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை என நான் சொல்ல வரவில்லை)

யாராவது ஒரு கல்லறைக்கு வெள்ளையடித்து திறப்பு விழா செய்வார்களா? மேள தாளங்களோடு அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பி அதை கொண்டாடுவார்களா? யாழ் நூலகம் ஒரு கல்லறை - சமாதி - அது சாகடிக்கப்பட்டு விட்டது. நுகுமான் கவிதையில் சொல்கிறார். புத்தர் யாழ்ப்பாண நூலக வாயிலில் சுடப்பட்டு எரிக்கப்பட்டார். அந்த வலி நிறைந்த விடயத்தினை ஒரு விழாவாக செய்வது சரியில்லை என்பது அங்கிருந்தோரின் கருத்து. அதை நான் நேரடியாக ஒரு செய்தியாளனாக அறிந்து கொண்டேன்.

ஆவணப் பட உருவாக்கம் குறித்த அனுபவங்களைச் சொல்லுங்கள்?

2006 இன் மே யூன் மாதங்களில் இதற்கான படப்பிடிப்புகளைத் தொடங்கினேன். அப்போது மென் தீவிர யுத்தம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து விட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு இருந்த அச்சுறுத்தல்கள் காரணமாக பகிரங்கமாக பணியாற்ற முடியாதிருந்தது. பிஸ்கட் பெட்டிக்குள் கமெராவை மறைத்து வைத்து எடுத்துச் சென்ற சம்பவங்களும் உண்டு. கொழும்பிலிருந்து படப்பிடிப்பாளர் ஒருவரை அழைத்துச் செல்ல ஒழுங்கு செய்திருந்த போதும் இறுதி நேரத்தில் அவரால் வரமுடியாமல் போனதால் - படப்பிடிப்பினையும் நானே செய்து கொண்டேன்.

உங்களுக்குத் தெரியும் - யாழ் நூலகம் இராணுவ வலயமொன்றினில் அமைந்திருக்கின்றது. முட்கம்பி வேலிகளும் சோதனைச் சாவடிகளும் நிறைந்த பிரதேசம் அது.

தற்போதைய படப்பிடிப்பினை விட - ஆவணத்திற்குத் தேவையான பழைய காட்சிகளை பெறுவதில் சிரமமிருந்தது. அதற்காக நிறைய காலம் காத்திருக்க வேண்டியேற்பட்டது. இயல்பாகவே ஆவணப்படுத்தும் சிந்தனையற்ற யாழ்ப்பாணச் சூழலில் நூலகம் தொடர்பான தகவல்களைப் பெறுவது பெரும் சிரமமாயிருந்தது.

அடுத்தது ஆவணப் பட உருவாக்கலுக்கான பொருளாதாரம் குறித்துப் பேச வேண்டும். சரிநிகர் சிவகுமார் பெரும் அளவில் உதவினார். எங்கள் மத்தியில் சினிமா உருவாக்கும் ஆவல் பெருமளவில் உள்ள போதும் ஆவணப் படங்கள் குறித்த முயலுகைகள் இல்லை. இந்த நிலையில் யாழ் நூலகம் தொடர்பாக ஒரு ஆவணத்தை எடுப்பது என நானும் சரிநிகர் சிவகுமாரும் இணைந்தே திட்டமிட்டோம். ஆரம்பத்தில் நமது சொந்தப் பணத்திலேயே படப்பிடிப்புகளை மேற்கொண்டோம்.

கடந்த இரண்டு வருட முயற்சியில் - தகவல் சேகரிப்பும் - பொருளாதார சேகரிப்பும் கடுமையான முயற்சிகளாக எமக்கு இருந்தன. பின்னர் தயாரித்தல் வேலைகளுக்காக சென்னையில் அதற்குரிய கலையகங்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆவணப்படங்களுக்கென தனியான கலையகம் ஏதுமில்லாத நிலையில் தமிழ்ச்சினிமா பயன்படுத்தும் கலையகங்களையே பயன்படுத்தியிருந்தோம். தமிழ் சினிமா இன்று கோடிகளில் புரண்டு கொண்டிருக்க - இத்தகைய கலையகங்களுக்கு ஏற்படும் செலவினை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.

இத் தயாரித்தல் வேலைகள் நடந்து கொண்டிருந்த போது - புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து சில நண்பர்கள் - என் முகம் தெரியாத நண்பர்கள் கூட - தாமாக முன்வந்து ஓரளவுக்கு பொருளாதார உதவி செய்திருந்தார்கள்.

இத்தகைய நிலைகளைத் தாண்டி இன்று இவ் ஆவணப்படம் வெளியாகியிருக்கிறது. உலகின் பல நாடுகளில் திரையிடப் படுகிறது. ஆயினும் இந்த ஆவணப்படம் இவ்வாறு இருக்க வேண்டும் என நான் ஆரம்பத்தில் நினைத்திருந்த அளவிற்கு என்னளவில் இது வரவில்லையென உணர்கிறேன். இதற்கு தகவல்களைத் தேடுதலிலும் பொருளாதாரத்தை தேடுதலிலும் ஏற்பட்ட சிரமங்களே காரணமாயிருந்திருக்கின்றன. எனினும் இது ஒரு முதல் வரைபு - என்கின்ற வரையில் நான் திருப்தியுறுகிறேன்.

செவ்வி - சஜீ

நன்றி சயந்தன்.

வசம்பு தந்த இணைப்பை அழுத்தி வாசிச்சு பார்த்தன். சோமி சொன்னதுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிது எண்டு தெரிய இல்ல. ஆனா அதில ஒரு புதிய தகவல் நல்லூரில ஒரு பழம்பெரும் நூலகம் முந்தி அரசர் காலத்தில எரிக்கப்பட்டு இருக்கிது எண்டு சொல்லப்படிகிது. மற்றது, நூலகம் எரிக்கபட முன்னம் ஈழநாடு பத்திரிகை எரிக்கப்பட்டு இருக்கிது... என்ன எழவு நடந்திச்சிதோ.. கடைசியில எல்லாம் எரிஞ்சுபோச்சிது.

என்னமோ... ஏதோ

இந்த நூலகத்துக்கு பின்னால ரெண்டுபக்கமும் எத்தினயோ அரசியல் ஜில்மாலாக்கள் நடந்து இருக்கிறது தெரியுது. சனத்திண்ட படிப்பு எல்லாம் நாசமாப் போறதுக்கு இந்த அரசியல்வாதிகள்தான் காரணம் எண்டு நான் நினைக்கிறன் எண்டு இப்ப சொன்னால் நீங்கள் யாரும் கோவிக்ககூடும். எண்டபடியால அப்பிடி நினைக்க இல்ல.

வசம்பர் இணைத்த கட்டுரையில் சிங்களக் காடையர்கள் பற்றிச் சொல்வதில் இருந்து எழுதியவர் தவிர்க்க முயன்றிருக்கின்றார். அதை விடக் கடற்படை உதவ வந்ததாகச் சிங்களத்துக்கு ஆதரவான போக்கைக் காட்டுகின்றார். இதி; இருந்து அதன் உண்மைத் தன்மை தெரியும்.

அச்சுவேலியில் இருந்து யாழ்ப்பாண நூலகத்திற்கு எவ்வளவு தூரம்??

முதலில் கட்டுரையை முழுமையாக வாசித்திருக்க வேண்டும். அப்போது தெரிந்திருக்கும் இப்பக்கத்தின் ஆக்கத்தை தொகுத்தவர் யார் என்று. யாழ் நூலகத்தோடு பல வருடங்களாக நூலகராக இணைந்திருந்த செல்வராசா என்பவர் தான் இத்தெர்குப்பினை தயாரித்துள்ளார். நூலக எரிப்பின்போது நடந்தவை அனைத்தையும் நேரில் பார்த்தவர். அத்துடன் அதன் பின்பு நடந்தவற்றையும் நன்கு அறிந்தவர். இவரது இந்தத் தொகுப்பை விட சிறந்த ஒரு ஆவணம் இருக்க முடியாது. யாழ் நூலகத்தோடு தொடர்புள்ள ஒரு நூலகரின் தொகுப்பையே கேலியாக்க நினைப்பவர்களின் நோக்கம்தான் தவறாக இருக்குமேயொழிய அந்தத் தொகுப்பல்ல.

அச்சுவேலியிலிருந்து யாழ்ப்பாணம் கூப்பிடு தூரம் தான் (தொலைபேசியில்).

நன்றி சயந்தன்.

வசம்பு தந்த இணைப்பை அழுத்தி வாசிச்சு பார்த்தன். சோமி சொன்னதுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிது எண்டு தெரிய இல்ல. ஆனா அதில ஒரு புதிய தகவல் நல்லூரில ஒரு பழம்பெரும் நூலகம் முந்தி அரசர் காலத்தில எரிக்கப்பட்டு இருக்கிது எண்டு சொல்லப்படிகிது. மற்றது, நூலகம் எரிக்கபட முன்னம் ஈழநாடு பத்திரிகை எரிக்கப்பட்டு இருக்கிது... என்ன எழவு நடந்திச்சிதோ.. கடைசியில எல்லாம் எரிஞ்சுபோச்சிது.

என்னமோ... ஏதோ

இந்த நூலகத்துக்கு பின்னால ரெண்டுபக்கமும் எத்தினயோ அரசியல் ஜில்மாலாக்கள் நடந்து இருக்கிறது தெரியுது. சனத்திண்ட படிப்பு எல்லாம் நாசமாப் போறதுக்கு இந்த அரசியல்வாதிகள்தான் காரணம் எண்டு நான் நினைக்கிறன் எண்டு இப்ப சொன்னால் நீங்கள் யாரும் கோவிக்ககூடும். எண்டபடியால அப்பிடி நினைக்க இல்ல.

நூலகம் சம்பந்தமாக இந்து, கிறிஸ்தவ பிரைச்சினை ஒன்றைத் திணித்துள்ளார். அதுபோல் நூலகம் மறுசீரமைக்கப்பட்ட பின் நடந்ததாகக் கூறும் சம்பவங்கள் பல இட்டுக் கட்டப்பட்டவை. உதாரணமாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம். இப்படிப் பல உள்ளன. எல்லாவற்றையும் இங்கு எழுத முடியாது. நீங்கள் யாழ்நூலகம் பற்றி நன்கு தெரிந்தவர்களிடம் கேளுங்கள் விபரமாகச் சொல்லுவார்கள். அதுபோல் யாழ் நூலக எரிப்பிற்கு பிள்ளையார்சுழி போட்டுக் கொடுத்த சம்பவம் அன்று பிற்பகல் நாச்சிமார் கோவிலடியில் நடந்த பொலிசார் மீதான துப்பாக்கிச்சூடு. அதுபோல் இன்றுவரை நூலகம் ஒரு நல்ல நிலைக்கு வராமல் இருப்பதற்கும் அரசியல் தான் காரணம. (சிங்கள அரசியலல்ல, நம்மவர்கள் நடத்தும் அரசியல்).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுபோல் யாழ் நூலக எரிப்பிற்கு பிள்ளையார்சுழி போட்டுக் கொடுத்த சம்பவம் அன்று பிற்பகல் நாச்சிமார் கோவிலடியில் நடந்த பொலிசார் மீதான துப்பாக்கிச்சூடு.

அது 31 ம் திகதி இடம் பெற்றது. நாச்சிமார் கோவிலடியில் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் வேட்பாளர் ராஜா விஸ்வநாதன் உரையாற்றிக் கொண்டிருந்த போது கடமையில் இருந்த கனகசுந்தரம் என்ற பொலிசார் மீது துப்பாக்கி சூடு நடைபெறுகிறது.

காயமடைந்த கனகசுந்தரத்தை வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்று திரும்பிய கார் எரிக்கப் படுகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகமும் எரிக்கப்படுகிறது.

இதையெல்லாம் இட்டுக் கட்டிய கதைகள் என கூற முடியாது. ஏனெனில் இவற்றை ஆவணப்படத்தில் கூறுபவர் - சூட்டுச் சம்பவத்தின் போது தேர்தல் பிரசார பேச்சாற்றிய ராஜா விஸ்வநாதன் தான். 81 இல் இது குறித்த தகவல்களை அவர் சொல்வது படமாக்கப்பட்டுள்ளது. அது தற்போது இந்த ஆவணத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.

யாழ் நூலகத்தோடு பல வருடங்களாக நூலகராக இணைந்திருந்த செல்வராசா

வே. பாக்கியநாதன்தான் அப்போது நூலகராக இருந்தார். செல்வராசா - அக்டிங் அல்லது அசோசியேட் நூலகராக இருந்திருக்கலாம்.

1ம் திகதி இரவே நூலகம் எரிக்கப்படுகிறது. அதாவது சூட்டுச் சம்பவத்தின் அடுத்த நாள் இரவு -

நூலகம் எரிக்கப்பட்டதை அறிந்து அதனை நேரில் சென்று பார்வையிட்ட யாழ்ப்பாண கொமிசனர் சி வி கே சிவஞானம் இதை ஆவணப்படத்தில் உறுதி செய்கிறார். பொலிசாருக்கு அடுத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் இவராவார்.

யாழ் நூல் நிலைய எரிப்பு - ஏற்கனவே திட்டமிட்டதுதான்.

விமர்சனங்கள் - அது எத்தகையதாக இருந்தாலும் - அவற்றை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் படைப்பினை முழுதாக பார்த்த பிறகே - அதற்குரிய தார்மீக உரிமையினை அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். செவி வழிக் கதைகளுக்கு விமர்சனம் செய்ய கூடாது.

அது 31 ம் திகதி இடம் பெற்றது. நாச்சிமார் கோவிலடியில் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் வேட்பாளர் ராஜா விஸ்வநாதன் உரையாற்றிக் கொண்டிருந்த போது கடமையில் இருந்த கனகசுந்தரம் என்ற பொலிசார் மீது துப்பாக்கி சூடு நடைபெறுகிறது.

காயமடைந்த கனகசுந்தரத்தை வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்று திரும்பிய கார் எரிக்கப் படுகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகமும் எரிக்கப்படுகிறது.

இதையெல்லாம் இட்டுக் கட்டிய கதைகள் என கூற முடியாது. ஏனெனில் இவற்றை ஆவணப்படத்தில் கூறுபவர் - சூட்டுச் சம்பவத்தின் போது தேர்தல் பிரசார பேச்சாற்றிய ராஜா விஸ்வநாதன் தான். 81 இல் இது குறித்த தகவல்களை அவர் சொல்வது படமாக்கப்பட்டுள்ளது. அது தற்போது இந்த ஆவணத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.

வே. பாக்கியநாதன்தான் அப்போது நூலகராக இருந்தார். செல்வராசா - அக்டிங் அல்லது அசோசியேட் நூலகராக இருந்திருக்கலாம்.

1ம் திகதி இரவே நூலகம் எரிக்கப்படுகிறது. அதாவது சூட்டுச் சம்பவத்தின் அடுத்த நாள் இரவு -

நூலகம் எரிக்கப்பட்டதை அறிந்து அதனை நேரில் சென்று பார்வையிட்ட யாழ்ப்பாண கொமிசனர் சி வி கே சிவஞானம் இதை ஆவணப்படத்தில் உறுதி செய்கிறார். பொலிசாருக்கு அடுத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் இவராவார்.

யாழ் நூல் நிலைய எரிப்பு - ஏற்கனவே திட்டமிட்டதுதான்.

விமர்சனங்கள் - அது எத்தகையதாக இருந்தாலும் - அவற்றை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் படைப்பினை முழுதாக பார்த்த பிறகே - அதற்குரிய தார்மீக உரிமையினை அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். செவி வழிக் கதைகளுக்கு விமர்சனம் செய்ய கூடாது.

காவடி

உங்கள் கருத்திற்கு நன்றிகள். ஆனால் நாச்சிமார் கோவிலடியில் 3 பொலிசார்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டது. ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமாக இருவர் காயமடைந்தனர். அதுபோல் நூலக எரிப்பு நடந்தது 31ம் திகதி நள்ளிரவே தீக்கிரையாக்கப்பட்டது. நீங்கள் குறிப்பிட்டது போல் 1ம் திகதி நள்ளிரவல்ல. மேலும் செல்வராசா நூலகராகவே இருந்தார். நீங்கள் குறிப்பிடும்வே. பாக்கியநாதன்தான் பிரதம நூலகராக (முதண்மை) இருநதவர். யாழ் நூலகத்தில் சில பெண்கள் உட்பட பலர் அப்போது கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். அதுபோல் நூலக எரிப்பின் போது நடந்தவையாக குறிப்பிடப் பட்டவையை நான் இட்டுக்கட்டப்பட்டவை என்று எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நூலக எரிப்பின் பின் நடந்ததாக செவ்வியின்போது சோமி அவர்களால் குறிப்பிடப்படுபவை பல தான் இட்டுக்கட்டப்பட்டவையாக நான் குறிப்பிட்டுள்ளேன். அதனால்த்தான் இந்த இறுவட்டுப் பற்றிய சந்தேகத்தையும் என்னுள் விதைத்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1ம் திகதி நள்ளிரவு என்றே சிவஞானம் - ஆவணப்படத்தில் குறிப்பிடுகிறார்.

மற்றது - நாச்சிமார் கோவிலடி சூட்டுச்சம்பவமே நூலக எரிப்பைத் தூண்டியதாக நீங்கள் சொல்வது போல நான் சரியாகவோ தவறாகவோ உணர்ந்து கொண்டேன்.

அதனால்த்தான் நூலக எரிப்பு திட்டமிட்ட எரிப்பு என சொல்ல வந்தேன்.

ஆவணப்படத்தின் படி 31ம் திகதி ஈழநாடும் 1ம் திகதி நூலகமும் எரிக்கப்படுகிறது.

ஈழநாடு எரிப்பு - நூலக எரிப்பிற்கான ஒரு முன்னாயத்தமே. அதாவது செய்திகளை சென்று விடாதபடியான நடவடிக்கை. இதனை செல்வராசாவும் உறுதி செய்கிறார்.

ஆக நூலகம் திட்டமிட்டே எரிக்கப்படுகிறது. அதற்கும் நாச்சிமார் கோயிலடி சம்பவத்திற்கும் தொடர்பில்லை.

தொடர்பில்லாத சமயத்தில் - நூலகம் குறித்த ஆவணப்படத்தில் நாச்சிமார் சம்பவம் சொல்லப்படவில்லை என்பது பொருத்தமற்றது. (ஆனால் அது பற்றி ஆவணப்படத்தில் உண்டு)

ஆவணத்தை முழுவதுமாக பார்வையிட்டு விட்டு விமர்சனம் எழுத உங்களை மீண்டும் அழைக்கிறேன்.

சிலவேளை சிவஞானம் அவர்கள் 1ம் திகதி அதிகாலை என்று குறிப்பிடடுள்ளாரா தெரியவில்லை. ஏனெனில் 31ம் திகதி நள்ளிரவு 12 மணியளவில்த் தான் நூலகம் எரியூட்டப்பட்டது.

நிச்சயமாக உங்கள் கோரிக்கையை ஏற்று இறுவட்டைப் பார்த்துவிட்டு எனது முழுமையான விமர்சனத்தையும் தருகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

jaffna_library.jpg

யாழ் நூலகம் எரிக்கப்பட்டதிற்கு முக்கிய காரணகர்த்தா காமினி திஸநாயக்கா என கேள்விப்பட்டேன்.இதுபற்றி யாருக்காவது தெரியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.